Advertisements

Daily Archives: மே 1st, 2010

மெனோபாஸ்(மாதவிடாய் நிற்கும் காலம்) டயட்

‘‘பெண்கள் பூப்பெய்தும் காலம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் மாதவிடாய் நிற்கும் காலம். மெனோபாஸ் என்றழைக்கப்படும் மாதவிடாய் நிற்கும் காலகட்டம் பெண்களின் உடல் அமைப்புக்குத் தகுந்தபடி, 40 முதல் 50 வயதுக்குள் நிகழும். இது ஏதோ ஒரு நாளில் நடக்கக்கூடிய மாற்றம் கிடையாது. பத்து முதல் பதினைந்து வருடங்களாகவே இந்நிகழ்வுக்காக உடல் தயாராகும். மெனோபாஸ் காலத்தில்
இரண்டு முக்கிய ஹார்மோன்களான ஈஸ்ட் ரோஜனும் புரோஜெஸ்டரானும் சுரப்பது நின்றுவிடும். பெண்களின் உடலுக்குத் தேவையான முக்கியமான புரதச்சத்துக்களை இந்த ஹார்மோன் களே கொடுக்கின்றன. இந்நிலையில் இவற்றின் சுரப்பு நின்றுவிட்டால்,உடலுக்குக் கிடைக்கக்கூடிய புரதச்சத்துக்களும் நின்றுவிடும். இவற்றை ஈடுகட்ட, பொருத்தமான டயட்டை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்’’என்கிறார் உணவு ஆலோசகர் ‘‘மெனோபாஸுக்கு பிறகு பெண்களின் எலும்பு வலுவிழக்கும். இதனால் எலும்புச்சிதைவு நோய் தாக்கி,சின்னதாக எடை தூக்கினால்கூட எலும்புமுறிவு ஏற்படுகிற அபாயம் நிகழக்கூடும். ரத்த சோகை ஏற்படும். அதிகமாக தண்ணீர் சேர்வதால்,
உடல் ஊதினது போல் இருக்கும். கொலஸ்ட்ரால் அதிகமாகி உடல் பருமன் பிரச்னை ஏற்படும். நீரிழிவு நோயும் சிலருக்கு வரலாம். ஒரு சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதைத் தவிர்க்க என்ன வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அனைத்து பெண்களும் தெரிந்துகொள்வது அவசியம்.மெனோபாஸுக்கு முன் ஆரோக்கியமாக இருக்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் இருந்தால் போதும். அதுவே மெனோபாஸுக்கு பிறகு அவர்களுக்கு 1500 மில்லி கிராம் கால்சியம் தேவை. எனவே பால் மற்றும் பால் பொருட்கள், கீரை வகைகள் அல்லது டாக்டரின் ஆலோசனைபடி கால்சியம் மாத்திரைகளை சாப்பிடலாம். உடல் பருமனை முக்கியமான பிரச்னையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது நின்றுவிடுவதால், உடல் சோர்வடையும். இதனால் உடல் பருமனுள்ளவர்கள், உடலுக்கு எந்தவிதமான வேலையையும் கொடுக்க மாட்டார்கள். இது தவறு. மெனோபாஸ் காலகட்டம் என்றில்லை…
எப்போதுமே சின்னச் சின்ன உடற்பயிற்சியாவது உடலுக்கு அவசியம். இது உடலில் சேரும் கொழுப்பைக் குறைத்து, ஆரோக்கியமாக வைக்கும்.
அதே சமயம் கலோரி தேவையின் அளவு ஐம்பது வயதுக்கு மேல் குறைய ஆரம்பிக்கும். இதுவும் உடலை பாதிக்கும். எனவே கலோரியின்
அளவை சரியாக வைத்துக் கொள்ளவும் உடல் எடையைப் பராமரிக்கவும் உடற்பயிற்சி அவசியம்.மெனோபாஸ் காலத்தில் பெண்கள் அதிகமான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் உடலில் அதிகமாக என்ன சாப்பிடலாம்?கொழுப்பு குறைவான
உணவுகளை மட்டுமே சாப்பிடுவது அவசியம். பச்சைக் காய்கறிகள், பழங்கள், முழு தானிய பொருட்கள், வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.ஆரஞ்சு, திராட்சை, கேரட், தக்காளி,காலிஃபிளவர், பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.நார்ச்சத்துள்ள பொருட்களையும் கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றையும் சாப்பிடுவது நல்லது. இது மலச்சிக்கலையும், குடல் புற்றுநோய் வருவதையும் தடுக்கும்.உப்பு அதிகமுள்ள நொறுக்குத்தீனி,ஸ்நாக்ஸ் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில்இருக்கும். குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.இதில் உள்ள சர்க்கரை உடல் எடையை அதிகரிக்கும்.காபி, டீ, அதிக காரமான உணவு, அதிக எண்ணெய் சேர்த்த உணவு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.இன்சுலின் சுரக்கும். கோதுமை, ஓட்ஸ் மற்றும் நார்ச்சத்துள்ள
உணவுகளை அதிகம் சாப்பிடலாம். ஐம்பது வயது கடந்த பெண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும். மீன், இறைச்சி, பால் பொருட்களில்
வைட்டமின் பி12 சத்து நிறைய உள்ளது. தேவைப்பட்டால் டாக்டரின் ஆலோசனையுடன் பி12 மாத்திரையைச் சாப்பிடலாம்.’’என்ன சாப்பிடலாம்?
கொழுப்பு குறைவான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது அவசியம். பச்சைக் காய் கறிகள், பழங்கள், முழு தானிய பொருட்கள், வைட்டமின் சி
அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஆரஞ்சு, திராட்சை, கேரட், தக்காளி, காலிஃபிளவர், பச்சை காய் கறிகள் மற்றும் கீரைகளில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.நார்ச்சத்துள்ள பொருட்களையும் கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றையும் சாப்பிடுவது நல்லது. இது மலச்சிக்கலையும், குடல் புற்றுநோய்
வருவதையும் தடுக்கும்.உப்பு அதிகமுள்ள நொறுக்குத்தீனி,ஸ்நாக்ஸ் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.இதில் உள்ள சர்க்கரை உடல் எடையை அதிகரிக்கும்.காபி, டீ, அதிக காரமான உணவு, அதிக எண்ணெய்  சேர்த்த உணவு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

Advertisements

கல்லீரல்

உடல் என்பது அற்புதமாக சிருஷ்டிக்கப்பட்ட பொருளாகும். பல கோடி நரம்புகள், தசைகள், எலும்புகள், இரத்த நாளங்கள் என பிண்ணிப் பிணையப்பட்டதே மனித உடலாகும். உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் தமது பணியைச் சிறப்பாக செய்வதுடன், பிற உறுப்புகளுடன் இணைந்து முழு உடலையும் செயல்படுத்தும் தன்மை மிகவும் சிறப்பானதாகும்.

ஆனால் இன்று பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதனதன் செயல்களை செய்வதில் குறைபாடு ஏற்பட்டு அதனால் உடலானது பல வகைகளில் பாதிக்கப்படுகிறது. இந்த உறுப்புகளின் செயல்பாடுகளையும், அதனால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் கல்லீரல் பற்றி அறிந்து கொள்வோம்.

கல்லீரல்

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 1/4 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் உதரவிதானத்திற்கு கீழே அமைந்துள்ளது.

கல்லீரல் செல்களினால் (Hepatic cells) ஆனது. பல இரத்தக் குழாய்கள் சூழ்ந்துள்ள இதனை சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு இரசாயனத் தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம்.

நாம் உண்ணும் உணவு செரித்து அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் சென்றடைவதற்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களே வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை உற்பத்தி செய்வது கலலீரல்தான்.

பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் அங்கங்கே படிந்து இரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்துவிடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான இரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

பித்த நீர்

பித்த நீர் காரத்தன்மை கொண்டது. கசப்புச் சுவையுடைய இதில் மூன்று வகையான பொருட்கள் உள்ளன.

தண்ணீர் (Water)

பித்த உப்பு (Bile salt)

பித்த நிறமிகள் (Bile pigments)

பித்த நிறமிகள்தான் மலத்திற்கு நிறத்தை தருகின்றன. மலத்தின் நிறம் மாறினாலே உடலில் நோயின் தாக்கம் இருக்கும்.

பித்த உப்பு, கொழுப்பு சத்துக்களை செரித்ததும், செரித்த உணவுச் சத்தை உறிஞ்சி உறுப்புகளுக்கு கொடுப்பதற்கும் (Absorption) உதவுகிறது.

பித்த உப்பானது கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ச்,ஞீ,ஞு – ஓ மற்றும் கால்சியம், செரித்தலுக்கும் உதவுகிறது.

பெருங்குடலைத் தூண்டி சிரமம் இல்லமல் மலம் வெளியேறவும், ஒரு முறை சுரந்த பித்த நீர் தன் வேலையைச் செய்து முடித்தவுடன் மீண்டும் பித்த நீர் சுரக்க கல்லீரல் செல்களைத் தூண்டுவதும் பித்த உப்புகள்தான்.

உணவில் உள்ள மாவுச் சத்துக்கள், புரதச் சத்துக்கள் மற்றும் கொழுப்புச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்குப் பித்த நீர் உதவுகிறது.

உண்ட உணவானது நேரடியாக அதே நிலையில் சிறுகுடலுக்கு சென்று பித்த நீரால் செரிக்கப்பட்டு சத்தாக மாற்றி திசுக்களுக்குச் சென்றடைவதற்குள் அவை பல மாறுதல்களைப் பெற்று இறுதியாக குடலுறுஞ்சிகளால் உறிஞ்சப்படுகிறது. உதாரணமாக மாவுச்சத்துள்ள உணவை நாம் சாப்பிடும்போது அது குளுக்கோஸ் (Glucose) ஆக மாறுகிறது. அந்த குளுக்கோஸ் தேவைக்கு அதிகமாக உள்ளபோது சர்க்கரை நோய் வர வாய்புள்ளது. எனவே தேவைக்கு அதிகமான உள்ள குளுக்கோஸை கல்லீரல் கிளைக்கோஸைனாக மாற்றி தன்னுள் சேமித்து வைத்துக் கொள்கிறது.

பிளாஸ்மா புரதங்களை தயாரிக்கிறது.

உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை உற்பத்தி செய்கிறது. இரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், இரத்த நாளங்களுக்குள் இரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.

இரும்புச் சத்து, வைட்டமின் பி 12, வைட்டமின் ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்கிறது.

நோய்த் தொற்றுதலை எதிர்த்துப் போர்புரிகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

இவ்வாறு உடலுக்கு ஊக்கமும், செயல் வேகமும், கொடுக்கும் கல்லீரல் சில காரணங்களால் பாதிக்கப்படுகிறது.

கல்லீரல் வீக்கம் உருவாக காரணங்கள்

முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், நேரம் தவறி உண்பது, அளவுக்கு அதிகமாக உணவு அருந்துவது.

மது அருந்துவது, புகையிலை, பான்பராக் போடுவது புகை பிடிப்பது. ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது முதலியவற்றால் கல்லீரல் வீக்கமடைகிறது. மேலும் மன அழுத்தம், மனக்கிளர்ச்சி இவைகளாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு வீக்கம் உண்டாகிறது.

கல்லீரலைத் தாக்கும் நோய்கள்

வைரல் ஹெப்பாடிட்டீஸ் (Viral Hepatitis) ஏ, பி, சி, டி, இ என்று பல வகைகள் உள்ளன. இதில் வைரல் ஹெப்பாடிட்டீஸ் பி அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. சைக்ரோஸ் (Cirrhosis of Liver), Cholelithesis, Cholecystitis, Carcinoma of liver, Hepatomegaly.

கல்லீரல் நோயின் பொதுவான அறிகுறிகள்

உடல் களைப்பு, பசியின்மை, அஜீரணக் கோளாறு, குமட்டல், வாந்தி, தலைவலி, மூட்டு வலி (Joint pain), வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். சிறுநீர் சிவப்பு மஞ்சள் நிறமாகவும், மலம் நிறம் மாறியும் வெளியாகும். மலச்சிக்கல் அல்லது பேதி போன்றவை உண்டாகும்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

· அசைவ உணவுகள்,

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள்,

· சோடா உப்பு கலந்த உணவுகள்,

· எளிதில் சீரணமாகாத உணவுகள்,

· வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகள்.

கல்லீரல் பாதிப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

· முறையான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.

· நன்கு சுத்தமான நீரை அருந்தவேண்டும். தினமும் போதிய அளவு நீர் அருந்துவது நல்லது.

· மது, புகைப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

· தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

· மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தும் மூலிகைகள்

கீழாநெல்லி – Phyllanthus amarus

வில்வம் – Aegle marmelos

அத்தி – Ficus racemosa

வேப்பிலை – – – Azadirachta indica

நெல்லி – Emblica officinalis ்

தும்பை – Leucas aspera

துளசி – – Ocimum sanctum

அருகம்புல் – Cynodon dactylon

கல்லீரல் பாதிப்õல் உண்டாகும் காமாலை நோயை குணமாக்க,

நீர்முள்ளிப் பூ,

வேப்பம் பூ,

நெருஞ்சில்,

திரிபலா

சிவதை வேர்

சம அளவு எடுத்து நீரில் இட்டு குடிநீராக காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் கல்லீரல் பாதிப்பினால் உண்டான காமாலை குணமாகும்.

கீழாநெல்லி – 1 கைப்பிடி

சுக்கு – 5 கிராம்

மிளகு – 5 கிராம்

சீரகம் – 5 கிராம்

சோம்பு – 5 கிராம்

இவற்றை எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்ட காமாலை நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும்.

உணவு

உப்பு, புளி நீக்க வேண்டும். அதிக அளவு கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பழங்கள்

பப்பாளி, வாழை, பேரீட்சை, திராட்சை, மாதுளை, கோதுமை, பார்லி கஞ்சி உட்கொள்ளலாம்.

இளநீர், பதநீர், பனை நுங்கு, கரும்புச் சாறு, தேங்காய் பால் அருந்தலாம்.

மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தி, கல்லீரலைப் பலப்படுத்த இந்திய மருத்துவ முறையில் பல மருந்துகள் உள்ளன.

கல்லீரல் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோமாக.

குழந்தைகளின் தரத்தை வரையறுங்கள்?

தரம் என்றால் என்ன என்பதை முதலில் உங்கள் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
ஒரு வேலையை சுத்தமாகவும் திருத்தமாகவும் செய்வது எப்படி என்பதை புரிய வைக்க வேண்டும். அவர்களுக்குத் தரம் எனும் இலக்கை அடைய சிரமம் ஏற்பட்டால், பொறுமையாக அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.
உதாரணமாக, ‘‘உனது அறையை சுத்தம் செய்’’ என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
உங்களது பையனோ பெண்ணோ வீட்டை சுத்தம் செய்கிறார்,
பையனின் கழற்றிப் போட்ட பள்ளி யூனிபார்ம் சேரில் கிடக்கிறது. அதை அவர் எடுத்து கொடியிலோ அல்லது ஹேங்கரிலோ& துவைக்க வேண்டிருந்தால் பாத்ரூமிலோ போடவில்லை. அதேபோல காலையில் அவர் குடித்த காபி டம்ளர் டேபிளிலேயே இருக்கிறது. அதை எடுத்து ஸிங்க்கில் போடவில்லை.
ஆனால், வீட்டை சுத்தம் செய்து விட்டார்.
இந்த நேரத்தில் சேரில் கிடக்கும் துணியை எடுத்து போடும்படியும் காப்பி டம்ளரை ஸிங்க்கில் போடும்படியும் குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டும். கடுமையாகவோ கோபத்துடனோ அதை சொல்லக் கூடாது.
‘‘கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? வீட்டை கூட்டினாய் சரி. யூனிபார்மை இங்கேதான் கழற்றி போடுவார்களா? இந்த யூனிபார்மை இரண்டு நாட்களாக ஸ்கூலுக்கு போட்டுக் கொண்டு போய் வருகிறாய். எவ்வளவு அழுக்கு. அதை எடுத்துப்போய் பாத்ரூமில் போட வேண்டும் என்பது கூடவா தெரியாது?’’
இப்படி கடுமையாக சொல்லக் கூடாது.
இனிய உளவாக இன்னாத கூறல் கூடாது.
‘‘அந்த துணியை எடுத்து பாத்ரூமில் போடு. அழுக்காக இருக்கிறதல்லவா?’’
‘‘காபி டம்ளரை ஸிங்க்கில் போடு’’
என்று உத்தரவாக இல்லாமல் சாதாரணமாக சொல்லலாம். சாதாரணமாக சொல்லும்போது குழந்தைகள் கேட்கும்.
செய்யும் செயலில் ஒரு பிழைகூட இல்லாமல் சுத்தமாக செய்வதை பாராட்ட வேண்டும்.
குழந்தைக்கு அதுவே பழக்கமாகும்.-
தரமாகவும் திருத்தமாகவும் ஒரு செயலை செய்வது அதற்கு பழக்கமாக வேண்டும். பழகி விட்டால் பிறகு தானே நினைத்தாலும் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாது.
தரமான செயல் பாராட்டை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை, தன்மீதே ஒரு மதிப்பு வர வழி வகுக்கும்.
அடுத்து, ஒரு காரியத்தை குழந்தையிடம் ஒப்படைக்கிறீர்கள்.
உதாரணமாக, வீட்டில் உள்ள டி.வி. தூசுபடிந்த நிலையில் இருக்கிறது. அதை துடைக்கும்படி உங்களது பெண்ணிடம் சொல்கிறீர்கள். சாதாரணமாக, நீங்கள் டி.வி.யை துடைத்தால், டி.வி., டி.வி. ஸ்டாண்டு, டிவி ஸ்டாண்டில் கீழே இருக்கும் டிவிடி பிளேயர் எல்லாவற்றையும் சுத்தமாக துரைப்பீர்கள். அதற்கு உங்களுக்கு கால் மணி நேரம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஆனால், உங்களது பெண் அதே வேலையை ஐந்து நிமிடத்தில் செய்து விட்டாள் என்றால் அதற்காக குழந்தையை முதலில் வாய் நிறைய பாராட்டுங்கள்.
கால்மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை ஐந்து நிமிடத்தில் செய்யும்போது சரியாக தூசி துடைக்கப்படாமல் இருக்கலாம். டி.வி.யை மட்டும் துடைத்து விட்டு ஸ்டாண்டை துடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது டிவிடி பிளேயரை துடைக்காமல் இருந்திருக்கலாம். மூன்றையுமே சரியாக துடைக்காமல் இருந்திருக்கலாம்.
அதுபோன்ற குறை உங்களது கண்களுக்குப் படும்போது இதோபார் இப்படி துடைக்க வேண்டும் என உங்களது பெண்ணுக்குப் பொறுமையாக சொல்லிக்கொடுக்க வேண்டும். இதுபோல இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் போதும் அடுத்து உங்கள் பெண் உங்களை விட சுத்தமாக துடைப்பார்.
வேகம் அல்ல. திருத்தம்தான் முதலில் முக்கியம் என்பதை உங்களது பெண் புரிந்து கொள்வார்.
திருந்தமான வேலையை செய்வதற்குக் குழந்தைகளைப் பழக்க சிறிது காலம் பிடிக்கலாம். அதை பற்றி கவலைப்படக் கூடாது. ஏனெனில் உங்களது குழந்தைகளிடம் மோசமான பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்கும். அது வளர்வதற்கும் சிறிது காலம் பிடித்திருக்கும். அவற்றை போக்குவதற்கும் சிறிது காலம் ஆகும் என்பதை நீங்கல் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த வேலையை செய்தாலும் திருத்தமாக செய்வது உங்கள் குழந்தை பிற்காலத்தில் ஒரு வேலைக்கு செல்லும்போது நன்மதிப்பை பெற்றுக்கொடுக்கும் நண்பர்களிடம் மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும் என்பதை குழந்தைகள் உணரும்படி செய்ய வேண்டும்.
இதுபோன்ற பெருமையின் ருசியை குழந்தைகளை உணர செய்ய வேண்டும். எல்லா வேலைகளிலும் தரம் காப்பாற்றப் பட்டால், அது அவர்களது படிப்பிலும் எதிரொலிக்கும். அவர்களது கல்வியும் முழுமையாகவும் சிறப்பாகவும் அமையும்.
குழந்தைகளுடன் உரையாடல் முக்கியம். அவர்கள் செய்த வேலை தொடர்பாக பொறுமையாக உரையாடுங்கள். அது அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரே சமயத்தில் இரண்டு வேலைகளுக்கு மேல் செய்யச் சொல்லாதீர்கள். நிறைய வேலைப்பளு குழந்தைகளின் கவனத்தை சிதறடிப்பதோடு, சரியாக செய்யவில்லையானால் தாழ்வு மனப்பான்மையையும் வளர்க்கும்.
செய்ய வேண்டிய வேலைகளை வரிசை கிரம்மாகவும், தவற விடாமலும் குழந்தைகள் செய்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
அவர்களுடைய வேலையை அவர்களையே கவனிக்கச் செய்யலாம்.
உதாரணமாக,
‘‘நான் இன்று காலை படுக்கையை விட்டு எழுத்தவுடன், படுக்கையை சுருட்டி உரிய இடத்தில் வைத்தேனா?’’
‘‘முகத்தை கழுவி, பல் துலக்கி விட்டு அதற்குப்பிறகு காபி குடித்தேனா? அல்லது எழுந்தவுடன் அப்படியே காபிகுடிதேனா?’’
‘‘காலைக்கடன்களை முடித்துவிட்டு, குளித்து, சாப்பிட்டு, யூனிபார்ம் அணிந்து, உரிய நேரத்தில் பள்ளிக்குக் கிளம்பி விட்டேனா?’’
‘‘உரிய நேரத்தில் கிளம்ப முடியவில்லையானால் அதற்கு காரணம் என்ன?’’
‘‘நாளைக்கு உரிய நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப நான் என்ன செய்ய வேண்டும்?’’
போன்ற கேள்விகளை ஒரு வெள்ளை தாளில் எழுதி, குழந்தைகளின் கண்ணில் படும்படியான இடத்தில் ஒட்டி வைக்கலாம்.
அதை பார்க்கும் உங்களது மகன் அல்லது மகள் அதில் உள்ள கேள்விகளுக்கு விடை சொல்லும் போதே அவர்களுடைய வேலையில் உள்ள குறைபாடுகளை தெரிந்து கொள்வார்கள்.
பின் குறைகளை களைந்து சரியாக செய்ய தொடங்குவார்கள்.
வேலைகளை சரியாகவும் துல்லியமாகவும் எப்படி முடிக்கிறார்கள் என்பதை அவர்களே கவனித்து தங்களுக்குத் தாங்களே மதிப்பெண் போட்டுக் கொள்ளட்டும்.
நீங்களும் மதிப்பெண் போடுங்கள். குழந்தைகள் தங்களுக்குத் தாங்களே போட்டுக்கொள்ளும் மதிப்பெண்களை விட நீங்கள் குழந்தைகளுக்கு போட்ட மதிப்பெண்கள் குறைவாக இருக்கலாம்.
எந்தெந்த வேலைகளில் அவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.
அந்த வேலைகளை சரியாக செய்ய குழந்தைகளுக்கு என்ன இடையூறு என்பதை பாருங்கள். அந்த இடையூறை களைய அவர்களுக்கு உதவுங்கள்.
உதாரணத்திற்கு மதிப்பெண் அட்டவணை இப்படி அமையலாம்.
இந்த அட்டவணையில் குழந்தைகள் தங்களது வேலையை குறித்து மதிப்பிட்டு இருப்பதற்கும் உங்களது மதிப்பீடுக்கும் பொதுவாக் பெரிய வேறுபாடுகள் இல்லை. குழந்தையின் மதிப்பெண்ணுக்கும் உங்களது மதிப்பெண்ணுக்கும் ஒரு மதிப்பெண்தான் வேறுபாடு.
ஆனால், குறிப்பாக ஒவ்வொரு வேலையிலும் மதிப்பெண்களின் வேறுபாட்டை கவனிக்க வேண்டும். அன்றாட வேலைகளை பொறுத்தவரையில் குழந்தை தனக்கு அளித்துள்ள மதிப்பெண்ணை காட்டிலும் உங்களுடைய மதிப்பெண் குறைவாக உள்ளது.
ஆனால், அதே சமயத்தில் குழந்தை தனக்கு 10&க்கு 10 மதிப்பெண் போட்டுக் கொள்ளவில்லை. இன்னும் முழுமையாகவும் சரியாகவும் அந்த வேலைகளை செய்யவில்லை என்று குழந்தை உணர்கிறது. இது நல்ல அம்சம்.
அதே போல வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவுவதில் பெற்றொரின் மதிப்பெண்ணும் சரி குழந்தையின் மதிப்பெண்ணும் சரி மிகவும் குறைவாக உள்ளது.
ஆனால், அதே சமயத்தில் வீட்டுப்பாடங்களை சரியாக முடிப்பதில் மதிப்பெண் அதிகமாக உள்ளது. இதில் பெற்றோரின் மதிப்பெண்ணும் குழந்தையின் மதிப்பெண்ணும் ஒரே மாதிரி இருக்கிறது.
ஆக, உங்களது குழந்தை படிப்பில் கெட்டி. ஆனால், மற்ற வேலைகளில் சிறிது குறைபாடுகள் உள்ளன. அவற்றை களைவது சுலபம். எல்லாவற்றிலும் அதிக மதிப்பெண் எடுக்க என்ன வழி என்பதை குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள்.
இந்த மதிப்பெண் பட்டியல் மூலம் உங்கள் குழந்தையிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கீறிர்கள் என்பதை குழந்தை உணரும். அதே சமயத்தில் குழந்தைதன்னைப் பற்றி எப்படி மதிப்பிடுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
இதேபோல வகுப்பில் ஆசிரியரின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் குழந்தையிடம் கேளுங்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய திறன் குழந்தைக்கு இருக்கிறதா என கவனியுங்கள். அப்படி அந்த திறன் இல்லையெனில் அதை வளர்ப்பதற்கு என்ன செய்யலாம் என யோசியுங்கள்.
உதாரணத்திற்கு, உங்களது மகன் அல்லது மகள் கணக்கு பாடத்தில் நன்றாக மதிப்பெண் பெறலாம். ஆங்கிலம் கடினமாக இருக்கலாம். ஆங்கிலப் பாடத்திலும் கணக்கு பாடத்தை போலவே குழந்தை அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியருக்கு இருக்கலாம்.
அந்த எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வது?
குழந்தையின் ஆசிரியரை சந்தியுங்கள். அங்கிலப்பாடத்தில் ஏன் குழந்தை கஷ்டப்படுகிறான் அல்லது படுகிறாள் என கேளுங்கள். எந்த இடத்தில் குழந்தைக்குத் தடுமாற்றம் ஏற்படுகிறது என ஆசிரியரும் நீங்களும் கலந்து பேசி, தடுமாற்றத்தை களைய முயற்சியுங்கள். பிறகு கணக்கை போலவே ஆங்கிலத்திலும் நல்ல மதிப்பெண் பெற முடியும்.

குழந்தையைப் பிரதிபலிக்கும் வேலை
உங்கள் குழந்தை தன்னைப்பற்றியும் தனது வேலைகள் பற்றியும் மதிப்பிட்டதற்குப் பின் நீங்கள் அந்தக் குழந்தையின் வேலை குறித்து மதிப்பிடுகிறீர்கள்.
உங்களது மதிப்பீட்டை குழந்தைகளிடம் கூறும்போது உண்மையில் தரமான வேலை என்பது என்னவென்று குழந்தைகள் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தங்களது வேலைக்கு தாங்களே பொறுப்பு என்பதை உணர்ந்து கொள்கின்றனர்.
இதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் அறிந்து கொள்ளவும் நாம் சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
நீங்கள் பொறுமையாகக் கற்றுக் கொடுக்கும் போது தங்களது வேலையில் உள்ள குறை& நிறைகளை அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். அவர்களது சுயம் அவர்களுக்குத் தெரிகிறது. அவர்கள் யார் என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது. அதன்பிறகு அவர்களிடம் குறை இருந்தால் அதை நிவர்த்திக்க முயற்சிக்கிறார்கள்.

இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான `இஸ்ரோ’ தனது விண் வெளி ஆய்வுப் பணிகளில் கல்லூரி மாணவர்களையும் இணைத்துள்ளது. இதன்படி பெங்களூர் மற்றம் ஐதரா பாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து `ஸ்டுட் சாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர்.

`ஸ்டுடன்ட் சாட்டிலைட்’ என்பதன் சுருக்கமே `ஸ்டுட் சாட்’ என்பதாகும். (Student Satel lite&STUD SAT)
சுமார் 55 லட்சம் ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 10x10x13.5 சென்டி மீட்டர் அளவு கொண்டது. இதன் எடை சுமார் 850 கிராம். இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்பு கருவி, பேட்டரி, கண்ட்ரோல் கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த கேமிரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மற்ற செயற்கை கோள்களுடன் மாணவர்கள் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் செயற்கை கோள் பூமியில் இருந்து சுமார் 680 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும். அங்கு சுற்றி வந்தபடியே இந்த செயற்கை கோள் பூமியை படம் பிடித்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இந்தபடங்களை மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்துவார்கள்.

செயற்கை கோளை தயாரித்த மாணவர்கள் குழு இதை சிலவாரங்களுக்கு முன்பு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை ராக்கெட்டில் பொருத்தும் பணியை செய்து வருகிறார்கள்.

இது பெண்களின் காதல் பார்வை- பார்வைகள் பலவிதம்

குழந்தைகள் பெரும்பாலான நேரம் மேலே பார்த்த படியே இருபதால் ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் மீது பாசம் ஏற்படுகிறது. சில பெண்கள் குழந்தையை போலவே தலையைத் தாழ்த்தி மேலே பார்பது பவ்யமான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது ஆண்களைக் கவர்கிறது. இளவரசி டயானா திருமண வயதை அடைந்தபின்னும், இவளின் பார்வை குழந்தை போலவே இருந்ததால், அவரால் லட்சக்கணக்கான மக்களை பாசத்துடன் ஈர்க்க முடிந்தது.

ஆண்-பெண் பார்வை


ஆண்களுக்கு சுரங்கபார்வை என்ற திறன் உள்ளது. ஒரு குறிபிட்ட இலக்கை நீண்ட தூரத்திற்கு அப்பால் இருந்தும் குறிபார்க்க இது உதவுகிறது. இருந்த போதும், குறிபிட்ட வட்டத்திற்கு அப்பால் உள்ள பொருட்களை அவர்கள் பார்க்க சிரமபடுகிறார்கள். உதாரணமாக, அலமாரி, பிரிஜ் போன்றவற்றில் உள்ள அறைகளில் அவர்கள் ஒரு பொருளைத் தேடுவது கடினமாக இருக்கிறது. பெண்களுக்கு இது எளிதாக உள்ளது.

பெண்ணின் பார்வை அகலமானது என்பதால் யாரும் கண்டறிய முடியாதபடி, ஒரு ஆணைத் தலையிலிருந்து பாதம் வரை அவளால் எளிதாக அளந்துவிட முடிகிறது. ஆனால், ஆணிற்குக் குறுகிய பார்வை இருப்பதால் பெண்ணின் உடலில் மேலும், கீழும் அவனது பார்வை அலைவதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். இதனால், குற்றம் சாட்டபடும்போது, பெண்களை விட ஆண்கள் எளிதில் சிக்கி விடுகிறார்கள்.

காதல் பார்வை


காதலர்கள் இருவரும் ஒருவர் கண்களை மற்றவர் ஊடுருவும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் கண்மணி விரிவடைந்திருப்பதைக் கவனிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவர் கண்கள் விரிவடைவதைக் கண்டு பரவசமடைகிறார்கள். ஒரு அறையின் குறுக்கே இருக்கும் ஒரு ஆணின் கவனத்தைக் கவர ஒரு பெண் அவனது பார்வையை 2 அல்லது 3 முறை சந்தித்து விட்டு வேறுபக்கம் அல்லது கீழே பார்பாள். இந்த பார்வையே அவளது காதல் ஆர்வத்தை வெளிபடுத்த போதுமானதாக இருக்கிறது. வெஸ்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மோனிகா முர் நடத்திய ஆய்வில், ஒரு பெண்ணின் முதல் பார்வையை புரிந்து கொள்ள முடியாத திறமையுடன் ஆண்கள் இருப்பதால், பெண்கள் சராசரி ஆணின் கவனத்தை ஈர்க்க 3 முறை பார்க்கிறார்கள். மெதுவாக புரிந்து கொள்ளும் ஆணின் கவனத்தை ஈர்க்க 4 முறையும், இன்னும் சிலரை 5 முறையும் பார்க்க வேண்டிள்ளது என்று கடறிந்தார்.

கவர்ச்சிக் கன்னிகளின் பார்வை


ண் இமையை கீழிறக்கி, அதே சமயம் புருவங்களை தூக்கி, மேலே பார்த்து உதடுகளை லேசாக பிரிப்பது பல நுற்றாண்டுகளாக பெண்கள் பயன்படுத்தி வரும் கவர்ச்சி பார்வையாக உள்ளது. இதனால், அவர்களது புருவத்திற்கும், இமைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாவதோடு, அவர்களுக்கு ஒரு `ரகசியமான தோற்றம்’ ஏற்படுகிறது. உடலுறவில் உச்சகட்ட நிலையை அடைவதற்கு முன் பெண்களின் முகத்தில் இப்படிபட்ட பாவம் தெரியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மர்லின் மன்றோ, டெபோரோ ஹேரி, ஷேரன் ஸ்டோன் போன்ற கனவுக்கன்னிகளின் காதல் பார்வை முத்திரைகள் இவை.

அதிகாரபார்வை

அதிகாரத் தோரணையுள்ளவர்கள் தலையை பின்னே சாய்த்து முக்கின் ஓரமாக சாய்த்து பார்பார்கள். தங்களது முக்கியத்துவம் உணரபடவில்லை என்று உணர்பவர்களும் இப்படி பார்க்கலாம். பேசும்போது யாராவது இப்படி செய்தால், நீங்கள் அவர் கூறிய செயலை சரியாக செய்யவில்லை. அதற்கு `இன்னும் புதிய உத்தி தேவை’ என்று அர்த்தம். புருவத்தைக் கீழிறக்கும்படி பார்பது, மற்றவரை அடக்கவும் முரட்டுத்தனத்தை வெளிபடுத்தவும் செய்யபடுகிறது. அதேசமயம் புருவத்தை உயர்த்துவது, பணிவின் அறிகுறி. உயரமான புருவங்கள் மர்லின் மன்றோவிற்கு பணிவான தோற்றத்தைத் தந்தது. நடுபுறமாக கீழ் திரும்பிய புருவங்கள் ஜான்கென்னடிக்கு இருந்ததால் `எப்போதுமே அக்கறை உள்ளவர்’ போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அவருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கை பெற்றுத்தந்தது.

இணையதளங்களின் கிழக்கு வாசல்

நாம் எத்தனையோ இணைய தளங்களுக்குச் செல்கிறோம். ஒவ்வொரு வகை தகவல் தேடலுக்கும் குறைந்தது 15 முதல் 30 தளங்களை அணுகுகிறோம். சில வேளைகளில் இது போன்ற இணையதளங்களைத் தகவல் வாரியாக வகை பிரித்து ஒரு இணைய தளத்தின் ஒரே பக்கத்தில் லிங்க்குகளாகத் தந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று நமக்கு ஒரு எண்ணம் தோன்றலாம். அப்படி ஓர் இணைய தளமும் உள்ளது என்பதுதான் இன்றைய செய்தி. அதன் பெயரே பிரபலமான தள முகவரிகள் என்பதுதான். ஆம், Popular URLs என்ற ஆங்கிலச் சொற்களின் சுருக்கமாக POPURLS என்று இதன் பெயர் உள்ளது. இதன் இன்டர்நெட் முகவரி: http://popurls.com.

.2006 ஆம் ஆண்டில் தாமஸ் மார்பன் (Thomas Marban) என்பவரால் இது தொடங்கப்பட்டது. இணையத்தில் ஒரு பக்க அளவில் உலக நடப்புகளை உள்ளடக்கி தருவது என்ற வழக்கம், இவரின் முயற்சிக்குப் பின் தான் உருவானது என்று அனைவரும் கூறுவார்கள். அனைத்து இணைய தளங்களுக்கும் ஒரு நுழைவு வாயிலாக இது இயங்குகிறது. யாஹூ, மிகவும் பிரபலமான இணையதளங்களைத் தேர்ந்தெடுக்கையில் ஆயிரக்கணக்கான செய்தி தளங்களை எல்லாம் பார்த்தபின் இதனை முதல் 30 தளங்களில் கொண்டு வந்தது.
இந்த தளத்தில் லேட்டஸ்ட் செய்தி தலைப்புகள், செய்திகள், இணைய தளத்தின் வலைமனைகள் மற்றும் பிரபலமான இணைய தள முகவரிகள், அவை கொண்டுள்ள செய்திகள் ஆகியவை கோடு காட்டப்பட்டு, அவற்றிற்கான லிங்க்குகள் வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களைக் கவரும் செய்தி அல்லது தகவல் இருப்பின் அதில் கிளிக் செய்து, சார்ந்த இணைய தளம் சென்று அதனைக் காணலாம்.
இதில் தகவல்களைத் தேட நம்மைப் பதிந்து கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பதிய வேண்டும் என விரும்பினால் பதிந்து கொண்டு நம் தேடலை வகைப்படுத்தலாம். அதன் பின் நம் தேவைக்கேற்ற தளங்களின் லிங்க்குகள் நமக்கு நேரடியாகக் கிடைக்கும்.
இதனால் நமக்கு தேடும் நேரம் மிச்சமாகிறது. கூடுதல் தகவல் தளங்களும் ஒரே இலக்கில் கிடைக்கின்றன. ஒரு முறை இந்த தளம் சென்று விட்டால், இந்த தளத்தில் தகவல்கள் எப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொண்டு, அடுத்த தேடுதல்களை மிக எளிதாக உங்களால் அமைத்துக் கொண்டு தேட முடியும். எதற்கும் ஒரு முறை சென்று பார்த்துவிடுங்கள்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே

இளம்பருவத்திலிருந்தே குழந்தைகளை நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்த்து வர வேண்டும். இது தான் எதிர்காலத்தில் அவர்களின் வளர்ச்சிக்கு நல்ல அடித்தளமாக அமையும். பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்லவர்களாகவே பிறக்கின்றனர். வளர்ந்து வரும் சூழல் தான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற வைக்கின்றன.

எல்லோருமே நல்லவர்களாக வாழ்வதற்கு தான் விரும்புவர். இருந்தாலும், தீய நபர்களின் சகவாசத்தால் அவர்கள் வாழ்க்கையில் தடம்புரள நிறையவே வாய்ப்புகள் உள்ளன. பலருக்கும், தெரிந்த நல்ல பழக்கவழக்கங்களையே கூட கடைபிடிக்க முடியாமல் போய் விடுகிறது. காரணம், `அதுதான் நமக்குத் தெரியுமே’ என்று அலட்சியம் செய்து விடுகின்றனர். அதனால் நல்ல பழக்கங்களை எத்தனை முறையானாலும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கலாம். அப்போது தான் அவை உங்கள் மனதிற்குள் ஆழமாக பதியும்.

`ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைமா?’ என்ற பழமொழியின்படி உங்கள் குழந்தைகளிடம் சிறு வயது முதலே நற்பண்புகளை வளர்த்து வாருங்கள். நற்பழக்கங்கள் என்னென்ன என்பதை முதலில் குழந்தைகளுக்கு புரியும்படி சொல்லுங்கள். `தாயை போல பிள்ளை, நுலை போல சேலை’ என்பார்கள். அதனால், நீங்கள் முதலில் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடித்து வாழும்போது தான் உங்கள் குழந்தைகளும் அவற்றைக் கடைபிடிக்கும். காலைக்கடன்கள் முடித்தல், காலை மற்றும் இரவு வேளைகளில் பல் துலக்குதல், சிறுசிறு உடற்பயிற்சியை முறையாக செய்தல், குளித்தல், தூய ஆடைகளை அணிதல், நடைபயிற்சி, ஆசனங்கள் செய்வது,

அறநெறிகளை போதித்து மனதை ஒருநிலைபடுத்துதல் போன்ற பழக்கவழக்கங்களை தினசரி கற்றுக் கொடுக்கலாம். காற்றோட்டமான இடங்களில் சூரிய ஔ படும் இடங்களில் குழந்தைகளை விளையாட விடுங்கள். திறந்தவெளிக் கழிப்பிடங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான, தூய்மையான கழிப்பிடங்களை பயன்படுத்துங்கள். சிறுர், மலம் கழித்த பின் கைகளை ஒவ்வொரு முறையும் சோப்பு போட்டு நன்றாக கழுவி விட வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகள் அணிவதைக் கட்டாயபடுத்த வேண்டும். குறிபிட்ட வேளைகளில் சாப்பிடும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் நன்றாக கைகளைக் கழுவ வேண்டும். டிவி பார்க்கும் போதும், ரேடியோ கேட்கும் போதும் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பேசிக்கொண்டே சாப்பிடக் கூடாது. இப்படிச் செய்தால் நிறைய சாப்பிட்டு உடல் எடை பெருத்து விடும்.

அனைவரிடமும் அன்புடன் பழக வேண்டும். தீய நபர்களுடன் பழக விடாமல் நல்ல நபர்களுடன் பழகச் செய்யுங்கள். அதனால், அவர்களுக்கு வரும் நன்மை, தீமைகளை பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். சிறுவர்களுக்கான பதில்கள் மற்றும் நீதிக்கதைகளை படிக்கச் செய்யுங்கள். `கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதால், உலகத்தோடு கூடி வாழும் வழிமுறைகளை கடைபிடித்து பழக வேண்டும். பிறருக்கு உதவும் மனபான்மையையும், தருமச் செயல்கள் செய்யவும் பழக்கபடுத்த வேண்டும்.

அடிக்கடி சாக்லேட்… வேண்டாமே!

சின்ன வயது முதல் தொடர்ந்து சாக்லெட் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களின் தூக்கம் கெட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

ஏதாவது ஒரு வேலையில் இருக்கும்போது தூக்கம் எட்டிப்பார்த்தால் டீ அல்லது காபி குடிக்கிறோம். அதில் உள்ள காபீன் என்ற ரசாயனப்பொருள் நம் முளையின் செயல்பாட்டை தூண்டி சுறுசுறுப்பாக்குகிறது.

இதே காபீன் சாக்லெட்டிலும் உள்ளது. சாதாரண சாக்லெட்டில் 9 மில்லி கிராம் வரை காபீன் இருக்கிறதாம். சில உயர் ரக சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் 30 மில்லிகிராம் வரையில் காபீன் இருக்கிறதாம். இது தூக்கத்தை விரட்டி விடும்.

இதுதான் நல்ல குடும்பம்! -வேதாத்திரி மகரிஷி

இதுதான் நல்ல குடும்பம்! ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான அறிவுரைகளை கூறு கிறார் வேதாத்திரி மகரிஷி. அந்த அறிவுரைகள் :

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய ன்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்.