Daily Archives: ஏப்ரல் 23rd, 2010

துணி துவைக்கும் ரோபோ

இயந்திர மனிதனான ரோபோ பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. பொதுவாக மனிதனால் நேரடியாக செய்ய முடியாத ஆபத்தான வேலை களில் ரோபோக்கள் பயன்படுத்தப் படும். இப்போது துணியை துவைத்து அயர்னிங் செய்யவும் ரோபோ வந்துவிட்டது.

அமெரிக்காவில் உள்ள ரோசி பல்கலைக்கழகமும் வில்லோ கேரேஜ் என்ற அமைப்பும் இணைந்து துணிதுவைக்கும் ரோபோவை அறிமுகப் படுத்தி உள்ளன.

துவைப்பதும், அதை அழகாக தேய்த்து மடிப்பதும் ஒரு கலை. ரோபோ இந்தப்பணியை செய்து விடுமா? என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் ரோபோவை அறிமுகப்படுத்தியபோது அதன் பணியைப் பார்த்தவர்கள் வியந்து போனார்கள்.

அது 50 துணிகளை மனிதர்களைப் போலவே தண்ணீரில் அமிழ்த்தியது. பிறகு வேகமாக மேலும் கீழுமாக முக்கி முக்கி எடுத்துத் துவைத்தது. துணிகள் உலர்ந்ததும் துணியை அழகாக அயர்னிங் செய்தது. நேர்த்தியாக மடிப்பு விழும்படியாக தேய்த்து செவ்வக வடிவில் மடித்து வைத்து விட்டது.

தங்கும் விடுதிகளில் ஆபிஸ் பையன் போல இந்த ரோபோ பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. எதிர்காலத்தில் வீடுகளுக்கும் இந்த ரோபோ பயன்பாட்டுக்குவரும் என்று எதிர்பார்க்கலாம்.

அழகில் புது விதம்…!

“இது அவசர உலகம். இங்கே யாருக்கும், எதையும் நிதானமாக எடுத்துச் செய்வதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கிற சிறிது நேரத்தை பயன்படுத்தி தங்களை விரைவாக அழகுபடுத்திக்கொண்டு பயணப்படுபவர்கள் அதிகம். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப சுறுசுறுப்பு.

இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் வென்று வருகி றார்கள். எனவே அதற் கேற்றாற் போல் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள் வது மிக முக்கியம். பணிபுரி வோர் அந்தந்த துறைக்கும் அவர்கள் வகிக்கும் பதவிக் கும் தகுந்தாற் போல் கூந் தலை வெட்டிக் கொள்வது அவசியம். வேலைக்கு சவுகரி யமான `ஹேர்கட்’ சமு கத்தில் அவர் களை மிடுக்காகவும், மரியாதையாகவும் காட்டும்.” என்கிறார், பிரபல அழகுக் கலை நிபுணர் மகாலெட்சுமி கமலக்கண்ணன்.

இவர் மறைந்த முன்னாள் தமிழக துணை அமைச்சர் ஐசரிவேலனின் மகள். கல்வியாளர் ஐசரி கணேஷின் சகோதரி. மகாலெட்சுமி தமிழக அரசு மகளிர் அழகு கலைபிரிவின் தேர்வாளர். மைலாபூரில் இயங்கும் மகா அழகுக்கலை பயிற்சி அகாடமியின் முதல்வர். பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அழகுக் கலை தொழில் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவர். மலேசிய அரசு அனுமதிடன் அங்கும் பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது வளர்ச்சியில் கணவருக்கு பெரும் பங்குண்டு.

“அழகுக்கலை குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை பெருக்க உதவியாக உள்ளது. வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுவதால் பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், பெண்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகுவதற்கு வாயப்பு உள்ளது. இந்த தொழிலில் பெண்களால் அதிக வருமானமும் ஈட்ட முடியும்.” என்கிறார், மகாலெட்சுமி.

தற்போதைய கூந்தல் கலாசாரத்தை பற்றி அவர் விளக்குகிறார்:

“கல்லூரி மாணவிகளுக்கு இப்போது `ஸ்ட்ரைட்டனிங்’ மீது மோகம் அதிகரித்துள்ளது. பொதுவாக, தெரபி வகைகளை ஆயூர்வேத தெரபி, பாடி தெரபி, பேசியல் தெரபி என்று கூறுவார்கள். அந்த வகையில் கூந்தலுக்கு செய்யும் தெரபியை `ஸ்ட்ரைட்டனிங் தெரபி’ என்பார்கள்.

சுருள் சுருளாகவும், அலை அலையாகவும் இருக்கும் முடியை நேராக்குவதே ஸ்ட்ரைட்டனிங் தெரபி ஆகும். இவ்வாறு ஸ்ட்ரைட்டனிங் செய்த கூந்தல் நவீனமாகவும், மிருதுவாகவும், பட்டு போல மென்மையாகவும், பளபளப்புடனும் தோற்றமளிக்கும். கூந்தலை ஸ்ட்ரைட்டனிங் செய்து கொள்ளும் கல்லூரி மாணவிகள் ரிவர்ஸ் லாங்ஸ் டெப் கட், கேஸ்கட் கட், காஸ்மோபாலிடன் கட், ரிவர்ஸ் க்ராஜீவேஜன் கட் ஆகிய முறைகளில் கூந்தலை வெட்டிக் கொண்டால் மிகவும் அழகாக இருப்பார்கள்.

முன்பெல்லாம் பிரபலங்களும், வசதி படைத்த வர்களும் தான் கூந்தலை கலரிங் செய் வார்கள். தற்போது இந்த மோகம் அனைவரிடமும் காணப்படுகிறது. தங்களை நாகரிக தோற்றம் கொண்டவர் களாகவும், அழகிய சாதாரண மற்றும் குடும்ப பாங்கான தோற்ற முடையவர்களாகவும் தயாராக்கிக் கொள்வதற்கு இந்த ஹேர்கலரிங் முறையை பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

இதில் 3 விதம் உள்ளது. அவை:

கிரே ஹேர் கவரேஜ் அதாவது நரைமுடியை நிறம் மாற்றுதல். குளோபல் ஹேர் கலரிங். ஹைலைட்ஸ் அல்லது ஸ்ட்ரீக்கிங் அதாவது கூந்தலை தனித் தனியாக பிரித்து வண்ணங்கள் பூசுவது.

இதுபோன்ற முறைகளில் கூந்தலுக்கு வண்ணம் தீட்டுவதால் பெண்களுக்கு மிடுக்கான தோற்றம் கிடைக்கிறது. இவ்விதமான கூந்தல் வண்ணங்களில் அல்ட்ரா வைலட் தடுப்பு பொருட்கள் இருப்பதால் அது சூரிய ஔ முடியில் பட்டாலும் கூட, சேதமடையாமல் பாதுகாக்கிறது. ஹைலைட்ஸ் விரும்பி செய்து கொள் பவர்கள் ஸ்லைடிங் கட், ரேசர் வித் டிம்மர் பாயின்டிங் கட், ரேவ் கட், டீவா கட் செய்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

வீட்டில் உள்ள பெண்மணிகள் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றால், உடனடியாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் ஒரிஜி னல் அட்டாச்சுடு ஹேர் பீஸை நிமிடத்தில் கிளி மாதிரி பொருத்திக் கொள்ளலாம். இது அழகு நிலையங் களுக்குச் சென்று செய்து கொண்ட கூந்தல் அலங்காரத்துக்கு இணையாக இருக்கும். நிகழ்ச்சிக்கு சிகை அலங்காரம் செய்து கொள்ளும் போது, அது எந்த மாதிரியான நிகழ்ச்சி அது காலை நேரமா அல்லது மாலை நேரமா அவரவர் வயது மற்றும் உறவு முறை ஆகியவற்றிற்கு ஏற்ப விதவிதமான கூந்தல் அலங்காரம் செய்து கொள்ளலாம்.

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன?

சமச்சீரற்ற முறையில் ஹார்மோன் சுரத்தல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வைட்டமின் பற்றாக்குறை, பொடுகு, டைபாய்டு, மலேரியா, தைராய்டு, நீரிழிவு, கூந்தலில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள். மேலும், அடிக்கடி சீயக்காய் போட்டு கூந்தலை கடினமாக தேய்க்கக்கூடாது. மென்மையாகவே கையாள வேண்டும்.

முடிஉதிர்வதைத் தவிர்க்க அழகு நிலையங்களில் முலிகைகளால் செய்த ஹெர்பல் ஹேர் பேக், ஸ்பெஷல் ஸ்பா ட்ரீட்மெட், டீ கன்டிஷனர், சீரம் ட்ரீட்மெட், வாசலின் ட்ரீட்மெட் ஆகிய முறைகள் கையாள படுகிறது.

கோடை கால கூந்தல் பராமரிப்பு முறை… நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுபெறும். குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சீத்தாபழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் முடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை முன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம். தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம். பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த முன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கு நீர் கலந்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.

டபுள் சைடு பிரெஞ்ச் ரோல்ஸ்

வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய டபுள் சைடு பிரெஞ்ச் ரோல்ஸ் வித் சுருள்கள் எப்படி போடுவது என்று பார்ப்போம். முதலில் முன் பகுதியை செட் செய்து விடவும். பின்பக்க முடியை 3 பாகமாக பிரிக்க வேண்டும். பக்கவாட்டில் உள்ள முடியை பின்பக்கம் வாரி வலது பக்கமாக சுருட்டி பிரெஞ்ச் ரோல் செய்யவும். அதே மாதிரி இடது பக்கம் வாரி, இடது பக்கமாக சுருட்டி பிரெஞ்ச் ரோல் செய்யவும். தலை உச்சியில் இருக்கும் நடுமுடியை எடுத்து 5, 6 சுருள் உருவாக்கவும். பின்பு, முத்துக்களையும், சிறு சிறு பிளாஸ்டிக் பூக்களையும் கோர்த்து உங்களுக்கு பிடித்த மாதிரி அலங்காரம் செய்து கொள்ளலாம்.

நன்றி- தினத்தந்தி

குழந்தைக்கு நீங்களே ஒரு ஆசிரியர்

பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியரை விட நீங்கள்தான் முதலும் முக்கியமான ஆசிரியர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அந்தக் குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டும். எதை செய்யக்

கூடாது போன்ற விஷயங்களை பெற்றோரிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறது.
நாம்தான் நமது குழந்தைகளுக்கு மனிதர்களுடனான் உறவுகள் குறித்து கற்றுத் தருகிறோம். யாரை விரும்ப வேண்டும் என்பதில் இருந்து யாரை

வெறுக்க வேண்டும் என்பது வரை…
ஒருவரை எப்படி மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்பதில் இருந்து, ஒருவரை எப்படி காயப்படித்த வேண்டும் என்பது வரையில்… நாம்தான் நமது

குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
எனவே நாம்தான் குழந்தைக்கு முதல் ஆசிரியர்கள்.
ஆனால், முதல் ஆசிரியர்களான நாம், குழந்தை பள்ளிக்கு செல்லத் தொடங்கியதும் நமது ஆசிரியர் கடமையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக

விலக ஆரம்பிக்கிறோம்.
அது தவறு.
குழந்தையின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு, இதைச் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடக் கூடாது. மழையில் நனையக் கூடாது. வெயிலில்

விளையாடக் கூடாது என்று எத்தனையோ கூடும்& கூடாதுகளை நாம் நமது குழந்தைகளுக்கு சொல்கிறோம்.
உடல் நலம் போன்றதுதான் கல்வி நலனும்.
ஆனால், கல்வி நலனைப் பொறுத்தவரையில் நமக்கு பொறுப்பு இல்லை. அதை பள்ளிகளும் ஆசிரியர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்று

நினைக்கிறோம்.
இந்த நினைப்பு தவறானது.
குழந்தைகளின் பள்ளி நடவடிக்கைகள், படிப்பு போன்றவற்றில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் பெற்றோர்களின் குழந்தைகள் பெரும்பாலும்

நன்றாக படிக்கிறார்கள் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
ஒவ்வொரு நாளும் உங்களது குழந்தை உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன என்று, உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு என்னால் முடியாது. நான் ஒன்றும் ஆசிரியர் அல்ல என்று நினைப்பது கூடாது.
பாடங்களை ஒருவேளை நம்மால் கற்றுக் கொடுக்க முடியாமல் போகலாம். ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை நம்மால்

கற்றுக்கொடுக்க முடியும்.
அதுதான் முதல் பாடம்.
வாழ்க்கையின் அடிப்படையான பல பாடங்களை நாம் குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தது போலவே படிப்பின் மீதான ஆர்வத்தையும் நாம் கற்றுக்

கொடுக்கலாம்.
இதற்கு குழந்தைகளுக்கென்றே நாம் சிறிது நேரத்தை ஒதுக்கி செலவழிக்க வேண்டும்.
இந்த செலவு ஒரு மூலதனம்தான்.
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் மூலதனம் போடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு லாபம் கிடைக்கும்.
தொழிலில் எப்போது, எப்படி எவ்வளவு மூலதனம் போட வேண்டும் என்று அறிந்து மூலதனம் செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும்.
அப்படித்தான் பிள்ளைகளுடன் எப்போது, எப்படி எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்று அறிந்து நேரம் செலவழிப்பது, குழந்தைகளின்

அறிவு மேம்படுவதற்கு உதவும்.

குழ‌ந்தைகளு‌க்கு பழ‌ங்க‌ள்

இதுவரை குழ‌ந்தைகளு‌க்கு ச‌ளி ‌பிடி‌க்கு‌ம் எ‌ன்ற காரண‌த்‌தி‌ற்காக த‌வி‌ர்‌த்து வ‌ந்த பழ‌ங்க‌ள், இள‌நீ‌ர் போ‌ன்றவ‌ற்றை கோடை‌க்கால‌த்‌தி‌ல் தை‌ரியமாக‌க் கொடு‌க்கலா‌ம்.

பழ‌ங்க‌ளி‌ல், ‌திரா‌ட்சை, த‌ர்பூச‌ணி, ஆர‌ஞ்சு, கமலா‌ப் பழ‌ங்க‌ள் த‌ற்போது அ‌திக அள‌வி‌ல் ‌கிடை‌க்‌கி‌ன்றன. இவ‌ற்றை குழ‌ந்தைகளு‌க்கு அ‌றிமுக‌ம் செ‌ய்யு‌ங்க‌ள்.

வெ‌ள்ள‌ரி‌க்கா‌யை அவ‌ர்க‌ள்‌ ‌விரு‌ம்பு‌ம் சுவை‌யி‌ல் கொடு‌ங்க‌ள். இ‌னி‌ப்பு சுவை ‌பிடி‌த்த குழ‌ந்தைகளு‌க்கு தே‌ன் ஊ‌ற்‌றியு‌ம், கார‌ச் சுவை ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு‌ உ‌ப்பு‌ம், ‌மிளகு தூளு‌ம் ‌தூ‌வி‌‌க் கொடு‌க்கலா‌ம்.

குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.

பழ‌ச்சாறுகளை‌க் கொடு‌ப்பத‌ற்கு ப‌திலாக பழ‌ங்களாக உ‌ண்பத‌ற்கு பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள். இதனா‌ல் நா‌ர்‌ச் ச‌த்து‌ம் ‌கிடை‌க்கு‌ம். தேவைய‌ற்ற ச‌ர்‌க்கரை‌ச் சேராம‌ல் தடு‌க்கலா‌ம்.

தனுராசனம்

வில் போன்று தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது இந்த ஆசனம். தனுர் என்ற சமஸ்கிருதச்

சொல்லுக்கு வில் என்று பொருள்.
இது சலபாசனமும் புஜங்காசனமும் இணைந்து உருவான ஆசனம். உடலின் தொப்புளுக்கு

மேற்பட்ட பகுதி புஜங்காசனத்தில் இருக்க, கீழ்ப்பகுதி சலபாசனத் தோற்றத்தில் இருக்கும்.

அதனுடன் கைகள், கால்களைப் பிடித்திருக்க முழங்கால் மடங்கி வில்போன்று

தோற்றமளிக்கும்.
முதுகெலும்பு பின்புறம் வளையும் புஜங்காசனம் ஒருவகை. தனுராசனத்தில் வேறு வகையாக

அமையும்.
செய்முறை
1. ஒரு விரிப்பை நீளவாட்டில் மடித்து அதன்மீது குப்புறப்படுக்கவும்.
2. கால்களை நீட்டிக் கொள்ளவும்.
3. இடக்கை விரலால் வலக்கால் கட்டை விரலைப் பிடித்துக் கொள்ளவும்.
4. மெதுவாக இடக்காலை பின்புறமாக மடக்கி வரவும்.
5. இந்த நிலையில் தொடை வயிறுக்குச் சமீபம் அமையும்.
6. இப்போது கைகள் இரண்டையும் முதுகுப்புறமாக நீட்டி மடங்கிய கால்களைப் பற்றிக்

கொள்ளவும்.
7. இந்நிலையில் வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் படிந்திருக்க வேண்டும். தலை தூக்கிய

நிலையில் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை இரண்டு நிமிடம் செய்யலாம்.
பயன்கள்
1. ஆஸ்துமா, மார்புச்சளி, ஈசினோபீலியா நோய்கள் குணமாகும்.
2. இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக்

கோளாறுகள் நீங்கும்.
3. அட்ரீனல் நாளத்தை நன்கு இயக்கி உடல் முழுவதும் சுறுசுறுப்படையச் செய்யும்.
4. பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச்

சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.
5. நரம்புகளும் முதுகெலும்பும் வளையும். கூன் முதுகு, முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும்.

சிறுநீரக நோய்கள் நீங்கும்.
6. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச்சதை குறையும்.
7. அஜீரணம், வயிற்று வலி நீங்கும்.