கோடையில் ஏற்படும் இம்சை!

கோடைகாலத்தில் அடிக்கடி ஏற்படும் அதீத தாகம், வாய் மற்றும் நாக்கு வறண்டு போதல், தோலிலும் வறட்சி, அடிவயிற்றில் வலி என இவையெல்லாம் வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கான அறிகுறி. தொடர்ந்து வயிற்றை கலக்கி அடிக்கடி டாய்லெட் போக வேண்டியதிருக்கும்.

இரண்டு நாளைக்கு இந்த இம்சை தொடர்வதால், உடம்பில் உள்ள தாது உப்புகள் குறைந்து, நீர் இழப்பு அதிகமாகி, அடித்துப் போட்டது போல் உடம்பு சோர்வாகி விடும். இந்த நிலை ஏற்பட்டால், முதலில் நாம் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மசாலா பொருட்கள், வறுவல் அயிட்டங்கள், பொரித்த உணவுகள் மற்றும் பால் ஆகியவற்றை தொடவே கூடாது. சூடு ஆறிய வெந்நீரை அடிக்கடி குடிக்கவும். திரவ உணவுகள் நல்லது. நார்ச்சத்து இல்லாத பழங்கள், ஜூஸ், இளநீர், மோர், குளுக்கோஸ், அரிசி கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி ஆகியவற்றை சாப்பிட்டாலே வயிற்றுப்போக்கு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிடும்.

%d bloggers like this: