Daily Archives: ஏப்ரல் 22nd, 2010

கோடை குளியல்!

கோடை வெயிலால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதை தடுக்க தினமும் குளித்திடுங்கள். தலை மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து, நன்றாக ஊறவிட்டு, அதன்பின் குளிப்பது நல்லது. இப்படிச் செய்வதால் உடல் சூடு குறையும்.

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய் விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்து விடும்.

அதை போக்க, இரவில் தூங்கும் முன் கண்களை சுற்றி விளக்கெண்ணையை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள்.

உங்கள் தோல் மென்மையாகி விடும்.

வறண்ட சருமத்தை பாதுகாக்க…

கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவுபெறும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போவதோடு, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான்.

சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படுத்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது, பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது, செக்ஸ் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது, செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது, அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது, தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.

இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ, தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கு கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.

குண்டு துளைக்காத `டி-சர்ட்’

`டி-சர்ட்’டுகள் இளைய தலைமுறையினரின் நாகரிக உடையாக இருக்கிறது. கட்டழகை பளிச்சிட்டு காட்டும் இந்த உடைகளை இளைஞர்கள் மட்டுமல்லாது இளம்பெண்களும் விரும்பி அணிகிறார்கள்.

தற்போது நவீன தொழில்நுட்பத்தில் குண்டு துளைக்காத டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சீனா, சுவிட்சர்லாந்து, தெற்கு கரோலினா நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதற்காக வழக்கமாக பயன்படும் பருத்தி நூல் சில மாறுதலுக்கு உட்படுத்தப்படுகிறது. பருத்தி யில் உள்ள கார்பனுடன் போரான் உலோகம் சேர்க்கப்படுகிறது. இதனால் போரான் கார்பைடு கலவை உருவாகிறது. இதுதான் கதிர்வீச்சு கலன்களில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே இதைக் கொண்டு தயாரிக்கப்படும் டி-சர்ட்டுகள் குண்டு துளைக்காத தன்மையைப் பெறுகின்றன. அத்துடன் சூரிய ஒளியின் புறஊதாக் கதிரின் தாக்குதல் மற்றும் ரேடியோ அலைகள், கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் எடை இலேசானதாகவும் இருக்கும்.

ராணுவம் மற்றும் போலீஸ் வீரர்களுக்கு ஏற்கனவே கவச உடைகள் உண்டு. அவை தடிமனாகவும், எடை கூடியதாகவும் இருக்கின்றன. அவர்களுக்கு எடைகுறைந்த மாற்று கவசஉடையாக இந்த நவீன டிசர்ட்டுகளை வழங்க ஆய்வுகள் நடந்து வருகிறது.

பதற்றம் தரும் செய்திகள்

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் அடிக்கடி சில போலியான செய்திகள், தகவல்கள் நம்மை அச்சுறுத்தி உடனே செயல்பட வைக்கும் வகையில் வருவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது. இது குறித்து பல வாசகர்கள் நமக்குக் கடிதங்கள் எழுதி, இந்த செய்திகளை எப்படி எடுத்துக் கொள்வது? இதில் உள்ளவற்றை நம்பலாமா? என்று கேட்டுள்ளனர். அவை குறித்து இங்கு காணலாம்.
இந்த செய்திகள் பலவகைப்படும். சில எடுத்துக் காட்டுக்களைப் பார்க்கலாம். இவை எல்லாமே பாப் அப் விண்டோக்களில் காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குவதை அறியவில்லையா? வைரஸ் பாதித்துள்ளது. ஒரு அப்டேட் செய்திட வேண்டும். ட்ரோஜன் அல்லது மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும், வைரஸ் நீக்கப்படும்.
இவற்றைப் படித்த நாம் அனைவருமே சிறிது கலவரப்படுவோம். உடனே செயல்பட்டு லிங்க்கில் கிளிக் செய்து வைரஸை இலவசமாக நீக்க முயற்சிக்க ஆசைப்படுவோம்.
இன்னும் சில செய்திகள், பெரிய புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வந்தது போல் காட்டப்படும். அந்நிறுவனத்தின் வெப்சைட் முகவரி தரப்பட்டிருக்கும். நிறுவனத்தின் முகவரி தானே, சரியாகத்தானே இருக்கும் என்று எண்ணி கிளிக் செய்திடுவோம். ஆனால் ஒரு சிறு எழுத்தை மாற்றி வேறு ஒரு வெப்சைட் செல்வோம். அங்கும் நிறுவனத்தின் வெப்சைட் சாயலில் வெப்சைட் காட்டப்பட்டு நாம் மாட்டிக் கொள்வோம்.
இது போன்ற செய்திகளை நம்பி நாம் செயல்படுகையில் நம் கம்ப்யூட்டரைக் கையகப்படுத்தும் வகையில் புரோகிராம்கள் பதியப்படலாம். பின் நம் பெர்சனல் தகவல்கள் அனைத்தும், அந்த புரோகிராமினை அனுப்பியவர்கள் கைகளுக்குச் சென்றுவிடும். அல்லது கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் வைரஸ்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து அனைத்து மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். இது போன்ற நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது?
முதலில் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும், லிங்க் ஆகத் தரப்பட்டிருக்கும் இடம் அருகே கர்சரைக் கொண்டு செல்ல வேண்டாம். எங்கும் கிளிக் செய்திட வேண்டாம். உடனே மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்க ஆரம்பிக்கும். இதனைத் தடுத்து நிறுத்தும் வழி எதுவும் திரையில் கிடைக்காது.
1. ஆல்ட் + எப்4 (Alt+F4) கீகளை சேர்த்து அழுத்தினால், இந்த எச்சரிக்கை செய்தி தரும் கட்டம் மறைந்துவிடும். அல்லது பிரவுசரே மறைந்துவிடலாம். பின் மீண்டும் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கி விடலாம்.
2. மேலே சொன்ன வழியின் மூலம், அந்த விண்டோவினை மூட இயலவில்லை என்றால், கண்ட்ரோல்+ ஆல்ட்+டெல் (Ctrl+Alt+Del) கீகளை அழுத்தி டாஸ்க் மேனேஜரைப் (Task Manager) பெறவும். இதில் அப்ளிகேஷன்ஸ் (Applications) டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.
3. இங்கு உங்கள் பிரவுசர் பெயர் பட்டியலில் இருக்கும். உடன் ஏதாவது புதியதாக ஒரு புரோகிராம் தெரிகிறதா என்று பார்க்கவும். இருந்தால் அதுதான் உங்களை ஏமாற்றும் புரோகிராம். அதனைத் தேர்ந்தெடுத்து என்ட் டாஸ்க் (End Task) பட்டனை அழுத்தி, அந்த புரோகிராமினை மூடவும். அப்படி ஒன்றும் இல்லை என்றால், பிரவுசர் புரோகிராமினை மூடவும்.
சில நடவடிக்கைகளை நாம் மறக்காமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.
எப்போதும் உங்கள் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை டவுண்லோட் செய்து, அவ்வப்போது இயக்கிப் பார்ப்பதுவும் நல்லது. இதற்கென புரோகிராம் ஒன்றினை இணையத்தில் அண்மையில் காண நேர்ந்தது. அதன் பெயர் Malwarebytes AntiMalware. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இயக்கலாம். கிடைக்கும் இணைய தள முகவரி: http://malwarebytes.org/

குழந்தைகளை குறிவைக்கும் கோடை!

கோடை வெயிலால் அதிகம் பாதிக்கப் படுவது குழந்தைகள் தான். பெரும்பாலும் குழந்தைகளை கோடை வெயில் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கோடையில் குழந்தைகளை அதிகம் தாக்கும் நோய்களுள் ஒன்று சின்னம்மை. இது ஒரு வகை வைரசால் ஏற்படுகிறது. உடல் முழுவதும் வரும் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். மேலும், குளிர் நடுக்கம், குமட்டல், வாந்தி ஆகியவையும் ஏற்படும்.

பெரும்பாலும், குழந்தையின் உடலில் அரிப்பு ஏற்பட்டு அவை கொப்புளங்களாக மாறும். இதை வைத்து சின்னம்மை என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இது தொற்றுநோய் என்பதால் உடனடியாக டாக்டரை அணுகுவதுதான் நல்லது.

தகுந்த டாக்டரிடம் சிகிச்சை பெறுவதுடன், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவுகளை உட்கொள்வது போன்றவற்றையும் சின்னம்மை நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பின்பற்ற வேண்டும்.

புதுவேகம் கொள்ளும் ஊடகத்துறை!

இந்தியாவில் இந்த ஆண்டு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.

முன்னேறி வரும் பொருளாதாரத்தின் அனுகூலங்களை அனுபவித்து வருகிறது இத்துறை. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை இந்த ஆண்டில் 11.2 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் சமீபத்திய நிகழ்வொன்றில் குறிப்பிட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

ஊடகம் மற்றும் பொழுது போக்குத் துறையானது தனது 38 சதவீத வருமானத்துக்கு விளம்பரங்களைச் சார்ந்துள்ளது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது விளம்பரங்களுக்கு ஒதுக்கப்பட்ட `பட்ஜெட்’ குறைந்ததால் இத்துறை பாதிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகவே இத்துறை மிதமான வளர்ச்சியாக 1.4 சதவீதத்தைக் காட்டியது. அதற்கு முந்தைய 2008-ம் ஆண்டில் இத்துறையின் வளர்ச்சி 12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒட்டுமொத்தத்தில் பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சி 2008-ம் ஆண்டில் 57 ஆயிரத்து 900 கோடி ருபாயாக இருந்து 2009-ம் ஆண்டில் 58 ஆயிரத்து 700 கோடி ருபாயாக அதிகரித்தது. அது இந்த ஆண்டில் 65 ஆயிரத்து 200 கோடி பாயாக எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 11.2 சதவீத வளர்ச்சி என்று வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

அடுத்த சில வருடங்களுக்கு இந்த உற்சாகமான வளர்ச்சி தொடரும் என்று கணிக்கிறார்கள் வல்லுநர்கள். இதன் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் 12.5 சதவீதமாக இருக்கும். வருகிற 2013-ம் ஆண்டுவாக்கில் இத்துறையின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 5 ஆயிரத்து 200 கோடி ருபாயாக இருக்கும் என்கிறார்கள். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருந்து வந்தது.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை நிபுணரான ராஜேஷ் ஜெயின் இதுபற்றி விளக்கிக் கூறுகையில், “இத்துறையில் மதிப்பிடப்பட் டிருக்கும் 12.5 சதவீத வளர்ச்சிக்கு சில முக்கியக் காரணிகள் இருக்கின்றன. அவை, இந்தியப் பொருளாதாரத்தின் நீண்ட, வலுவான அடிப்படை, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரங் களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் விளம்பர பட்ஜெட் அதிகரிக்கும் வாய்ப்பு, அதிகரித்துவரும் ஊடக ஊடுருவல் மற்றும் சாதகமான சூழல் போன்றவை ஆகும்” என்கிறார்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பெரும் பங்கு வகிப்பவை தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள். இத்துறையின் 70 சதவீத வருவாய்க்கு ஆதாரமாக இருப்பவை இவையே. இவற்றின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `கேமிங்’ மற்றும் இணையம் நல்ல வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகின்றன. அதே நிலை வருங்காலத்திலும் தொடரும் என்று கருதப்படுகிறது.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

அர்த்த’ என்றால் ‘பாதி’ என்று பொருள். அதாவது பாதி திருகிய நிலை ஆசனம் என்பதாகும். யோகி மச்சேந்திரர் இந்த ஆசனத்தை ஹடயோக மாணவர்களுக்கு முதன்முதலாகக் கற்றுக் கொடுத்தார். அதனால் அவனுடைய பெயர் இந்த ஆசனத்திற்கு வைக்கப்பட்டது.
செய்முறை
1. கால்களை முதலில் நேராக நீட்டி விரிப்பின் மீது விறைப்பாக நேரே நிமிர்ந்து உட்காரவும்.
2. வலது காலை மடக்கிக் கொள்ளவும்.
3. வலது கணுக்காலின் மேல் உட்கார்ந்து கொள்ளவும்.
4. இடது காலைத் தூக்கி, கீழே வைக்கப்பட்டிருக்கும் வலது காலுக்குக் குறுக்கே அப்புறம் (வலப்புறம்) கொண்டு சென்று வைக்கவும். இடது காலை இன்னமும் தரைப்பக்கம் அமர்த்தி பாதத்தைப் பிறப்பு உறுப்புக்குக் கீழே அமைத்துக் கொள்ளவும். இடது முழங்கால் செங்குத்தாய் நிற்பதுபோல் இருக்கவும்.
5. வலது கையின் கை இடுக்கிற்குள் இடது முழங்காலானது போகும் வண்ணம் செய்யவும்.
6. பின்னர் வலது உள்ளங்களையினால் வலது கால் மணிக்கட்டைப் பிடித்துக் கொள்ளவும்.
7. இடது கையை முதுகுப்பக்கம் கொண்டு வரவும்.
8. இடது கையினால் இடது கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும்.
9. மூச்சை விட்டுக்கொண்டே இடது பக்கமாக இடுப்பை நன்றாகத் திருப்புங்கள். மார்பை நேராக நிறுத்தி வைக்கவும்.
10. தலையை நன்றாகத் திருப்புங்கள்.
11. அப்போது உங்களின் கண்பார்வை இடது பக்கமாக அமையக் கூடாது. வலது பக்கம் உள்ள பொருட்கள் மீது நிலைபெற வேண்டும்.
12. இவ்வாறு இரண்டு மூன்று முறை செய்தபின் சிறிது சிறிதாகப் பிடிகளைத் தளர்த்தி கை, கால்களை விடுவித்து யதார்த்த நிலைமைக்குத் திருப்பவும்.
பலன்கள்
1. நரம்புத்தளர்ச்சி அடைந்தவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறது. முதுகெலும்பினை வளைத்து நெகிழுந்தன்மையானதாக்கி, வளமுடன் செயல்படச் செய்கிறது. வயிற்றுத் தசைகளை வளமாக்குகிறது. முதுகெலும்புப் பகுதி முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. பிடரியில் ஓடக்கூடிய நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.
3. நோய்களை உருண்டு திரளச் செய்கிறது.
4. இடுப்புவலி, முதுகு வலிகளைப் பறந்தோடச் செய்யும்.
5. வயிற்றுக் கோளாறுகளை நீக்குகிறது. மலச்சிக்கல், பசி மந்தத்தையும் இது நீக்கும். சிறுநீரக நோய்கள் நீங்கும்.
6. இளமையுடன் இருக்கச் செய்யும் ஆசனம் இது.