பிரார்த்தனை எல்லோருக்கு உதவட்டும்

பலர் கோவிலுக்குச் சென்றால், தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் மட்டுமே வேண்டிக்கொள்வார்கள். மிகச்சிலர்தான் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தாராள மனதுடன் வேண்டிக் கொள்வார்கள்.

வள்ளலார் ராமலிங்க அடிகளாரும் இதேக் கருத்தையே வலியுறுத்துகிறார். எல்லோரும் பிரார்த்தனை செய்யும் பொருட்டு ஒரு பாடலையும் அவர் எழுதி இருக்கிறார். அந்த பாடல் :

“பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்

ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்!

நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை

ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே…”

– “நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது உங்களுக்காக மட்டுமின்றி, எல்லோருக்காகவும் வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த உலகம் எல்லாம் வாழும்படி வேண்டுங்கள். இப்படி பிரார்த்தனை செய்வதால், தனியொரு மனிதனுக்கு வேண்டியவையும் அதில் அடங்கிவிடுகின்றன” என்கிறார் வள்ளலார்.

%d bloggers like this: