Advertisements

அல்லல்படுத்தும் ஆஸ்துமா

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஆரோக்கியமாகவே வாழ விரும்புகின்றன. நோயின் தாக்கத்தை அனுபவிக்க அவை விரும்புவதில்லை.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்.

நோய் வரும்முன் காத்துக்கொள்வதே சிறந்தது. இன்றைய நாகரீக வளர்ச்சியின்வேகம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருப்பது போல் நோயின் தாக்கமும் இதேவேகத்தில் உயிர்களை தாக்கி வருகிறது. உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுடன்ஒன்று சார்ந்திருப்பதால் நோயின் தாக்கம் அனைத்து உயிர்களையும் பாதிக்கவைக்கிறது. உதாரணமாக பன்றி, பறவை, எலி போன்றவற்றின் மூலம் பரவும்நோய்கள் பற்றி அண்மையில் நாம் அறிவோம்.

நோயின் தாக்கத்தை தவிர்க்க முறையான உணவு பழக்க வழக்கங்களையும், சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப வாழும் முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இயற்கையைமாசுபடுத்தியதன் விளைவால் பல கிருமிகள் தோன்றி பலவிதமான நோய்களைஉண்டாக்குகின்றன. அவ்வாறு உண்டாகும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. புறச்சூழ்நிலையின் மாறுபாட்டால் காற்றில் கிருமிகள் கலந்து சுவாசத்தின் மூலம்உட்புகுந்து அலர்ஜியை ஏற்படுத்தி ஆஸ்துமாவாக மாறுகிறது.

மனிதர்களை அச்சுறுத்தித் துயரப்படுத்தும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று.ஆஸ்துமா என்பது கிரேக்கச் சொல். மூச்சுத்திணறல் என்பது இதன் பொருள்.மூச்சுத்திணறலை ஆங்கிலத்தில் Wheezing அல்லது Pantingஎன்றழைக்கிறார்கள். “மூச்சுக் காற்றுக்காக ஏங்கித் ஏங்கித் திணறுவதுதான்ஆஸ்துமா” என்கிறார் ஹிப்போகிரேட்ஸ் மூச்சை உள் இழுக்கவோ, வெளியிடவோசிரமப்படும். இயல்புக்கு மாறான திணறல் நிலைமைகளே இந்நோயின் முக்கியஅறிகுறிகள்.

ஆஸ்துமா நோயோடு தொடர்புள்ள முக்கிய உடலுறுப்பு நுரையீரல். நுரையீரல்கள்மார்புக்குழியை (Thorasic cavity) பெருமளவு நிறைத்துள்ளது.நுரையீரலின் மேல்பகுதியில் மூச்சுப் பெருங்குழாய் (Trachea)எனப்படும் காற்றுக் குழாய் சுமார் 12 செ.மீ. நீளம் 2.5 செ.மீ. அகலத்தில்அமைந்துள்ளது. இது குருத்தெலும்பால் ஆனது. இக்காற்றுக் குழாய் இரண்டாகப்பிரிகின்றன.

இடதுபக்க கிளைக் காற்றுக்குழாய்க்கு  Left Bronchus என்றும்வலதுபக்கக் கிளைக் காற்றுக்குழாய்க்கு  Right Bronchus என்றும்பெயர். இவ்விரண்டு கிளைகளும் நுரையீரலுக்கு உள்ளே நுழைந்ததும் பல்வேறுதுணைக்கிளைக் காற்றுக் குழாய்களாகப் பிரிகின்றன. இவை Bronchioles எனப்படும். இக்குழாய்களும் குருத்தெலும்பால் ஆனவை. இவற்றின் முடிவில்எண்ணற்ற சின்னஞ்சிறு காற்றுப்பைகள் (Air Sacs)  இவற்றுக்குஅடூதிஞுணிடூடி என்று பெயர். இவற்றின் எண்ணிக்கை சுமார் 300 கோடி நுண்ணியகாற்று அறைகள் நுரை போன்ற வடிவத்தில் காணப்படுவதால்தான் நுரையீரல்எனப்படுகிறது. இந்தக் காற்றுப் பைகளைச் சுற்றிலும் அருகிலேயே தந்துகிகள்எனப்படும் மெல்லிய ரத்தக் குழாய்கள் ஓடுகின்றன.

சுவாசிப்பதற்கு முக்கியமாகப் பயன்படக்கூடியது மூக்கு அல்லது நுரையீரல்என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால் நுரையீரலின் கீழ் அமைந்துள்ள,வயிற்றையும் மார்பையும் பிரிக்கக்கூடிய ‘உதரவிதானம்’ (Diaphragm)எனப்படும். அடிச்சவ்வு சுருங்கி விரிவதால்தான் நுரையீரலுக்குள் காற்றுப்போக்குவரத்து நடைபெற முடியும். நுரையீரலிலுள்ள காற்றுக்குழாய் பகுதிகள்சுருக்கமடைந்து ஆஸ்துமா திணறலைத் தோற்றுவிக்கின்றன.

ஆஸ்துமா நோய்த்துயருக்கு அடிப்படைக் காரணங்கள் ஒவ்வாமை  (Allergy)பாரம்பரியம், உடலமைப்பு மற்றும் உணர்ச்சிகள். ஒவ்வாதபொருட்கள் (Allergens) என்றும் அவற்றை உடலுக்குள் எதிர்க்கஉருவாகும் எதிர்ப்பொருள்கள் (Antibodies) என்றும்இரண்டுக்குமிடையில் நிகழும் செயல்பாட்டை Allergen – Antibody Reaction என்றும் அழைக்கப்படும். இந்நிகழ்வின்போதுதிசுக்களிலிருந்து ஹிஸ்டமின், பிராடிகைனின், கைனின் போன்ற சில ரசாயனப்பொருட்கள் அதிகளவு வெளியேறி ரத்தத்தில் கலக்கின்றன. இதனால் உடலில்ஒவ்வாமைக் குறிகள் தும்மல், நீர் ஒழுக்கு, மூக்கடைப்பு, சுவாசக் குழாய்கள்சுருக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்களை வகைப்படுத்துகின்றனர்.

1. உணவில் ஒவ்வாத பொருட்கள்… பால், நெய், எண்ணெய், மீன், முட்டை, கீரை, கோதுமை… போன்றவை.

2. வெளியுலக ஒவ்வாத பொருட்கள் தூசு, புகை, குளிர்காற்று, மகரந்தம்,பிராணிகளின் முடி, உமிழ்நீர், கழிவுகள், பெயிண்ட், பெட்ரோல்… போன்றவை.

3.அலோபதி மருத்துவ உலக ஒவ்வாத பொருட்கள் டார்ட்ராசின், சல்போனமைடு,ஆஸ்பிரின், பென்சிலின் மேலும் ஏராளமான மருந்துகள் மற்றும் செயற்கை உணவுப்பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள்… போன்றவை.

ஒவ்வாமைப் பொருட்களால் ஏற்படும் ஆஸ்துமா ‘Extrinsic Asthma’ எனப்படும். இத்தகைய ஆஸ்துமாவிற்கான காரணங்கள் புறஉலகில் நிறைந்துள்ளன.வீடுகளிலுள்ள ஒட்டடை, தூசிகள் மற்றும் அவற்றில் நிறைந்துள்ள கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் (House Dust Mite) ஆஸ்துமாவைத் தூண்டும்வெளிக்காரணிகளின் முக்கியமானவையாகக் கூறப்பட்டன. தற்போது தொடர்ஆராய்ச்சிகள் மூலம் தூசிகளிலுள்ள நுண்ணுயிர்களின் கழிவுகளால் தான் ஆஸ்துமாதூண்டப்படுகிறது என அறிவித்துள்ளனர். எனவே திரைச் சீலைகள், மேஜைவிரிப்பான்கள், போர்வைகள், தலையணை உறைகள் போன்றவற்றை வாரம்ஒருமுறையேனும் துவைத்து வெயிலில் உலர வைப்பது அவசியம் என்றுஅறிவுறுத்துகின்றனர்.

ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளால் நுரையீரல் இயக்கம் 20 சதவிதத்திற்கும்மேல் குறைவதால் ஆஸ்துமா தூண்டப்படுகிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும்‘கேக்’கிற்கு நிறமளிப்பதற்குப் பயன்படும் Tartrazine ஆஸ்துமாவைத்தூண்டுகிறது. ஒரு பகுதியினருக்கு கடலுணவுகள் (இரால், நண்டு, மீன்) சேராது.இவற்றில் உப்புத்தன்மை அதிகம். சாப்பிடுவோர் உடலிலும் இது அதிகரித்துவெளிக்காற்றின் ஈரப்பதத்தை ஈர்க்கும். இதனால் ஆஸ்துமா ஏற்படும். சிலருக்குசுண்டல், அடை, காளான் வகை சேராது. இவற்றிலுள்ள அதிக புரோட்டீன் எளிதில்ஜீரணமாகாமல் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.

அகக்காரணங்களால் மன உணர்ச்சிகளால் உண்டாகும் ஆஸ்துமா ‘Intrinsic Asthma’  எனப்படும். 75% ஆஸ்துமா நோயாளிகளுக்கு மன உணர்ச்சிகளே காரணம்என ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. பயம், பதட்டம், அதிர்ச்சி,எரிச்சல், கோபம், தோல்வி, ஏமாற்றம், வேதனை, அன்பிற்கான ஏக்கம்,மனஇறுக்கம் (Tension), மன அழுத்தம் (Stress) எனப் பல்வேறுவகையான மிகை உணர்ச்சிகள் மன பாதிப்புகள் ஆஸ்துமாவைத் தூண்டுகின்றன.

பாரம்பரியக் காரணங்கள், அகக்காரணங்கள், புறக்காரணங்கள் என எந்தஅடிப்படையில் ஆஸ்துமா ஏற்பட்டாலும், எப்போது ஏற்பட்டாலும் ஆங்கிலமருத்துவம் ஒரே மருந்தைப் பயன்படுத்துகிறது. மனம், உடல் தொடர்பான அனைத்துவிவரங்களும் விசாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு சித்த மருத்துவசிகிச்சை மூலம் முழுநலம் பெற முடிகிறது.

சித்த மருத்துவ முறைகள்

· ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடாதோடை இலைகளை எடுத்து அதில்உள்ள காம்பு, இலை நரம்புகளை சுத்தமாக நீக்கி சிறிதாக நறுக்கி தேன்விட்டுமென்மையாக வதக்கி, 2 குவளை தண்ணீரில் 10 கிராம் அளவு இலைகளைப் போட்டுநன்றாக காய்ச்சி 1/2 குவளையாக வந்தபின் அருந்தவேண்டும். இவ்வாறு தினமும்இருவேளை தொடர்ந்து அருந்தி வந்தால் ஆஸ்துமாவின் பாதிப்பு குறையும்.

· தூதுவளை , இம்பூரல், ஆடாதோடை, சங்கன் வேர், சுக்கு, திப்பிலி,பற்படகம், கண்டக்காலி, வழுதுனை வேர், வீலி இவைகளை சம அளவு எடுத்து நான்குபங்கு நீர்விட்டு எட்டில் 1 பங்காக நன்கு காய்ச்சி தேன் கலந்துஉட்கொண்டால் இரைப்பு, இருமல் நோய்கள் நீங்கும்.

· ஆடாதோடை இலைச் சாற்றில் தாளிச பத்திரி இலைத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் இரைப்பு, இருமல் நீங்கும்.

· நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் ஆடாதோடை வேர்ப்பட்டை, கோஷ்டம்,சிற்றரத்தை, வசம்பு, மிளகு இவற்றை வாங்கி சம அளவு எடுத்து முறைப்படிசுத்தம் செய்து சூரணமாக்கி, 15 கிராம் அளவு சூரணத்திற்கு 400 மில்லிகிராம் தண்ணீர் விட்டு 100 மில்லியாக வற்ற வைத்து தினமும் மூன்று வேளைக்குபங்கிட்டு அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய் ஆச்சர்யம் படும் வகையில்குணமாகும்.

· திப்பிலி லேகியம்

திப்பிலி 70 கிராம் எடுத்து அதனுடன் சீரகம், சுக்கு, ஏலம், திப்பிலிவேர்,வாய்விடங்கம், கடுக்காய், மிளகு இவற்றை வகைக்கு 8 1/2 கிராம் அளவு எடுத்துஇளம் வறுப்பாக வறுத்து, பொடியாக்கி, தேன், சர்க்கரை சேர்த்து காய்ச்சிபாகு பதத்தில் இறக்கி நன்றாக கடைந்து 1 ஸ்பூன் அளவு தினமும் இருவேளை என 48நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு, இருமல் ஈளை நீங்கும்.

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள்

மச்சாசனம், புயங்காசனம், பிராணயாமம்.

பிராணயாமம் செய்யும் போது சுவாசத்தை நன்கு உள்வாங்கி வெளிவிடுவதால்உடலுக்கு அனைத்து பகுதிகளுக்கும் பிராண வாயு சீராக கிடைக்கும் இதனால்உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

ஆஸ்துமா நோய் தாக்காமல் நம்மை தற்காத்துக் கொள்ள சில மருத்துவ ஆலோசனைகள்

· கபத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வாசனை திரவியங்களில் உள்ளமணம் சில சமயங்களில் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே அதனை ஒதுக்குதல் நல்லது.

· மாசு, தூசு நிறைந்த பகுதிகளிலும் மண், புழுதி உள்ள பகுதிகளில் செல்லும் போது மூக்கை துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.

· வளர்ப்பு பிராணிகளுடன் அதிகமாக ஒட்டி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

· அடிக்கடி கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுதல் வேண்டும்.

· நன்கு காய்ச்சிய நீரையே அருந்த வேண்டும். வெந்நீரிலேயே குளிக்க வேண்டும்.

· இரவு உணவில் நீர்த்துவமான கஞ்சி வகைகளை உண்ண வேண்டும். அதுவும் இரவு 7 மணிக்குள் உண்பது நல்லது.

· மது, புகை, போதை வஸ்துக்களை அறவே தொடக் கூடாது.

· மிகக் குளிர்ச்சியான உணவுகளை தவிருங்கள்.

மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்தால் அல்லல் படுத்தும் ஆஸ்த்துமாவின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

Advertisements
%d bloggers like this: