Advertisements

Daily Archives: மே 8th, 2010

குரோம் பிரவுசரில் எச்.டி.டி.பி. இனி வேண்டாம்

நாம் இன்டர்நெட்டில் உள்ள தள முகவரிகளை அட்ரஸ் பாரில் டைப் செய்திடுகையில், http://என டைப் செய்து, பின் தள முகவரிகளை அமைக்கிறோம். சில பிரவுசர்களில் நாம் தள முகவரிகளை மட்டும் அமைத்தால், இந்த http:// அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, தளம் தேடப்பட்டு, நமக்குக் கிடைக்கிறது. வேர்ல்ட் வைட் வெப் வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்த http:// இணைய தளங்களைத் தேடித் தரத் தேவையில்லை.
குரோம் பிரவுசரை வடிவமைத்தவர்கள், அந்த பிரவுசரில் இந்த முன்தொட்டு (http:// ) இல்லாமல் தங்கள் அட்ரஸ் பாரைத் தற்போது அமைத்துள்ளனர். இதனைப் பயன்படுத்துபவர்கள், http:// கொடுத்து இணைய தள முகவரியினை அமைத்தாலும், அது எடுக்கப்பட்டுவிடும். ஆனால் https மற்றும் ftp ஆகியவை, எடுக்கப்படவில்லை. இவை அட்ரஸ் பாரில் காட்டப்படுகின்றன. ஏனென்றால் https போன்றவை பாதுகாப்பான இணைய தளத்தைச் சுட்டிக்காட்டி தேடித்தருபவையாக இருப்பதால், இவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. http:// க்குப் பதிலாக ஐகான் ஒன்று காட்டப்படுகிறது.
இதில் சில சிக்கல்கள் உள்ளன. குரோம் பிரவுசர் தானாக http://ஐ இணைக்கிறது; ஆனால் http:// நம் கண்களுக்குக் காட்டப்படாமல், ஐகான் ஒன்று காட்டப்படுகிறது. இந்த நிலையில் ஏதேனும் ஒரு இணைய தள முகவரியினை காப்பி செய்திடுகையில் நாம் http://விடுத்து காப்பி செய்திட முடியாது. அதனுடன் காப்பி செய்து பேஸ்ட் செய்தால், இரண்டு முறை டttணீ:// அமைந்திடும். இந்த http:// இல்லாத வகையில் அட்ரஸ் அமைக்கும் மாற்றம், அண்மைக் காலத்தில் வந்துள்ள குரோம் பிரவுசர்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை வடிவமைத் தவர்கள், இந்த மாற்றத்தை இனி மாற்றப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதாவது இனி வரும் குரோம் பிரவுசர் பதிப்புகளில் http://இல்லாமலேயே தான் அட்ரஸ் பாரில் முகவரிகள் அமைக்கப்பட வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு முன்புதான், வேர்ல்ட் வைட் வெப்பினை வடிவமைத்த டிம் பெர்னர்ஸ் லீ ½ (Sir Tim BernersLee) http:// குறியீட்டில் சாய்வு கோடு குறியீடு தேவையற்றது என்று கூறி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Advertisements

மகளின் கேள்வி; தாயின் தேடல்!

நம்வீட்டு சுட்டிக் குழந்தைகள் கேட்கும் கேள்விகள் நம்மை சிந்திக்கவும், திகைக்கவும் வைக்கும். அந்த அளவுக்கு அவர்களின் புத்திக்கூர்மை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதைத்தான் நம்முன்னோர்கள் `தம்மினும் தம்மக்கள் சான்றோர்’ என்பார்கள்.

இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, தன் மகள் கேட்ட கேள்வியால் திக்குமுக்காடிய பெண்விஞ்ஞானி, மகளின் கேள்விக்கு விடைதேடி புதுமையை விளக்கி இருக்கிறார்.

ஜப்பானிய பெண் விண்வெளி விஞ்ஞானி யாமாசாகி. சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற 4 பெண் விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். இவரது 7 வயது மகள் யுகி, கேட்ட கேள்விக்கான ஆய்வை விண்வெளி மையத்தில் மேற்கொண்டார். அதில் அவர் ஒரு புதிய விஷயத்தை கண்டறிந்தார்.

சிறுமி யூகி கேட்ட கேள்வி இதுதான். “அம்மா, நிறமற்ற சோப்பில் இருந்து எப்படி வண்ணவண்ண குமிழ்கள் வருகின்றன?”. இதற்காக விண்வெளியில் ஒரு பழ ஜூசுடன் சோப்பை சேர்த்து யாமாசாகி ஆய்வு செய்தார். அப்போது மெல்ல சிகப்பு நிற சோப்பு குமிழ்கள் உருவானது. விண்வெளியில் ஈர்ப்பு விசையற்ற நிலையில் சோதனை செய்யப்பட்டதால் நிறம் எப்படி சோப்புக் குமிழ் முழுவதும் பரவுகிறது என்று நன்கு அறிய முடிந்தது. இதனால் சோப்புக் குமிழுக்கு நிறம் புறச்சேர்க்கை முலம் கிடைக்கிறது என்று தெளிவானது.

இந்த ஆய்வை, சிறுமி யூகி, தனது தந்தை டாய்ச்சியுடன் பூமியில் இருந்து வீடியோபோன் லம் பார்த்து ரசித்தாள். டாய்ச்சியும் விண்வெளி வீரர்தான். அவர்தான் விண்வெளியில் சோதனை செய்ய ஆலோசனை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.