Daily Archives: ஏப்ரல் 24th, 2010

புதிய தனிமம் கண்டுபிடிப்பு

இதுவரை 116 வேதியியல் தனிமங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. தற் போது 117-வது தனிமத்தை விஞ் ஞானிகள் உருவாக்கி இருக்கிறார் கள்.

தனிமங்கள் பொதுவாக அவற்றின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் கொண்டு வகைப் படுத்தப்படுகிறது. புதிதாக உருவாக் கப்பட்டுள்ள தனிமம், கால்சியம் மற்றும் பெர்கிலியம் தனிமங்களை மோதச் செய்து தயாரிக்கப்பட்டது. இதற்கு தற்காலிகமாக `அன்அன்செப்டியம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் இணைந்து இந்த தனிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தனிமம் இதுவரை உள்ள தனிமங்களைவிட உறுதியானதாகவும், எடைகூடியதாகவும் இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் இந்த தனிமத்தைக் கொண்டு தனித்திறன்மிக்க பொருட்களை தயாரிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்த ஆய்வு கட்டுரை வேதியியல் தலைமை அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் இந்த தனிமம் புதிய பெயருடன், லாந்தனைடு தனிம அட்டவணையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லா… குடிங்க..!

என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும். ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய்வதால் தான் சிறுநீரக பிரச்னை, குடல் பிரச்னை என்று எதுவும் வராது.

நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? இது தான் பலரின் கேள்வி. ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது. பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின். ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது. தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு. வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை சாறு பிழிந்தோ குடிக்கலாம்.

மலேரியாவால் பல லட்சம் பேர் பலியாகும் அவலம் ; கொடூர கொசு ஒழிக்க புதிய கண்டுபிடிப்பு வருமா ?நாளை ( 25 ம் தேதி ) உலக மலேரியா தினம்

உலகளவில் அணு ஆயுதம் தயாரிப்பில் பல நாடுகள் போட்டி போட்டு வரும் இந்நேரத்தில் சிறிய அளவிலான உருவம் கொண்ட இந்தக்கொசுவை ஒழிக்க இன்னும் முழு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேவலம் கலந்த கவலை தரும் செய்தி ஆகும். நாட்டில் அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நமது முன்னோர்கள், நாட்டுக்கு உழைத்த நல்லோர்கள் கனவு இன்னும் நிறைவேறவில்லை என்றே சொல்லலாம். கழிவுநீர் போக்கு, குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் கழிவு நீர் , அழுகும் பொருட்களின் அழிப்பு தன்மையில் நாம் காட்டும் சுணக்கம் இவையாவும் கொசுவை உயிர்ப்பிக்கும் மூலதனமாக அமைந்து விடுகிறது.

நோய்களின் மூலதனம் : அடிப்பை பிரச்னைகள் தீர்க்கப்டாமல் இருக்கும் போது தானாக இவை முளைத்து விடுகிறது என்பதுதான் உண்மை. இந்த கொசு அளவில் சிறியதாக இருந்தாலும் யானைக்கால் போன்ற பெரும் நோயை பரப்புவதில் பெரும் பலம் கொண்டதாகவே இருக்கிறது. பன்றிக்காய்சல், வாந்திபேதி, உள்ளிட்ட வரிசையில் மலேரியா முக்கிய பிரச்னையாக இருக்கிறது. சமீப காலத்தில் சிக்குன்குனியா பலரை நடக்க விடாமல் இருந்ததை கொசுக்கள் ஓடி , ஓடி ரசித்திருக்கலாம். கை வலி, கால் வலி என பலர் வீட்டுக்குள் முடங்கி போயினர். தமிழகம் முழுவதும் உள்பட பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாயினர்.

2009 ம் ஆண்டின் கணக்கின்படி இந்தியாவில் 1. 5 மில்லியன் பேர் இந்த மலேரியாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் , மேற்குவங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தாக்கம் அதிகம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் சேரி மற்றும் குடிசை வாழ் பகுதிமக்களுக்கு மலேரியா தாக்க்கம் அதிகம். இந்தியாவில் மலேரியா ஒழிக்க பல்வேறு திட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென பல கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது.

உலக வங்கியின் உதவி : கொசுக்கள் பரப்பும் மூர்க்கத்தனமான மலேரியா நோயினால் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறப்பதாகவும் இதில் அதிகம் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள் அதிக சதம் பாதிக்கப்படுகின்றனர் என யுனிசெப் கூறியுள்ளது. மலேரியா ஒழிப்பு தொடர்பான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் முழுக்கவனம் செலுத்த வேண்டும். மேலும் விழிப்புணர்வு பிரசாரமும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த அமைப்பு எக்ஸ்கியூடிவ் டைரக்டர் அன் வியன் கூறியுள்ளார். மலேரியாவை ஒழிக்க தேவைப்படும் கொசு வலைகள் வாங்கி வழங்கும் விதமாக 200 மில்லியன் டாலர் நிதியாக உலக வங்கி இந்த ஆண்டு வழங்குகிறது.

ஏற்கனவே இது வரை உலக வங்கி மூலம் இது வரை 200 மில்லியன் வலைகள் உலக வங்கி நிதி மூலம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக தயாரிக்க தற்போதும் நிதி அளிக்க ஐ.நா., வின் வேண்டுகோளை ஏற்று முன்வந்துள்ளது உலக வங்கி. கொசு மூலம் பலியாகும் எண்ணிக்கை அதிகம் ஆப்ரிக்காவில்தான், இந்நாட்டில் இறக்கும் 5 குழந்தைகளில் ஒன்று மலேரியாவால்தான் இறக்கும். காங்கோ, கானா, கென்யா, ஜாம்பியா மொசம்பிக் உள்ளிட்டவைகள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உலக வங்கி தலைவர் ராபர்ட் ஷாலிக் கூறியுள்ளார்.

கொசு மற்றும் மலேரியாவை ஒழிக்க கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்த அமைப்பு தென்கிழக்கு ஆசியாவுக்கான டைரக்கடர் சம்லி பிளங்பாங்சங் கூறுகையில் ; ஆண்டுக்கு தோராயமாக 2. 5 மில்லியன் பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். உண்மை கணக்குப்படி பார்த்தால் இதனை விட அதிகமாக்தான் இருக்கும். 20 முதல் 30 மில்லியன் வரை பாதிக்கப்படுவதாகவும், இதில் ஒரு லட்சம் பேர் இறப்பதாகவும் மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் மலேரியா ஒழிக்கும் பணி திருப்தி அளிக்கிறது. பெரும் அச்சுறுத்தலாக உள்ள மலேரியாவை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருசேர உழைக்க வேண்டும் என்றார். அணு ஆயுதம் தயாரிக்க யோசிக்கும் நாடுகள் கொசு ஒழிப்பு மருந்தை தயாரிக்க முன் வரலாமே ! நாளை ( 25 ம் தேதி ) உலக மலேரியா தினம்

ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?

* தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.

* திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.

* திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு க0ளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.

* வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியு லகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம். தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

* ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.

* தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர் .

மகள் தாயிடம் மோதுவது ஏன்?

ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெண் பக்குவமான மனநிலையை இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது. தெய்வத்தின் மறுஉருவமாகவே நடந்து கொள்கிறாள். ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அவளது கையில் தான் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்வது தாய் தான்.

அரவணைப்பு

ஒரு தாய் தன் பிள்ளை என்னதான் தவறே செய்தாலும், அவளை அரவணைத்தே செல்வாள். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாமல் இருக்கும் போது தான் அதன் அருமை தெரியும். அதே போல் தான் தாயின் அருமையும்.

பள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள். அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உணவைத் தயார் செய்து கொடுப்பாள். அவளது முதுகைத் தட்டிக் கொடுத்து செல்லமாகத் தூங்க வைப்பாள். ஆனால், ஒருநாள் தாய் வெளியூர் சென்றாலும் கூட, அவள் இல்லாமல் தனிமையில் தவித்துக் கொண்டு இருப்பாள் மகள். அப்போது தாய் அவளுக்குச் செய்த கடமைகளைத் தற்போது `தானே செய்ய வேண்டிள்ளதே’ என்று எண்ணி வருத்தபடுவாள். தள்ளி இருக்கும் போது தான் அம்மாவின் பணிவிடைகள் மகளுக்குத் தெரியத் தொடங்கும்.

தியாகம்

பருவ வயது பெண்களுக்கு அம்மா மேல் அவ்வளவாக பிரியம் வருவதில்லை. தன்னை போல நவீனமாக அம்மா யோசிப்பதில்லை. மதம், சமயம், பக்தி, கருத்துக்கள் என்று பழைய நடைமுறைகளுடனே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறாள் என்பதே அவர்களது எண்ணத்திற்கு காரணம்.

புரிந்து கொள்ளுங்கள்

தன்னால் சாதிக்க முடியாததை மட்டும் என் மீது சுமத்துகிறாள் என்று தன் தாயிடம் பருவவயது மகள் குறை காண்கிறாள். ரசனைகள், விருப்பங்கள், தேர்வுகள் இவை ஒவ்வொரு தலைமுறையிலும் மாறிக் கொண்டே இருக்கும் என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் எது நல்ல விஷயமோ அதை கடைபிடித்து வாழ்வதே உத்தமம்.

தாயானவள் தன் காலத்தில் எப்படி முழுமை பெற்று நின்றாளோ, அதேபோல் மகளும் அவள் காலத்தில் முழுமை பெற்று நிற்கும் போது பெருமைபட வேண்டுமே தவிர, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளக் கூடாது.

வேண்டாமே `பெரிய மனுஷித்தனம்’

அம்மாவை நிறைவு பெற வைக்க அவள் கூட உட்கார்ந்து உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். உங்கள் சுமையில் பாதியை அவள் இதயத்தில் சுமக்கத் தொடங்கிவிடுவாள். பல குடும்பங்களில் சிக்கல்கள் உருவாக முக்கிய காரணம் போதிய தகவல் தொடர்பு இல்லாதது தான். ஒரு கட்டத்துக்கு பின் அம்மாவிடம் எதையுமே சொல்லாமல் நாமே பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு பெண் பிள்ளைகள் வந்து விடுகிறார்கள். இந்த `பெரிய மனுஷித்தனம்’ தேவையற்ற இடைவெளியை அம்மா விடம் ஏற்படுத்தி விடும்.

பிறந்தது முதல் படிப்படியாக வளர்ந்துவரும் தன் பெண்ணின் தேவையை அம்மாவால் புரிந்து கொள்ள முடியாதா?

`உனக்கு ஒண்ணும் தெரியாது? சும்மாயிரு’ என்று சொல்லும்போது அம்மா மனதளவில் உடைந்து விடுகிறாள். இதுவே பெரிய குறையாக நாளடைவில் அவளுக்குள் வளர்ந்து விடுகிறது. வலி காணும் மனதுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பவள் தாய் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீங்கள் தப்பே செய்து விட்டு வந்தாலும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் தான் தாய். அவளை புரிந்து கொள்வதற்கு தேவை, பொறுமை மட்டுமே.

பழங்களால் ஏற்படும் அலர்ஜிகள்!

`பழங்கள் சாப்பிடலாமா?’ என்று ஒருவர் கேட்டால் `இதென்ன அபத்தமான கேள்வி?’ என்றுதான் பதில் வரும். பழம் என்றாலே நமக்கு உடனே தோன்றுவது ஆரோக்கியம்தான். அன்றாடம் பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் காக்கும். உடலுக்குத் தேவையான சத்துகளை அளிக்கும். நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், நார்ச்சத்துகள், தாது உப்புகள் ஆகியவற்றை அள்ளி வைத்திருக்கின்றன பழங்கள்.

எல்லாம் சரி. ஆனால் பழங்கள் சில `பகீர்’களை ஏற்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரிமா?

`பழ அலர்ஜி’ என்ற ஒன்று உண்டு. பிற ஒவ்வாமைகளை போல இதுவும் படுத்தி எடுத்துவிடும்.

பழ அலர்ஜியா… அப்படி ஒன்று உண்டா என்கிறீர்களா?

ஆமாம். சிலரது உடம்பு சிலவகை உணவுகளை ஏற்றுக்கொள்வது இல்லை. அவற்றில் பழங்களும் அடக்கம். சிலருக்கு பப்பாளி ஒத்துக்கொள்ளாது, சிலருக்கு திராட்சை ஒத்துக்கொள்ளாது, சிலருக்கு ஆப்பிளும் கூட!

நமது உடம்பு, பழ அலர்ஜியை எந்த அளவு தாங்குகிறது என்பதை பொறுத்து `ரியாக்ஷன்கள்’ உடனேயோ, தாமதமாகவோ வெளிப்படலாம். ஆக, ஒரு பழம் உங்களுக்கு ஒவ்வாமைத் தன்மையைக் காட்டினால் அதை புறக்கணித்து விட்டு, ருசியாக இருக்கிறது, பிடித்திருக்கிறது என்று புகுந்து விளையாடி விடாதீர்கள். மற்ற ஒவ்வாமைகளை போலவே பழ ஒவ்வாமையும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

காரணங்கள் என்ன?

`பழ அலர்ஜி’க்கு மரபணு ரீதியாக, பராம்பரிய அடிப்படையிலான காரணங்கள் இருக்கலாம்.

வைரஸ் கிருமித் தொற்று போன்ற சில நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்கு உடம்பானது `பிரக்டோஸை’ ஏற்காமல் அதை வெளியே தள்ள பார்க்கும். பெரும்பாலான பழங்களில் `பிரக்டோஸ்’ அதிகளவில் உள்ளது. அதை உடம்பு ஏற்காதபோது பழத்தை ஏற்காதது மாதிரி தெரிகிறது.

அடுத்தது, காலநிலை மாற்றம். காலநிலை மாறுபடும்போது சில பழங்களைச் சாப்பிடுவது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். பருவமழைக் காலத்தின்போது திராட்சை அல்லது `சிட்ரஸ்’ அளவு அதிகமுள்ள பழங்களைச் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் சில நோயாளிகளுக்கு அறிவுரை கூறுவது இதனால்தான். சுற்றுபுறச் சூழலில் ஏற்கனவே சில நோய்த்தொற்றுகள் இருக்கும்போது, சில பழங்கள் அதை வேகபடுத்தக் கூடும்.

சிலவேளைகளில் பழங்களில் இருந்து அதிகமாக வெளிபடும் வேதிபொருட்கள் செரிமான அமைப்பை அதிகமாகச் செயல்பட வைத்து, ஒவ்வாமை நிலைமைக்குத் தள்ளலாம்.

அறிகுறிகள்

பழ ஒவ்வாமையின் அறிகுறிகள் என்னென்ன? அரிபு, தொடை வீக்கம், வாந்தி, வாந்தி உணர்வு, வயிற்றில் சங்கடம், உதடு வீக்கம், உடம்பில் தடிப்பு, சிவத்தல், வயிற்று போக்கு, உச்சபட்சமாக ஆஸ்துமா, அதிலும் மோசமாக மரணம் கூட!

என்ன செய்வது?

ஒருவருக்கு அன்றாட உணவில் அவசியமானவை தான் பழங்கள். உங்களுக்கு ஒரு பழம் ஒவ்வாமையை ஏற்படுத்துவது உறுதியானால், அந்த பழத்தால் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பை நீங்கள் தகுந்த மாற்று உணவால் சரிபடுத்த முன்வர வேண்டும்.

பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, அதை சமைத்துச் சாப்பிடும்போது அதன் ஒவ்வாமைத் தன்மைகள் வெகுவாகக் குறைகின்றன. எனவே பழத்தை `பேக்கிங்’ செய்து அல்லது பதப்படுத்திச் சாப்பிடுவது மோசமான யோசனை அல்ல. அதன் முலம், குறிபிட்ட பழத்தால் கிடைக்கும் சத்துகளை நீங்கள் இழக்க மாட்டீர்கள். ஆனால் அதை விட நல்லது, ஒவ்வாமையை ஏற்படுத்தும் பழத்தை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவது. அதற்கு பதிலாக நீங்கள் மாற்று உணவுகளை நாடலாம்.

பழங்களின் தோலில் படிந்துள்ள பூச்சிக்கொல்லிகளும், விவசாய வேதிபொருட்களும் கூட பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே பழத்தின் தோலை உரித்துவிட்டால் சில வேளைகளில் பிரச்சினை தீர்ந்துவிடும்.

பழம்தானே என்று அலட்சியமாக இல்லாமல், அதிலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பிரச்சினை இல்லை!

பெண்ணுக்கு பெருமை கிடைத்தது எப்படி?

சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், “என்னப்பா விஷயம்..?” என்று கேட்டார்.

“சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன்-மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்த வள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்?” என்று கேட்டான் அந்த இளைஞன்.

இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படிம் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல்.

“சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், “அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்” என்றார்.

அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை.

2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தை பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.

“சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது…” என்று சொல்லி மேல் முச்சு கீழ் முச்சு வாங்கினான்.

அப்போது விவேகானந்தர் சொன்னார்…

“உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாளே… அதற்காக அவள் உன்னைபோல் அலுத்துக்கொள்ளவில்லையே… அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்…” என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.

ஆனாலும், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பெண்மைக்கு கொடுக்கபடும் முக்கியத் துவம் – அங்கீகாரம், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்கு அளிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றே.

பெண் என்றால் கணவனுக்கு அடங்கித்தான் போக வேண்டும், வீட்டு பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மாத்திரமே செய்ய வேண்டும், யாரையும் எதிர்த்து ஒரு சொல்கூட பேசக்கூடாது… என்றெல்லாம் அவளுக்கு கட்டுபாடுகள் விதிக்க படுகின்றன.

இப்படி கட்டுபாடுகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் என்ற பெண்மைக்கே உரிய குணங்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளிடம் மாறாமல் இருந்து அவளது தனித்துவத்தை விளக்குகிறது.

உபதேசம், அறிவுரை என்று வந்தாலும் கூட, மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு அறிவுரை கூறக்கூடியவள் பெண் மாத்திரமே!

ஒருமுறை புத்தரின் சீடன் ஒருவன் வறியவன் ஒருவனுக்கு உபதேசம் செய்தான். ஆனால், அவன் அதை கேட்கவில்லை. உடனே, அந்த சீடனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

நேராக புத்தரிடம் சென்றான். “குருவே! தாங்கள் உபதேசம் சொன்னால் மக்கள் உடனே ஏற்றுக்கொள்கிறார்கள். நான் ஒரு ஏழ்மையானவனிடம் உபதேசம் சொன்னேன். ஆனால், அவன் அதை கேட்கவில்லை; அதன்படி நடந்துகொள்ளவும் இல்லை…” என்று கூறி குறைபட்டுக் கொண்டான்.

அதற்கு புத்தர் பதில் ஏதும் சொல்லவில்லை. அந்த ஏழ்மையானவனை தன்னிடம் அழைத்து வருமாறு மட்டும் சீடனிடம் கூறினார்.

மறுநாள் அந்த ஏழ்மையானவனோடு புத்தரிடம் வந்து சேர்ந்தான் சீடன். ஏழ்மை யானவனை மேலும் கீழும் பார்த்தார் புத்தர். பசிக்கொடுமையால் எலும்பும் தோலுமாக இருந்தான் அந்த ஏழ்மையானவன். அவனுக்கு சுவை மிகுந்த உணவை கொடுத்து உட்கொள்ளச் செய்த புத்தர், இனி  வீட்டுக்குச் செல் என்றார்.

புத்தரின் சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. உபதேசம் செய்வார் என்று பார்த்தால், சாப்பாடு போட்டு அனுப்புகிறாரே என்று எணினான்.

அப்போது புத்தர் சொன்னார்…

“இப்போது அவனுக்குத் தேவை உபதேசம் அல்ல. அவனது பசியை போக்க தேவையான உணவுதான். அந்த உணவுதான் இப்போது அவனுக்கு உபதேசம்” என்றார்.

புத்தர் ஒரு ஆணாக இருந்தாலும் கூட, ஒரு தாய்மைக்கே உரிய பொறுமையான பக்குவத்தோடுதான் உபதேசங்கள் செய்தார். அதனால்தான் அவரது அறிவுரைகளை மக்கள் கேட்டார்கள். அதன்வழி நடந்தார்கள்.

ஆனால், ஆண்களில் பெரும்பாலானோர், பசிக்கு வருந்தியவனிடம் உபதேசம் செய்து கோபப்பட்ட சீடனாகவே இருக்கிறார்கள்.

மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு நடந்து கொள்வதாலும் பெண்களை நாம் போற்றுகிறோம். இதில் விதிவிலக்காக சில பெண்களும் உண்டு. அவர்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இன்றைய கணவன்-மனைவியரில் பலரது பிரச்சினையே, ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். எதையும் பொறுமையாக கடைபிடித்தால் பிரச்சினை தானாகவே விலகிபோகும்.

இந்த விஷயத்தில் ஒரு ஆண், பெண்ணிடம் இருந்து எப்படி வேறுபடுகிறான்? குடும்பத்திற்குள் பிரச்சினை என்றால் சட்டென்று பதற்றபடக்கூடியவன் ஆணாகிய கணவன் தான். அந்த பதற்றத்தில் அவன் பிரச்சினைக்குரிய தீர்வையே மறந்து போகிறான். ஆனால், மனைவிதான் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துச் சொல்கிறாள். (டி.வி. சீரியல்களில் ஒரு குடும்பத்தை எப்படி இரண்டாக உடைக்கலாம் என்று பெண்கள் போடும் திட்டங்களை இதில் சேர்க்க வேண்டாம்!). ஒரு ஆண், தனது பலத்தால், அதிகாரத்தால் எதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்று கணக்கு போடுகிறான். இவர்கள் போடுவது தப்புக் கணக்கு. ஆனால், பெண்கள் போடும் மனக்கணக்குதான் எபோதும் ஜெயிக்கிறது. விட்டுக்கொடுத்து போகத் தெரிந்த பெண்கள் இந்த கணக்கில் எப்போதுமே நுற்றுக்கு நுறு வாங்கி விடுகிறார்கள். எப்போதுமே ஒரு ஆணிடம் `தான்’ என்ற அகங்காரம் இருக்கிறது. நடைமுறை சூழ் நிலைகளால் அந்த அகங்காரம் சிறு வயதிலேயே அவனது முளையில் பதிவு செய்ய பட்டு விடுகிறது. அதனால், மனைவிக்கு அவன் உத்தரவு இடுபவனாகவே செயல்படு கிறான். மனைவிதான் அவனது உத்தரவை செயல்படுத்த வேடும் என்கிற எழுத படாத சட்டத்தால், அவள் பல அனுபவங்களை பெற்று, மன தளவில் பக்குவம் அடைந்து விடுகிறாள். தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்றால் கூட, ஆண் தனக்கு பிடித்த சினிமாவைக் காணவே மனைவியையும், குடும்பத்தினரையும் அழைத்துச் செல்கிறான். இந்த விஷயத்தில் மனைவியின் கருத்தைக் கேட்பது தனக்கு அவமானம் என்று கருதுகிறான் அவன். வீட்டில் சமையல் என்றாலும், தனக்கு பிடித்த உணவைத்தான் பெண் சமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் – தேவைபட்டால் கட்டாயபடுத்தும் ஆண், தனது சேவையை மறுபேச்சு கேட்காமல் செய்யும் பெண்ணின் எதிர்பார்பை கேட்டு தெரிந்து கொள்ளவே மறந்துபோய் விடுகிறான். வரன் பார்க்கும் விஷயத்தில் கூட ஆணின் கையே ஓங்கி இருக்கிறது. தனக்கு இப்படிபட்ட பெண்தான் வேடும் என்று நினைத்ததை சாதித்துக் கொள்கிறான் அவன். ஆனால், பெண்தான் பாவம். தனது கருத்தை வெளிபடுத்த முடியாமல் மனதிற்குள் புழுங்கித் தவிக்கும் அவளுக்கு எதிர்பாரப்புக்கு மாறான கணவனே பெரும்பாலும் வந்து சேர்கிறான். ஆனாலும், பொறுத்துக்கொண்டு அவனோடு குடும்பம் நடத்துகிறாள். ஆசைகளை மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள்.

– இப்படி, தனக்காக அன்றி பிறருக்காக தனது வாழ்க்கையையே அர்பணித்துக் கொள்ளும் பெண்ணுக்குள் பாசம் மட்டும் இல்லையேல், இவை எல்லாம் சாத்தியபடாமல் போய் இருக்கும் என்பது மட்டும் உண்மை!