Advertisements

மலேரியாவால் பல லட்சம் பேர் பலியாகும் அவலம் ; கொடூர கொசு ஒழிக்க புதிய கண்டுபிடிப்பு வருமா ?நாளை ( 25 ம் தேதி ) உலக மலேரியா தினம்

உலகளவில் அணு ஆயுதம் தயாரிப்பில் பல நாடுகள் போட்டி போட்டு வரும் இந்நேரத்தில் சிறிய அளவிலான உருவம் கொண்ட இந்தக்கொசுவை ஒழிக்க இன்னும் முழு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேவலம் கலந்த கவலை தரும் செய்தி ஆகும். நாட்டில் அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நமது முன்னோர்கள், நாட்டுக்கு உழைத்த நல்லோர்கள் கனவு இன்னும் நிறைவேறவில்லை என்றே சொல்லலாம். கழிவுநீர் போக்கு, குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் கழிவு நீர் , அழுகும் பொருட்களின் அழிப்பு தன்மையில் நாம் காட்டும் சுணக்கம் இவையாவும் கொசுவை உயிர்ப்பிக்கும் மூலதனமாக அமைந்து விடுகிறது.

நோய்களின் மூலதனம் : அடிப்பை பிரச்னைகள் தீர்க்கப்டாமல் இருக்கும் போது தானாக இவை முளைத்து விடுகிறது என்பதுதான் உண்மை. இந்த கொசு அளவில் சிறியதாக இருந்தாலும் யானைக்கால் போன்ற பெரும் நோயை பரப்புவதில் பெரும் பலம் கொண்டதாகவே இருக்கிறது. பன்றிக்காய்சல், வாந்திபேதி, உள்ளிட்ட வரிசையில் மலேரியா முக்கிய பிரச்னையாக இருக்கிறது. சமீப காலத்தில் சிக்குன்குனியா பலரை நடக்க விடாமல் இருந்ததை கொசுக்கள் ஓடி , ஓடி ரசித்திருக்கலாம். கை வலி, கால் வலி என பலர் வீட்டுக்குள் முடங்கி போயினர். தமிழகம் முழுவதும் உள்பட பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாயினர்.

2009 ம் ஆண்டின் கணக்கின்படி இந்தியாவில் 1. 5 மில்லியன் பேர் இந்த மலேரியாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் , மேற்குவங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தாக்கம் அதிகம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் சேரி மற்றும் குடிசை வாழ் பகுதிமக்களுக்கு மலேரியா தாக்க்கம் அதிகம். இந்தியாவில் மலேரியா ஒழிக்க பல்வேறு திட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென பல கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது.

உலக வங்கியின் உதவி : கொசுக்கள் பரப்பும் மூர்க்கத்தனமான மலேரியா நோயினால் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறப்பதாகவும் இதில் அதிகம் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள் அதிக சதம் பாதிக்கப்படுகின்றனர் என யுனிசெப் கூறியுள்ளது. மலேரியா ஒழிப்பு தொடர்பான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் முழுக்கவனம் செலுத்த வேண்டும். மேலும் விழிப்புணர்வு பிரசாரமும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த அமைப்பு எக்ஸ்கியூடிவ் டைரக்டர் அன் வியன் கூறியுள்ளார். மலேரியாவை ஒழிக்க தேவைப்படும் கொசு வலைகள் வாங்கி வழங்கும் விதமாக 200 மில்லியன் டாலர் நிதியாக உலக வங்கி இந்த ஆண்டு வழங்குகிறது.

ஏற்கனவே இது வரை உலக வங்கி மூலம் இது வரை 200 மில்லியன் வலைகள் உலக வங்கி நிதி மூலம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக தயாரிக்க தற்போதும் நிதி அளிக்க ஐ.நா., வின் வேண்டுகோளை ஏற்று முன்வந்துள்ளது உலக வங்கி. கொசு மூலம் பலியாகும் எண்ணிக்கை அதிகம் ஆப்ரிக்காவில்தான், இந்நாட்டில் இறக்கும் 5 குழந்தைகளில் ஒன்று மலேரியாவால்தான் இறக்கும். காங்கோ, கானா, கென்யா, ஜாம்பியா மொசம்பிக் உள்ளிட்டவைகள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உலக வங்கி தலைவர் ராபர்ட் ஷாலிக் கூறியுள்ளார்.

கொசு மற்றும் மலேரியாவை ஒழிக்க கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்த அமைப்பு தென்கிழக்கு ஆசியாவுக்கான டைரக்கடர் சம்லி பிளங்பாங்சங் கூறுகையில் ; ஆண்டுக்கு தோராயமாக 2. 5 மில்லியன் பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். உண்மை கணக்குப்படி பார்த்தால் இதனை விட அதிகமாக்தான் இருக்கும். 20 முதல் 30 மில்லியன் வரை பாதிக்கப்படுவதாகவும், இதில் ஒரு லட்சம் பேர் இறப்பதாகவும் மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் மலேரியா ஒழிக்கும் பணி திருப்தி அளிக்கிறது. பெரும் அச்சுறுத்தலாக உள்ள மலேரியாவை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருசேர உழைக்க வேண்டும் என்றார். அணு ஆயுதம் தயாரிக்க யோசிக்கும் நாடுகள் கொசு ஒழிப்பு மருந்தை தயாரிக்க முன் வரலாமே ! நாளை ( 25 ம் தேதி ) உலக மலேரியா தினம்

Advertisements
%d bloggers like this: