நின்ற இதயம் மீண்டும் இயங்குமா?

பொதுவாக மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் உடல் குளிர்ந்து விடும். அதன்பிறகு அவர்களின் இதயத்துடிப்பு அடங்கி உயிர் இழந்து விடுவார்கள். தற்போது அப்படி நின்ற இதயத்தையும் மீண்டும் இயக்க வைக்க முடியும், அதனால் ஒருவரை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று நி பித்துள்ளனர்.

மாரடைப்பு ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்ட நபரின் மூக்கின் வழியாக `ரினோசில்'(இது பேட்டரியால் இயங்கக் கூடியது) என்ற புதிய கருவியின் மூலம் மூளையில் சிறிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நின்ற இதயத்தை மீண்டும் இயக்க வைத்தனர்.

இந்த மருத்துவ ஆராய்ச்சியை ஸ்டாக்ஹோமை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் மாரட்கேஸ்டிரன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர். ஐரோப்பாவில் உள்ள 14 ஆஸ்பத்திரிகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அனுமதிப்பட்டிருந்த 200 பேரிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இவர்களில் 182பேர் உயிர் பிழைத்தனர். அப்படி உயிர் பிழைத்தவர்களில் 83பேர் 66 வயது முதல் 71வயது உடையவர்கள்!

%d bloggers like this: