Daily Archives: ஏப்ரல் 30th, 2010

சொறி, சிரங்கு ஆண் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!

குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் கொள்ளைப் பிரியம் இருக்கும். அவர்கள் சுகாதாரமற்ற இடங்களில் விளையாடும்போது அவர்களுக்கு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. சொறி, சிரங்குஆகியவையும் அந்த நோய்களின் பட்டியலில் அடங்கும்.

சின்ன வயதில் ஒரு குழந்தைக்கு சொறி, சிரங்கு வந்திருந்தால், பின்னாளில் அந்த குழந்தை பெரியவன் ஆனதும் ஆஸ்துமா வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கண்டறிந்து இருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

குழந்தை பருவத்தில் சொறி, சிரங்கு வந்தால் உடல் தோலின் திடத்தன்மை குறைந்து விடுகிறது. மேலும், அவர்கள் வளரும் சுற்றுச்சூழல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியும் கூடவே குறைந்து போகிறது. இதனால்தான் சொறி, சிரங்கு பாதிப்புக்கு ஆளான குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகள்தான் இந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்களாம்.

குழந்தைகளுக்கு தரம் என்பது என்ன?

செய்யும் வேலையை திருத்தமாகவும் நேர்த்தியாகவும் செய்வது தரம். இதை எப்படி குழந்தைகளுக்குப் புரிய வைப்பது?
நீங்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியாக இருக்கலாம். அல்லது வீட்டில் சமையல் செய்யும் சாதாரண குடும்பப்

பெண்ணாக இருக்கலாம். நீங்கள் செய்யும் வேலை மூலமாகவே குழந்தைகளுக்குத் தரத்தை பற்றி புரிய வைக்க முடியும்.

உதாரணமாக, நீங்கள் சமையல் செய்கிறீர்கள்.
சமையல் செய்ய காய்கறி நறுக்கும்போது, வெங்காயத்திற்கு தோல் உரிக்கும் போது, எப்படி சுத்தமாக தோலை உரிக்கிறீர்கள் என்பதை

குழந்தைகளைப் பார்க்க செய்யலாம். எப்படி காய்களை நேர்த்தியாகவும் ஒரே வடிவத்திலும் நறுக்குகிறீர்கள் என்பதை அவர்கள் பார்த்தால்,

தரத்தை பற்றி தெரிந்து கொள்வார்கள்.
வீட்டைச் சுத்தம் செய்யும்போது, சிறு குப்பையை கூட விட்டுவிடாமல் சுத்தம் செய்வதைப் பார்க்கும் குழந்தைகளுக்கு நேர்த்தி குறித்து கற்றுக்

கொள்ள வாய்ப்பு இருக்கிறது.நேர்த்தியையும் தரத்தையும் கற்றுத்தர நாம் படித்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நாம் செய்யும்வேலை அது எதுவாக இருந்தாலும் எவ்வளவு நேர்த்தியாக செய்கிறோம் என்பதை குழந்தைகளைப் பார்க்க செய்வது நேர்த்தி குறித்து கற்றுக்கொள்ள வைக்கும்.அந்த வேலைகளை குழந்தைகளிடமும் கொடுக்கலாம்.அதை குழந்தைகள் செய்யும் போது சரியாக செய்திருக்கிறாயா? என்றுஅவர்களிடம் கேட்டு, தரத்தை உணர்த்தலாம்.அதற்கு நீங்கள் முதலில் நிதானமாகவும் பொறுமையுடனும் வேலைகளை செய்பவராக இருக்க வேண்டும்.குழந்தைகளை வளர்ப்பதில் உள்ளபல்வேறு நல்ல அம்சங்களில் மிகவும் முக்கியமானது, அவர்களுடன் சேர்ந்து நாமும் வளர்கிறோம் என்பதுதான்.நாம் வளர வேண்டும்.வளரமாட்டோம் என்று அடம் பிடித்தால் குழந்தையும் வளராது.ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் ஒரு தந்தையும் தாயும் பிறக்கிறார்கள்.பிறந்தகுழந்தை வளர்கிறது,ஆனால் தந்தையும் தாயும்.குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பதற்கும்,வீடு சுத்தம் செய்வதற்கும் என்னசம்பந்தம்?நேரடியாக பார்த்தால் சம்பந்தம் இல்லைதான்.ஆனால், வீடு கூட்டும்போது அந்த குழந்தை பொறுமையை பயில்கிறது.சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பயில்கிறது.தவறு நேரக்கூடாது என்ற கவனத்தைப் பயில்கிறது.இந்த கவனம், பொறுமை, சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தால், அவை படிப்பிலும் பிரதிபலிக்கும்.குழந்தைக்குக் கல்வியில் கவனமும் பொறுமையும் வளரும். படிப்பதைஅரைகுறையாக இல்லாமல் முழுமையாக படிக்கும். எனவே, ஒவ்வொன்றிலும் கற்றுக் கொள்வதற்கான அம்சங்கள் இருக்கின்றன.

படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி?

பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத் தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத வர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்…

இப்பிரச்சினைக்கான காரணங்கள்!

இயல்பாகவே சில பெண்களுக்கு செக்ஸில் அவ்வளவாக நாட்டமிருக்காது. உடலுறவு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.

உறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள். முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில், குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம். உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலைகளைக் கையாள்வது, வெறித்தனமான நடவடிக்கைகளைக் கையாள்வது என்றெல்லாம் நடந்து கொள்கிற போதும் மனைவிக்கு செக்ஸின் மீது வெறுப்பு ஏற்படலாம்.கூட்டுக் குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதையே தவிர்ப்பார்கள். தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள்.

தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கும் பெண் களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரிய வரும் பெண்களும்கூட தாம்பத்திய உற வைத் தவிர்ப்பார்கள். கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவதும் உண்டு. தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம். கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினை யைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு.

எக்ஸெல்,வேர்ட் டிப்ஸ்

வரிசைத் தலைப்புகள் பிரிண்ட்:
பல பக்கங்களில் அமைந்திருக்கும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டினை பிரிண்ட் செய்கையில், ஒவ்வொரு பக்கத்திலும் வரிசைகளுக்கான தலைப்புகள் அச்சடிக்கப்பட்டால் தான், அவற்றின் முழுத் தகவல்களையும் அறிய முடியும். எடுத்துக் காட்டாக, உங்கள் ஒர்க்ஷீட்டில் 8 நெட்டு வரிசைகளும், 500 படுக்கை வரிசைகளும் இருந்தால், நெட்டு வரிசைக்கான தலைப்புகள், முதல் படுக்கை வரிசையில் மட்டுமே இருக்கும். இதனைப் பிரிண்ட் செய்கையில் முதல் பக்கத்தில் மட்டுமே இந்த தலைப்புகள் அச்சாகும். தொடர்ந்து வரும் பக்கங்களில் அச்சாகாது. மற்ற பக்கங்களிலும் இவை தேவை என்றால், கீழ்க்கண்டபடி செட் செய்திடவும்.
1.எந்த ஒர்க் ஷீட்டில் இந்த தேவைகள் உங்களுக்கு வேண்டுமோ, அந்த ஒர்க்ஷீட்டில் எங்காவது கிளிக் செய்து, பின் பைல் (File) மெனுவில் பேஜ் செட் அப் (Page setup)பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. பின் ஷீட் (Sheet) என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் பிரிண்ட் டைட்டில்ஸ் (Print Titles) என்பதன் கீழாக, Rows to repeat at top, Columns to repeat at left என்று இரண்டு பிரிவுகள் இருக்கும். இதில் கிளிக் செய்தால் நீளமான ஒரு சிறிய விண் டோ கிடைக்கும். இதில் எந்த வரிசை என்பதனை என்டர் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.
3 அதன் பின் பிரிண்ட் தேர்ந்தெடுத்து ஒர்க்ஷீட்டைனை பிரிண்ட்செய்தால் மேலாகவும் இடது புறமாகவும் தலைப்புகள் ஒவ்வொரு பக்கத்தின் மேலாகவும் அச்சிடப்படும்.

எக்ஸெல் பங்ஷன் கீகள்
F1 விண்டோ பேனல் எதுவானாலும் அதற்கான உதவிக் குறிப்புகள் பெற
F2 எந்த செல்லையும் எடிட் செய்திட கீ அழுத்த
F3 பார்முலாவில் பெயரை செருக
F4 முந்தைய கட்டளையை திரும்ப செயல்படுத்த
F5 Go to டயலாக் பாக்ஸ் செயல்படுத்த
F6 ஒர்க்ஷீட்டில் பேனல்களுக்கு இடையே செல்ல
F7 ஒர்க் ஷீட்டில் ஸ்பெல்லிங் செக் செய்திட
F8 ஸ்டேட்டஸ் லைனில் எக்ஸ்டென்டட் மோட் பெற
F9 ஒர்க் ஷீட்டில் கால்குலேஷன் மேற்கொள்ள
F10 மெயின் மெனு பார் தேர்ந்தெடுக்க
F11 அப்போது உள்ள ஒர்க்ஷீட்டில் சார்ட் ஒன்றை செருக
F12 save அண் டயலாக் பாக்ஸ் செயல்படுத்த

வேர்டில் பாரா மார்க்கர் உண்டா?
வேர்டில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில் நாம் பல பாராக்களை அமைக்கிறோம். பாரா என்பது என்ன? ஒரு சொல்லையும் இன்னொரு சொல்லையும் இடைவெளி விட்டு அமைத்தால், இந்த இரண்டு சொல்லும் இரண்டு பாராக்களாக இருக்குமா? அல்லது ஒரு பாராவில் இத்தனை சொற்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என விதி உள்ளதா? முதலில் கூறியபடி இரண்டு பாராக்களின் இடைவெளியை வைத்துத்தான் நாம் பாரா என்கிறோம். பொதுவாக ஒரு பொருள் அல்லது அது குறித்த விளக்கம்,விவாதம், கருத்து போன்றவற்றை வைத்துத்தான் நாம் பாரா பிரிக்கிறோம். ஆனால் கம்ப்யூட்டருக்கு நாம் தரும் கருத்து, விவாதம் எல்லாம் தெரியாது. நாம் பாராவை அமைக்கும் போது ஒரு மார்க்கரைத் தானாக அமைத்துக் கொள்ளும். எனவே இரு பாரா மார்க்கர்களுக்கு இடையே உள்ளவை தான் பாரா என்று எடுத்துக் கொள்கிறது. இந்த மார்க்கர்கள் எங்கு உள்ளன. இவற்றை நாம் பார்க்க முடியாதா? என்ற கேள்வி எழுகிறதா? பாரா மார்க்கர்கள் டாகுமெண்ட்டில் காட்டப்படுவதில்லை. இதனை அவசியம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஸ்டாண்டர்ட் டூல் பாரில் பார்த்தால் பாரா மார்க்கர் அடையாளம் காணப்படும். சில வேளைகளில் இந்த பாரா மார்க்கர் அடையாளம் மற்ற அடையாளங்களுடன் இணைத்து மறைத்துவைக்கப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட இணைந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் விரியும் கட்டத்தில் அனைத்து அடையாளங்களையும் காணலாம். இந்த பாரா அடையாளத்தில் கிளிக் செய்தால் உங்கள் டெக்ஸ்ட் முழுவதும் பாரா மார்க்கர் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இது காட்டப்படும். அது மட்டுமின்றி நீங்கள் இரு சொற்களுக்கிடையே ஸ்பேஸ் ஏற்படுத்தி இருந்தால் அங்கெல்லாம் அந்த சொற்களுக் கிடையில் புள்ளி ஒன்று காட்டப்படும். இவை பிரிண்ட்டில் கிடைக்காது. இவை மீண்டும் மறைக்கப்பட வேண்டும் என்றால் அதே மார்க்கரில் மீண்டும் கிளிக் செய்திடுங்கள். மறைந்துவிடும்.