எக்ஸெல் டிப்ஸ் 8.4.2010
ஹெடர் – புட்டர் எழுத்துக்கள்:
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அமைக்கப்படும் ஹெடர் மற்றும் புட்டர்களில் உள்ள டெக்ஸ்ட்டை நம் இஷ்டப்பட்ட அளவில், சாய்வாக அல்லது குறுக்குக் கோடு, கீழ்க்கோடு சேர்த்து அமைக்கும் வசதி உண்டு. இது மட்டுமின்றி ஹெடர் புட்டர்களில் அமைக்கப்படும் பல விஷயங்களை நம் விருப்பப்படி மாற்றி வடிவமைக்கும் வசதியும் எக்ஸெல் தொகுப்பில் தரப்பட்டுள்ளது.
முதலில் டெக்ஸ்ட் என்டர் செய்திடவும். பின்னர் இந்த டயலாக் பாக்ஸில் உள்ள அ என்னும் டூலில் கிளிக் செய்திடவும். உடன் கிடைக்கும் விண்டோவில் தேவையான எழுத்துவகையில் டெக்ஸ்ட்டை மாற்றலாம். குறுக்குக் கோடிடலாம், சப்ஸ்கிரிப்ட், சூப்பர் ஸ்கிரிப்ட் அமைக்கலாம். உங்களுடைய எக்ஸெல் எம்.எஸ். ஆபீஸ் 2007 வகையைச் சேர்ந்தது என்றால், வண்ணத்தையும் மாற்றலாம். எக்ஸெல் 97க்கு முன்பு வந்த தொகுதிகளில் இந்த கலர் மாற்றும் வசதி இருந்தது. பின் எக்ஸெல் 2007ல் தான் இது மீண்டும் தரப்பட்டது. மற்ற தொகுப்பில் உள்ள ஹெடர்களில் வண்ண எழுத்துக்கள் வேண்டுமாயின், வண்ணத்தில் எழுத்துக்கள் உள்ள கிராபிக்ஸ் அமைத்து அப்படியே பேஸ்ட் செய்திட வேண்டியதுதான். இந்த வழியை நிறுவனங்களின் இலச்சினைகள், மற்ற கிராபிக் ஆப்ஜெக்ட்களை அமைப்பவர்கள் மேற்கொள்கிறார்கள்.
திருத்தியபின் கணக்கிடும்:
எக்ஸெல் ஒர்க்புக் தயாரிக்கும் போது நாம் பல பார்முலாக்களை அமைக்கிறோம். பார்முலாக்களுக்கான டேட்டாவினைக் கொடுக்கிறோம். உடன் பார்முலாவிற்கேற்ற விடைகள் அந்த அந்த செல்களில் தானாக அமைக்கப்படுகின்றன. டேட்டாவினைத் திருத்தினால் என்னவாகும்? அதற்கேற்ற வகையில் பார்முலா முடிவுகள் தாமாக மாற்றப்பட்டு ஒர்க்ஷீட்டுகளில் அமைக்கப்படும். அதாவது, நாம் மேற்கொள்ளும் மாற்றங்களின் அடிப்படையில் எக்ஸெல் எப்போதும் அப்டேட்டாகவே இருக்கும். இது பல வழிகளில் நமக்கு உதவுகிறது. பெரிய ஒர்க்ஷீட்டுகளில் செயல்படுகையில் நாம் ஒவ்வொரு செல்லிலும் சென்று நாமாக திருத்தப்படும் டேட்டாவிற்கேற்ற வகையில் முடிவுகளை மாற்ற முடியாது.
ஆனால் ஒரு சிலர் தாங்களாகவே சில டேட்டாக்களையும், அது சார்ந்த முடிவுகளையும் மாற்ற விரும்புவார்கள். எக்ஸெல் இந்த முடிவுகளைக் கணக்கிட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்று சொலவர்களும் உண்டு. ஒரு சில ஸ்லோ கம்ப்யூட்டர்களில் இவ்வாறு அமையலாம். அவ்வாறு தாங்களாகவே கணக்கிட்டு அமைக்க விரும்புபவர்கள், எக்ஸெல் தொகுப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாம்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உங்களுக்கு Options Options Dialogue Box காட்டும்.
2. இந்த விண்டோவில் உள்ள Calculation என்னும் டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதை உறுதி செய்திடவும்.
3.அதில் Manual என்னும் ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கவும். பின் OK கிளிக் செய்திடவும். உங்களிடம் எக்ஸெல் 2007 இருந்தால் கீழ்க்காணும் மாற்றங்களை ஏற்படுத்தவும்.
1. Office பட்டனில் கிளிக் செய்திடவும்.
2.பின் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
3. இதன் இடது பக்கத்தில் உள்ள Formulas என்ற ஏரியாவில் கிளிக் செய்திடவும்.
4. டயலாக் பாக்ஸின் Calculation Options என்ற பிரிவில் உள்ள Manual ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின் OK கிளிக் செய்திடவும்.
ஏரியா பிரிண்ட்:
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைப் பெரிய அளவில் அமைக்கிறீர்கள். சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட சில செல்களை மட்டும், அச்செடுத்து அதில் தவறுகள் உள்ளனவா, அல்லது வேறு மாதிரி மாற்றி அமைக்கலாமா என்று திட்டமிட எண்ணுகிறீர்கள். அப்போது அந்த குறிப்பிட்ட செல்களை மட்டும் பிரிண்ட் எடுக்க வேண்டும் அல்லவா? இதற்கான வழி என்ன? அதுதான் ஏரியா பிரிண்ட்.
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நீங்கள் அச்சிட விரும்பும் செல்களை மட்டும் ஓர் ஏரியாவாகப் பிரித்து வைத்து பிரிண்ட் எடுக்கலாம். எந்த செல்களை பிரிண்ட் எடுக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுத்துவிட்டு பைல் மெனு அழுத்தி அதில் Print Area என்பதைக் கிளிக் செய்தால், இரண்டு ஆப்ஷன்ஸ் காட்டப்படும். Set Print Area, Clear Print Area என அவை அமைந்திருக்கும். இதில் Set Print Area வை அழுத்தி அமைத்திடலாம். இது எப்போதும் அமைக்கப்பட்ட நிலையிலேயே அமையும். அடுத்து இன்னொரு பிரிவு செல்களை அமைத்து பிரிண்ட் ஏரியா அமைத்தால், முதலில் அமைத்தது தானாக எடுக்கப்பட்டுவிடும். ஆனால் அடுத்து அமைக்கப்பட்டது, செலக்ட் செய்யப்பட்ட ஏரியாவாகவே இருக்கும். இதனையும் நீக்க வேண்டும் என்றால், முன்பு போல பைல் மெனுவில் செட் பிரிண்ட் ஏரியா ஆப்ஷன்ஸ் பெற்று, Clear Print Area வை அழுத்த வேண்டும்.
உங்கள் தொகுப்பு எக்ஸெல் 2007 ஆக இருந்தால், கீழ்க்காணும் வகையில் பிரிண்ட் ஏரியாவை கிளியர் செய்திடலாம்.
1. ரிப்பனில் Page Setup டேப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இந்த பேஜ் செட் அப் குரூப்பில், Print Area என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு காட்டப்படும் ஆப்ஷன்களில் Clear Print Area வைக் கிளிக் செய்திடவும்.
வெளி பொருட்களால் மூச்சுத் தடை-முதலுதவி செய்வது எப்படி
மீன், மாமிசம் போன்றவற்றை சாப்பிடும்பொழுதும், சாக்லெட் பதார்த்தங்களைச் சாப்பிடும்பொழுதும் மூச்சுத் தடை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு தவிரவும், நாணயங்கள், சிறு சிறு பொம்மைகள் போன்றவற்றை விழுங்க முயலும் போதும் மூச்சுத் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு. இது போன்ற சமயங்களில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்பது சாத்தியமே. ஏனெனில், அவரது மூச்சத் தடைக்கான காரணம் என்ன என்பது தெரிந்து விடுகிறது.
கண்டுபிடித்தல்
சாப்பிடும்பொழுது எழும் மூச்சுத் திணறலைக் கண்டு இது மாரடைப்போ, மயக்கமோ என்று எண்ணி குழம்பிடக் கூடாது. வெளிப்புற பொருள்கள் உள்ளே புகும்போது சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ மூச்சுத் திணறல் ஏற்படுவது இயற்கை. சிறிய அளவிலான மூச்சுத் திணறல் எது. பெரிய அளவிலான மூச்சுத் திணறல் எது என்பதை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம். அதற்குமுன் ஒரு விஷயம். சம்பந்தப்பட்டவரிடம், உங்களுக்கு மூச்சுத் திணறுகிறதா? என்று கேட்டுவிடுவது உத்தமம்.
மூச்சுத் திணறல் – சில அறிகுறிகள்
சாப்பிடும்பொழுது பாதிப்பு ஏற்படுதல்
கழுத்தைப் பிடித்துக்கொள்ளுதல்
சிறிய அளவிலான மூச்சுத் திணறலுக்கும் பெரிய அளவிலான மூச்சுத் திணறலுக்கும் உள்ள வேறுபாடுகள்
சிறிய அளவு பெரிய அளவு
உங்களுக்கு மூச்சுத் திணறுகிறதா என்று கேட்டால், ஆம் என்று பதில் அளிப்பார். அவரால் பேச முடியும், இரும முடியும், மூச்சு விட முடியும். உங்களுக்கு மூச்சுத்திணறுகிறதா என்று கேட்டால், அவரால் பதிலளிக்க முடியாது. அல்லது தலையை அசைத்து பதிலளிப்பார் ஒழங்கற்ற முறையில் சுவாசிப்பார் இடைஞ்சல்கள் இருக்கும். மயக்க நிலைக்குப் போகலாம்.
எப்படிச் சமாளிப்பது?
பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் (1 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொருத்தக் கூடிய சில வழிமுறைகள்)
நிலைமையின் தீவிரத்தை ஆராயுங்கள்
தீவிர சுவாசத் தடை (பயனற்ற இருமல்)
சிறிய அளவிலான சுவாசத் தடை (பயனளிக்கும் இருமல்)
மயக்கநிலையில் இருந்தால் (சிறிசிஸி-ஐ ஆரம்பிக்கவும்
நினைவோடு இருந்தால் பின்பக்கமாக 5 முறை தட்டலாம். 5 முறை அடி வயிற்றை அழுத்தலாம்.
நிலைமை சீராகும் வரை இருமுவதற்கு அனுமதிக்கலாம்.
வெளிப்புற பொருள்கள் உட்புகுந்துவிட்டால் கடைபிடிக்க வேண்டிய சிகிச்சை முறை.
சிறிய அளவிலான சுவாசத் தடை ஏற்படும் பட்சத்தில்
இருமுவதற்கு அனுமதியுங்கள்
பெரிய அளவிலான சுவதசத் தடை ஏற்படும் பட்சத்தில்
ஐந்து முறை முதுகுப்புறத்தில் தட்டிக் கொடுள்ளலாம்.
அவருக்குப் பக்கவாட்டில் அல்லது பின்புறமாக நிற்கலாம்.
அவரது மார்பை தாங்கிப் பிடித்தபடி அவரை முன்பக்கமாக நகர்த்தலாம். அப்போதுதான் உள்ளே சிக்கிக் கொண்ட பொருள் வாய் வழியாக வெளியேறுவதற்குச் சுலபமாக இருக்கும்
குதி கையால் அவரது தோள்பட்டையின் மத்தியில் ஐந்து முறை அழுத்தமாக அடிக்கலாம்.
ஒவ்வொரு முறை அடிக்கும்போதும், அவரது சுவாசம் சீராகிவிட்டதா என்று பார்க்கவும். ஐந்து முறை அவசியம் அடித்தாக வேண்டும் என்று அவசியமில்லை. தொண்டையில் சிக்கிக் கொண்ட பொருள் வெளியே வரவேண்டும். அதுதான் முக்கியம்.
ஐந்து முறை அடித்தும் பயனில்லை என்றால், அடி வயிற்றை அழுத்தலாம்.
அவரது பின்பக்கம் நின்றுகொண்டு இரு கைகளாலும் அவரை அணைத்துக் கொள்வதைப் போல் பிடித்து அடி வயிற்றை அழுத்தலாம்.
மூலிகை கட்டுரை -கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்!
கோடைக்காலம் தொடங்கியவுடனே வெயிலின் கொடுமை வியர்வை முதல் சிறுநீர் வரை பல தொல்லைகளை உண்டாக்கி நம்மை வாட்ட தொடங்கிவிடும். நாம் உண்ணும் உணவுகள் செரிமான மண்டலம் மூலமாக செரிக்கப்பட்டு, குடலுறிஞ்சிகள் மூலமாக உறியப்பட்டு, கல்லீரலுக்கு சென்று சுத்திகரிக்கப்பட்டு, சிறுநீரகத்திற்கு சென்று
கழிவுகள் வெளியேற்றப்பட்டு, இருதயத்திற்கு செல்கின்றன. இவற்றில் குடலுறிஞ்சிகளும், கல்லீரலும், சிறுநீரகமும் சரிவர இயங்காவிட்டால் ரத்தத்தில் தங்கியுள்ள உப்புகளும், வேண்டாத தாதுக்களும் சிறுநீரகத்தின் உட்புறம் தங்கி, கற்களாக மாற ஆரம்பிக்கின்றன.
நாம் உண்ணும் உணவிலுள்ள சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், ஆக்சலேட், யுரேட், நைட்ரேட், அமினோ அமிலங்கள் மற்றும் இதர உலோக உப்புகளின் கலவையே சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமைகின்றன. இவை பெரும்பாலும் பால், பால் சார்ந்த உணவுகள், பயறு வகைகள், கொழுப்பு நிறைந்த வறுத்த உணவுகள், அமில உணவுகள், மது, ஊறுகாய், சாக்லேட், காளான், காலிபிளவர், முட்டைகோஸ், சோயாபீன்ஸ், தண்டுக்கீரை, காபி, டீ, மாமிசம், கருப்பட்டி, வெல்லம், செயற்கை துரித உணவுகள், சாயங்கள் சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் அதிக விதைகள் நிறைந்த தக்காளி, திராட்சை ஆகியவற்றில் சிறுநீரக கற்களை அதிகப்படுத்தும் உப்புகள் சமச்சீரற்ற விகிதாச்சாரத்தில் அமைந்துள்ளன. ஆகவே கற்களின் தன்மையை அறிந்து மேற்கண்ட உணவுகளை தவிர்ப்பதோ அல்லது குறைந்தளவில் உட்கொள்ளுவதோ நல்லது.
ஒவ்வொருவரும் தினமும் 3 லிட்டர் நீர் அருந்துவது அவசியமாகும். அதுமட்டுமின்றி தினமும் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறதா என்பதையும் கவனமாக பார்த்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம். கோடைக்காலத்தில் தோன்றும் சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்து, உடல் சேர்வில்லாமல் வெளியேற்றும், அனைவரும் உட்கொள்வதற்கு ஏற்ற பழம் ஆரஞ்சுப் பழமாகும்.
சிட்ரஸ் சைனன்சிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரூட்டேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த பெரிய மரங்கள் தென்கிழக்கு ஆசியப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டுள்ளன. சமஸ்கிருத நூல்களில் ஆரஞ்சுப் பழத்தை பற்றிய குறிப்புகள் ஏராளமாக காணப்படுகின்றன. சைனா ஆப்பிள் என்ற வேறு பெயராலும் வழங்கப்படும் ஆரஞ்சுப் பழங்களில் சிட்ரஸ் ஆரன்டியம் என்ற வகை சற்று கசப்புத் தன்மையுடையது. 100 கிராமுள்ள ஆரஞ்சு பழத்தில் 46 கிலோ கலோரிகள் சக்தி கிடைப்பதால் கோடைக்காலத்தில் சக்தி இழப்பை தடுக்க ஆரஞ்சு பழங்களை பயன்படுத்தலாம். சுண்ணாம்பு சத்து சேர்ந்த கற்கள் சேரவிடாமல் தடுக்க சிட்ரேட் அதிகமுள்ள ஆரஞ்சுப் பழத்தை உட்கொள்வதால் சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு அதிகரித்து, யூரிக் அமில மற்றும் சுண்ணாம்பு கற்கள் தோன்றுவது தடுக்க படுகிறது. ஆரஞ்சு பழத்திலுள்ள பொட் டாசியம் சிட்ரேட் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது. தையமின், ரிபோபுளோவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், வைட்டமின் பி6, போலேட், அஸ்கார்பிக்அமிலம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தனிமங்கள் ஆரஞ்சு பழத்தில் அதிகமாக காணப்படுவதால் சற்று அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன.
இதன் தோலின் உட்பகுதியிலும் சுளைகளுக்கு இடையிலும் காணப்படும் நார் போன்ற பகுதி பித் என்றழைக்கப்படுகின்றன. இவற்றில் காணப்படும் சினபெரிகன், என்-மெத்தில் தைரமின் ஆகியன கோடைக்காலத்தில் ஏற்படும் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, திரவ இழப்பால் குறைந்துவிட்ட ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் தன்மையுடையன.
ஆரஞ்சுப் பழத்தை தோல் நீக்கி, பிழிந்து, சாறெடுத்து, சமஅளவு நீர் சேர்த்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என மூன்று நாட்கள் தினமும் காலை முதல் இரவு வரை உட்கொண்டு வர சுண்ணாம்பு சத்து சேர்ந்த சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும். இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக கற்களை கரைக்க இந்த முறை வலியுறுத்தப்படுகிறது. ஆரஞ்சுப் பழச்சாறை உட்கொள்ளும் போது புரத உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல்!
நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் பிடிப்பவர்கள் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்து கொள்வது நல்லது என்றும், மேலும் தொடர்ந்து நாளொன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களின் தாம்பத்திய உறவு சிக்கலாகும் என்றும் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வரும் 16, 17 தேதிகளில் சென்னையில் மூன்றாவது பன்னாட்டு பாலியல் கருத்தரங்கை நடத்துகிறது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய இத்துறை மருத்துவர், தொடர்ந்து புகைப் பிடிப்பவர்களுக்கு தாம்பத்திய உறவு கொள்ளும் போது செயல்படாத் தன்மை உள்ளிட்ட பாலியல் குறைபாடுகள் அதிக அளவில் ஏற்படும் என்று தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் உருவாகும் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு தாம்பத்திய உறவின் போது ஏற்படும் விறைப்புத்தன்மையில் சிக்கல் எழும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்கு காரணம் புகைப் பிடிக்கும் போது நமது உடலுக்குள் செல்லும் நிக்கோட்டின் உறிஞ்சும் திசுக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன் அதனை சுருங்கச் செய்கின்றன. இது சம்மந்தப்பட்வரின் தாம்பத்திய வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்று சிங்கப்பூரைசேர்ந்த மருத்துவ வல்லுநர் அடைக்கண் கூறியுள்ளார்.
புகைப் பிடிப்பதைப் போன்று மது அருந்துவதும் பாலியல் சிக்கல்களை உருவாக்கவல்லது என்றும் கூறியுள்ளார். நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் 20 கோடி ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு, போதாமை, பாலியல் செயல்படாத தன்மை உள்ளிட்ட குறைபாடுகளால் அவதிப்பட்டு வருவதாக ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் டி. காமராஜ் தெரிவித்து உள்ளார்.
பல்வேறு உறவு சிக்கலுக்கும், முரண்பாடான நடவடிக்கை ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமே தாம்பத்திய உறவில் ஏற்படும் அதிருப்திதான் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இநத சிக்கல்கள் தகவல் தொழில் நுட்பம், அயல் அலுவலக சேவை குறைகளில் பணியாற்றுபவர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும் மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார்.
இதற்கு காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான மோகம், வாழ்க்கை முறையில் மாற்றம், பரபரப்பான, அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற வேலை சூழலும்தான் என்றும் காமராஜ் தெரிவித்து உள்ளார்.
உலகமயமாதல், கணினிமயமாதல் ஆகியவற்றின் விளைவும், பெருகி வரும் இணையத்தள கலாச்சாரமும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து உள்ளதோடு, மக்களை அதிக அழுத்தத்தையும், பளுவையும் கொண்ட வாழ்க்கைக்கு அழைத்து செல்வதோடு மக்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் பாதிக்கின்றது.
தற்போதைய வேலை கலாச்சாரம் பாலியல் தொடர்பான மனிதர்களின் எண்ணத்தை மாற்றுவதுடன் தரம் தாழ்ந்து செல்லவும், பாலியல் சீர்குலைவுக்கும் காரணியாக அமைந்து உள்ளது எனவும் மருத்துவர் காமராஜ் தெரிவித்து உள்ளார். துரித உணவுக் கலாச்சாரம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகம் பயன் படுத்துபவர்களுக்கு தொப்பை உள்ளிட்ட உடலின் பல இடங்களில் உருவாகும் ஊளைச் சதையாலும் ஒருவரின் தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
திருமணமான தம்பதிகளில் 15 விழுக்காட்டினரே கருவளர்ச்சி இன்மை சிக்கலுக்கு உள்ளாவதாகவும், இந்த பிரச்சனைக்கு 35 விழுக்காடு பெண்களும், 30 விழுக்காடு ஆண்களும் காரணிகளாக அமைகின்றனர். சில நேரங்களில் கரு வளர்ச்சியின்மைக்கு ஆணும், பெண்ணும் காரணமாக உள்ளனர்.
இந்த வகையானவர்கள் 20 விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், மீதமுள்ள 15 விழுக்காட்டினர் விவாகரத்து பெற்றதால் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சனைகளில் உள்ள உண்மை நிலைத் தொடர்பாகவும், சமுதாயத்தில் உள்ள தவறான எண்ணத்தையும், நம்பிக்கைகள் தொடர்பாக இத்துறை சார்ந்த வல்லுநர்கள் இரண்டு நாட்கள் விரிவான அளவில் விவாதிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வல்லுநர்கள் 500 முதல் 600 பேர் கலந்து கொள்கின்றனர் என்று மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார். மேலும் இந்த கருத்தரங்கில் இந்தியாவில் பாலியல் கல்வி என்பது தொடர்பான விவாதமும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
கோடை தாகம்!
வெயிலின் ராஜ்ஜியம் தொடங்கியாச்சு… உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்வையும், உடலுக்குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி… குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.
இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றை தவிர்ப்பதும் நல்லது.
எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பதுதான் நல்லது.
வெளியில் சென்றால் கையோடு ஒரு பாட்டிலில் சுத்தமான குடிநீரை எடுத்து செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.
மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது.
அறிவியல் அறிவோம் -அறிவியல் இணையதளம்
அறிவியல் வளர்ச்சிக்கு இன்று சிறந்த ஊன்று கோலாக இயங்குவது இணையதளம் என்றால் அது மிகையாகாது. தகவல் தேடலின் மூலமாகவும் அதன் அடிப்படையிலும், அறிவியலின் இன்றைய வளர்ச்சியையும் அது செல்லும் பாதையையும் இன்று எளிதாகக் கற்றுக் கொள்ள முடிகிறது. அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காகவே, ஆர்வம் என்பதன் ஆங்கிலச் சொல்லான Curiocity (Curiosity) என்ற பெயரில் ஓர் இணையதளம் இயங்குகிறது. ஆர்வத்திற்கு தூபம் போட்டு வளர்க்கும் ஒரு நகரமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த உலகின் இயக்க நிலைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் உள்ளதா? ஏதேனும் ஒன்று எப்படி இயங்குகிறது என்ற வினா மனதில் உள்ளதா/ இந்த தளம் செல்லுங்கள். அண்டு க்ண் என்ற பிரிவில் சென்று உங்கள் கேள்வியை டைப் செய்திடுங்கள். தொடர்ந்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, பள்ளியில் உங்கள் வகுப்புநிலை,வசிக்கும் நகரம் என தகவல்களையும் கொடுங்கள். உங்களுக்கான பதில் அனுப்பப்படும். கேள்வி கேட்பது மட்டுமின்றி, ஏற்கனவே கேட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் அதில் பிரவுஸ் செய்து பார்க்கலாம்.
இந்த தளத்தில் எனக்குப் பிடித்தது பரிசோதனைச் சாலை (The Lab) பிரிவுதான். ஏதேனும் பரிசோதனை ஒன்றை செய்து பார்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதற்கான வழிமுறைகள், தேவையான பொருட்கள் ஆகியவற்றைத் தந்து எப்படி பரிசோதனையை மேற்கொள்வது என்ற வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது.
நாம் அன்றாடம் சந்திக்கும் பொருட்கள் குறித்த அறிவியல் தகவல்களைத் தருகிறது Everyday Science என்ற பிரிவு. நான் இதனைப் பார்க்கும் போது முப்பரிமாணப் படம் குறித்த தகவல்கள் விரிவாகத் தரப்பட்டிருந்தன. இன்றைய திரைப்படங்கள் மட்டுமின்றி, டிவிக்களும் முப்பரிமாணக் காட்சிக்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இது அனைவரும் அறிய வேண்டிய விஷயமாகும்.
இந்த தளத்தில் நீங்கள் எங்கு பிரவுஸ் செய்தாலும், அறிவியல் குறித்து எதனையாவது கற்றுக் கொள்வீர்கள் என்பது உறுதி. இந்த தளம் கிடைக்கும் முகவரி http://www.curiocity.ca/
`ரிமோட் கண்ட்ரோல்’ எப்படி செயல்படுகிறது?
நீங்கள் தினசரி சாதாரணமாகத் தொலைக்காட்சி `ரிமோட் கண்ட்ரோலை’ பயன் படுத்துகிறீர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று தெரியுமா?
`ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு’, ஒரு தொடர்பு அமைப்பு ஆகும். அதில் முன்று விஷயங்கள் முக்கியமாக அடங்கி இருக்கின்றன.
1. `டிரான்ஸ்மிட்டர்’
2. `சிக்னல்’
3. `ரிசீவர்’
தொலைக்காட்சிக்கான `ரிமோட் கண்ட்ரோல் அமைப்பை’ பொறுத்தவரை, நீங்கள் `டிரான்ஸ் மிட்டர்’ என்று சிறுஉபகரணத்தைக் கொண்டு டிவியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்கிறீர்கள். `டிரான்ஸ்மிட்டரின்’ ஒவ்வொரு பட்டனையும் நீங் கள் அழுத்தும்போது அதிலி ருந்து ஒரு `சிக்னல்’, டிவியை நோக்கிச் செலுத்தபடுகிறது. அந்த `சிக்னல்’, டிவி பெட்டியில் பெறபடுகிறது. பின்னர், உங்களின் உத்தரவுக்கு ஏற்ப மாற்றம் ஏற்படுத்தபடுகிறது.
`சிக்னல்’ என்றால் என்னவென்று அறிவோம். பல்வேறு வகையான `ரிமோட் கட்ரோல் அமைப்புகளுக்கு’ ஏற்ப `சிக்னல்’ வேறுபடுகிறது. டிவியை பொறுத்தவரை அகச்சிவப்புக் கதிரானது சிக்னலாக பயன்படுத்தபடுகிறது. `ரிமோட் கண்ட்ரோல்’ பொம்மைகள் போன்றவற்றில் சிக்னலானது `சோனிக்’ அல்லது `அல்ட்ராசோனிக்’ அலைகளாக இருக்கும்.
ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு செயல்படும் தூரம் அதிகமாக இருக்க வேண்டிவரும்போது, சக்திவாய்ந்த `ரேடியோ’ அலைகள் பயன்படுத்தபடுகின்றன. ஆளில்லா தொலைக் கட்டு பாட்டு விமானங்கள், விண்கலங்கள் ஆகியவற்றில் அந்த முறை பயன்படுத்தபடுகிறது.
டிவி `ரிமோட் கண்ட்ரோல்’ அமைப்பில் ஒவ்வொரு பொத்தானுக்கும் வெவ்வேறு பணி இருக்கிறது. ஒரு பொத்தான், பிரகாசத்தைக் கூட்டும் என்றால், மற்றொரு பொத்தான், பிரகாசத்தைக் குறைக்கும். ஒரு பொத்தான், ஒலியைக் கூட்டினால், மற்றொரு பொத்தான் அதைக் குறைக்கும்.
இவற்றை போல, வண்ணம், சேனல்களுக்கு என்று பல்வேறு பொத்தான்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஒவ்வொரு பொத்தானும் அழுத்தபடும்போது அது குறிபிட்ட அலைநீளத்தில் ஒரு அலையையோ, `சிக்னலை’யோ அனுப்புகிறது.
ஒவ்வொரு `சிக்னலும்’ டிவியில் உள்ள `ரிசீவரால்’ வெவ்வெறு விதமாக பெறபடுகின்றன. ரீசிவரானது குறிப்பிட்ட கட்டளையை அதைக் கட்டுபடுத்தும் குறிப்பிட்ட பகுதிக்கு பிரித்து அனுப்புகிறது.
ஆக, கண்ணுக்குத் தெரியாத சிக்னல்கள் முலம் உங்களால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே டிவியை இயக்க முடிகிறது.
வீட்டு வைத்தியம்
அஜீரணசக்திக்கு
அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
அம்மைநோய் தடுக்க!
அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.
அறுகம் புல்
இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.
அம்மைநோய் வேகத்தை தணிக்க!
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.
அகத்திக்கீரை
உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.
ஆறு சுவையின் செயல்!
காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கசப்பு – உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.
இனிப்பு – உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
புளிப்பு – இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
துவர்ப்பு – இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
உப்பு – ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்
அன்னாசிப்பழம்
இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.
அரைக்கருப்பன் சரியாக!
இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.
பப்பாசிப்பழச்சாறும் பசுப்பாலும் கலந்து பூசிலாம் தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்து பூசினால்குணமாகிவிடும்,
ஆசனவாசலில் குடைச்சலுக்கு-இப்படியான அரிப்பு வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவரகளுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்ரில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும் அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும்.. கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால. அரிப்பு குணமாகும்.
ஆரோக்கியத்திற்கு!
தேகஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி,யோகாசனம் செய்தால் ஆரொக்கியம் கிடைக்கும்.
ஆண்கள் மலடு தீர!
ஆண்களுக்கு அவரது இந்திரியத்தில்-ஈஜீஎப்| (EGF) என்னும் இரசாயனச்சத்து குறைவதால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு இந்த ரசாயனச்சத்தை மருத்துவர் மேற்பார்வையில் பாவித்தால் மலடுதீரும். எமது சித்தரகள் அறிவுறுத்தலுக்கு அமைய யோகாசனம் செய்தாலும் குறிப்பாக ஹலாசனம், சர்வாங்காசனம், சற்பாசனம் சாந்தி ஆசனம் ஆகியவற்றை தினம் செய்தால் சிலநாட்களில் நற்பயன் கிடைக்கும்.
ஆண்மை வலுப்பெற!
அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.
இசைமருத்துவம்!
இன்றையநவீனவிஞ்ஞானமுறைப்படி மேல்நாடுகளிலும்,சீனா,ஜப்பான்போன்ற நாடுகளிலும் இசையைப்பயன்படுத்துகின்றனர். சிலநோய்களுக்கு தகுந்த இசையை தேர்ந்தெடுத்து அதை இசைத்தட்டில் பாடவைத்து நோயாளிமட்டும் கேட்ககூடிய செவிக்கருவியில்பொருத்தி தினம் சில நேரங்கள் அந்த இசையைச்செவிமடுக்க வைப்பாரகள். இந்த இசை மருத்துவம அமோகவெற்றியளிப்பதாக நம்பப்படுகிறது. எமது மூதாதையர் பலநோய்களையும் குணமாக்க திருவாசகம் போன்றசுவையான பாடல்களை பயன்படுத்துனர் என்பது எம்மவர் அறிந்ததே. இப்போதுதான் நமது நவீனவிஞ்ஞானிகள
இந்த உண்மையை கண்டறிந்திருக்கின்றனர. இனியாவது எம்மவர் இதைநம்பி இசையை நோய்கள் தீரப்பயன்படுத்தட்டும்.
இரத்தம் பெருக!
இரத்தம் உடம்பில் விருத்தியாக அதிகம் கீரை உணவுகள் பழவகைகள் தினம் போதிய நீர் அருந்துதல் அவசியம்.. இறைச்சி,ஈரல்,மீன்முதலியவை அதைஉண்பவருக்கு உடன்இரத்தம் விருத்தியாக உதவும். தக்காளனிப்பழமும் -பீறுறூற்|இரத்த உற்பத்திக்கு உதவக்கூடியவை. தினம் உடற்பயிற்சியும் இடைவிடாது நடப்பதும் இரத்தவிருத்திக்கு உதவும். பாதாம் பருப்பு பாலுடன் உண்பதால் இரத்தவிருத்தி உண்டாகும். அத்திப்பழத்துடன் பாலும்சேரத்து அருந்துவதும் இரத்த விருத்திக்கு உதவும்.
இளநீர் மருத்துவம்!
இளநீரில் தாதுப்பொருள்களாகிய இரும்பு, பொற்ராசியம், சுண்ணாம்புச்சத்து, சோடியம் ஆகியவை அதிகம் இருப்பதால் சிறுநீரக நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் பெரிதும் உதவும். குடலில் புளு பெருகுவதையும் குறைக்க வல்லது.
திருப்பம் தரும் தாருகாவனேஸ்வரர்!
கங்கைக்கு இணையாக புனிதமாக கருதப்படுவது தென்னிந்தியாவில் பாயும் காவிரி. இந்த காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ளதுதான் திருப்பராய்த்துறை என்ற ஊர்.
திருச்சியில் இருந்து கருர் செல்லும் சாலையில் 16-வது கிலோ மீட்டர் துரத்தில் உள்ளது இந்த ஊர். இங்குள்ள தாருகாவனேஸ்வரர் என்ற சிவன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இது, காவிரியாற்றின் தென் கரையில் உள்ள 127 சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும்.
முதலாம் ராஜராஜன், மாறவர்மன், சுந்தரபாண்டியன், விஜயநகரம் வீரகம்பண்ண உடையார், கிருஷ்ணதேவராயர், விசுவநாத நாயக்கர், திருமலை நாயக்கர் ஆகியோரது காலத்து கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் கல்வெட்டுக்களில் இருந்து இக்கோவில் கி.பி. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தெரிய வருகிறது.
பெயர் காரணம்
தற்போது கோவில் அமைந்துள்ள இடம் முந்தைய காலத்தில பராய் மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததாலும், காவிரியாற்று துறையில் இருப்பதாலும் `பராய்த்துறை’ என்று பெயர் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
பராய் மரங்கள் நிறைந்த இப்பகுதியில் தவம் செய்த முனிவர்கள் கடவுளைப் பற்றிய சிந்தனையில்லாமல் கடமை செய்வதே போதும் என்று எண்ணி வாழ்ந்தனர். இதனால் அவர்களுக்கு அகந்தை ஏற்பட்டது.
இந்த முனிவர்களின் ஆணவத்தை தடுத்து நிறுத்த முயன்ற சிவபெருமான் பிச்சை ஏற்கும் பிச்சாடணார் கோலத்தில் உருவெடுத்து முனிவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றார். பிச்சாடணார் உருவத்தில் வந்திருப்பது இறைவன் என்று அறியாமல் முனிவர்கள் இருந்தனர்.
முனிவர்களின் மனைவிகள் இறைவனுடைய பிச்சாடணார் கோலத்தில் மயங்கினர். தங்களை மறந்து பிச்சாடணார் பின்னால் செல்ல தொடங்கினர்.
பழிக்காத யாகம்
இதனை கண்ட முனிவர்கள் பிச்சாடண முர்த்தியை அழிக்க அபிசார வேள்வி என்ற யாகத்தை செய்தனர். யாகத்தில் தோன்றிய புலியை இறைவன் மேல் ஏவினர். இறைவன் புலியை கொன்று புலித்தோலை ஆடையாக கட்டிக்கொண்டார்.
அதன் பிறகு முனிவர்கள் மானை ஏவினார்கள். இறைவன் அதை அடக்கி இடக்கரத்தில் ஏந்திக்கொண்டார்.
அதன் பிறகும் ஆத்திரம் கொண்ட முனிவர்கள் பாம்புகளை ஏவினர். சிவபெருமான் அவற்றை தனக்குரிய அணிகலன்களாக மாற்றி இடுப்பிலும், கழுத்திலும் அமைத்துக்கொண்டார்.
அதன் பிறகு முனிவர்கள் பூத கனங்களை ஏவினர். அவற்றை சிவபெருமான் தன்னுடைய படையில் சேர்த்துக் கொண்டார்.
இறுதியாக மிகப் பெரிய யானைகளை ஏவி விட… இறைவன் இந்த யானைகளின் தோலை உரித்து அதை தன்மீது போர்த்திக்கொண்டார்.
இதன் பிறகுதான் முனிவர்களின் ஆணவம் அடங்கியது. அவர்கள் பக்தி கண்களால் இறைவனைத் தேடினர். இறைவன் முனிவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சியளித்து அவர்களின் செருக்கை அடக்கினார்.
இந்த சம்பவம் இந்த திருத்தலத்தில் நடைபெற்றது.
இங்கு எழுந்தருளியுள்ள இறைவி பசும்பொன் மயிலாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். வட மொழியில் ஹேமவர்ணாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.
இந்த தலத்திற்குரிய தீர்த்தம் காவிரி. தினமும் காலையில் காவிரியாற்றில் இருந்து கொண்டு வரப்படும் தீர்த்தத்துடன் திருமஞ்சன பூஜை நடைபெறுகிறது. காமிகா ஆகம முறைப்படி நாள்தோறும் நான்கு காலை பூஜைகள் நடைபெறுகின்றன.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 18ம் தேதி காலையில் கதிரவனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மேல்பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது. ஐப்பசி முதல் நாள் துலா ஸ்நான திருவிழா மிக சிறப்பாக நடைபெறுகிறது. துலா ஸ்நானத்தன்று காவிரியில் குளித்தால் கங்கையில் குளித்ததற்கு சமம் என்கிறார்கள்.
திருமணத்தடை நீக்கும் பரிகாரம் தாருகாவனேஸ்வரர் கோவிலின் தலவிருட்சமாக பராய் மரமே விளங்குகிறது. இந்த பராய் மரத்தை செவ்வாய்க்கிழமை காலை காவிரியாற்றில் குளித்து விட்டு வழிபட்டு வந்தால் மனிதனுக்கு ஏற்பட்ட எந்த நோயானாலும் சரியாகிவிடும் என்கிறார்கள்.
மேலும், இந்த கோவிலில் உள்ள சப்த கன்னிமார் உடன் சேர்ந்துள்ள வராகி அம்மனுக்கு ஒரு கால மண்டல பூஜை செய்து வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு மண்டல பூஜை முடிவதற்குள் நிச்சயமாக திருமணம் நடைபெறும் என்றும் கூறுகிறார்கள்.
பராய் மரத்தின் இலைகளையும், மரத்தின் பட்டைகளையும் சாப்பிட்டு வந்தால் தோல் நோய், மற்றும் தீராத நோய்கள் தீரும் என்பதும் இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.