Daily Archives: ஏப்ரல் 20th, 2010

குழந்தைகளுக்கு அஜீரணம்

குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு. முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.

சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.

மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :

1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.

2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.

ஆசனங்கள்

உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவ்வளவு ஆசனங்கள் உள்ளன. பரமசிவனால் 84 லட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என புராணங்கள் கூறுகின்றன. அதில் 84 எல்லாவற்றிலும் சிறந்தன. அவற்றுள்ளும் 32 மிகப் பயன்படத்தக்கவை. ஆசனங்கள் பலவகை.
1. நின்று செய்யக்கூடியன.
2. அமர்ந்து செய்யக்கூடியன.
3. படுத்துச் செய்யக்கூடியன.
4. மேலாகச் செய்யக்கூடியன.
ஒவ்வொரு ஆசனமும் ஒருசில நோய்களை நீக்குவதாகும். எனவே, நோயின் தன்மை அறிந்து அவ்வகை ஆசனங்களைச் செய்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.

1. சலபாசனம்
‘சலபம்’ என்ற வடசொல்லுக்கு ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். நோய்கள் அனைத்தையும் வெட்டி எறிவதால் இவ்வாசனம் ‘சலபாசனம்’ என்று பெயர் பெற்றது. மேலும் இந்த ஆசனத் தோற்றம் வெட்டுக்கிளி வடிவில் இருப்பதாலும் இப்பெயர் கொள்ளலாம். இருதய நோயுள்ளவர்களும் இரத்த அழுத்த நோயுள்ளர்களும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.
செய்முறை
1. தரை விரிப்பின் மீது முதலில் குப்புறப்படுக்க வேண்டும். கால்கள் சேர்ந்து இருக்க வேண்டும். கைகளைப் பின்புறம் நீட்டிக் கொள்ளவும்.
2. முகவாய்க்கட்டை தரையில் படும்படி முகத்தை சற்று உயர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
3. கை விரல்களை நன்கு மடக்கி தொடைகளுக்குக் கீழே வைத்துக்கொள்ள வேண்டும்.
4. பின்னர் மூச்சை இழுத்துக் கொண்டே கைகளைத் தரையில் அழுத்திக் கொண்டு தலை, நெஞ்சுப் பகுதி இரண்டு கால்களையும் சேர்ந்த மாதிரி ஒரே சமயத்தில் மேலே உயர்த்த வேண்டும்.
5. கால்களை வளைக்காமல் 45 டிகிரி வரை உயர்த்த வேண்டும்.
6. இதே நிலையில் பத்து முதல் இருபது வினாடிகள் வரை இருக்கலாம். இப்போது உடலின் எடை தரையோடு தரையாக இருக்கின்ற மார்பு, கைகள் இவற்றின் மீதுதான் விழும். தொடைப் பகுதிகள், கால்கள், முன் பாதங்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் நீட்டியிருக்க வேண்டும். 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.
7. பின்பு மெதுவாக மூச்சை விட்டபடி கால்களை மெல்லக் கீழே இறக்க வேண்டுத்.  தரையில் படியும்படி கால்கள் வளையக்கூடாது. களைப்பு வரும் வரை இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. முதலில் கால்களை பின்புறமாக அதிக உயரம் தூக்குவது கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சியில் எளிதாகச் செய்ய முடியும்.
8. இப்படி மூன்று முதல் ஐந்து தடவைகள் செய்யலாம்.
9. கால்களை மேலே தூக்கும் போது தொப்புளுக்குக் கீழேயுள்ள பாகம் மட்டுமே உயர்த்தப்பட வேண்டும். உடம்பின் அடிவயிற்றின் முன்பகுதி மட்டும் தரையில் படிந்தவாறு இருந்து உடல் எடையைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
10. உள்ளங்கால்கள்¢வளையாமல் ஆகாயத்தை நோக்கி இருத்தல் வேண்டும்.
11. பிட்டத்தைச் சுருக்கி, இறுக்கமாக வைக்கவும். தொடை தசைகளை விரித்தவாறு வைக்கவும்.
12. கால்கள் விரைப்பாகவும், சேர்ந்தும், ஒன்றோடு ஒன்று தொடை, முட்டி மற்றும் கணுக்கால் பகுதியில் சேர்ந்திருக்க வேண்டும்.
13. உடல் எடையைக் கைகளால் தாங்கக் கூடாது. கைகளை நன்கு பின்புறம் நீட்டிக் கொள்ள வேண்டும்.
14. முடிந்த அளவுக்கு இயல்பாகச் சுவாசித்தவாறு இருக்கவும். ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியையும் தொடைகளையும் தரையிலிருந்து உயர்த்துவது சிரமமாகத்தான் இருக்கும். அடிவயிற்றுத் தசை நார்கள் உறுதி அடைந்து விட்டால் இரு கால்களையும் நெஞ்சுப் பகுதியையும் நன்கு உயர்த்த முடியும்.
பலன்கள்
1. சிறுநீரகம் நன்கு செயல்படுவதற்கும் சிறுநீரக நோய்கள் நீங்குவதற்கு துணை புரிகிறது.
2. வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால் உடலின் கீழ்ப்பகுதிக்கு அதிகப் பலன்கள் கிடைக்கின்றன. பெருவயிறு எனப்படும் தொந்தி கரைகிறது.
3. வயிற்றுப் பகுதிக்கு அதிகமான இரத்த ஓட்டம் ஏற்படுவதால் பாலுறவுச் சுரப்பிகள் வலுவடையும். இல்லறத்தில் நீடித்த இன்பம் துய்க்க வழிவகுக்கும்.
4. கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகளின் கோளாறு நீங்கும்.
5. மூலம் என்கிற கொடிய வியாதியை அறவே அழித்து ஒளிப்பதில் இந்த சலபாசனம் முன் நிற்கிறது.
6. நுரையீரல் நன்கு விரிவடைந்து பலமடைவதுடன் ஆஸ்துமா போன்ற நோய்களை நீக்கும்.
7. முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றை நெருங்க விடாது.
8. குடல்கள் நன்கு இழுக்கப்படுவதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு நீங்கும்.
9. என்றும் இளமையுடன் இருக்க வைக்கும் ஆசனம் இது. இந்த ஆசனம் முதுகெலும்பை பின்னால் வளைக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால் சோம்பேறித்தனத்தை ஒழித்துக் கட்டுகிறது.

சித்தர்கள் அருளிய யோகாசனம்

தமிழ் மருத்துவ முறையில் கற்பம் மருந்துகள் முதன்மையானது. இதுசித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. கற்பம் என்பது உடம்பினை நோயுறாதபடி நல்ல நிலையில் வைத்திருந்து நரை, திரை, மூப்பு இவற்றையும் பிணியினையும் நீக்கும். உடம்பின் மேன்மையை நன்குணர்ந்த சித்தர்கள் நரை, திரை, மூப்பு அறியா நல்லுடலைப் பெற்றவர்கள்.
மனிதன் இல்லறத்தானாயினும் துறவறத்தானாயினும் உடலைப் பேணுதல் முதன்மையானது. இதனைத் திருமூலர் தம்திருமந்திரத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.
உடம்பார்அழியில் உயிரார் அழிவர்
திறம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
உடலைக் காப்பது கற்பம். இது உடலைக் கல்லைப் போலாக்கும். கல்லினால் செய்த சிலை பன்னெடுங்காலமானாலும் நரை, திரை, மூப்பு, பிணி அடைவதில்லை. கற்பம் உண்டால் காயம் அழியாது என்கிறார் திருமூலர்.
கற்பம் பொது, சிறப்பு என இருவகைப்படும். பொதுக் கற்பம் உடலைக் காத்து, மேனிக்கு எழிலும் பலமும் தந்து நரை, திரை, சாக்காடு வராமல் தடுக்கும். சிறப்புக் கற்பம் உடல் உறுப்புகளிலாவது உடல் முற்றுமாவது கண்ட பிணியை நீக்கி உடலுக்கு வலிமை தந்து பலம் ஊட்டும்.
பொது, சிறப்பு என்று பிரித்துக் கூறப்பட்ட கற்பத்துள் மூலிகை, தாது, சீவப்பொருள், அவிழ்தங்களும், மேலும் உடலைக் காக்கும் யோகாசனப் பயிற்சிகளும் பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுப் பயிற்சியும், யோகம், முப்புவும் அடங்கும். யோகாசனத்தாலும், மூச்சுப் பயிற்சியாலும் பிராணாயமத்தாலும் உடல் கற்பமாகும் என்கின்றனர் சித்தர்கள்.
யோகாசனம்
சிவயோகம் என்னும் இராஜ யோகம் பண்ணுங் காலத்துச் சித்தாசனம் என்னும் ஆசனமும், இல்லறத்தாருக்கு அவர்கள் வாயுதாரனை என்னும் உயிர்ப்பு பண்ணும் காலத்து பத்மாசனமும் சிறந்ததென்று அட்டாங்க யோக நூல்கள் கூறுகின்றன.
பொதுவாக ஆசனங்கள் யாவும் உடற்பயிற்சி போன்றவையே. என்றாலும் ஆசனங்கள் உடற்பயிற்சிகளிலிருந்து செயலிலும் நிலையிலும் வேறுபடுகின்றன. பொதுவான உடற்பயிற்சிகள் உடலின் மேற்புறமுள்ள உடல் தாதுக்களையே வலிமைப்படுத்துகின்றன. ஆனால் யோக இருக்கை என்னும் ஆசனங்கள் உடலின் உள்உறுப்புகளை வலிமைப்படுத்துகின்றன.
ஆசனங்கள் தொகையால் எண்ணற்றன. இதனைத் திருமூலர் ‘பல் ஆசனம்’, ‘எண்ணிலா ஆசனம்’ என்று குறிப்பிடுவதால் அறியலாம். இருப்பினும் இவற்றுள் இன்று ஒரு சில ஆசனங்களே நடைமுறையில் உள்ளன. திருமூலர் தம் தமிழ் மூவாயிரத்தில் பதுமாசனம், பத்திராசனம், குக்குடாசனம், சிங்காசனம், சொத்திராசனம், வீராசனம், கோமுகாசனம் என்ற சிலவற்றை மட்டுமே கூறியுள்ளார். இதில் பத்திரம், வீரம், பதுமம், கோமுகம், குக்குடம் ஆகிய ஐந்து ஆசனங்களும ஞான சாதனைக்கு உரிய ஆசனங்களாகும்.
ஆசனப் பலன்
யோகாசனப் பயிற்சியினால் உடல் உள்ளுறுப்புகள் பலம் அடைகின்றன. உடலில் வீணான சதைப் பிடிப்புகள் உண்டாவதில்லை. உடல் அழகுடன் திகழ்ந்து நோயின்றியும் வலுவுடனும் விளங்கும். உடல் முழுமைக்கும் இரத்த ஓட்டத்தை உண்டாக்கும். சுறுசுறுப்பு, புத்தித் தெளிவு, நினைவாற்றல், மனத்தூய்மை முதலிய உண்டாகும். மேலும் உடலை நல்ல நிலையில் வைத்திருப்பதுடன் பிணிகள் உடலில் சேராதும் தடுக்கின்றன. வந்த பிணியை நீக்குகின்றன.
யோகாசனம் செய்ய மான் தோல், புலித்தோல் சித்திரக் கம்பளம், வெண் துகில், தருப்பை ஆகிய ஆசனங்கள் சிறந்த என்கின்றனர் சித்தர்கள். மேடு பள்ளம் இல்லாத சமதளத்தில் யோகாசனம் செய்ய வேண்டும். கூனுதல், குறுகுதல் தவிர்த்து நிமிர்ந்து நேராய் இருந்து அசனம் செய்ய வேண்டும். பயிற்சிகளை மெதுவாயும், நிதானமாயும் செய்ய வேண்டும்.
கோபம் தவிர்
பொதுவாக மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. மனதை ஒருமைப்படுத்தும் எண்ணத்துடனேயே நம் முன்னோர்கள் இறைவழிபாடு, தவம் முதலியன செய்தனர். ஒவ்வொரு உடல் உறுப்புடனும் இணைக்கப்பட்டிருக்கும் நரம்பு உணர்ச்சிகளை மனம் சார்ந்து நிற்கிறது. அதனால்தான் அளவுக்கு மீறிய கோபம் ஏற்படும்போது கண் சிவந்து உடல் சூடேறுகிறது. கோபம் தணிந்ததும் களைப்பும் சோர்வும் ஏற்படுகின்றன. மனதில் மாற்றம் ஏற்பட்டால் உடலிலும் தளரும். ஒன்று வலிவு பெறும் போது மற்றதும் வலிவு பெறும். மனம் தூய்மையானால் அது உடலுக்குக் கேடு விளைவிப்பதில்லை. நன்மை உண்டாக்கும். உடலை நல்ல நிலையில் வைத்திருக்க மனத்தூய்மை வேண்டும். மனதால் உண்டாகும் காமம், வெகுளி, மயக்கம், அவா, துன்பம் ஆகியவை நீங்கின் உடலில் பிணி சேராது. இதனால்தான்,
மனமது தூய்மை யானால்
மந்திரம் செபிக்க வேண்டாம் என்றனர் ஆன்றோர்.

செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.

* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.

* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.

* உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.

* கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.

* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

* பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

* கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

* பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்

வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை. ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது சைமாண்டெக், மெக் அபி, நார்டன் ஆகியவையே. ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1. பிட் டிபன்டர் (BitDefender) பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.
இந்த இலவச புரோகிராமினை http://www.bitdefender.com/ என்ற தளத்தில் பெறலாம்.

2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir): இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும். இதனைப் பெற http://www.avira.com/en /products/index.php என்ற தளத்திற்குச் செல்லவும்.

3. கிளாம் ஏவி (Clam AV): இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பெற http://www.clamav.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

4.அவாஸ்ட் (Avast): : மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை. இதன் தள முகவரி:http://www.avast.com/

5. ஆர் கே ஹண்டர் (rk hunter) : இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://rkhunter.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt): இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது. மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு http://www.freedrweb. com/cureit/?lng=en என்ற இணைய தளத்தினை அணுகவும்.

7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security): NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது. டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது. மேலும் தகவல்களுக்கு http://www.eset.com/home/smartsecurity என்ற தளம் செல்லவும்.

8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus): இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன. இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது. கூடுதல் தகவல்களுக்கு http://www.iantivirus. com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials) பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும். பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இøணையாது. இது ஒரு விதிவிலக்காகும். இதனைப் பெறவும், தகவல்களை அறியவும் http://www.microsoft.c om/security_essentials/ om/security_essentials/ என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளம் செல்லவும்.

10. ஸோன் அலார்ம் (Zone Alarm): மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது. அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது. மேலும் தகவல்களுக்கு http://www.zonealarm. com/ என்ற தளம் செல்லவும்.

என்றும் நலவாழ்வுக்கு…

சாதாரண வாழ்க்கை முறையில் நாம் செய்துகொள்ளும் எளிய மாற்றங்களும் நம்மை நோயின்றி நீண்ட காலம் வாழவைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நல வாழ்வு குறித்து சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று, உப்பைக் குறைத்தால் பல வியாதிகள் குறையும் என்கிறது. உடல் நலமுள்ள ஒருவர் தினமும் 6 கிராமிற்கு குறையாமல் உப்பு சேர்க்கிறாராம். இந்த அளவை 3 கிராமாக குறைத்துக் கொண்டால் இரத்த அழுத்த வியாதி வராது. பக்க வாத நோயை 13 சதவீத அளவில் கட்டுப்படுத்தும். இதய வியாதியை 10 சதவீதம் குறைக்குமாம்.

ஒரு கோப்பை காபிஅல்லது டீக்கு 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்க்கிறோம். இதை ஒரு கரண்டியாக குறைத்துக் கொண்டால் தினமும் 30 கிராம் சர்க்கரை மிச்சம் பெறும். ஆண்டுக்கு 32 ஆயிரம் கலோரிகள் உடல் எடையில் குறையும். இதனால் உடல் பருமன் மற்றும் பல வியாதிகளை தடுக்கலாம்.

கொழுப்புடன் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட குறைந்தவிலை பிஸ்கட், கேக், மாவுப்பண்டங்களை தவிர்க்க வேண்டும். இதனால் இதய வியாதிகள் வராமல் தடுக்கலாம்.

அசைவம் சாப்பிடும் முன்பு சிறிது காய்கறி சாப்பிட்டால் அதிகப்படியான கலோரிகள் கட்டுப்படுத்தப்படும். தொடர்ந்து காய்கறிகள் சேர்த்து வந்தால் மார்பகப் புற்றுநோய் 21 சதவீத அளவு மட்டுப்படும்.

நலமான வாழ்வுக்கு சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்து கொள்ளலாமே!

இரவில் விளக்கு போடாதீர்: புற்று நோய் வரலாம்

லண்டன்:இரவு நேரங்களில் திடீரென விளக்கை எரிய விடுபவர்களா நீங்கள்? அப்படியானால், இனி அவ்விதம் செய்ய வேண்டாம். இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இரவு நேரங்களில் திடீரென விளக்கைப் போட்டால், அதனால் ஏற்படும் வெளிச்சத்தால் நம் உடலில் உள்ள செல்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. இந்த அதிக அழுத்தம் புற்றுநோய்க்கு வழி வகுத்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அடர்த்தி மிகுந்த இரவில் திடீரென ஆனால் குறுகிய நேரத்துக்கு ‘பளீர்’ என்று விளக்கு எரிந்தால் கூட, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்துள் ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற பென்ஷ்லோமோ என்பவர் கூறுகையில்,’இரவு நேரத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் எவ்வித வெளிச்சமும் நமது உடலைப் பாதிக்கும். நேரத்துக்கு ஏற்றாற்போல் செயல்படும், நம் உடலின் கடிகாரம் அதனால் பாதிக்கப்படும். மிக மிகக் குறைந்த வெளிச்சம் கொண்ட இரவு விளக்குகள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அவைதான் பாதுகாப்பானவை’ என்று தெரிவித்தார்.

தயிர் வேண்டாமே… மோர் குடிங்க!

சித்திரை மாதம் பிறந்து விட்டது; கோடை ஆரம்பித்துவிட்டது. ஆனால், கத்திரி பருவம் வருவதற்கு முன்னரே, வெயில் கொளுத்துகிறதே, இந்த கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என, புலம்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்கள்…
* கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; நுங்கு, கிர்ணிப் பழம், தர்பூசணி போன்ற பழங்கள், இளநீர், பிரஷ்ஷான பழச்சாறுகள் ஆகியவற்றை சாப்பிடலாம்; முடிந்த வரை குளிர்பானங்களாக குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜலதோஷம் போன்றவை ஏற்படாமல், காத்துக் கொள்ளலாம். தயிராக சாப்பிடாமல், அதில் நிறைய தண்ணீர் கலந்து மோராக சாப்பிட வேண்டும். கறிவேப்பிலை மற்றும் கல் உப்பை சேர்த்து பிசைந்து, அதன் சாறு மோரில் இறங்கும் படி செய்ய வேண்டும். பின், அதில், பெருங்காயத் தூள் சேர்த்து குடித்தால், உடலுக்கு மிகவும் நல்லது.
* தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். அப்போது தான், கோடை காலத்தில் அதிகளவு வியர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
* இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகள் அணியலாம். இதனால், கசகசவென இருக்கும் உணர்வு தவிர்க்கப்படும்; குறிப்பாக, உள்ளாடைகளும், பருத்தியாலானவற்றை அணிவது, மிகவும் நல்லது.
* உடல் சூட்டின் அளவை குறைக்க <உதவும் வைட்டமின் சி எலுமிச்சம்பழத்தில் காணப்படுகிறது. எனவே, எலுமிச்சம் பழச்சாறு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
* வெயில் காலத்தில் உடல் சூடு அதிகரிப்பதால், ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் வெள்ளரிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* வெயிலில் வெளியே செல்வதாக இருந்தால், குடை எடுத்துச் செல்லுங்கள். இதனால், அதிகளவு சூரிய வெப்பம், உடலை தாக்குவதை தவிர்க்கலாம்.
* பகல் வேளைகளில், வீட்டில் அறைகளின் ஜன்னல் கதவுகளை நன்கு திறந்து, இயற்கையான வெளிக் காற்று வரும் வகையில் வைக்க வேண்டும். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றிற்கும், பருத்தியாலான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
* கோடை காலத்தில் உண்டாகும் உதடு வெடிப்பை போக்க, பாலாடை தேய்க்கலாம்.
கோடை காலத்தில், உடலின் நீர்ச்சத்து வற்றாமல் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பல்வேறு பிரச்னைகளில் இருந்து, நம்மை காத்துக் கொள்ளலாம்.

பக்தனே உயர்ந்தவன்! (ஆன்மிகம்) -ஏப்., 20 – விறல்மிண்டர் குருபூஜை!

பக்தன் உயர்ந்தவனா, பகவான் உயர்ந்தவனா என்று கேட்டால், பக்தனே உயர்ந்தவன் என்பார் விறல்மிண்டர். இவர், சேர நாட்டிலுள்ள திருச்செங்குன்றூரைச் சேர்ந்தவர். ‘விறல்மிண்டர்’ என்றால், ‘வீரம் மிக்கவர்’ என்று பொருள். சிவபெருமானை விட, அவரது அடியார்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்த இவர், தினமும் அடியார்களை வணங்கிய பிறகே, கோவிலுக்குச் செல்வார்.
இவர், ஒருமுறை திருவாரூரிலுள்ள புற்றிடங்கொண்டாரை (தியாகராஜர் கோவில் மூலவர்) வணங்குவதற்காக வந்தார். கோவிலுக்குள் ஏராளமான சிவனடியார்கள் நின்றனர். அவர்களையெல்லாம் முதலில் வணங்கி, அவர்களுடன் சேர்ந்து நின்றார். தன்னைப் போலவே, அங்கு வந்த மற்ற சிவனடியார்களும் தங்கள் சக அடியார்களை வணங்கிய பிறகே, சிவன் சன்னதிக்குச் செல்வதைக் கவனித்து மகிழ்ச்சியடைந்தார்.
அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அவர், பக்தர்களைக் கண்டுகொள்ளாமல், நேரே சன்னதிக்குச் சென்றார். கடவுளை வழிபட்டால், குற்றம் குறை ஏதேனும் இருந்தால் பொறுத்துக் கொள்வான். ஆனால், அடியார்களை வணங் கும்போது தவறு வந்து விட்டால், நமக்கு பக்தியில் பக்குவமில்லை என்று, அவர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடுமோ என்று அவருக்குப் பயம். இதன் காரணமாக அவர் பக்தர்கள் பக்கம் வருவதே இல்லை; அவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போய்விடுவார்.
ஆனால், சுந்தரரைத் தவறாகப் புரிந்து கொண்ட விறல்மிண்டர், ‘இந்த சுந்தரன் அடியார்களுக்கு மதிப்பளிக்காமல், நேரே சன்னதிக்குச் செல்கிறானே… இவன் கோவிலுக்கு வரவே தகுதியற்றவன். இவனை ஆட்கொண்டானே அந்த சிவன்; அவனும் வணங்குவதற்கு உரியவன் அல்லன்…’ என்று கோபமாக சுந்தரரின் காதில் விழும்படி சத்தமாகச் சொன்னார். சுந்தரருக்கு இதைக் கேட்டு மிக வருத்தம். கண்ணீருடன் புற்றிடங்கொண்டார் சன்ன திக்குச் சென்று அழுதபடியே, ‘நானா அடியார்களை மதிக்கத் தெரியாதவன், நீயே இதற்கு பதில் சொல்…’ என்று இறைவனைப் பார்த்து அழுதார்.
சுந்தரரை தன் நண்பராகக் கொண்டவர் சிவன். நண்பனின் துயர் பொறுக்காத அவர், ‘சுந்தரனே! என் தீவிர பக்தர்கள் அனைவருக்கும் நீ அடியவன் என்ற முறையில், அத்தனை பேர் பெயரையும் குறிப்பிட்டு பாடு…’ என்றார். மேலும், ‘தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்…’ என்று அடியெடுத்தும் கொடுத்தார். அவ்வாறு பாடும் போது, ‘விறல்மிண்டர்க்கும் அடியேன்…’ என்றும் பாடினார் சுந்தரர். விறல்மிண்டர் இதைக் கேட்டு, ‘சுந்தரரைத் தவறாகப் புரிந்துகொண்டோமே…’ என வருந்தினார்.
சுந்தரர் பாடிய இந்த வரிகளின் தொகுப்பை, ‘திருத்தொண்டத் தொகை’ என்பர். இதில் வரும் அடியார்கள் அனைவரின் வரலாற்றையும் தொகுத்தே, ‘பெரியபுராணம்’ எனும் நூலை சேக்கிழார் இயற்றினார். ஆக, பெரியபுராணமும், திருத்தொண்டத் தொகையும் நமக்கு கிடைக்க விறல்மிண்டரின் கோபமே காரணமாயிற்று. இவரது குருபூஜை, சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது. பகவானை விட, பக்தனே உயர்ந்தவன் என்ற அரிய தத்துவத்தை விறல்மிண்டரின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.