Advertisements

Daily Archives: ஏப்ரல் 19th, 2010

ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள்

அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் வாங்குவதற்கு அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்ற நிலையில், இலவசமாக அனைத்தும் தரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டவை ஓப்பன் சோர்ஸ் இயக்கம். இந்த வகையில் உருவாக்கப்படும் புரோகிராம்கள் பெரும்பாலும் இலவசமாகவே நமக்குக் கிடைக்கின்றன என்பதனை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். எடுத்துக்காட்டாக ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு.
ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களின் சிறப்பு அவை இலவசம் என்பது மட்டுமல்ல. எந்தவிதக் கட்டுப்பாடும் அற்றவைகளாக இந்த புரோகிராம்கள் மக்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்தினையே ஓப்பன் சோர்ஸ் கொண்டுள்ளது.
விண்டோஸ் உருவாக்கப்படும் முன்னரே, ஓப்பன் சோர்ஸ் இயக்கம் அமைக்கப்பட்டது. இதற்கு அடி கோலியவர் ரிச்சார்ட் ஸ்டால்மேன் (Richard Stallman) ஜி. என்.யு. (GNU) என இதனை அழைத்தார். (காண்க: www.gnu.org). சாப்ட்வேர் ஒன்றைப் பயன்படுத்து பவருக்கு அடிப்படையில் நான்கு வழிகளில் சுதந்திரம் இருக்க வேண்டும் என எண்ணினார். எந்த காரியத்திற்கும் அந்த புரோகிராமினை பயன்படுத்த, எப்படி அது செயல்படுகிறது என்பதனை அறிய, யாருடனும் அதனைப் பகிர்ந்து கொள்ள மற்றும் அதில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்ள என நான்கு வகையான அடிப்படை சுதந்திரம் இருக்க வேண்டும் என இலக்கு வைத்தார்.
இந்த ஓப்பன் சோர்ஸ் இயக்கத்தின் ஒரு சிறப்பான திருப்பம் லினக்ஸ் என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவானதாகும். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த லினஸ் டோர்வால்ட்ஸ், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பினைத் தானே உருவாக்கினார். இது விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான அடிப்படையைத் தந்தது. ஜி.என்.யு. திட்டத்தில் ஏற்கனவே உருவான சாப்ட்வேர் தொகுப்புடன், டோர்வால்ட்ஸ் உருவாக்கிய கெர்னல் அமைப்பினை இணைத்து உருவாக்கப்பட்டதுதான் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். பயன்படுத்துபவர்கள் தங்களின் தேவைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வகையில் இது உருவாக்கப் பட்டதனால், கம்ப்யூட்டர் உலகில் அனைவரின் கவனத்தையும் இது கவர்ந்தது. அதனாலேயே இன்று லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல நிறுவனங்களால், அவர்களின் நோக்கங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இவற்றை தனிப் பதிப்புகள் என்று அழைக்காமல் டிஸ்ட்ரிபியூஷன்ஸ் (Distributions) என அழைக்கின்றனர்.
ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்றவற்றை நாம் ஏன் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்? என்ற வினாவிற்கு, நமக்குக் கிடைக்கும் முதல் பதில், அவை முற்றிலும் இலவசம் என்பதுவே. மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற தொகுப்பிற்கு முற்றிலும் இணையாக ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு இலவசமாகக் கிடைக்கிறது. இதனால் பணம் மிச்சமாகிறது.
அடுத்ததாக, இந்த புரோகிராம்களைப் பயன்படுத்திப் பார்ப்பதனால், நம்முடைய புரோகிராம் அறிவு வளர்கிறது. ஒரு சாப்ட்வேர் எப்படி செயல்படுகிறது என்று அறிய, எந்த ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராமினையும் பார்த்து அறிந்து கொள்ளலாம். புரோகிராம் எழுதப்பட்ட குறியீடு வரிகளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். வர்த்தக நோக்கில் அமைக்கப்படும், எம்.எஸ். ஆபீஸ், விண்டோஸ், அடோப் பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்களுக்கு இந்த குறியீடு வரிகள், நாம் பணம் செலுத்தி வாங்கினாலும் கிடைக்காது.
சில வேளைகளில், வர்த்தக ரீதியாகக் கிடைக்கும் புரோகிராம்களைக் காட்டிலும் ஓப்பன் சோர்ஸ் முறையில் கிடைக்கும் புரோகிராம்கள் சிறப்பானவை என்று கருதப்படுகின்றன. எடுத்துக் காட்டாக மொஸில்லாவின் (www.mozilla.org) பயர்பாக்ஸ் பிரவுசர், இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் மற்றும் தி குரூப் இமேஜ் எடிட்டர் (www.gimp.com) போன்றவற்றைக் கூறலாம்.
லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் நமக்கு பல கூடுதல் பயன்கள் உண்டு. விண்டோஸ் போல இதனை ஹார்ட் டிஸ்க்கில் பதியவைத்துத்தான் இயக்க வேண்டும் என்பதில்லை. லினக்ஸ் சிஸ்டம் பதியப்பட்டு கிடைக்கும் சிடி ஒன்றை வாங்கி, சிடி ட்ரைவில் இருந்தவாறே இயக்கி, லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்தலாம். ஹார்ட் டிஸ்க்கில் பதிவதாக இருந்தாலும், விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா உள்ள ஹார்ட் டிஸ்க்கில், லினக்ஸை தனி டைரக்டரி யில் பதிந்து இயக்கலாம்.
ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் முழுமையாக இலவசம் என்றும் கூற முடியாது. சில வகை சிஸ்டங்களுக்கு நாம் கட்டணம் செலுத்தியாக வேண்டும். சிலவகை உதவிகள் உடனடியாகத் தேவைப்பட்டாலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒரு கட்டாய நிலைக்கு, யாரும் தள்ளப்பட்டதில்லை. ஏனென்றால் இந்த புரோகிராம்களைப் பயன்படுத்துவோருக்கென தனி அமைப்புகள் இணையத்தில் உள்ளன. இவற்றில் நம் சந்தேகங்களைக் கேட்டால் பதிலளிக்கப் பலர் உள்ளனர். மேலும் நமக்கு ஏற்பட்டது போன்ற பிரச்னைகள் ஏற்கனவே ஒருவருக்கு ஏற்பட்டு இந்த அமைப்புகளில் பதியப்பட்டிருந்தால், அவற்றைப் படித்து அறிந்து கொள்ள வாய்ப்புகள் தரப்பட்டிருக்கும். இது போன்ற கற்றுக் கொள்ளும் வசதிகள், ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன.
வர்த்தக ரீதியான புரோகிராம்களுக்கு இணையாக ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் செயல்பட்டாலும், அவற்றிற்கு மாற்றாக அனைத்து புரோகிராம்களும் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களும், பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட், லினக்ஸ் சிஸ்டம் போன்றவைகளும், இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் தங்களுக்கென இடம் பிடித்துள்ளதை மறுக்க முடியாது.

Advertisements

வேர்கடலையும் சில சந்தேகங்களும்!

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள். வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்’ என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப் பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது என்கிறீர்கள்.

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?

தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள். எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது. ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா?

ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுடன் அடிக்கடி பேசுங்கள்!

‘டிவி’ பார்த்து ‘லேங்வேஜ்’ கத்துக்கறா எம் பொண்ணு…’ என, பெருமையாகப் பேசுபவர்களா நீங்கள்? ‘டிவி’ பார்த்தால், மொழி பழகிடுமா? காண்பது அனைத்தையும் கற்கும்திறன் யாருக்கு அதிகரிக்கிறது? எல்லா கேள்விகளுக்கும் கீழே விடை:

குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி
குழந்தைகளின் மூளைத் திறனை வளர்க்க, கல்வி தொடர்பான ‘டிவிடி’ க்களை போட்டு அதன் முன், அவர்களை அமர்த்தும் பெற்றோரா? இதை கவனமாக படிங்க… இவ்வாறான மூளைத் திறன் மேம்பாட்டு திட்டங்களால், குழந்தைகளின் மொழி அறிவு வளர்ச்சியடையாது என, ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், கல்வி தொடர்பான ‘டிவிடி’க்களை பார்க்கும் குழந்தைகளை விட, மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை ‘டிவி’ போன்றவற்றை பார்க்க வைப்பதை விட, அவர்களுடன் பேசி மகிழலாம்.

குட்டித் தூக்கத்தால் மூளை ஸ்மார்ட்
பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுவதால், மூளை மற்றும் அதன் தகவல் கிரகிக்கும் திறன் ஆகியவை புத்துயிர் பெறுகிறது. இதுகுறித்த ஆய்வில், பிற்பகல் வே ளைகளில் குட்டித் தூக்கம் போடுபவர்களை விட, தூங்காதவர்களிடம் கற்றல் திறன் 10 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாபக திறன் தொடர்பான நடைமுறைகளில், தூக்கம் முக்கிய பங்கு வகிப்பது தான் இதற்கான காரணம். படித்த பின் தூங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; ஆனால், தூங்கி எழுந்த பின் ஒன்றை கற்றுக் கொண்டால், அது தொடர்பான தகவல்கள், மூளையில் எளிதாக பதியும்.

தாய்ப்பால் கொடுத்தால் தாய்-சேய் நலம் பராமரிக்கப்படும்
தாய்ப்பால் கொடுப்பதால், பெண்களுக்கு, வளர்ச்சிதை மாற்ற குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பது, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைவு என, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வில், கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட்ட பெண்கள், நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பதால், அவர்கள் பெருமளவில் பயனடைவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதோடு, வயிற்றில் கொழுப்பு சேர்வதும் குறையும்.

குண்டு குழந்தைகளா? உஷார்!
அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் கூடிய மூன்று வயது முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம், அதிகம் உள்ளதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், அதிக உடல் எடையுடன் காணப்படும் குழந்தைகளின் ரத்தத்தில்’வைட்டமின் சி’யை ஏற்றுக் கொள்ளாத புரதச்சத்து அதிக அளவு காணப்படுகிறது; இதனால், இதய நோய், ஞாபக மறதி போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயல்பான எடையுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் (ஒபிசிட்டி) காணப்படும் 40 சதவீதம் குழந்தைகளின் ரத்தத்தில் ‘வைட்டமின் சி’யை ஏற்றுக் கொள்ளாத புரதச்சத்து அதிக அளவு காணப்படுகிறது.

உயிர்ச்சத்து… வைட்டமின் A

வைட்டமின் என்ற வார்த்தையை பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை சாதாரணமாகபயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், அவர்களில் அதன் முக்கியத்துவத்தைஉணர்ந்தவர்கள் எத்தனை பேர்?

உடல் உயிரால் இயங்குகிறது என்றால், அந்த உயிர் வைட்டமின்களால்இயக்கப்படுகிறது எனலாம். எனவேதான் அதனை உயிர்ச்சத்து (Vitamin) என்றுமருத்துவ உலகம் மதிப்புடன் அழைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ளசத்துக்கள் நீரிலும், கொழுப்பிலும் கரைந்து, ரத்தத்தில் கலந்து நம்உயிருக்கு ஆதாரமாகின்றன. இவற்றைத்தான் வைட்டமின்கள் என்கிறோம். 1901ம்ஆண்டு பேராசிரியர் ஹப்கின்ஸ் என்பவர் உடலில் இத்தகைய உயிர்ச்சத்துக்கள்இருப்பதைக் கண்டுபிடித்தார்.

இவற்றில் பி மற்றும் சி வைட்டமின்கள் நீரில் கரையும் பண்புள்ளவை. ஏ, டி,இ, கே ஆகிய வைட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டவை. கடந்தஇதழில் வைட்டமின் ‘இ’ பற்றி விரிவாக அறிந்துகொண்டோம். இந்த இதழில்வைட்டமின் ‘ஏ’ குறித்து பார்ப்போம்.

நவீன மருத்துவத்தின் தந்தையாக கருதப்படும் ஹிப்போ கிரேட்ஸ் என்பவர்மாலைக்கண் நோயாளிகளுக்கு விலங்குகளின் கல்லீரலைக் கொடுத்து குணமாக்கிஉள்ளார். இதன் பின்னர்தான், விலங்குகளின் கல்லீரலில் வைட்டமின் ‘ஏ’ அதிகஅளவு இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் 1917ம் ஆண்டு மெக்கெல்லம் மற்றும் டேவிஸ் என்ற இருவரும்வெண்ணெயில் இருந்து எடுக்கப்படும் ஒருவித பொருளானது எலிகளின்வளர்ச்சியைத் தூண்டுவதாக கண்டறிந்தனர். இதற்கு ஸ்டன்பேக் என்பவர்கரோட்டினாய்ட்ஸ் என்று பெயரிட்டார். 1931 ம் ஆண்டு காரர் என்பவரால்வைட்டமின் ஏயின் மூலக்கூறுகள் கண்டறியப் பட்டன. 1937ம் ஆண்டு கான் மற்றும்மோரிஸ் என்ற இருவரும் வைட்டமின் ‘ஏ’-யை பிரித்தறிந்து நிறுவினர்.

வைட்டமின் ‘ஏ’ கீழ்க்காணும் நிலைகளில் காணப்படுகிறது

ரெட்டினல் (Retinal)

ரெட்டினால் (Retinol)

ரெடினோயிக் அமிலம் (Retionic acid)

பி கரோட்டின் (B-Carotene)

வைட்டமின் ‘ஏ’-யின் குணங்கள் என்ன? நம் உடலின் நலத்திற்கு எந்த வகையில் எல்லாம் உதவுகிறது?

· பார்வைக் குறைபாட்டைப் போக்கி கண் பார்வையை தெளிவுபடுத்தும்.

· மாலைக் கண் நோயைப் போக்கும் அல்லது வராமல் தடுக்கும்.

· வண்ணங்களைப் பிரித்தறிவதற்கு ‘ஏ’-வைட்டமின் உதவுகிறது.

· எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.

· இயல்பான உடல் வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ சத்து முக்கியமானது. இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.

· எபிதீலியல் செல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. உணவு மண்டலம் மற்றும்கழிவு நீக்க மண்டலத்தின் குழாய்களில் “மியூகஸ்” என்னும் சுரப்பிற்கு இந்தவைட்டமின் காரணமாகிறது.

· இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.

· கொழுப்புப் பொருட்களின் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.

· வைட்டமின் ‘ஏ’-ல் உள்ள கரோட்டினாய்டு என்ற பொருள் ஆக்ஸிஜன் ஏற்றத்தைத்தடுப்பதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் மற்றும் இதய நோய்போன்றவை தடுக்கப்படுகின்றன.

· தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது.

தினமும் உணவில் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட வைட்டமின் ‘ஏ’ ன் அளவு

பெரியவர்கள் ஆண்கள் – 600 mcg

பெரியவர்கள் பெண்கள் – 600 mcg

கர்ப்பிணிப் பெண்கள் – 600 mcg

பாலூட்டும் தாய்மார்கள் – 950 mcg

குழந்தைகளுக்கு 12 மாதம் வரை – 350 mcg

1 முதல் 6 வயது வரை – 400 mcg

7 முதல் 19 வயது வரை – 600 mcg

வைட்டமின் ‘ஏ’ சத்து மிகுந்துள்ள பொருட்கள்

ஈரல், முட்டையின் வெள்ளைக் கரு, பால், நெய், வெண்ணெய், மீன் போன்றவிலங்கின பொருட்களிலும், மஞ்சள் மற்றும் பச்சை நிற காய்கறிகள், பழங்கள்தக்காளி உள்ளிட்ட தாவரப் பொருட்களிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘ஏ’- எந்தப் பொருட்களில் எத்தனை சதவீதம் உள்ளது.

காரட் – 93 %

பிரகோலிட் இலை – 93 %

சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 79 %

வெண்ணெய் – 76 %

பசலிக்கீரை – 52 %

பரங்கிக்காய் – 41 %

முட்டை – 16 %

பப்பாளி – 6 %

மாம்பழம் -4 %

பட்டாணி – 4 %

வைட்டமின் ‘ஏ’ சத்து குறைந்தால்..

உலக அளவில் 2.5 முதல் 5 லட்சம் குழந்தைகள் வரை வைட்டமின் ‘ஏ’ சத்துக்குறைவினால் பாதிக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் வைட்டமின் ஏ சத்துக்குறைவால், பிறக்கும்போதே கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள்பிறப்பதாக மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வைட்டமின் ‘ஏ’ சத்து பற்றாக்குறைபிரச்சனை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா போன்றவளரும் நாடுகளில் இது தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது. உலக சுகாதாரநிறுவனம், வைட்டமின் ‘ஏ’ சத்துப் பற்றாக்குறையைப் போக்க வளரும்நாடுகளுக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்து வருகிறது. இதன் மூலம் 12லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.

வைட்டமின் ‘ஏ’ சத்து பற்றாக்குறையை தொடக்க நிலை பற்றாக்குறை மற்றும் இரண்டாம் நிலை பற்றாக்குறை என இரண்டு வகையாக பிரிக்கலாம்.

தொடக்க நிலை வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறை என்பது அந்த சத்து நிறைந்துள்ளமஞ்சள் மற்றும் பச்சை நிறக் காய்கறிகளை உட்கொள்ளாததால் ஏற்படுவதாகும்.

இரண்டாம் நிலைப் பற்றாக்குறை என்பது கருவில் குழந்தை வளரும்போதே போதியஊட்டச்சத்து கிடைக்காததால் ஏற்படுவது. மேலும் பித்த நீர் சுரப்பதிலும்வெளியேறுவதிலும் ஒழுங்கற்ற தன்மை, சிகரெட் புகை போன்றவற்றால் ஏற்படும்பிராண வாயு பற்றாக்குறை, கொழுப்புச் சத்தைக் குறைப்பதற்காகமேற்கொள்ளப்படும் உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலமாகவும் இந்த நிலைஏற்படுகிறது.

வைட்டமின் ‘ஏ’ சத்து கொழுப்பில் கரையக்கூடிய தன்மை கொண்டது என்பதால்,கொழுப்புச் சத்துக் குறையும்போது, உணவுப் பொருட்களில் இருந்துவைட்டமின் ‘ஏ’-யை உட்கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் குறைந்து விடுகிறது.வைட்டமின் ‘ஏ’, புரதம் மற்றும் பிராணவாயுவுடன் கலந்து, அவற்றை உடலின்அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு உலோகச்சத்து (துத்தநாகம்)அவசியம் தேவை என்பதால், அதில் பற்றாக்குறை ஏற்பட்டாலும் வைட்டமின் ‘ஏ’-யைஉள்வாங்கிக்கொள்ளும் செயல்பாட்டின் சமநிலையை சீர்குலைகிறது.

வைட்டமின் ‘ஏ’-யை உள்வாங்கும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் ஏற்படும்குறைபாடு, கண் பார்வையை மெல்ல மெல்ல பாதிக்கத் தொடங்கி விடுகிறது.நாளடைவில் மாலைக்கண் நோய் வரவும் வாய்ப்புள்ளது. கண்பார்வையில் ஏற்படும்பல்வேறு மாற்றங்கள், வைட்டமின் ‘ஏ’ குறைவினால் சருமத்தில் ஏற்படும்உலர்ந்த தன்மையை உணர்த்தும் அறிகுறிகளாகும்.

சத்து பற்றாக்குறை அதிகரிக்கும்போது கண்பார்வை முற்றிலும்பாதிக்கப்படுவதுடன், அளவுக்கு மீறிய உலர் தன்மையினால் சொறி, சிரங்கு, படைஉள்ளிட்ட பல்வேறு தோல் சம்பந்தமான நோய்களும் ஏற்பட வாய்ப்புண்டு.வைட்டமின் ‘ஏ’, கண்ணுக்கும் தோலுக்கும் காவலனாக செயல்படுகிறது என்பதேஉண்மை.

`கொசு டாக்டர்’

`கொசுக்கடி ஊசி போடுவதுபோல் இருக்கிறது’ என்று கொசுத் தொல்லையை குறிப்பிடுவார்கள். அது உண்மையாகப் போகிறது. ஆமாம், கொசுக்கள் டாக்டராகப் போகின்றன. கொசு முலம் மலேரியா தடுப்பு மருந்தை செலுத்தும் தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டுள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.

அனாபிலஸ் கொசுக்கள் முலம் மலேரியா காய்ச்சல் பரவுகிறது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் இறக்கிறார்கள். இதைத் தடுக்க கொசுக்களையே பயன்படுத்தலாம் என்பதுதான் விஞ்ஞானிகளின் நவீன கண்டுபிடிப்பு.

ஜப்பானின் ஜிச்சி மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். `லெய்ஸ்மேனியா’ என்ற தடுப்பு மருந்தை கொசுக்களின் உமிழ்நீரில் கலக்கும்படி செலுத்துகிறார்கள். கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது மருந்து உடலில் சேர்ந்துவிடும்.

மீண்டும் மீண்டும் இது நடைபெறும்போது ஒரு பைசா செலவில்லாமல் எளிதான முறையில் நோய் எதிர்ப்பு சக்தி கொசுக்கள் முலம் உலகம் முழுமைக்கும் பரவிவிடும். இனி கொசு(டாக்டர்) கடித்தால் நோய்கள் பரவாது. மாறாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கணவன்-மனைவி மோதல் நல்லதே..!

எந்த ஒரு உறவிற்கும் அடிப்படைத் தேவை நேர்மை தான். அதற்கு உங்கள் துணையிடம், `எப்போதும் நான் எதையும் மறைக்காமல் நேர்மையுடன் தைரியமாக செயலாற்றுபவர்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அப்போது தான் மனைவி, மக்களிடம் இருந்தும் நீங்கள், நம்பிக்கையை பெற முடியும்.

உங்கள் துணை உங்களிடம் உள்ள சிறுசிறு குறைகளை வெளிபடுத்தும் போது, அதை மறுக்காமல் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கு மாறாக கோபத்தை வெளிபடுத்தாதீர்கள். பதிலுக்கு அவர்களிடம் குறை கண்டுபிடிக்காதீர்கள். உதாரணமாக, காலதாமதம், நேர்த்தியாக உடை அணியாதது போன்ற சிறு சிறு குறைபாடுகளைக் கூட, அவர் உங்கள் நடத்தைகளில் கண்டிருக்கலாம்.

சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் ஏற்படும்போது இருதரப்பினருக்கும் பொதுவான வகையில் இருந்து நேர்மையுடன் பிரச்சினையை அணுகுங்கள். தேவையில்லாமல் யாருடைய மனதைம் புண்படும் படியான வார்த்தைகளை பேச வேண்டாம்.

உங்கள் துணையிடம் எந்த பிரச்சினையையும் மனம் விட்டு பேசி, பகிர்ந்து கொள் ளுங்கள். அப்போது தான், `உங்கள் ஆழமான நம்பிக்கையை தன் மீது வைத்திருக்கிறீர்கள்’ என்று அவர் சந்தோஷபடுவார். இதன் முலம் உங்கள் துணைடன் நீண்ட நாட்களுக்கு புரிதலுடன் கூடிய நல்லுறவை ஏற்படுத்தலாம்.

எப்போதும் சுதந்திரமாக இருந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். எந்த வேலையையும் செய்ய கட்டளையிடாதீர்கள். சுதந்திரமாகவும், அன்பாகவும் அந்த வேலையை எப்படி செய்யலாம் என்று வழிகாட்டுங்கள். இது உங்கள் நம்பிக்கையை எப்போதும் அவர் பெற உதவியாக இருக்கும்.

நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் துணைக்கு மிகவும் முக்கியமானவை. அதனால் பிரச்சினைகள் குறித்து பேசும்போது மிக கவனமுடன் வார்த்தைகளைக் கையாளுங்கள். அவை அறிவுபூர்வமாக இருக்கட்டும். அப்போது தான் உங்கள் துணைக்கும் உங்கள் மீது நல்ல ஒரு அபிராயம் ஏற்படும்.

முக்தி கிடைக்க… (ஆன்மிகம்)

தராசு முள் நேராக, ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத்துத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், தராசு முள் நேராக நிற்காமல், இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் ஆடிக் கொண்டிருக்கும். அது போல, மனம் ஒரே நிலையில் இருக்க, மனதின் அடித்தளத்தில் விருப்பு, வெறுப்பு இருக்கக் கூடாது. அதில் ஏற்றத் தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும்.
ஒரு தட்டில் ஆசைகள் அனைத்தையும் வைத்து, மற்றொரு தட்டில் பக்தி என்பதை வைத்துப் பார்த்தால், பக்தியே பளுவானது, வலுவானது என்று கூறினர். மற்ற விஷயங்களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை வைத்தால், அவனையே பிடித்து விடலாம். சரணடைந்தவர்களை அவன் உதறித் தள்ளுவதில்லை; கை தூக்கி விடுகிறான் என்று பெரியோர் சொல்லி இருக்கின்றனர். பக்தி செய்து சரணடைந்தால், பகவான் முக்தியளிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
நமக்கு இப்போது கிடைத்துள்ள மனிதப் பிறவி, புதிதாக, முதன் முதலாகக் கிடைத்ததல்ல; இதற்கு முன் எத்தனையோ பிறவி எடுத்தாகி விட்டது. இந்த ஆத்மா அழிவற்றது. அது மேலும், கீழும் போய் போய் வருகிறது.
இப்படியே போயும், வந்துமிருந்தால் எப்படி? இதற்கு முன் பிறவி என்னவென்று தெரியாது. உலகில் எத்தனையோ ஜீவராசிகள் அவைகளில் ஒன்றாகவும் இருந்திருக்கலாம்; அப்படிப்பட்ட இழிந்த பிறவி ஏற்பட்டதற்கும் கர்மா தான் காரணம் என்கின்றனர். கர்ம வினை தீர்ந்து புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், இன்னும் கொஞ்சம் உயர்ந்த ஜென்மா கிடைக்கிறது.
இப்படி புண்ணிய பலன் கூடுதலாக, கூடுதலாக, பட்சி, விலங்கு, பசு, மனிதன் என்று வரிசையாக பிறவி வரும். மனித ஜென்மாவில் கூட, எத்தனையோ மனித ஜென்மா எடுத்து புண்ணியம் சேர்ந்திருந்தால், மனித ஜென்மாவிலும் சுகபோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புண்ணிய காரியம் செய்வதற்கும் பிராப்தம் இருக்க வேண்டும்; அது இல்லாவிடில் மனம் அதில் ஈடுபடாமல், வேறு எதிலோ தான் ஈடுபடும்.
புண்ணிய காரியம் என்றால் தான – தர்மங்கள் என்பது மட்டுமல்ல… தெய்வ பக்தி, தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம் இவைகளுக்கும் புண்ணியம் உண்டு. இதையும் தவிர, மகான்கள் தரிசனம், பெரிய புண்ணியம் என்று சொல்லப்பட்டுள்ளது.
நாம் இப்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இதற்கு முன் ஜென்மாவில் நாம் மேற்கூறிய எதையாவது செய்திருக்கலாம்; மகா புருஷர்களை தரிசித்திருக்கலாம்; எல்லா காலங்களிலும் மகா புருஷர்கள் இருந்திருக்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒருவரை நாம் தரிசித்திருக்கலாம்; வணங்கி இருக்கலாம். அது நமக்கு தெரியா விட்டாலும் கூட, இப்போது கிடைத்துள்ள மனித ஜென்மாவையும், அனுபவிக்கும் சுகங்களையும் வைத்துப் பார்த்தால், இதற்கு முன் யாரையோ தரிசித்த புண்ணியம் தான் காரணம் என்று யூகிக்கலாம். அதே போல இந்த ஜென்மாவிலும் இப்போதுள்ள மகான்களையும் தரிசித்து வணங்கி விட்டால், தெய்வ பக்தி செய்து வந்தால், அடுத்த பிறவி இன்னும் சிறப்பாக இருக்கும்! பிறவியே இல்லை என்ற நிலைக்கு நாம் இப்போது பக்குவமாகவில்லை என்றே சொல்லலாம்.
உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு, சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம் பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்ற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும் என்கின்றனர். இப்போது அதன் எல்லைக்கோடு வரையிலாவது போக முடியுமா என்பது தான் கேள்வி.
இப்படி மகான்கள் தரிசனம், தெய்வ பக்தி இவைகளை விருத்தி செய்து கொண்டே போனால், எப்போதோ, எந்தக் காலத்திலோ பகவானோடு சேர்ந்து விடலாம் என்கின்றனர். முயற்சி செய்ய வேண்டும்; நம்பிக்கை இருக்க வேண்டும்.