Daily Archives: மே 6th, 2010

உணர்வுகளை கடத்தும் `பட்டு’! மூளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்

நமது உடலில் உணர்வு கட்டுப் பாட்டு பகுதியாக இருப்பது மூளை. தண்டுவடப் பாதிப்பு, காக்காய்வலிப்பு நோய் மற்றும் சில பாதிப்பு இருப்பவர்களுக்கு உணர்வுகளை கடத்துவதில் மூளை சரியாக செயல் படாது. இதுபோன்ற பிரச்சினை உடையவர்களுக்கு பட்டு இழை உதவுகிறது.

பட்டு இழைகள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டவை. இந்த பட்டு இழையை சிறிய மின்கடத்தியாக மூளையுடன் இணைத்து செயல்படுத்தியதில் அது தகவல்களை சிறப்பாக கடத்தியது.

அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் பல் கலைக்கழகம், டட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வின்போது பூனையை மயக்க நிலையில் வைத்து, பட்டு இழை மற்றும் பொருட்களை சேர்த்து செய்திருந்த மின்கடத்தியை அதன் மூளையின் மேற்பரப்பில் இளகச் செய்து பொருத்தியிருந்தனர். பூனையின் கண்கள் விழித்த நிலையில் இருந்தது. அது காட்சிகளை பதிவு செய்வது பட்டு இழை கடத்தியின் வழியாக கடத்தப்பட்டது. மூளை தகவல் கடத்துவதில் குறைபாடு உடையவர்களுக்கு இது பட்டு இழை கருவியை பயன்படுத்த முடியும் என்று தெரியவந்தது. இது தலைமுடியைவிட 5 மடங்கு தடிமனுடையது. உருகிய நிலையில் முளையுடன் இணைந்துவிடும். நெகிழும் தன்மையுடன் உறுதியும் கொண்டது. எனவே எளிதில் பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இமேஜ்களை மாற்றி அழகுபடுத்த

நீங்கள் டவுண்லோட் செய்த அல்லது உருவாக்கிய படங்களைச் சிறப்பாக வேறு நீங்கள் விருப்பப்படும் வடிவத்தில் அல்லது கவர்ந்திழுக்கும் வகையில் மாற்ற வேண்டுமா? அல்லது கூடுதலாக மெருகூட்ட வேண்டுமா? படங்களைப் புதிய கோணத்தில் அமைத்து உங்கள் இணைய தளங்களில் பதிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? இதற்கென இணையதளம் ஒன்றில் ஒரு டூல் தரப்பட்டுள்ளது. இதன் பெயர் ஐட்ச்ஞ்ஞு Image Embellisher . இதனை எப்படிச் செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.
1. முதலில் நீங்கள் மாற்றம் செய்திட விரும்பும் இமேஜை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
2. பின் Image Embellisher இருக்கும் தளம் செல்லவும். இதற்கு http://www.chami.com/htmlkit/services/imge/ என்ற முகவரியினை அமைத்து என்டர் தட்டவும்.
3. இந்த தளத்தில் பலவகையான வடிவங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.
4. பின் பிரவுஸ் பட்டன் அழுத்தி, நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் இமேஜைத் தேர்ந்தெடுத்து Open கிளிக் செய்திடவும்.
5. சிறிது நேரம் கழித்து நீங்கள் அனுப்பிய படம், தேர்ந்தெடுத்த வடிவில், சிறிய அளவில் கிடைக்கும். இது உங்களுக்குப் பிடித்திருந்தால், டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இதே போல வேறு சில வசதிகளையும் இந்த டூல் மூலம் மேற்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த படம் ஒன்றை, இணையத்தில் பதிக்க விரும்பு கிறீர்கள். ஆனால் மற்றவர்கள் அதனை டவுண்லோட் செய்திடக்கூடாது என விரும்புகிறீர்கள். Image Embellisher அந்த இமேஜ் எப்படித் தோற்றம் அளிக்கும் என ஒரு இமேஜைக் காட்டும். அதனை இணையத்தில் பதிக்கலாம். இணையம் மூலம் படங்களை விற்பனை செய்பவர்களுக்கு இது மிகவும் பயன்படும். இந்த டூலை ஆன் லைனில் வைத்துப் பயன்படுத்துவதால், எந்த புரோகிராமி னையும் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை.

உடல்நலம் – சிலதுணுக்குகள்

பப்பாளியும்… பளபளப்பும்…

கோடை காலம் தொடங்கி விட்டதால் இனி சருமத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும். குறிப்பாக தோலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு சோரியாசிஸ், செதில் உதிர்தல் போன்ற சிக்கல்களும் அதிகமாகும். இவர்களுக்கு பப்பாளிப் பழம் மிகவும் நல்லது.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும்.

ரத்ததானம் செய்யும் போது…

18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே ரத்ததானம் செய்ய வேண்டும். நம்முடைய உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின் போது 300 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்ததானம் செய்பவர்களின் உடல் எடை குறைந்த பட்சம் 45 கிலோ இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தமும் இயல்பாக இருக்க வேண்டும். ஒருவர் முன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய இருபது நிமிடங்கள் போதும். ரத்ததானம் செய்த பின்னரும், நாம் வழக்கமான பணிகளை செய்யலாம்.

உடல் எலும்பு பலம் பெற…

உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச் சத்து அவசியம். அதோடு வைட்டமின் `டி’யும் தேவை.

இந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் நிறைய உள்ளன. அதேபோல் தினமும் முளைவிட்ட கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு பலம் பெறும். மேலும் சூரியக் குளியல் செய்வதாலும் எலும்புக்கு நல்லது.

வைட்டமின் `டி’யை மாத்திரையாகவும் எடுத்துக் கொள்ளலாம். முட்டைக் கோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு பழம், பாதாம்பருப்பு ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு பலம் பெறும்.

குழந்தை வரம் அருளும் குமரன்

குன்றுகள் எங்கெங்கு உள்ளதோ அங்கு எல்லாம் குமரன் இருப்பான் என கூறுவார்கள். அந்த வகையில் அமைந்ததுதான் குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில். கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முலவாய்க்கால் பகுதியில் இந்த மலைக்குன்று அமைந்துள்ளது.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மலையின் உச்சியில் சுமார் 120 அடி உயரத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக இந்த குன்றின் மீது அழைத்து வருவார்கள். அப்போது பசுக்கள் அங்குள்ள சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிசயத்தைத் தொடர்ந்து அந்த ஊர்மக்கள் அந்த சிவலிங்கத்திற்கு தினமும் பூஜைகள் செய்து வந்தனர்.

இந்தநிலையில், 1940-ம் ஆண்டு கோபி சுற்று வட்டார பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவமழை பெய்யாததால் மக்கள் துன்பத்திற்கு உள்ளாகினர். அப்போது மழை பெய்ய வேண்டி லவாய்க்கால் ஊர் பொதுமக்கள் மலை மேல் இருந்த சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்து வந்தனர். அதன் பயனாக சில நாட்களில் மழை பெய்து வறட்சி நீங்கியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, வறட்சி நிலவும் போதெல்லாம் இந்தப்பகுதி மக்கள் அடிக்கடி இந்த சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்து வந்தனர். சிவலிங்கத்தின் மீதும் அளவு கடந்த பக்தி கொண்டனர்.

அதனால் மலைமேல் கோவில் அமைக்க முடிவு செய்து 1950-ம் ஆண்டு குமார சுப்பிரமணியசாமி கோவிலை அமைத்து கும்பாபிஷேகமும் செய்தனர். தற்போது அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியர் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால், உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான தம்பதியர் இங்கு வந்து செல்கின்றனர்.