அதிகப் பயன்மிக்க புதிய ஓய்வூதியத் திட்டம்

புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் அறிமுகமானது. ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இதன் நடைமுறை பற்றி பலருக்கு இன்னும் தெரியவில்லை. இங்கே அது பற்றிய இந்த அறிமுகம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குமே… இந்தியாவில் அமைப்பு சாரத தொழிலாளர்கள், சுய தொழில் புரிவோர், சிறுவணிகம், விவசாயம் செய்வோர் ஆகியவர்களின் எண்ணிக்கை, 90 கோடியே, 90 லட்சம்போர், இவர்களுக்கு அமைப்பு ரீதியிலான ஓய்வூதிய திட்டம் கிடையாது. எனவே, கடந்த ஓராண்டாகத்தான் இவர்களுக்கெல்லாம் பயன்படத்தக்க ஒரு ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பெயர் தான் புதிய ஓய்வூதிய நிதி நெறிமுறை மற்றும் மேம்பாடு என்னும் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸூக்கு ஒரு ஐ.ஆர்.டி.ஏ. இருப்பது போல்,

யாரெல்லாம் இதில் சேரலாம்?: 18 வயதுமுதல் 55 வயது வரையில் உள்ள எல்லா இந்தியர்களும் சேரலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இதில் சேரலாம்.

இந்த திட்டத்தில் எப்படி சேருவது எப்படி? : இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு 22 அமைப்புகள் நியமிக்கப்பட்டுள்ளன. அவை, பொதுத்துறை மற்றும் பெரிய தனியார் துறை வங்கிகள் உதாரணமாக பாரத ஸ்டேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா போன்ற அரசுடமை மற்றும் பொதுத்துறை வங்கிகள், மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ஆக்ஸிஸ் பேங்க் போன்ற தனியார் வங்கிகள் ஆகும். இந்த வங்கிகளின் கிளைகளை அணுகி, உரிய பவிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தால் விண்ணப்பதாரரின் பெயர் பதிவு செய்யப்படும். அதை அடுத்து, ஒரு நிரந்தரக்கணக்கு எண் வழங்கப்படுகிறது. அத்துடன் தொலைபேசி மற்றும் இணைய தளத்தின் வாயிலாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக ஒரு குறியீடு தரப்படுகிறது. எனவே ஒவ்வொரு காரியத்துக்கும் நேரில் செல்லத்தேவையில்லை. நாம் கணக்கில் செலுத்த வேண்டிய தொகைக்கு உச்ச வரம்பு இல்லை. ஆனால் குறைந்த பட்சம் மாதம் ரூ.500 அல்லது வருடத்திற்கு ரூ.6000 என்ற அளவில் செலுத்த வேண்டும். இது தான் ஓய்வூதியம் பெறுவதற்காக நாம் செய்ய வேண்டிய குறைந்த பட்ச முதலீடு, இந்த தொகையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தவணைமுறையில் செலுத்தலாம். தொகையை உரிய காலத்தில் கட்ட தவறினால், நிலுவைத் தொகையுடன், அபராதத்தொகையாக ரூ.100 செலுத்த வேண்டும். இந்த தொகையை, வேறு காரணங்களுக்காக அவ்வப்போது, எடுக்க முடியாது. பிற்காலத்தில் நமக்கு மாதா மாதம் ஓய்வூதியம் வழங்குவதற்காக, நமது கணக்கில் உள்ள இருப்பு தொகையை சில குறிப்பிட்ட வழிகளில் முதலீடு செய்கிறார்கள். அதிலிருந்து கிடைக்கும் லாபம் நமக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

எந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்?:மூன்றுவகை முதலீட்ட திட்டங்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் நாம் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

முதலாவது முதலீட்டு திட்டம்: பங்குச் சந்தையில் முதலீடு. இது கூடுதல் லாபம் ஈட்டக்கூடியது. என்றாலும் இதில் கூடுதல் ரிஸ்க் உண்டு. எனவே இத்திட்டத்தை நாம் தேர்வு செய்தால், நமது தொகையில் 50 சதவீதம் மட்டுமே பங்கு சந்தையில் முதலீடு செய்வார்கள். மீதப்பணத்தை ரிஸ்க் இல்லாத இரண்டாவது அல்லது மூன்றாவது திட்டத்தில் முதலீடு செய்வார்கள்.

இரண்டாவது முதலீட்டு திட்டம்: நிலையான வருமானம் தரக்கூடிய கடன் பத்திரங்கள் அடங்கியது. இதில் மிதமான ரிஸ்க், மிதமான வருவாய் உண்டு.

மூன்றாவது முதலீட்டு திட்டம்: அரசு பத்திரங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டு பத்திரங்கள் ஆகியவை அடங்கும். இதில் வருவாய் குறைவு, ரிஸ்க் கிடையாது. எதில் நம் பணம் முதலீடு செய்யப்படவேண்டும் என்பதை நாமே தேர்வு செய்து ஆணைத்துக்கு தெரிவிக்கலாம். நம்மால் முடிவெடுக்க இயலாத பட்சத்தில் நிர்வாகிகளை நம் சார்பில் முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொள்ளலாம். அதுபோன்ற தருணங்களில் தமது வயது என்ன என்பதை கருத்தில் கொண்டு முதலீட்டு திட்டத்தை தேர்வு செய்வார்கள். வயது குறைவாக இருந்தால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றும், வயது அதிகரிக்க, அதிகரிக்க ரிஸ்கைத் தவிர்க்கும் வகையிலும் கவனத்துடன் தேர்வு செய்வார்கள். எந்த ஒரு கட்டத்திலும் அவர்கள் எடுக்கும் முடிவை நாம் மாற்றலாம். இந்த நிதியை தொழிலியல் ரீதியாக முதலீடு செய்து அங்கத்தினர்களுக்கு கூடுதல் லாபம் ஈட்டி, ஓய்வூதியத்தை அதிகரிக்கவேண்டும் என்பதே இத்திட்டத்தின் தலையாய நோக்கம். இதை கருத்தில் கொண்டு அனுபவமும், ஆற்றலும் பெற்ற ஆறு நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

%d bloggers like this: