Daily Archives: ஏப்ரல் 12th, 2010

தாய்லாந்தில் புத்தாண்டுத் திருவிழா!

தாய்லாந்து மக்களுக்கும், சித்திரை மாதமே புத்தாண்டு துவங்குகிறது.
ஏப்ரல் மாதத்தில் பிறக்கும் புத்தாண்டை, சொங்கரான் என்று அழைக்கின்றனர். ஏப்ரல் 13 முதல் 15 வரை, நாடு முழுவதும் பலவித கொண்டாட்டங்கள் நடைபெறும்.
ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, கோலாகலமாக, புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அந்நியர்கள் என்ற பேதம் இல்லாமல், தண்ணீர் வீச்சுடன் விளையாடுவது கண்கொள்ளாக் காட்சி. சிறுவர்கள், தண்ணீர் துப்பாக்கிகள், குழாய்களுடன் தெருத் தெருவாக வலம் வந்து, கைவரிசையைக் காட்டுகின்றனர்; பெரியவர்கள், தண்ணீர் வாளிகளுடன் உலா வந்து, காண்பவர்களை ஈரப்படுத்தி, வாழ்த்துகின்றனர்.
குறிப்பாக, தலைநகர் பாங்காக்கின் காவ்சான் சாலையில், ஒலிம்பிக் போட்டியோ என்று வியக்கும் அளவுக்கு, நீர் விளையாட்டு நடைபெறுகிறது. அங்கு வசிப்பவர்கள், வீட்டின் மேல் பகுதியில் நின்றபடி, தெருவில் வருவோர், போவோர் மீது தண்ணீரைப் கொட்டி, வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
சொங்கரான் புத்தாண்டின் தொடக்கமாக, புத்த ஆலயங்களை தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்துகின்றனர். பொதுமக்கள் மீது, தண்ணீர் கொட்டுவதற்கு காரணம் பாவங்கள், தீமைகளிலிருந்து அவர்களைக் காப்பதற்காகவே என்று கூறப்படுகிறது.
சொங்கரான் புத்தாண்டு தினத்தில், தண்ணீரைப் பாய்ச்சி, மக்களையும், நிலத்தையும் குளிர்வித்தால், ஆண்டு முழுவதும் வெப்பம் குறைந்திருக்கும்; அடிக்கடி மழை பெய்யும் என்பது, தாய்லாந்து மக்களின் நம்பிக்கை.
சொங்கரான் புத்தாண்டை முன்னிட்டு, நாடு முழுவதிலும் விருந்து உபசாரம் நடைபெறும். தெருக்களில் விருந்து; வீடுகளிலும், உறவினர்கள் ஒன்று திரண்டு, உண்டு மகிழ்கின்றனர்.
வீடு தேடி வரும் உறவினர்களின் பாதங்களைக் கழுவி வரவேற்கும் வழக்கம் இங்கு உள்ளது. இதை, ‘ராட் நாம் டாம் ஹுவா’ சடங்கு என்று குறிப்பிடுகின்றனர்.
காதலர்களுக்கு சொங்கரானில் கரை கடந்த மகிழ்ச்சி; திருமண நிச்சயதார்த்தங்கள் செய்யப்படுகின்றன. காதலர்கள் சுவையான உணவுகளை ஊட்டியபடி, உண்டு மகிழும் காட்சிகளைக் கண்டு மகிழலாம்.
புத்தாண்டு வழிபாட்டுக்காக தாய்லாந்து மக்கள், ‘வாட்’ எனப்படும் புத்த ஆலயங்களுக்குச் செல்கின்றனர். எண்ணெய் அல்லது தண்ணீரால் புத்தர் சிலையை அவர்கள் துடைத்து தூய்மைப்படுத்துகின்றனர்.
பட்டாயா, கிராபி போன்ற கடற்கரை நகரங்களிலும் விளையாட்டு, படகுப் போட்டி நிகழ்ச்சிகளுடன் சொங்கரான் கொண்டாடப்படுகிறது.
புக்கெட்டில் உள்ள பாத்தோங் கடற்கரையில், புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13 முதல் 15ம் தேதி வரை மணல் கோட்டை கட்டும் போட்டியும், சொங்கரான் அழகிப் போட்டியும் நடைபெறும். அதற்கு முன் 9 முதல் 12 தேதி வரை மோட்டார் சைக்கிள் போட்டி நடத்தப்படும்.
சிங்கப்பூர், மலேசிய சுற்றுலாப் பயணிகள் இந்தப் போட்டியையும், உணவு, கலைக் கண்காட்சிகளையும் காணத் திரள்கின்றனர்.
‘சுக்சான் வான் சொங்கரான்!’ என்ற முழக்கம் நாடு முழுவதும் எழும்… இதற்கு, புத்தாண்டு நல்வாழ்த்து என்று அர்த்தம்.

தீக்காயம்-முதலுதவி

தீவிர காயம்
சிகிச்சை முறை
10 நிமிடங்களுக்கு ஓடும் நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.
ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும். பாதிக்கப்பட்டவரைக் கீழே படுக்க வைக்கவும். அவரை சௌகரியமான நிலைக்குக் கொண்டு செல்லவும். பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும். கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றி விடுங்கள். நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.

சிறிய காயங்கள்.
சிகிச்சை பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும். தபால் தலை அளவை விட பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அத்தியாவசியம். துணிகளில் தீப்பற்றிக் கொண்டால் – பதற்றப்பட்டு ஓட வேண்டாம். அப்படிச் செய்தால் தீ வேகமாகப் பரவும். தீக்காயம் ஏற்பட்டவரை உடனடியாகத் தரையில் படுக்க வைக்கவும். சம்பந்தப்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலான் வகைகளை கண்டிப்பாகப் பயன்படத்தக் கூடாது. பற்றிக்கொண்ட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட்டலாம். அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் பொதுவான விதிமுறைகள் ஆயில்மெண்ட், க்ரீம், களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது. பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது.கொப்புளங்களை உடைக்கக் கூடாது.
பெரியவர்களுக்கு ஏற்படும் திடீர் நோய்ப்பிடிப்பு
வலிப்பு நோய்காக்கை வலிப்பு என்று பரவலாக அழைக்கப்படும் வலிப்பு நோய் ஏற்படும்போது உடலிலுள்ள பல தசைகள் சுருங்குகின்றன. மூளையில் ஏற்படும் மின் அதிர்வுகளின் விளைவு இது. வலிப்பு ஏற்படும்போது, நினைவு தப்பிப் போகும். பாதிக்கப்பட்ட நபர் மூர்ச்சையடைந்து விடுவார்.

வலிப்பு நோய் எதனால் ஏற்படுகிறது?
தலை காயத்தினால் மூளை பாதிக்கும் நோய்களால்
மூளையில் பிராண வாயு, குளுகோஸ் அளவு குறையும்போது
விஷம் சாப்பிடுவதால், மது அருந்துவதால்
வலிப்பு நோய் திடீர் என்று தாக்கும். தாக்குவதற்கு முன்னால் சில அறிகுறைகளைக் கண்டுகொள்ளலாம். புதிய சுவை, புதிய வாசத்தை உணர முடியும். வலிப்பு எந்த வகையில் வந்தாலும் சரி, எப்போது வந்தாலும் சரி, உடனடியாக சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். முதலில், அவர்களுக்குக் காற்றோட்டம் தேவை. அதை ஏற்படுத்தித் தர வேண்டும். பிறகு, அவரது நாடித் துடிப்பையும் சுவாசத்தையும் சரிபார்க்க வேண்டும்.சுற்றியிருக்கும் பொருள்களால் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

கண்டுபிடிப்பது எப்படி?
பொதுவான காரணிகள் திடீரென மயக்கமடைதல் ஆர்ச் வடிவில் பின்புறம் வளைதல் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறல்
வலிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழும்
சத்தம் போட்டுக் கொண்டே திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுதல். அசைவில்லாமல் இருந்தல்சுவாசம் தடைபடுதல்
திணறல், தாடைகள் இறுகுதல், இரைச்சலுடன் கூடிய சுவாசம், உதட்டையோ நாக்கையோ கடித்தல், கட்டுப்பாட்டை இழந்து விடுவது.  சில நிமிடங்களில் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புதல், என்ன நடந்தது என்பதையே உணராமல் இருத்தல்.
சோர்வடைந்து, உடனே தூங்குதல். முதலுதவி செய்பவரின் பணி
காயமடையாமல் பாதுகாக்க வேண்டும். நினைவு தப்பிப் போனால், அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுதல்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல்
சிகிச்சை சம்பந்தப்பட்டவர் கீழே விழ நேர்ந்தால், அவரைத் தாங்கிப் பிடித்தல். காற்றோட்டம் ஏற்படுத்தலாம். கும்பல் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல். கூரான பொருள்கள், சூடான பானங்கள் போன்றவை அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல். எப்போது வலிப்பு ஆரம்பித்தது என்று குறித்து வைத்துக் கொள்ளுதல்.அவரது தலையைப் பாதுகாக்க வேண்டும். முடிந்தால் தலையணையில் அவரது தலையைச் சாய்த்து வைக்கலாம். கழுத்துப் பகுதியில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தலாம்.

சென்ட் பீரங்கி!

போர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்தும் பீரங்கிகள் தற்போது மணம் வீசும் சென்டுகளை மக்கள் மீது பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படுகிறது. ஏன் இந்த மாற்றம் என்கிறீர்களா?…

மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப குப்பைகளும் பெருகிவிடுகிறது. நகர்ப்புறங்களில் குப்பைக் கழிவுகள் ஏராளம். நாட்கணக்கில் தேங்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கின்றது. இதனால் மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.

சீனாவில் பெய்ஜிங் நகரில் இது போன்ற சூழல் ஏற்படவே அங்குள்ள அரசாங்கம், சென்ட் பீரங்கிகளை களம் இறக்கி இருக்கிறது. பொதுமக்களின் புகாரை தொடர்ந்து குப்பை பராமரிப்பு பகுதிகளில் 100 பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவை மணமுள்ள சென்டை பீய்ச்சி அடிக்கின்றன. இதனால் 50 மீட்டர் பரப்பில் வாசனை பரவுவதால் மக்கள் முகம் சுழிக்காமல் கடந்து செல்ல முடிகிறது.

வாழ வைக்கும் வாழைத்தண்டு!

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது முன்று அவின்சு வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

வந்துவிட்டது குரோம் 5 பிரவுசர்

கூகுள் நிறுவனம் தன் அடுத்த பிரவுசர் பதிப்பான குரோம் 5 பதிப்பின் சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளது. இது விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கென கிடைக்கிறது. குரோம் பிரவுசர் பதிப்புகளுக்கு கூகுள் எண்களைத் தராது. புதிய பதிப்புகளை மைல்ஸ்டோன் (Mடிடூஞுண்tணிணஞு) என அழைக்கிறது. பிரவுசர் மேம்பாட்டுத் தொகுப்புகளை முடியாத பயணமாக, கூகுள் கருதுகிறது.
ஏற்கனவே வெளியான குரோம் பிரவுசரின் வேகம் குறித்து கூகுள் நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளது. குறிப்பாக பிரவுசர் பிரிண்ட் பிரிவியூ காட்டும் செயல்பாடு வேகமாக இல்லை என்று கூகுள் கருதுகிறது. இதைப் போல பல விஷயங்களை குரோம் பதிப்பு 5ல் மேம்படுத்துவதுடன், சில புதிய வசதிகளையும் கூகுள் தர இருக்கிறது. அவற்றைக் காணலாம்.
1. ஜியோ லொகேஷன் (Geo Location): தற்போது பிரபலமாகி வரும் எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்தின் பயன்பாட்டில் மிகச் சிறந்த வசதி, இன்டர்நெட்டில் உலா வரும் ஒருவரின் இடத்தை அந்த இணைய தளத்திற்கு அறிவிக்கும் வசதியாகும். இது அந்த பயனாளரின் அனுமதியுடன் மட்டுமே மேற்கொள்ளப்படும். இதனால், ஒரு பயனாளரின் இடம் வரைபடத்தில் காட்டப்படும். பயனாளர் ஏதேனும் சேவை ஒன்றினை, அந்த இணைய தளத்திலிருந்து பெற விரும்பும் நிலையில், இணைய தளம் அவரின் இருப்பிடம் அறிந்து, அவர் அருகே அந்த சேவை எங்கு கிடைக்கும் என்பதைச் சுட்டிக் காட்டலாம். மேலும் அந்த தளம் இயங்கும் சர்வர்களில் எது சிறப்பாக இயங்குகிறது என்பதும் அறியவரும். குறிப்பாக மொபைல் போன் வழி இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்கையில், இது இன்னும் எளிதாகிவிடும். ஏனென்றால் பல மொபைல் போன்களில் இப்போது ஜி.பி.எஸ். வசதி இணைந்தே கிடைக்கிறது.
2. விண்டோஸ் 7 செயல்முறைகள்: விண்டோஸ் 7 சிஸ்டம் பலரின் பாராட்டைப் பெற்று, அதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், அவற்றில் காணப்படும் வசதிகளை இந்த பிரவுசரில் கூகுள் இணைக்கிறது. குறிப்பாக ஏரோ பீக் (Aero Peek) வசதி இந்த பிரவுசரில் காட்டப்படும். டாஸ்க் பாரில் குரோம் ஐகான் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள டேப்களில் உள்ள இணைய தளங்களின் தம்ப் நெயில் படங்கள் காட்டப்படும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இந்த வசதியினை ஏற்கனவே மைக்ரோசாப்ட் தந்து வருகிறது.
அதே போல ஜம்ப் லிஸ்ட் (Jump List) என்னும் விண்டோஸ் 7 வசதியும் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது. இதன் மூலம் பயனாளர்கள் என்ன என்ன செயலை மேற்கொள்ளலாம் என்பது, ஒரு மெனு மூலம் காட்டப்படும்.
3. எக்ஸ்டென்ஷன்ஸ் (Extension): கூகுள் தன் குரோம் பிரவுசரின் பதிப்பு 4 ஐ வடிவமைக்கும்போது அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது. இதில் எக்ஸ்டென்ஷன் கள் பயன்படுத்துவது குறித்து தீவிரமாகச் செயல்படவில்லை. ஆனால் இந்த பதிப்பு 5ல் கூகுள் எக்ஸ்டென்ஷன்களை முழுமையாக, மூன்று (மேக் மற்றும் லினக்ஸ் உட்பட) வகை பதிப்புகளிலும் சப்போர்ட் செய்கிறது. மேலும் குரோம் பதிப்பு 4.1ல் விண்டோஸ் பதிப்பில் தரப்பட்ட ஆட்டோ மொழிபெயர்ப்பு பாப் அப் வசதி, மேக் மற்றும் லினக்ஸ் தொகுப்புகளுக்குத் தரப்படவில்லை. அதாவது கூகுள் வேறு ஒரு மொழியில் ஏதேனும் ஒரு தளம் கிடைக்கும்போது உடனே இந்த பாப் அப் விண்டோ கிடைக்கும். இந்த வசதி தற்போது பதிப்பு 5ல் மேக் மற்றும் லினக்ஸ் தொகுப்புகளுக்கும் கிடைக்கிறது.
4. இணைத்தல் (Syncing):: இப்போதெல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டரிலும் மொபைல் போன்களிலும், பிரவுசர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஒன்றுக்கொன்று மாறுகையில், முன் பயன்படுத்திய கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் உள்ள இணைய தள விஷயங்களை இன்னொன்றில் அப்டேட் அல்லது இணைக்க வேண்டியதுள்ளது. இந்த வசதியை குரோம் பதிப்பு 5ல் தருகிறது கூகுள். தீம்கள், தானாக படிவம் நிரப்பும் வசதிகள், பாஸ்வேர்ட்கள், எக்ஸ்டன்ஷன்கள் ஆகியவற்றை ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொண்டு பயன்படுத்த இணைக்கும் வசதியும் தரப்படுகிறது. கூடுதலாக இந்த பதிப்பில் ஆட்டோ பில் (Autofill) தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் பெயர்கள், முகவரிகள், போன் எண்கள் மற்றும் பிற தனிநபர் தகவல்கள் நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டு, படிவங்களில் நிரப்பப்படுகின்றன.
5. பிளாஷ் இணைப்பு: இதுவரை வேறு எந்த பிரவுசரிலும் இல்லாத ஒரு வசதியை, கூகுள் இந்த குரோம் பதிப்பு 5ல் தருகிறது. அடோப் நிறுவனத்தின் பிளாஷ் பிளேயரை இதில் ஒருங்கிணைத்துத் தருகிறது. கூகுள், அடோபின் பிளாஷ் தொழில் நுட்பத்திற்கு எதிரான எச்.டி.எம்.எல்.5, சி.எஸ்.எஸ். போன்ற தொழில் நுட்பத்தினை பலமாக ஆதரித்தாலும், இணையத்தில் பிளாஷ் பரவலாகத் தேவைப்படுவதால், அதனைத் தன் பிரவுசரில் இணைத்து வழங்குகிறது. இதில் என்ன ஆச்சரியம் எனில், பிளாஷ் பிளேயர் சோதனை பதிப்பான பதிப்பு 10.1 இதில் இணைக்கப்பட்டுள்ளது. அது அடோப் நிறுவனத்தால் அப்டேட் செய்யப்படுகையில், குரோம் பிரவுசரில் உள்ள பிளேயரும் அப்டேட் செய்யப்படும் என அறிவித்துள்ளது. பிளாஷ் மட்டுமின்றி அடோப் நிறுவனத்தின் பி.டி.எப். டாகுமெண்ட்களுக்கான சப்போர்ட்டும் பிரவுசரில் தரப்படுகிறது.
கூகுள் இத்தனை வசதிகளைத் தந்தாலும், இவற்றை விரும்பாதவர்கள், இந்த வசதிகளை ஒதுக்கிடவும் தேவையான டூல்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக பிளாஷ் விரும்பாதவர்கள், அதனை இந்த பிரவுசரில் முடக்கி வைத்துத் தாங்கள் விரும்பும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சோதனை பிரவுசர் தொகுப்பினை டவு<ண்லோட் செய்திட விரும்புபவர்கள் கீழ்க்காணும் தளத்தில் இலவசமாகப் பெறலாம். http://www.google.com/ chrome/eula.html?extra=betachannel

குண்டு உடலைக் குறைக்க!

சிகிச்சை முறை தவிர, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நொறுக்கு தீனியை குறைக்க சுலப வழி:
சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப் போம். இவ் வாறு நொறுக் குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம்; எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.
எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருத்தல்:
‘டிவி’ நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, ‘டிவி’ நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையைக் குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.
தினசரி நடக்க வேண்டும்:
தினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அவ்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உட்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர். அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். பக்கத்து தெருவில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து, அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பேசலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம்.
மெதுவாக சாப்பிட வேண்டும்:
உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும். பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும். குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண் டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும். மேலும், மெதுவாக சாப்பிடுவதால், எளிதில் ஜீரணமாதல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படாமல் தவிர்த்தல் போன்ற பயன்களும் உள்ளன.

விண்வெளியை சுத்தப்படுத்தும் செயற்கைகோள்

அமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஆய்வுப்பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் இந்த செயற்கை கோள்கள் செயல் இழந்து குப்பையாகி விடுகின்றன. சில செயற்கைகோள்கள் உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகின்றன. இவை விண்வெளி குப்பைகள் ஆக சுற்றி வருகின்றன.

கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் முலம் சுமார் 5 ஆயிரத்து 500 டன் எடையுள்ள குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன. இந்த குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைகோள்கள் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. டெலிவிஷன் ஒளிபரப்பு மற்றும் தகவல் தொடர்புகள் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது.

இந்த பிரச்சினையை தீர்க்க இங்கிலாந்து விஞ்ஞானிகள் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன்படி மிகச்சிறிய நானோ செயற்கைகோள்களை தயாரித்து அவற்றை விண்வெளிக்கு அனுப்பி அதன் முலம் விண்வெளி குப்பைகளை சேகரித்து அழிக்கப் போகிறார்கள். இந்த குப்பைகளை சேகரிக்கும் வகையில் இந்த நானோ செயற்கைகோளில் காந்த வலை ஒன்றும் இணைக்கப்படும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் குப்பைகளை கவர்ந்து இழுக்கும். பின்னர் இவற்றை பூமியின் மேற்பரப்புக்கு இழுத்து வரும். அப்போது இந்த குப்பைகளுடன் சேர்ந்து நானோ செயற்கைகோளும் எரிந்து சாம்பலாகி விடும். அடுத்த ஆண்டு இதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்குகிறது.

கோடை `கண்வலி!’

கோடை காலம் என்றாலும் அழையா விருந்தாளியாக வந்துவிடும் தொற்று நோய்கள். அதில் முக்கியமானது… அவஸ்தைக்கு பெயர் போன `மெட்ராஸ் ஐ’ என்னும் கண்வலி.

கண்களில் நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று தாய்ப்பாலை ஊற்றுவது, எண்ணை ஊற்றுவது என்று ஏடாகூடாமாக எதுவும் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு திருப்தி ஏற்படுவது போன்று இருக்கும். ஆனால் அப்படி கண்களை கசக்குவது கூடாது.

இதனால் கண்களின் பாகங்களாகிய கருவிழி, வெண்ணிறமாகிய ஸ்கிலீரா, கண்ணில் உள்ள ஆடி, விழித்திரையில் பாதிப்பு ஆகியவை ஏற்படும். இவைகளை மருத்துவர்கள் சரியாக கண்டுபிடித்து மருந்துகளை கொடுப்பார்கள். ஆனால் நாம் பொதுவாக ஏதாவது ஒரு மருந்தை ஊற்றி விடுவோம். இதனால் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்படும்.

கண்வலி வந்தால் சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதிகபட்ச ஒளியையும் பார்க்க வேண்டாம். கண்களுக்கு பொருத்தமான கண்ணாடியை போட்டுக் கொள்ளுங்கள்.

இவர்களுக்கு கண் அழுத்தத்தினால் தலைவலி உண்டாகும். இதனால் இந்த மாதிரியான நேரங்களில் கண் சிவப்பாகும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்கவும். ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்த கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விடவும். கண்களுக்கு மருந்திட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை குளிப்பது மிகவும் நல்லது.

வெள்ளைப்பூண்டு

கடுமையான மணமுடைய குமிழ் வடிவக் கிழங்கினையும் தட்டையான இலைகளையும் உடைய சிறுசெடி. கிழங்கு 10&12 பற்களாக உடையும் தன்மையுடையது. தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது. பலசரக்குக் கடைகளில் கிடைக்கும். கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. பசிதூண்டுதல், செரிமானம் மிகுத்தல், வயிற்று வாயு அகற்றல், சிறுநீர் பெருக்குதல், குடற்புழுக்கொல்லுதல், கோழையகற்றுதல், உடல் தேற்றுதல், உடலுரம் மிகுத்தல், வியர்வை பெருக்குதல், நோவு தணித்தல், அழுகலகற்றல், திசுக்களழித்தல், தாகமகற்றுதல், காய்ச்சல் தணித்தல், என்புருக்கி தணித்தல், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவப் பண்புகளையுடையது.

1. 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் மடியும்.

2. பூண்டை இழைத்துப் பருக்கட்டிகளில் பூச அவை உடைத்துக் கொள்ளும். வெள்ளைப் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து வெண்மேகத்தில் தடவி வர வெண்ணிறம் மாறி இயல்பு நிறமாகும்.

3. 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை 50 மி.லி. நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டொரு துளிகள் காதில் விட்டு வரக் காது வலி, காது மந்தம் ஆகியவை தீரும்.

4. வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைப் பூண்டை அரைத்துக் கட்டி எரிச்சல் தாங்க முடியாத நிலையில் எடுத்து விட நஞ்சு அகலும்.

தாலி பாக்கியம் காக்கும் நித்திய சுமங்கலி!

பரந்து விரிந்து கிடக்கும் கொல்லிமலை, சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் அலவாய்மலை, போதமலை, நயினாமலை ஆகிய நான்கு மலைகள் சூழ்ந்திருக்க நடுவே அமைந்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம்.

முற்காலத்தில் ராஜபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் ராசிபுரம்-நாமக்கல் ரோட்டில் கிழக்கு பார்த்த சன்னதியாக காட்சியளிப்பதுதான் பிரசித்திபெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் கடைஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட பீடம்

பண்டைய காலத்தில் வயல்வெளியாக இருந்த இந்த பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கலப்பையில் ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட்டது. உடனே, அந்த விவசாயி அந்த இடத்தை தோண்டி பார்த்தார். அங்கு ஒரு பீடம் இருந்தது.

ஒரு குடிசையில் அந்த பீடத்தை வைத்து அப்பகுதியினர் அம்மனாக வழிபட்டு வந்தனர். பின்னர் மாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அந்த காலக்கட்டத்தில் மக்களிடம் நன்மதிப்பை பெற்று புகழுடன் ஆட்சி செய்து வந்தான் ஒரு சிற்றரசன். அவன் திடீரென நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தான். இதை கண்ட அவனது மனைவி இந்த அம்மன் சன்னதிக்கு சென்று, தனது கணவனை காப்பாற்றுமாறு கூறி, தான் அணிந்திருந்த தாலிக்கொடியை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு மாரியம்மனை வேண்டி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டாள்.

பக்தையின் வேண்டுதல் நிறைவேறும் வகையில் அந்த மாரியம்மனின் அருளால் சிற்றரசன் கண் விழித்துக்கொண்டான். உடனே கோவிலுக்கு வந்தான். தனது கணவரின் குரல் கேட்டு எழுந்த அரசி தாலிக்கொடியை கண்களில் ஒற்றிக்கொண்டு மாரியம்மனை நோக்கி பார்த்து, `எனது தாலிபாக்கியத்தை நிலைக்கச் செய்த சுமங்கலி மாரியம்மாவே…’ என்று கண்கலங்கி வணங்கியதாக கோவில் வரலாறு கூறுகிறது.

இந்த மாரியம்மனை நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று கூறுவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

வேம்பு வழிபாடு

பொதுவாக மாரியம்மன் கோவில்களில் கருவறைக்கு எதிரே வேம்பு கம்பம் (சிவன் வடிவம்) நடப்பட்டு இருக்கும். திருவிழா முடிந்ததும் இந்த வேம்பு கம்பத்தை நீர்நிலைகளில் சேர்ப்பார்கள். ஆனால், ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் சிவபெருமானின் வடிவில் உள்ள வேம்பு கம்பம் 365 நாட்களும் நடப்பட்டு இருக்கும். எனவே, எப்போதும் கணவனை விட்டு பிரியாமல் நித்தம் சுமங்கலியாக இருக்கும் அம்பிகை இவள் என்று போற்றி வருகின்றனர்.

மேலும், கணவனின் உடல் நலத்திற்காக வேண்டிக்கொள்ளும் பெண்களின் தாலி பாக்கியத்தை நிலைக்க செய்வதால் இந்த அம்மனை `நித்திய சுமங்கலி மாரியம்மன்` என்றும் அழைத்து வருகின்றனர்.

இந்த கோவிலுக்கு வரும் பெண்கள் தங்கள் கணவர் உடல் நலம் பெற வேண்டியும், குடும்ப பிரச்சினைகளை தீர்க்க கோரியும் கோவிலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து வேம்பு கம்பத்தில் ஊற்றி மஞ்சள், குங்குமம் வைத்து அம்மனை வேண்டி வருகின்றனர். சிலர் பால் அபிஷேகமும் செய்கின்றனர்.

நித்திய சுமங்கலியாக விளங்கும் ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம், முதல் செவ்வாய்க்கிழமை அன்று திருவிழா தொடங்கி 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், தீக்குண்டம் இறங்குதல், தேரோட்டம், பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல் போன்றவை நடைபெறுகின்றன.

குழந்தை வரத்திற்கு தயிர்சாதம்

ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் 3-ம் நாள் நடக்கும் வேம்புக் கம்பம் மாற்றும் நிகழச்சியின்போது, குழந்தை வரம் வேண்டி வரும் பெண்களுக்கு தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை பெற விரும்பும் பெண்கள் திருவிழா நாளில் பயபக்தியுடன் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். தயிர் சாதத்தை பெற்றதன் லம் விரைவில் குழந்தை பாக்கியமும் கிடைத்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கை. அந்த நம்பிக்கை இதுவரை பொய்த்துப் போனதும் இல்லை.

மேலும், இக்கோவிலில் அம்மன் பாதச்சுவடு பதிக்கப்பட்ட ஊஞ்சல் உள்ளது. தங்களுக்குள்ள பிரச்சினைகளை தீர்க்கக்கோரி பெண்கள் அந்த ஊஞ்சலை ன்று தடவை ஆட்டிவிட்டு செல்வதை இன்றும் பார்க்க முடிகிறது.