கடல் உணவு பிரியர்களே…

கடலில் இருந்து கிடைக் கும் பலவகை மீன்கள், நத்தை- நண்டு வகைகள், சில தாவரங்களை உணவாக உட்கொள்கிறோம். இவற்றில் பல்வேறு சத்துக்கள் நிரம்பி இருப்பது உண்மைதான். ஆனாலும் அவற்றில் ஒருவித நச்சுப் பொருள் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நத்தை வகைகள் மற்றும் பிளாங்டான் தாவரத்தில் நரம்புமண்டலத்தை தாக்கும் நச்சுப் பொருள் இருக்கிறது. இந்த வகை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அம்னீசியா மற்றும் `ஷார்ட் டைம் மெமரி லாஸ்’ போன்ற ஞாபக மறதி வியாதிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அவை நிரந்தர பாதிப்பாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.

கடல் வாழ் தாவரமான பிளாங்டான், கார்பனை உறிஞ்சுவதன் முலம் புவி வெப்பமாதலுக்கு எதிராக உதவும் என்று நம்பி அதை வளர்ப்பதை ஊக்குவித்து வருகிறோம். அதில் இந்த நச்சுப்பொருள் இருப்பதால் வேறுவிதமான விளைவுகள் ஏற்படும் என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

%d bloggers like this: