பெண்களை பயமுறுத்தும் 5 ‘டாப்’ நோய்கள்!

வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும், ஒரு வீட்டில் கணவனை விட, அதிகம் வேலை செய்வது பெண்கள் தான்.
அதுபோல, ஆண்களை விட, அதிக நோய்களுக்கு ஆட்படுவதும் பெண்கள்தான். இதனால், ஆண்களை விட, பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.
பெண்களைத் தாக்கும் நோய்களில், முக்கியமாக ஐந்து நோய்கள் தான் பெரும்பாலோரை பயமுறுத்துகின்றன. அவை:
1. இதய நோய்.
2. மார்பக புற்றுநோய்.
3. ஆஸ்டோபோரோசிஸ் என்ற எலும்புகள் அப்பளமாக நொறுங்கும் நோய்.
4. டிப்ரஷன் என்ற சோர்வு நிலை.
5. ஆட்டோ இம்யூன் நோய்கள் என்ற நூற்றுக்கும் மேற்பட்ட துணை நோய்கள்.

1. இதய நோய்!
மாரடைப்புக்கு இலக்காவதில் ஆண்கள் தான் அதிகம் என்கிற தோற்றம் சமூகத்தில் உள்ளது. உண்மை யில், ஆண்களை விட, மாரடைப்பு, இதய நோய்க்கு ஆளாவதிலும், இறப் பதிலும் பெண்கள் தான் அதிகம். பெண்களில் இறப்பதற்கு காரணமாக இருக்கும் நோய்களில், 29 சதவீதத்தை இதய நோய்கள் ஆக்ரமிக்கின்றன.
இதற்கு காரணம், ஆண்களை போல பெண்களின் வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தான். ஆண்களை போலவே, சிகரட் பிடிப்பது மட்டுமின்றி, பான் பராக் போன்ற புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
பெண்களுக்கு சுரப்பிகளின் செயல்பாடுகள் மிக முக்கியம். இப்படிப்பட்ட பழக்க வழக்க மாற்றங்களால், பெண்களின் சுரப்பிகளின் செயல் பாடும் மாறுகிறது. இதய நோய் வர இவையெல்லாம் முக்கிய காரணங்கள்.

2. மார்பக புற்றுநோய்!
பெண்களுக்கு பொதுவாக வரும் நோய்களில் முக்கியமான இரண்டாவது நோய் மார்பக புற்று நோய்; பெண்களை அதிகம் பலி வாங்கும் புற்றுநோய்களின் பட்டியலில் இது இரண்டாவதாக உள்ளது. இறுதி மாதவிடாய்க்கு பின், பெண்கள் பலரும் குண்டாகி விடுகின்றனர்; அவர்களின் சுரப்பிகள் செயல்பாடு அதிகரிப்பதாலும், போது மான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதாலும் மார்பக புற்றுநோய் வருகிறது.
இதெல்லாம், பத்தாண்டுக்கு முன் இருந்த பெண்களின் நிலையை வைத்து நிர்ணயிக் கப்பட்டது. இப்போது, பெண்கள் சிலர் சிகரட், மதுவால் ஈர்க்கப்பட்டு, உணவு, வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். எனவே, முப்பது வயதிற்கு பின், ‘மெமோகிராம்’ பரிசோதனை செய்து, மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்று அறிந்து கொள்வது நல்லது. அதன் பின், ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்வது நல்லது. முப்பது வயதை நெருங்கும் போதே, மார்பகத்தை அழுத்திப் பார்த்தால் வலி தெரியும். அப்படி வலி இருந்தால் அதுவே முதல் அறிகுறி; டாக்டரிடம் செல்ல வேண்டிய எச்சரிக்கை.

3. ஆஸ்டோபோரோசிஸ்!
பெண்களில் 68 சதவீதம் பேரை பாதிக்கும் எலும்பு பாதிப்பு நோய் இது; எலும்புகள் பலவீனம் அடைவதால், இவர்கள் தடுக்கி விழுந்தால் கூட, எலும்பு முறிவு சுலபமாக ஏற்படும்.
பெண்களுக்கு முப்பது வயது வரை தான் எலும்புகள் வளரும். அதன் பின், சாப்பிடும் உணவு வகைகளால் தான் எலும்புகள் திடத்தன்மையை காக்க முடியும்.
பெண்களின் வேலை, மனஅழுத்தம், சோர்வு உட்பட பல காரணங்களால் எலும்பு தேய்மானம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால், குழந்தை பருவத்தில் இருந்தே எலும்பு பாதுகாப்புக்கு பெண்கள் தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
வைட்டமின் ‘டி’ சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது. 65 வயதான பின், தடுக்கினாலும், எலும்பு முறிவு அடிக்கடி ஏற்படும்.

4. டிப்ரஷன்!
பல்வேறு, சூழ்நிலை காரணமாக, ஆணை விட, பெண்ணுக்கு தான் அதிக அளவில் சோர்வு, மன அழுத்தம் வருகிறது. ‘எட்டில் ஒரு பெண் வீதம் மன அழுத்தம், சோர்வு இருக்கிறது’ என்று, தேசிய மன சுகாதார ஆராய்ச்சி மையம் கூறுகிறது.
எதற்கெடுத்தாலும் பதட்டம், கவலை, படபடப்பு போன்றவை தான் இதற்கு அறிகுறிகள். அதை தடுத்துக்கொள்ள வேண்டியது பெண்ணிடம் தான் உள்ளது. டிப்ரஷனை வர விடாமல், மனதை சீராக வைத்துக் கொண்டால், இதய நோய் உட்பட மன அழுத்த நோய்களை வர விடாமல் தவிர்க்கலாம்.
5. ஆட்டோ இம்யூன் நோய்கள்!
உடலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்துவிட்டால், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையும்; சுரப்பிகள் செயல்படுவதிலும் மாற்றம் ஏற்படும். பலவீனம் ஏற்படும்; உடலில் பலவீனம் வந்துவிட்டாலே போதும், தொற்று நோய்கள் உட்பட பல நோய்கள் பெண்களை பாதிக்க வைக்ககாத் திருக்கின்றன. இப் படிப்பட்ட நோய்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன; இவற்றில், ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் பாதிக்கின்றன என்கிறது உலக சுகாதார மையம்.

%d bloggers like this: