Advertisements

Daily Archives: மே 15th, 2010

ஊனமுற்றவர்களுக்கு `மறுவாழ்வு’

விபத்தில் சிக்கி கை, கால் துண்டிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் துன்பம் கொடுமையானது. இதுபோல விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் அஜீஸ் அபூபக்கர் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

பல்லியின் வால் துண்டிக்கப்பட்டாலும் அது கொஞ்ச நாளில் மீண்டும்
வளர்ந்துவிடும். அதுபோல சில உயிரினங்களின் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும். இதுபோலவே பிளானேரியன் எனப்படும் புழுவின் தலை துண்டிக்கப்பட்டாலும் அது இறந்துவிடுவதில்லை. கொஞ்ச நாளில் அதன்தலை வளர்ந்துவிடும். தலைமட்டுமின்றி அந்த புழுவின் முளை சேதம் அடைந்தாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும்.

இப்படி வித்தியாசமான உடல் அமைப்பு கொண்ட இந்த புழுவை அடிப்படையாக வைத்து டாக்டர் அஜீஸ் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியது. பிளானேரியன் புழுவின் உடலில் ஏற்படும் இந்த மாற்றத்துக்கு காரணமான ஜீன் எது என்பதை முதலில் கண்டுபிடித்தனர். `ஸ்மெட் பெர்ப்’ எனப்படும் இந்த ஜீன் தான் துண்டிக்கப்பட்ட தலை, சேதம் அடைந்த முளை ஆகியவற்றையும் மீண்டும் வளர வைக்கிறது என்பதை கண்டுபிடித்தனர்.

தற்போது இது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடக்கிறது. இதே ஜீன் மனித உடலில் உள்ளதா? அல்லது அதுபோன்ற ஜீன் மனித உடலில் செலுத்தப்படும் போது புழுவின் உடலில் நடந்தது போல துண்டிக்கப்பட்ட உடல்உறுப்புகள் தானாகவே வளருமா? என்பது தான் அடுத்தகட்ட ஆய்வுகள் ஆகும்.

இந்த ஆய்வுகள் வெற்றி பெறும் போது உடல்ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு பெற முடியும். விபத்தில் உடல்உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இழந்த உடல் உறுப்புகளை சில மாதங்களில் பெறமுடியும்.

Advertisements

இன்டர்நெட் வழியே இலவச எஸ்.எம்.எஸ்.

மொபைல் போன் பழக்கம் வந்த நாள் தொட்டு, அதன் எஸ்.எம்.எஸ். வழியே தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, அனைவரின் அன்றாட உயிர் மூச்சு போல ஆகிவிட்டது. இதனாலேயே மொபைல் சேவை தரும் நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ்., ஒரு பைசா எஸ்.எம்.எஸ். எனப் பலவகையான திட்டங்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்டர்நெட் வழியே இலவசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியை WAY 2 SMS என்ற இணைய தளம் தருகிறது. இந்த தளத்தின் முகவரி http://wwwb.way2sms.com.
இதனை அணுகி, முதலில் நம் மொபைல் எண், நமக்கான பெயர் மற்றும் இமெயில் முகவரியினைக் கொடுத்துப் பதிந்து கொள்ள வேண்டும். அதன் பின் நாம் கொடுத்த மொபைல் போனுக்கு நம் அக்கவுண்ட்டுக்கான பாஸ்வேர்ட், ஒரு நான்கு இலக்க எண்ணாகத் தரப்படும். நம் இமெயில் முகவரியுடன் இந்த பாஸ்வேர்ட் எண்ணையும் தந்து அக்கவுண்ட்டுக்குள் நுழைய வேண்டும். அங்கு நாம் எஸ்.எம்.எஸ். கொடுக்க விரும்பும் மொபைல் எண்ணையும், எஸ்.எம்.எஸ். மூலம் தரப்படும் செய்தியையும் டைப் செய்து, என்டர் அழுத்தினால், செய்தி குறிப்பிட்ட போனுக்கு அனுப்பப்படும். அதிக பட்சம் 10 விநாடி நேரத்தில் செய்தி அனுப்பப்படும். செய்தி போனை அடையும் போது அதற்கான அடையாளமான அலர்ட் பஸ்ஸர் கொடுக்கப்படும். இதனை நாம் விரும்பும் நபரிடமிருந்து வரும்போது மட்டும் தருமாறு செட் செய்திடலாம். அல்லது எப்போது இந்த அலர்ட் செய்தி வேண்டுமோ அந்த வேளையில் மட்டும் கிடைக்கும்படி செட் செய்திடலாம். மேலும் ஒருவருக்கு இமெயில் அனுப்புகையில் அனுப்பும் தகவலை எஸ்.எம்.எஸ். மூலம் அவருக்கு அனுப்பலாம். அதே தளத்தில் நாம் அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்ப விரும்பும் எண்களையும், அவற்றிற்கான பெயர்களையும், மொபைல் போனில் உள்ள அட்ரஸ் புக் மாதிரி பதிந்து வைக்கலாம். இதன் மூலம் நாம் தொடர்ந்து அனுப்ப முயற்சிக்கையில் ஒவ்வொரு முறையும், தொலைபேசி எண்ணையும், பெயரையும் டைப் செய்திடும் வேலைப் பளு குறையும். மேலும் நாம் அனுப்பும் செய்திகளை சேவ் செய்து அனுப்பப்பட்ட செய்திகளாக (Sent SMS) வைத்துக் கொள்ளும். செய்திகளை டைப் செய்து, அவற்றை அனுப்ப வேண்டிய நாள், நேரம் குறித்து சேவ் செய்து வைத்தால், குறிப்பிட்ட நாளில் அனுப்பி வைக்கும்.
மேலும் குறிப்பிட்ட ஒரு மொபைல் போன் எண்ணைத் தந்து அந்த போன் எந்த ஊரில் உள்ளது என்று கேட்டால், சிறிய மேப்புடன், ஊரைக் காட்டும். அந்த போனுக்கான மெயில் சர்வீஸ் தரும் நிறுவனத்தின் பெயரையும் தரும்.
இதே தளத்தில் இந்த வசதியைப் பயன்படுத்தி, குழு ஒன்றுக்கான எஸ்.எம்.எஸ்.செய்தியை அனுப்பலாம். இதே தளத்தில் இருந்தவாறே, உங்கள் ஜிடாக் (GTalk) மற்றும் யாஹூ! மெசஞ்சர் (Yahoo! Messenger) அக்கவுண்ட்களில் சேட் செய்திடலாம். இவ்வாறு எஸ்.எம்.எஸ்., இமெயில் மற்றும் சேட் ஆகிய அனைத்தும் ஒரே தளத்தில் கிடைக்கின்றன.

கர்ப்ப கால உணவு

கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். `முந்தைய நாள் சமைத்த உணவு மீதமாகி விட்டதே’ என்ற கவலையில் பழைய சாப்பாட்டை சாப்பிட்டு விடக்கூடாது. எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். எண்ணை பசை, ஈரபசை இல்லாத வறண்ட உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. புளிப்பு, கார உணவையும் சாப்பிட வேண்டாம்.

மனதுக்கு பிடித்த இனிப்பும், நெய்யும் கலந்த உணவை சாப்பிடலாம். ஆனால், இது பசியைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். இரவு சாப்பாட்டை சீக்கிரமாக முடித்து படுக்கைக்குச் சென்று விட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் என்னென்ன சாப்பிடலாம்? முதல் மாதத்தில் சத்துள்ள உணவோடு, காலை, மாலை என இருவேளைகளில் காய்ச்சிய பாலை பருக வேண்டும். இரண்டாவது மாதத்தில், பாலில் சுத்தம் செய்த உலர் திராட்சைகளை போட்டுக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். முன்றாவது மாதத்தில், காய்ச்சிய பாலோடு சிறிது நெய், சில துளிகள் தேன் கலந்து குடிக்க வேண்டும். நான்காவது மாதத்தில், கரு தன்னை ஸ்திரபடுத்திக் கொள்வதால், தாய்க்கு உடல் பாரம் அதிகமாக இருக்கும். அப்போது, ஒரு டம்ளர் பாலுக்கு 12 கிராம் என்ற அளவில் காய்ச்சிய பாலில் வெண்ணை கலந்து குடிக்க வேண்டும். ஐந்தாவது மாதத்தில் இருந்து ஏழாவது மாதம் வரை உப்பு, கொழுப்பு, குறைவான இனிப்பு நிறைந்த சத்தான உணவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இருவேளைகளிலும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடலாம். வெறும் நெய் சாப்பிட முடியாதவர்கள் பத்து உலர் திராட்சைகளை அதில் கலந்து சாப்பிடலாம். ஒன்பதாவது மாதம் பால் கஞ்சியில் நெய் கலந்து குடிக்க வேண்டும்.

முதல் மாதத்திலிருந்து ஒன்பதாவது மாதம் வரை இதே போல் சாப்பிட்டு வந்தால், கர்பிணிக்கு கருத்தரித்த காலத்தில் கருப்பை, வயிறு, இடுப்பு, முதுகு ஆகிய பகுதிகள் மென்மையாக இருக்கும்.

இந்த உணவு முறை, ஆயுர்வேதம் சார்ந்தது ஆகும்.