Daily Archives: ஏப்ரல் 29th, 2010

எடை குறைக்க ஆசையா? காலையில் முட்டை சாப்பிடுங்க!

அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது. காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.
அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
“உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது” .

கூகுள் மேப்பை நம் இஷ்டப்படி அமைக்க

எப்போதாவது உங்கள் நண்பருக்கு, உங்கள் வீட்டுக்கு எப்படி வந்து சேர்வது என்று காட்டியிருக்கிறீர்களா? அல்லது புகழ் பெற்ற ஸ்தலமாகிய உங்கள் ஊரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களைக் குறித்து தகவல் தந்திருக்கிறீர்களா?
கம்ப்யூட்டரில் காலம் தள்ளும் நமக்கு இதற்கெல்லாம் கூகுள் மேப்ஸ் தான் சரியான சாதனம். ஆனாலும் இதில் நாம் நினைத்தபடி குறிப்புகளை எழுத முடியாது. இதற்கெனவே ஸ்கிரிப்பிள் மேப்ஸ் (scribblemaps) என்று ஒரு புரோகிராம் தயாரிக்கப்பட்டு கூகுள் மேப்புடன் வழங்கப்படுகிறது. இதன் உதவியுடன் கூகுள் மேப்பில் ஓரிடத்திற்குச் செல்வதற்கு நீங்கள் விரும்பும் வகையில் அம்புக்குறிகள் மற்றும் பிற வடிவங்களைப் போட்டு, குறிப்புகள் எழுதி தகவல்களை அமைக்கலாம். முழுமையான தகவல்களை அமைத்த பின்னர், அதனை அப்படியே பைலாக சேவ் செய்து, பின்னொரு நாளில் மற்றவருக்குப் பயன்படுத்தத் தரலாம். இதனைப் பயன்படுத்த www.scribblemaps.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். சென்றவுடன் இந்த சாதனம் பற்றிய குறிப்பு தோன்றி மறையும். பின் கூகுள் மேப் கிடைக்கும். அதன் மேலாக இந்த சாதனம் தரும் சில டூல்கள் கிடைக்கும். நீங்கள் எந்த மேப்பில் எந்த இடத்தில் குறிப்புகளை இணைக்க வேண்டுமோ, அந்த இடம் சென்று தேவைப்படும் இடத்தில், வேண்டிய அம்புக்குறிகள் மற்றும் வழிமுறைகளை அமைக்கலாம். கோடு வரையலாம், குறிப்பிட்ட ஷேப்களை ஒட்டலாம், பின் ஷேப் கொண்டு இடங்களைக் குறித்து வைக்கலாம், எண்களை அமைக்கலாம். குறிப்பு எழுதலாம். பின் இந்த குறிப்புகளுடன் அந்த மேப்பினை சேவ் செய்திடலாம். தவறான குறிப்பினை எழுதிவிட்டால் அல்லது கோடு போட்டுவிட்டால், அதனை இதில் தரப்பட்டுள்ள எரேசர் கொண்டு அழிக்கலாம். பின் இந்த மேப்பினை சேவ் செய்திடுகையில் அதற்கான அடையாள எண் தரப்படும். இந்த எண்ணைப் பின் நாளில் பயன்படுத்தி, மேப் குறிப்புகளை எடிட் செய்திடலாம். நம் வசதிக்கேற்ப குகூள் மேப்பினை வளைக்கும் இந்த வசதி மிகவும் விரும்பத்தக்கதும் பயனுள்ளதும் ஆகும்.

திட்டமிட்டு படிப்பது எப்படி?

இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்பு, வேறு சில கேள்விகளை உங்களது குழந்தைதனக்கு தானே கேட்டுக்கொண்டு தெளிவு பெற வேண்டும்.

பள்ளியில் கொடுத்துள்ள ஒரு வேலை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் முடிக்கப்பட்டால், அதுஎப்படி பார்க்கப்படும்? அதற்கு எவ்வளவு பாராட்டு கிடைக்கும்? எவ்வளவு மனநிறைவைதரும்?

இந்த வேலையை தரமாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிக்க எவ்வளவு நாள் அல்லது நேரம்ஆகும்?இந்த வேலையை எப்படி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அல்லது ஒவ்வொரு நாளுக்கும்பிரித்துக் கொள்வது?
இந்த கேள்விகளுக்கு விடைகண்டு விட்டால், போதும். திட்டம் தயார்.
உதாரணமாக, தேர்வுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.

படிக்க வேண்டியது 10 பாடங்கள் என்றால், ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்று பிரித்துக்கொண்டு படிக்கலாம். இது தான் திட்டம்.

இப்படி படிக்கும்போது படிப்பு சுமையாக இருக்காது. எளிதாகவும் தெளிவாகவும் படிக்க முடியும்.படிப்பதில் தானாக படிப்பது. படித்ததை ஒப்பிப்பது. படித்ததை எழுதிப்பார்ப்பது என்று பல்வேறுவகைகள் உள்ளன.

ஆனால், படித்த பாடத்தை ஒரு ஆசிரியரை போல பிறருக்கு சொல்லித்தருவது மிகச்சிறந்தபடிப்பு.

அப்படி சொல்லித்தரும்போது, பாடம் மேலும் தெளிவாக புரியும். மனதில் ஆழமாகப் பதியும்.மேலும் பாடத்தை யாராவது ஒருவருக்கு சொல்லித்தரும் போது, அவர் பாடம் சம்பந்தமாகஎழுப்பும் சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். அந்த சந்தேகம் நமக்கு அதுவரையில்தோன்றாமல் இருந்திருக்கும்.

அவர் கேட்டவுடன், அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக மேலும் ஆழமாக பாடத்தைபடிப்போம். அது இன்னும் நம்மை தெளிவு படுத்தும்.

சரி, யாருக்கு சொல்லி தருவது?ஒரு மாணவன் அல்லது மாணவி தனது வகுப்பில் படிக்கும் சக மாணவன் அல்லதுமாணவிக்கு சொல்லி தரலாம்.

பெற்றோருக்கு நேரம் இருந்தால், பெற்றோரே மாணவர்களாக இருக்கலாம். உங்களது குழந்தைஉங்களுக்கு பாடம் நடத்துவது, உங்களுக்கும் புது அனுபவமாக இருக்கும்.

ஒரு பாடத்தை குழந்தை எப்படி சொல்லித் தருகிறாள் அல்லது தருகிறான் என்பதை கவனிக்கவேண்டும்.சம்பந்தப்பட்ட பாடத்தில் குழந்தை எந்த அளவிற்குத் தயாராகி இருக்கிறார்?பாடத்தை எவ்வளவு நேரத்தில் நடத்துகிறார்?
பாடம் நடத்தும்போது எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறாரா?

பாடம் நடத்தும்போது நம்மிடம் இடையிடையே கேள்விகள் கேட்டு, அதற்கு பதிலைகூறுகிறாரா? அதாவது அவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்க நாம் வெறுமனேகேட்டுக்கொண்டிருக்க என்று இல்லாமல், நம்மையும் அந்த உரையாடலில் பங்கெடுக்கவைக்கிறாரா?

பாடத்தை ஒரு நல்ல அறிமுகத்துடன் ஆரம்பித்து முடிக்கும்போது ஒரு நல்ல முடிவுடன்முடிக்கிறாரா?
பாடம் நடத்தும் போது உற்சாகமாக நடத்துகிறாரா?
இப்படி அனைத்து விஷயங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.

டெஸ்க்டாப் ஐகானில் டெக்ஸ்ட்

நம் வாழ்நாளில் ஒருவரை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பது யார் என்றால், இன்றைய உலகில் அது நம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் மானிட்டர் தான். எனவே தான் இதனை நம் மனதிற்குப் பிடித்த வகையில் அமைக்க பல வசதிகள் உள்ளன. ஐகான் வரிசை, பின்புலத் தோற்றம், ஸ்கிரீன் சேவர் என இதனை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். இதில் உள்ள டெஸ்க்டாப் ஐகான்களின் தோற்றத்தையும் மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களில் பலர், ஐகான் படம் மட்டும் போதுமே; அதில் ஏன் டெக்ஸ்ட் உள்ளது. படத்தைப் பார்த்து நாம் புரிந்து கொள்ள முடியாதா? என்றெல்லாம் வினா எழுப்புகின்றனர். இவர்களுக்காகவே, ஐகானில் உள்ள டெக்ஸ்ட்டை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.
இது மிக எளிதானதுதானே, ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு பட்டியலில் Rename தேர்ந்தெடுத்து, அதில் உள்ள டெக்ஸ்ட்டை அழித்துவிட்டால் போதுமே என்று எண்ணலாம். டெக்ஸ்ட்டை நீக்கிவிட்டால், பின் அதனை டெக்ஸ்ட் எதுவும் இல்லாமல், அதாவது பெயர் எதுவும் இல்லாமல் சேவ் செய்திட விண்டோஸ் இடம் கொடுக்காது. ஆனால் இதில் ஒரு ஆச்சரியத்தக்க விஷயம் என்னவென்றால், விண்டோஸ் இதில் ஸ்பேஸ் ஒன்றை அமைத்தால் இடம் கொடுக்கிறது. அதனையும் ஆஸ்க்கி முறையில் கொடுக்க வேண்டும்.
முதலில் ஐகான் கீழாக இருக்கும் டெக்ஸ்ட் அனைத்தையும் நீக்கிவிடுங்கள். பின் ஸ்பேஸ் அமைப்பதற்கான ஆஸ்கி எண்ணை அமைத்திடுங்கள். இதற்கு ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு, நம்பர் பேடில் நம் லாக் ஆன் செய்து, அதிலிருந்து 0160 என்ற எண்ணை அழுத்துங்கள். அடுத்து என்டர் செய்து இதனை சேவ் செய்திடுங்கள். இனி ஐகான் வெறும் படமாகக் காட்சி அளிக்கும்.
சரி, அடுத்த ஐகானுக்குச் செல்கையில் இதே வழியைக் கையாண்டால், விண்டோஸ் ஏற்கனவே இந்த பெயர் வேறு ஒரு பைலுக்கு உள்ளது என்று காட்டுமே? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? இந்த சிக்கலைத் தீர்க்க, ஆஸ்க்கி எண்ணை இருமுறை அழுத்தவும். அடுத்த ஐகானுக்கு மூன்று முறை அழுத்தவும். இப்படியே டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்கள் முழுவதற்கும், அவற்றில் உள்ள டெக்ஸ்ட்டை நீக்கி அமைக்கலாம்.

கற்கும் மாணவர்களுக்கும், கற்றுக் கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஓர் அருமையான இணையதளம்

கற்றுத் தேர்ந்தவர்களோடு நாம் பழகினால், நாமும் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். மேலும் நாம் கற்றதையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட்டில் எங்கு செல்வது? நமக்கென ஒரு வலைமனை (Blog) அமைத்து வைத்தாலும், அனைவரும் வந்து படிப்பார்கள், சரியான கருத்துரைகளைப் (Comments) பதிவார்கள் என்பது என்ன உறுதி? இந்த குறையைப் போக்கும் வகையில், கற்றவர்கள் கலந்து உரையாடி, தங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி www.wepapers.com இது ஒரு கல்வியாளர்களின் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லலாம். இதில் பெரும்பாலும் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இடம் பெறுகின்றனர். இதில் கலந்து கொள்வதன் மூலம் இதில் உள்ள அறிவு சார்ந்த கட்டுரைகளைப் படிக்கலாம்; நமக்குத் தெரிந்ததை இதில் பதிப்பிக்கலாம். ஆய்வுச் சுருக்கங்கள் (abstracts) கட்டுரைகள், உரைக் குறிப்புகள், ஆய்வு கட்டுரைகள் ஆகியவை இங்கு பெருமளவில் இடம் பெற்றுள்ளன. இவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளனர். 40 வகைகளில் இவை கிடைக்கின்றன. உலகின் அனைத்து பொருட்களும் இவற்றில் அடங்கும். இந்த கட்டுரைகள் பிளாஷ் தொழில் நுட்பத்தில் காட்டப்படுகின்றன. (யு–ட்யூப் மற்றும் பிற வீடியோ கிளிப்களைக் காட்டுவது போல) கட்டுரைகளின் சுருக்கம் அல்லது ஒரு சிறிய முன்னோட்டத்தினைப் பார்த்து, பின் அவற்றை டவுண்லோட் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்து டவுண்லோட் செய்திடலாம்.
இந்த தளத்தின் இடது பக்கம் உள்ள பிரிவில், நாங்கள் விரும்பும் கட்டுரைகள் (Papers We Like) என்று ஒரு பட்டியலில், அப்போது பதியப்பட்ட சிறந்த ஏழு கட்டுரைகள் காட்டப்படுகின்றன. நீங்களாக ஒரு பொருள் குறித்து கட்டுரை ஒன்றைத் தேட வேண்டும் எனில், நடுப்பக்கத்திற்குச் செல்லலாம். இங்கு உள்ள Search கட்டத்தில் பொருள் குறித்த சொல்லை டைப் செய்து எணி என்பதில் கிளிக் செய்தால், உடன் கட்டுரைகளின் பட்டியல் கிடைக்கும். நிச்சயமாக நீங்கள் அதிசயப்படத்தக்க வகையில், தேடுவதற்குக் கொடுத்த பொருள் குறித்து பல்வேறு கோணத்தில் கட்டுரைகளின் தலைப்பைக் காணலாம்.
நீங்கள் உங்கள் கட்டுரையை இதில் பதிய வேண்டுமா? இதில் பதிவது என்பது மிக மிக எளிமையானது. பெயர், கல்லூரி அல்லது பல்கலை முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்து Capcha சோதனையை முடித்தால் போதும். பின்னர் Sign Up செய்து உள்ளே நுழையலாம்.
நீங்கள் ஒரு பொருள் குறித்து கற்றுக் கொடுக்க எண்ணினால், கோர்ஸ் லீடர் என்ற பிரிவில் மூலம் செல்லலாம். அல்லது உங்கள் கட்டுரையை உங்கள் மாணவர்கள் அல்லது மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து குழுவாக அமைத்திடலாம். கட்டுரைகளை அப்லோட் செய்வதும் மிக எளிதாக உள்ளது. அப்லோட் செய்த பின்னர், அந்த கட்டுரை குறித்த சுருக்க தகவல்களை நீங்கள் அதற்கான படிவத்தில் தர வேண்டும்.
கற்கும் மாணவர்களுக்கும், கற்றுக் கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஓர் அருமையான இணையதளம் இது.
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரைச் சேர்ந்த Hanan Weiskopf மற்றும் Ehud Zamir என்ற இரு மாணவர்களால் இந்த தளம் தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இருந்து இதற்கான நிதி, உதவியாக வழங்கப்படுகிறது.
இந்த தளத்தின் முகவரி: www.wepapers.com