Daily Archives: ஏப்ரல் 17th, 2010

விளையாட்டல்ல… சூதாட்டம்! -IPL CRICKET

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தைக் காட்டிலும் மேலதிகமான பணம் படைத்த அமைப்பாக இருக்கிறது. அதனால்தான் மத்திய அமைச்சர் சரத் பவார் அந்த வாரியத்தின் தலைவர் பதவியை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எதிர்ப்புகளை முறியடித்துக் கைப்பற்றினார். அப்போதே இந்திய கிரிக்கெட் வெறும் விளையாட்டு என்பதை மீறி, வேறு தளங்களுக்குத் தாவிவிட்டது.இப்போது மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், ஐபிஎல் போட்டியில் கொச்சி அணிக்கான ஏலத்தில் தலையிட்டார் என்பதும், இதில் ரூ.70 கோடி அளவுக்கான பங்குகளை, அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறப்படும், சுனந்தா புஷ்கர் என்ற பெண்மணிக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்தார் என்பதும் ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வலம் வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் தலையீடு இருக்கிறது என்பதையும், ஐபிஎல் போட்டிகளில் அரசியல்வாதிகள் இன்னும் பலபேர் இடம்பெற்றிருக்கக்கூடும் என்பதையும் இது உறுதிப்படுத்தி இருக்கிறது.சசி தரூர் தன் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் மறுத்துப் பேசியிருப்பதும், இது குறித்து விசாரித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் அறிவித்திருப்பதும், அமைச்சர் சசி தரூரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்திருப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் ஆகிய இவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் கேட்க வேண்டியதாக இருக்கிறது. இப்போது, ஐபிஎல் டிவென்டி20 விளையாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாபம் கிடைப்பதால், இதில் அரசியல்வாதிகள் தற்போது பினாமி பெயர்களில் நுழைவது ஆச்சரியமளிக்கவில்லை. இவர்கள் வெளிப்படையாகத் தகராறைத் தொடங்கியது ஏன் என்பதில்தான் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.சசி தரூர் தன் காதலிக்கு இலவசமாக கொச்சி அணியிலிருந்து 18 சதவீதம் பங்கு வாங்கிக் கொடுத்துள்ளதாகப் புகார் எழுப்பியுள்ள, ஐபிஎல் கமிஷனர் லலித் மோடிக்கு, உண்மையிலேயே யார் உரிமையாளர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் என்றால் இதை ஏலம் எடுப்பதற்கு முன்பாகவே உறுதி செய்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.கொச்சி அணி ஏலம் எடுக்கப்படும் நாள் திடீரென தள்ளிவைக்கப்பட்டது ஏன் என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஏலம் மார்ச் 21-ம் தேதி நடைபெற்றாலும் அதற்கான ஒப்பந்தம் ஏறக்குறைய 20 நாள்கள் கழித்து, ஏப்ரல் 10-ம் தேதிதான் கையெழுத்தாகியுள்ளது.சாதாரண ஏலக்கேட்பு நிகழ்ச்சி அல்லது டெண்டரில்கூட குறைந்தபட்ச டேவணித் தொகை செலுத்தவும், தங்களது முகவரி, வருமான வரி செலுத்திய ஆதாரங்கள், தங்களுக்குள்ள சொத்து மதிப்பின் விவரம் எல்லாவற்றையும் படிவத்தில் குறிப்பிட்டு ஆக வேண்டும். பினாமியாகவே இருந்தாலும்கூட அவரது பெயர், முகவரி இடம்பெற்றாக வேண்டும். இவை எதையுமே சரிபார்க்காமல், ஏலம் நடத்தி, ஏலத்தில் பங்கேற்றவருடன் ஒப்பந்தமும் போட்டுவிட்டு, இப்போது இந்த பிரச்னையைக் கிளப்புவது ஏன்? ஏலக் கேட்பு ஆவணங்கள் கொடுத்தவர்களுக்கும்கூட உரிமையாளர்கள் யார் என்று தெரியாது என்று இப்போது நல்லபிள்ளையாகப் பேசுவது ஏன்?ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள் யார்யார் என்ற நிருபர்கள் கேள்விக்கு மோடி இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஏலத்திலிருந்து விலகிக்கொண்டால் ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டுக்கு 50 மில்லியன் டாலர் பணம் தருவதாக லலித் மோடி பேரம் பேசினார் என்று ரெண்டஸ்வஸ் செயல் அலுவலர் சைலேந்திர கெய்க்வாட் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை மோடி மறுத்துள்ளார்.ஐபிஎல் போட்டிக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுப்பதே நாகரிகமான செயலாக இல்லை. கிரேக்க அரசில் அடிமைகளை விலை கூவுவதுபோல, வீரர்களை ஏலத்தில் எடுப்பதே அந்த விளையாட்டின் தரத்தைக் குறைத்து வியாபாரமாக்கியது. இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக விளையாட்டுத் தேதிகளை தள்ளி வைக்காமல், தென்ஆப்ரிக்காவில் ஐபில் போட்டிகளை நடத்தியபோதும், இவர்கள் பணத்தில்தான் குறியாக இருக்கிறார்கள், இவர்களுக்கு விளையாட்டைவிடப் பணம் தான் முக்கியம் என்பதும் அப்பட்டமானது. அந்த நேரத்திலாவது இந்திய அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.ஆனால் வழக்கம்போல இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததால், அரசின் தலையீடு அல்லது கண்காணிப்பு எதுவுமே இல்லாமல் விருப்பம் போல செயல்பட்டு வந்தார்கள். உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆட்டத்துக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கின்ற ஒன்றை மட்டுமே முதலீடாக வைத்து, எந்த உழைப்பும் இல்லாமலேயே ஒரு கூட்டம் மிக எளிதாக, பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்கும் என்றால் அதை இந்திய அரசு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் என்றால்… இதன் பின்னணியில் என்னென்ன ரகசியங்கள் இருக்கின்றனவோ!ஐபிஎல் நடத்தும் டிவென்ட்டி20 ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. இதை நடத்துகிற, ஏலத்தில் பங்கேற்கும் அமைப்புகள், கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே பயன் கிடைக்கிறது. கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தப் பயனும் இல்லாத நிலையில் இதை ஏன் தொடர்ந்து நடத்த வேண்டும்?சசி தரூர் மீதான புகாரை விசாரிப்பது மட்டுமன்றி, ஐபிஎல் போட்டியில் இதுவரை ஏலம் எடுத்த அமைப்புகளின் பங்குதாரர் அனைவரது விவரங்களையும் வெளியிடுவதோடு, இவர்களது லாபக் கணக்குகளையும் வருமான வரி மற்றும் தணிக்கைத் துறைக்கு உட்படுத்துவதாக நடவடிக்கை அமைய வேண்டும். இப்பிரச்னை எழுந்தவுடன் வருமான வரித் துறையினர் ஐபிஎல் அலுவலகத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆனால் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. கிரிக்கெட் ஆட்டம் சூதாட்டமாக மாறிவிட்டது. முன்பு அதன் பெயர் பெட்டிங். இப்போது ஐபிஎல்! லாட்டரி டிக்கெட்டை ஒழித்து விட்டோம், சூதாட்டத்தை மக்கள் நலன் கருதித் தடை செய்து விட்டோம் என்று கூறும் அரசு, இந்த சூதாட்டக் கொள்கைக்குத் தடை விதிக்கத் தயங்குவதேன்? ஆட்சியாளர்களுக்கும் பங்கு போகிறதா என்ன?

நன்றி- தினமணி

காட்டுத் தீ!

வனத் துறை அலுவலர்களை அதிகம் பயமுறுத்துவது `காட்டுத் தீ’தான். காடுகளில் மரங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதாலும், உதிர்ந்த இலைகள் பெரும் அடுக்காகக் காணபடுவதாலும் தீ வேகமாக பரவி விடுகிறது. அதுவே பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. காட்டுத் தீ ஏற்படும்போது எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும் பலியாகி விடுகின்றன. மதிப்புமிக்க வனவளம் இழக்கபடுகிறது.

காட்டுத் தீக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில இயற்கை யானவை. சில, மனிதர்களால் ஏற்படுபவை.
இயற்கைக் காரணங்கள்:

மின்னல், எரிமலைச் சீற்றம், மிகவும் வறண்ட கோடைக் காலம் அல்லது வெப்ப அலைகள் காட்டுத் தீயை ஏற்படுத்தலாம். கோடை காலத்தில், மரக் கிளைகள் உரசிக்கொள்ளும் சாதாரண நிகழ்வு கூட காட்டுத் தீக்கு வித்திட்டு விடலாம்.
மனிதனால் ஏற்படுபவை:

பெரும்பாலான காட்டுத் தீ விபத்துகளுக்குக் காரணம் மனிதர்கள்தான். காட்டு பகுதியில் சுற்றுலா செல்பவர்களும், தற்காலிகமாக முகாம் அமைத்துத் தங்கு பவர்களும் தீயைச் சரியாக அணைக்காமல் விட்டு விடலாம். யாரோ ஒருவர் அணைக்காமல் விட்டெறியும் சிகரெட் துண்டும் காட்டுத் தீக்குக் காரணமாகிவிடலாம்.

இந்தியாவில், மரங்களில் இருந்து நல்ல சாகுபடியை பெற கிராமத்தினரும் மலைவாசி மக்களும் மரங்களுக்கு அடியில் உள்ள செடிகளுக்குத் தீ வைப்பது வழக்கம். சில கிராமபுறத்தினர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் `மாகுவா’ விதைகளைச் சேகரிக்கின்றனர். எளிதாக விதைகளைச் சேகரிப்பதற்காக அவர்கள் மரங்களுக்கு அடியில் உள்ள பரப்பில் தீ வைத்துவிடுகிறார்கள். அந்தத் தீ பல சமயங்களில் எளிதாக பக்கத்தில் உள்ள காட்டுக்கு பரவி விடுகிறது. அப்போது எழும் பெரும் புகையானது காற்றை மாசுபடுத்துவதுடன், மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.

காடுகளுக்கு அருகே வசிக்கும் பெரும்பாலான மக்கள் காடுகளில் இருந்து கிடைக்கும் பழங்கள், முலிகைகள், விறகுகளையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக் கின்றனர். காட்டுத் தீ அவர்களின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.   காட்டுத் தீயைத் தடுப்பது எப்படி?

காட்டுத் தீயை அணைப்பதற்கும், அது மேலும் பரவாமல் தடுப்பதற்கும் தீயணைப்பு வீரர்கள் பல சிறப்பு உத்திகளை பயன்படுத்துகின்றனர். தீயை ஒரு குறிபிட்ட பகுதிக்குள் கட்டுபடுத்தும் வகையில் வனத் துறையினர் `தீ தடுப்புக் கோடுகளை’ உருவாக்குகின்றனர். அகன்ற பாதைகளாக மரங்கள், தாவரங்கள் அகற்றபடுகின்றன. குறிப்பாக கோடை காலத்துக்கு முன் இப்பணியில் கவனம் செலுத்தபடுகிறது. அப்போது காட்டில் நெருப்பு பற்றிக் கொண்டாலும் தீ தடுப்புக் கோட்டைத் தாண்டாது.

காட்டு பகுதியில் ரோந்து செல்லும் வனக் காவலர்கள் எங்காவது நெருப்பு அல்லது புகை தென்படுகிறதா என்று பார்க்கிறார்கள், அவ்வாறு எதுவும் காணப்பட்டால் உடனடியாக எச்சரிக்கை விடுக்கிறார்கள். அதன் முலம் தீ ஆரம்பகட்டத்திலேயே தடுக்கபடுகிறது.

காட்டுத் தீ எரியும் பகுதிக்கு அருகில் உள்ள மரங்களை வனக் காவலர்கள் வெட்டுவதும் உண்டு. அதன் முலம் தீ பரவுவது தடை செய்யபடுகிறது.

காட்டுக்குள் தீயணைப்பு வண்டிகளைக் கொண்டு செல்வது கடினம் என்பதால், சில வேளைகளில் ஹெலிகாப்டர் முலம் தீ தடுப்பு வேதிபொருட்களும், தண்ணீ ரும் கொட்ட படுகின்றன. தீயை அணைப்பதுடன் வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆட்களின் பணி முடிந்துவிடுவதில்லை. ஆங்காங்கே நெருப்புக் கங்கு எதுவும் எஞ்சியிருக் கிறதா என்று ஆய்வு செய்து அவற்றை முற்றிலுமாக அணைக்கிறார்கள்.

வேர்டு வரியில் இரண்டு அலைன்மென்ட்

வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கை யில் வரிகள் அல்லது பாராக்களை இடது, வலது, இருபக்கமும் அல்லது நடுவாக என அலைன்மெண்ட் செய்து கொள்ளலாம். ஒரு வரியை இடதுபக்கமாக அலைன்மெண்ட் செய்தால் அப்படியே தான் இருக்கும். அந்த வரியில் சில சொற்களை வலது ஓரமாக நகர்த்தி வைக்க வேண்டுமென்றால் சில சொற்களை டைப் அடித்தபின்னர் எந்த சொற்கள் வலது ஓரமாக இருக்க வேண்டுமோ, அவற்றை டைப் அடித்துப் பின் முதல் தொகுதி சொற்களுக்குப் பின்னர் ஸ்பேஸ் பார் மூலம் கர்சரை நகர்த்தி நகர்த்தி காலி ஸ்பேஸ் ஏற்படுத்தி, இரண்டாவது தொகுதி சொற்களை நகர்த்தி வரியின் முனைக்குக் கொண்டு செல்வீர்கள். குறிப்பாக லெட்டர் பேட் போன்று தயாரிக்கும் போது பெயரினை இடதுபுற அலைன்மெண்ட்டிலும் வீடு முகவரியினை வலதுபுற அலைன்மெண்ட்டிலும் வேண்டுமென்றால் இது போல்தான் செயல்படுவீர்கள். இது தேவைக்குச் சரி என்றாலும் பின்னர் எடிட் செய்திடுகையில் இட குழப்பத்தை ஏற்படுத்தி சரியான முறையில் வரியை உருவாக்காது. இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. முதலில் வரியின் முதல் பாதியில் இருக்க வேண்டிய சொற்களை டைப் அடித்து அப்படியே இடதுபுற அலைன்மெண்ட்டில் விட்டுவிடுங்கள். இனி அடுத்து வலது புறமாக அலைன்மெண்ட் செய்ய வேண்டிய சொற்களுக்கு வருவோம். இப்போது வரியின் வலது மூலையில் டேப் ஒன்றை உருவாக்குங்கள். இதற்கு நெட்டுவாக்கிலான ரூலர் உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் இருக்க வேண்டும். இதனைக் கொண்டு வர Viewமெனு சென்று Ruler என்பதைக் கிளிக் செய்திடவும். ரூலர் கிடைத்தவுடன் அதன் வலது ஓரமாகச் சென்று மவுஸால் கிளிக் செய்தால் டேப் ஒன்று கிடைக்கும். இதனை வலது இன்டெண்ட் டேப் ஆக வைத்திட வேண்டும். டேப் அடையாளம் கிடைத்தவுடன் அதன் மீது கிளிக் செய்தால் Tab என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் Alignment என்ற பிரிவில் லெப்ட் , சென்டர் , ரைட் ,டெசிமல் மற்றும் பார் என்ற பிரிவுகள் சிறிய வட்டங்களுடன் கிடைக்கும். இதில் ரைட் என்பதில் கர்சரால் புள்ளி ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் வரியின் வலது ஓரத்தில் ஏற்படுத்திய டேப் வலது இன்டென்ட் டேப்பாக மாறி இருக்கும். இதே போன்று டேப் ஒன்றினை வரியின் இடது மூலையில் காணலாம். இது எந்த வகையான டேப்கள் நமக்குக் கிடைக்கும் எனக் காட்டுகிறது. இது ரைட் டேப் அடையாளமாகக் கிடைக்கும் வரை இதில் கிளிக் செய்திடவும். இனி முதலில் இடது அலைன்மெண்ட்டில் இருக்கவேண்டிய சொற்களை டைப் செய்த பின்னர் டேப்பைத் தட்டவும். பின் அடிக்கும் சொற்கள் அனைத்தும் வலதுபக்க அலைன்மெண்ட்டில் அமைவதனைக் காணலாம்.

பொய்யை மறைப்பது எப்படி?

பொய் பேசும்போது கண்சிமிட்டல் அதிகரிக்கிறது. குரலில் இருக்கும் மாற்றங்கள், கண்மணி விரிவடைதல் போன்ற தடயங்கள் பொய்யர்களை அடையாளம் காட்டும்.

பொய் சொல்வதில் உள்ள சிக்கல், நமது ஆழ்மனம் தன்னிச்சையாகவும், பொய் வார்த்தைகளுக்கு எதிராகவும் செயல்படுவதால் நமது உடல்மொழி காட்டிக் கொடுத்து விடுகிறது. இதனால் தான் அரிதாக பொய் சொல்பவர்கள் எவ்வளவு நம்பும்படியாக சொன்னாலும் பிடிபட்டு விடுகிறார்கள். அவர்கள் சொல்ல ஆரம்பித்த உடனேயே அவர்களது உடல் முரண்பாடான சைகைகளை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை என்பது தெரிகிறது.

பொய் கூறும்போது அவர்களது ஆழ்மனம் அனுப்பும் நரம்பு சக்தி ஒரு சைகையாக வெளிப்பட்டு வாய் வார்த்தைகளோடு முரண்படுகிறது. அரசியல்வாதிகள், வக்கீல்கள், நடிகர்கள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் போன்ற தொழிலில் உள்ளவர்கள் பொய் பேசும்போது தங்கள் உடல் அசைவுகளை நன்கு பயன்படுத்துவதால் அவர்கள் கூறும் பொய்யைக் கண்டறிவது கடினம்.

புன்னகை பொய் சொல்வதற்கான அடையாளம் என்று பெரும்பாலானவர்கள் நினைப்பதால், அவர்கள் தாங்கள் பொய் சொல்வதைக் குறைத்து விடுகிறார்கள். ஒரு உண்மையான புன்னகையை விட, பொய்யான புன்னகை வேகமாக வெளிபடுகிறது. நீண்ட நேரம் நீடிக்கிறது. பொய் பேசுபவன் புன்னகைக்கும் போது, முகமுடி அணிந்ததை போல் தோன்றுகிறது. ஒரு பொய்யான புன்னகை முகத்தின் ஒரு பக்கத்தை விட மறுபக்கத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. முளையின் இரண்டு பக்கங்களுமே புன்னகையை உண்மையாக்க முயல்வதால், இப்படி ஏற்படுகிறது. முகபாவங்களை கையாளும் பகுதி முளையின் வலது பக்கத்தில் இருப்பதால், உடலின் இடது பக்கத்திற்கே தகவல்களை அனுப்புகிறது. இதனால் முகத்தின் வலது பக்கத்தை விட இடது பக்கத்தில் தான் பொய்யான உணர்வுகள் அதிகமாக வெளிப்படுகின்றன. உண்மையான முகத்தின் இரண்டு பக்கங்களையும் கட்டுபடுத்துகின்றன.

பொய் பேசுபவர்கள் பொதுவாக, சில வெளிப்படையான சைகைகளை வெளிபடுத்து கின்றனர். அவை,

வாயை முடுவது

பொய்யான வார்த்தைகளை அழுத்தி விடும்படி ஆழ்மனம் கட்டளையிடுவதால் வாயை கை முடுகிறது. சில சமயம் சில விரல்கள் அல்லது முஷ்டியால் இறுக்க முடுவதன் முலம் வாயை மறைக்கலாம். ஆனால், அர்த்தம் ஒன்றுதான். இப்படி வாயை முடும் சைகையை மறைக்க சிலர் பொய்யாக இருமுவார்கள். யாராவது பேசும்போது இப்படி செய்தால் அவர்கள் பொய் சொல்லலாம். நீங்கள் பேசும்போது அவர் தன் வாயை முடிக் கொண்டால் நீங்கள் எதையோ மறைப்பதாக அவர் நினைப்பதாக அர்த்தம்.

வாயை முடுவதை உதடுகளின் மேல் சுட்டு விரலை வைத்து `உஷ்’ என்பது போலும் செய்யலாம். இப்படி செய்பவரின் அம்மாவோ, அப்பாவோ அடிக்கடி இப்படி செய்திருக்கலாம். தான் நினை ப்பதை கூற வேண்டாம் என்று அவர் தனக்குத் தானே கட்டளையிட இப்படி செய்யலாம். உள்ளே மறைத்ததை வெளியே காட்டுவதற்காகவே இப்படி செய்கிறார்கள். உங்கள் பெற்றோரோ அல்லது ஆசிரியரோ நீங்கள் குழந்தையாக இருக்கும் போது இவ்வாறு செய்திருப்பார்கள்.

காலரை இழுப்பது

பொய் கூறுவதால், முகம் மற்றும் கழுத்தின் கீழுள்ள திசுக்களில் குறுகுறுவென்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. அப்போது, தேய்க்கும் போதோ அல்லது சொறியும்போதோ தான் அதைத் திருப்தி செய்ய முடியும். இதனால் தான் நிச்சயமற்ற நிலையில் உள்ளவர்கள் கழுத்தை சொறிவார்கள். இதனால், பொய் சொல்பவர்கள், தங்களை பிறர் கண்டுபிடித்து விட்டார்கள் என்று சந்தேகிக்கும்போது காலரை இழுக்கிறார்கள். ஏமாற்றுவதால், ரத்த அழுத்தம் அதிகமாவது, கழுத்தில் வியர்ப்பது போன்றவற்றின் முலம் அவர் பொய் சொல்வது உங்களுக்கு தெரிந்து விடும்.
காட்டிக் கொடுக்கும் சைகைகள்

பொய் சொல்பவர்கள் தங்கள் முக்கிய உடல் சைகைகளை வேண்டுமென்றே கட்டுபடுத்தி விட்டாலும், பல சிறிய அசைவுகள் அதையும் மீறி வெளிபட்டு விடும். முக தசை சுருக்கம், கண்மணி சுருங்கி விடுதல், வியர்த்தல், கன்னம் சிவத்தல், கண்ணைத் தேய்ப்பது, நிமிடத்திற்கு பத்து முறை கண்சிமிட்டுவது 50 முறை கண்சிமிட்டுவதாக அதிகரிப்பு, முக்கைத் தொடுவது போன்ற சில சிறு சைகைகள் பொய்யை வெளிபடுத்தி விடும். இந்த சிறிய அசைவுகள் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தோன்றி மறையலாம். நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் விற்பனை பிரதிநிதிகள், மிகவும் நுட்பமானவர்களால் மட்டுமே இவற்றை உணரமுடியும்.

வீடுகளுக்கு `ஏ.சி.’ தேவையில்லை

வீடுகளுக்கு இனி ஏ.சி. வசதி செய்ய வேண்டாம். வெயிலுக்கும், குளிருக்கும் ஏற்ப வீட்டை இதமாக வைத்திருக்கும் கூரைத் தளஓடுகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

அமெரிக்க ஆய்வாளர்கள் தளஓடுகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். பெரிய ஓட்டல்கள், ரெஸ்டாரன்டுகளில் வீணாகும் எண்ணெய் கழிவுகளைப் பயன்படுத்தி புதிய தளஓடுகள் தயாரிக்கப்பட்டன. அவை வெயில் காலத்தில் சூரிய ஒளியை எதிரொளித்து வீட்டுக்குள் குளிர்ச்சியை பரப்புகிறது. அதேபோல் குளிர் நடுங்க வைக்கும் காலங்களில் குளிரை கிரகித்துக் கொண்டு வீட்டுக்குள் வெதுவெதுப்பான சூழலை பரப்புகிறது.

இதனால் வீடு எப்போதும் வசந்த மாளிகையாகவே இருக்கும். “இந்த கூரை ஓடுகள் அமைக்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் வாழ்வில்புதுமையை உணர்வார்கள். வீட்டுக்குள் நிலவும் இதமான சூழல் அவர்களுக்கு `எனர்ஜி டானிக்`காக இருக்கும்” என்கிறார்கள் நவீன கூரை ஓடு வடிவமைப்பாளர்கள்.

பணம் காய்ச்சி மரம்…

பணம் காய்க்கும் மரம் பார்த்து இருக் கிறீர்களா?

மரங்கள் காய்த்து குலுங்கி வருமானம் தருவது இயற்கை. மரங்கள் முலமாக மின்சாரமும், பெட்ரோலும் தயாரித்து விற்க முடிந்தால்… அது விஞ்ஞான அதிசயம்.

ஆம், அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். இவர்கள் அரச இலை போன்ற தோற்றமுடைய செயற்கை இலையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த இலைகள் சூரியஒளியை ஈர்த்து பச்சையம் தயாரிக்காது. மாறாக சூரிய ஒளியை மின்ஆற்றலாக மாற்றி சேமிக்கிறது. அதேபோல வேர்கள் உறிஞ்சும் தண்ணீரை ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றிவிடுகிறது. இயற்கையான ஒளிச்சேர்க்கையிலும் பங்கேற்கிறது.

எதிர்காலத்தில் ஏற்படும் மின்தேவை மற்றும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் சிறந்த வழியாக இந்த இலைகள் அமையும் என்று தெரிகிறது.

இந்த மாற்றங்களை ஏற்படுத்தி செடிகள், மரங்களில் இலைகளை வளர்க்கும்போது, நீங்கள் வளர்க்கும் மரம், `பணம் காய்ச்சி’ மரம்தானே!

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலும் உள்ளொளியாக இருந்து பிரகாசிக்கிறது. அந்த ஆற்றலை அவரவர் சூழ்நிலை, சக்தி, அறிவு போன்ற அம்சங்களுக்கேற்ப, அவரவர் மட்டுமே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் தங்கள் இயல்பான திறமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். திறமையை மதிப்பிடும் போது நமக்குள் இருக்கும் ஆசைகள் மற்றும் கனவுகளையும் திறமை தான் என்று அதனுடன் சேர்த்துவிடக் கூடாது.

உதாரணமாக, சர்க்கஸ், சினிமா, நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்க்கும் போது, அதில் வரும் கதாநாயகர்களை போல நாமும் செய்து பார்க்க ஆசைபடுவதுண்டு. இந்த மாதிரி ஆசைபடும் ஒரு சிலர் வேண்டுமானால், பிற்காலத்தில் சினிமா நட்சத்திரங்களாகலாம். அல்லது சர்க்கஸ் வீரர்களாகலாம். அல்லது சந்தர்ப்பமும், சுயமுயற்சியும் சேர்ந்து அவர்கள் விரும்பும் எதிர்காலம் அமைய உதவுகிறது. ஆனால், சினிமா நடிகர்களாக வரவேண்டும் என ஆசைபடும் அனைவருக்குமே எதிர்காலத்தில் அவர்கள் ஆசை நிறைவேறுவது இல்லை. காரணம், நடிப்புத்திறமை அவர்களுக்கு இயல்பான ஆற்றலாக இல்லாமல் இருப்பது தான் காரணம்.

இதே போல் பல துறைகளிலும் நமது ஆசையும் கனவும் விரிந்து பரந்திருந்தாலும், எதிர்காலத்தில் அவரவர் திறமை, ஆற்றலுக்கு ஏற்பதான் அவை நிறைவேறும். அதனால், நமது திறமையை மதிப்பிடும்போது அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பொறியியல் துறையில் மாணவன் அடிப்படை பயிற்சிகளை பெற்று வருகிறான். உண்மையில் அவனுக்கு அதில் ஆர்வம் இருந்தால், அந்த ஆர்வம் பயிற்சியின் போதே தெளிவாகத் தெரிந்துவிடும். ஒரு துறையில் சிறிதும் ஆர்வமில்லாதவர்களுக்கு அந்த துறையானது, அவர்கள் வேலைசெய்யும் போதே, தெரிந்து விடும். அவர்களுக்கு அந்த வேலை பெரிய சுமையாகத் தோன்றும்.

குறிப்பாக, எந்த துறையில் நமக்கு நீடித்த ஆர்வமும், உற்சாகமும் தொடர்ந்து இருக்கிறதோ அதில் தான் நமது திறமை உள்ளது என்பதை உணர்ந்து அந்த வழியில் முயற்சி செய்ய வேண்டும். திறமைக்கான தேடல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் இருக்க வேண்டும். அதுவே வாழ்நாள் முழுவதும் நீடித்து விடக்கூடாது. திறமையை கண்டுபிடித்தவுடன் அதை வளர்ப்பது எப்படி என்பது குறித்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இரண்டு முறையான பயிற்சிகளின் முலம் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். அவற்றில் ஒன்று நேரடிபயிற்சி முறை. மற்றொன்று சுயமுயற்சி. நேரடிபயிற்சி முறைபடி கற்க வசதி மற்றும் வாய்ப்புகள் இல்லாதவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளலாம். `சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’, `கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்’ போன்ற பழமொழிகள் பயிற்சியின் அடிப்படையை நமக்குக் கற்றுத்தருகிறது. விடாபிடியாகத் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடும்போது எவருக்கும் எந்தக்கலையிலும் தானாகவே சரியான பயிற்சி கிடைத்துவிடும் என்பதே பழமொழிகள் உணர்த்தும் உண்மை. குறிப்பாக, கலைத்துறையினருக்கு இது பொருத்தமாக இருக்கும். சரியான வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், முறையான முயற்சியிருப்பின் பயிற்சி உங்களுக்கு எளிமையாகவே இருக்கும்.

வீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர்

இந்தியர் சாதனை புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.

ரத்தப் பரிசோதனை முலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர்.

அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (என்.இ.எச்.யு) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும்.

கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ருபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார்.

`இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.