சர்க்கரை நோயாளிகள்-’40 சதவீத’ வித்தியாசம் அதிகமானால்…

பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகள், அறியாமையால், ‘எனக்கு சர்க்கரை அளவு கட்டுப் பாட்டில் இருக்கிறது. ஒரு தடவை 180 சதவீதம் ஆகியது. உணவு, உடற் பயிற்சியால் சர்க்கரை 140 ஆகக் குறைத்து விட்டேன்’ என்பர். இவரது பரிசோதனை அறிக்கையைப் பார்த் தால், மூன்று மாதத்திற்கு முன் எடுத்த பரிசோதனையாக இருக்கும்.
அதுவும், ‘ரேண்டமாக,’ சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து, பரிசோதனை செய்து இருப்பார். ஏஞஅ1ஞி பரிசோதனை, சர்க்கரையின் மூன்று மாத கட்டுப் பாட்டைக் காட்டும் பரிசோதனை; இதை செய்து இருக்க மாட்டார்கள்.
‘உங்கள் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது’ என்று கூறினால், ‘வீட்டில் விசேஷம்; நிறைய இனிப்பு பலகாரங் கள் சாப்பிட்டேன். அதனால், தான் சுகர் அதிகமாக உள்ளது’ என்பர்.
ஒருமுறை சர்க்கரை அளவு 120 முதல் 140 வந்து விட்டால், தனக்கு சர்க்கரை வியாதி குணமாகிவிட்டது என்று நினைத்து கொண்டு, மருந்துகளை சாப்பிட மாட் டார்கள். ஒரு நாளைக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 18 முறை ஏறி இறங்குவது, இவர்களுக்கு தெரியாது. தனால் தான் வெறும் வயிற்றில் சுகர் பரிசோதனை, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, சுகர் பரிசோதனை செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை, இந்த பரிசோதனை செய்யவேண்டும். கட்டாயம் மூன்று மாதம் ஒருமுறை, ஏஞஅ1ஞி பரிசோதனை செய்யவேண்டும்.
சாப்பிடும் முன் வெறும் வயிற்று சர்க்கரை, 90 சதவீதம்; சாப்பிட்ட பிறகு 130 சதவீதத்திற்குள், அதாவது, 40 சதவீத வித்தியாசத்தில், கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல் இருந்தால் நிச்சயம் இதய நோய் வரலாம்.
சில சமயங்களில் பொருத்த மில்லாத மருந்துகளால் கூட, இந்த சர்க்கரையின் அளவு வித்தியாசம் 40க்கு மேல் போக வாய்ப்புள்ளது.
இந்த வித்தியாசம் அதிகமாவதால், ரத்தக் குழாய் பாதிப்பு ஏற்பட்டு, மூளைக்கு செல்லும் சிறிய மற்றும் பெரிய ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, பக்கவாதம், உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வலி ஆகியவை ஏற்படும்.
படுக்கையிலிருந்து எழுவது, குளிப்பது, உடை மாற்றுவது, உண்பது, நடப்பது, வேலைக்கு செல்வது இதுபோன்ற வேலைகள் பாதிக் கப்பட்டு, பயனற்று படுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மருத்துவம் பார்க்க முடியாத நிலை. வீடு, நிலம், நகை விற்று குடும்பம் அல்லல்படுவதைப் பார்க்க சகிக்க முடியவில்லை. அதுவும், இரண்டாம் வகை இதய பாதிப்பான, ‘கார்டியோ மையோபதி’க்கு செலவு கொஞ்சம் நஞ்சமல்ல. இதனால், குடும்ப உறுப் பினர்கள் பொருளாதார சிதைவு, மனச்சிதைவுக்கு உட்படுகின்றனர். இதை நினைக்க பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கிறது.
இந்த நிலையைப் பயன்படுத்தி, பொருள் ஈட்ட, ஒரு மருத்துவ கும்பல் உள்ளது. மனித நேயத்தை மறந்து, ‘பணம் கொடு, ‘ட்ரீட்’ செய்கிறேன்’ என்ற நிலைக்கு, மருத்துவ சேவை வந்துவிட்டது.
சர்க்கரை நோயால் சிறுநீரகமும் பாதிக்கப்படும் என்று சொல்வது ஏன்?
இதுவும், ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ பாதிப்பு தான். சிறுநீரகத்தில் உள்ள நுண் ரத்தக்குழாய் அடைபட்டு, ‘நெப்ரான்’ என்ற சிறுநீரகத்தின் உயிர்நாடியை பாதித்து விடுகிறது. இதை ஆங்கிலத்தில், ‘டயபடிக் நெப்ரோபதி’ என் றழைப்பர். எந்த நேரத்தில், யாருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்பதை முன் கூட்டியே சொல்ல முடியாது. இந்த, ‘நெப்ரோபதி’யால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, யூரியா, கிரியாட்டின், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு உயர்ந்து, மூச்சு முட்டல், படபடப்பு ஏற்பட்டு, ‘டயலிசிஸ்’ செய்ய வேண்டிய நிலைக்கு நோயாளி தள்ளப்படுவார்.
இறுதியில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும். சிறுநீரகத்தை உடல் ஏற்றுக் கொள்வதற் காக, ஊசி போட வேண்டும். ஏகப்பட்ட செலவாகும். நோயாளிக்கு நஷ்டம்; மருத்துவமனை, மருந்து கம்பெனிகளுக்கு லாபம்.
கண்கள்?
கண் ரெட்டினாவிலுள்ள ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, கண்ணொளி குறையும். பார்வை இழக்க நேரிடும்.
40 வித்தியாசத்தை அதிகமாகாமல் தடுப்பது எப்படி?
1. உணவிலுள்ள மாவுச்சத்தைக் குறைக்க வேண்டும். அரிசி, கோதுமை இவைகளில் மாவுச் சத்து அதிகம் இருக்கிறது. இதனால், தொந்தி விழுகிறது. 100 கிராம் அரிசி, 100 கிராம் புரதம், 100 கிராம் கீரை, 100 கிராம் காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த காய், பழங்கள் உட்கொண்டால் சுகர் உயராது.
2. தினமும் உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்யுங்கள்.
3. இன்சுலின் சிகிச்சை முறையில் மூன்று வகைகள் உள்ளன. உங்களுக்கு எந்த வகை என்பதை டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதைச் சரிவர பின்பற்றுங்கள்.
சைவு உணவு: கலோரி, கொழுப்பு குறைவு. கொலஸ்டிரால் குறைவு அல்லது இல்லை. புரதச்சத்து குறைவு. இரும்பு, தாதுச்சத்து அதிகம். எண்ணெய், தேங்காய் குறைவாக சேர்த்துச் செய்யப்படுகிறது.
அசைவ உணவு: கலோரி, கொழுப்பு அதிகம். கெட்ட கொலஸ்டிரால் அதிகம். முதல் தர புரதம் அதிகம்; இரும்பு, தாதுச்சத்து குறைவு; எண் ணெய் தேங்காய், மசாலா அதிகம் சேர்க்கப்படுகிறது.
உடல் எடை அதிகமானால், சர்க்கரை நோயை வரவழைக்கும். இதற்கு மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி, கோதுமை, இறைச்சி தான் காரணம்.
மூன்று வேளை அரிசி சாப்பிடுவது ஆபத்து. இதனால் தொப்பை, இடுப்பு அளவு அதிகமாகிறது. மேலும் கொலஸ்டிரால் அதிகமுள்ள பாலாடை வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி, மாட்டுக் கறி சாப்பிடக்கூடாது.
அசைவப் பிரியர்களே! நீங்கள் சாப்பிடும் உணவில் எவ்வளவு கலோரி என்று பாருங்கள்.
(தோராயமான அளவு)
100கிராம் மீன் – 210 கலோரி+
100கிராம் கோழி – 200 கலோரி
100கி ஆட்டுக்கறி – 410-420 கலோரி
100கி மாட்டுக்கறி – 430-450 கலோரி
100கி பன்றிக்கறி – 600 கலோரி. அதற்கு மேல் உறுப்புகளில் அதிகமான கலோரி
100கி மூளை – 650 கலோரி
100கி சிறுநீரகம் – 600 கலோரி
100கி கல்லீரல் – 650 கலோரி
100கி இதயம் – 400 கலோரி
100கி மண்ணீரல் – 400 கலோரி
இவைகளை சமைக்க வறுக்க உபயோகிக்கும் எண்ணெயை சேர்ந்தால் எவ்வளவு கலோரி கிடைக்கும், ஏன் எடை கூடாது, உடல் உப்பாது?
நாம் சாப்பிடுவதற்காக உயிர் வாழ வேண்டாம்; உயிர் வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும்.
மருத்துவ கம்பெனி நடத்தும் விருந்துகளில், டாக்டர்கள், ‘பபே’யில் முண்டியடித்துக் கொண்டு சாப்பிடுவது, கண்கொள்ளாக் காட்சி!
சீரான உடற்பயிற்சி, தேவையான உணவு, மருந்துகள், டாக்டர்களின் ஆலோசனை, சர்க்கரை நோய்களின் விளைவுகளை தவிர்க்கும்.

%d bloggers like this: