வீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர்

இந்தியர் சாதனை புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.

ரத்தப் பரிசோதனை முலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர்.

அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (என்.இ.எச்.யு) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும்.

கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ருபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார்.

`இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: