Daily Archives: ஏப்ரல் 28th, 2010

முதல் உதவி-தலை கிறுகிறுத்தல்

இதயத்தின் மத்தியில் வலி, அழுத்தம், பிசைவதைப் போன்ற உணர்வு.மேற்புற வயிற்றில் நீடித்த வலி. நெஞ்சிலிருந்து பரவி, தோள்பட்டை, கழுத்து, தாடை, பற்கள், கைகள் என்று பரவும் வலி. குறைந்த சுவாசம். மயக்கம், தலை கிறுகிறுத்தல்.
கொட்டும் வியர்வை என்ன செய்யலாம்? அவசர சிகிச்சை பிரிவை நாடவும்

மயக்கமடைந்தால் சிகிச்சை-ஐத் தொடங்கவும். அதை மருத்துவரிடம் தெளிவுப்படுத்திவிட வேண்டும்.

மிருகங்களால் ஏற்படும் உபாதைகள்
வீட்டுப் பிராணிகளால் அதிகம் ஏற்படும் உபாதை இது. பூனையை விட நாய் அதிகம் கடிக்கும். ஆனால், பூனைக் கடியும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியதே. தடுப்பூசி போடப்படாத வீட்டுப் பிராணிகளாளும், பழக்கப்படாத பிராணிகள் கடிப்பதாலும் வெறிநாய்க்கடி மிருகங்களால் இந்நோய் அதிகம் பரவும். முயல், அணில் போன்றவை ஆபத்தற்றவை.

என்ன செய்யலாம்?
சிறிய காயம்: தோலை அதிகம் துளைக்காத மெலிதான கடி என்றால் பயப்பட வேண்டாம். காயத்தை சுத்தமாக சோப், தண்ணீர் கொண்டு கழுவலாம். கிருமிநாசினி போடலாம். கட்டு கட்டலாம்.
பெரிய காயம்- தோலைத் துளைத்த கடியாக இருந்தால், ரத்தப் பெருகினால், சுத்தமான துணி கொண்டு ரத்தத்தை கட்டுப்படுத்தி, உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
பரவும் நோய்: வீக்கம், சிவப்பாதல், அதிக வலி இருந்தால் உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும்.
வெறிநாய்க்கடி இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால், அல்லது கடித்த பிராணியைப் பற்றி தெரியாமல் இருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டும்.

மனிதக்கடி
சில சமயங்களில், விலங்குகளை விட மனிதர்கள் கடிப்பதால் ஏற்படும் பாதிப்பு தீவிரமடைந்து விடுகிறது. காரணம், மனிதர்களின் வாயில் உள்ள பாக்டீரியாக்கள், சண்டை போடும்போது கடித்து விட்டால், அது மனிதக்கடி
என்ன செய்யலாம்?
ரத்தக் கசிவு இருந்தால் அழுத்தி, கட்டுப்படுத்தவும் கிருமி நாசினி உபயோகிக்கவும்.
கட்டு கட்டலாம். அவசர மருத்துவ உதவி.

பூச்சிக்கடி, கொட்டு
பூச்சிக்கடி, கொட்டு மூலம் தோலில்  விஷத் தன்மை பரவும். எரிச்சல், அலர்ஜி ஏற்படும். பல சமயங்களில் இவை பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சில சமயம், காய்ச்சல், மூட்டு வலி ஏற்படலாம். சிலருக்கு மட்டுமே தீவிர பாதிப்புகள் (Anaphylaxi) ஏற்படலாம்.
அறிகுறிகள்: வீக்கம், அதிர்ச்சி, சுவாதிப்பதில் தடை.
தொல்லை தருபவை என்று பார்த்தால் தேனீ, குளவி, நெருப்பு எறும்பு போன்றவை. சிலந்தி, மூட்டைப் பூச்சி, கொசு போன்றகைகளால் பாதிப்பு அதிகமில்லை.
மெல்லிய பாதிப்புகளுக்கு
கொட்டு வாங்காமல் இருக்க, பாதுகாப்பான பகுதிக்குச் செல்லவும். கிரெடிட் கார்டு போன்ற தட்டையான பொருளால், கொடுக்கை சீவி விடவும். பிறகு, கடி வாயை சோப், தண்ணீர் போட்டு கழுவிவிடவும்.
கொடுக்கை பிடுங்கி எடுக்க முயற்சிக்க வேண்டாம் விஷம் பரவும். வீக்கமும் வலியும் அதிகரிக்காமல் இருக்க ஐஸ் துண்டால் ஒத்தடம் கொடுக்கலாம்.
தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்
கடுமையான விளைவுகளுக்கு –
கீழ்க்கண்ட விளைவுகள் இருந்தால், உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவை தொடர்பு கொள்ளவும்.
சுவாசிப்பதில் சிரமம் உதடு, தொண்டை வீக்கம், மயக்கம், கிறுகிறுப்பு, குழப்பம், அதிகப்படியான இதயத் துடிப்பு, எரிச்சல், குமட்டல், வாந்தி பாதிக்கப்பட்டவருடன் இருக்கும்பட்சத்தில் கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம் –

அலர்ஜிக்கா ஏதாவது மருந்தை கையில் வைத்திருக்கிறாரா என்று பார்க்கவும். படுக்க வைக்கவும், கால்களை தலையை விட உயர்த்தி வைக்கவும். இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும், போர்வையால் அவரைப் போர்த்தவும், குடிக்க எதுவும் தர வேண்டாம். வாயில் ரத்தக்கசிவு இருந்தால் அல்லது அவர் வாந்தி எடுத்தால், பக்கவட்டாக அவரைப் படுக்க வைக்கவும். மூச்சுத் திணறாமல் இருக்கும்.சுவாசம், இருமல் சீராக இல்லை என்றால்,சிகிச்சை-ஐத் தொடங்கவும்.

ஜிமெயிலில் எந்த பைலையும் அனுப்ப

இமெயில் பயன்படுத்தும் அனைவரும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றினைத் தொடங்குவார்கள். பின் அதனையே தங்கள் மெயின் அக்கவுண்ட்டாக வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஜிமெயில் தரும் வரையறை இல்லாத டிஸ்க் இடம், வைரஸை அண்டவிடாத ஸ்கேனர், இமெயிலுடன் ஒட்டி வரும் பைல்களைக் கண்காணிக்கும் சாதனம் எனப் பல விஷயங்களைக் கூறலாம்.
நமக்கு வரும் இமெயிலுடன், அல்லது நாம் அனுப்பும் இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் பைல்களை, ஜிமெயில் தளத்தில் உள்ள ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனர் சோதனை செய்து, வைரஸ் எதுவும் இல்லை என்ற பின்னரே, நம்மை டவுண்லோட் செய்திட வழிவிடும். இதனாலேயே exe, dll, ocx, com or batபோன்ற துணைப்பெயர்கள் கொண்ட பைல்களை ஜிமெயில் இணைக்க விடுவதில்லை. ஜிமெயிலை ஏமாற்றுவதாக நினைத்து, இந்த பைல்களை ஸிப் செய்து .zip, .tar, .tgz, .taz, .z, .gz என்ற ஏதேனும் ஒரு பார்மட்டில் ஸிப் பைலாக அனுப்பினாலும், ஜிமெயில் கண்டு கொண்டு தடுத்துவிடும். (ஆனால் rar என்ற ஸிப் பைலுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறது ஜிமெயில்). ஆனால் இந்த தடை நமக்கு சில நேரம் எரிச்சலைத் தரும். எடுத்துக்காட்டாக நண்பர் ஒருவருக்கு Firefox Setup 1.5.exe 4.98 MB என்ற பைலை அனுப்ப முயற்சித்தேன். ஜிமெயில் This is an executable file. For security reasons, Gmail does not allow you to send this type of file என்ற எச்சரிக்கை செய்தியைத் தந்து அதனை அப்லோட் செய்திட மறுத்தது. இங்கு என்ன நடக்கிறது என்றால், ஜிமெயிலில் உள்ள வைரஸ் ஸ்கேனர் இந்த பைலை ஸ்கேன் செய்திடாமல், இதன் துணைப் பெயர் .exe என்பதால், தொடக்கத்திலேயே இணைப்பதற்கு எடுத்துக் கொள்ள மறுக்கிறது. யாஹூ தளம் சார்ந்த சர்வரிலும் இதே போன்ற ஸ்கேனர் உள்ளது. ஆனால் யாஹூ .exe பைல்களை ஏற்றுக் கொள்கிறது. யாஹூ மெயில் சைமாண்டெக் சாப்ட்வேர் தொகுப்பினை ஸ்கேன் செய்திடப் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் ஜிமெயில் எந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தி, ஸ்கேன் செய்கிறது என்று நமக்கு அறிவிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், இத்தகைய பைல்களை அனுப்ப எந்த வழிகளைக் கையாளலாம் என்று பார்க்கலாம்.
முதலாவதாக, Rapidshare, Megaupload அல்லது Yousendit போன்ற தளங்களைப் பயன்படுத்தி, அனுப்ப விரும்பும் பைல்களை அப்லோட் செய்திடலாம். பின்னர் இந்த தளம் வழங்கும் லிங்க்கினை, ஜிமெயில் மூலம் அதனை அனுப்புபவருக்குத் தெரிவித்துவிடலாம்.
இரண்டாவதாக பைலின் பெயரைச் சற்று மாற்றி, ஜிமெயில் ஸ்கேனரை முட்டாளாக்கலாம். எடுத்துக்காட்டாக, AdobeReader.exe என்ற பைலின் பெயரை AdobeReader.exe.removeme என மாற்றி அமைத்து, நண்பருக்கு இந்த மாற்றம் குறித்து தெரிவிக்கலாம். அவர் இதனைப் பெற்ற பின்னர் பைலின் பெயரை மாற்றிப் பயன்படுத்தலாம்.
மூன்றாவதாக, நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட exe பைல்களை அனுப்ப வேண்டும் என்றால், அவை அனைத்தும் ஸிப் செய்து பின்னர், அந்த ஸிப் பைலின் துணைப் பெயரை மாற்றி அனுப்பலாம்.
நான்காவதாக WinRAR என்ற ஸிப் பைல் டூலைப் பயன்படுத்தி ஸிப் செய்து அனுப்பலாம். ஏனென்றால், ஜிமெயில் இதனை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முதலாவதாகச் சொல்லப்பட்டுள்ள வழி தான் சரியான வழி. மற்ற வழிகள் கூகுள் அமைப்பை ஏமாற்றுவதாகவே உள்ளன. இது கூகுள் அக்கவுண்ட் பெறுகையில் நாம் ஒத்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறுவதாகும்.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொ ண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதை யும் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

இதயத்தின் அமைப்பும் அமைவிடமும்


கருவில் இருந்து இதயம் முழுமையாக உருப்பெற்றுவிட்டது என வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதன் அளவு என்னவாக இருக்கும் என்று
நினைக்கிறீர்கள்? உங்களது கையை மூடிக் கொள்ளுங்கள். இந்நிலையில் கையின் அளவு என்னவோ அவ்வளவுதான் இதயத்தின் அளவும். சரியாகச் சொல்வதானால், நீளவாக்கில் 15 சென்டிமீட்டரும், குறுக்குவாக்கில் 10 சென்டிமீட்டரும் கொண்டது இதயம். மனித உடலில் மிகவும் வலிமையான தசைகளைக் கொண்டு இதயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை 300 கிராமும், பெண்ணின் உடலில் உள்ள இதயத்தின் எடை 250 கிராமும் இருக்கும்.
ஒரு நாட்டின் நிர்வாகத்தைப் பொருத்தவரையில் பிரதமர், முதல்வர் போன்றோர் மிக முக்கியமானவர்கள். அதனால்தான் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக உள்ளன. அதேபோன்று உடலின் இயக்கத்துக்குத் தேவையான இன்றியமையாத பணியைச் செய்யும்
இதயத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே உள்ளன. இதயத்துக்கு எவ்வகையான பாதிப்பும் ஏற்படாதவாறு மார்பகக்கூடு என்ற அமைப்பு பாதுகாக்கிறது. முன்பக்கம் நெஞ்சு எலும்பு, பின்பக்கம் முதுகு எலும்பு, பக்கவாட்டில் விலா எலும்புகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த அமைப்பு பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு இதயத்தைக் காக்கின்றன.
இதயத்தின் அடிப்பகுதியானது (BASE) மேல்புறமாகவும், கூர்மையான பகுதி கீழ்நோக்கியும் அமைந்து பார்ப்பதற்கு தலைகீழாகத் தொங்குவதுபோல் இதயம் காட்சி தருகிறது.
இதயத்தின் உள்ளே உள்ள அமைப்பை இன்னும் உன்னிப்பாகப் பார்க்கலாமா?
இதயத்தை நான்கு அறைகள் கொண்ட ஒரு மாடி வீட்டுக்கு ஒப்பிடலாம். இதயம் என்ற மாடி வீட்டின் மேற்பகுதியில் உள்ள இரண்டு அறைகளை மேல் அறைகள் (Aàriclev) அல்லது கொள்கலன்கள் (Receiving Chambers) என்று அழைப்பார்கள். உடலின் பல பகுதிகளில் இருந்தும்
நுரையீரல்களில் இருந்தும் வரும் ரத்தத்தைப் பெற்று அவற்றை கீழ் அறைகளுக்கு அனுப்புவதுதான் இந்த மேல் அறைகளின் வேலை.இதயம் என்ற வீட்டின் கீழ்ப்பகுதியை நோக்கினால் இரண்டு பெரிய அறைகளைக் காணலாம். இதயத்தின் கீழப்பகுதியில் உள்ள அறைகளை கீழ்
அறைகள் (Ventricles) என்று அழைப்பார்கள். இவ்வகையான அறைகளுக்கு விசையேற்று அறைகள் (Pumping Chambers) என்ற பெயரும் உண்டு. இவற்றின் முக்கிய வேலை மிக அழுத்தத்துடன் ரத்தத்தை உடலின் பல பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், நுரையீரலுக்கும் அனுப்புவதாகும்.
ஏற்கெனவே இதயத்தை நான்கு அறைகள் கொண்ட மாடி வீட்டுக்கு ஒப்பிட்டுள்ளோம். ஒவ்வொரு அறையையும், மூடித்திறக்கும் கதவுகளைத்தான் (Valvev) வால்வுகள் என்கிறோம். இவற்றை கபாடங்கள் என்றும் அழைக்கிறார்கள். இந்த வால்வுகள் எல்லாம் பட்டுத்துணி போன்ற பளபளக்கும் தன்மை கொண்ட வலிமையான நார்களால் ஆக்கப்பட்ட தசை நாண்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதயத்தில் மொத்தம் நான்கு வகையான வால்வுகள் உள்ளன. இவை தனித்தனியாக தங்கள் வேலைகளைச் செய்கின்றன.
இதயத்தில் வலது மேல் அறைக்கும், வலது கீழ் அறைக்கும் இடையே உள்ள துவாரத்தில் இருக்கும் வால்வை மூவிதழ் வால்வு (TRICUSPID VALVE) என்பார்கள்.
உடலின் பல பகுதிகளில் இருந்து பெறப்பட்ட அசுத்த ரத்தமானது இதயத்தின் வலப்புறம் உள்ள மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த
அறையானது சுருங்கும்போது வலது புறம் உள்ள கீழ் அறைக்கு அனுப்பப்படும் ரத்தமானது மறுபடியும் வலது மேல் அறைக்குத் திரும்பி வராதவாறு இந்த வால்வு இறுக மூடித் தடுக்கிறது.வலது கீழ் அறைக்கும், நுரையீரல் தமனியானது தொடங்கும் இடத்துக்கும் இடையே நுரையீரல் தமனியை இணைக்கும் துவாரத்தில் ஒரு
வால்வு இருக்கிறது. இந்த வால்வை நுரையீரல் வால்வு (Pîlmonary Valve) என்பார்கள்.இதயத்தின் வலது கீழ் அறையை அடைந்த அசுத்த ரத்தமானது இதயத்தின் கீழ் அறை சுருங்கும்போது நுரையீரல் தமனியின் வழியாக
நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் ரத்தமானது நுரையீரல் தமனியில் இருந்து மறுபடியும் வலது கீழ் அறைக்கு வராதவாறு நுரையீரல் தமனி வால்வு இறுக மூடிக் கொள்கிறது.
இதயத்தின் இடப்புறம் உள்ள மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் இடையில் ஒரு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தில் அமைந்துள்ள வால்வுதான்
ஈரிதழ் வால்வு (MITRAL VALVE) எனப்படுகிறது. இந்த வால்வானது கிறிஸ்தவ மத குருமார்கள் அணியும் தலைப்பாகை போன்று தோற்றம் அளிப்பதால் இந்த வால்வுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
இதயத்தின் இடப்பக்க மேல் அறையில் இருந்து கீழ் அறைக்குச் செல்லும் தூய்மையான ரத்தமானது மறுபடியும் மேல் அறைக்குச் செல்லாமல் தடுக்கிறது இந்த ஈரிதழ் வால்வு.இறுதியாகச் சொல்ல வேண்டியது, பிறை வால்வைப் (Semilunar Valve) பற்றி. இந்த வால்வானது பிறை வடிவத்தில் இருப்பதால் இப்படி அழைக்கப்படுகிறது. இந்த வால்வானது இடது கீழ் அறையும், மகா தமனியும் இணையும் இடத்தில் உள்ளது. இடது கீழ் அறையில் இருந்து மகா தமனிக்குச் செலுத்தப்படும் ரத்தமானது மறுபடியும் இடது கீழ் அறைக்குத் திரும்பிச் செல்லாமல் தடுக்க பிறை வால்வு உதவுகிறது.இதயத்தின் அமைப்பு பற்றியும், அதன் பகுதிகள் பற்றியும் விரிவாகப் பேசிவிட்டோம். இனி இதயம் இயங்கும் விதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

பைல்களைப் பிரித்தாலும் சேர்த்தாலும்

நம் அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பி.டி.எப். பைல்களை அடிக்கடி கையாள்கிறோம். படிப்பதற்கு பாண்ட் பைல் இல்லாமல் எந்த சிஸ்டத்திலும் படிக்கக் கூடிய வசதியை இவை தருகின்றன. அதே போல ஆடியோ மற்றும் வீடியோ பைல்களும் எந்த சிஸ்டத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த பைல்கள் மிகப் பெரிதாக இருக்கையில், இவற்றை அனுப்ப முயற்சிக்கையில், இந்த பைல்களை நாம் சுருக்க வேண்டியுள்ளது. பின் அவற்றை இணைக்கும் வழிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இந்த பைல்களில், குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோ பைல்களில், குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பிரித்தெடுக்க விரும்புகையில், பைல்களின் பகுதிகளைப் பிரிக்க தனித் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன. இந்த தேவையை மனதில் கொண்டு தேடுகையில் கிடைத்த சில தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
1. Gios PSM: பி.டி.எப். பைல்களைப் பிரிப்பதற்கும் இணைப்பதற்குமான அருமையான ஒரு புரோகிராம் Gios PSM (GiosPdf Splitter and Merger) என்பது. பி.டி.எப். பைல்களைக் கையாள ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைக்கப்பட்ட புரோகிராம் இது. இது 145 கேபி அளவிலான சிறிய எக்ஸிகியூட்டபிள் பைல். போர்ட்டபிள் வகையாக இதனைப் பயன்படுத்தலாம். டாட் நெட் பிரேமில் செயல்படுகிறது. இந்த புரோகிராமினை இயக்கிவிட்டு, பி.டி.எப். பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் முறையில், இழுத்துச் சென்று இந்த புரோகிராமின் லிஸ்ட்டில் விட்டுவிடலாம். எத்தனை பி.டி.எப். பைல்களை வேண்டுமானாலும், மொத்தமாகப் பட்டியலிட்டு இணைத்து ஒரு பைலாக மாற்றலாம். குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் ஒவ்வொரு பைலிலும் தேர்ந்தெடுத்து இணைக்க விரும்பினாலும், இந்த புரோகிராம் அதற்கான வழிகளைத் தருகிறது. இந்த புரோகிராமைப் பயன்படுத்துவதில் இருக்கின்ற ஒரு சின்ன சிக்கலைச் சொல்லியே ஆக வேண்டும். சில நேரங்களில் பைல்களை இணைக்கையில் இது கிராஷ் ஆகிறது. ஆனால், இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட http://www.paologios.com/products/?type=bin என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
2. Split Files 1.6: உங்கள் நண்பருக்கு ஏதேனும் ஒரு பெரிய இ–புக் ஒன்றை அனுப்ப முயற்சிக்கிறீர்கள். நிச்சயம் அதனை மின் அஞ்சலில் அட்டாச் செய்து அனுப்புகையில், பிரச்னை எழும். பைல் அளவு பெரிதாக இருப்பதால், இணைக்க முடியாது. இந்த நேரத்தில், அதனைப் பிரித்து அனுப்ப உதவ, இந்த புரோகிராம் உதவும். இதனை http://www.softpedia.com /get/System/FileManagement/SplitFiles.shtml என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து இயக்கவும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் பிரிக்க விரும்பும் பைலை, அது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு இருக்கிறது என்று சுட்டிக் காட்ட வேண்டியதுதான். அடுத்து ஸ்பிளிட் (Split) என்ற பட்டனைக் கிளிக் செய்தால், உடனே எந்த வகையில் பிரிக்க வேண்டும் என உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் வகைகளைக் கொடுத்த பின்னர், பைல் பிரிக்கப்படும். நீங்கள் பிரித்த பைல்களை இணைக்க வேண்டுமாயின் Combine என்ற பட்டனில் கிளிக் செய்து காரியத்தை முடிக்கலாம்.
3. Adolix Split and Merge PDF: ஒரு பி.டி.எப். பைலை பிரிக்க வேண்டிய சூழ்நிலையும், ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை இணைக்க வேண்டிய சூழ்நிலையும் எப்போதும் நமக்கு ஏற்படும். இந்த இரண்டு பணிகளிலும் நமக்கு உதவுவது Adolix Split and Merge PDF என்ற பைலாகும். இதனை http://www.adolix. com/splitmergepdf/ / என்ற தளத்தில் பெறலாம். பெற்று டவுண்லோட் செய்து, பின் இன்ஸ்டால் செய்த பின், இந்த வேலைகளுக்கு நம்மை எளிதாக வழி நடத்திச் செல்லும் வகையில், இந்த புரோகிராமில் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இந்த புரோகிராமின் உள்ளாக அமைக்கப்பட்டுள்ள மெனு, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் வேலை செய்கிறது. மிக எளிதாக பைல்களைத் தேர்ந்தெடுக்கவும், பிரிக்கவும், இணைக்கவும் வழி தருகிறது. இந்த பைல் அளவு 2.7 எம்.பி மட்டுமே.
4. HJ split: இதனைப் பெற http://www.freebyte.com/hjsplit/#win 32 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இதனைப் பயன்படுத்தி 10 ஜிபி அளவில் உள்ள பைலையும் பிரிக்க முடியும் என இந்த தளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு போர்ட்டபிள் சாப்ட்வேர். எளிதாக சிடி, பென் டிரைவ்களில் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. ஆனால் பிரிக்கப்பட்ட பைல்களை இணைக்க, உங்கள் நண்பரிடமும் இந்த பைல் தேவைப்படும்.
5.GSplit: : இந்த புரோகிராமும் பைல்களைப் பிரிக்கவும் இணைக்கவும் பயன்படுகிறது. இணைக்கும் இடத்திலும் இந்த புரோகிராம் தேவைப்படும். இதனைப் பெற http://www.gdgsoft.com/gsplit/ / என்ற முகவரிக்குச் செல்லவும்.
6. .JR Split: http://www.spadixbd.com/ freetools/jsplit.htm என்ற தளத்தில் கிடைக்கும் JR Split என்ற பைலும் இந்த வகையில் சிறந்த ஒன்றாக உள்ளது.
7. MP3cut: எம்பி3 பைல் பிரிக்கப் பல சாப்ட்வேர் தொகுப்புகள் இருந்தாலும், வேறு கம்ப்யூட்டர்களில் இருந்து அவற்றை இயக்க முடியாது. மேலும் அதே கம்ப்யூட்டரில் வேறு சாப்ட்வேர்களைப் பதியவும் முடியாது. இந்த சூழ்நிலையில் நமக்கு உதவ MP3 cut உதவுகிறது. இயக்குவதற்கு எளிய புரோகிராம் இது. எந்தப் பிரச்னையும் இன்றி எம்பி3 பைல்களை, நம் தேவைக்கேற்றபடி பிரிக்க உதவுகிறது. இந்த (http://www.mp3cut.net) தளத்திற்குச் சென்று நாம் பிரிக்க வேண்டிய பைலை அப்லோட் செய்திட வேண்டும். எந்த இடத்தில் பிரிக்க வேண்டும் என குறிக்க, ஸ்லைடர்கள் தரப்பட்டுள்ளன. இடது ஸ்லைடர் பிரிவு தொடங்கும் இடத்திலும் வலது ஸ்லைடர் பிரிவு முடியும் இடத்திலும் இருக்க வேண்டும். பிரிவுகளைக் குறித்த பின்னர் split and download என்பதில் கிளிக் செய்திட வேண்டும். பைல் நீங்கள் குறிப்பிட்ட இடத்தை அடையாளம் வைத்துப் பிரித்து தனி பைலாக்கும். பின்னர் அந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும். இதிலேயே எம்பி 3 பைலை இயக்கவும் வசதி உள்ளது. இதன் மூலம் பிரிக்க வேண்டிய இடங்களைக் குறித்திட எளிதாக உள்ளது. இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த பாடலில் உள்ள, உங்களுக்குப் பிடித்த இசை/பாடல் உள்ள இடத்தைப் பிரித்து, மொபைல் போனில் ரிங் டோனாக அமைத்துக் கொள்ளலாம். இதனால் எந்த சாப்ட்வேர் தொகுப்பினையும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திடாமல், பாடல் பைல்களைப் பிரிக்க முடிகிறது.

பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி: பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடிப்பு

லண்டன்:கருமுட்டைகளில் உட்கருவை மாற்றம் செய்வதன் மூலம், பரம்பரை நோய்கள் மற்றும் அரிய வகை நோய்களுக்கு முடிவு கட்டி விடலாம் என்று, பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மனித குணங்களை நிர்ணயிக்கும் டி.என்.ஏ.,வின் ஒரு நுண்ணுறுப்பு, ‘மைட்டோகான்ட்ரியா!’ இது மொச்சைக் கொட்டை வடிவில் அமைந்திருக்கும். இது தான், ஒரு செல்லுக்கு சக்தியை வழங்குகிறது.இதில் ஏற்படும் குறைபாடுகளே பரம்பரை நோய்கள் வரக் காரணம் என்று நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.பிரிட்டனில் நடந்த ஆய்வுப்படி, தாய்வழியில் வரும் பரம்பரை நோய்கள் 250 பேரில் ஒருவருக்கு மிகச் சிறிய அளவில் இருப்பதாக கண்டறியப்பட் டுள்ளது.

உலகளவில், 6,500 பேரில் ஒருவரை பரம்பரை நோய்கள் மிகத் தீவிரமாகத் தாக்குகின்றன. இதனால் தசைப் பலவீனம், செவிட்டுத் தன்மை, இதயச் செயலிழப்பு, கண்களில் பார்வை பாதிப்பு மற்றும் இதர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். சில சமயம் உயிரிழப்பு கூட நேரிடும்.இதுபோன்ற பரம்பரை மற்றும் அரிய வகை நோய்களை முற்றிலும் நீக்குவதற் காக, பிரிட்டன் டாக்டர்கள், ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளனர்.அதன்படி, செயற்கைக் கருத்தரிப்பு முறையில், விந்தணு சேர்க்கப்பட்ட குறைபாடில்லாத கருமுட்டை ஒன்றை எடுத்து, அதிலுள்ள உட்கருவை (நியூக்ளியஸ்) நீக்குகின்றனர்.பின் இந்தக் குறைபாடுள்ள கருமுட்டையிலுள்ள உட்கரு, ஏற்கனவே உட்கரு நீக்கப்பட்ட கருமுட்டையில் வைக்கப்படுகிறது. இம்முறையில் நோய் பாதிப்பு ஏற்படுத்தும் டி.என்.ஏ.,வின் அளவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், பரம்பரை நோய் மற்றும் அரிய வகை நோய்கள் வர வாய்ப்பில்லை.

இதுகுறித்து, வடகிழக்கு பிரிட்டனைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டக்ளஸ் டர்ன்புல் கூறுகையில், ‘இது நமது லேப்-டாப்பில் பேட்டரி மாற்றுவது போன்றது. பேட்டரி மாற்றப்பட்டவுடன் வழக்கம் போல் அது இயங்குகிறது. அதன் ‘ஹார்ட் டிரைவ்’வில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.அதுபோல், இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் வழி பரம்பரை நோயால் பாதிக்கப்படுவதில்லை’ என்றார்.