Daily Archives: மே 13th, 2010

ஹைடெக் சாமியார்களின் சாமர்த்தியம் மூளை உணர்வுத் தூண்டுதலாலா?

ஒரு ஆய்வின் படி மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டால் ஒருவனுக்கு உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் ஏற்படலாம். என நினைக்க தோன்றுகிறது.
தனக்குள் தானே ஆழ்தல் (Self Transcendence) எனும் ஒரு தனிச்சான்றாண்மை இயல்பு (ஆளுமை இயல்பு அல்லது கஞுணூண்ணிணச்டூடிtதூ கூணூச்டிt) என்பதை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சான்றாண்மை இயல்பு அல்லது ஆளுமை இயல்பு என்பது ஆன்மிக உணர்வு சிந்தனை, நடத்தை ஆகியவற்றின் ஒரு தெளிவற்ற அளவாகும். தனக்குள் தானே ஆழ்தல் என்பது தன்னுணர்வைக் குறைவாய் பிரதிபலிக்கின்றது. குறைவாய் சார்ந்திருக்கின்றது. ஒரு தனி ஆத்மா தன்னை இந்த பிரபஞ்சத்தின் ஒரு முழுமை பகுதியாய்க் கண்டு கொள்ளும் ஆற்றலையும் பிரதிபலிக்கின்றது. எனக்கருத்து தெரிவிக்கின்றார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அறுவைசிகிச்சை மூலம் மூளையில் ட்யூமர்க்கட்டி நீக்கப்பட்ட சிலரை அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் ஆராய்ந்திருக்கின்றார்கள்.அப்போது பின்மண்டைப் பகுதிகளில் மூளையில் ஏற்படும் பாதிப்பு தனக்குள் தானே ஆழ்தல் எனும் யோக நிலையை (A Kind of Trans cendental Meditation) தூண்டும் மர்மம் தெரியவந்திருக்கின்றது. மூளை இயல்பாக செய்து கொண்டிருக்கும் வேலைகளுக்கும், தனக்குள் தான் ஆழ்ந்து விடும். யோக நிலைக்கும் இடையிலுள்ள செய்விளைவு தொடர்பை எங்கள் ஆய்வு முதன்முதலாக நிரூபித்து காட்டியுள்ளது. என்று ஆய்வு விஞ்ஞானிகளில் ஒருவரான காஸிமோ உர்ஜெஸி கூறியிருக்கின்றார். பின் பக்கத்து மண்டை பகுதிகளில் மூளையில் ஏற்படுகின்ற பாதிப்பு அல்லது பழுது ஒரு தனிநிலை சான்றாண்மை வேகமான மாறுதல்கள் ஏற்பட தூண்டியுள்ளது. அது தனியான ஒரு சான்றாண்மை என்ற எல்லை பரிமாணத்தையும் தாண்டி ஆழ் உணர்வில் தொடர்பு கொண்டு பொதுவாகி, வெட்ட வெளியாகிவிடுவதை போன்றதாகும். ஆக, பழுதினால் பாதிக்கப்பட்ட மண்டை நரம்பு செயல்பாடு என்பது, உருதிரிந்த ஆன்மிக மத உணர்வுகளையும் உறுதிபடுத்தி தெரிவிக்கலாம். முன்பெல்லாம் நடந்து வந்த நியூரோ இமேஜிங் ஆய்வுகள் மூளையினுள்ளதாக திகழும் மண்டைப்பகுதிகள் முதலியவற்றை இணைக்கும் பெரிய ஒரு நரம்பு பின்னலினுள்ளே நிகழும் செயல்களை ஆன்மிக அனுபவங்களுடன் தொடர்புபடுத்தின. வலது மண்டைப் பகுதி மூளைத்தோடு நன் என்னும் உணர்வை விளக்குவதாகும். இந்த உணர்வை அதிகம் ஓட்டாமல் உணர்பவர்கள் ஆன்மிக ஆர்வம் கொண்டவர்களாக பெரும்பாலும் இருப்பார்கள்.

இன்டர்நெட் இல்லாதபோதும் கூகுள் கேம்ப்


ஓர் இடத்திற்குச் செல்ல வழிகள், முகவரிகள் மற்றும் சிறிய அளவிலான மேப் ஆகியவற்றைப் பெற இப்போது நமக்கு அதிகம் உதவுவது கூகுள் மேப்ஸ் ஆகும். கூகுள் மேப்ஸை உலகின் எந்த நாட்டிலிருந்தும் பெறலாம். எந்த நாட்டிற்கும், நகரத்திற்கும், தெருவிற்கும் வழி காட்டும் வகையில் மேப்களும், வழி காட்டுதல்களும் நமக்கு கூகுள் மேப்ஸ் தருகிறது. இதற்குத் தேவை எல்லாம் சற்று வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு மட்டுமே.
இணைய இணைப்பு இல்லாதபோது கூகுள் மேப்ஸ் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? கூகுள் மேப்ஸில் ஒரு முக்கியமான இடத்திற்கு மேப் கண்டறிந்து, அதனை சேவ் செய்து, அதனை இன்டர்நெட் இணைப்பு கிடைக்காதபோது எப்படி பார்ப்பது? இந்த இடத்தில் தான் நமக்கு ஜிமேப் கேட்சர் (Gmap Catcher) என்னும் அப்ளிகேஷன் நமக்கு உதவுகிறது. இதனை http://code.google.com /p/gmapcatcher என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திலிருந்து டவுண்ட்லோட் செய்து, பின் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும். பின் அதனை இயக்கவும். இது இயங்குகையில், நீங்கள் எந்த ஊருக்கான மேப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்த ஊரின் பெயரை என்டர் செய்திட வேண்டும்.
பின்னர் ஆன்லைனில் சென்று குறிப்பிட்ட மேப்பைப் பெற, இந்த புரோகிராம் உங்கள் அனுமதி கேட்கும். இதற்கு ‘Yes’ என்பதில் கிளிக் செய்திட, உடனே அந்த நகரத்திற்கான மேப் ஜிமேப் கேட்சர் விண்டோவில் கிடைக்கும். இதன் பின்னர் அதனை டவுண்லோட் செய்திட நாம் கட்டளை கொடுத்தவுடன், அந்த மேப் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்கள் சிஸ்டத்தில் சேவ் செய்யப்படும். மேப்பிற்கான பூகோள ரேகைக் குறியீடுகள் (latitude, longitude) ஏரியா, ஸூம் செட்டிங்ஸ் ஆகிய தகவல்களும், மேப்புடன் பதியப்படும். இது டவுண்லோட் செய்யப்பட்டுவிட்டால், இந்த மேப்பினை அடுத்துப் பார்க்க, இன்டர்நெட் இணைப்பு தேவைப்படாது. இல்லாமலேயே ஜிமேப் கேட்சர் உதவியுடன் காணலாம்.
ஜிமேப் கேட்சர் புரோகிராமினை விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலும் இயக்கலாம்.

சில `தங்கமான’ விஷயங்கள் இங்கே

அழகு தருவதாயிருந்தாலும், அந்தஸ்து அளிப்பதாக இருந்தாலும் தங்கத்தின் மதிப்பே தனி! தற்போது இது நல்ல முதலீடாகவும் கருதப்படுகிறது.

சில `தங்கமான’ விஷயங்கள் இங்கே… உலகிலேயே அதிகமாகத் தங்கத்தைப் பயன்படுத்தும், இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இந்தியாவின் வருடாந்திர தங்கத் தேவை 800 டன்கள். தங்கத்தில் 70 சதவீதம், நகைகள் செய்யவே பயன்படுத்தப்படுகிறது. உலகிலேயே அதிகமான நகைகள் விற்பனையாவது இந்தியாவில். ஆனால் உலகிலேயே அதிகமான தங்க நகைகளைத் தயாரிப்பது அமெரிக்கா. தங்கத்தால் செய்யப்பட்ட விலை மதிப்புமிக்க பொருட்கள் ஓர் அந்தஸ்து அடையாளம். `வாட்டர்மேன்’ நிறுவனத்தின் 18 கேரட் தங்கத்தாலான `எக்ஸப்சன் கோல்டு’ தங்கப் பேனாவின் விலை 10 லட்ச ருபாய்! உலக தங்க இருப்பில் 20 சதவீதத்தை ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கிகளும், சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளும் வைத்திருக்கின்றன. அவை மொத்தம் 29 ஆயிரம் டன்கள்! ஆசியாவில் உணவு, பானம், மருந்தில் தங்கம் சேர்க்கப்படுகிறது. ஜப்பானில் தங்க இழை சேர்த்த மிட்டாய்கள் கூட விற்பனை செய்யப்படுகின்றன.

இஞ்சி… சுக்கு… கடுக்காய்?!

தினமும் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இன்றைக்கும் கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி என்னதான் செய்கின்றன அவை?

சின்ன சின்ன துண்டுகளாக இஞ்சியை காலையில் சாப்பிடலாம். இல்லாவிட்டால் இஞ்சி சாறு எடுத்து, அஞ்சு நிமிஷம் அப்படியே வைத்தால் அடியில் வெள்ளையாக படியும். மேலே தெளிந்த சாறை மட்டும் குடித்தால் உடல் சுறுசுறுப்பாகும். வாய்வுத் தொல்லை, அஜீரணக்கோளாறு, சளித் தொல்லை எதுவும் எட்டிப் பார்க்காது.

பகலில் சுக்கு மல்லிக் காபி சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல், இருமல், வாய்வுப் பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும். அதேபோல், ராத்திரியில் தூங்குவதற்கு முன்பாக கடுக்காய் சாப்பிடுவது நல்லது. இரண்டு, முன்று கடுக்காயை இடித்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சவும். அவை பாதியாக சுண்டிய பிறகு, நன்கு ஆற வைத்து குடிக்கவும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை, முலம் ஆகிய தொந்தரவுகள் குறையும்.

தண்டர்பேர்டில் அதிக வசதிகள்

யூசர் ஏஜெண்ட்:
பயர்பாக்ஸ் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், தங்களின் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக, தண்டர்பேர்ட் பயன்படுத்துவார்கள். ஏனென்றால் இதுவும் மொஸில்லாவின் தயாரிப்பே. மேலும் இது பாதுகாப்பானது, பயன்படுத்த எளிமையானதும் கூட. தண்டர்பேர்ட் புரோகிராமினை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், இதோ உங்களுக்குப் புதிய பயனுள்ள செய்தி. உங்கள் இமெயில் ஹெடரைப் பார்த்தால், அதில் பல விஷயங்கள் தென்படும். என்னவகையான செய்தி, தேதி, இமெயிலை அனுப்பிய சர்வர் மற்றும் சில தகவல்களைக் காணலாம். இத்துடன் இன்னொரு விஷயத்தையும் இதில் சேர்க்கலாம். உங்கள மெயிலை அனுப்பப் பயன்படும் யூசர் ஏஜெண்ட் (User Agent) குறித்த தகவலையும் இந்த ஹெடரில் இணைக்கலாம். இந்த யூசர் ஏஜெண்ட், மெயிலை அனுப்பப் பயன்படுத்திய புரோகிராம் அல்லது சர்வீஸ் குறித்த தகவல்களை இணைக்கும். இதனால் என்ன பயன்? என்ற வினா வருகிறதா?
இந்த யூசர் ஏஜெண்ட் தரும் தகவல்களைத் தொடர்ந்து பார்த்து வரும் உங்கள் மெயிலைப் பெறுபவர்கள், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சர்வீஸ் அல்லது புரோகிராம் குறித்த தகவல்களைத் தங்களை அறியாமலேயே மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் தொடர்ந்து மெயில்களைப் பெறுகையில், அந்த ஹெடர்களில் இருக்கும் தகவல்கள் நமக்குப் படம் போல மனதில் எப்போதும் காட்சி அளிக்கும். இதனால் நம் மின் அஞ்சல் முகவரியினைத் திருடி, அந்த இமெயில் முகவரியிலிருந்து வேறு யாரேனும் மெசேஜ் அனுப்புகையில், இந்த யூசர் ஏஜெண்ட் அதனைக் காட்டிக் கொடுத்துவிடும். மேலும் நாமே வேறு ஒரு புரோகிராம் மூலம் மின்னஞ்சல் அனுப்பினால், அதனைப் பெறும் நபர், இது என்ன வழக்கத்திற்கு மாறாக, வித்தியாசமான வேறுபட்ட புரோகிராமாக இருக்கிறதே என்று தெரிந்து கொண்டு, அந்த மின் அஞ்சலில் உண்மைத் தன்மை குறித்து சந்தேகப்படுவார். இது நல்லதுதானே! போலிகள் வருகையில் எச்சரிக்கையாக இருப்போம் இல்லையா!
தண்டர்பேர்ட் பயன்படுத்துபவர்கள் இந்த யூசர் ஏஜெண்ட்டைத் தங்கள் இமெயில்களில் இணைக்கக் கீழ்க்கண்ட வழிகளில் அதனை செட் அப் செய்திட வேண்டும்.
1. தண்டர்பேர்ட் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். பின் ஹெடர் மெனுவில் Tools > Options செல்லவும்.
2. இதில் Advanced டேப் சென்று கிளிக் செய்திடவும்.
3. பின் கிடைக்கும் விண்டோவில் வலதுபுறம் கீழாக Config Editor என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கிடைக்கும் எச்சரிக்கை செய்தியை ஏற்றுக் கொள்ளவும்.
5. இனி கிடைக்கும் கான்பிக் எடிட்டர் விண்டோவில் mailnews.headers.showUserAgent என்ற சொற்களுக்கான பில்டரை மேலாகக் காட்டியுள்ள விண்டோவில் அமைக்கவும்.
6. உடன் நேராக அந்த பாராமீட்டர் வரி கிடைக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால், அதன் வேல்யு True என மாற்றப்படும்.
இந்த மாற்றம் தேவை இல்லை எனில் மீண்டும் இதே செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
இந்த செட் அப் செயல்படுத்தப்பட மீண்டும் ஒருமுறை நீங்கள் தண்டர்பேர்ட் புரோகிராமை இயக்க வேண்டியதிருக்கும்.
காண்டாக்ட் போட்டோ:
தண்டர்பேர்ட் தொகுப்பு 3, தன் மெயில் ஹெடர்களில் அனுப்பியவர், பெறுபவர் குறித்த பல்வேறு தகவல்களைத் தருகிறது. இப்போது கூடுதலாக இன்னொரு வசதியும் இதில் கிடைக்கிறது. இதனை Display Contact Photo என தண்டர்பேர்ட் அழைக்கிறது. இதன் விபரங்களைப் பார்க்கலாம்.
பொதுவாக இமெயில் கிளையண்ட் புரோகிராம்களில், அட்ரஸ் புக்கில், முகவரிக்குரியவரின் புகைப்படத்தினை இணைக்கலாம். ஆனால் அவை அந்த அட்ரஸ் புக்கில் மட்டுமே காணக் கிடைக்கும். இமெயில் செய்தியில் காட்டப்படமாட்டாது.
காண்டாக்ட் போட்டோஸ் என்ற தண்டர்பேர்ட் எக்ஸ்டன்ஷன், இந்த போட்டோக்களை, சம்பந்தப்பட்டவரின் இமெயில் கிடைக்கையில் இணைத்துக் காட்டுகிறது.
தண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராமில், அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளில், முகவரிக்கானவரின் போட்டோவினை இணைக்கலாம். போட்டோ இல்லாதவர்கள், ஏதேனும் பொதுவான ஒரு போட்டோ அல்லது படத்தை இணைக்கலாம். எடுத்துக் காட்டாக மதுரை நண்பர் ஒருவரின் போட்டோ இல்லாத போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் படத்தை இணைக்கலாம்.
எந்த போட்டோவும் இல்லை என்றால் இந்த எக்ஸ்டன்ஷன் கிராவதார் (Gravatar) என்று சொல்லப்படுகின்ற, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய (‘Globally Recognized Avatars’) படங்களைத் தானாக இணைத்துக் காட்டுகிறது. இந்த கிராவதார் திட்டத்துடன் ஒருவர் அக்கவுண்ட் ஓப்பன் செய்திருந்தால், அவரின் இமெயில் கிடைக்கும்போது, அவரின் கிராவதார் படத்தைக் காட்டுகிறது. (கிராவதார் குறித்து மேலும் விளக்கங்கள் வேண்டுவோர் en.wikipedia.org/wiki/Gravatarஎன்ற முகவரியில் உள்ள விக்கிபீடியா பக்கத்தினைக் காணவும்.) இல்லையேல் புரோகிராம் தானாக ஒரு பொதுவான படத்தைக் காட்டுகிறது.
இந்த எக்ஸ்டன்ஷனை இன்ஸ்டால் செய்திட விரும்புபவர்கள் https://addons.mozilla. org/enUS/thunderbird/addon /58034 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, எக்ஸ்டன்ஷனை இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், Tools > Addons > Options > Contact Photos கடணிtணிண் என்று செல்லவும். இங்கு செல்வதன் மூலம், அட்ரஸ் புக்கில் பதிந்து வைத்த போட்டோக்களை எடிட் செய்து அமைக்கலாம். கிராவதார்களை இங்கு அனுமதிக்கலாம் (enable or disable). போட்டோக்கள் இமெயில் மெசேஜ் கிடைக்கையில் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம்.
டிஸ்பிளே காண்டாக்ட் போட்டோ தண்டர்பேர்ட் பதிப்பு 3 க்கு மட்டுமே கிடைக்கிறது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள், தங்களுடைய தண்டர்பேர்ட் பதிப்பு, 3 ஆம் பதிப்புக்கு முந்தையதாக இருந்தால், அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

இங்கே பாதமே அம்மன்

தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் நாட்டைப் பிரித்துக் கொள்வதில் ஒற்றுமை இல்லாமல், அடிக்கடி போரிட்டுக் கொண்டு இருந்தனர். அதனால், அவர்களைச் சார்ந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். அவர்கள் எப்போது போர் நடக்குமோ என்று பதறியபடியே வாழ்க்கையை கழித்தனர்.

ஒருக்கட்டத்தில் போரில் சோழ மன்னன் மட்டும் எப்போதும் வெற்றி பெற்று வந்தான். இது மற்ற இரு மன்னர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சில நாட்களுக்குப் பின், `சோழ மன்னன் மட்டும் எப்படி வெற்றி பெறுகிறான்?’ என்பதற்கான காரணம் அவர்களுக்குத் தெரிய வந்தது. அதன்படி, அவன் கைலாய மலை சென்று அங்கு பார்வதி தேவியாக வீற்றிருக்கும் அம்மனை தரிசிப்பது தெரிந்தது.

சில மாதங்களுக்குப் பின் வரும் ஒன்று கூடி அம்மனைத் தரிசிக்க கைலாயமலை சென்றனர். அங்கு அவர்கள் அம்மனிடம், தங்களுக்குள் ஒற்றுமை வளர வேண்டும் என்றும், இனி போர் ஏற்படக்கூடாது என்றும் வேண்டினர்.

அதன் பிறகு ஒருசில மாதங்கள் கழித்து மீண்டும் பகை உருவாகி போர் நடந்தது. அப்போது ஒரு முதாட்டி அவர்களிடம் வந்து “போர் நடப்பதால் என்னென்ன இழப்புகள் ஏற்படுகின்றன? பலி வாங்கும் உணர்ச்சி எப்படி வருகிறது? மண் ஆசையால் – பொன் ஆசையால் மக்களை அவதிப்படுத்துவதும், பலி வாங்குவதும் நல்லதல்ல” என்றும் விளக்கமாக எடுத்துக் கூறினார். அதை உணர்ந்து கொண்ட வேந்தரும் அன்று முதல் போர் புரியாமல், ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.

இது நடந்த சில மாதங்களில், கோவை அருகே உள்ள மதுக்கரையில் முன்று நதிகளும் கூடும் இடத்தில் முவேந்தர்களுக்கும், பார்வதிதேவியாக அவர்கள் வணங்கி வந்த அம்மனின் காட்சி கிடைத்தது. சிறிது நேரத்தில் அந்த அம்மன் முதாட்டியாக காட்சி அளித்தார். அம்மன் காட்சி தந்து மறைந்ததால் அந்த ஊர் மாயனூர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவில், மதுக்கரையின் அருகில் இருப்பதால், `மதுக்கரை செல்லாண்டி அம்மன்’ என்றும் அழைக்கப்படுகிறது. செல்லாண்டி அம்மனை மக்கள் ஏற்று 3 பாகமாக பிரித்தனர். அதன்படி, பாகம் ஒன்று மதுரையிலும், பாகம் இரண்டு கோவையிலும், முன்றாவது பாகம் திருச்சியிலும் அமையப் பெற்றது.

திருச்சியில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது ஸ்ரீசெல்லாண்டி அம்மன் கோவில். தலையும், காலும் இல்லாத வெறும் கால் பாதங்கள் மட்டும் அமைந்திருப்பதே இந்த அம்மனின் சிறப்பு. இந்த அம்மனை `உறையூர் எல்லைக்காத்த அம்மன்’ என்றும் கூறுகிறார்கள்.

அம்மனின் பாத தரிசனத்தை மட்டுமே வணங்கி வரும் மக்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கின்றன.

இத்திருத்தலம் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.