விரல் போனால் கவலை இல்லை : செயற்கை விரல்களால் அசத்தலாம்

விரல்களை இழந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக, மிகச் சிறிய மோட்டார்கள் மூலம் இயங்கும் புதிய செயற்கை விரல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், வழக்கமான வேலைகளைக் கூட, சிரமம் இல்லாமல் செய்ய முடியும்.விரல்களை இழந்த எரிக் ஜோன்ஸ் என்பவர், கையில் செயற்கை விரல்களைப் பொருத்தி, எல்லாரையும் போல, வேலை செய்கிறார். இந்த விரல் களை, ஸ்காட்லாண்டு நாட்டைச் சேர்ந்த, ‘டச்பயோனிக்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த செயற்கை விரல்களுக்கு, ‘ப்ரோ டிஜிட்ஸ்’ என்று பெயர். மணிக்கட்டில் இந்த செயற்கை கை பொருத்தப்படும். ஒவ்வொரு விரலின் அடிப்பகுதியிலும், சிறிய மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். செயற்கைக் கையின் உள்ளங்கையில், ‘சிப்’கள் பொருத்தப்பட்டிருக்கும்.மணிக்கட்டுப் பகுதியில் உள்ள நரம்புகளின் இயக்கம், உள்ளங்கையில் உள்ள சிப்களில் பதிவாகும். அந்த சிப்கள், மோட்டார்களை இயக்கும். கைவிரல்களை விரிப்பது, மூடுவது, ஒருபொருளை இறுகவோ, லேசாகவோ பற்றுவது போன்ற செயல்கள், இந்த, ‘சிப்’ மற்றும் மோட்டார்கள் மூலம் நடக்கும். இதன் மூலம், இயற்கையான விரல்களைப் போலவே செயலாற்ற முடியும்.

இந்த, ‘ப்ரோடிஜிட்ஸ்’ கருவி, வியாபார ரீதியாக, கடந்த டிசம்பரில் அறிமுகமானது. இப்போது உலகம் முழுவதும் 60 பேருக்கு இக்கருவி பொருத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சிலர் இதை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.ஒரு கருவியின் விலை 28 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 36 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: