Daily Archives: மே 4th, 2010

ஐ.பி.அட்ரஸ் என்ன?

இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. (Internet Protocol) முகவரி தரப்படுகிறது. இது நான்கு எண்களின் கோவையாக, புள்ளிகளால் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த முகவரிகள் பெரும்பாலும், இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களால், அவை இயங்கும் இடம் குறித்துத் தரப்படுவதால், இந்த முகவரி எண்ணைக் கொண்டு, இணைக்கப்படும் கம்ப்யூட்டர் இயங்கும் இடத்தைச் சொல்லிவிடலாம். அதன் இருப்பிடம் பொதுவான அளவில் காட்டப்படும். பூகோள ரீதியாக அதன் இருப்பிட ரேகைகள் அளவும் கண்டறியலாம். இன்டர்நெட்டில் இயங்கும் ஒவ்வொரு முறையும் ஒரு முகவரி தரப்படும். சில வகை இணைப்புகளுக்கு மட்டுமே மாறாத முகவரி எண்கள் தரப்படும்.
உங்களுடைய கம்ப்யூட்டரின் இணைய முகவரி என்ன என்று அறிய விருப்பமா? கம்ப்யூட்டரை இன்டர்நெட்டில் இயக்குங்கள். பின் http://www.whatismyipaddress.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். உடன் உங்களின் கம்ப்யூட்டரின் இணைய முகவரி மட்டுமின்றி, எந்த நிறுவனம் உங்களுக்கு, எந்த வகை இணைப்பு வழங்கியுள்ளது என்றும், இருக்கும் நகரின் பெயர், அதன் பூகோள இருப்பிடம் ஆகியவையும் கீழ்க்கண்டபடி காட்டப்படும். எடுத்துக்காட்டாக ஒன்று தரப்படுகிறது.

General Information

Hostname: 121.247.11.99.chennaidynamicbb.vsnl.net.in

ISP: TATA Communications formerly VSNL is Leading ISP

Organization: MSC Leased line RBUDYNAMIC

Proxy: None detected

Type: Dialup

இதன் கீழாக சிறிய மேப் ஒன்று காட்டப்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் இருக்கும் ஊர் சுட்டிக் காட்டப்படும்.

தேவை ஒரு தொப்பி…

மனிதனின் மிகபெரிய சொத்து, உடல் ஆரோக்கியம். உடலை பராமரித்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
உடல் பராமரிப்பு முறைகள் பற்றிய டிப்ஸ்கள்… உடலின் அனைத்து செயல்களுக்கும் தேவையான ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்கிறது. அதனால், ரத்த இழப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்ததானம் செய்வதன் முலம் நம் உடல் உடனடியாக புதிய ரத்தத்தை உருவாக்கிக் கொள்ளும். ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம். உடலில் உணர்ச்சியற்ற தேமல் ஏதாவது இருந்தால் உடனே மருத்துவரிடம் காட்ட வேண்டும். தொழுநோய் தேமல்களில் உணர்ச்சி இருக்காது. வயிற்றுபோக்கு, டைபாய்டு, காலரா , போலியோ போன்ற நோய்கள் தண்ணீர் முலமே பரவுவதால் சுத்தமான குடிரையே குடிக்க வேண்டும். எப்போதும் காலணி அணிந்து வெளியில் செல்லுங்கள். கொக்கிபுழு நம் உடலுக்குள் நுழைவதை காலணி தடுக்கிறது. இயற்கை உபாதைகளுக்கு காலம் தாழ்த்தக் கூடாது. இல்லாவிட்டால், சிறுநீர்பையிலும், உடலிலும் பிரச்சினைகள் தோன்றும். தலையில் அடிபடாமல் எச்சரிக்கைடன் இருக்க வேண்டும். அப்படி எப்போதாவது அடிபடும் சூழ்நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை படி எக்ஸ்ரே எடுத்து ரத்தக்கசிவு, ரத்த உறைதல் உள்ளதா என்று பார்க்க வேண்டும். பின்னர் அதற்கு தகுந்த சிகிச்சையை தாமதமின்றி எடுத்துக் கொள்ள வேண்டும். கோடை காலங்களில், சூரிய ஒளி தலையில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதற்காக தொப்பி அணிந்து வெளியே செல்லலாம்.

மோப்பம் பிடிக்கும் செல்போன்…

குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை கதிகலங்கச் செய்யும். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் சில நச்சுத்தன்மைகள் காற்றில் அதிகரித்து வருவதும் சாதாரணமாகி வருகிறது.

இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து உங்களை காப்பாற்ற வருகிறது மோப்பம் பிடிக்கும் செல்போன். `எலக்ட்ரானிக் மூக்கு’ எனப்படும் நவீன உணர்கருவி இதுபோன்ற ஆபத்துகளை கண்டுபிடித்து எச்சரிக் கும். இந்தக் கருவியை தற்போது செல்போனுடன் இணைத்து வழங்குகிறது அமெரிக்க நிறுவனமான `ஹோம்லேண்ட் செக்யூரிட்டி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’.

இந்த அமைப்பு `செல்-ஆல்’ என்ற நவீன சென்சார் கருவியை தயாரித்துள்ளது. இதனை செல்போன் களில் பொருத்திக் கொண்டால் காற்றில் நச்சு ஆபத்துகள் இருந்தால் எச்சரிக்கும். நமக்கு தீமை விளைவிக்கும் குளோரின், சாரின் போன்ற விஷ வாயுக்கள் இருந்தால் ஒலி எழுப்பும். ஒரு வேளை நீங்கள் செல் போனை வைப்ரேசனில் வைத்திருந் தால் எஸ்.எம்.எஸ். அனுப்பும்.

அதேபோல் அதிக நச்சுத்தன்மையை உணர்ந்தால் பலமாக ஓசை எழுப்பி உங்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் உஷார்படுத்தும். அத்துடன் எந்த இடத்தில் இந்த நச்சுவாயு பரவி இருக்கிறது என்ற தகவலை அவசர உதவி மையத்துக்கும் அனுப்பி வைக்கும்.

பயனுள்ள இந்தக்கருவி மிகச்சிறியதாக இருக்க வேண்டும், மிகக்குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று இதை தயாரித்த நிறுவனம் கூறுகிறது. அதற்கேற்ப இதன் விலையும் ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க பிளட் குரூப் என்ன ?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன.

இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல்டோனர்’ என்று பெயர்.

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், Aகுரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன்இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனிஅவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச்  ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோஅல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன்கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்;இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி –விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக்காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும்.இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில்  இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organtransplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியைநான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது.தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும்நேரத்தைவிடக் குறைவுதான்.

ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்கவேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில்இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

நன்றி – தினகரன்

கின்னஸ் சாதனை படைத்த பன்றி!


கின்னஸ் சாதனை புத்தகத் தில் இடம் பெற்றுள்ளது ஒரு பன்றி. என்ன சாதனை செய்தது இந்த பன்றி? உலகில் மிக அதிக வயது வாழும் சாதனையை தான் அது படைத்துள்ளது.
அமெரிக்காவில் டலாஸ் நகரில் உள்ள ஸ்டாசி கெம்பல் என்ற பெண், இந்த பன்றியை வளர்த்து வருகிறார். பன்றிக்கு வயது 20. இதன் பெயர் ஆஸ்கர்; இன்னமும் நல்ல திடமாக இருக்கிறது.
கின்னஸ் சாதனை படைத்த இந்த ஆஸ்கர் பன்றிக்கு நெக்லஸ் அணி வித்துள்ளார் இந்த பெண். வீட்டில் செல்லமாக வளரும் வகையை சேர்ந்த இந்த பன்றி, தன் எஜமானருக்கு எல்லா வேலையிலும் ஒத்துழைக்கிறது.
நம்மூரில் உள்ள பன்றிகளுடன் இதை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஆஸ்கர் பன்றி, முழுக்க முழுக்க வீட்டில் வளர்ந்து வருவது. அதற்காக, தனி அறையை கெம்பல் அமைத்துள்ளார். தனி படுக்கை, தனி, ‘டிவி’ என்று ஜமாய்க்கிறது ஆஸ்கர். சாப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம்; மட்டன், சிக்கன் என்று தனி மெனுவே உண்டு.
கெம்பல் போலவே, அவரின் காதலர் மெகினுக்கும் பன்றி மோகம் அதிகம். அவரிடம் ஒரு பூனை, இரண்டு பன்றிகள் உள்ளன. இதில் ஆண் பன்றி பெயர் ஷபில்.
மெகினுடன் கெம்பல் தாலிகட்டா மனை வியாகத்தான் வாழ்ந்து வருகிறார். அது போலவே, கெம்பலின் ஆஸ்கர் பன்றியும், மெகினின் ஷபிலும் அன்பாக பழகி வருகின்றன. இந்த பன்றிகளை பற்றி கெம்பல் கூறு கையில், ‘எங்களுக்கே வியப்பாக இருக்கும்; இரு பன்றிகளும் ஒன்றோடு ஒன்று பாசமாக பழகும்; ஆனால், இரண்டும் ஒன்று சேர்ந்ததே கிடையாது; நண்பர்களாகவே இருந்து வந்துள்ளது வியப்பாக இருக்கிறது…’ என்றார்.
பத்தாண்டாக இரு பன்றிகளும் பழகி வந்த நிலையில், கெம்பல் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித் ததால், ஷபிலுடன் பழகும் வாய்ப்பு ஆஸ்கருக்கு குறைந்துவிட்டது. எனினும், வெளியில் சுற்றிய நேரம் போக, அது, தன் அறையில் முடங்கி விடும். இதற்கு வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பாடு போட வேண்டும்; ஓய்வு எடுக்கும் போது, ‘டிவி’ போட்டு விட வேண்டும். சில சமயம், ரிமோட்டை வைத்து பட்டன்களை தட்டியபடியே இருக்கும். இப்போது ஓரளவு சேனல்களை மாற்ற கற்றுக் கொண்டுள்ளது என்று பெருமிதத்துடன் கூறுகிறார் கெம்பல். அதை நீங்கள் பார்த்தால் வியப்பீர்கள். நான் கூலிங் கிளாஸ், ஷூ, ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கிளம்பினால், தனக்கும் அப்படியே போட வேண்டும் என்று முரண்டு பிடிக்கும். என்னுடன் வெளியில், பார்ட்டிக்கு போகும் போதும் வரும். சமீபத்தில் அதற்கு நெக்லஸ் செய்து போட்டுள்ளேன் என்றும் கூறினார்.
ஆஸ்கருக்கு சமீப காலமாக, மூட்டு வலி வருகிறது. டாக்டரிடம் காட்டியதற்கு, மஞ்சள் தேய்த்து விடச் சொல்லியுள்ளார். மட்டன், சிக்கனை குறைத்து, காய்கறி, பழங்களை சாப்பிட வைக்க கூறியுள்ளார். இப்போது இதன் எடை 70 கிலோ. ஆலிவ் ஆயிலில் சமைத்த மட்டன், காய்கறிகளை தான் சாப்பிடுகிறது. சமீபத்தில் கின்னஸ் சாதனை புத்தக நிபுணர்கள் வந்து சோதித்து விட்டு, உலகில் மிக அதிக நாள் வாழும் பன்றி என்று அங்கீகரித்துள்ளனர்.
***
அமெரிக்கா, ஐரோப்பா என்றில்லை, உலகில் மொத்தம் 200 கோடி பன்றிகள் உள்ளன.
* சில நாடுகளில், நாய், பூனை போல, வீட்டுச் செல்லப் பிராணியாக பன்றியை வளர்க்கின்றனர்.
* சிறிய கண்கள், சிறிய வால் கொண்ட பன்றி, முரட்டுத்தோல் மற்றும் முரட்டுத்தனமான கேசத்தை கொண்டது.
* ஆண் பன்றிக்கு, வயது எட்டு மாதம் ஆனதுமே பாலின உணர்ச்சி வந்து விடும்.
* ஒரே நேரத்தில், ஆறு முதல் 12 வரை குட்டிகளை பிரசவிக்கும் பெண் பன்றி.
* காட்டு பன்றிகளை விட, வீட்டுப் பன்றிகளின் வாழ்நாள் அதிகம்.

கற்ப மூலிகை வல்லாரை

நரை, திரை, மூப்பு, பிணி நீக்கி, வயதுக்கு ஏற்ப உடலில் உண்டாகும் பாதிப்புகளை போக்கி என்றும் இளமையுடன் வாழ வைப்பதற்கு சித்தர்கள் கண்ட முறைதான் காயகற்ப முறையாகும்.

கற்பத்தை யுண்டால் காயம் அழியாது

கற்பத்தி னாலே காணலாம் கைலையை

கற்பத்தி னாலே காணலாம் சோதியை

கற்பத்தி னாலே காலையுங் கட்டிடே

உடலை நோயின்றி காக்கும் கற்ப முறைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வல்லாரை

உடலுக்கு வன்மையையும், அறிவையும் அள்ளித் தரும் மூலிகைதான் வல்லாரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த மூலிகை இந்தியாவெங்கும் நீர்நிலைகள் அதாவது ஆறு, கால்வாய், குளம், குட்டை, வயல் வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சார்ந்தது. அரைவட்ட வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவ இலைகளைக் கொண்டது. இலைகளில் நரம்புகள் இழையோடுவதைக் காணலாம்.

பொதுவாக வல்லாரை உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியைத் தரும். மூளையின் நரம்புகளைத் தூண்டி நினைவாற்றலைப் பெருக்கும். இம் மூலிகையில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என முச்சுவையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

வல்லாரை யோசன வல்லி, பிண்டீரி, சண்டசி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

வல்லாரைக் கற்பமுறை வல்லாரை யார்நிகர்வார்

கல்லாரைப் போலக் கலங்காமல்-வல்லாரைச்

சாறு மிலவணமுஞ் சாபத்திரி யுண்ணப்

பேருமடி வல்லைப் பிணி

தேரன் – வெண்பா

வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை என இருவேளையும் 1 தேக்கரண்டி பொடியில் தேவையான அளவு தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

எல்லா வகையான சுரங்களையும் நெருங்க விடாது. சூட்டைத் தணிக்கும். சிரசின் உஷ்ணத்தைக் குறைத்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும்.

வல்லாரை னினிலை மருவுகற்ப மாய்க்கொள்

வெல்லாப் பணிகளு மிலாமையா மெய்யினில்

அகத்தியர் குணபாடம்

வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடித்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ மாணவிகளுக்கு உண்டாகும் அறிவுச் சோர்வை நீக்கி ஞாபக மறதியை குணமாக்கும். குறிப்பாக வல்லாரை சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும் . உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

வல்லாரையிலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

குழந்தைகளுக்கு தினமும் 10 வல்லாரை யிலையை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்படும். தொண்டைக் கம்மல் குறையும்.

வல்லாரையின் பயன்கள்

· ஞாபக சக்தியை தூண்டும் இதனை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.

· இரத்த சோகையை போக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

· வல்லாரை பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகளைப் போக்கும். பல்லீறுகளை பலப்படுத்தும்.

· ஈளை, இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டை போக்கும். காச நோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

· கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத் திறனை அதிகரிக்கும்.

· நீரிழிவு நோயாளிகள் வல்லாரை கீரை உண்பது நல்லது. மலச்சிக்கலைப் போக்கி வயிற்றுப்புண், குடற்புண்ணை ஆற்றுகிறது.

· யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரையிலையை அரைத்து கட்டினால் நோயின் தாக்கம் குறையும். இதுபோல் விரைவீக்கம், வாயுவீக்கம், கட்டிகளின் மேலும் பூசிவந்தால் குணம் கிட்டும்.

வல்லாரை இலையை முறைப்படி எண்ணெய் செய்து தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.

சர்க்கரை நோயால் வரும் இதய நோய்கள்


இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 40 சதவீதம் பேர், சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர்.
ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒருவர், 18 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோயாளியாக உள்ளார். திடீரென்று மாரடைப்பு ஏற் பட்டு, மருத்துவமனையில் இரண்டு வாரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இவருக்கு, இதயத்தின் செயல்திறன் 40 சதவீதமாகக் குறைந்து விட்டது. மூச்சு இரைப்பு, படபடப்பு, நீர் சேர்ந்து விட்ட நிலை, வயிறு வீக்கம் ஏற்பட்டது. ஒரு மாதம் கழித்து, திரும்பவும் வேறு மருத்துவமனைக்கு சென்று, அதே வைத்தியம் செய்யப்பட்டது. ஓரளவு சரியானது; வீடு திரும்பினார்.
சில நாட்களில், அதே போல மூச்சு திணறல், படபடப்பு, வயிறு, ரத்தசோகை. ஹீமோகுளோபின் அளவு 9 சதவீதமாகக் குறைந்திருந்தது. இதய பம்ப் வேலை, 32 சதவீதம். திரும்பவும் மருத்துவமனையில் சேர்த்து சரி செய்ய வேண்டும்.
ஐ.சி.யு.,வில் அனுமதி, திரும்பவும் தீவிர சிகிச்சை முறை; இதனால் ஏகப்பட்ட பணம் செலவு. இந்த நிலை தொடர்ந்து கொண்டு இருக்கும். இதுபோல நோயாளிகள் வரும்போது மனம் வேதனையடைகிறது. காரணம், இது முழுமையாக குணமாக்க முடியாது. இதய தசைகள் செயலிழந்து, ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் 35 சதவீதத்திற்கு குறைவாகி விடுவது தான் காரணம்.
சர்க்கரை நோயால் வரும் இதய நோய்கள்
முதல் வகை: சர்க்கரையின் அளவு தாறுமாறாக ஏறி விடுவது. இந்த தாறுமாறான சர்க்கரை அளவு, எல்.டி.எல்., (டிரைகிளரிரைடு) என்ற கெட்டக் கொழுப்பாக மாற்றப்பட்டு, இரண்டு, மூன்று மி.மீட்டர் உள்ள குழாய்களில் ஒட்டி அடைப்பை ஏற்படுத்துகிறது. ஒரு ரத்தக் குழாயோ, பல ரத்தக் குழாய்களோ, இப்படி பாதிக்கப்படலாம்.
இரண்டாம் வகை: கண்ணுக்கு தெரியாமல் ஒரு மி.மீ.,க்கு குறைவாக மைக்ரான் அளவுள்ள (இந்த அளவு ரத்தக் குழாய்களை, மைக்ராஸ் கோப் மூலம் தான் பார்க்க முடியும்) குழாய்களில் அடைப்பு ஏற்படுவது. இந்த வியாதியை மைக்ரோ ஆஞ்சியோபதி என்பர். இதன் விளைவுகள் ஏராளம்.
மைக்ரோ ஆஞ்சியோபதியால் இதயத் தசைகளுக்கு ரத்தம் கிடைக்காமல் இதயத் தசைகள் வலுவிழந்து, இதய வீக்கம் ஏற்படுத்தும். இதயத் தசை செயல் 40 சதவீதத்திற்கு குறைந்தால், நமது அன்றாட செயல் பாடுகள் நடத்தல், குளித்தல், சாப்பிடுவது போன்ற வேலைகள் கடினமாகிவிடும். இந்த இதயத் தசை அழிவதை தான், ‘டயபிடிக் கார்டியோ மையோபதி’ என்று அழைக்கிறோம். இந்த நிலை, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரே ஆண்டில் வந்து விடுவதில்லை. பல ஆண்டுகளாக உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி, இறுதி நிலைக்கு கொண்டு வருகிறது.
முதல் வகையால் ஏற்படும் அடைப்புகளை, ‘ஆஞ்சியோகிராம்’ செய்து கண்டு பிடித்து, ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ அல்லது ‘பை-பாஸ்’ செய்து சரி செய்யலாம்.
இரண்டாம் வகையான, ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ ஏற்படுவதால், முதலில் இதயத் தசை பாதிக்கப்படுகிறது. பிறகு கண், மூளை, சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் யார் யாருக்கு, இதய நோய் வரும்?
இதை எளிதில் கண்டறியலாம். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதம் ஒரு முறையாவது வெறும் வயிற்றிலும், சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்தும், ரத்தத்தில் சர்க்கரை அளவு பார்க்க வேண்டும்.
இந்த இரண்டு பரிசோதனை அளவுகளின் வித்தியாசம். 40க்கு மேல் இருந் தால், இதய நோய் வரலாம். உதாரணம், வெறும் வயிற்றில், பாஸ்டிங் சுகர் (Fasting suger) 90 சதவீதமும், போஸ் பிரான்டியல் (Post Prandial suger) அதாவது சாப்பிட்ட பின் சுகர் 160 சதவீதம் இருந்தால் வித்தியாசம் 40க்கு மேலாகிறது. இது இதய நோயை வரவழைக்கும். இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இந்த வித்தியாசம், ஏன் அதிகமாகிறது?
நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைடிரேடு என்ற மாவு சத்து அதிகமாக இருந்தால், சாப்பிட்டவுடனே ரத்தத்தின் சர்க்கரை அளவு, ‘சுர்’ என ஏறி விடுகிறது. உதாரணம், இட்லி மாவில், அரிசி மூன்று பங்கும், உளுந்து ஒரு பங்கும் இருக்கும்.
இந்த இட்லியைச் சாப்பிடும்போது, உடலில் சர்க்கரை அளவு, மிதமாக ஏறும். ஓட்டல்களில் இதுபோல இருப்பதில்லை. ஐந்து பங்கு அரிசி, ஆறு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து போடுகின்றனர். தொட்டுக் கொள்வதற்கென போடப்படும் மசாலாக்களின் அளவும் வேறுபட்டு, வயிற்று கோளாறும் ஏற்படும்.
அரிசி, மைதா, கோதுமை ஆகியவற்றில், கார்போ ஹைடிரேடு அளவு மாறுபடுகிறது. மேலும், கிரைண்டரில் அரைத்த அரிசி மாவு, மிகவும் ‘நைசாக’ இருந்து, அதில் பலகாரம் செய்து சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்கும்.
மைதாவில் செய்த பரோட்டா சாப்பிட்ட உடனேயே, சர்க்கரை அளவு அதிகரித்து விடும். நன்கு குழைந்த அரிசி, பொங்கல் இவைகள் சாப்பிட்டவுடன், உடலில் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும். சாப்பிட்டவுடன், கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவு கூட, சுகர் நிலையை தீர்மானிக்கும்.நாம் உட்கொள்ளும், சர்க்கரையை குறைக்கும் மருந்து பொதுவாக வேலை செய்தால், சுகர் அளவும் குறைந்து காணப்படும். மருந்தின் வேலையைப் பொறுத்து தான் சுகர் நிலை மாறுபடும். ஒருவருக்கு சுகரை குறைக்கும் மருந்து, மற்றவருக்கு சுகரின் அளவை குறைக்காது; ஏற்றும்.

பேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம்., இதய ஊடுருவல் வல்லுனர்

தகுதியானவர்களுக்கு உதவுவோம்! (ஆன்மிகம்) -மே-8 – திருநாவுக்கரசர் குருபூஜை

அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர் சுவாமியின் குருபூஜை, சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் எல்லா சிவாலயங்களிலும் நடத்தப்படும்.
கடலூர் அருகிலுள்ள திருவாமூர் எனும் தலத்தில், புகழனார் – மாதினியார் தம்பதியர் வசித்தனர். இவர்களது மூத்த மகள் திலகவதியார்; அடுத்து அவதரித்தவர் திருநாவுக்கரசர். இவருக்கு மருள்நீக்கியார் எனப் பெயரிட்டனர்.
முற்பிறப்பில் இவர் வாகீசர் எனும் முனிவராக இருந்தார். கைலாயத்தில் தவம் செய்து கொண்டிருந்த போது, ராவணன் அவ்வழியே புஷ்பக விமானத்தில் வந்தான். நந்திதேவர் அவனிடம், ‘ராவணா… நீ கைலாயத்தின் வலதுபுறமாக ஒதுங்கிச் செல்…’ என்றார்.
ராவணன் அதைக் கேட்கவில்லை. ‘சகல வல்லமையும் படைத்த எனக்கு, குரங்கு போல முகம் கொண்ட நீ புத்தி சொல்வதா?’ என்று ஆணவத்துடன் பேசினான்.
உடனே நந்திதேவர், ‘என் காளை முகத்தை, குரங்கு முகம் என கேவலப்படுத்தி பேசிய நீயும், உன் நாடும் அந்த குரங்குகளாலேயே அழிந்து போவீர்கள்…’ என சாபமிட்டார்.
கோபமடைந்த ராவணன், ‘என் பயணம் தடைபடுவதற்கு காரணமாக இருந்த இந்த கைலாய மலையை தூக்கி வீசிவிடுகிறேன் பார்…’ என்று ஆக்ரோஷமாக, தன் இருபது கைகளாலும் தூக்கினான். கயிலையில் இருந்த சிவபெருமான், தன் கால் விரலால் சற்று மலையை அழுத்த, ராவணனின் கைகள் அனைத்தும் மலையில் அடியில் மாட்டிக் கொண்டன. அவன், வலி தாங்காமல் அலறினான். அவனது கதறல், அங்கே தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரின் தியானத்தைக் கலைத்தது. அவர், ராவணன் மேல் இரக்கப்பட்டு, ‘ராவணா… சிவபெருமானை வாழ்த்தி இசைபாடு. உன் பாட்டுக்கு கட்டுப்பட்டு, அவர் உன்னை விடுவித்து அருள்வார்…’ என யோசனை சொன்னார்.
ராவணனும் அவர் சொல்லை மதித்து, தன் நரம்புகளை நாணாக்கி மீட்டி அருமையான கானங்களைப் பாடினான். சிவபெருமான் அவன் பாட்டை ரசித்து மகிழ்ந்தார். அவனை விடுவித்ததுடன், ‘என்னைப் பாட்டால் பரவசப்படுத்திய உனக்கு சந்திரஹாசம் எனும் வாளைத் தருகிறேன்; மேலும், நீ ஐம்பது லட்சம் ஆண்டுகள் வாழ்வாய்!’ என்று அருள்புரிந்தார். தன் கட்டளையை மதிக்காத ராவணன், சிவபெருமான் மூலம் விடுபடுவதற்கு காரணமான வாகீசர் மீது நந்திதேவரின் கோபம் திரும்பியது.
‘வாகீசரே… தகுதியானவர்களுக்கே உதவி செய்ய வேண்டும். நீர், ஒரு அசுரன், இந்தப் பூமியில் பல காலம் வாழ்ந்து தேவர்களைத் துன்புறுத்த காரணமாகி விட்டீர். எனவே, நீர் பூலோகத்தில் மானிட ஜென்மம் எடுக்க வேண்டும்!’ என சாபமிட்டார். அதன்படியே, வாகீசர் பூமியில் பிறக்க வேண்டியதாயிற்று.
அவர் சில காலம் சமண மதத்தில் இருந்தார்; பின்னர், தன் சகோதரியின் அறிவுரைப்படி சைவத்துக்கே திரும்பினார். சமணர்கள் அவருக்கு கடும் தொல்லை கொடுத்தனர். அவற்றைக் கண்டுகொள்ளாமல், ‘நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்… மாசில் வீணையும் மாலை மதியமும்…’ போன்ற அருமையான பாடல்களைப் பாடினார். இதனால், ‘நாவுக்கு அரசர்!’ எனும் திருநாமம் பெற்றார். நாவுக்கரசரின் குருபூஜை நன்னாளில், தகுதியானவர்களுக்கு மட்டுமே உதவ வேண்டும் என்ற பாடத்தை தெரிந்து கொண்டோம்.