Advertisements

Daily Archives: ஏப்ரல் 21st, 2010

ரோபோக்கள் மனிதனை ஜெயிக்குமா?

உலககோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுவது போல `ரோபோ’க்கள் (எந்திர மனிதர்கள்) கலந்து கொள்ளும் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மனிதன் எப்படி சிந்திக்கும் திறனுடன் ஆறறிவுடன் இருக்கிறானோ அதுபோல செயற்கை புத்திசாலித்தனம் நிறைந்த ரோபோக்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரோபோ கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. 1977 ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு வகையான ரோபோக்கள் கலந்து கொள்கின்றன.

அடுத்த ஆண்டுக்கான போட்டிகள் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடக்கப்போகிறது. இந்தப்போட்டிக்கு இப்போதே தயாராகிறது ஸ்காட்லாந்து அணி. இதற்காக எடின்பர்க் பல்கலைக்கழக ரோபோ துறையினர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ஆன்டிராய்டு எப்.சி. ரோபோ கால்பந்து வீரர்கள் தான் இங்குள்ள படத்தில் உள்ளனர்.

ஆன்டிராய்டு எப்.சி. ரக ரோபோக்கள் கொஞ்சம் அதிக புத்திசாலித்தனம் உள்ளவை. தமது அணி வீரர்களையும் மற்ற அணி வீரர்களையும் அடையாளம் கண்டு கொண்டு பந்தை கடத்திச் செல்லும் திறன் கொண்டவை. இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ கால்பந்து வீரர்களில் இந்த ஆன்டிராய்டு நவீன வசதிகள் கொண்டது.

இவை சூழ்நிலையை புரிந்து கொண்டு தானியங்கி முறையில் முடிவு எடுத்து விளையாடும் திறன் கொண்டவை. எதிர் அணி ரோபோவை ஏமாற்றி பந்தை கடத்தும் புத்திசாலித்தனம் இதற்கு உண்டு.

இந்த ஆன்டிராய்டு ரோபோ வடிவமைப்பில் பங்கு பெற்ற இந்திய பொறியாளர் சேதுவிஜயகுமார் கூறும்போது, `ரோபோக்களை போட்டிகளில் ஈடுபடுத்துவது சவாலானது. போட்டிக்கு இடையே ரோபோக்கள் பந்தை கடத்தி சென்று கோல் போட்டால் மகிழ்ச்சியையும், தவறவிட்டால் ஏமாற்றத்தையும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத் தும் வகையில் தயாரிக்கும் முயற்சிகள் நடக்கிறது.

ஸ்காட்லாந்து அணிக்காக 3 ரோபோ வீரர்கள் கொண்ட குழுவை உருவாக்கி இருக்கிறோம். இந்த அணி தகுதிச்சுற்றுப்போட்டியில் ஜெயித்து அடுத்த ஆண்டு நடைபெறும் உலக ரோபோ கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

ரோபோ கால்பந்து வீரர்களை உருவாக்கும் விஞ்ஞானிகளுக்கு ஒரு கனவு உள்ளது. அதாவது 2050 ம் ஆண்டு மனிதனுக்கும் ரோபோக்களுக்கும் இடையே கால்பந்து போட்டி நடத்த வேண்டும் என்பது தான்.

இதற்கான முயற்சியில் தான் இப்போது சிறிய அளவிலான ரோபோக்களைக் கொண்டு கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறார்கள். ஆய்வுகள் வெற்றிபெறும் போது மனிதனுக்கு சமமாக மனிதன் போன்ற உயரம், தோற்றத்தில் ரோபோ கால்பந்து வீரர்கள் உயிர்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது இயற்கை புத்திசாலித்தனத்துக்கும், செயற்கை புத்திசாலித்தனத்துக்கும் இடையே மோதல் நடக்கும். அதாவது கடவுளின் படைப்புக்கும், மனிதனின் படைப்புக்கும் இடையே மோதல் நடைபெறும்.

இதில் ஜெயிக்கப்போவது யார்?…

Advertisements

குழந்தைகளுக்கு பேசிக் மேனரிசம்!

பிள்ளைகள் மெத்த படித்திருந்தும் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள்.இது அவர்களின் வளர்ச்சியில் ஒரு குறைபாடாகிறது.
ஏட்டிக்குபோட்டியான வாழ்க்கைக்கு கொண்டு செல்கிறது.குழ்ந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும் பொழுதிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் நல்லவிதமாக நடந்து கொண்டால் உடன் பாராட்டு பத்திரம் வாசித்து தவறு செய்தால் அடித்து திட்டி செய்வோம்.
தவற்றை சுட்டிக்காட்டுவதற்கு பதில், எப்படி நல்ல விதமாக செய்திருக்கலாம் என்று எடுத்துச்சொல்லலாம்.

10 முக்கியமான அடிப்படை நாகரீங்கள் என்னவென்று பார்ப்போம்.

1. பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள்.
இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,”நாங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெளிவாக சொல்ல வேண்டும்.Waiting their turn என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில் இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

2.பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா? நியாமே இல்லை.பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு
மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும்.

(நண்பர்களை கூட வாடி,போடி, அடா,புடா என்று பேசுவதை தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது நலம்)

3. வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். வந்தவர்கள் வாயிலில் தேமே என்று நிற்க வேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும்.கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.இதனால் விருந்தினர்களுக்கும் மனது மகிழ்ச்சி.

4. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது “You’re welcome” சொல்ல மறக்காதீங்க.

5. சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும்.
அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய்விடுவார்கள்.
இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

6.விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிஜத்தில் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். அதுதான்Good sportsmanship.

7. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப் பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை
சொல்லத்துவங்கக்கூடாது.

8. வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால் என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

9. லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியேவந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என
பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி
வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான் நாம் உள் செல்ல வேண்டும்.

10.வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின் பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ப்ர்த்யேக பழக்க வழக்கங்கல்,கலாசாரங்கள் இருக்கின்றன. அவை அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை
பிள்ளைகள் உணரவேண்டு.

குழந்தைகள் கண்ணாடி அணிவதின் அவசியம் !

எப்போதும் தொலைக்காட்சிக்கு அருகி உட்கார்ந்து பார்த்தல் அல்லது புத்தகத்தினை அருகில் வைத்து படித்தல்
படிக்கும் போது தமது இருப்பிடத்தினை மறத்தல்
விரல் வைத்து வரிகளை தொடர்ந்து படித்தல்
மாறுகண் பார்வை
தெளிவாக பார்ப்பதற்கு தலையை அழுத்தி பார்த்தல்
அடிக்கடி கண்களை உருட்டுதல்
விளக்கினை கூர்ந்து பார்த்தல்
படிப்பதற்கு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு அல்லது தெளிவாக காண்பதற்கு கண்களை அருகில் கொண்டு செல்லுதல்
படிப்பதற்கு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு அல்லது தெளிவாக காண்பதற்கு ஒரு கண்ணை மூடுதல்
படிக்கும் போது அல்லது வீட்டு பாடம் செய்யும் போது கிட்டப்பார்வை அல்லது விளையாட்டு மற்றும் புதிய பொருள் உருவாக்கம் போன்ற செயல்பாடுகளில் தூரப்பார்வை போன்ற செயல்களை தவிர்த்தல்.
கண் சோர்வு மற்றும் தலைவலி போன்ற குறைபாடுகளை கூறுதல்
வழக்கத்தை விட மந்த நிலையடைதல்

முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . !

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்…..

*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள்.

* மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.

*முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தா லோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

*அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க் கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.

*முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள்.

* உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.

* நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.

* காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட்
தடவிக் கொள்ளுங்கள்.

* உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.

* கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.

* படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

* முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள்.

* முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

* அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

* உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.

* முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்க லாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிக மாக்கத்தான் செய்யும்.

* வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

* உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.

டூப்ளிகேட் பைல்களை நீங்குங்கள்

நம் கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம். அதே போல பாடல் பைல்கள். பாடல்களை டவுண்லோட் செய்து, அல்லது வேறு சிடிக்களில் இருந்து காப்பி செய்து வைத்திருப்போம். நம் உறவினர், தம்பி, தங்கை அவர்களுக்குப் பிடித்த பாடல்களாக அவற்றிலிருந்து பொறுக்கி எடுத்து போல்டர்களை அமைத்து வைப்பார்கள். இதனால் ஒரே பாடல் பைல் பல போல்டர்களில் காப்பி ஆகிப் பதியப்பட்டிருக்கும்.
சிலர் டெஸ்க்டாப்பில் இருந்துதான் பைல்களை இமெயில்களுடன் அட்டாச் செய்து அனுப்புவார்கள். போல்டருக்குள் போல்டரில் பைல் இருந்தால், அவற்றின் இடத்தை பிரவுஸ் செய்து சுட்டிக் காட்ட சிரமப்பட்டு, டெஸ்க்டாப்பில் அதனை காப்பி செய்து அட்டாச் செய்து அனுப்புவார்கள். ஆனால் அனுப்பிய பின்னர், அதனை டெஸ்க்டாப்பிலிருந்து நீக்க மறந்து போவார்கள்.
இப்படி நம் கம்ப்யூட்டரிலிருந்து பைல்கள், ஒரே பெயரிலோ, அல்லது வெவ்வேறு பெயர்களிலோ, கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதனை எப்படி நீக்குவது? சில வேளைகளில் பெயர்களை மாற்றிவிட்டால், டூப்ளிகேட் பைல்களை நீக்குவது எப்படி? இதற்கென புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் Duplicate Finder. இதன் மூலம் டூப்ளிகேட் போட்டோக்கள், டாகுமெண்ட்கள், ஸ்ப்ரெட்ஷீட்கள், எம்பி3 பாடல்கள் மற்றும் பலவகையான டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து நீக்கலாம்.
இதனை http://www.easyduplicatefinder.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல்; அளவும் சிறியதுதான். மேலும் விரைவாக இன்ஸ்டால் ஆகிறது. பின் இதனை இயக்கி பைல்களை அடையாளம் கண்டு அழிக்கலாம்.
1. இது மிகத் திறமையான தேடும் தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது. அதன் மூலம் பைல்களை அதன் பைட்களில் தேடுகிறது. இது பைனரி தேடல் என்பதால், விரைவாக பைல் கண்டறியப்படுகிறது. முழு பைலும் ஒரே மாதிரியான விஷயத்தைக் கொண்டிருக்கின்றனவா என்று கண்டறியப்படுகிறது.
2. பைல்களை அவற்றின் பெயர், அளவு போன்றவற்றின் மூலமும் கண்டறிகிறது.
3. குறிப்பிட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களிலும் பைல்களைத் தேடி அறிகிறது.
4. சிஸ்டம் பைல்களையும் போல்டர்களையும் பாதுகாக்கிறது. டூப்ளிகேட் பைல்களை ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்புகிறது. அல்லது நம்முடைய செட்டிங்ஸ் படி நீக்குகிறது.
5. சில குறிப்பிட்ட டூப்ளிகேட் பைல்களை, பைல்களின் பெயர்களுக்கு முன் சிறிய எழுத்துக்களைச் சேர்த்து அமைக்கிறது. அதன்பின் எந்த பைலை டெலீட் செய்வது என்று நாம் ஒதுக்கலாம்.
6. இதனைப் பயன்படுத்த நல்ல வசதியான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது.
7. யூனிகோட் முறையில் எழுதி அமைக்கப்பட்ட பைல்களையும் கையாள்கிறது. இதனால் சீனம், தமிழ், அரபி மொழிகளில் யூனிகோட் எழுத்துருக்களில் அமைந்த பைல்களையும் கண்டறிகிறது.
இந்த புரோகிராம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது. முதலில் நீங்கள் எந்த போல்டர்களை சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்று குறிக்க வேண்டும். அதில் பைல்களின் துணைப் பெயர்களையும் (extensions) கீழ் விரி மெனுவில் காட்ட வேண்டும்.
இரண்டாவது நிலையில் ஸ்டார்ட் பட்டன் அழுத்தியவுடன், புரோகிராம் தான் கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைக் காட்டும். புரோகிராம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, எத்தனை பைல்கள் ஸ்கேன் செய்யப்பட்டன என்பதனையும், எவை எல்லாம் டூப்ளிகேட் பைல்கள் என்றும், அவை ஹார்ட் டிஸ்க்கில் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொண்டுள்ளன என்றும் காட்டப்படும்.
மூன்றாவது நிலையில் நாம் அந்த பைல்களை என்ன செய்திட வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். பைல்களை அப்படியே விட்டுவிடுவது, வேறு பெயர் தருவது, இன்னொரு போல்டருக்கு அனுப்புவது, பைல்களைத் தேர்ந்தெடுத்து அழிப்பது ஆகிய செயல்பாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த புரோகிராமின் சிறப்பம்சங்கள்:
1. ஒரே மேட்டர், ஒரே பெயரில் உள்ள பைல்களைக் கண்டுபிடிப்பது
2. ஒரே படம்; ஆனால் பைல் பார்மட் வேறு (எ.கா.jpg, gif) வீடியோ (avi, mpg) பாடல்கள்(mp3,mp4) என்பனவற்றுள் கண்டறிவது.
3. டூப்ளிகேட் பைல் கண்டறியும் புரோகிராம்களில் இதுவே மிக வேகமாக இயங்கக் கூடியது.
4. மிக மிக எளிதாக இயக்கவல்லது.
5. பிளாப்பி, யு.எஸ்.பி. போன்றவற்றில் வைத்தும் இயக்கலாம்.
6. பைல் பெயர்கள், பைலின் மேட்டர், பைட் / பைட் ஒப்பீடு போன்ற பல வழிகளில் கண்டறிகிறது.
7. குறிப்பிட்ட போல்டர்களில் மட்டும் உள்ள டூப்ளிகேட் பைல்களைச் சுட்டிக் காட்டும்.
8.முக்கியமான பைல்கள் இருந்தால், அவற்றை நீக்கி மற்றவற்றைத் தேடலாம்.
9. விண்டோஸ் மற்றும் நாம் குறிப்பிடும் போல்டர்களை பாதுகாப்பாகத் தன் தேடல்களிலிருந்து ஒதுக்குகிறது.
10. தேடல் முடிவுகளைப் பதிந்து வைத்து, பின் நாட்களில் தேடும்போது உதவுகிறது.
இதன் மூலம் நாம், 1) தேவையின்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் டிஸ்க் இடத்தை கண்டறிந்து பயன்படுத்தலாம். 2) இதற்கென அதிக நேரம் செலவழிக்க தேவையில்லை. இதனால் நம் கம்ப்யூட்டர் சிஸ்டம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கம்ப்யூட்டருக்கு அவ்வளவாகப் பழக்கமில்லா தவர்கள் இதனைப் பயன்படுத்தும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் பைலை அழித்துவிடக் கட்டளை கொடுத்துவிடக்கூடாது. இந்த பைல் விண்டோஸ் 95 முதல் அண்மையில் வந்த விண்டோஸ் 7 வரையிலும் உள்ள சிஸ்டங்களில் இயங்குகிறது. இதற்கான ராம் மெமரி 128 எம்பி இருந்தால் போதுமானது. ஹார்ட் டிரைவில் ஐந்து எம்பி இடம் இருக்க வேண்டும்.

பேட்டரியாக பயன்படும் பாக்டீரியாக்கள்

மின்சாரத்தை சேமித்து வைத்து தேவையான இடத்தில் பயன்படுத்த பேட்டரிகள் உதவுகின்றன. விதவிதமான பேட்டரிகள் இருந்தாலும் சார்ஜிங் செய்வது சற்று சிரமமான வேலை. இடத்தையும் அடைக்காமல், மின்சாரம் கொண்டு சார்ஜிங்கும் செய்யாமல் தானாகவே மின்சாரம் தயாரித்து இயங்கும் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதுவும் கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள பேட்டரி. ஆமாம், நுண்ணுயிரிகளான `பாக்டீரியா’க்கள்தான் `இயற்கை பேட்டரி’யாக நமக்கு உதவ இருக்கின்றன.

கடலில் மணலும், தண்ணீரும் சேர்ந்த கலங்கலான பகுதிகளில் (கழிமுகம், கடற்கரை) வசிக்கும் பாக்டீரியாக்களின் இயக்கத்தில் மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த மின்சாரம் அவை சார்ந்திருக்கும் தாவரங்களின் தண்டு, படிமங்களில் சேகரமாவது கண்டு பிடிக்கப்பட்டது. இதை இயற்கை பேட்டரியாக பயன்படுத்தலாம் என்கின்றனர், கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர்களான டென்மார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்

இந்தியத் திருநாடு பண்பாடு, கலாச்சாரத்தின் சிகரம் என புகழப்படுகிறது. ஆனால், கலாச்சாரம், மரபு, தொன்மை, புராதனங்களை கட்டிக்காப் பதில் நாம் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை. எஞ்சியுள்ள புராதன சின்னங்களையாவது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பணியை, நாம் செய்ய வேண்டும்.

எண்ணற்ற மொழிகள் பேசப் படும் நாடு, நமது தேசம்; ஆற் றங்கரை நாகரிகத்தில் எகிப்தும், சிந்து சமவெளியும் போன்றதே நமது தமிழர் மரபும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரிகத்தின் உச்சத்தை அறிந்தவர்கள்; கலாச்சாரத்தின் பிறப் பிடம் என அறியப்பட்டாலும், அந்த எச்சங்களை நாம் முறையாக பாதுகாக்கவில்லை.தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில்கள், கோட்டைகள் எதையும் நாம் கண்டுகொள்வதில்லை. கோவில் வழிபடும் இடமாக மட்டுமே கருதப்படுகிறது. சமூகம் கூடிக் கொண்டாடிய இடமாகவும், அன்றைய சமூக வாழ்வியலின் பிரதிபலிப்பாகவும் அவை மதிக்கப்படவில்லை.

நமக்கு அருகிலேயே பல நூற்றாண்டுகள் கடந்த கோவில்கள், புராதன சின்னங்கள் உள்ளன. நமது முந்தைய தலைமுறைகள் நமக்காக விட்டுச் சென்ற அற்புதம் கோவில்கள். சமயம், மொழி வளம், ஆட்சி முறை, சிற்பக் கலை, ஆன்மிக நெறி, வாழ் வியல் நெறிமுறைகள், அன்றைய சமூகச்சூழல், இலக்கியங்களும், நடன, இசைக்கலைகளும் அரங்கேறிய மேடைகள் என பலமுகங்களை கோவில் மூலம் அறிய முடியும்.கோவில்கள் குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டு மையம் என்ற அளவில் மட்டுமே அறியப்படுவது வேதனைக்கு உரிய ஒன்று. நம்மிடம் இருக்கும் புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை நேற்றைய தலைமுறையும் அறியவில்லை; மதிப்பை இன்றைய தலைமுறையும் அறிந்து கொள்ளவில்லை. அடுத்த தலைமுறையாவது அவற்றைக் கொண்டாடட்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி மலை சமணப்படுக்கைகள் புராதன சின் னங்களில் குறிப்பிடத்தக்கவை.

* திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில் ஒன்பதாம் நூற்றாண் டில் கட்டப்பட்டது. பிரதான கடவுள் சிவன். சண்முகநாதன் என்ற பெயரின் முருகன் எழுந்தருளியுள்ளார். முருகன் சூரசம்ஹாரம் செய்த பின், பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்டதால், பூண்டியில் லிங்கம் அமைத்து வழிபட்டார். அதனால், மனநோய்க்கு இத்தலம் பரிகாரதலமாக கருதப்படுகிறது. நிலமட்டத்தில் இருந்து கீழ் நோக்கிச் செல்லும்படி கோவில் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு. சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம்; தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

* சுந்தரபாண்டியனால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில். முதலையுண்ட பிள் ளையை மீட்க, சுந்தரர் திருப்பதிகம் பாடி மீட்டது இத்தலத்தில் தான். அவிநாசி தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேர் என்ற பெருமையும் உடையது. திருப்புக்கொளியூர் என பழங் காலத்தில் இத்தலம் அழைக் கப்பட்டது.

* சுக்ரீவன் லிங்கம் அமைத்து வழிபட்டதால், சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்ற திருத்தலம், திருப் பூர் எஸ்.பெரியபாளையத்தில் உள்ளது. ஒன்பதாம் நூற்றாண் டுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. பாண்டியர்களாலும், மைசூர் உடையாராலும் புதுப் பிக்கப்பட்டது. இரண்டு நந்திகளும், மிகச்சிறந்த கட்டடக் கலையும் கோவிலின் சிறப்பம் சங்கள். மூலவர் மிளகீசர் எனவும் அழைக்கப்படுகிறார்.

* திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியில் சமணர்கள் வசித்ததற்கான சான்றுகள், படுக்கைள் உள்ளன.இவையெல்லாம் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையானவை. நம்மை கால காலத் துக்கும் பெருமை கொள்ளச் செய்யும் புராதன சின்னங்கள் பற்றி அறியாமல் இருந்து விடக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வது, இன்றைய தலைமுறையின் இன்றிமையாக் கடமை. இதுபோன்ற இடங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்துச் செல்வது அவசியம்!-நேற்று, உலக புராதன சின்னங்களுக்கான தினம்!