Daily Archives: ஏப்ரல் 13th, 2010

எலும்புகளுக்குப் பதிலாக…

எலும்பு தேய்மானம் என்பது எல்லா வயதினருக்கும் ஏற்படும் பாதிப்பாக இருந்து வருகிறது. எலும்புகள் தேய்ந்துவிட்டால் உடல் இயக்கம் பெரிதும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க எலும்புகள் தானமாக கிடைப்பது அரிது.

இதுவரையில் டைட்டானியம் என்ற உலோகம் முலம் எலும்பு மாதிரிகள் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டு வந்தது. இது மிகவும் விலை உயர்ந்தது. மேலும் இவற்றில் சில குறைபாடுகளும் உண்டு.

இந்த நிலையில் உலோகங்களைப் பயன்படுத்தாமல், செயற்கையாகவே எலும்புகளை தயாரித்து பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நிரு பித்துள்ளனர். ஸ்டெம் செல் முலம் எலும்புகளை வளர்த்து எடுக்கும் முறையில் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

ஆய்வகத்தில் சோதனைக் குழாயில் ஸ்டெம் செல் முலம் தாடை எலும்பை அவர்கள் வளர்த்துள்ளனர். இந்த முறையில் எந்த வடிவிலான எலும்பையும் வளர்க்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

எதிர்காலத்தில் எலும்பு தேய்மான சிகிச்சையில் இந்த முறை புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கும் கைத்தடி…

மாற்றுத் திறனுடையோர் வாழ்க்கைக்கு உதவும் சாதனம் இது. பார்வைக் குறைபாடு உடையவர்கள் அன்றாட வாழ்க்கைச் சூழலை மிகவும் சிரமத்துடன் எதிர் கொள்கிறார்கள். அவர்களுக்காக பிரிம்போ என்ற அமைப்பு புதிய கைத் தடியை தயாரித்து உள்ளது.

இது அதிநவீன சென்சார் முலம் செயல் படுகிறது. அதிர்வலைகள் முலமாக அருகில் உள்ள பொருட்கள், அவற்றின் தன்மைகளை அறிந்து எச்சரிக்கை செய்யும். இதனால் ஊனமுற்றவர்கள், பார்வைக் குறைபாடு உடையவர்கள் ஆபத்தில் சிக்காமல் நடைபோடலாம்.

அழகு குறிப்புகள்

இன்று முக அழகை பராமரிப்பதற்கென்றே ஆங்காங்கே அழகு நிலையங்கள் முளைத்துள்ளன. இதற்குக் காரணம் அழகு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையேஅதிகம் ஏற்பட்டதன் விளைவுதான். இயற்கையான மூலிகைகளைக் கொண்டே முகத்தில்பொலிவை ஏற்படுத்த முடியும் என்பதை அன்றே சித்தர்கள் கண்டறிந்துகூறியுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் இயற்கையின் மாசுபாட்டால் சருமம் பாதிப்படைகிறது.சருமத்தில் முகம் மென்மையான பகுதியாகும். அகத்தின் அழகு முகத்தில்தெரியும் என்ற பழமொழியின்படி உடலின் உள்ளே உள்ள உறுப்புகளின் பாதிப்புமுகத்தில்தான் தெரியும்.

இளம் வயதினருக்கு முகப்பரு, நடுத்தர வயதினருக்கு கரும்புள்ளி, முகக்கருப்பு, 45 வயதை தொடுபவர்களுக்கு முகச் சுருக்கம் என அனைத்துவயதினரையும் கவலை அடையச் செய்யும் பகுதி முகம்தான்.

உடலின் முக்கிய உறுப்பான கண்கள், வாய், மூக்கு அமைந்துள்ள பகுதியும் முகம்தான்.

முகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் வைக்க சில எளிய வழிமுறைகளை அறிந்துகொள்வோம்.

முகச் சுருக்கம் நீங்க

காய்ச்சாத பசும் பால் – 50 மி.லி.

எலுமிச்சம் பழச்சாறு – 10 மி.லி

எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து, இளம் சூடானநீரில் முகத்தை கழுவி, மென்மையான பருத்தியினாலான துண்டு வைத்து துடைத்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாகும்.

காரட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் தடவிகாய்ந்த பின் இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மறையும்.

காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.

கரும்புள்ளி மறைய

தக்காளி சாறு – 50 மி.லி.

எலுமிச்சசை பழச்சாறு – 10 மிலி

கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் காயவைத்து குளிர்ந்த நீரில் முகத்தைகழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தால்கரும்புள்ளி மாறும்.

முகக் கருப்பு மறைய

மஞ்சள் தூள் – 10 கிராம்

கோதுமை பவுடர் – 10 கிராம்

எடுத்து கலந்து பேஸ்ட் மாதிரி செய்து இரவு படுக்கைக்கு செல்லும் முன்முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் முகம் கழுவினால் முகச்சுருக்கம் முகக் கருப்பு மாறும்.

முகம் பொலிவு பெற

மகிழம் பூ பொடி – 250 கிராம்

கிச்சிலி கிழங்கு – 125 கிராம்

கஸ்தூரி மஞ்சள் 125 கிராம்

கோரைக் கிழங்கு – 150 கிராம்

எடுத்து இடித்து அதனுடன் சந்தனத்தூள் – 100 கிராம் சேர்த்து ஒன்றாக கலந்துதினமும் சிறிது எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி 1/2 மணிநேரம்கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் முகம் பொலிவு பெறும்.

மூலத்தை தணிக்கும் முசுட்டை

கோடைக்காலத்தில் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் பொழுது உஷ்ணம் சார்ந்த பல நோய்கள் உண்டாகின்றன. சிறுநீர் எரிச்சல், கண் எரிச்சல், மலவாயில் எரிச்சல் போன்ற எரிச்சல்படுத்தும் பல சங்கடங்கள் கோடைக்காலத்தில் அணிவகுக்க ஆரம்பித்துவிடும். என்னதான் அதிகளவு நீர் அருந்தினாலும், பழங்களை உட்கொண்டாலும் சிலருக்கு மலவாயில் தோன்றும் எரிச்சல் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். ஏனெனில் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் குடற்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு, மலம் இறங்கும் தன்மை குறைந்து, மலவாயில் இறுக்கம் உண்டாகி, மலம் கழிக்கும் பொழுது வெடிப்புகள் ஏற்பட்டு, அந்த வெடிப்புகளில் வலியும், எரிச்சலும் தோன்றி, சில நேரங்களில் ரத்தக்கசிவும் உண்டாக ஆரம்பிக்கும்.
மூலநோயின் ஆரம்பமாகவும், ஆசனவாயின் வெடிப்பாகவும், சிறு, சிறு குருக்களாகவும், மலப்பகுதியில் தோன்றும் இந்நோயானது நாட்கள் செல்லச் செல்ல ரத்த மூலமாகவும், வெடிப்பு மூலமாகவும் மாறி, மூலம் முற்றி விட வாய்ப்புண்டு.
கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய காரஉணவுகளையும், கொழுப்புச்சத்து நிறைந்த அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் உட்கொள்வதுடன், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்த்து, போதுமான அளவு நீரை அருந்தி வந்தால் மூலநோயின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். எண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களையும், கிழங்குகளையும் உட்கொள்வதுடன், இரவில் செரிக்க கடினமான பொருட்களை உட்கொண்டு, அதனால் தோன்றிய மலச்சிக்கல், பல நாட்கள் நீடிக்கும் பொழுது, மூலமாக மாறி விட வாய்ப்புண்டு. மேலும் மலம் மற்றும் அபான வாயுவை அடக்குவதற்காக ஆசன வாயை நாம் இறுக்கமாக வைத்துக்கொள்வதாலும் மலவாய் சுருங்கி, மூலநோய் ஏற்படுகிறது.
மூலநோயால் ஏற்படும் மலவாய்ப்புண்கள் மற்றும் வெடிப்பு நீங்க அவ்விடங்களில் நெய்ப்பு தன்மையுடைய களிம்புகளை தடவுவதுடன், மூல நோயின் தீவிர நிலையில் வழுவழுப்பான திரவத்தை கொண்டு பீச்சு என்னும் எனிமா செய்யவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் கவனமாக பார்த்துக் கொள்வதுடன், இரவில் விரைவில் தூங்கி, அதிகாலையில் எழுந்து சர்வாங்காசனம், விபரீதகரணி போன்ற ஆசனங்களை செய்து வந்தால் மூலநோயிலிருந்து தப்பிக்கலாம். மூல நோய் நம்மை அணுகாமலிருக்கவும், அதனால் தோன்றும் மலவாய் புண்களை ஆற்றவும் பயன்படும் அற்புத மூலிகை முசுட்டை.
ரைவியா ஆர்னேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட கன்வாலவுலேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த முசுட்டை கொடியின் இலையில் எர்ஜின், ஐசோஎர்ஜின் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இவை மலக்குடலை சுருங்கி விரியச் செய்து மலத்தை எளிதாக கழியச் செய்வதுடன் மலவாயிலுள்ள புண்களை ஆற்றி ரத்தக்கசிவை தடுக்கின்றன.
முசுட்டை கொடியின் இலைகளை நிழலில் உலர்த்திப் பொடித்து ஒரு கிராமளவு சாப்பிட மூலநோயினை தொடர்ந்த மலச்சிக்கல் நீங்கும். மேலும் 10 கிராம் உலர்ந்த முசுட்டை கொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து, 125 மிலியாக சுண்டியப் பின் வடிகட்டி அதிகாலை வெறும் வயிற்றில் குடிக்க மூலச்சூடு தணியும், மலம் இளகும். முசுட்டை இலையை இடித்து சாறெடுத்து, சமஅளவு நல்லெண்ணெயுடன் கலந்து, காய்ச்சி, மலவாயில் ஏற்படும் புண்கள், வெடிப்பு ஆகியவற்றின் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

அல்லல்படுத்தும் ஆஸ்துமா

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஆரோக்கியமாகவே வாழ விரும்புகின்றன. நோயின் தாக்கத்தை அனுபவிக்க அவை விரும்புவதில்லை.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்.

நோய் வரும்முன் காத்துக்கொள்வதே சிறந்தது. இன்றைய நாகரீக வளர்ச்சியின்வேகம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருப்பது போல் நோயின் தாக்கமும் இதேவேகத்தில் உயிர்களை தாக்கி வருகிறது. உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுடன்ஒன்று சார்ந்திருப்பதால் நோயின் தாக்கம் அனைத்து உயிர்களையும் பாதிக்கவைக்கிறது. உதாரணமாக பன்றி, பறவை, எலி போன்றவற்றின் மூலம் பரவும்நோய்கள் பற்றி அண்மையில் நாம் அறிவோம்.

நோயின் தாக்கத்தை தவிர்க்க முறையான உணவு பழக்க வழக்கங்களையும், சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப வாழும் முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இயற்கையைமாசுபடுத்தியதன் விளைவால் பல கிருமிகள் தோன்றி பலவிதமான நோய்களைஉண்டாக்குகின்றன. அவ்வாறு உண்டாகும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. புறச்சூழ்நிலையின் மாறுபாட்டால் காற்றில் கிருமிகள் கலந்து சுவாசத்தின் மூலம்உட்புகுந்து அலர்ஜியை ஏற்படுத்தி ஆஸ்துமாவாக மாறுகிறது.

மனிதர்களை அச்சுறுத்தித் துயரப்படுத்தும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று.ஆஸ்துமா என்பது கிரேக்கச் சொல். மூச்சுத்திணறல் என்பது இதன் பொருள்.மூச்சுத்திணறலை ஆங்கிலத்தில் Wheezing அல்லது Pantingஎன்றழைக்கிறார்கள். “மூச்சுக் காற்றுக்காக ஏங்கித் ஏங்கித் திணறுவதுதான்ஆஸ்துமா” என்கிறார் ஹிப்போகிரேட்ஸ் மூச்சை உள் இழுக்கவோ, வெளியிடவோசிரமப்படும். இயல்புக்கு மாறான திணறல் நிலைமைகளே இந்நோயின் முக்கியஅறிகுறிகள்.

ஆஸ்துமா நோயோடு தொடர்புள்ள முக்கிய உடலுறுப்பு நுரையீரல். நுரையீரல்கள்மார்புக்குழியை (Thorasic cavity) பெருமளவு நிறைத்துள்ளது.நுரையீரலின் மேல்பகுதியில் மூச்சுப் பெருங்குழாய் (Trachea)எனப்படும் காற்றுக் குழாய் சுமார் 12 செ.மீ. நீளம் 2.5 செ.மீ. அகலத்தில்அமைந்துள்ளது. இது குருத்தெலும்பால் ஆனது. இக்காற்றுக் குழாய் இரண்டாகப்பிரிகின்றன.

இடதுபக்க கிளைக் காற்றுக்குழாய்க்கு  Left Bronchus என்றும்வலதுபக்கக் கிளைக் காற்றுக்குழாய்க்கு  Right Bronchus என்றும்பெயர். இவ்விரண்டு கிளைகளும் நுரையீரலுக்கு உள்ளே நுழைந்ததும் பல்வேறுதுணைக்கிளைக் காற்றுக் குழாய்களாகப் பிரிகின்றன. இவை Bronchioles எனப்படும். இக்குழாய்களும் குருத்தெலும்பால் ஆனவை. இவற்றின் முடிவில்எண்ணற்ற சின்னஞ்சிறு காற்றுப்பைகள் (Air Sacs)  இவற்றுக்குஅடூதிஞுணிடூடி என்று பெயர். இவற்றின் எண்ணிக்கை சுமார் 300 கோடி நுண்ணியகாற்று அறைகள் நுரை போன்ற வடிவத்தில் காணப்படுவதால்தான் நுரையீரல்எனப்படுகிறது. இந்தக் காற்றுப் பைகளைச் சுற்றிலும் அருகிலேயே தந்துகிகள்எனப்படும் மெல்லிய ரத்தக் குழாய்கள் ஓடுகின்றன.

சுவாசிப்பதற்கு முக்கியமாகப் பயன்படக்கூடியது மூக்கு அல்லது நுரையீரல்என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால் நுரையீரலின் கீழ் அமைந்துள்ள,வயிற்றையும் மார்பையும் பிரிக்கக்கூடிய ‘உதரவிதானம்’ (Diaphragm)எனப்படும். அடிச்சவ்வு சுருங்கி விரிவதால்தான் நுரையீரலுக்குள் காற்றுப்போக்குவரத்து நடைபெற முடியும். நுரையீரலிலுள்ள காற்றுக்குழாய் பகுதிகள்சுருக்கமடைந்து ஆஸ்துமா திணறலைத் தோற்றுவிக்கின்றன.

ஆஸ்துமா நோய்த்துயருக்கு அடிப்படைக் காரணங்கள் ஒவ்வாமை  (Allergy)பாரம்பரியம், உடலமைப்பு மற்றும் உணர்ச்சிகள். ஒவ்வாதபொருட்கள் (Allergens) என்றும் அவற்றை உடலுக்குள் எதிர்க்கஉருவாகும் எதிர்ப்பொருள்கள் (Antibodies) என்றும்இரண்டுக்குமிடையில் நிகழும் செயல்பாட்டை Allergen – Antibody Reaction என்றும் அழைக்கப்படும். இந்நிகழ்வின்போதுதிசுக்களிலிருந்து ஹிஸ்டமின், பிராடிகைனின், கைனின் போன்ற சில ரசாயனப்பொருட்கள் அதிகளவு வெளியேறி ரத்தத்தில் கலக்கின்றன. இதனால் உடலில்ஒவ்வாமைக் குறிகள் தும்மல், நீர் ஒழுக்கு, மூக்கடைப்பு, சுவாசக் குழாய்கள்சுருக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்களை வகைப்படுத்துகின்றனர்.

1. உணவில் ஒவ்வாத பொருட்கள்… பால், நெய், எண்ணெய், மீன், முட்டை, கீரை, கோதுமை… போன்றவை.

2. வெளியுலக ஒவ்வாத பொருட்கள் தூசு, புகை, குளிர்காற்று, மகரந்தம்,பிராணிகளின் முடி, உமிழ்நீர், கழிவுகள், பெயிண்ட், பெட்ரோல்… போன்றவை.

3.அலோபதி மருத்துவ உலக ஒவ்வாத பொருட்கள் டார்ட்ராசின், சல்போனமைடு,ஆஸ்பிரின், பென்சிலின் மேலும் ஏராளமான மருந்துகள் மற்றும் செயற்கை உணவுப்பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள்… போன்றவை.

ஒவ்வாமைப் பொருட்களால் ஏற்படும் ஆஸ்துமா ‘Extrinsic Asthma’ எனப்படும். இத்தகைய ஆஸ்துமாவிற்கான காரணங்கள் புறஉலகில் நிறைந்துள்ளன.வீடுகளிலுள்ள ஒட்டடை, தூசிகள் மற்றும் அவற்றில் நிறைந்துள்ள கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் (House Dust Mite) ஆஸ்துமாவைத் தூண்டும்வெளிக்காரணிகளின் முக்கியமானவையாகக் கூறப்பட்டன. தற்போது தொடர்ஆராய்ச்சிகள் மூலம் தூசிகளிலுள்ள நுண்ணுயிர்களின் கழிவுகளால் தான் ஆஸ்துமாதூண்டப்படுகிறது என அறிவித்துள்ளனர். எனவே திரைச் சீலைகள், மேஜைவிரிப்பான்கள், போர்வைகள், தலையணை உறைகள் போன்றவற்றை வாரம்ஒருமுறையேனும் துவைத்து வெயிலில் உலர வைப்பது அவசியம் என்றுஅறிவுறுத்துகின்றனர்.

ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளால் நுரையீரல் இயக்கம் 20 சதவிதத்திற்கும்மேல் குறைவதால் ஆஸ்துமா தூண்டப்படுகிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும்‘கேக்’கிற்கு நிறமளிப்பதற்குப் பயன்படும் Tartrazine ஆஸ்துமாவைத்தூண்டுகிறது. ஒரு பகுதியினருக்கு கடலுணவுகள் (இரால், நண்டு, மீன்) சேராது.இவற்றில் உப்புத்தன்மை அதிகம். சாப்பிடுவோர் உடலிலும் இது அதிகரித்துவெளிக்காற்றின் ஈரப்பதத்தை ஈர்க்கும். இதனால் ஆஸ்துமா ஏற்படும். சிலருக்குசுண்டல், அடை, காளான் வகை சேராது. இவற்றிலுள்ள அதிக புரோட்டீன் எளிதில்ஜீரணமாகாமல் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.

அகக்காரணங்களால் மன உணர்ச்சிகளால் உண்டாகும் ஆஸ்துமா ‘Intrinsic Asthma’  எனப்படும். 75% ஆஸ்துமா நோயாளிகளுக்கு மன உணர்ச்சிகளே காரணம்என ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. பயம், பதட்டம், அதிர்ச்சி,எரிச்சல், கோபம், தோல்வி, ஏமாற்றம், வேதனை, அன்பிற்கான ஏக்கம்,மனஇறுக்கம் (Tension), மன அழுத்தம் (Stress) எனப் பல்வேறுவகையான மிகை உணர்ச்சிகள் மன பாதிப்புகள் ஆஸ்துமாவைத் தூண்டுகின்றன.

பாரம்பரியக் காரணங்கள், அகக்காரணங்கள், புறக்காரணங்கள் என எந்தஅடிப்படையில் ஆஸ்துமா ஏற்பட்டாலும், எப்போது ஏற்பட்டாலும் ஆங்கிலமருத்துவம் ஒரே மருந்தைப் பயன்படுத்துகிறது. மனம், உடல் தொடர்பான அனைத்துவிவரங்களும் விசாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு சித்த மருத்துவசிகிச்சை மூலம் முழுநலம் பெற முடிகிறது.

சித்த மருத்துவ முறைகள்

· ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடாதோடை இலைகளை எடுத்து அதில்உள்ள காம்பு, இலை நரம்புகளை சுத்தமாக நீக்கி சிறிதாக நறுக்கி தேன்விட்டுமென்மையாக வதக்கி, 2 குவளை தண்ணீரில் 10 கிராம் அளவு இலைகளைப் போட்டுநன்றாக காய்ச்சி 1/2 குவளையாக வந்தபின் அருந்தவேண்டும். இவ்வாறு தினமும்இருவேளை தொடர்ந்து அருந்தி வந்தால் ஆஸ்துமாவின் பாதிப்பு குறையும்.

· தூதுவளை , இம்பூரல், ஆடாதோடை, சங்கன் வேர், சுக்கு, திப்பிலி,பற்படகம், கண்டக்காலி, வழுதுனை வேர், வீலி இவைகளை சம அளவு எடுத்து நான்குபங்கு நீர்விட்டு எட்டில் 1 பங்காக நன்கு காய்ச்சி தேன் கலந்துஉட்கொண்டால் இரைப்பு, இருமல் நோய்கள் நீங்கும்.

· ஆடாதோடை இலைச் சாற்றில் தாளிச பத்திரி இலைத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் இரைப்பு, இருமல் நீங்கும்.

· நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் ஆடாதோடை வேர்ப்பட்டை, கோஷ்டம்,சிற்றரத்தை, வசம்பு, மிளகு இவற்றை வாங்கி சம அளவு எடுத்து முறைப்படிசுத்தம் செய்து சூரணமாக்கி, 15 கிராம் அளவு சூரணத்திற்கு 400 மில்லிகிராம் தண்ணீர் விட்டு 100 மில்லியாக வற்ற வைத்து தினமும் மூன்று வேளைக்குபங்கிட்டு அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய் ஆச்சர்யம் படும் வகையில்குணமாகும்.

· திப்பிலி லேகியம்

திப்பிலி 70 கிராம் எடுத்து அதனுடன் சீரகம், சுக்கு, ஏலம், திப்பிலிவேர்,வாய்விடங்கம், கடுக்காய், மிளகு இவற்றை வகைக்கு 8 1/2 கிராம் அளவு எடுத்துஇளம் வறுப்பாக வறுத்து, பொடியாக்கி, தேன், சர்க்கரை சேர்த்து காய்ச்சிபாகு பதத்தில் இறக்கி நன்றாக கடைந்து 1 ஸ்பூன் அளவு தினமும் இருவேளை என 48நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு, இருமல் ஈளை நீங்கும்.

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள்

மச்சாசனம், புயங்காசனம், பிராணயாமம்.

பிராணயாமம் செய்யும் போது சுவாசத்தை நன்கு உள்வாங்கி வெளிவிடுவதால்உடலுக்கு அனைத்து பகுதிகளுக்கும் பிராண வாயு சீராக கிடைக்கும் இதனால்உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

ஆஸ்துமா நோய் தாக்காமல் நம்மை தற்காத்துக் கொள்ள சில மருத்துவ ஆலோசனைகள்

· கபத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வாசனை திரவியங்களில் உள்ளமணம் சில சமயங்களில் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே அதனை ஒதுக்குதல் நல்லது.

· மாசு, தூசு நிறைந்த பகுதிகளிலும் மண், புழுதி உள்ள பகுதிகளில் செல்லும் போது மூக்கை துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.

· வளர்ப்பு பிராணிகளுடன் அதிகமாக ஒட்டி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

· அடிக்கடி கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுதல் வேண்டும்.

· நன்கு காய்ச்சிய நீரையே அருந்த வேண்டும். வெந்நீரிலேயே குளிக்க வேண்டும்.

· இரவு உணவில் நீர்த்துவமான கஞ்சி வகைகளை உண்ண வேண்டும். அதுவும் இரவு 7 மணிக்குள் உண்பது நல்லது.

· மது, புகை, போதை வஸ்துக்களை அறவே தொடக் கூடாது.

· மிகக் குளிர்ச்சியான உணவுகளை தவிருங்கள்.

மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்தால் அல்லல் படுத்தும் ஆஸ்த்துமாவின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

தாழ‌ம்பூ மண‌ப்பாகு

தாழ‌ம்பூவை து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி ‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்ச வே‌ண்டு‌ம். ‌நீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்து பூ‌வித‌ழ்க‌ள் வத‌ங்‌கிய ‌பி‌ன் வடிக‌ட்டி, தேவையான ச‌ர்‌க்கரை கூ‌ட்டி பாகுபதமா‌ய் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இதுவே தாழ‌ம்பு மண‌ப்பாகு. இதனை ஒரு ‌தே‌க்கர‌ண்டி அளவு ‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருவேளை குடி‌த்து வர உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌த் த‌ணி‌க்கு‌ம்.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்த நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியாவதை‌த் தடு‌க்கு‌ம்.

தாழ‌ம்பூ மண‌ப்பா‌கினை வெ‌யி‌ல் கால‌ங்க‌ளி‌ல் ‌தினச‌ரி உபயோ‌கி‌த்து வர அ‌ம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கலா‌ம்.

இதே‌ப் போ‌ன்ற மண‌ப்பாகை தாழ‌ம்பூ வே‌ரினை‌ப் பய‌ன்படு‌த்‌தி செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ண்டு உ‌ட்கொ‌ண்டு வர சொ‌றி, ‌சிர‌ங்கு, ‌தினவு, தோ‌ல் நோ‌ய்க‌ள் குணமாகு‌ம்.

பயர்பாக்ஸ் மாற்றங்களுக்கான பேக் அப்

பயர்பாக்ஸ் தொகுப்பைப் பயன்படுத்து கையில் அதில் நம் விருப்பங் களுக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்துகையில் நாம் about:config சென்று அதில் ஆப்ஷன் களைத் தேர்ந்தெடுத்து அமைக்கிறோம். இதில் பல டூல்கள் தரப்படுகின்றன. எனவே இவற்றை ஒவ்வொரு முறையும் ஏற்படுத்த முடியாது. ஏதாவது ஒரு முறை இந்த மாற்றங்களை ஏற்படுத்துகையில், இவற்றைப் பதிவு செய்திடும் பைல் கிராஷ் ஆகிவிட்டால், மீண்டும் ஒவ்வொன்றாக அமைக்க வேண்டும். இதற்குப் பதிலாக இந்த பைலின் பேக் அப்காப்பி ஒன்றை வைத்துக் கொண்டால், பிரச்னைகள் ஏற்படும்போது, அதனைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம். இந்த பதிவுகள் உள்ள பைலை எப்படி பேக் அப் செய்வது எனப் பார்க்கலாம்.
இதற்கு முதலில் கம்ப்யூட்டரில் மறைத்து வைக்கப்பட்டு உள்ள பைல்களைக் காட்டும் ஆப்ஷனை இயக்க வேண்டும். விண்டோஸ் எப்போதும் நம் நன்மைக்காக, பல பைல்களை மறைத்து வைக்கிறது. அவற்றைத் தவறுதலாக எடுத்து எடிட் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவை மறைக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் இவற்றையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. அது போன்ற வேளைகளில், இந்த மறைத்துவைக்கப்பட்டிருக்கும் பைல்களைக் காட்டுமாறு விண்டோஸ் சிஸ்டத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பியில் Tools சென்று Folder Options என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் View என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Show Hidden Files என்ற வரிக்கு முன்னால் சிறிய புள்ளியை ஏற்படுத்தவும்.
விஸ்டா இயக்கத்தில் இது சற்று மாறுபடும். நேரடியாக Control Panel திறக்கவும். அதில் Folder Options என்பதைத் திறக்கவும். இங்கும் View டேப் திறந்து அதில் Show Hidden Files என்பதைத் தேர்ந்தெடுத்து முடிக்கவும். இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள், மற்ற வழக்கமான பைல்களிலிருந்து வேறு வகையில் காட்டப்படும்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நீங்கள் இயங்குவதாக இருந்தால், Search Bar CÀ Hidden Files என டைப் செய்திடவும். கிடைக்கும் கட்டத்தில் ari என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Show Hidden Files and Folders and Drives என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக் கவும். பின் OK அழுத்தி வெளியேறவும். இனிமேல் தான் பயர்பாக்ஸ் குறித்த வேலையே இருக்கிறது. முதலில் இந்த about:config செயல்பாடுகளைக் குறித்து வைக்கும் பைலை அணுக வேண்டும். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் \Documents and Settings\<username>\Application Data\Mozilla\Firefox\Profiles\<profile ID>.default\ என்றபடி கட்டளை அமைத்து என்டர் செய்திடவும். இதில் யூசர் நேம் என்பது உங்கள் கம்ப்யூட்டரில் யூசர் நேமாகப் பயன்படுத்தும் பெயர். இந்த இடத்தை அடைந்தவுடன் prefs.js என்ற பைலைத் தேடிக் கண்டுபிடிக்கவும். இதில் தான் பயர்பாக்ஸ் ஆப்ஷன்ஸ் தேர்வுகள் அனைத்தும் பதியப்பட்டிருக்கின்றன. இதனை காப்பி செய்து இன்னொரு பாதுகாப்பான டிரைவில் வைத்துக் கொள்ளவும். இது சரியாக வேலை செய்திடுமா என்ற கவலை இருந்தால், பயர்பாக்ஸ் திறந்து அதில் about:config கிளிக் செய்து, தேவையற்ற மாற்றங்களை ஏற்படுத்தவும். தாறுமாறான மாற்றங்கள் இருந்தால், நீங்கள் எதிர்பார்த்தபடி பயர்பாக்ஸ் இயங்காது. இந்நிலையில் ஏற்கனவே காப்பி செய்த prefs.js பைலை, மேலே கொடுத்த டைரக்டரியில் பேஸ்ட் செய்து இயக்கிப் பார்க்கவும். மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு முன்பு இருந்த மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் மீண்டும் செயல்படும்.
விண்டோஸ் கிராஷ் ஆகி, மீண்டும் பயர்பாக்ஸை நிறுவும் வேலையை மேற்கொண்டாலும், இந்த பைல் அப்போது நம் விருப்பங்களை செட் செய்திட உதவும்.
பயர்பாக்ஸ்: விரும்பும் புரோகிராமினைத் திறக்க
இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் பைல் ஒன்றைத் திறக்க, அல்லது இமெயில் அனுப்ப லிங்க் ஒன்றைக் கிளிக் செய்கிறீர்கள். என்ன நடக்கிறது? நீங்கள் எதிர்பார்த்த புரோகிராம், திறக்கப்படாமல் வேறு ஒரு புரோகிராமில் அது திறக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, பாடல் பைல் ஒன்றை இயக்கிக் கேட்க விரும்புகிறீர்கள். அப்போது நீங்கள் விரும்பும் விண் ஆம்ப் இயக்கப்படாமல் விண்டோஸ் மீடியா பிளேயர் இயக்கப்படலாம். அதன் மூலமும் பாடலைக் கேட்கலாம் என்றாலும், நீங்கள் பழகிய புரோகிராமான விண் ஆம்ப் திறந்து கேட்பது தான் உங்களுக்கு சுகமான அனுபவமாக இருக்கும்.
அதே போல நீங்கள் தண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மூலம் உங்கள் இமெயில்களைக் கையாண்டு வருகிறீர்கள். ஆனால் லிங்க்கில் கிளிக் செய்கையில் முன்பு போட்டு வைத்த இடோரா இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படுகிறது. நிச்சயம் நீங்கள் அதனை விரும்ப மாட்டீர்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது? நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரில், ஒவ்வொரு வகை பைலும் குறிப்பிட்ட புரோகிராமால் திறக்கப்பட வேண்டும் என நீங்கள் குறிப்பிடாவிட்டால், பிரவுசர் கம்ப்யூட்டரில் பதிந்துள்ளதைக் குறியிட்டு அமைத்துக் கொள்கிறது. எனவே நாம் இதனை எப்படி அமைக்க வேண்டும் என்பதை இங்கு பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் பார்க்கலாம்.
பயர்பாக்ஸ் 3.5 மற்றும் அடுத்த பதிப்புகளில் இந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்தவும். முதலில் Tools>Options செல்லவும். பின்னர் ‘Applications’ என்ற டேப்பினைத் திறக்கவும். இங்கு நீங்கள் எந்த வகை பைலுக்கு புரோகிராம் செட் செய்திட விரும்புகிறீர்களோ, அந்த வகை பைலை, அங்கு ஸ்குரோல் செய்து தேடிக் காணவும். எடுத்துக் காட்டாக இமெயில் குறித்து என்றால் ‘mailto’ என்ற பிரிவிற்குச் செல்லவும். பின் கீழ் விரி மெனுவில் எந்த மெயில் புரோகிராம் வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு வகை பைலுக்கும் அதற்கான புரோகிரா மினைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த புரோகிராம்களில் தான் அந்த அந்த வகை பைல்கள் திறக்கப்படும்.

அதிசயிக்க வைக்கும் கல் நாதஸ்வரம்

நவதிருப்பதிகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ளது ஆதிநாதர் ஆழ்வார் கோவில். இந்த கோவிலுக்குச் சென்றால் வித்தியாசமான நாதஸ்வரம் ஒன்றைப் பார்க்கலாம். இது சாதாரண நாதஸ்வரம் போன்றது கிடையாது. முழுக்க முழுக்க கல்லால் செய்யப் பட்டது.

முன்பு இதை வாசிக்கவும் செய்திருக்கிறார்கள். மேலும், மார்கழி உற்சவத்தின்போது இந்த நாதஸ்வரம் இசைக்கப்பட்டு, அந்த இசைக்கு ஏற்ப நடனக் கலைஞர்கள் நடனமும் ஆடியிருக்கிறார்கள். இப்போது அதன் பாதுகாப்பு கருதி ஒரு மரப்பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னர் இதை வழங்கியதாக அக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

நேரு, ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் இந்த ஊருக்கு வந்த போது, இந்த கல் நாதஸ்வரம் பற்றி கேள்விப்பட்டு வியந்திருக்கிறார்கள். மேலும், அது இசைக்கப்படுவதையும் கேட்டு ரசித்து இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

நிரந்தரமான சுகம் எது? (ஆன்மிகம்)

மனிதனாகப் பிறந்தவனுக்கு பலவித சுக, துக்கங்கள் உண்டு. இவைகளை அனுபவித்தே ஆக வேண்டும். இப்படி அனுபவிப்பதற்காகவே ஏற்பட்டதுதான் மனைவி, மக்கள், குடும்பம் எல்லாம். இவைகளெல்லாம் இல்லை என்றால், அவனவன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு போய் விடுவான். அதனால் தான், மனிதனை சம்சார சாகரத்தில் சிக்க வைக்கிறார் பகவான். ஆனால், இதில் சிக்கிக், சுற்றிச் சுற்றி எவ்வளவு காலம் தான் வருவது? இதிலிருந்து மெதுவாக கழன்று, விடுதலை பெற்று பகவானை அடைய முயற்சி செய்ய வேண்டாமா? இந்தப் பிறவிப் பிணியைப் போக்கிக் கொள்ள வேண்டாமா?
பகவானை அடைவது அவ்வளவு சுலபமல்ல. ஆசாபாசங்கள் மனிதனை, பகவான் பக்கம் போக விடாமல் இழுக்கிறது; அதையும் மீறித் தான் போக வேண்டும். ஒரு ஜென்மாவில் இல்லா விட்டாலும், அடுத்தடுத்து வரும் ஜென்மாக்களிலும், இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
ஒருவன் ஒரு ஊருக்குப் போகப் புறப்படுகிறான். ஒரு நாளைக்கு 10 கி.மீ., நடக்கிறான். இருட்டி விட்டது. அந்த ஊரில் இரவு தங்கி, மறுநாள் காலையில் நடக்க ஆரம்பிக்கிறான். மறுபடியும் ஒரு 10 கி.மீ., தூரம் நடந்து, இன்னொரு இடத்தை அடைகிறான். அங்கே தங்கி, மறுநாள் நடக்க ஆரம்பிக்கிறான்.
இப்படி சில நாட்கள் நடந்து, நடந்து ஒருநாள் இவன் போக வேண்டிய இடத்தை அடைந்து விடுகிறான். அதுபோல, பகவானை அடைய, நற்கதி பெற ஒரே ஜென்மாவில் முடியாது. அடுத்தடுத்த ஜென்மாவிலும், இடைவிடாமல் முயன்று கொண்டே இருந்தால், ஏதோ ஒரு ஜென்மாவில் இந்தப் பிறவிப் பிணி தொலைந்து, அவனை அடைந்து விடலாம்.
அப்படி இல்லாமல், முதல் நாள் 10 கி.மீ., நடந்து, மீண்டும் வீட்டுக்கே திரும்பி வந்தால், இவன் போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேர மாட்டான். அதுபோல, குடும்ப பாசங்களிலிருந்து விடுபட்டு பக்தி செய்து கொண்டே ஒவ்வொரு ஜென்மாவை கடந்து, காலம் வரும்போது அவனடி சேர வேண்டும்.
வண்டியில் கட்டிய மாடு, போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேரும்; செக்கில் கட்டிய மாடு நாள் முழுவதும் நடந்தாலும், செக்கையே தான் சுற்றிச் சுற்றி வரும். அதுபோல பகவானை நோக்கி போய்க் கொண்டிருக்க வேண்டும். செக்கு மாடு மாதிரி குடும்பத்தையும், மனைவியையுமே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தால், விமோசனம் ஏது? அதற்காக குடும்பம், மனைவி, மக்கள் என்றால் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதல்ல!
அது ஒருபக்கம் இருக்கட்டும்; அவர்களுக்காகவே பாடுபட்டு காலத்தை கழிக்க வேண்டாம். இகலோக சுகம் இங்கே கிடைக்கும்; பரலோக சுகம் என்பது அங்கே கிடைக்கும். இங்கே கிடைப்பது நிரந்தரமானதல்ல; அங்கே கிடைப்பது தான் நிரந்தரமானது; நித்யமானது ஒன்றுக்கு முயற்சி செய்யாமல், அநித்யமானதுக்கு ஆசைப்பட்டு வாழ்நாளை வீணாக்க வேண்டுமா?
பெரியோர், மகான்கள், மறுபிறவி என்றாலே நடுங்குகின்றனர். விஷயம் புரியாமலா பயப்படுகின்றனர்? ஏதோ பாதாம் அல்வாவும், பஜ்ஜியும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதா நித்ய சுகம்! பகவானை அடைந்து விட்டால், பசியும் கிடையாது; தாகமும் கிடையாது. அவனுக்கு கைங்கரியம் செய்து கொண்டே சுகப்படலாமே!
முயற்சி செய்யுங்கள், ஏதோ ஒரு ஜென்மாவிலாவது பலன் கிடைக்கும்!