தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-மேஷம்

அசுவினி, பரணி, கார்த்திகை 1
75/100 ; +பணவரவு அதிகரிப்பு , – பிள்ளைகளால் பிரச்னை

அன்பும் பண்பும் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றில் கேது, ஆறில் சனி, ஒன்பதில் ராகு அமர்வு பெறுகின்றனர். இந்த அமர்வு ஆண்டு முழுவதும் தொடர்கிறது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக மே 2 முதல் நவம்பர் 7 வரை மீனராசியில் பிரவேசிக்கிறார். இதனால் குருவின் அனுகூல பலன்கள் சுமாராக இருக்கும். மிதுனத்தில் உள்ள மூன்றாமிட கேதுவால் முருகனின் பரிபூரண அருளும், பொருள் லாபமும் உண்டாகும். இளைய சகோதரர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை வளம்பெற உதவிக்கரம் நீட்டுவீர்கள். வீடு, வாகன வகையில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். புதிதாக வீடு கட்டும் யோகமும் உண்டு. ஏற்கனவே நடந்து வரும்
கட்டடப்பணிகள் தங்கு தடையின்றி நடக்கும். இதற்காக விண்ணப்பித்த கடன்தொகை வந்து சேரும். புத்திரர்களின் செயல்பாடு மனதிற்கு ஏமாற்றத்தை தரும். அவர்களுடைய படிப்பு நிலையும் சுமாராகவே இருக்கும். தக்க சமயத்தில் சரியான அறிவுரைகளை வழங்கி வழிகாட்டுங்கள். பூர்வ சொத்தில் பணவரவு நன்றாக இருக்கும்.
வீட்டில் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். உடல்நல ஆரோக்கியம் மனதிற்கு உற்சாகத்தை தரும். நீண்டகாலமாக தொடர்ந்த வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமை சிறந்து விளங்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர இவ்வாண்டில் வாய்ப்புண்டு. பொருளாதார நிலை சிறக்கும். அதனால் கடன்களை அடைத்து மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் கருத்து மோதல் ஏற்பட்டு விலகும். இவர்களிடம் பிரச்னை செய்யாமல் விலகி இருப்பதன் மூலம் சட்டச்சிக்கல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை கேளுங்கள். ஆனால், உங்கள் மனதிற்கு சரியெனப் பட்டதை செய்வதே நன்மைக்கு வழிவகுக்கும். மற்றவர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படக் கூடும் என்பதால் இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பில் சுமாரான அனுகூலம் உண்டு.
தொழிலதிபர்கள்: மருத்துவ உபகரணங்கள், வாகனம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமான பொருட்கள், உணவுப் பொருட்கள், டெக்ஸ்டைல், ரசாயன பொருட்கள், விவசாய இடுபொருட்கள், இரும்பு, காகிதம் சார்ந்த தொழிலதிபர்களுக்கு போட்டி குறையும். அதிக உற்பத்தியும், தாராள லாபமும் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அபிவிருத்தி பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். அரசு சார்ந்த வகையில் அனைத்து உதவிகளும் கிடைக்கும். ரியல் எஸ்டேட், மருத்துவமனை, லாட்ஜ், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் கூடுதல் வளர்ச்சியும், உபதொழில் தொடங்குவதற்கான சூழலையும் பெறுவர். மற்ற தொழில் செய்வோருக்கும் ஓரளவு லாபம் கிடைக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, சமையலறை சாதனம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், இறைச்சி, மருந்து, எண்ணெய், அழகு சாதனப் பொருள், வாகன உதிரி பாகம், காய்கறி, தண்ணீர் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களைவிட அதிக லாபம் கிடைக்கும். புதிய கிளைகள் துவங்க வாய்ப்புண்டு. வியாபார அபிவிருத்திக்கான பணக்கடன் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் எளிதாக கிடைக்கும். தகுந்த சமயத்தில் கடன் உதவி, வேண்டிய இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி சந்தோஷப்படுவீர்கள். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு உண்டாகும். பணிகளை குறித்தநேரத்தில் நிறைவேற்றி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். சிலருக்கு, அலுவலகம் சார்ந்த பயணங்கள் மேற் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் உங்களுக்கு பணபலனும் கிடைக்கலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் அலுவலகத்தில் நற்பெயர் பெறுவர். பணி உயர்வு, கடன் உதவி, இடமாற்றம் ஆகிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். குடும்ப பெண்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு சந்தோஷம் காண்பர். பணவரவு சிறப்பாக இருக்கும். கணவரின் ஒத்துழைப்பு குடும்ப வளர்ச்சிக்கு கைகொடுக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வர். தாய்வீட்டு உதவிகளால் புகுந்தவீட்டில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கையால் மனம் மகிழ்வீர்கள்.
மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், வணிகவியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், மாடலிங், ஜர்னலிசம், தோட்டக்கலை, டிரைவிங் பயிற்சிபெறும் மாணவர்கள் திறம்பட செயல்பட்டு தேர்ச்சி பெறுவர். படிப்பு முடித்தவர்களுக்கு தகுதியான இடத்தில் பணி வாய்ப்பு கிடைக்கும். மற்ற துறை மாணவர்கள் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண் பெறுவர். கல்விக்கடன் உதவி சரியான நேரத்திற்கு கைகொடுக்கும். பெற்றோர் மகிழும்படி கல்வி ஆர்வம் பெருகும்.
அரசியல்வாதிகள்: எதிரியால் இருந்த தொல்லைகள் விலகி அரசியலில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். புத்திரர்களை அரசியல் பணியில் அளவுடன் ஈடுபடுத்துவது நல்லது. ஆதரவாளர்களிடம் கூடுதல் நம்பிக்கை பெறுவீர்கள். தலைமையிடம் நல்ல பெயர் உண்டாகும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு அபிவிருத்தியும் உபரியான வருமானமும் கிடைக்கும்.
விவசாயிகள்: விவசாயப் பணிகள் சிறந்து அபரிமிதமான மகசூல் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். கால் நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் காண்பர். நவீன உழவுக்கருவிகள்,  வாகனங்கள் வாங்கும் யோகமுண்டு.
வணங்க வேண்டிய தெய்வம் : சிவன்
பரிகார பாடல்
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
இமையாது உயிராய் இருந்தாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!!

—————————————————————————————-

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2
60/100; + அதிர்ஷ்ட வாய்ப்பு, – தாய்வழியில் பிரச்னை

பிறருக்கு நன்மை செய்யும் எண்ணம் நிறைந்த ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 2ல் கேது, 5ல் சனி, 8ல் ராகு என்ற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே2) முதல் ஐப்பசி 21 (நவ.7)வரை மீனராசியில் பிரவேசிக்கிறார். குருவின் அனுகூலம் பலமாக உள்ளது. வாழ்க்கையில் இருந்துவந்த சிரமங்கள் நீங்கி சந்தோஷம் காண அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். பணவரவு பரவாயில்லை என்ற நிலை இருக்கும். பேச்சில் நிதானத்தை இழக்கலாம். விலை மதிப்புள்ள பொருட்களை பாதுகாக்க முயற்சி எடுப்பது நல்லது. இல்லாவிட்டால் இழக்க நேரிடும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரத் தொடங்கும். இளைய சகோதரர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். அவர்களின் செயல்பாடு மனதிற்கு ஆறுதலைத் தரும். வீடு, வாகன வகையில் சுமாரான முன்னேற்றத்தை காண்பீர்கள். சிலருக்கு வாகனங்கள் பழுதுபட நேரிடும். தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
தாய்வழி உறவினர்களிடம் வேண்டாத வாக்குவாதம், பகை உணர்வு உண்டாகும். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். குருவின் அதிசார பெயர்ச்சியின்போது 7ம் பார்வை புத்திர ஸ்தானத்தில் பதிகிறது. இதனால் அவர்களின் செயல்களில் உத்வேகமும் புத்துணர்வும் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் வெற்றிக்கொடி நாட்டுவர். இதுநாள்வரை இருந்துவந்த சொத்து சம்பந்தமான வழக்கு பிரச்னைகளில் உங்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் கூடுதல் வருமானம் உண்டாகும். உடல்நலம் சுமாராக இருக்கும். சரியான நேரத்தில் உணவு உண்பது அவசியம். சில மறைமுக எதிரிகள் உங்களை தொல்லைப்படுத்த நேரிடும். சமயோசிதமாக செயல்பட்டால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும். தம்பதியரிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். நண்பர்கள் சரியான தருணத்தில் உதவிக்கரம் நீட்டுவர். இளம் வயதினருக்கு திருமண முயற்சிகள் இனிதாக நிறைவேறும். வராக் கடன்கள் குருவின் நல்லருளால் படிப்படியாக வசூலாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஓரளவே நற்பலன் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் கூடுதல் உழைப்பும் தகுந்த கவனமும் கொண்டால் மட்டுமே ஓரளவு லாபத்தை பெறமுடியும். டெக்ஸ்டைல், தோல், சணல், காகிதம், இரும்பு, எலக்ட்ரானிக் சாதனங்கள், தண்ணீர் சார்ந்த பொருட்கள், வாகனம் சார்ந்த தொழில் செய்வோர், டிராவல்ஸ், கல்வி, நிதிநிறுவனம், மருத்துவமனை நடத்துவோர் ஓரளவே லாபம் பெறுவர். மற்றவர்கள் இவர்களையும் விட குறைந்த லாபமே பெற முடியும். திறமைமிக்க பணியாளர்களை ஊக்கப்படுத்துவதால் உற்பத்தியில் வளர்ச்சியும், தரமும் அதிகரிக்கும். நடைமுறை நிர்வாகச் செலவு அதிகமாக இருக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தால் சுமாரான லாபமே கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால், குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியும் பணவரவும் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவு காரணமாக வேலையில் தவறு செய்யக்கூடும். இதன் காரணமாக நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். சலுகைகளை அதிகம் எதிர்பார்க்க இயலாது. கூடுதல் நேரம் பணிபுரிவதாலும், கவனத்துடன் பணியாற்றுவதாலும் உங்கள் பணியை தக்கவைத்துக் கொள்ள
முடியும். சகபணியாளர்களுடன் சீரான நட்பு உண்டு. தேவையான நேரங்களில் உங்களுக்கு நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை வைகாசி,ஆவணிமாதத்தில் நிறைவேறக்கூடும். கூடுதல் முயற்சியின் பேரில் மட்டுமே நிலுவைப் பணத்தை பெறமுடியும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, கம்ப்யூட்டர், கட்டுமானப் பொருள், உதிரிபாகங்கள், அழகுசாதனம், பீங்கான், பிளாஸ்டிக்,உணவுப் பண்டங்கள், ஸ்டேஷனரி, பேக்கரி, பலசரக்கு வியாபாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே வருமானத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். பிற பொருட்களை விற்பவர்கள் ஓரளவு லாபம் ஈட்டுவர். யாருக்காகவும் பணவிவகாரங்களில் பொறுப்பேற்பது நல்லதல்ல. சரக்கு வாகன வகையில் சராசரி பணவரவு கிடைக்கும். சிலருக்கு வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய கடன் வாங்க வேண்டி வரும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவது மிகவும் அவசியம். மந்தநிலை காரணமாக தாமதம் ஏற்பட்டு அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். சிலருக்கு வேண்டாத இடமாற்றம், பதவி மாற்றம் உண்டாகும். பணவசதி சீராக இருக்கும். குருபகவானின் அதிசார பெயர்ச்சி காலத்தில் புத்திரப் பேறுக்கு அனுகூலமான சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பொறுப்புடன் நடந்துகொள்வது நல்லது. வேண்டாத வாக்குவாதங்களிலோ, அடுத்தவர் பிரச்னைகளிலோ தலையிடுவது நல்லதல்ல.
மாணவர்கள்: இன்ஜினியரிங், ஜர்னலிசம், சட்டம், மருத்துவம், விவசாயம், ஓட்டல் மேனேஜ்மென்ட், பிரிண்டிங் டெக்னாலஜி மாணவர்கள் உரிய கவனத்துடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும். மற்றவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். சக மாணவர்கள் நட்புறவு பாராட்டுவர். படிப்புக்கான பணவசதி குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் மிக எளிதில் கிடைக்கும். பெற்றோருடைய வழிகாட்டுதலின்படி நடந்தால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும்.
அரசியல்வாதிகள்: அரசியலில் தனக்குள்ள செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள அதிக கவனம் தேவை. வைகாசி, ஆவணி மாதங்களில் எதிர்பார்த்த வகையில் பதவி, பொறுப்பு கிடைக்கும். மறைமுக எதிரியால் இருந்த தொந்தரவு குறையும். கடுமையான அலைச்சலால் உடல்நலம் பாதிக்கும். அரசியல் பணி சிறக்க பிள்ளைகள் இயன்றவரையில் உதவுவர். அரசியலோடு தொழில் நடத்துபவர்களுக்கு வருமானமும், வாழ்க்கைத்தரமும் உயரும்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு சாகுபடி செலவுக்கு தட்டுப்பாடு வராது. நிலம் தொடர்பான பிரச்னைகளில் மிதமான போக்கினை கடைபிடிப்பது நல்லது. குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நிறைவேறும். கால்நடை வளர்ப்பில் பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
வணங்க வேண்டியதெய்வம் கிருஷ்ணர்
பரிகார பாடல்
உலகம் உண்ட பெருவாயா! உவப்பில் கீர்த்தி யம்மானே!
நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!
சூழத்தொல்லடியேன் உன் பாதம் கூறுமாறு கூறாயே!

————————————————————————————————

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-மிதுனம்

மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
85/100; + வீடுவாங்கும் யோகம், – குடும்பத்தில் பிரச்னை

பொறுமையைக் கடைபிடித்து வெற்றி பெறும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் கேது, 4ல் சனி, 7ல் ராகு என்கிற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே2 )முதல் ஐப்பசி 21 (நவ.7)வரை மீனராசியில் பிரவேசிக்கிறார். குருவின் நிலை நடைமுறை வாழ்வில் பெற வேண்டிய சில நல்ல பலன்களை தாமதப்படுத்தும். மனதில் தெய்வ சிந்தனை வளரும். பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகி விலகும். வீடு, வாகன வகையில் தேவையான மாற்றங்களை திருப்திகரமாக செய்வீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக சொத்தில் பெறும் வருமானம் பராமரிப்பு பணிகளில் செலவழியும். புத்திரர்கள் உங்களின் எண்ணங்களை நிறைவேற்றுவர். இஷ்ட, குலதெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். மறைமுக எதிரிகள் சித்திரை முதல் ஐப்பசி வரை உள்ள காலகட்டத்தில் தாமாகவே விலகிச் செல்வர். இதனால் உங்கள் மனச்சுமை குறையும். ஆன்மிகத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு உண்டாகும். மகான்களின் அன்பும் ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்டநாளாக நிறைவேறாமல் இருந்த நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். நாள்பட்ட நோய்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதால் நோய் நிரந்தரமாக குணமாகும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனதுடன் செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு நிம்மதி குறையும். நிலுவைப்பணம் வசூலிப்பதில் அனுகூலம் ஏற்படும். நண்பருடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதும் தகுதிக்கு மீறிய பண பரிவர்த்தனையும் கூடாது. சரியான சந்தர்ப்பங்களில் மூத்த சகோதரர்களின் ஆலோசனையும் உதவியும் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. சுபநிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த கடன் கிடைக்கப் பெறுவீர்கள். வீடு வாங்கவோ, கட்டவோ யோகம் உண்டு. சிலர் பழைய வீடுகளில் மராமத்து பணிகளை மேற்கொள்வர்.
தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், ஓட்டல், லாட்ஜ், மருத்துவமனை, சுற்றுலா நிறுவனம், டிராவல்ஸ் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், கட்டுமான பொருட்கள், தண்ணீர் சார்ந்த தொழில், இரும்பு, பிளாஸ்டிக், காகிதம், ரசாயனப்பொருள் உற்பத்தி செய்வோருக்கு லாபம் நன்றாக இருக்கும். மற்றவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். குருவின் அதிசார பெயர்ச்சி மாதங்களில் உற்பத்தியை பெருக்குவதில் தகுந்த கவனம் தேவை. பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டு வர்த்தகத்தில் லாபம் பெருமளவில் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர் களின் வரவேற்பு கிடைக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை, காகிதம், உணவுப் பண்டங்கள், பர்னிச்சர், மருந்து, பூஜை பொருட்கள், தண்ணீர் சார்ந்த பொருட்கள், பாத்திரங்கள், தானியம் விற்பவர்கள் அபரிமிதமான வளர்ச்சி காண்பர். லாபம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு இவர்களையும் விட நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த சங்கங்களில் சிலருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். சரக்கு வாகனங்களாலும் லாபம் உண்டு. ஆனால், வாகன பராமரிப்பு செலவும் அதிகரிக்கும். சரக்கு கொள்முதல் கடனை பெருமளவில் அடைத்துவிடுவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிலுவைப் பணிகளை கண்டறிந்து நிறைவேற்றி, அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். புதிதாக சில சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்கள் அன்புடன் நடந்துகொள்வர். வங்கி, பதிவேடு பராமரிப்பு சார்ந்த பணிகளில் உள்ளவர்கள் குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் பணிகளில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. இல்லாவிட்டால் வேண்டாத சிரமங்களில் சிக்கிக்கொள்ள நேரிடும். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணியை செய்துமுடிக்க ஆர்வம் காட்டவேண்டும். பணியிட மாற்றம், கூடுதல் வேலைப்பளு ஆகியவை குருவின் அதிசார காலத்தில் உண்டாகும். தாய்வழி உறவினர் களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். சுயதொழில் நடத்தும் பெண்கள் அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி காண்பர். பணவரவும் சீராக இருக்கும்.
மாணவர்கள்: வங்கியியில், மருத்துவம், சட்டம், விவசாயம், ரசாயனம், இன்ஜினியரிங், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், கேட்டரிங், கம்ப்யூட்டர், தகவல்தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் தரத்தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் இவர்களை விட சற்று குறைந்த மதிப்பெண் பெறுவர். படிப்புக்கான பணவசதி நன்றாக இருக்கும். படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விவாதங்களில் ஈடுபடுவது நல்லதல்ல. பெற்றோருடைய அன்புக்கு ஆளாவீர்கள். சுற்றுலா பயண அனுபவம் மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் தமது ஆதரவாளர்களிடம் தேவையற்ற விஷயங்களைப்பற்றி விவாதம் செய்தல் கூடாது. புதியவர்களை மனமுவந்து வரவேற்று ஆதரிப்பீர்கள். இதனால் உங்கள் மதிப்பு உயரும். எதிரிகளால் இருந்த தொல்லை குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் பெருமளவில் குறையும். அரசியல் பணியில் புத்திரர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள்பணக்கடன் பெற்று அபிவிருத்தி பணியை நிறைவேற்றுவர்.
விவசாயிகள்: பயிர் வளர்ப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். மகசூல் சிறந்து தாராள பணவரவு உண்டாகும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு லாபம் உண்டு. நிலம் தொடர்பாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு கூடுதல் நிலம் வாங்கும் யோகம் உண்டு.
வணங்க வேண்டிய தெய்வம்: திருப்பதி வெங்கடாஜலபதி
பரிகார பாடல்
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோவில் படிவாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!

——————————————————————————————————–

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-கடகம்

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
90/100: + வெற்றி மேல் வெற்றி, – பேச்சால் பிரச்னை

மனோபலமும் செயல்திறமும் கொண்ட கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 3ல் சனி, 6ல் ராகு, 12ல் கேது என்ற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ.7) வரை ராசிக்கு 9ம் இடமான மீனத்தில் அனுகூலமாக பிரவேசிக்கிறார்.
நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். பணவரவு மனதிற்கு சந்தோஷத்தை உண்டாக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து பிரமிக்கத்தக்கதாய் உயரும். இளைய சகோதரர்கள் உங்களுடைய ஆதரவால் முன்னேற்றம் பெறுவர். வீடு, வாகன வகையில் தேவையான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வீர்கள். புதிதாக வீடு கட்டும் யோகமும் சிலருக்கு உண்டு. புத்திரர்கள் தங்கள் திறமையை வளர்த்து எதிர்கால முன்னேற்றத் திற்கு வழிவகை காண்பர். பூர்வீக சொத்தில் வருமானம் கூடும். புதிய சொத்துக்கள் சேரும். உடல்நிலை மிக ஆரோக்கியமாக இருக்கும். வழக்கு
விவகாரத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிரிகளால் உண்டாகும் தொல்லைகளுக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். பேச்சால் பிரச்னை வரலாம் என்பதால் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது.
பழைய கடன்களை அடைக்க தாராள பணவசதி உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதினால் குடும்பத்தில் ஒற்றுமை தழைத் தோங்கும். இளம் வயதினருக்கு திருமண முயற்சிகள் வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி
மாதங்களில் நிறைவேற தகுந்த சூழ்நிலை உருவாகும். நண்பர்களினால் ஆதாயம் பெறுவீர்கள். அவர்களின் உதவி தக்க தருணத்தில் கைகொடுக்கும். தொழில் சார்ந்த வகையில் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான புதிய மாற்றங்களை செய்து நற்பலன் பெறுவீர்கள். சிலருக்கு பணத்தை சேமிக்கும் வாய்ப்பு ஏற்படும். மூத்த சகோதரர்களின் ஆலோசனைகள் மனதிற்கு நிறைவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மனமகிழ்ச்சியையும், திருப்திகரமான பணவரவையும் பெற ஏதுவாக அமையும்.
தொழிலதிபர்கள்: எலக்ட்ரானிக்ஸ், குளிர்பானம், தண்ணீர் சார்ந்த தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருட்கள், அரிசி ஆலை, டெக்ஸ்டைல்ஸ், மருந்து, மருத்துவ உபகரணங்கள், லாட்ஜ், கல்வி நிறுவனம், நிதி நிறுவன அதிபர்கள் திட்டமிட்ட இலக்கை எட்டி தாராள பணவரவு காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிறுவனத்தின் புகழ் சிறந்து விளங்கும். மற்ற தொழில் செய்வோருக்கும் சிறந்த லாபம் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும். குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் புதிதாக கிளை தொடங்குதல், உபதொழில் மேற்கொள்ளுதல் போன்ற நல்ல யோகம் அமையும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, கட்டுமான பொருட்கள், மளிகை, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்து, ரப்பர், தோல் பொருட்கள், எண்ணெய்வித்து, தண்ணீர் சார்ந்த பொருட்கள், கண் கண்ணாடி, இறைச்சி, மீன், பீங்கான் பொருட்கள், விவசாய இடுபொருட்கள், வீட்டுசாதன பொருட்கள், பால் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் புதிய உத்திகளை புகுத்தி நல்ல வளர்ச்சி காண்பர். இதர வியாபாரிகளுக்கு ஓரளவு வருமானம் கிட்டும். குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் கூடுதல் வாடிக்கையாளர்கள் வரவால் உபரி வருமானம் உண்டாகும். சரக்கு வாகன வகையிலும் அனுகூல பலன் உண்டு.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். சக பணியாளர்களின் அன்பும், ஆதரவும் முழுமையாக கிடைக்கும். குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், பண உயர்வு கிடைத்து மகிழ்வீர்கள். அதிகாரிகளின் ஆதரவால் சிலருக்கு வெகுமதி கிடைக்கும். கட்டடம், மருத்துவம், சமையல் சார்ந்த பணியாளர்களுக்கு கூடுதல் பணிவாய்ப்பும், பொருளாதார வளமும் உண்டாகும். இளம் பணியாளர்களுக்கு வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் திருமண முயற்சி இனிதாக நிறைவேறும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பணியிடங்களில் இருந்த குளறுபடி விலகி மனதிற்கு இதமான சூழல் உண்டாகும். பதவி உயர்வு, பணச்சலுகை எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை உயர்த்தும் வகையில் சிறப்பாக செயல்படுவர். புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியம் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும்.
சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். புதிய உத்திகளை கையாண்டு வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பர். சிலருக்கு பணம் சேமிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மாணவர்கள்: மருத்துவம், சிவில், ஏரோநாட்டிக்கல், மரைன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் படிப்பு, பயோகெமிஸ்ட்ரி, விவசாயம், கேட்டரிங், சட்டம், உணவு பதப்படுத்துதல், ஓவியம், ராணுவம், மூலிகை பயிர் வளர்ப்பு சார்ந்த துறையில் பயிற்சி பெறும் மாணவர்கள் குருபகவானின் அனுகூல பார்வையால் உயர்ந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்கள் இவர்களைவிட சிறப்பாக படிப்பர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக இருந்தாலும் சிக்கன நடவடிக் கையை மேற்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது. சக மாணவர்கள் அன்புடன் பழகுவர். பாராட்டு, விருது போன் றவை கிடைத்து பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்: அரசு அதிகாரிகளின் ஆதரவு பக்க பலமாய் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்பு கிடைக்கும் யோகம் உண்டாகும். ஆதரவாளர்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை மனதிற்கு தைரியத்தை தரும்.  அரசியல் பணியில் புத்திரரின் உதவி சரியான சமயத்தில் கைகொடுக்கும். அரசியலோடு தொழில் நடத்துபவர்கள் சீரான முன்னேற்றம் பெறுவர். மறைமுக எதிரிகளால் இருந்த தொந்தரவு விலகும்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து உபரி வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னை விலகும்.
வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்
பரிகார பாடல்
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிமதி
செஞ்சடையாளை வஞ்சக நெஞ்சு அடையாளை தயங்கும் நுண்ணூல்
இடையாளை எங்கள் பெண்மான்
இடையாளை இங்கு என்னை இனி
படையாளை உங்களையும்
படையாவண்ணம் பார்த்திருமே!

———————————————————————————————————-

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-சிம்மம்

மகம், பூரம், உத்திரம் – 1
50/100; + தம்பதி ஒற்றுமை; – பணம் கரையும்

துணிவோடு செயலாற்றி, சோதனைகளை சாதனையாக்கும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 2ல் சனி, 5ல் ராகு, 11ல் கேது என்கிற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ.7) வரை ராசிக்கு எட்டாமிடமான மீனத்தில் மாறுபட்ட குணத்துடன் பிரவேசிக்கிறார். கேதுபகவானின் பரிபூரண அருள் மட்டும் ஆண்டு முழுவதும் உறுதுணையாக இருந்து உங்களுக்கு கைகொடுக்கும்.
பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் எதிர்கால நலனுக்கு நல்லது. கண்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வது மிக அவசியம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாற்றுபவர்களுக்கு இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. இளைய சகோதரர்கள் வகையில் சிறு அளவிலான கருத்துவேறுபாடு உண்டாகி மறையும். வீடு, வாகனங்களில் மராமத்து பணி மேற்கொண்டால் கடன்பட நேரிடும். இருக்கும் நிலையையே தக்கவைத்துக்கொள்வது
போதுமானது. தாயின் தேவை அறிந்து உதவி அவருடைய ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புத்திரர்களின் நிலை சிலருக்கு மனக்கவலையை உண்டாக்கும். தக்க அறிவுரைகளை கூறி அவர்களுக்கு வழிகாட்டுவது நன்மையைத்தரும். எக்காரணம் கொண்டும் சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுக்கக் கூடாது. இஷ்ட, குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதால் சிரமங்கள் விலகி மனஅமைதி ஏற்படும். உடல்நலம் சுமாராகவே இருக்கும்.உடல் ஆரோக்கியத்தை அக்கறையோடு பாதுகாப்பது நல்லது. சத்துள்ள உணவு உண்பது உடல்நலத்தை மேம்படுத்தும்.
தம்பதியர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். நண்பர்களின் ஆதரவு கைகொடுக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வர். பணவரவு மிகச் சுமாராகவே இருக்கும். செலவுகள் எகிறும் என்பதால் சேமித்த பணத்தில் கைவைக்க வேண்டிய நிலை வரலாம். சிலருக்கு கடன் வாங்கும் சந்தர்ப்பமும் உருவாகும். இந்த காலகட்டத்தில் பொறுமையும், சிக்கனமும், ஆடம்பரத்தைத் தவிர்த்தலுமே பணப் பிரச்னையை சீராக்க உதவும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரும்புபவர்களுக்கு கடுமையான முயற்சி தேவைப்படும்.
தொழிலதிபர்கள்: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் பொருட்கள், டெக்ஸ்டைல், பீங்கான், பிளாஸ்டிக், பால் பொருட்கள், இசைக்கருவி, அழகு சாதனப் பொருட்கள், பட்டாசு, தீப்பெட்டி, சோப்பு, இரும்பு, காகிதம், தோல் தொழில் சார்ந்தவர்கள் நிர்வாகத்திலும் பொருட்களின் தர உற்பத்தியிலும் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும். லாபம் அதிகமிருக்க வாய்ப்பில்லை. மற்ற தொழில் செய்வோரும் சுமாரான லாபமே பெறுவர். குரு அதிசார பெயர்ச்சி காலத்தில் தாராள உற்பத்தியும் புதிய ஒப்பந்தங்களின் மூலம் கிளைகள் துவங்கும் வாய்ப்பு உருவாகும். நவீன யுக்திகைள கையாண்டு அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் வளர்ச்சிப் பணிக்காக தகுதிக்கு மீறிய அளவில் கடன் பெறுதல் நல்லதல்ல.
வியாபாரிகள்: ஸ்டேஷனரி, அழகு சாதனம், கட்டுமான பொருட்கள், நகை, ஜவுளி, பலசரக்கு, எண்ணெய், தென்னை, பனை பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்து, விளையாட்டு சாதனங்கள், காகித வியாபாரிகள் சந்தையில் உண்டாகும் கூடுதல் போட்டியை எதிர்கொள்ள நேரிடும். மற்றவர்களும் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது. குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் கடன் பணம் வசூலாகும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவர். எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதற்கு மிகுந்த பொறுமை தேவைப்படும். அதிகாரிகளுடன் அவ்வப்போது கருத்துமோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தேவையற்ற சிக்கலை உருவாக்கும். பொறுமையை கடைபிடிப்பது எதிர் கால நலனுக்கு உகந்தது. சிலருக்கு நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையும், வேண்டாத பணியிட மாற்றமும் ஏற்படலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியிடங்களில் வேண்டாத குளறுபடிகளை சந்திப்பர். அக்கறையுடனும், கவனத்துடனும் பணிபுரிவதால் பிரச்னையிலிருந்து தப்பலாம். குடும்ப பெண்கள் கணவரின் பண வருமானத்திற்கேற்ப சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு நற்பெயர் பெறுவர். சீரான ஓய்வு மிக அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்தோடு கடுமையாக உழைத்தால் மட்டுமே முன்னேற்றம் பெறமுடியும். இரவல் நகை கொடுப்பது, வாங்குவது கூடாது. நகை பாதுகாப்பில் உரிய கவனம் தேவை.
மாணவர்கள்: மருத்துவம், ஓட்டல் மேனேஜ் மென்ட், மார்க்கெட்டிங், கேட்டரிங், அனிமேஷன், பாங்கிங், ஆடிட்டிங், மாடலிங், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், மரைன், ஏரோநாட்டிக்கல், சிவில் இன்ஜினியரிங், ரசாயனம், பவுதிகம், இசை,
ஓவியம், நடனம், விவசாயத்துறை மாணவர்கள் ஆர்வமுடன் படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். மற்ற துறை மாணவர்கள் இவர்களையும் விட சிறப்பாகப் படிப்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர்களுடன் நட்புறவு பலப்படும். படிப்புக்கான பண உதவியும் குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் தாராளமாக கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெற கூடுதலான முயற்சி தேவை. எதிரிகளால் சிரமங்கள் உண்டாகும். ஆனால், தக்க பதிலடி கொடுத்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளின் தயவைப் பெறுவதில் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். தர்ம காரியங்களில் பணம் செலவழிக்க நேரிடும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை தரும். சிலருக்கு புத்திரர்களின் கவனக்குறைவான செயலினால் அவப்பெயர் உண்டாகும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். சாகுபடி செலவுக்கு கடன்வாங்க நேரிடும். கால்நடை வளர்ப்பில் லாபம் உண்டாகும். நில விவகாரங்களில் பிரச்னை உருவாகும். முன்யோசனையுடன் செயல்படுவதுஎதிர்காலத்துக்கு உகந்தது.
வணங்க வேண்டிய தெய்வம் : விநாயகர்
பரிகார பாடல்
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லை போம் போகாத்துயரம் போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்
வீற்றிருக்கும் கணபதியை கை தொழுதக் கால்.

—————————————————————————————————–

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-கன்னி

உத்திரம் – 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2
45/100; + நண்பர்களின் உதவி, – ஏராளமான செலவு

வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்த தெரிந்த கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் சனி, நான்கில் ராகு, 10ல் கேது என்ற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக ராசிக்கு 7ம் இடமான மீனத்தில் சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ. 7) வரை மிகுந்த அனுகூலமாக பிரவேசம் செய்கிறார்.
உங்கள் செயலில் தடுமாற்றம் உண்டாகும். ஆனாலும் விசுவாசம் மிக்க நண்பர்கள் சரியான நேரத்தில் உதவி செய்வர். இடம், பொருள் அறிந்து பேசுவது நன்மை தரும். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுதல் கூடாது. கடினமாக உழைத்தால் மட்டுமே உங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியும். பணவரவு மிகவும் குறைவாகவே இருக்கும். சகோதரர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர். சமூகத்தின் பார்வையில் உங்கள் மதிப்பு உயரும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டி வரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கலாம். தக்க மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. புத்திரர் உங்கள் சொல் கேட்டு நடப்பர். படிப்பிலும் விளையாட்டிலும் முன்னேற்றம் காண்பர். பூர்வீக சொத்தில் பெறுகிற வருமானம் பராமரிப்பிற்காக செலவிட நேரிடும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு ஆறுதலைத் தரும். பணியிடங்களில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக நெருப்பு சம்பந்தமான பணியில் இருப்போர் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்பது கூடாது. உடற்பயிற்சி, மருத்துவ ஆலோசனை ஆகியவற்றை பின்பற்றினால் உடல்நலம் மேம்படும். தம்பதியர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் நடந்துகொள்வர். நண்பர்களுக்கு உதவி செய்வதும், அவர்களிடம் உதவி பெறுவதும் மனதிற்கு நிறைவைத் தரும். இளம் வயதினருக்கு திருமணம் நடத்த வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்கள் அனுகூலமான சூழ்நிலை உள்ளது. தொழில் சார்ந்த வகையில் சீர்திருத்த நடைமுறைகளை பின்பற்றி வளர்ச்சி பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அதிகப்படியான அலைச்சலும் குறைந்த அனுகூலமும் உண்டாகும்.
தொழிலதிபர்கள்: கட்டுமான பொருள், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, தோல், பிளாஸ்டிக், தண்ணீர், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், விவசாய இடுபொருட்கள், இரும்பு, எண்ணெய், காகிதம் சார்ந்த தொழில் செய்பவர்கள், கல்வி, நிதி நிறுவனம், லாட்ஜ், ஓட்டல் நடத்துபவர்கள் சுமாரான லாபம் பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களை விட சற்று அதிகமான லாபம் கிடைக்கும். கணக்கு வழக்குகளை முறையாக பராமரிப்பது நல்லது. அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது எதிர்கால நலனுக்கு உகந்தது. பணியாளர்கள் வகையிலும் இயந்திரங்களை பராமரிப்பதிலும் கூடுதல் செலவு உண்டாகும். கூட்டுச் சேரும் முயற்சியை தாமதப்படுத்துவது நல்லது. குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் நிலுவைப்பணம் வசூலாகும்.
வியாபாரிகள்: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, அழகு சாதன பொருட்கள், கட்டுமான பொருட்களை, நகை, ஜவுளி, பலசரக்கு, எண்ணெய், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்து, விளையாட்டு சாதனங்கள், காகிதம், காய்கனி, தானிய வியாபாரிகள் சுமாரான லாபம் பெறுவர். பிற வியாபாரிகள் இவர்களை விட சற்று அதிக லாபம் காண்பர். பொருட்களை ரொக்கத்திற்கு விற்பது நல்லது. சரக்கு வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் கூடுதல் விற்பனையும் உபரி வருமானமும் கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தேவையற்ற தடங்கல்களை சந்திப்பர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகைகளில் ஒருசில மட்டுமே கிடைக்கும். உங்கள் பணிகளை நீங்களே செய்வது வேண்டாத சிரமங்களை தவிர்க்கும். பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றிற்கு இடமுண்டு. சக பணியாளர்களின் நட்புறவு மனதிற்கு ஆறுதலை தரும். பணியிடங்களில் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். குறிப்பாக பண பரிவர்த்தனை பணியில் இருப்பவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். கல்விப்பணி சார்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டகரமான பலன் உண்டாகும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேலையில் சிறு தடைகளை எதிர்கொள்வர். சலுகைகள் பெறுவதிலும் இடைஞ்சல் இருக்கும். இந்த காலகட்டத்தில் பொறுமை மிக தேவை. குடும்பப் பெண்கள் வீட்டுச் செலவுக்கு சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். குழந்தைகளின் ஒத்துழைப்பு மனநிறைவைத் தரும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் சுமாரான வியாபாரம் காரணமாக குறைந்த லாபமே பெறுவர். கடன்தொகை வசூலாகும். நிலுவைப் பணவரவு குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் முயற்சி இல்லாமலேயே வந்து சேரும். சுயதொழில் புரியும் பெண்கள் வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கும்.
மாணவர்கள்: மார்க்கெட்டிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், கம்ப்யூட்டர், வங்கியியல், தணிக்கையியல், தொழில்நுட்பம், மாடலிங், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், மரைன், ஏரோநாட்டிக்கல், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங், ரசாயனம், பவுதிகம், மருத்துவம், விவசாயத்துறை மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும். படிப்பு செலவைத்தவிர மற்ற ஆடம்பர விஷயங்களில் மனதை திசைதிருப்புதல் நல்லதல்ல.  அனுபவம் இல்லாத, சக்திக்கு மீறிய விஷயங்களை தவிர்ப்பது எதிர்கால நலனுக்கு உகந்தது. கருத்து வேற்றுமையால் பிரிந்த நண்பர்கள் குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் உங்களிடம் வலியவந்து பழகுவர்.
அரசியல்வாதிகள்: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வருட முற்பகுதியில் விரும்பிய பதவி, பொறுப்பு கிடைக்கும். ஆதரவாளர்கள் நம்பிக்கை மனதிற்கு தைரியத்தை தரும். புதியவர்களும் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவர். எதிரிகளால் இருந்து வந்த சிரமங்களை உரிய நடவடிக்கைகளால் சரிசய்து கொள்வீர்கள். அரசியல் பணிக்கு புத்திரர்கள் இயன்ற அளவில் உதவுவர். அரசியலோடு தொழில் நடத்துபவர்களுக்கு ஓரளவே லாபம் உண்டு.
விவசாயிகள்: விவசாயப் பணிகளை நிறைவேற்ற அதிக உடல் உழைப்பு தேவைப்படும். மகசூல் சிறந்து எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான லாபம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னையில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர்
பரிகார பாடல்
புத்தியும் பலமும் தூய புகழோடு துணிவும் நெஞ்சில் பக்தியும்
அச்சமிலாப் பணிவும் நோய் இல்லா வாழ்வும்உத்தம ஞானச்சொல்லின்
ஆற்றலும் இம்மை வாழ்வில் அத்தனை பொருளும் சேரும்
அனுமனை நினைப்பவர்க்கே!

——————————————————————————————

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-துலாம்

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3
65/100; + சலுகைகள் கிடைக்கும், – படிப்பில் மந்தம்

சேவை செய்வதில் ஆர்வம் உள்ள துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 3ல் ராகு, 9ல் கேது, 12ல் சனி என்ற வகையில் கிரக அமர்வு உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ.7) வரை ராசிக்கு ஆறாம் இடமான மீனத்தில் பிரவேசம் செய்கிறார்.
செயல்களில் சுறுசுறுப்பு உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளிப்பவர்களிடம் மட்டும் பேசுவது நல்லது. கூடுதல் முயற்சி இருந்தால் மட்டுமே உங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. இளைய சகோதரரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் இருக்கும் நிலையை தக்கவைத்துக் கொள்வதே போதுமானது. தாயின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். புத்திரர்கள் உங்கள் பேச்சை புறக்கணிப்பர். சரியான வழிகாட்டுதல், கண்டிப்பும் அவர்களை நல்வழிப்படுத்தும். உடல்நலம் சுமாராக இருக்கும். எதிரிகள் உங்களிடம் பாசத்துடன் நடப்பதுபோல் நடித்து கவிழ்க்க நினைக்கலாம். கவனமாக இருங்கள். பணவரவு நன்றாக இருக்கும். தம்பதியர் ஒற்றுமை சிறப்பாக அமையும். உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். தந்தைவழி உறவினர்கள் நம்பிக் கைக்கு உரியவர்களாக நடப்பர். ஆபத்தான பணிகளில் ஈடுபடுவது கூடாது. தந்தைவழி பூர்வீக சொத்து சிலருக்கு கிடைக்கும்.
குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்கள் அன்பு காட்டுவர். வெளியூர் பயணங்கள் லாபத்தை தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற முயற்சிப்பவர்கள் அதிக பணம் செலவழிக்க நேரிடும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு உண்டாகும்.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் உங்கள் எதிர்பார்ப்பு பெருமளவில் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில், கிளை துவங்கவும் வாய்ப்பு உள்ளது. டெக்ஸ்டைல், இரும்பு, காகிதம், தோல், கட்டுமான பொருட்கள், பிளாஸ்டிக், தண்ணீர் சார்ந்த தொழில் செய்வோர், ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்சி, லாட்ஜ், மருத்துவமனை, பால் பண்ணை, கம்ப்யூட்டர் நிறுவன அதிபர்கள் நல்ல லாபம் பெறுவர். பணியாளர்கள் நம்பிக்கையுடன் பணிபுரிந்து உங்களுக்கு கைகொடுப்பர். நிர்வாகம், உற்பத்தி தரத்திற்கான விருது சிலருக்கு கிடைக்கும்.
வியாபாரிகள்: ஜவுளி, நகை, பலசரக்கு, தானியங்கள், மருந்து, மருத்துவ உபகரணம், இறைச்சி, காய்கனி, பூ, பர்னிச்சர், விவசாய இடுபொருட்கள், மின்சார உபகரணங்கள், பட்டாசு வியாபாரம் செய்பவர்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அழகு சாதன பொருட்கள், தண்ணீர், வாசனை திரவியம், பால் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு விற்பனை அதிகமாகி உயர்ந்த லாபம் பெறுவர். அபிவிருத்தி பணிகள் செய்வதற்கு வழிவகை உண்டாகும். சரக்கு கொள்முதலில் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சரக்கு வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புதியயுக்திகளை கையாண்டுகூடுதல் வாடிக்கையாளர்களை பெறுவர்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு பணிகளை சிறப்பாக செய்வர். நிர்வாகத்திடம் நீண்டநாள் எதிர்பார்த்த சலுகைகள் ஓரளவுக்கு கிடைக்கும். பணி இலக்கை சரியாக நிறைவேற்றி அதிகாரிகளின் பாராட்டை பெறுவர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும். தொழில்நுட்பம், கைவினைப் பொருட்கள் வடிவமைப்பு சார்ந்த தொழில் புரிபவர்கள் கூடுதல் பணிவாய்ப்பும் சம்பள உயர்வும் பெறுவர். கூர்மையான பொருட்களை கையாளும் பணியில் உள்ள வர்கள் தக்க பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் சில சிரமங்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு என்றாலும், நிர்வாகத்திடம் கேட்ட சலுகை, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் செலவு வகையில் திட்டமிட்டு குடும்ப நிர்வாகத்தை மேற்கொண்டு பணம் சேமிப்பர். கணவரின் அன்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும். தாய்வழியில் உதவி கிடைக்கும். சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் உடல் நல பாதுகாப்பில் தகுந்த அக்கறை காட்டுவது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய சந்தை வாய்ப்பு கிடைத்து நல்ல லாபம் காண்பர்.
மாணவர்கள்: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மருத்துவம், சட்டம், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜினியரிங், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், பயோ கெமிஸ்ட்ரி துறை மாணவர்கள் மந்தநிலை காரணமாக படிப்பில் பின்தங்க நேரலாம். மற்றவர்களும் சுமாராகவே படிப்பர். படிப்புக்கான பணவசதிக்கு குறை இல்லை. சக மாணவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். விளையாட்டு பயிற்சியின் போது தகுந்த பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள்: செல்வாக்கு அதிகரிக்கும். ஆதரவாளர்கள் உங்களிடம் அதிக நம்பிக்கை கொள்வர். மறைமுக எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பீர்கள். யார் எதுசொன்னாலும் கேட்டுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மனதிற்கு சரி என பட்டதை மட்டும் செயல்படுத்துங்கள். புத்திரர்களைன் அரசியல் பணியில் அளவோடு ஈடுபடுத்துவது நன்மை தரும். அரசியலோடு தொழில் நடத்துபவர்கள் திறமையுடன் பணியாற்றி வருமானத்தை பெருக்கிக் கொள்வர்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து உதவிகளும் எளிதாக கிடைக்கும். மகசூல் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். கால்நடை வளர்ப்பில் சுமாரான லாபம் உண்டு. நவீன உழவுக்கருவிகள் வாங்கும் யோகம் உண்டு. நிலம் தொடர்பான விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் : துர்க்கை
பரிகார பாடல்
உடையானை ஒல்கு செம்பட்டு உடையாளை
ஒளிமதி செஞ்சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை
தயங்கும் நுண்ணூல் இடையாளை
எங்கள் பெம்மான் இடையாளை
இங்கு என்னை இனி படையாளை
உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே!

————————————————————————————————

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-விருச்சிகம்

விசாகம் 4, அனுஷம், கேட்டை
70/100; + தொழிலில் லாபம், – மருத்துவச் செலவு

நேர்மையான செயல்பாடு கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டில் ராகு, எட்டில் கேது, 11ல் சனி என்ற வகையில் கிரக அமர்வு உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக ராசிக்கு 5ம் இடமான மீனத்தில் சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ.7) வரை அனுகூலமாக பிரவேசம் செய்கிறார். நியாய தர்ம உணர்வு மேலோங்கும். உறவினர்களிடம் மென்மையான அணுகுமுறையுடன் நடந்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் வேண்டாத வாக்குவாதங்களும் கருத்து வேறுபாடும் உருவாகும். சமூகத்தில் நன்மதிப்பை தக்கவைத்துக் கொள்வீர்கள். வீடு, வாகன வகையில் பெரிய அளவிலான மாற்றங்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற செலவு உருவாகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கி பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். பூர்வ சொத்தின் மூலமாக அதிக லாபம் கிடைக்கும். இஷ்ட, குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவு பலப்படும்.
உடல்நலம் சுமாராக இருக்கும். கஷ்டப்பட்டு சேர்த்ததை மருத்துவத்துக்கு செலவழிக்க வேண்டியுள்ளதே என மனம் வருந்தும். எதிரிகளின் செயல்பாடும் தொந்தரவு தருவதாக இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து குடும்பப் பெருமையை நிலைநாட்டுவர். நண்பர்களுடன் உறவு பலப்படும். சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும். இளம் வயதினருக்கு சுபநிகழ்ச்சிகள் வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் இனிதாக நிறைவேறும். உங்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த வகையில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். நவீன யுக்திகளைக் கையாண்டு லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். நிலுவைப்பணம் பெருமளவில் வசூலாகும். மூத்த சகோதரர்களின் அன்பும் ஆதரவும் தக்க தருணத்தில் கைகொடுக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு அனுகூல பலன் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: வாகனம், மரம், தீப்பெட்டி, பட்டாசு, இரும்பு, காகிதம், மருத்துவ உபகரணங்கள், மின்சாதனங்கள் சார்ந்த தொழில் செய்பவர்கள், மலைத்தோட்ட அதிபர்கள் தொழிலில் தேவையான வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவர். உற்பத்தியும் தரமும் அதிகரிக்கும். பணவரவு கூடும். மற்ற தொழில் செய்வோருக்கும் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் பங்குதாரரிடம் தகுந்த ஆலோசனைகளை வழங்கி தொழிலை மேம்படுத்துவர். பணியாளர் களுக்கு தகுந்த சலுகை வழங்கி ஊக்கப் படுத்துவீர்கள். கிட்டங்கிகளில் கடும் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்துங்கள். இல்லாவிட்டால் பொருட்கள் திருட்டு, சேதம் ஆகிய பலன்களை சந்திக்க நேரலாம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, பலசரக்கு, கண்ணாடி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அழகு சாதனம், தண்ணீர் சார்ந்த பொருட்கள், அலங்கார பொருட்கள், ரப்பர், தோல் பொருட்கள், மலைத்தோட்ட பயிர், உடற்பயிற்சி கருவி, புத்தகம், கட்டுமானப் பொருட்கள், விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்பவர்கள் அளவான முதலீட்டில் கூடுதல் லாபம் பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களையும் விட லாபம் நன்றாக இருக்கும். அரசு, தனியார் நிறுவனங்களில் விண்ணப்பித்த கடன் எளிதாக கிடைக்கும். அதன்மூலம் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். சரக்கு வாகன வகையில் சீரான வருமானம் கிடைக்கும். சரக்கு கிட்டங்கி பாதுகாப்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு அவசியம்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் குறுக்கிடும் தடைகளை உறுதியான மனதுடன் எதிர் கொள்வர். உயர் அதிகாரிகளின் ஆதரவும் வழிகாட்டுதலும் பணியின் தரத்தை உயர்த்தும். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை, விரும்பிய இடமாற்றம் வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் கிடைக்க வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் ஆதரவுடன் செயல்படுவர். உணவுப் பண்டம் தயாரிப்பு, எலக்ட்ரிக்கல், மருத்துவம், விவசாயத்துறை பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பு, உபரி வருமானம் பெறுவர்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் சில சிரமங்களுக்கு ஆளாக நேரிட்டாலும் நிர்வாகத்திடம் கேட்ட சலுகைகள் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் நல் ஆதரவில் மகிழ்ச்சியுடன் வாழ்வு நடத்துவர். புத்திரப்பேறு நீண்டநாள் தாமதமானவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு தொழில் விஷ யத்தில் கணவரின் ஒத்துழைப்பும் தோழியின் ஆலோசனையும் கிடைக்கப்பெறும். திருப்திகரமான வகையில் வருமானம் இருக்கும்.
மாணவர்கள்: விவசாயம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜினியரிங், சட்டம், பயோகெமிஸ்ட்ரி, வங்கியியல், ஜர்னலிசம், கேட்டரிங், மார்க்கெட்டிங் பயிற்சி மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து சிறந்த தர தேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்கள் இவர்களையும் விட நன்றாகப் படிப்பர். பெற்றோரின் அன்பும் ஆதரவும் பலமாக கிடைக்கும். சக மாணவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் சிறு தாமதம் உண்டாகும்.
அரசியல்வாதிகள்: அரசியல் பணியில் புதிய மாற்றங்களை உருவாக்கி எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள். எதிர்பார்த்த வகையில் ஆதரவாளர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு அதிகாரிகளிடம் இதமான அணுகுமுறையை பின்பற்றினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம். எதிரிகளால் தொந்தரவு அதிகரிக்கும். அரசியல் பணி சிறக்க புத்திரர்கள் தங்களால் இயன்ற உதவி செய்வர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் மூலதன தேவைக்கு கடன் வாங்க நேரிடும். வெளியூர் பயணம் இனிய அனுபவங்களைத் தரும்.
விவசாயிகள்: விவசாயப் பணிகளில் அக்கறையுடன் பணியாற்றுவீர்கள். உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் வருமானம் பெருகும். நிலம் தொடர்பான விவகாரங்களில் பொறுமைதேவைப்படும்.
வணங்க வேண்டிய தெய்வம்: தெட்சிணாமூர்த்தி
பரிகார பாடல்
கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை
ஆறங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்.

——————————————————————————

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1
40/100; + ஓரளவு வருமானம், – வேண்டாத பிரச்னை

லட்சியத்தில் உறுதியுடன் செயல்படும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் ராகு, 7ல் கேது, 10ல் சனி என்ற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ.7) வரை மீனத்தில் பிரவேசிக்கிறார்.
புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் குழப்பமான மனநிலை ஏற்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களின் உதவி சரியான தருணத்தில் கிடைக்கும். இளைய சகோதரர்கள் உறுதுணையாக நடந்துகொள்வர். வீடு, வாகன வகையில் தவிர்க்க இயலாத சில மாற்றங்களை செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தாய்வழி உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். புத்திரர்கள் கவனக்குறைவாக நடந்துகொள்வர். அவர்களிடம் இதமான கண்டிப்பு காட்டுவது அவசியம். பூர்வீக சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு ஓரளவு நன்மை உண்டு.
இஷ்ட, குலதெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியைத் தரும். உடல்நலத்தில் கூடுதல் அக்கறை தேவை. ஊட்டம் தரும் உணவு வகைகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுவது அவசியம். பணவரவு சுமாராக இருக்கும். வழக்கு, விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட பொறுமை காக்க வேண்டும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
நண்பர்களிடம் அளவுக்கு அதிகமான பணம் கொடுப்பது, வாங்குவது கூடாது. பிறருக்காக முன்ஜாமீன் போன்ற எந்த பொறுப்பும் ஏற்கக்கூடாது. இதனால் வேண்டாத பிரச்னைகள் உருவாகும். உங்கள் பேச்சில் கடுமை அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசுவது நல்லது. சமூகத்தில் இருக்கும் நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டாத விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வெளிநாடு வேலை வாய்ப்பில் எதிர் பார்த்த வகையில் நல்ல பலன்கள் உண்டாகும். சிலருக்கு வீடு, தொழில் மாற்றம் தவிர்க்க இயலாது.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் அக்கறையுடன் செயல்படுவதால் மட்டுமே எதிர் பார்த்த லாபத்தை அடைய முடியும். ஜவுளி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பர்னிச்சர், கட்டுமான பொருட்கள், விவசாயக் கருவிகள், காகிதம், வாகனம், இரும்பு, பிளாஸ்டிக், டெக்ஸ்டைல்ஸ், எண்ணெய் ஆலை அதிபர்கள், கல்வி, நிதி நிறுவனம், அச்சகம், டிராவல் ஏஜென்சி, ரியல் எஸ்டேட், லாட்ஜ், ஓட்டல், ஆஸ்பத்திரி நடத்துவோர் உற்பத்தி மற்றும் தரத்தில் நேரடி கவனம் செலுத்த தவறினால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். லாபம் சுமாராகவே இருக்கும். மற்ற துறையினருக்கும் இதே நிலையே ஏற்படும். தொழில் சார்ந்த தடைகள் குருவின் அதிசார காலத்தில் பெருமளவில் சரியாகும். இக்காலகட்டத்தில் தொழிலில் புதிய நுட்பங்களை மேற்கொண்டு லாபத்தை க்ஷபெருக்குவீர்கள்.
வியாபாரிகள்: நகை, வாகன உதிரிபாகங்கள், கட்டுமான பொருட்கள், ஸ்டேஷனரி, பலசரக்கு, எண்ணெய் வித்துக்கள், நவீன பர்னிச்சர், ஜவுளி, தோல் பொருட்கள், ரப்பர், பிளாஸ்டிக், இனிப்பு பண்டங்கள், மலர், காய்கனி, வாசனை திரவியம் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்பவர்கள் லாப விகிதத்தைக் குறைத்துக் கொண்டு, இனிய அணுகு முறையை பின்பற்றினால் மட்டுமே வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். மற்றவர்கள் கூடுதல் மூலதனத்திற்காக கடன் வாங்க நேரிடும். மிகுந்த கவனமாக செயல்படுவது நல்லது. பணியாளர்களுடன் கனிவுடன் பேசி அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் சிரமம் எதுவும் அணுகாமல் தவிர்க்கலாம். பதவிஉயர்வு, கடன் மற்றும் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழிற்சாலை, கல்வி நிறுவனம், மருத்துவம், உணவு பண்டங்கள் தயாரிப்பு சார்ந்த துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. நட்புறவிலும் நிதானமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனத்துடன் பணிபுரிவதால் மட்டுமே பிரச்னையிலிருந்து தப்பலாம். சலுகைகளை பெறுவதில் தாமதம் உண்டாகும். குடும்ப பெண்கள் கணவரின் விருப்பத்தை அறிந்து செயல்படுவது நல்லது. இல்லாவிட்டால் வேண்டாத சண்டை, சச்சரவு உருவாகும். நகைகளை பாதுகாப்பதில் கவனம் தேவை. இரவல் நகை கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. தந்தை வழி உறவினர் உதவி செய்வர். சுயதொழில் புரியும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரும்.பொருட்களை எப்போதும் ரொக்கத்திற்கு விற்பனை செய்வதால் நிதிநிலையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
மாணவர்கள்: வணிகவியல், வங்கியியல், ஆடிட்டிங், தகவல் தொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மருத்துவம், கேட்டரிங், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, இதழியல், சட்டத்துறை மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும். மற்ற துறை மாணவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். சக மாணவர்களின் உதவி கல்வி வளர்ச்சிக்கு உதவும். செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது எதிர்கால நலனுக்கு உகந்தது. படிப்பை முடித்தவர் களுக்கு சற்று சிரமத்தின் பேரில் வேலை கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் நல்ல முறையில் சேவை செய்தாலும் உங்களை குறைசொல்வதற்கென்று சிலர் வருவர்.ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெற பணம் அதிகமாக செலவாகும். வழக்கு விவகாரங்கள் தொல்லை கொடுக்கும். எதிரிகளால் பிரச்னைகள் உருவாகி மறையும். புத்திரர்களை அரசியல் பணிக்கு அளவோடு பயன்படுத்துவது நல்லது. குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் நற்பலன் உண்டாகும். அரசியலோடு தொழில் புரிபவர்கள் நிதானமான அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது.
விவசாயிகள்: விவசாயிகள் அளவான மகசூல் பெறுவர். கால்நடை வளர்ப்பில் ஓரளவு வருமானம் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னைகளில் சுமூக தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் : முருகன்
பரிகார பாடல்
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
யாவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றிஅன்னாள்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கை வேல் போற்றி! போற்றி!!

———————————————————————————–

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-மகரம்

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
55/100; + ஆன்மிக யோகம், – பதவி உயர்வில் தாமதம்

நேர்மையோடு பொருள் தேடும் மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 12ல் ராகு, 6ல் கேது, 9ல் சனி என்ற வகையில் கிரக அமர்வு உள்ளது.
குருபகவான் அதிசார கதியாக மீனராசியில் சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ. 7) வரை பிரவேசம் செய்கிறார்.
மனதிலும் செயலிலும் சுறுசுறுப்பு அதிகரிக்கும். லட்சியங்களை அடைய முயற்சியுடன் பாடுபடுவீர்கள். பேச்சில் இனிமையும் சாந்தமும் கலந்திருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பம் உருவாகும். சகோதர, சகோதரிகளுக்கு மங்கல நிகழ்ச்சிகளை நடத்தி பெருமை அடைவீர்கள். விருந்தினர்கள் வருகையால் கலகலப்பு உண்டாகும். உற்றார், உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். நீண்டநாளாக நிறைவேற்ற இயலாத நேர்த்திக்கடன்களை பூர்த்தி செய்து விடுவீர்கள். இஷ்ட தெய்வ பிரார்த்தனை நிறைவேறும். சிலருக்கு ஆன்மிக சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். வீடு, வாகன வகையில் அத்தியாவசிய மாற்றங்கள் தவிர வேறு மாற்றங்களை செய்வது செலவுக்கு வழிவகுக்கும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனமும் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல் உருவாகி மறையும். பூர்வீக சொத்தில் கிடைக்கும் வருமானம் பெருகும். புத்திரர்கள் படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் பெறுவர்.
கடன் வழக்குகளில் இருந்த தொந்தரவு குறையும். அதிர்ஷ்டவசமாக ஆபரணம், பணம் கிடைக்கும் யோகம் உண்டு. உடல்நலம் சிறப்பாக அமையும். தம்பதியரிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடு மறைந்து பாச பந்தத்துடன் நடந்துகொள்வர். நண்பர்கள் உதவுவதும், உதவி பெறுவதுமான நற்பலன் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களை கேட்டுப் பெறுவதற்கு உகந்த காலம் இது. தொழில் சார்ந்த வகையில் கூடுதல் உழைப்பினால் தேவையான வளர்ச்சி நிலையை எட்ட முடியும். வெளிநாட்டு வேலை வாய்ப்பில் அனுகூலம் உண்டு.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சியும், அதிக லாபமும் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், டெக்ஸ்டைல்ஸ், கட்டுமான பொருட்கள், காகிதம், தோல், பிளாஸ்டிக், தண்ணீர், பெயிண்ட் உற்பத்தி செய்பவர்கள், ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், ரியல் எஸ்டேட், பால்பண்ணை, அரிசி ஆலை அதிபர்கள் புதிய யுக்திகளை கடைபிடித்து ஓரளவு லாபம் அடைவர். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட திருப்தியான லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு இருக்கும். தொழிலில் இருந்த போட்டி பெருமளவு குறையும்.
வியாபாரிகள்: வாகன உதிரிபாகங்கள், கட்டுமான பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி, நகை, பலசரக்கு, பால் பொருட்கள், மீன், அழகு சாதன பொருட்கள், பாத்திர வியாபாரிகள், பிளாஸ்டிக், வாசனை திரவியங்கள், பெயின்ட், பர்னிச்சர் விற்பனை செய்பவர் களுக்கு போட்டி ஓரளவுக்கு குறையும். லாபம் சுமாராக இருக்கும். உற்சாகமாக செயல் படுவதால் மட்டுமே விற்பனை சரிவை ஈடுகட்ட இயலும். மற்ற துறை வியாபாரிகளுக்கும் ஓரளவுக்கே விற்பனை இருக்கும். பிறருக்காக எந்த விதத்திலும் பொறுப்பேற்பதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் சிறு அளவிலான குளறுபடிகளை சந்திக்க நேரிடும். திறமைமிக்க சக பணியாளர் களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு, இடமாற்றம், பதவி உயர்வு, கடன் உதவி கிடைக்க தாமதமாகும். பணியிடங் களில் அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது பிரச்னைகளை பெருமளவில் குறைக்க உதவும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியிடங்களில் கவனக் குறைவு காரணமாக பிரச்னைக்கு ஆளாவர். அலுவலக சூழ்நிலை அறிந்து செயல்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். குடும்பப் பெண்கள் கணவருடன் இணக்கமாக இருப்பர். வீட்டுச்செலவுக்கு ஓரளவுக்கே பணம் கிடைக்கும். சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனமும்கடின உழைப்பும் மேற்கொள்ள நேரிடும். பணவரவு அன்றாடச் செலவுக்கு போதுமானதாக இருக்கும்.
மாணவர்கள்: மருத்துவம், இதழியல், கேட்டரிங், வங்கியியல், மரைன், ஏரோநாட்டிக்கல், விளம்பர மாடலிங், கம்ப்யூட்டர், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், ஓட்டல் மேனேஜ்மென்ட், விவசாயம், ஆட்டோமொபைல், பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்களும் ஓரளவு நன்றாகவே படிப்பர். படிப்புக்குத் தேவையான செலவுக்கு தடங்கல் ஏற்படலாம். சக மாணவர்களின் உதவி உறுதுணையாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
அரசியல்வாதிகள்: புதிய ஆதரவாளர் களின் வருகையால் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்பாடுகளைக் கண்டு எதிரிகள் தாமாகவே விலகிச்செல்வர். புத்திரர்களின் உதவி தக்க சமயத்தில் கைகொடுக்கும். வழக்கு விவகாரங்கள் அனுகூலமாக முடியும் வாய்ப்பு குறைவு. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் புதிய மாற்றங்களை உருவாக்குவர். குருவின் அதிசார காலத்தில் பதவியில் உள்ளவர்கள் அதிக பொறுப்புடன் செயல்படுவது நன்மை தரும்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு சாகுபடி செலவுக்கு தட்டுப்பாடு இருக்காது. மகசூல் சுமாராக இருக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவே லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் இழுத்தடிக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் : லட்சுமி
பரிகார பாடல்
உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே!
உலகமெல்லாம் காத்துநிற்கும் தேவி மகாலட்சுமியே!
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்ட லட்சுமியே! நிலையான
அருள் செல்வம் அருள்பவளே!
உன் பாதம் சரணடைந்தோம் நமல் தருவாய் அம்மா!

———————————————————————————–

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-கும்பம்

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3
60/100; + தாயின் ஆதரவு, – கடன் வாங்கும் நிலை

நல்லவர்களுக்கு துணை நிற்கும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 11ல் ராகு, 5ல் கேது, 8ல் சனி என்ற வகையில் கிரக அமர்வு உள்ளது. குருபகவான் அதிசார கதியாக சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ. 7) வரை மீன ராசியில் பிரவேசம் செய்கிறார். அஷ்டம சனியால் அனுபவிக்கும் சிரம பலன்கள் குறையும். பேச்சில் கனிவு அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். வீடு, வாகன வகையில் தேவையான மாற்றங்களை செய்து மகிழலாம். தாயின் அன்பும், ஆசியும் பூரணமாக கிடைக்கும். புத்திரர்கள் படிப்பில் முன்னேறி சாதித்துக்காட்டுவர். சொத்து தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் ஒப்படைக்கக்கூடாது.
உடல்நலம் பேணுவதில் மிகுந்த அக்கறை தேவை. அலைச்சலால் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். பணவரவு சுமாராக இருக்கும். முக்கிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கடன்வாங்க நேரிடும். கடினமான பணிகளில் ஈடுபடுபவர்கள் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது. மலைப்பிரதேசங்கள், ஆழமான நீர்நிலைகளில் மிகுந்த கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களுடன் நெருக்கம் அதிகமாகும். இளம் வயதினருக்கு வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் திருமண முயற்சிகள் கைகூடுவதற்கான குருபலன் சிறப்பாக உள்ளது. தொழில் சார்ந்த வகையில் இருந்துவந்த தடை நீங்கி சீரான முன்னேற்றமும் வருவாயும் பெறுவீர்கள். நீண்டகால நிலுவைப்பணம் அதிர்ஷ்டவசமாக வந்து சேரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பில் நல்ல அனுகூலம் உண்டு.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, திருமண மண்டபம், ஓட்டல், லாட்ஜ், நிதி நிறுவனம் நடத்துபவர்கள், வாகனம், டெக்ஸ்டைல்ஸ், தோல், காகிதம், பிளாஸ்டிக், இரும்பு, தண்ணீர், இரும்பு சார்ந்த தொழில் செய்வோர் ஓரளவு லாபம் பெறுவர். பிற தொழில் செய்பவர்களுக்கு இவர்களை விட சற்று அதிக லாபம் கிடைக்கலாம். மறைமுக போட்டிகள் குறையும். பணியாளர்களை திருப்திப்படுத்த கூடுதல் செலவு உண்டாகும். நண்பர்கள் தொழில்நுட்ப உதவியினை மனமுவந்து செய்வர். வெளிநாட்டு ஆர்டர்எடுத்து தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளியூர், வெளிமாநில பணியில் உள்ளவர்களுக்கு பிரச்னைகள் குறையும். பணவரவில் முன்னேற்றம் தெரியும்.
வியாபாரிகள்: ஆட்டோமொபைல், கட்டுமானப் பொருட்கள், விவசாய விளைபொருட்கள், ரப்பர், ஸ்டீல் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மலைத் தோட்டப் பயிர், ஜவுளி, பழங்கள், இனிப்பு பொருட்கள், பர்னிச்சர், புத்தகம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், வாகன உதிரிப்பாகங்கள், இறைச்சி, பாத்திரம், எண்ணெய், காலணி வியாபாரிகள் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே லாபம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஓரளவு லாபம் உண்டு. சரக்கு கொள்முதல் நடத்த புதிய நிறுவனங் களின் ஆதரவு கிடைக்கும். சரக்கு வாகனங்களால் பராமரிப்பு செலவு கூடும். பணியாளர்கள் ஒத்துழைப்பு குறைவு காரணமாக சிலர் புதியவர்களை அதிக சம்பளத்துக்கு தேட நேரிடும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மிக கவனமாக செயல்படாவிட்டால் குளறுபடி ஏற்பட்டு, பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் உங்கள் திறமை வெளிப்படும். இதனால் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். நிர்வாகத்திடம் புதிய சலுகைகளை பெற்று மகிழ்வீர்கள். சக பணியாளர்களிடம் இருக்கும் மனவருத்தத்தைப் பெரிதுபடுத்தக் கூடாது. கொதிகலன், நெருப்பு சார்ந்த தொழில், எலக்ட்ரிக்கல், கனரக இயந்திரங்கள் ஆகிய பணியில் உள்ளவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பணியிடத்தில் நிலவும் சூழ்நிலை சற்று சிரமமாக இருக்கும். சிலருக்கு வேண்டாத இடமாற்றமும், ஒழுங்கு நடவடிக்கையும் போன்ற அனுபவங்களையும் சந்திக்கலாம். குடும்பப் பெண்கள் செலவுக்காகத் திண்டாடினாலும், கணவரின் ஆதரவு காரணமாக நிம்மதியான மனநிலையைப் பெறுவர். கர்ப்பிணி பெண்கள் உடல்நலப்பாதுகாப்பில் சீரான அக்கறை அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் ஆண்டின் முற்பகுதியில் சிறப்பான வியாபாரமும், தாராள பணவரவும் கிடைக்கப் பெறுவர். தொழில் காரணமாக நீண்டதூர பிரயாணம் செல்ல நேரிடும். புத்திரர்களால் குடும்பத்தில் குதூகலத்தைக் காண்பீர்கள்.
மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், ரசாயனம், பவுதிகம், சிவில், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜினியரிங், சட்டம், ஜர்னலிசம், வங்கியியல், மார்க்கெட்டிங், நிதிமேலாண்மை, கேட்டரிங், கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு படிப்பு சுமாராக இருக்கும். மற்றவர்களும் மந்தநிலை காரணமாக படிப்பில் பின்தங்கலாம். மிகுந்த கவனம் கொண்டால் மட்டுமே தேற முடியும். படிப்புக்கான செலவுக்கும் சற்று சிரமம் உண்டாகும். சக மாணவர்களின் உதவியும் கிடைக்காது. வேலை வாய்ப்பு பெற எண்ணுபவர்களுக்கு அனுகூலமான நிலை உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற புகழ், அந்தஸ்தை பாதுகாக்க அதிகப்படியான முயற்சி தேவை. அரசியல் பணியில் புத்திரர்களை பயன்படுத்த வேண்டாம். வழக்கு, விவகாரத்தில் சாதகமான சூழ்நிலை உண்டு. எதிரிகள் விலகிச்செல்வர். ஆதரவாளர்களுக்காக பணச்செலவு அதிகரிக்கும்.
விவசாயிகள்: விவசாயப்பணி சீரடைந்து மகசூல் அதிகரிக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டு. கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு உண்டாகும்.
வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகார பாடல்:
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரணில்லை
விரை குழவும் மலர்ப்பொழில் சூழ் வித்துவ கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே!

—————————————————————————————————-

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-மீனம்

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி
45/100; + சகோதரர்களின் உதவி, – ஆடம்பர நாட்டம்

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 4ல் கேது, 7ல் சனி, 10ல் ராகு என்ற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக ராசியில் சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ. 7) வரை பிரவேசம் செய்கிறார்.
உயர்வு, தாழ்வு என்ற பெருத்த மாற்றமின்றி இந்த ஆண்டு சீராக அமையும். நல்ல எண்ணங்களை செயல்படுத்த தகுதியான நபர்களின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் இருக்கும் வசதிகளையே முறையாக பயன்படுத்துவது போதுமானது. தாயின் உடல்நலத்திற்காக அதிக பணம் செலவாகும். பிள்ளைகள் நல்லவிதமாக நடந்து பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். பூர்வீக சொத்தில் கிடைக்கும் வருமானம் உயரும். உடல்நலம் சுமாராக இருக்கும். வயிறு தொடர்பான நோய் உண்டாவதற்கான கிரகச்சூழல் உள்ளது. பணவரவு எதிர்பார்த்த அளவு இராது. கடன் வாங்கவும்,
ஆடம்பரத்தில் நாட்டம் செலுத்தவும் இடம் உண்டு. தம்பதியரிடம் இருந்த கருத்துவேற்றுமை நீங்கி குடும்பத்தில் சுமூக சூழல் உருவாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களின் ஆலோசனை வளமான வாழ்விற்கு வழிகாட்டும். தொழில் சார்ந்த வகையில் சில குழப்பங்களை சந்திப்பீர்கள். சகோதரர்களின் உதவியால் சில முன்னேற்ற பலன்கள் உண்டு. வெளிநாட்டு வேலை வாய்ப்பில் குறைந்த அளவே பயன் உண்டு. குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் புதிய சிந்தனைகள் உருவாகும்.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் மந்தமான சூழ்நிலை இருக்கும். சிலர் தொழிலை மாற்ற வேண்டிய நிலை உண்டாகும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், இரும்பு, டெக்ஸ்டைல், தோல், பிளாஸ்டிக், தண்ணீர், விவசாய கருவிகள், கட்டுமான பொருட்கள், வாகனம் சார்ந்த தொழில் செய்பவர்கள், ஆட்டோமொபைல், மருத்துவமனை, விவசாய இடுபொருட்கள், அச்சகம் சார்ந்த தொழில் செய்பவர்கள் புதிய சீர்திருத்தங்களை செயல்படுத்தி கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு அதிக லாபத்துக்கு இடமில்லை. பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக கிடைக்கும். நிர்வாகச் செலவு சற்று அதிகரிக்கும்.
வியாபாரிகள்: நகை, காகிதம், ஸ்டேஷனரி, தானியம், எண்ணெய், அழகு சாதன பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக், ரப்பர் பொருட் கள், ஜவுளி, தோல், அலங்கார பொருட்கள், கட்டுமான பொருட்கள், கடல்சார் பொருட்கள், விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்பவர்கள் சுமாரான வியாபாரமும் அதற்கேற்ற லாபமும் பெறுவர். மற்றவர்கள் போட்டி குறைவு காரணமாக தற்போதைய விற்பனையைத் தக்கவைத்துக் கொள்ளலாம். சரக்கு வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகமாகும். அளவான கொள்முதலில் சீராக வியாபாரத்தை வைத்துக்கொள்வது நன்மை தரும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் ஏற்படும் குளறுபடிகளை மிகுந்த கவனத்துடன் தவிர்த்திட முயலவேண்டும். இல்லாவிட்டால் வேண்டாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சலுகைகளைஅவ்வளவு
எளிதில் பெற இயலாது. வேலைப்பளு முன்னைவிட அதிகரிக்கும். சிலர் வேண்டாத வாக்குவாதத்திலும் ஈடுபடுவர். குடும்ப செலவுகளுக்காக திண்டாட நேரிடும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம். பள்ளி, கல்லூரி, மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுபவர்கள் நிர்வாகத்தின் கண்டிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். சுயதொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் அவசரம் காட்டுதல் கூடாது.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேலைப்பளு காரணமாக கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். தற்போதைய சலுகைக்கு மேல் எதையும் எதிர்பார்க்க இயலாது. குடும்பப் பெண்கள் சிக்கனமாக செயல்பட்டு செலவைக் கட்டுக்குள் வைத்திருப்பர். தாய்வழி உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். மனதில் குழப்பமும் கவலையும் ஏற்பட்டாலும் கணவரின் ஆதரவு மனதிற்கு அமைதியைத் தரும். கர்ப்பப்பை தொடர்பான மருத்துவ சிகிச்சை சிலருக்கு தேவைப்படும் கிரகசூழ்நிலை உள்ளது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவர். தோழியரின் உதவியைகுருவின்அதிசாரகாலத்தில்பெறுவீர்கள்.
மாணவர்கள்: ஆசிரியர் பயிற்சி, வங்கியியல், பிசினஸ் மேனேஜ்மென்ட், ஓட்டல் மேனேஜ்மென்ட், ஜர்னலிசம், ஆடிட்டிங், நிதிநிர்வாகம், விவசாயம், சட்டம், மரைன், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் அக்கறையும் ஆர்வமும் கொண்டால் மட்டுமே இலக்கை எட்டமுடியும். மற்ற துறை மாணவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். ஆசிரியரின் உதவி தக்க தருணத்தில் கைகொடுக்கும்.
அரசியல்வாதிகள்: அரசியல் பணியில் இருந்த ஆர்வம் சற்று குறையும். முக்கிய ஆதரவாளர்களின் நட்பை இழக்க நேரிடும். எதிரிகள் தொந்தரவு கொடுப்பர். வேண்டாத வாக்குவாதங்களில்ஈடுபடாமல் பொறுமையுடன் இருப்பது எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது. புத்திரர்கள் சரியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு உதவுவர். அரசியலோடு தொழில் செய்பவர்கள் ஓரளவு லாபம் ஈட்டுவர்.
விவசாயிகள்: விவசாயப் பணிகளுக்காக கூடுதல் செலவு, உழைப்பு தேவைப்படும். மகசூல் சுமாராக இருக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு ஆதாயம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்க காத்திருக்க வேண்டியிருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்: ராமர்
பரிகார பாடல்:
கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போரபோரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தஸ்ரீ
ராம ராம ராம ராம ராம எனும் நாமமே!

One response

  1. romba nall inaiya thalam. ungal sevai melum thodara enadu valththukal. tamilil type panni ungaluku reply pannuvadu eppadi?

%d bloggers like this: