Daily Archives: மே 14th, 2010

கோடையில் ஏற்படும் இம்சை!

கோடைகாலத்தில் அடிக்கடி ஏற்படும் அதீத தாகம், வாய் மற்றும் நாக்கு வறண்டு போதல், தோலிலும் வறட்சி, அடிவயிற்றில் வலி என இவையெல்லாம் வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கான அறிகுறி. தொடர்ந்து வயிற்றை கலக்கி அடிக்கடி டாய்லெட் போக வேண்டியதிருக்கும்.

இரண்டு நாளைக்கு இந்த இம்சை தொடர்வதால், உடம்பில் உள்ள தாது உப்புகள் குறைந்து, நீர் இழப்பு அதிகமாகி, அடித்துப் போட்டது போல் உடம்பு சோர்வாகி விடும். இந்த நிலை ஏற்பட்டால், முதலில் நாம் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மசாலா பொருட்கள், வறுவல் அயிட்டங்கள், பொரித்த உணவுகள் மற்றும் பால் ஆகியவற்றை தொடவே கூடாது. சூடு ஆறிய வெந்நீரை அடிக்கடி குடிக்கவும். திரவ உணவுகள் நல்லது. நார்ச்சத்து இல்லாத பழங்கள், ஜூஸ், இளநீர், மோர், குளுக்கோஸ், அரிசி கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி ஆகியவற்றை சாப்பிட்டாலே வயிற்றுப்போக்கு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிடும்.

அதிகப் பயன்மிக்க புதிய ஓய்வூதியத் திட்டம்

புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் அறிமுகமானது. ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இதன் நடைமுறை பற்றி பலருக்கு இன்னும் தெரியவில்லை. இங்கே அது பற்றிய இந்த அறிமுகம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குமே… இந்தியாவில் அமைப்பு சாரத தொழிலாளர்கள், சுய தொழில் புரிவோர், சிறுவணிகம், விவசாயம் செய்வோர் ஆகியவர்களின் எண்ணிக்கை, 90 கோடியே, 90 லட்சம்போர், இவர்களுக்கு அமைப்பு ரீதியிலான ஓய்வூதிய திட்டம் கிடையாது. எனவே, கடந்த ஓராண்டாகத்தான் இவர்களுக்கெல்லாம் பயன்படத்தக்க ஒரு ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பெயர் தான் புதிய ஓய்வூதிய நிதி நெறிமுறை மற்றும் மேம்பாடு என்னும் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸூக்கு ஒரு ஐ.ஆர்.டி.ஏ. இருப்பது போல்,

யாரெல்லாம் இதில் சேரலாம்?: 18 வயதுமுதல் 55 வயது வரையில் உள்ள எல்லா இந்தியர்களும் சேரலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இதில் சேரலாம்.

இந்த திட்டத்தில் எப்படி சேருவது எப்படி? : இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு 22 அமைப்புகள் நியமிக்கப்பட்டுள்ளன. அவை, பொதுத்துறை மற்றும் பெரிய தனியார் துறை வங்கிகள் உதாரணமாக பாரத ஸ்டேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா போன்ற அரசுடமை மற்றும் பொதுத்துறை வங்கிகள், மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ஆக்ஸிஸ் பேங்க் போன்ற தனியார் வங்கிகள் ஆகும். இந்த வங்கிகளின் கிளைகளை அணுகி, உரிய பவிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தால் விண்ணப்பதாரரின் பெயர் பதிவு செய்யப்படும். அதை அடுத்து, ஒரு நிரந்தரக்கணக்கு எண் வழங்கப்படுகிறது. அத்துடன் தொலைபேசி மற்றும் இணைய தளத்தின் வாயிலாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக ஒரு குறியீடு தரப்படுகிறது. எனவே ஒவ்வொரு காரியத்துக்கும் நேரில் செல்லத்தேவையில்லை. நாம் கணக்கில் செலுத்த வேண்டிய தொகைக்கு உச்ச வரம்பு இல்லை. ஆனால் குறைந்த பட்சம் மாதம் ரூ.500 அல்லது வருடத்திற்கு ரூ.6000 என்ற அளவில் செலுத்த வேண்டும். இது தான் ஓய்வூதியம் பெறுவதற்காக நாம் செய்ய வேண்டிய குறைந்த பட்ச முதலீடு, இந்த தொகையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தவணைமுறையில் செலுத்தலாம். தொகையை உரிய காலத்தில் கட்ட தவறினால், நிலுவைத் தொகையுடன், அபராதத்தொகையாக ரூ.100 செலுத்த வேண்டும். இந்த தொகையை, வேறு காரணங்களுக்காக அவ்வப்போது, எடுக்க முடியாது. பிற்காலத்தில் நமக்கு மாதா மாதம் ஓய்வூதியம் வழங்குவதற்காக, நமது கணக்கில் உள்ள இருப்பு தொகையை சில குறிப்பிட்ட வழிகளில் முதலீடு செய்கிறார்கள். அதிலிருந்து கிடைக்கும் லாபம் நமக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

எந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்?:மூன்றுவகை முதலீட்ட திட்டங்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் நாம் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

முதலாவது முதலீட்டு திட்டம்: பங்குச் சந்தையில் முதலீடு. இது கூடுதல் லாபம் ஈட்டக்கூடியது. என்றாலும் இதில் கூடுதல் ரிஸ்க் உண்டு. எனவே இத்திட்டத்தை நாம் தேர்வு செய்தால், நமது தொகையில் 50 சதவீதம் மட்டுமே பங்கு சந்தையில் முதலீடு செய்வார்கள். மீதப்பணத்தை ரிஸ்க் இல்லாத இரண்டாவது அல்லது மூன்றாவது திட்டத்தில் முதலீடு செய்வார்கள்.

இரண்டாவது முதலீட்டு திட்டம்: நிலையான வருமானம் தரக்கூடிய கடன் பத்திரங்கள் அடங்கியது. இதில் மிதமான ரிஸ்க், மிதமான வருவாய் உண்டு.

மூன்றாவது முதலீட்டு திட்டம்: அரசு பத்திரங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டு பத்திரங்கள் ஆகியவை அடங்கும். இதில் வருவாய் குறைவு, ரிஸ்க் கிடையாது. எதில் நம் பணம் முதலீடு செய்யப்படவேண்டும் என்பதை நாமே தேர்வு செய்து ஆணைத்துக்கு தெரிவிக்கலாம். நம்மால் முடிவெடுக்க இயலாத பட்சத்தில் நிர்வாகிகளை நம் சார்பில் முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொள்ளலாம். அதுபோன்ற தருணங்களில் தமது வயது என்ன என்பதை கருத்தில் கொண்டு முதலீட்டு திட்டத்தை தேர்வு செய்வார்கள். வயது குறைவாக இருந்தால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றும், வயது அதிகரிக்க, அதிகரிக்க ரிஸ்கைத் தவிர்க்கும் வகையிலும் கவனத்துடன் தேர்வு செய்வார்கள். எந்த ஒரு கட்டத்திலும் அவர்கள் எடுக்கும் முடிவை நாம் மாற்றலாம். இந்த நிதியை தொழிலியல் ரீதியாக முதலீடு செய்து அங்கத்தினர்களுக்கு கூடுதல் லாபம் ஈட்டி, ஓய்வூதியத்தை அதிகரிக்கவேண்டும் என்பதே இத்திட்டத்தின் தலையாய நோக்கம். இதை கருத்தில் கொண்டு அனுபவமும், ஆற்றலும் பெற்ற ஆறு நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

செல்போன் ஆபத்துகள்…

உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கும் அதிகமானபேர் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் செல்போன் பயன்படுத்தும் போது அதில் இருந்து வெளிப்படும் `கதிர்வீச்சு’ காரணமாக புற்றுநோய், காதுநோய், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் வரும் அல்சீமர், பார்க்கின்சன் போன்ற நோய்கள் தாக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டது.

இருப்பினும் இது குறித்த ஆய்வுகள் எதுவும் ஆணித்தரமான முடிவுகளை வெளியிடவில்லை. எனவே இதுதொடர்பான ஆய்வுகளை நடத்த இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. இதன்படி இந்த நிறுவனம் உலக அளவில் இந்த ஆய்வுகளை நடத்தும்.

18 வயது முதல் 69 வயதுள்ளவர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்படுவார்கள். 10, 20 மற்றும் 30 ஆண்டுகள் என்ற அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு 10 ஆண்டு முடிவின் போதும் ஆய்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த ஆய்வுப்பணிக்காக . 450 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்க்டாப்பில் ஐகான்கள் அதிகமா?

மனம் போன போக்கில் டெஸ்க்டாப்பில் போல்டர்கள் மற்றும் பைல்களை சேவ் செய்து வைப்பது நம்மில் பலரிடையே இருக்கும் மோசமான பழக்கமாகும். இதனால், டெஸ்க்டாப்பில் தேவையற்ற ஐகான்கள் சிதறிக் கிடக்கும். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்தவரின் புகைப்படங்கள், அல்லது தன்னுடைய போட்டோக்களை, பூஜிக்கும் தெய்வத்தின் படங்களைத் திரையில் டெஸ்க் டாப்பில் வைத்திருப்பார்கள். இந்த தேவையற்ற ஐகான்கள், அந்தப் படங்களில் உள்ளவரின், முகத்தில், கண்களை அல்லது வேறு பகுதிகளின் மேலாக அமர்ந்து, படத்தையே அசிங்கப்ப்டுத்தும் வகையில் இருக்கும்.
இதில் பெரும்பாலான ஐகான்கள், பயன்படுத்தப்படாமலேயே (வெகுநாட்கள் அல்லது மாதங்கள்) இருக்கும். சிலர் டவுண்லோட் செய்கையில், எங்கு டவுண்லோட் செய்தோம் என்று தெரிய, டெஸ்க்டாப்பிலேயே அவற்றை சேவ் செய்து வைப்பார்கள். பின்னர், அவற்றை வேறு சார்ந்த டைரக்டரிக்குக் கொண்டு சென்றாலும், டெஸ்க்டாப்பில் இருக்கும் ஐகானை அழிக்க மறந்துவிடுவார்கள். இதுவும் டெஸ்க்டாப்பில் குவியும் ஐகான்களின் எண்ணிக்கைக்கு ஒரு காரணமாகும்.
இணையத்தில் உலாவுகையில், குறிப்பாக வேலை வாய்ப்பு தளங்களில் செல்கையில், சில தளங்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களைக் கேட்கும். இவற்றிற்கு உடனடியாகத் தகவல்களை அனுப்ப, கையாளப்படும் பைல்களை, டெஸ்க்டாப்பில் போட்டு வைப்பார்கள். பேங்க் எண் போன்ற பெர்சனல் தகவல்கள் அடங்கிய பைல், வேலை வாய்ப்பு தேடுவதற்கான ரெஸ்யூமே எனப்படும் தகவல் குறிப்புகள் கொண்ட பைல்களை டெஸ்க் டாப்பிலும் பலர் சேவ் செய்து வைக்கின்றனர். இதனாலும் டெக்ஸ்டாப், சிதறிய குப்பை கொண்ட தட்டு போல காட்சி அளிக்கும்.
இதனை எப்படி சீர் செய்திடலாம். டெஸ்க்டாப்பிலேயே சில போல்டர்களை உருவாக்கலாம். இதில் பயன்படுத்தாத ஐகான்களை Unused Icons என்ற போல்டரை உருவாக்கி போட்டு வைக்கலாம். பெர்சனல் தகவல்கள் உள்ள பைல்களை மற்றும் இன்டர்நெட் சார்ந்து இயக்கப்படும் பைல்களை, இன்டர்நெட் என்று பெயரிட்டு ஒரு போல்டரில் வைக்கலாம். அடிக்கடி, அன்றாடம் பயன்படுத்தும் பைல்களை, அப்டேட் என்ற பெயரில் ஒரு போல்டரில் வைக்கலாம். இதன் மூலம் ஐகான்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். டெஸ்க்டாப் சுத்தமாக, அழகாகக் காட்சி தருவதுடன், இந்த ஐகான்களுக்கான பைல்களைத் தேடி எடுப்பதும் விரைவாக நடைபெறும்.
ஜகான்கள் டெஸ்க்டாப்பில் குவியும் போது விண்டோஸ் இதற்கென ஒரு நினைவூட்டும் செய்தியைத் தரும். அதற்கென ஒரு மெசேஜைக் காட்டி இவற்றை எல்லாம் எடுத்துவிடவா என்று கேட்கும். நம்மில் பலர், அந்த மெசேஜை அலட்சியப் படுத்திவிடுவோம். ஏனென்றால், இந்த வேலை மிகவும் முக்கியமாக்கும் என்ற எண்ணம் தான் நம் நினைவில் ஓடும். பயன்படுத்துகிறோமோ இல்லையோ இந்த ஐகான்கள் அப்படியே இருக்கட்டுமே என விட்டுவிடுவோம். விண்டோஸ் கொடுக்கும் மெசேஜைப் பின்பற்றினால், அதுவாகவே வெகுநாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் ஐகான்களை ஒவ்வொன்றாகக் காட்டி வேண்டுமா, நீக்கவா என்று கேட்டு சரி செய்திடும். மேலே சொன்ன வழிகளில் ஒன்றைப் பின்பற்றி, நம் டெஸ்க்டாப்பினைச் சுத்தமாக வைத்திருப்பது என்றும் நல்லது.

கடவுளை வணங்குவது எப்படி?

பக்தர்களுக்கு அருள் தரும் கடவுளை வணங்கும் முறைகளையே `நமஸ்காரம்’ என்று வடமொழியில் சொல்வார்கள். வரம் தரும் தெய்வங்களையும், வயதுக்கு முத்த பெரியோர்களையும் எப்படி வணங்க வேண்டும்? என சாஸ்திரங்கள் தெளிவாக கூறியுள்ளன.

தலை, இரண்டு கை, இரண்டு காது, மோவாய், இரண்டு புஜங்கள் ஆகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் படும்படி கடவுளை வணங்க வேண்டும். இதைத் தான் `அஷ்டாங்க வணக்கம்’ என்று கூறுவர்.

இதன்படி பூமியில் தலையை வைத்து மார்பு பூமியில் படும்படி வலதுக் கையை முன்னும், இடதுக் கையை பின்னும் நேரே நீட்ட வேண்டும். பின் அதே முறையில் மடக்கி வலப்புயமும், இடப்புயமும் மண்ணில் படும்படி வயிற்றை நோக்கி நீட்டி, வலது புற காதினை முதலிலும், இடதுபுறக் காதினை பின்னரும் மண்ணிலே படும்படிச் செய்வதாகும்.

தலை, இரண்டு கை, இரண்டு முழந்தாள் என்ற ஐந்து உறுப்புகளும் நிலத்தில் படும்படி வணங்குவதற்கு `பஞ்சாங்க வணக்கம்’ என்று பெயர்.

ஆண்கள் அஷ்டாங்க வணக்கமும், பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் செய்ய வேண்டும். மற்றவை இரண்டு கைகளையும் கூப்பி கும்பிடுவதாகும்.

கடவுளை வணங்கும் முறைகள்

மும்முர்த்திகளை வணங்கும்போது, தலைக்கு மேல் ஒரு அடி தூரம் உயர்த்திக் கும்பிட வேண்டும். மற்ற கடவுள்கள்களுக்கு தலையின் மேல் கைகூப்பி வணங்க வேண்டும். குருவை வணங்கும்போது நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசர், அதிகாரி, தந்தை இவர்களை வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். அந்தணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தாயை வணங்கும் போது வயிற்றில் கைகூப்பி வணங்க வேண்டும். தாய், தந்தை, குரு, தெய்வங் களுக்கு மட்டும் அஷ்டாங்க வணக்கம் செலுத்தலாம்.