Daily Archives: மே 9th, 2010

சர்க்கரை நோயாளிகள்-’40 சதவீத’ வித்தியாசம் அதிகமானால்…

பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகள், அறியாமையால், ‘எனக்கு சர்க்கரை அளவு கட்டுப் பாட்டில் இருக்கிறது. ஒரு தடவை 180 சதவீதம் ஆகியது. உணவு, உடற் பயிற்சியால் சர்க்கரை 140 ஆகக் குறைத்து விட்டேன்’ என்பர். இவரது பரிசோதனை அறிக்கையைப் பார்த் தால், மூன்று மாதத்திற்கு முன் எடுத்த பரிசோதனையாக இருக்கும்.
அதுவும், ‘ரேண்டமாக,’ சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து, பரிசோதனை செய்து இருப்பார். ஏஞஅ1ஞி பரிசோதனை, சர்க்கரையின் மூன்று மாத கட்டுப் பாட்டைக் காட்டும் பரிசோதனை; இதை செய்து இருக்க மாட்டார்கள்.
‘உங்கள் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது’ என்று கூறினால், ‘வீட்டில் விசேஷம்; நிறைய இனிப்பு பலகாரங் கள் சாப்பிட்டேன். அதனால், தான் சுகர் அதிகமாக உள்ளது’ என்பர்.
ஒருமுறை சர்க்கரை அளவு 120 முதல் 140 வந்து விட்டால், தனக்கு சர்க்கரை வியாதி குணமாகிவிட்டது என்று நினைத்து கொண்டு, மருந்துகளை சாப்பிட மாட் டார்கள். ஒரு நாளைக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 18 முறை ஏறி இறங்குவது, இவர்களுக்கு தெரியாது. தனால் தான் வெறும் வயிற்றில் சுகர் பரிசோதனை, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, சுகர் பரிசோதனை செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை, இந்த பரிசோதனை செய்யவேண்டும். கட்டாயம் மூன்று மாதம் ஒருமுறை, ஏஞஅ1ஞி பரிசோதனை செய்யவேண்டும்.
சாப்பிடும் முன் வெறும் வயிற்று சர்க்கரை, 90 சதவீதம்; சாப்பிட்ட பிறகு 130 சதவீதத்திற்குள், அதாவது, 40 சதவீத வித்தியாசத்தில், கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல் இருந்தால் நிச்சயம் இதய நோய் வரலாம்.
சில சமயங்களில் பொருத்த மில்லாத மருந்துகளால் கூட, இந்த சர்க்கரையின் அளவு வித்தியாசம் 40க்கு மேல் போக வாய்ப்புள்ளது.
இந்த வித்தியாசம் அதிகமாவதால், ரத்தக் குழாய் பாதிப்பு ஏற்பட்டு, மூளைக்கு செல்லும் சிறிய மற்றும் பெரிய ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, பக்கவாதம், உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வலி ஆகியவை ஏற்படும்.
படுக்கையிலிருந்து எழுவது, குளிப்பது, உடை மாற்றுவது, உண்பது, நடப்பது, வேலைக்கு செல்வது இதுபோன்ற வேலைகள் பாதிக் கப்பட்டு, பயனற்று படுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மருத்துவம் பார்க்க முடியாத நிலை. வீடு, நிலம், நகை விற்று குடும்பம் அல்லல்படுவதைப் பார்க்க சகிக்க முடியவில்லை. அதுவும், இரண்டாம் வகை இதய பாதிப்பான, ‘கார்டியோ மையோபதி’க்கு செலவு கொஞ்சம் நஞ்சமல்ல. இதனால், குடும்ப உறுப் பினர்கள் பொருளாதார சிதைவு, மனச்சிதைவுக்கு உட்படுகின்றனர். இதை நினைக்க பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கிறது.
இந்த நிலையைப் பயன்படுத்தி, பொருள் ஈட்ட, ஒரு மருத்துவ கும்பல் உள்ளது. மனித நேயத்தை மறந்து, ‘பணம் கொடு, ‘ட்ரீட்’ செய்கிறேன்’ என்ற நிலைக்கு, மருத்துவ சேவை வந்துவிட்டது.
சர்க்கரை நோயால் சிறுநீரகமும் பாதிக்கப்படும் என்று சொல்வது ஏன்?
இதுவும், ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ பாதிப்பு தான். சிறுநீரகத்தில் உள்ள நுண் ரத்தக்குழாய் அடைபட்டு, ‘நெப்ரான்’ என்ற சிறுநீரகத்தின் உயிர்நாடியை பாதித்து விடுகிறது. இதை ஆங்கிலத்தில், ‘டயபடிக் நெப்ரோபதி’ என் றழைப்பர். எந்த நேரத்தில், யாருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்பதை முன் கூட்டியே சொல்ல முடியாது. இந்த, ‘நெப்ரோபதி’யால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, யூரியா, கிரியாட்டின், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு உயர்ந்து, மூச்சு முட்டல், படபடப்பு ஏற்பட்டு, ‘டயலிசிஸ்’ செய்ய வேண்டிய நிலைக்கு நோயாளி தள்ளப்படுவார்.
இறுதியில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும். சிறுநீரகத்தை உடல் ஏற்றுக் கொள்வதற் காக, ஊசி போட வேண்டும். ஏகப்பட்ட செலவாகும். நோயாளிக்கு நஷ்டம்; மருத்துவமனை, மருந்து கம்பெனிகளுக்கு லாபம்.
கண்கள்?
கண் ரெட்டினாவிலுள்ள ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, கண்ணொளி குறையும். பார்வை இழக்க நேரிடும்.
40 வித்தியாசத்தை அதிகமாகாமல் தடுப்பது எப்படி?
1. உணவிலுள்ள மாவுச்சத்தைக் குறைக்க வேண்டும். அரிசி, கோதுமை இவைகளில் மாவுச் சத்து அதிகம் இருக்கிறது. இதனால், தொந்தி விழுகிறது. 100 கிராம் அரிசி, 100 கிராம் புரதம், 100 கிராம் கீரை, 100 கிராம் காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த காய், பழங்கள் உட்கொண்டால் சுகர் உயராது.
2. தினமும் உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்யுங்கள்.
3. இன்சுலின் சிகிச்சை முறையில் மூன்று வகைகள் உள்ளன. உங்களுக்கு எந்த வகை என்பதை டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதைச் சரிவர பின்பற்றுங்கள்.
சைவு உணவு: கலோரி, கொழுப்பு குறைவு. கொலஸ்டிரால் குறைவு அல்லது இல்லை. புரதச்சத்து குறைவு. இரும்பு, தாதுச்சத்து அதிகம். எண்ணெய், தேங்காய் குறைவாக சேர்த்துச் செய்யப்படுகிறது.
அசைவ உணவு: கலோரி, கொழுப்பு அதிகம். கெட்ட கொலஸ்டிரால் அதிகம். முதல் தர புரதம் அதிகம்; இரும்பு, தாதுச்சத்து குறைவு; எண் ணெய் தேங்காய், மசாலா அதிகம் சேர்க்கப்படுகிறது.
உடல் எடை அதிகமானால், சர்க்கரை நோயை வரவழைக்கும். இதற்கு மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி, கோதுமை, இறைச்சி தான் காரணம்.
மூன்று வேளை அரிசி சாப்பிடுவது ஆபத்து. இதனால் தொப்பை, இடுப்பு அளவு அதிகமாகிறது. மேலும் கொலஸ்டிரால் அதிகமுள்ள பாலாடை வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி, மாட்டுக் கறி சாப்பிடக்கூடாது.
அசைவப் பிரியர்களே! நீங்கள் சாப்பிடும் உணவில் எவ்வளவு கலோரி என்று பாருங்கள்.
(தோராயமான அளவு)
100கிராம் மீன் – 210 கலோரி+
100கிராம் கோழி – 200 கலோரி
100கி ஆட்டுக்கறி – 410-420 கலோரி
100கி மாட்டுக்கறி – 430-450 கலோரி
100கி பன்றிக்கறி – 600 கலோரி. அதற்கு மேல் உறுப்புகளில் அதிகமான கலோரி
100கி மூளை – 650 கலோரி
100கி சிறுநீரகம் – 600 கலோரி
100கி கல்லீரல் – 650 கலோரி
100கி இதயம் – 400 கலோரி
100கி மண்ணீரல் – 400 கலோரி
இவைகளை சமைக்க வறுக்க உபயோகிக்கும் எண்ணெயை சேர்ந்தால் எவ்வளவு கலோரி கிடைக்கும், ஏன் எடை கூடாது, உடல் உப்பாது?
நாம் சாப்பிடுவதற்காக உயிர் வாழ வேண்டாம்; உயிர் வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும்.
மருத்துவ கம்பெனி நடத்தும் விருந்துகளில், டாக்டர்கள், ‘பபே’யில் முண்டியடித்துக் கொண்டு சாப்பிடுவது, கண்கொள்ளாக் காட்சி!
சீரான உடற்பயிற்சி, தேவையான உணவு, மருந்துகள், டாக்டர்களின் ஆலோசனை, சர்க்கரை நோய்களின் விளைவுகளை தவிர்க்கும்.

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

* ஒரு கிலோ உடம்பு எடைக்கு ஒரு நாளுக்கு 2 கிராம் புரதத்திற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல. அதிகளவு புரதம் பி6 வைட்டமின் பற்றாக்குறையை உண்டாக்கும்.
* மாவு உணவுப் பொருட்களை பொறுத்தவரை ஆரோக்கியமான ஆண்களுக்கு சமைத்த 315 கிராம், பெண்களுக்கு 250 கிராம், நீரழிவு வியாதி உள்ளோருக்கு 185 கிராம் அளவு தினமும் எடுப்பது நல்லது.
* ஆரோக்கிய மனிதர்களுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவை.
* மிகக்குறைந்த அளவில் கொழுப்பை உண்பதும் அல்லது முழுமையாக அதை தவிர்ப்பதும் இருதய நோய்க்கு நாம் வரவேற்பு கொடுப்பது போல ஆகிவிடும். மொத்த உணவில் 20 முதல் 30 சதவீதம் கலோரிகள் வரை கொழுப்பின் அளவு இருக்கலாம்.
* கொழுப்பை முழுவதுமாக தவிர்த்தால் மலச்சிக்கல் உண்டாகும்.

முகமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ துறையின் ‘புதிய முகம்’

ஸ்பெயினில், உலகிலேயே முழுமையான முதல் முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக ஒரு நபருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெவ்வேறு நபர்களின் முக திசுக்கள், தோல், மூக்கு, உதடு, கன்னம் ஆகியவற்றை தானம் பெற்று, இந்த நபருக்கு பொருத்தி சாதனை படைத்துள் ளனர், ஸ்பெயின் டாக்டர்கள். பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி நாம் அதிகமாகவே கேள்விப்பட்டுள் ளோம். குறிப்பாக, திரையுலகில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வோர் அதிகம். முகத்தில் உள்ள மூக்கு உள்ளிட்ட ஏதாவது உறுப்பின் அமைப்பு, தங்களுக்கு பிடிக்கவில்லை எனில், நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, அவற்றின் அமைப்பை சரிசெய்து கொள்வது வழக்கம். விபத்தில் அல்லது பேராபத் தில் சிக்கி, முகம் சிதைந்து போனால், முகமே விகாரமாகி விடும். விகாரத்தை மறைத்து, மீண்டும் முழுத் தோலுடன் முகத்தை மீட்பதற்கென, ‘முக மாற்று அறுவை சிகிச்சை’ செய்யப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் தான், இந்த முகமாற்று அறுவை சிகிச்சைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

கடந்த 2005ல் பிரான்சைச் சேர்ந்த இசபெல்லா (38) என்ற பெண், அவருடைய செல்ல நாய்க் குட்டியை அளவுக்கு அதிகமாக கொஞ்சியதாலோ என்னவோ, அந்த நாய் அவருடைய முகத்தை கடித்துக் குதறி ஒரு வழியாக்கி விட்டது. முகத்தின் ஒரு பக்கம், விகாரமாகி விட்டது. சிதைந்து போன பகுதியைச் சீராக்க, அவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பின், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த அறுவை சிகிச்சைகள் நடந்தன.

தற்போது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, முழு முகத்தையும் மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் பெயர், மிகவும் ரகசிய மாக வைக்கப்பட்டுள்ளது. இவர், சில ஆண்டுகளுக்கு முன், ஒரு விபத்தில் சிக்கிவிட்டார். அவரது முகத்தில் பலமாக அடிபட்டது. முகத்தின் அமைப்பு, முழுவதுமாக மாறி விட்டது. வாய் கோணலாகி, வித்தியாசமாக காட்சி அளித்தது. பற்களையும் காணவில்லை. மூக்கு இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. அந்த இடத்தில் ஒரு சிறிய துளை மட்டுமே இருந்தது. அதன் பின், அவரால் மூச்சு விட முடியவில்லை; உணவு உண்ண முடியவில்லை; பேச முடியவில்லை. இதையடுத்து, டாக்டர் களை அணுகிய இந்த நபர், சிறிய அளவிலான முகமாற்று அறுவை சிகிச்சைகளை மேற் கொண்டார். பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அங் குள்ள, வால் டி ஹெப்ரோன் என்ற மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சமீபத்தில் முகமாற்று அறுவை சிகிச்சை நடந்தது. 30 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர், தொடர்ந்து 22 மணி நேரம் போராடி, அவரது முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண் டனர். அடையாளம் காட்டப்படாத ஒரு நபரிடமிருந்து தானம் பெற்ற முகத் திசுக்கள், மூக்கு, தாடை, பற்கள், கன்னத்தில் உள்ள எலும்புகள், தோல் ஆகியவை இவருக்கு பொருத்தப் பட்டன. பற்கள், கன்ன எலும்புகள் ஆகியவற்றை தாங்கி நிற்பதற்காக சிறிய உலோகத் தகடுகளும் அவரது முகத்தில் பொருத்தப்பட்டன. அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டபோது, உறுப்புகளை தானம் கொடுத்தவரின் முகம் போல், இவருக்கு அமைந்து விடக் கூடாது என்பதில், டாக்டர்கள் கவனமாக இருந்தனர். அறுவை சிகிச்சை முடிந்து, ஒரு வாரம் அவர் ஓய்வில் இருந்தார். பின், டாக்டர்கள், கண்ணாடியில் அவரது முகத்தை காட்டினர். அதில் தனது புதிய முகத்தை பார்த்த அந்த நபர், மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘அறுவை சிகிச்சைக்கு முன், அவரது நெற்றி, கழுத்து ஆகிய இடங் களில் பெரிய தழும்புகள் இருந்தன. தற்போது அதற்கான தடயமே இல்லை’ என்றார். ஸ்பெயினில் நடந்துள்ள இந்த முழுமையான முதல் முகமாற்று அறுவை சிகிச்சை, மருத்துவத் துறையில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தின் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

உயிர்ச்சத்து வைட்டமின் ‘C’

உடலுக்கு வலுவையும், உற்சாகத்தையும் தருவது உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள்தான். இந்த உயிர்ச் சத்துக்களானது உடலுக்கு அவசியத் தேவையாகும். வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் சரிவிகிதத்தில் உடலில் சேர்ந்தால்தான் உடல் நோய் நொடிகளின் தாக்குதலிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.

வைட்டமின்களின் வகைகள் பற்றியும், அவை உடலின் வளர்ச்சிக்கு எவ்வாறு செயலாற்றுகிறது என்பது பற்றியும், எவற்றில் எந்த வைட்டமின் உள்ளது என்பதையும் நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.

இந்த இதழில் வைட்டமின் ‘C’(Ascorbic acid) என்ற உயிர்சத்து பற்றி தெரிந்துகொள்வோம்.

உயிர்ச்சத்தான வைட்டமின் ‘C’ மனித உடலில் இணிடூடூச்ஞ்ஞுண என்ற வளர்ச்சி உண்டாக்கக் கூடிய சத்து உருவாக இன்றியமையாத பங்கு வகிக்கிறது. இந்த இணிடூடூச்ஞ்ஞுண வளரக்கூடிய எலும்புகள், தசை நார்கள், இரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ‘இ’ நீரில் கரையும் தன்மையுடையதாகும். காய்கள், கனிகளின் மேல் தோலில் அதிகம் நிறைந்துள்ளதால் இவை காயும் போது இந்த வைட்டமின் ‘இ’ சத்து காற்றில் கலந்து விடுகிறது. மேலும் சிறிது சிறிதாக நறுக்கும்போது இந்த உயிர்ச்சத்துக்கள் வெகுவாக அழிந்து விடுகின்றன.

இவை உடலுக்கு உணவின் மூலமே கிடைக்கிறது. இந்த வைட்டமின் ‘இ’ உடலில் சேமித்து வைக்கப் படுவதில்லை. தேவைக்கு அதிகமானால் அவை சிறுநீரின் வழியாக வெளியேறிவிடும். இதனால் இந்த உயிர்ச்சத்து தினமும் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த தேவை உணவின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. வைட்டமின் ‘இ’ சத்தானது உடலில் குறைந்தால் ஸ்கர்வி (Scurvy) என்ற நோய் ஏற்படுகிறது.

வைட்டமின் ‘C’ யும் உடல் வளர்ச்சியும்

· இந்த வைட்டமின் ‘C’ உடலின் எந்தப் பகுதி செல்களில் பாதிப்பு ஏற்பட்டாலும், அவற்றை சீர் செய்து உடலை நன்கு செயல்படவைக்கிறது. செல்களின் வளர்ச்சியே உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாகும்.

· இந்த வைட்டமின் ‘C’ இரத்தத்தை சுத்தப்படுத்தி சீராக இயங்கச் செய்கிறது.

· தோல், பல்லீறுகள், பற்கள், எலும்புகள் போன்றவற்றிற்கு உறுதியளிக்கிறது.

· உடம்பில் உண்டான காயங்களை மிக விரைவில் ஆற்றுவதற்கு இந்த சத்து மிகவும் தேவைப்படுகிறது.

இந்த வைட்டமின் ‘C’ சத்து குறைந்தால்

· வைட்டமின் ‘C’ குறைவினால் ஸ்கர்வி என்ற பல் ஈறுகளிலிருந்து இரத்தம் கசியும் நோய் உண்டாகிறது.

· வைட்டமின் ‘C’ குறைவினால் சரும வறட்சி ஏற்படுகிறது. அதனால் சருமம் பளபளப்பு தன்மையை இழக்கிறது. மேலும் சருமத்தில காயம் ஏதும் உண்டானால் அவை எளிதில் ஆறாத தண்மையை உண்டாக்குகிறது.

·வைட்டமின் ‘C’ குறைவால் ஒவ்வாமை, இரத்தச் சோகை உண்டாகும்.

· இந்த உயிர்ச்சத்து குறைவதால் தசைகள் பலவீனமடைகின்றன.

· பற்கள் வலிமையற்று பல்லீறுகளில் இரத்தம் கசிந்து கொண்டேயிருக்கும். இதனால் வாயில் துர்நாற்றம்உண்டாகும்.

· பசியை குறைத்து, சீரண உறுப்புகளின் செய்லபாட்டை சீர்குலைக்கிறது.

· எலும்பு மூட்டுக்கள், முக்கியமாக கால் எலும்பு மூட்டுகளில் உள்ள நீரினை பசை போல் ஆக்கி மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.

முகம் மற்றும் சருமத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், கரும்படலம் முதலியவை வைட்டமின் ‘இ’ குறைவால் அதிகமாகிறது.

வைட்டமின் ‘C’ யினால் உண்டாகும் நன்மைகள்

· வைட்டமின் ‘C’ சத்து அதிகமாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அளவு வைட்டமின் ‘இ’ உட்கொண்டால் உடலில் வளர்ச்சி சீராக இருக்கும்.

· மனிதர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் சளிகாய்ச்சல், போன்றவை அடிக்கடி ஏற்படாமல் தடுக்க வைட்டமின் ‘இ’ உயிர்ச்சத்து பயன்படுகிறது. அதிகளவில் இந்த உயிர்ச்சத்து சேரும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

· இரும்புச் சத்தை உடலில் அதிகளவில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் ‘இ’ முக்கிய பங்காற்றுகிறது. உணவில் உள்ள இரும்பு சத்தானது உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் ‘இ’ ன் ஈர்ப்புதான் காரணமாகிறது.

· சிறுநீரகம், சிறுநீர்பை, சிறுநீர் தாரை போன்றவற்றில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. சிறுநீரின் வழியே வைட்டமின் ‘இ’ வெளியேறும் போது உடலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களையும் சேர்த்துக்கொண்டு வெளியேற்றுகிறது.

· சிகரெட் பிடிப்பதினால் பல்லீறுகள் மற்றும் நுரையீரல் பைகளில் உண்டாகும் புண்களை ஆற்ற இந்த உயிர்ச்சத்து அவசியமாகிறது.

· வயிறு மற்றும் குடல் புண்களில் உண்டான இரத்தக் கசிவை போக்க இந்த உயிர்ச்சத்து பயன்படுகிறது.

· ஆஸ்துமாவின் பாதிப்புகளை குறைக்கும் தன்மை இந்த உயிர்ச்சத்துக்கு உண்டு என்று அறிவியல் ஆய்வு கூறுகிறது. தினமும் தேவையான அளவு வைட்டமின் ‘இ’ உடலுக்கு கிடைத்தால் ஆஸ்துமாவின் பாதிப்பு அறவே நீங்கும்.

· புற்று நோயை தடுக்கும் குணம் வைட்டமின் ‘இ’ -க்கு உண்டு என்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர். உடலில் வாய், தொண்டை, வயிறு, நுரையீரல் போன்றவற்றில் உண்டாகும் புற்று நோயை தடுக்கும் வல்லமை இதற்குண்டு. புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வைட்டமின் ‘இ’ சத்து அதிகம் கொடுத்து நோயின் பாதிப்பு மிகாமல் தடுக்கப்படுகிறது.

· மாரடைப்பு வருவதை தடுக்க வைட்டமின் ‘இ’ அதிக அளவில் உதவுகிறது. தினமும் உணவின் மூலம் இந்த சத்து உடலுக்குக் கிடைத்தால் மாரடைப்பு வருவது முற்றிலும் தடுக்கப்படும். இதய சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது.

உலக உணவு மற்றும் ஊட்டச்சத்து கழகம் அண்மையில், உடலுக்கு தினமும் தேவையான வைட்டமின் ‘இ’ ன் அளவு பற்றி அட்டவணை வெளியிட்டுள்ளது.

தாய்ப்பாலில் வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

நாளொன்றுக்கு ஒவ்வொரு வயதினருக்கும் தேவைப்படும் வைட்டமின் ‘இ’ அளவு.

0-6 மாத குழந்தைகளுக்கு – 40 மி.கி.

7-12 மாத குழந்தைக்கு – 50 மி.கி.

1-3 வருட குழந்தைக்கு – 15 மி.கி.

4-8 வருட குழந்தைக்கு – 25 மி.கி

9-13 வருட குழந்தைக்கு – 45 மி.கி.

14-18 வயது இளம் பெண்களுக்கு – 65 மி.கி.

14-18 வயது இளம் ஆண்களுக்கு – 75 மி.கி.

19 – முதுமை வரை ஆண்களுக்கு – 90 மி.கி

19-முதுமை வரை பெண்களுக்கு – 75 மி.கி.

கருவுற்ற பெண்களுக்கும், பாலூட்டும் பெண்களுக்கும் அதிகம் தேவைப்படும். மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் ‘C’ அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்

பழங்கள்.

நெல்லிக்கனி – 200 மி.கி.

மாம்பழம் – 16 மி.கி.

பலாப்பழம் – 7 மி.கி.

வாழைப்பழம் – 16 மி.கி.

மாதுளம் பழம் – 16 மி.கி.

கொய்யா பழம் – 212 மி.கி.

நாவற்பழம் – 16 மி.கி.

ஆரஞ்சு பழம்- 1 மி.கி.

ஆப்பிள் – 57 மி.கி.

பப்பாளி – 63 மி.கி.

எலுமிச்சை பழம் – 63 மி.கி.

தக்காளி – 27 மி.கி.

மேலும் தர்பூசணி மற்றும் சப்போட்டா பழங்களில் கணிசமான அளவு உள்ளது.

கீரை வகைகள்

கொத்துமல்லி – 38 மி.கி.

முள்ளங்கி கீரை – 79 மி.கி.

முளைக்கீரை – 49 மி.கி.

பருப்புக் கீரை – 29 மி.கி.

குப்பைக் கீரை – 178 மி.கி.

மணத்தக்காளி கீரை – 11 மி.கி.

பொன்னாங்கண்ணி கீரை – 17 மி.கி.

முருங்கை கீரை – 220மி.கி.

தண்டுக் கீரை – 99 மி.கி.

பசலைக் கீரை – 28 மி.கி.

வெந்தயக் கீரை – 52 மி.கி.

காய் வகைகள்

முருங்கைக்காய், பாகற்காய், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு, முள்ளங்கி, கத்தரிக்காய், காளிபிளவர்

பயிறு வகைகள்

காராமணி, பட்டாணி, உளுந்து, பச்சைப் பயறு, முளைவிட்ட மொச்சை போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் சத்து நீரிலும், காற்றிலும் கரையக்கூடிய தன்மையுள்ளதால் நன்கு பச்சையாக உள்ள பழங்களையும், கீரைகளையும் சாப்பிடுவது நல்லது. கீரைகள் மற்றும் காய்கறிகளை பாதியளவு வேகவைத்து சாப்பிட்டால் வைட்டமின் ‘இ’ முழுமையாக நம் உடலுக்கு கிடைக்கும்.

வைட்டமின் ‘C’ என்ற உயிர்ச்சத்தினை தேவையான அளவு பெற மேற்கண்ட உணவு வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோமாக.