Daily Archives: ஏப்ரல் 10th, 2010

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது?

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம்.

கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தகப் போர்வையில் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து அடிமைப்படுத்துவதற்கு முன்பு வரை, ஓரினச் சேர்க்கையை ஆட்சேபனைக்குரிய உறவாகவோ, பாவகரமான குற்றமாகவோ இந்தியாவில் யாரும் பார்க்கவில்லை.

பழங்கால நூல்களில் ஓரினச் சேர்க்கை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. இதனை மனுதர்ம சாஸ்திரத்தில் கூட தண்டிக்கப்பட வேண்டிய இழிவான செயலாக சொல்லவில்லை.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் குளித்து விட்டால் போதும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

என்றாலும், வாத்ஸாயனர் காலத்தில் கூறப்பட்டுள்ள திருமணங்களில் காந்தர்வ திருமணம் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. காந்தர்வ திருமணம் என்றால் காதல் திருமணம் என்று பொருள்.

அதன்படி ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதுபோல், ஆணும், ஆணுமோ அல்லது பெண்ணும், பெண்ணுமோ திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் ஓரினச் சேர்க்கை மிகப்பெரிய பிரச்சினையாக்கப்பட்டது.

சரி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு எப்படி அந்தத் தூண்டுதல் ஏற்படுகிறது? என்றால், பல மருத்துவ கருத்துகள் நிலவுகின்றன.

மரபணுக் கோளாறினால் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அதனை மருத்துவ உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.

கர்ப்பத்தின் போது தாயின் ஹார்மோன் கோளாறினால் குழந்தைக்கு ஓரினச் சேர்க்கை விருப்பம் வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் குழந்தையின் ஹார்மோனை பரிசோதித்த போது, அதற்கான எந்த நிரூபணமும் இல்லை என்று மறுத்து விட்டது.

குழந்தைப் பருவத்தின் போது நெருக்கடியான சூழலில் வளர்வதால், மனப் பாதிப்பின் காரணமாக ஓரினச் சேர்க்கையில் நாட்டம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனையும் ஆய்வு செய்த மருத்துவ உலகினர் மறுத்துள்ளனர்.

வேறு தகவலின்படி, குழுவாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஓரினச் சேர்க்கை ஈடுபாடு இருந்தால், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் அந்த ஈடுபாடு உருவாகும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இவையெல்லாமே யூகத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமே கூறப்படுபவை என்று மருத்துவத் துறையினர் நிரூபித்து விட்டனர்.

எனவே பிறவியிலேயே ஓரினச் சேர்க்கையாளர்கள் அதில் விருப்பம் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

பல நேரங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஏன் அதுமாதிரி நடந்து கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாத புதிராக உள்ளது.

ஏவிஜி. ரெஸ்க்யூ சிடி

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள். இது போன்ற எமர்ஜென்சி நேரத்தில் பயன்பட பூட் சிடி தயாரித்து வைக்கும்படி கம்ப்யூட்டர் மலரில் கூட எழுதி இருந்தார்களே என்று அங்கலாய்க்கிறார்கள். நண்பர்களுக்கு போன் போட்டு கேட்கிறார்கள். ஒன்றும் முடியாத நிலையில் ஏதோதோ செய்து இறுதியில் ரீ பார்மட் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டலேஷன் அளவிற்குப் போகிறார்கள். எனக்கு தொலைபேசியில் இது போல பல அவசர நிலை அழைப்புகள் வருவதுண்டு.
பலமுறை பூட்டபிள் சிடி தயார் செய்வது எப்படி என்று எழுதியிருக்கிறோம். நம் கம்ப்யூட்டர் நன்றாகத்தானே செயல்படுகிறது என்று அதனைப் பலரும் அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். கம்ப்யூட்டர் ஒரு டிஜிட்டல் இயந்திரம். எந்த நேரமும் அது முடங்கிப் போகும் என்பதே உண்மை. சரி, ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்ற கதையாக இதோ இன்னும் ஒரு காப்பாற்றும் சிடி தயார் செய்திடும் தகவலை இங்கு தருகிறோம்.
இதன் பெயர் ஏவிஜி ரெஸ்க்யூ சிடி. ஆம், நமக்கெல்லாம் இலவசமாக ஆண்ட்டி வைரஸ் தரும் ஏவிஜி நிறுவனமே இதனையும் தருகிறது. இதுவும் இலவசமே.
இந்த ரெஸ்க்யூ சிடி வைரஸ் பாதிப்பினால் முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு ஒரு சிறந்த டாக்டராக இயங்குகிறது. அது மட்டுமின்றி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் மற்றும் ஐ.டி. நிர்வாகிகளுக்கும் உதவுகிறது. இதன் மூலம் சிஸ்டம் நிர்வாகம் செய்திடலாம், வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களால் பாதித்த கம்ப்யூட்டர்களை மீட்கலாம். எம்.எஸ். விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் சிஸ்டங்களையும் மீட்கலாம். யு.எஸ்.பி. ஸ்டிக் அல்லது சிடி வழியாக கிளீன் பூட் ஒன்றை மேற்கொள்ளலாம்.
இந்த ரெஸ்க்யூ சிடி என்பது லினக்ஸ் மூலம் வழங்கப்படும் இலவச போர்ட்டபிள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகும். உங்களுடைய சிஸ்டம் பொதுவான வழிகளில் பூட் ஆகாத போது, இந்த சிடியைக் கொண்டு பூட் செய்திடலாம். அத்துடன் வைரஸ் பாதித்த கம்ப்யூட்டரைக் குணப்படுத்தி, வைரஸ்களை நீக்கும். இந்த வசதிகளைத் தருவதோடு கீழ்க்காணும் கூடுதல் செயல்பாடுகளையும் இது தருகிறது.
இரண்டு பேனல்களில் பைல் மேனேஜர் வசதி,
எளிய விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் ஹார்ட் டிரைவ் ரெகவரி டெஸ்ட் டிஸ்க் ஆகச் செயல்பாடு நெட்வொர்க் (சர்வர், டொமைன், ஐபி முகவரி போன்றவை)வசதிகளைக் கண்டறியும் வசதி,
இதனைப் பயன்படுத்த 512 எம்பி ராம் மெமரி, இன்டல் பெண்டியம் 300 எம்.எச்.இஸட் ப்ராசசர் இருந்தால் போதுமானது. விண்டோஸ் 2000க்குப் பின் வந்த அனைத்து விண்டோஸ் இயக்கங்கலிலும் செயல்படும்.
சிடியாகத் தயார் செய்திட வேண்டிய புரோகிராமினை டவுண்லோட் செய்திட http://www.avg.com/usen/downloadfilecdarliso என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பதிந்து செயல்படுத்த http://www.avg.com/usen/downloadfilecdarlrar என்ற முகவரிக்குச் செல்லவும். தகவல்களுக்கும் மேற்கண்ட தளங்களுக்கும் செல்ல http://www.avg.com/usen/avgrescuecd என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

முதலுதவி-மயக்கமடைந்து விட்டால்

பின்பக்கமாக நின்றுகொண்டு வயிற்றை அழுத்தும் முறை அவரை முன்பக்கமாகச் சாயுங்கள். கையை மடக்கி அவரது மார்புக் கூட்டுக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைக்கவும்.கைகளை மடக்கி மார்புக் கூட்டுக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைக்கும் முறை மற்றொரு கையால் உங்கள் கையைப் பற்றி உள்புறமாகவும் வெளிப்புறமாகவும் அழுத்தம் கொடுக்கவும். ஐந்து முறை இப்படிச் செய்யவும்.

அப்படியும் சுவாசத் தடை நீங்கவில்லை என்றால், பின்புறமாக ஐந்து முறை தட்டுவதையும் ஐந்து முறை அடி வயிற்றை அழுத்துவதையும் தொடரவும்.

மயக்கமடைந்து விட்டால்
அவரை கவனமாகக் கீழே படுக்க வைக்கவும்.
உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்கவும்.
சிறிசிஸி-ஐ உடனடியாகத் தொடங்குங்கள். தேர்ந்த பயிற்சி பெற்றவர்கள் மூலம் இதைச் செய்வது நல்லது.

வெளிப்புறப் பொருள்களால் ஏற்படும் சிறிய அளவிலான சுவாசத் தடை
சிக்கியிருக்கும் வெளிப்புற பொருள்களை வெளியில் கொண்டு வர இருமல் உதவி செய்யும். அடி வயிற்றை அழுத்துதல், மார்பை அழுத்துதல்,

பின்பக்கம் தட்டிக் கொடுத்தல் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகச் செய்வதும் ஆபத்துதான். மிதமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து
கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். கவனிக்கத் தவறினால், நிலைமை சிக்கலாகி விடும்.

வெளிப்புறப் பொருள்களில் ஏற்படும் பெரிய அளவிலான சுவாசத் தடை

சுவாசத் தடை பற்றி இதுவரை கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் முழுமையானவை அல்ல. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் பின்பக்கம் தட்டுவதும், அடிவயிற்றை அழுத்துவதும், மார்பை அழுத்துவதும் நல்ல பயனை அளிக்கும். இதில் ஏதேனும் ஒரு வழிமுறையை மட்டும் பயன்படுத்தி பயனடைந்தவர்கள் ஐம்பது சதவீதத்தினருக்கும் குறைவானவர்கள்தாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகளை இணைத்துச் செய்யும்போது பலன் கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.

சிறிசிஸி முறையை உபயோகிக்கும்போது பாதிக்கப்பட்டவரின் வாயில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இருமல் காரணமாக இதயத் துடிப்பு நிற்கும் சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைச்சல். அதனால், சிறிசிஸி செய்யும் போது, ஒவ்வொரு முறையும் வாயைப் பரிசோதிக்க வேண்டும் என்று அவசியமில்லை.விரல்கள் காற்றுக் குழாயில் சிக்கிக் கொண்ட பொருளை அகற்ற விரல் மூலமாக துழாவுவதால் ஏதேனும் பயன் உள்ளதா என்று இதுவரை யாரும்ஆராயவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவரும் மீட்க முயன்றவரும் பாதிக்கப்பட்டதாக நான்கு சம்பவங்கள் உள்ளன. அதனால், விரல்கள் மூலம்துழாவும் வழக்கம் வேண்டாம்.

மருத்துவ சிகிச்சை

நீடித்த இருமல், விழுங்குவதற்குச் சிரமம், தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வு போன்றவை ஒருவருக்கு இருக்குமானால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அடி வயிற்றை அழுத்தும் முறை பற்றி பார்த்தோம் அல்லவா? இப்படிச செய்வதன் மூலம் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படவாய்ப்பு உண்டு. எனவே, தகுந்த மருந்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். குழந்தைகளையும் நீரில் மூழ்கியவர்களையும் காப்பாற்றும் முறைஇருதயத் துடிப்பு நிறுத்தம் ஏற்பட்டால் உடனடியாக காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும். காரணம், அது போன்ற சந்தர்பங்களில் சுவாசம்தடைபடும் மூச்சுத்தடை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று இதற்கு முன்னால் பார்த்தோம். பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில், கீழ்க்கண்ட சில மாற்றங்களைச் செய்வது நல்லது.

மார்பு அழுத்தப் பயிற்சி செய்வதற்கு முன்னால் ஐந்து முறை சுவாச மீட்புச் செய்யவும்.நீங்கள் தனியாக இருக்கும் பட்சத்தில், மாற்று உதவி கிடைப்பதற்கு முன்னால் 1 நிமிடம் சிறிசிஸி செய்யலாம். மார்பில் அழுத்தம் கொடுக்கவும், மூன்றில் ஒரு பங்கு அளவுக்க அழுத்தம் கொடுக்கலாம். ஒரு வயதுக்கு குறைந்த குழந்தையாக இருந்தால்இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. ஒரு வயதைத் தாண்டிய குழந்தையாக இருந்தால் ஒன்று அல்லது இரு கைகளையும் பயன்படுத்தலாம்.நீரில் மூழ்கியவர்களுக்குச் சுவாச மீட்பு ஐந்து முறையும் சிறிசிஸி ஒரு முறையும் செய்யலாம். ஆனால் இதை எல்லேராலும் செய்ய முடியாது.அதற்கென்றே பிரத்தியேகப் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள்.

பிரார்த்தனை எல்லோருக்கு உதவட்டும்

பலர் கோவிலுக்குச் சென்றால், தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் மட்டுமே வேண்டிக்கொள்வார்கள். மிகச்சிலர்தான் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தாராள மனதுடன் வேண்டிக் கொள்வார்கள்.

வள்ளலார் ராமலிங்க அடிகளாரும் இதேக் கருத்தையே வலியுறுத்துகிறார். எல்லோரும் பிரார்த்தனை செய்யும் பொருட்டு ஒரு பாடலையும் அவர் எழுதி இருக்கிறார். அந்த பாடல் :

“பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்

ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்!

நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை

ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே…”

– “நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது உங்களுக்காக மட்டுமின்றி, எல்லோருக்காகவும் வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த உலகம் எல்லாம் வாழும்படி வேண்டுங்கள். இப்படி பிரார்த்தனை செய்வதால், தனியொரு மனிதனுக்கு வேண்டியவையும் அதில் அடங்கிவிடுகின்றன” என்கிறார் வள்ளலார்.