காட்டுத் தீ!

வனத் துறை அலுவலர்களை அதிகம் பயமுறுத்துவது `காட்டுத் தீ’தான். காடுகளில் மரங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதாலும், உதிர்ந்த இலைகள் பெரும் அடுக்காகக் காணபடுவதாலும் தீ வேகமாக பரவி விடுகிறது. அதுவே பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. காட்டுத் தீ ஏற்படும்போது எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும் பலியாகி விடுகின்றன. மதிப்புமிக்க வனவளம் இழக்கபடுகிறது.

காட்டுத் தீக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில இயற்கை யானவை. சில, மனிதர்களால் ஏற்படுபவை.
இயற்கைக் காரணங்கள்:

மின்னல், எரிமலைச் சீற்றம், மிகவும் வறண்ட கோடைக் காலம் அல்லது வெப்ப அலைகள் காட்டுத் தீயை ஏற்படுத்தலாம். கோடை காலத்தில், மரக் கிளைகள் உரசிக்கொள்ளும் சாதாரண நிகழ்வு கூட காட்டுத் தீக்கு வித்திட்டு விடலாம்.
மனிதனால் ஏற்படுபவை:

பெரும்பாலான காட்டுத் தீ விபத்துகளுக்குக் காரணம் மனிதர்கள்தான். காட்டு பகுதியில் சுற்றுலா செல்பவர்களும், தற்காலிகமாக முகாம் அமைத்துத் தங்கு பவர்களும் தீயைச் சரியாக அணைக்காமல் விட்டு விடலாம். யாரோ ஒருவர் அணைக்காமல் விட்டெறியும் சிகரெட் துண்டும் காட்டுத் தீக்குக் காரணமாகிவிடலாம்.

இந்தியாவில், மரங்களில் இருந்து நல்ல சாகுபடியை பெற கிராமத்தினரும் மலைவாசி மக்களும் மரங்களுக்கு அடியில் உள்ள செடிகளுக்குத் தீ வைப்பது வழக்கம். சில கிராமபுறத்தினர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் `மாகுவா’ விதைகளைச் சேகரிக்கின்றனர். எளிதாக விதைகளைச் சேகரிப்பதற்காக அவர்கள் மரங்களுக்கு அடியில் உள்ள பரப்பில் தீ வைத்துவிடுகிறார்கள். அந்தத் தீ பல சமயங்களில் எளிதாக பக்கத்தில் உள்ள காட்டுக்கு பரவி விடுகிறது. அப்போது எழும் பெரும் புகையானது காற்றை மாசுபடுத்துவதுடன், மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.

காடுகளுக்கு அருகே வசிக்கும் பெரும்பாலான மக்கள் காடுகளில் இருந்து கிடைக்கும் பழங்கள், முலிகைகள், விறகுகளையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக் கின்றனர். காட்டுத் தீ அவர்களின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.   காட்டுத் தீயைத் தடுப்பது எப்படி?

காட்டுத் தீயை அணைப்பதற்கும், அது மேலும் பரவாமல் தடுப்பதற்கும் தீயணைப்பு வீரர்கள் பல சிறப்பு உத்திகளை பயன்படுத்துகின்றனர். தீயை ஒரு குறிபிட்ட பகுதிக்குள் கட்டுபடுத்தும் வகையில் வனத் துறையினர் `தீ தடுப்புக் கோடுகளை’ உருவாக்குகின்றனர். அகன்ற பாதைகளாக மரங்கள், தாவரங்கள் அகற்றபடுகின்றன. குறிப்பாக கோடை காலத்துக்கு முன் இப்பணியில் கவனம் செலுத்தபடுகிறது. அப்போது காட்டில் நெருப்பு பற்றிக் கொண்டாலும் தீ தடுப்புக் கோட்டைத் தாண்டாது.

காட்டு பகுதியில் ரோந்து செல்லும் வனக் காவலர்கள் எங்காவது நெருப்பு அல்லது புகை தென்படுகிறதா என்று பார்க்கிறார்கள், அவ்வாறு எதுவும் காணப்பட்டால் உடனடியாக எச்சரிக்கை விடுக்கிறார்கள். அதன் முலம் தீ ஆரம்பகட்டத்திலேயே தடுக்கபடுகிறது.

காட்டுத் தீ எரியும் பகுதிக்கு அருகில் உள்ள மரங்களை வனக் காவலர்கள் வெட்டுவதும் உண்டு. அதன் முலம் தீ பரவுவது தடை செய்யபடுகிறது.

காட்டுக்குள் தீயணைப்பு வண்டிகளைக் கொண்டு செல்வது கடினம் என்பதால், சில வேளைகளில் ஹெலிகாப்டர் முலம் தீ தடுப்பு வேதிபொருட்களும், தண்ணீ ரும் கொட்ட படுகின்றன. தீயை அணைப்பதுடன் வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆட்களின் பணி முடிந்துவிடுவதில்லை. ஆங்காங்கே நெருப்புக் கங்கு எதுவும் எஞ்சியிருக் கிறதா என்று ஆய்வு செய்து அவற்றை முற்றிலுமாக அணைக்கிறார்கள்.

%d bloggers like this: