Daily Archives: ஏப்ரல் 7th, 2010

காதலியை பாதுகாப்பது எப்படி?

பெண்களுக்கு இயல்பாகவே ஆண்களை பற்றி எடைபோடும் திறமை அதிகம். நீங்கள் சொல்லாமல் சொல்லியதை, சொல்ல விரும்பியதை எல்லாம் சரியாக பகுத்து அறிந்து ஆராய்ந்து விடுவார்கள். உங்கள் மனது அவள் பார்க்கும் கண்ணாடி. அதில் தன்னைத் தான் அதிகம் பார்க்க விரும்புவாள். சரியான தகவல் தொடர்பு இல்லாததால் தான் பல காதல்கள் தோல்வியில் முடிகிறது. அதனால், எதை பேச வேண்டுமோ அதை பேசாமல், மற்ற விஷயங்களை பற்றி பேசுவார்கள். இதன் விளைவோ பிரிவை உண்டாக்கி விடுகிறது. நீங்கள் உங்கள் காதலியிடம் அக்கறை உள்ளவரா? இல்லாதவரா? என்று நீங்களே உங்கள் நடத்தையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் “இன்று எப்படி கழிந்தது? வேலை எப்படி இருந்தது? படிப்பெல்லாம் எப்படி போகிறது?” என்று நீங்கள் விசாரிப்பது, மற்றவர் கேட்பதை விட அவளுக்கு பெரும் திருப்தியைத் தரும். தன்னுடைய நலத்தை பற்றியும் அக்கறையுடன் விசாரிக்க ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக் கையை இது ஏற்படுத்தும். இதன் முலம் காதலையும், காதலியையும் பாது காக்கலாம். காலை முதல் மாலை வரை நடந்த அத்தனை விஷயங்களையும் ஒன்று விடாமல் பேசி விட வேண்டும் என்று விரும்புபவள் பெண். “நான் வெளிப்படையாக பேசுபவள். எதையும் மறைப்பதில்லை. அதை போல நீங்களும் இருக்க வேண்டும்” என்று விரும்புவாள். ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்கள் பேசினால் தான் அவளுக்கு மனஅமைதி கிடைக்கும். அவ்வாறு பேசினால் தான் உங்கள் மேல் அன்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை உடையவள். உங்கள் காதலி வழக்கத்திற்கு மாறாக புதிய உடை, தோடு, செயின், செருப்பு, வளையல், பொட்டு என்று எது அணிந்திருந் தாலும் “இன்று ஏதோ ஒரு வித்தியாசம் தெரியுதே..! என்ன விசேஷம்?” என்று கேட்டுபாருங்கள். இது நீங்கள் அவளது ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறீர்கள் என்பதை அவள் உணர்ந்து கொள்வாள். நீங்கள் அழகை ரசிக்கத் தெரிந்தவர்… மென்மையான மனதை உடையவர் என்று அவள் உணரும் நேரத்தில் அவளுக்கு உங் கள் மீது ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படும். எந்த ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் போதும், “இதை பற்றி  என்ன நினைக்கி றாய்?” என்று கேளுங்கள். பெண்களின் சிந்தனைத் திறனை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று அவள் உள்ளூர பெருமை கொள்வாள். பெண்களது எல்லாக் கருத்துக்களையும் அரவணைத்துச் செல்லும் உங்கள் குணமும் அவளுக்கு உங்கள் மீதான நல்லெண்ணத்தை அதிகரிக்கும். இதுவே அவளுக்கு உங்கள் மேல் உள்ள மதிப்பை வானளவிற்கு உயர்த்தி விடும். மற்ற பெண்கள் அழகாகவே இருந்தாலும், “அவளை விட நீ தான் எனக்கு அழகு!” என்று அடிக்கடி சொல்லி அவள் உச்சியை குளிர்விக்க வேண்டும். இது அவளது மனதில் உங்களுடன் எப்போதும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஈடுபாட்டை உண்டாக்கும். அவளது ஒவ்வொரு செயலையும் நீங்கள் மிகைபடுத்தாமல் இயல்பாக இருந்து பாராட்ட வேண்டும். இது உண்மையாகவே நீங்கள் அவளது புத்திசாலித்தனத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை அவளுக்கு உறுதிபடுத்தும். “உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை” என்று காதலியிடம் சொல்லுங்கள். அது அடிமனதிலிருந்து வரும் வார்த்தைகள். `காதலியிடம் நான் சரணடைகிறேன்’ என்பது இதன் பொருள். அதனால் கவனமாக இந்த வார்த்தைகளைக் கையாள வேண்டும். சிரித்துக் கொண்டு இருக்கும் போது இப்படி பேசிவிடக்கூடாது. இருவருக்கும் இடையே கருத்துக்களில் தடுமாற்றங்கள் வரும்போது தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். உண்மையான உங்கள் அன்பை காதலி புரிந்து கொள்வாள். தன்னை மட்டுமே ஈடுபாட்டுடன் காதலிக்கிறான் என்ற எண்ணத்தையும் அவளுக்கு உண்டாக்கும். “என்னோட பெஸ்ட் பிரண்டே நீ தான். நாம் கல்யாணத்திற்கு அப்புறம் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்வோம். எங்க வீட்டில் உள்ள எல்லோருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்” என்று அடிக்கடி சொல்ல வேண்டும். இதனால் நீங்கள் அவளுடன் வாழ்க்கையை நீண்ட நாள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்

ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர் வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினார். 1995&96&ல் 25 முதல் 74 வயதுக்குட்பட்ட 3000 ஆண், பெண்களிடமும், 2005&06ல் 57 முதல் 85 வயதுடைய 3000 ஆண், பெண்களிடமும் தகவல்கள் திரட்டப்பட்டன. இதன் முடிவுகள் வருமாறு:
பொதுவாக, முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களைவிட செக்ஸ் உணர்வு அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும் பெண்கள் 31 ஆண்டுகள் வரை செக்சில் ஈடுபாடு காட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.
55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை செக்சில் ஈடுபட முடியும் என தெரிவித்துள்ளனர்.

இனி `கூலா..’ காபி குடிங்க!

தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் தான் டிகாஷன் காபி குடிக்கும் பழக்கம் பல ஆண்டாக இருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டில் தான் காபி குடிப்போர் அதிகம். சமீப காலங்களில், பல மாநிலங்களிலும் மாடர்ன் காபி கடைகள் பெருக ஆரம்பித்து, காபி மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகமாக காணப் படுகிறது.

காபி, உடலுக்கு நல்லதா கெட்டதா? – இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால், கெட்டது என்பதற்கான 100 சதவீத மருத்துவ ஆதாரங்களும் இல்லை. காபி குடித்தால் ரத்த அழுத்தம் வரும்; சர்க்கரை வியாதி ஏற்படும்; கால்சியம் போய், முட்டு வலி ஏற்படும்… இப்படி பல பீதிகளை இன்னமும் கூட சொல்லித்தான் வருகின்றனர்.ஆனால், காபி கெட்டதல்ல என்பது மட்டும் இதுநாள் வரை ஆயிரக்கணக்கான சர்வதேச ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காபி குடித்தால், முளை சுறுசுறுப்படையும்; நன்றாக படிக்கலாம்; மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியும். இரவில், தூங்காமல் இருக்க காபியை குடிப்பது பலரிடம் வழக்கமாக உள்ளது. இதுவரை, சர்க்கரை வியாதி வராமல் இருப்பவர்களை கணக்கெடுத்தால், அவர்கள் காபி குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள்! அதுபோல, காபியால் கிடைத்த நன்மை என்றால், `பர்கின்சன்ஸ்’ என்ற நோய் வரும் வாய்ப்பை 30 சதவீதம் குறைக்கிறதாம்.

தொழில் நுட்ப உலகில் நிலவும் போட்டிகள்

கம்ப்யூட்டர், இணையம், மொபைல் போன் ஆகிய தகவல் தொடர்பு உலகின் சாதனங்களில் இயங்கும் தொழில் நுட்பத்தில், சில போட்டிகள் மிக சுவராஸ்யமாக இயங்கிக் கொண்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
1. பிரவுசர் போட்டி: நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டரைத் தட்டிவிட்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இடத்தைப் பிடித்தது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இலவசமாக இணைத்து வழங்கியதனாலோ, அல்லது நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டரால் தொடர்ந்து போட்டியிட முடியாததனாலோ, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஓஹோ என பிரவுசர் உலகில் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது.
ஆனால் மொஸில்லாவின் பயர்பாக்ஸ் வந்த பின்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் வாடிக்கையாளர்கள் சற்று இடம் பெயரத் தொடங்கினார்கள். வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் நுழைவதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஏகப்பட்ட இடம் உள்ளது என உலகிற்குத் தெரியவந்ததுடன், பலரும் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவினர். இதற்கிடையே கூகுளின் குரோம் பிரவுசர் நுழைந்து தான் அதிக வேகத்தில் இயங்கும் பிரவுசர் என நிரூபித்துக் காட்டியது. இருப்பினும் பயர்பாக்ஸ் கொண்டிருக்கும் இரண்டாவது இடத்தை எட்ட முடியவில்லை. கூகுளின் நோக்கம் வேறு. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பயன்படுத்துவதைப் பற்றி கவலைப்படவில்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மார்க்கட்டை விட்டு ஒழிய வேண்டும் என விரும்புகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 6 குறித்து பலமான எதிர்ப்புகள் வெளியாகி, அது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 இந்த போராட்டத்தில் பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசருக்குச் சரியான போட்டியைத் தந்து வருகிறது. இதற்கிடையே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 வர இருப்பதாகவும், அது எக்ஸ்பியில் சத்தியமாக இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை எதில் கொண்டு போய் நிறுத்தப்போகிறது எனத் தெரியவில்லை.
2. சீனாவில் கூகுள் / நீயா? நானா?: பல மாதங்களாக நடந்து வரும், தகவல் தொழில் நுட்ப உலகம் தொடர்ந்து கவனித்து வரும், பல நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் போட்டி கூகுள் நிறுவனத்திற்கும், சீன அரசாங்கத்திற்கும் தான். இது வெறும் தொழில் நுட்ப போட்டி மட்டுமல்ல; மனித உரிமை, வர்த்தக இடம், நிறுவன பொருளாதாரம் எனப் பல கோணங்களில் பார்க்கப்பட வேண்டிய போட்டியாக உள்ளது.
இந்த போட்டியைச் சுருக்கமாகச் சொல்வதென்றால், சீன அரசாங்கம் கூகுள் நிறுவனத்தை, அதன் சர்ச் இஞ்சின் சீன நாட்டு தகவல்கள் குறித்து கிடைக்கும் டேட்டாவை, அவர்கள் சொல்கிற வகையில் வடிகட்டி வெளியிடு என்று சொல்கிறது. ஆனால் இது மனித உரிமையில் தலையிடும் விவகாரம் என்று சொல்லி கூகுள் அடி பணிய மறுக்கிறது. விளைவு கூகுள் சீனாவை விட்டு வெளியேறத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே தன் சீன சர்வருக்கு வரும் தேடல் கேள்விகளை, ஹாங்காங் சர்வருக்கு திருப்பி அனுப்புகிறது. கிடைக்கும் தகவல்களைச் சிறிது கூட வடிகட்டாமல் அப்படியே வெளியிடத் தொடங்கி உள்ளது. சீனா கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் மொபைல் பயன்பாட்டில் முன்னணியில் உள்ள நாடு. இதன் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 60 கோடி டாலருக்கு மேல் வருமானம் கிடைத்து வந்தது. பேச்சு சுதந்திரமே எங்களுக்குப் பெரிசு, வருமானம் பெரிதல்ல என்று கூறி கூகுள் வெளியேற முடிவெடுத்துள்ளது. ஆனால் சீனா இது பற்றி கவலைப்படவில்லை. வரும் ஏப்ரலில் கூகுள் வெளியேறுவது முழுமையாகும்.
3. ஆண்ட்ராய்ட் / ஐ போன்: இந்த இரண்டு மட்டுமின்றி இன்னும் பல ஸ்மார்ட் போன்கள் மொபைல் சந்தையில் உலா வருகின்றன. ஆனால் போட்டி என்னமோ இவை இரண்டுக்கிடையில்தான். ஏனென்றால் இது போன்களுக்கிடையே மட்டுமல்ல. இரு பெரும் நிறுவனங்களுக்கிடையே ஆகும். அவை கூகுள் மற்றும் ஆப்பிள். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் போன்களைப் பெருமளவில் தயாரிக்கும் எச்.டி.சி. மீது பெரும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த பின்னணியில் சண்டையிடும் பெரும் நிறுவனங்கள் கூகுள் மற்றும் ஆப்பிள் அடுத்து எப்படி போட்டியைத் தொடரப் போகின்றன என்று காத்திருந்து பார்க்கலாம்.
4. கிண்டில் / ஐ–பேட்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிண்டில் சாதனம் அறிமுகமாகி இ–ரீடர் எனத் தனக்கென ஓர் இடம் பிடித்தது. ஆனால் ஆரவாரத்துடன் அறிமுகமான ஐ–பேட் இந்த இடத்தை அசைக்கப் பார்க்கிறது. இவை இரண்டுமே பிற நிறுவனங்களின் அப்ளிகேஷன்களை ஏற்று செயல்படுவதால், வாடிக்கையாளர் களைக் கவர்வதில் இரண்டுமே சம பலத்துடன் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.
5. எச்.டி.எம்.எல் 5 /பிளாஷ்: சென்ற ஆண்டில் புதிய தொழில் நுட்பமான எச்.டி.எம்.எல். 5 மெதுவாகப் பல சிஸ்டம் பிளாட்பாரங்களில் தன் இடத்தைப் பதியவைத்துக் கொண்டது. அத்துடன் தீவிரமாக தன் பல புதிய வளைந்து செல்லும் பாங்கினால், பிளாஷ் நுட்பத்தினை தூர அடிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இரண்டு தொழில் நுட்பத்திற்கும் உலகில் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டு குழுவும் தங்கள் பக்கத்திற்கான ஆதாரத்தை எடுத்து வைத்து, இவற்றின் வெற்றியை உறுதி செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் இது இன்னும் தீவிரமாகி ஒவ்வொன்றின் இடம் தெரியவரும். அடோப் தன் அனைத்து சாதனங்களிலும் பிளாஷ் குறித்து தீவிரமாய் செயல்படுவதைப் பொறுத்து இது அமையும்.
6. கூகுள் டாக்ஸ்/மைக்ரோசாப்ட் ஆபீஸ்: கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் கிடைப்பதால், கூகுள் டாக்ஸ் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களைப் பெற்றது. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனமும், தன் ஆபீஸ் தொகுப்பை கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் வழங்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் மூன்றாவது பிரிவு நிறுவனங்களின் அப்ளிகேஷன்களும் இதே வகையில் கிடைக்கத் தொடங்கி உள்ளன. இனிமேல் தான் இந்தப் போட்டி மட்டும் தொடருமா? அல்லது ஒன்று வெல்லுமா என்பது தெரிய வரும்.
மேலே குறிப்பிட்டது போக இன்னும் சில தொழில் நுட்ப சண்டைகள் நடந்து கொண்டு வருகின்றன. ஆனால் அனைவரையும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுவது மேலே உள்ளவை தான். இந்த ஆண்டில் இவை எப்படி தொடர்கின்றன என்பதை வேடிக்கை பார்க்கலாம். எப்படியும் இதன் பாதிப்பு நம் மீதும் இருக்கும்.

பீட்ரூட்

தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

கோடை வெயில் சமாளிப்பது எப்படி?

கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்ககள். குழந்தைககள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே பாடாகப்படுத்தும் .சம்மர் இந்தியாவில் குழந்தைககள், நடுத்தர வயதினர், வயதானவர் என 3 பிரிவினரையுமே வெயில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது. வயதானவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ என்ற வெயில் வெப்பத்தாக்கு நோய், நடுத்தர வயதினருக்கு சிறுநீர் பிரச்னை,குழந்தைகளுக்கு
தொண்டை பதிப்புககள் என பட்டியல் நீளமனது . சருமமற்றும் வியர்வை பிரச்னைககள், அம்மை என எல்லோரையும் தாக்கும் பாதிப்புகளும் உண்டு.கோடை காலத்தில் நாம் அடிக்கடி பார்க்கும் செய்தி, ‘வெயிலில் சுருண்டு முதியவர் பலி’ என்பது.இது எப்படி ஏற்படுகிறது? ‘‘அதிக வெப்பத்தால் முதியவர் களின் உடலில் வறட்டுத் தன்மை ஏற்பட்டு நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அந்த நேரத்தில் இன்னும் வெயிலில் அலைந்தால் ‘ சன் ஸ்ட்ரோக்’ என்ற வெப்பத்தாக்கு ஏற்படும் . நீர்ச்சத்து குறைவதைப் பொறுத்து இது மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.கோடையில் வயதானவர்ககள் காற்றோட்டமான சூழ்நிலையிலும், வெயிலில் அலையாமலும் இருப்பதே நல்லது. இந்நோய் பெரும்பாலும் வடஇந்தியா, பாலைவனப் பகுதிககள்,வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் இடங்ககள் மற்றும் வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்க்கும் வயதானவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும்’’ என்கிறார் .‘ ‘இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ள வயதானவர்களுக்கு கோடை காலத்தில் ரத்தத்தில் உப்புச்சத்தின் அளவு மாறுபடும். சிறுநீரகப் பாதிப்புகளைக்கூட அந்த உப்புத்தன்மை ஏற்படுத்திவிடும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.நீர்ச்சத்து அதிகமுகள்ள தர்ப்பூசணி, இளநீர் , வெள்ளரி பழங்ககள் நல்லது. தர்ப்பூசணியில் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் சரிவிகிதத்தில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவது நல்லது’’ நடுத்தர வயதினருக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு அடிக்கடி வந்து எரிச்சலை கிளப்பும். ‘‘கோடை காலத்தின் முக்கிய பிரச்னை உடலில் நீர்ச்சத்து குறைவதுதான். இதனால், களைப்பு அதிகமாகும்.

கோடையில் சிலருக்கு சிறுநீரில் கலந்துகள்ள உப்புககள் சரிவர கரையாமல், அது வெளியேறுவதில் பாதிப்பு வரும். அந்தநேரத்தில் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு சிரமப்படுத்தும். உப்புககள் நன்றாகக் கரைய தண்ணீரே அருமருந்து.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்தாலே நீர்க்கடுப்பு உள்பட சிறுநீர் பாதிப்புகளை துரத்திவிடலாம்’ ’ என்கிறர் சென்னை சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்.கோடையில் குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோருக்குப் பெரியசவால்.கொசு தொல்லைககள் அதிகம் இருக்காது என்பதால் மலேரியா, டைபாய்ட்,சிக்குன் குனியா உள்பட நோய்களின் தாக்கம்
குறைவாகவே இருக்கும். ஆனால், அம்மை நோய் வர வாய்ப்புககள் அதிகம். இது தொற்றுநோய் என்பதால் ஒருவருக்கு வந்தால்,மற்றவர்களுக்கும் எளிதில் வந்துவிடும். அதனால், பெற்றோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வெயில் காலம்தானே என்று நினைத்து,
குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜ் தண்ணீர் அதிகம் கொடுப்பார்ககள்.இதனால் குழந்தைகளுக்குத் தொண்டையில் தொற்று ஏற்பட்டு பாதிப்பு வரலாம். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் பாதிப்பு இதய நோயில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் மருத்துவரின்ஆலோசனை மிக அவசியம்.
குழந்தைககள் வெயிலில் அதிகம் விளையடுவார்கள் என்பதால் நீர் இழப்பும் அதிகமாகவே இருக்கும். தண்ணீர் அதிகம் பருகச் செய்ய வேண்டும்.குழந்தைகளின் எடைக்கு ஏற்றவாறு 1 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை கொடுக்கலாம். நீர்ச்சத்து அதிகமுகள்ள பழங்ககள் அதிகம் கொடுப்பதும் நல்லது.அதை பழங்களாகவே கொடுக்க வேண்டும். ஐஸ் கலந்து ஜூஸாக கொடுக்க வேண்டாம். காலை 1 1 மணியில் இருந்து மதியம் 4 மணி வரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. சூரியனின் நேரடிப்
பாதிப்பு இந்நேரத்தில் அதிகம் என்பதால் தவிர்க்கலாம்.அசவ உணவுகள் அதிகம் ஜீரண பிரச்னையை ஏற்படுத்திவிடும். முட்டை,பால் ஆகி ய உணவு வகைகளைக் கொடுக்கலாம்.ஃபாஸ்ட் புட், ஃப்ரைடு புட் ஆகியவற்றை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும்.தேர்வு முடிந்து வீட்டில்
உகள்ள குழந்தைகளை ‘சம்மர் கோச்சிங்’ என்ற பெயரில் அதிக அளவு தொந்தரவு செய்தால் அவர்களின் மனஅழுத்தம் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்லும் குழந்தைககள் படிப்பில் சுணக்கம் காட்ட இது காரணமாகிவிடும். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் தொடர்பான பயிற்சிகளுக்கு அனுப்பலாம்’’ என்கிறார் சென்னை குழந்தைககள் நலம் மற்றும் உளவியல் நிபுணர். உடல் சிவந்து போகுதல், கொப்பளங்ககள்,
கட்டிககள் போன்றவை எல்லா வயதினரையுமே பயமுறுத்தும். வியர்வை பாதிப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.‘‘கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனாலேயே மேற்கண்ட பிரச்னைககள் உள்பட துர்நாற்றமும் ஏற்படுகிறது.வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க காலை, மாலை என இருவேளை குளியல் நல்லது.
மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்’’என்கிறார் டாக்டர்.
கொளுத்தியெடுக்க கோடை வெயில் தயார்!உங்ககள் உடலை பாதுக்காத்துக் கொகள்ள நீங்ககள் தயாரா?
இளநீரே… இளநீரே…
கோடையின் அருமருந்து என்று இளநீரை சொல்லிவிடலாம். மற்ற நீர்ச்சத்துப் பழங்களைக் காட்டிலும் இதில்தான் எல்லாவிதச் சத்துகளும் சரிவிகிதத்தில் உகள்ளன. இளநீருக்கு சூட்டை குறைக்கும் ஆற்றல் உண்டு. ஜீரணசக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏற்படும் நீர்&உப்பு பற்றாக்குறையை சரி செய்யும்.குடல்புழுக்களை அழிக்கும்.இதில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்பு, குளோரைடு, கந்தகம் போன்ற தாதுக்ககள் சரிவிகிதத்தில் உள்ளன. புரதசமும் சர்க்கரைச் சத்தும் சமமாகவே உகள்ளன.
எல்லோருக்கும் ஏற்ற இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. அதில் உகள்ள அமிலம் வயிற்றில் புண்ணை உருவாக்கிவிடும். கவனம்!

ஆன்லைன் வங்கிக் கணக்கா? உஷார்!

வங்கிகளின் செயல்பாடுகள் இப்போது மிக மிக எளிதாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்கின்றன. 24 மணி நேரமும் பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்கள், வீடு தேடி நம் பெயர் அச்சடித்துக் கிடைக்கும் செக் புக், போன் செய்தால் டி.டி., எனப் பல புது வசதிகள் இப்போது அடிப்படை வசதிகளாய் அமைந்து விட்டன. இவற்றுக் கெல்லாம் சிகரமாய் நமக்குக் கிடைப்பது இன்டர்நெட் வழி ஆன்லைன் பேங்கிங் வசதியாகும். இதன் மூலம் நம் கணக்கினைக் கண்காணிக்கலாம்; நிதியை ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு மாற்றலாம். பில்களைச் செலுத்தலாம். டிக்கட் எடுக்கலாம், என வசதிகள் நீண்டு கொண்டே போகின்றன. ஆனால் நம் பேங்க் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருட்டுத்தனமாகப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி நம் கணக்கிலிருந்து பணம் திருடும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன.
இவை பிரபலமான வங்கிகளின் இணைய தளம் போலவே தளங்களைத் தயார் செய்து, நம்மை ஏமாற்றி அதில் நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் என்டர் செய்திட வழி தந்து அவற்றைப் பெற்றுவிடுகின்றனர். பின் அவற்றைப் பயன்படுத்தி பணத்தை எளிதாகத் திருடுகின்றனர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்குகளில் இந்த திருட்டு அதிகம் நடப்பதாகத் தெரிகிறது. எனவே வாடிக்கையாளர்கள் கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இவை வலியுறுத்தி வருகின்றன. அவற்றை இங்கு காணலாம்.
1. முதலாவதாக இந்த வங்கிகளிலிருந்து உங்கள் இமெயிலுக்கு ஏதேனும் இமெயில் மெசேஜ் வந்தால் அவற்றைத் திறக்கவோ, அல்லது திறந்த பின்னர் அதில் காணப்படும் லிங்க்குகளில் கிளிக் செய்திடவோ வேண்டாம். இது போன்ற மெயில்களை இந்த பேங்குகள் அனுப்புவதில்லை.
2. இந்த வங்கிகளின் தளங்களை அணுகிய உடனேயே அதன் முகவரியைப் பார்க்கவும். அதில் https என்ற எழுத்துக்களில் முதல் முகவரி சொல் இருக்க வேண்டும். இதில் s என்பது செக்யூரிட்டி என்பதனைச் சுருக்கமாகச் சொல்லிப், பாதுகாப்பான தளம் என்பதைக் குறிக்கிறது. இந்த s இல்லை என்றால் அது போலி. எனவே உடனே வெளியேறவும்.
3. பூட்டு மாட்டும் பேட்லாக் சிறிய படம் ஒன்று இந்த தளத்தின் அதே முகப்புப் பக்கத்தில் எங்கேணும் இருக்கும். இது பெரும்பாலும் அட்ரஸ் பாரின் ஓரத்தில் அல்லது கீழாக ஒரு இடத்தில் இருக்கும். இதன் மீது கிளிக் செய்தால், இந்த தளம் குறித்த பாதுகாப்பு சர்டிபிகேட் கிடைக்கும். இந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அத்தாட்சி இதுவாகும்.
4. அட்ரஸ் பாரின் முகவரிக்கு முன்னால் உள்ள பாகம் பச்சை நிறமாக இருக்கிறதா என்பதனைக் கவனிக்கவும். இதுவும் இந்த தளம் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது.
5. மேலும் இந்த தளங்களில் லாக் இன் செய்வதற்கான கட்டங்கள் தரப்பட்டிருக்கும். ஏதேனும் பாப் அப் விண்டோ கொடுத்து, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்டால் தர வேண்டாம். தளத்தைவிட்டு வெளியேறவும்.
இவை எல்லாம் சோதனை செய்த பின்னரே லாக் இன் செய்திடவும். பல தளங்களில் இதற்கென விர்ச்சுவல் கீ போர்ட் தரப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்துவது சற்று கூடுதல் நேரம் எடுக்கும் என்றாலும், நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். ஏனென்றால் ஒவ்வொரு முறை இதனைத் திறக்கும் போதும் விர்ச்சுவல் கீ போர்டில் கீகள் இடம் மாறி இருக்கும். எனவே நாம் கிளிக் செய்திடும் இடத்தை வைத்து நம் பெர்சனல் தகவல்களைப் பெற முடியாது. சில வேளைகளில் தொலைபேசி வழியாகவும், வங்கிகளில் இருந்து பேசுவது போல பேசி நம் அக்கவுண்ட் பற்றிய பெர்சனல் தகவல்களைப் பெற முயற்சிப்பார்கள். அது போல எந்த வங்கியும் தகவல்களைப் பெறமாட்டார்கள். எனவே அவற்றைத் தவிர்த்துவிடவும்.

குளிர்ச்சிக்கு நெருஞ்சில்

மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து  சிறுபஞ்சமூலம் என்ற மருந்து உண்டு.

அதே போல் போல, ஐந்து விஷயங்கள்  மூலம் நீதியைப் போதித்து, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட பொருள் தொடர்பாக ஐந்து விஷயங்களை எடுத்துக்கூறுகிறது.  இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது.

நெருஞ்சில் ஒரு அற்ப்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள்  சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும்  குணம் வாய்ந்தது. மேலும்  இது ஒரு ஆகர்ஷண மூலிகையாகும்.

இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும்.

கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன்தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும்.  இது ஒரு முட்செடி., சிறு சிறு முற்கள் உண்டு. .இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது.

தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணலாம்.  மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும்.

இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர்.பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்.

இதன் இலையை ஒரு குவளை தண்ணீரில் சிறிது நேரம் இட்டால் ,தண்ணீர் அடர்த்தி மிகுந்து கெட்டியாகிவிடும் .பார்ப்பதற்கு அதிசியமாக இருக்கும் .எண்ணெய்  போல் பிசுபிசுப்பு ஆகிவிடும் .இதுவும் ஒரு மருந்து ,இது காமவர்த்தினி .ஆண்மை பெருக்கி . .மேலும் இது பட்டுத்துணிகளை சுத்தப்படுத்தும்.

யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும்.

இது எந்த ரசாயனமும் இல்லாமல் இயற்க்கை முறையில் பட்டு முதலிய துணிவகைகளை சுத்தம் செய்து கரைகளை எடுக்கும் .ஒரு பயோ சலவையகம் கூட துவக்கலாம் .

சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும்.

பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்..இவ்வை குணத்தில் மாறுபடுவதில்லை. இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது.

இது குளிர்ச்சி உண்டாக்கி , சிறுநீர் பெருக்கி , உரமாக்கி , உள்ளழலகதறி ,ஆண்மைப்பெருக்கி
நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இவ்வுப்புகள் சில வேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும்.
நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.

உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில்: மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் .  இது  ஒரு சும்மா கிடைக்கும் வயகரா .!
சாப்பிட்டுப்பார்த்தால் தான்  தெரியும் அதன் வலிமை.  நம்மிடையே இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள்  பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து  உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும்.

இது ஒரு ஊக்கி மருந்து ஆகும்

நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.

நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.

சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும். டயாலிசிஸ் செய்தது லக்ஷக்கணக்கில் பணத்தையும் உடல் நலத்தையும் இழக்கவேண்டாம்.

இதனை எளிய மருந்தாய் எண்ணி உதாசீனப்படுத்த வேண்டாம்.  சித்தர்களின் சுவடிகளில் சொல்லப்பட்ட அரிய மருத்துவ முறை இது.சிறிது சிரத்தை எடுத்தால் சீரும் சிறப்புமாக  சிறு சிறுநீரகததைப்  பற்றி கவலைப்  படாமல் வாழலாம்!

கருணை மழை பொழியும் மாரியம்மன்!- ‘தெப்பக்குளம் மாரியம்மன்’

ஊரின் வடக்கு எல்லையில், பெண் காவல் தெய்வத்திற்கு கோவில் அமைப்பது மரபு. இந்த அம்பிகை, துர்க்கை அல்லது காளியின் அம்சமாக இருப்பாள். இவளை, ‘வடக்குவாசல் செல்வி’ என்பர். ஆனால், மதுரையில் ஊரின் கிழக்கு எல்லையில், காவல் தெய்வத்திற்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இவள், ‘தெப்பக்குளம் மாரியம்மன்’ எனப்படுகிறாள்.
மாரியம்மன் வழிபாடு, மழை கருதி ஆரம்பிக்கப்பட்டது. ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகா, பரசுராமர் உள்ளிட்ட சில குழந்தைகளுக்கு தாயானாள். கற்புக்கரசியான இவள், ஆற்றங்கரையிலுள்ள மணலில், குடம் செய்யும் திறமை பெற்றவள். அந்தக் குடத்தில் தீர்த்தம் எடுத்து வந்து, கணவரின் பூஜைகளுக்கு தினமும் உதவுவாள். ஒருசமயம், அவள் வானில் சென்ற கந்தர்வன் ஒருவனைக் கண்டு, ‘இப்படியும் உலகத்தில் அழகர்கள் இருப்பார்களா!’ என்று நினைத்தாள். பதிவிரதையான அவளுக்கு இந்த நினைப்பே எமனாக அமைந்தது. அதன்பிறகு, அவள் மணலில் குடம் செய்யும் தகுதியை இழந்தாள். இதையறிந்த ஜமதக்னி, தாயை வெட்டும்படி பரசுராமருக்கு, உத்தரவிட்டார்; பரசுராமரும் அவ்வாறே செய்தார்.
தன் உத்தரவைத் தட்டாத மகனுக்கு, என்ன வரம் வேண்டுமென ஜமதக்னி கேட்டார். தாயின் உயிரைத் திருப்பித் தருமாறு மகன் உருக்கமாக வேண்டினார்; ஆனால், வெட்டிய இடத்தில் தலை மட்டுமே கிடைத்தது. ஜமதக்னி சகல தெய்வங்களையும் பிரார்த்தித்து, தன் மனைவி மீண்டும் உயிர் பெற வேண்டினார்.
இந்த வடிவத்துக்கு சிவன் அழகிய முகம் கொடுத்தார். பிரம்மா உடலானார். திருமாலின் சக்தி பதினெட்டு கரங்கள் ஆயின. எமதர்மனின் சக்தி கூந்தலானது. அக்னி கண்களானார். மன்மதன் அழகிய புருவமானான். இப்படி பல தெய்வங்களும் அவளது அங்கமாயினர். அனைத்து தெய்வ சக்திகளும் இணைந்ததால், அவள் மாகாளியாக உருவெடுத்தாள். இவளுக்கு, ‘துர்க்கை’ எனும் பெயரும் வந்தது. ‘துர்க்கம்’ என்றால், ‘கோட்டை!’ உலக மக்களை கோட்டை போல பாதுகாப்பவள் என்பதால் இப்பெயர் வந்தது. கிராமங்களில் இவள் மழை தரும் தெய்வமாக இருந்து, ‘மாரி’ என்று பெயர் பெற்றாள்.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன், இவ்வூரின் முதல் தெய்வமாகக் கருதப்படுகிறாள். நகரிலுள்ள முக்கிய கோவில்களில் விழா நடத்தும் முன், இவளுக்கு பூஜை செய்த பின்பே பணிகளைத் துவங்குவர். வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளும் தடையின்றி நடக்க வேண்டுகின்றனர்.
இங்கு அம்பிகைக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தமே முக்கியப் பிரசாதம். அம்மை நோய், கண்நோய் உள்ளவர்களுக்கு இந்த தீர்த்தம் தரப்படும். தோல் வியாதி தீர உப்பு, மிளகு காணிக்கை செலுத்தும் வழக்கம் இருக்கிறது. இங்கு பங்குனி திருவிழா மிகவும் விசேஷம். ஏப்ரல் 6ல் துவங்கி 15 வரை பத்து நாட்கள் நடக்கும் இந்த விழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடத்தப்படும்.
கோவில் முன் பிரம்மாண்டமான தெப்பக்குளம் இருக்கிறது. இந்த தெப்பக்குளத்தை திருமலை நாயக்கர் உருவாக்கினார். இதைத் தோண்டும் போது கிடைத்த பிரம்மாண்டமான முக்குறுணி விநாயகர், மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். தைப்பூசத்தன்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் இந்தத் தெப்பக்குளத்தில் உலா வருவர்.
மதுரையின் முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து, தெப்பக்குளம் வழியாகச் செல்லும் பஸ்கள் இந்தக் கோவில் முன் நிற்கும். பங்குனி திருவிழாவில் பங்கேற்று, மாரியம்மனின் கருணை மழையில் நனையுங்கள்.