Advertisements

Daily Archives: மே 19th, 2010

சுகாதார `ரோபோ’

எந்திர மனிதனான ரோபோக்களின் பயன்பாடு பெருகி உள்ளது. மனிதனைவிட சுறுசுறுப்பாக கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடித்து விடுவதால் எல்லா தரப்பு பணிகளிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தற்போது குப்பைகளை சேகரிக்கும் சுகாதாரப் பணியிலும் ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

குப்பை இருக்கும் வீடுகளுக்கு தானே சென்று குப்பைகளை சேகரிக்கும் வகையில் இந்த ரோபோ குப்பைத் தொட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் இது அறிமுகமாகி இருக்கிறது. இந்த தானியங்கி குப்பைத் தொட்டிகள் பேட்டரியில் இயங்கக்கூடியவை. ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் நவீன சென்சாரை இணைத்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறையினர் உங்களது செல்போன் எண்ணை உங்கள் பகுதி குப்பைத் தொட்டியில் பதிவு செய்துவிடுவார்கள். அதன்பிறகு வீட்டில் குப்பை சேர்ந்தவுடன் நீங்கள் ஒரு போன் செய்தால் குப்பைத் தொட்டி ஆளின்றி தானே வீடு தேடி வந்துவிடும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வைத்திருந்து கழிவுகளை அதில் உள்ள தொட்டியில் கொட்டிவிட வேண்டியதுதான்.

இந்த ரோபோக்கள் குப்பையை சேகரிப்பதோடு மறுசுழற்சியும் செய்துவிடும். தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரு குப்பைத் தொட்டி 35 கிலோ குப்பையை மறுசுழற்சி செய்யும் தன்மையுடையது. மணிக்கு 2 மைல் வேகத்தில் இயங்கும் இந்த குப்பைத் தொட்டியின் பேட்டரி 10 மைல் வரை தாக்குப்பிடிக்கும். மக்கள் முகம் சுழிக்காமல் குப்பைத் தொட்டியை அணுகும் வகையில் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த திட்டத்தில் ஒரே ஒரு குறைதான். அவரவர் நினைத்த நேரத்துக்கு குப்பைத் தொட்டியை அழைக்க முடியாது. அதற்காக நேரம் நிர்ணயித்திருக்கிறார்கள். அப்போது அந்த எல்லைக்கு உட்பட்டவர்கள் குப்பைத் தொட்டியை கூப்பிடலாம்!

Advertisements

உங்கள் பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்

உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அடிப்படையில் மனிதர்களின் குணங்கள் வேறுபட்டிருக்கும். பார்வையில், கொள்கையில், ரசனையில், பேச்சில், நடத்தையில், என்று எல்லாமே ஒன்று போல் இருப்பதில்லை. நாம் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்றால், ஏன் வெவ்வேறு விதமான உடைகள் உருவாக்கபடுகின்றன? வெவ்வேறு சுவை உணவுகள் சமைக்கபடுகின்றன… வெவ்வேறு கலைகள் உருவாக்கபடுகின்றன?!

நாம் விரும்பும் ஒரு விஷயம்… அடுத்தவருக்கு வெறுபாய் அமையும். ஒருவரின் தனித்தன்மை அடுத்தவரிடம் இருப்பதில்லை. தம்முடைய பலம் மற்றும் பலவீனத்தில் மனிதர்கள் வேறுபடுகின்றனர்.

இதை நாம் மிகச் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே ஆற்றல் மிக்க விதத்தில் செயல்பட முடியும். ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க… நம்முடைய திறமையை வெளிபடுத்தவும், நமது திறமைக்கேற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அது உதவும்.

நம்மிடம் உள்ள சிறப்பான திறனை, நாம் தெரிந்து கொள்வது அவசியம். நமக்கென்று ஒரு செயலை செய்யும் ஸ்டைல் இருக்கும். அதை நாம் கண்டறிந்தால் மட்டுமே எந்த வேலையுடனும் நாம் நம்மை பொருத்திக் கொள்ள முடியும்.

நம்முடைய செயல்முறைதான் ஒன்றை எளிதாக்குகிறது… அல்லது கடினமாக்குகிறது. செயல்முறையை பொறுத்தே ஒன்றை முன்கூட்டியோ, அல்லது தாமதமாகவோ செய்ய முடிகிறது.

தொழில் அல்லது வேலையில் பலங்கள் மற்றும் பலவீனங்கள் பற்றிய மதிப்பீடு கண்டிப்பாக உதவும். முதலில் உங்களுடைய மிக பெரிய பலம் எது என்று கண்டுபிடிங்கள். செயலாற்றும் திறமை, உயர் நுணுக்க அறிவு, ஆர்வங்கள் ஆகியவற்றில் உங்களுடைய பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.அதேபோல், உங்களுடைய பண்பு நலன்கள், திறன்களை பட்டியலிடுங்கள். படிப்பில், வேலையில், சொந்த வாழ்க்கையில் உங்களுடைய பண்பு நலன்கள் எந்தளவுக்கு உங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன என்பதை ஆராயுங்கள்.

உங்களுக்கு மிக பெரிய சவாலாக இருக்கும் விஷயம் எது என்பதை அறிந்து, அதை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள்.

` உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..’ என்கிறார்கள். முதலில் உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்யுங்கள்! நீங்கள் கற்பனையாளரா..? அல்லது எதையும் அணுகி ஆராய்பவரா..? அல்லது எந்திரத்தனமானவரா..? என்பதை அறிந்து அதற்கான தொழிலை அல்லது வேலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

உடல் நன்றாக இல்லாவிட்டால் மனம் பாதிக்கபடும். மனம் சீராக இல்லாவிட்டால் உடல் பாதிக்கபடும். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் வேலையை செய்து முடிக்க இயலும். தன்னிடம் உள்ள திறமைகளை, செயல் திறனை முழுமையாக வெளிபடுத்த ஆரோக்கியம் அவசியம்.

ஒரு வேலையை நீங்கள் தள்ளி போடுவது அதன் பின்னர், தொடர்ச்சியாக பல வேலைகளைக் கிடப்பில் போடும்படி செய்து விடும். உங்கள் சுமைதான் மேலும் அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். செயல் தாமதத்தால் விரும்பத்தகாத விளைவுகள், இழப்புகள் உண்டாகும்.

இன்றைக்கே முடிக்கக் கூடிய வேலையை நாளைக்கு என்று தள்ளி போட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் வேலையைத் தள்ளி போடுகிற பழக்கம் நமக்கு இருக்கிறது. ஐந்து நிமிடம் செய்ய வேண்டிய வேலையை தள்ளி போடுவதால் இறுதியில் அந்த வேலையின் மீது வெறுப்பு ஏற்படும். இதனால் அடுத்தவர்கள் நம்மீது வைத்திருக்கும் அபிப்ராயம் கெட்டுவிடும் சூழல் ஏற்படும்.

மூட்டு வலிக்கு முட்டுக்கட்டை

“நின்னா உட்கார முடியல, உட்கார்ந்தா நிக்க முடியல” என்று கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கூறக்கேட்டிருப்போம். அதற்கு காரணம் வேறொன்றுமில்லை, வயதானவர்களுக்கு எலும்பில் தேய்மானம் ஏற்படும். அதனால், அவர்களுக்கு மூட்டுவலி ஏற்படும்.

பொதுவாக 40 வயதைத் தாண்டி விட்டாலே வந்துவிடும் தொல்லை தான் இந்த மூட்டுவலி. இதில் பலவகைகள் உள்ளன. இருந்தபோதும், அவற்றில் இரண்டு வகை மூட்டுவலிகளே முக்கியமானவை. ஒன்று, சோர்வுடன் கூடிய மூட்டுவாதம். இதற்கு சோர்வை போக்கும் மருந்துகளுடன் வாழ்க்கை முறையிலும், உணவு பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொடு வர வேண்டும்.

மற்றொன்று, சோர்வில்லாத மூட்டுவாதம். இது மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகளை பாதிக்கிறது. இந்த எலும்பைத்தான் நாம் அதிகமாக

பயன்படுத்துகிறோம். எடைக்கட்டுபாடு மற்றும் முறையான உடற்பயிற்சிகள் முலம் இதை சரி செய்யலாம்.

காரணங்கள் சவ்வு அல்லது அதில் சுரக்கும் நீர் அல்லது வெளியில் சுற்றியுள்ள தசைநார்கள் காரணமாக இருக்கலாம். உடலில் உப்புச்சத்து குறைந்தாலும், அதிகமானாலும் சவ்வு பாதிக்கபடும். அதனால், மூட்டுவலி ஏற்படும். சில கிருமிகள் கூட மூட்டுவலியை உண்டாக்கி விடும். பால்வினை நோயான மேகவெட்டையாலும் மூட்டுவலி ஏற்படும். தேவைக்கதிகமான கொழுப்புச்சத்து உடலில் சேர்வதாலும், அதிகபடியான நீர் சேர்வதாலும் உடல் எடை அதிகரிக்கும். சிறுநீரகம் திறன் குறைவதும் ஒரு காரணம். எலும்புத் தேய்மானம் சிலருக்கு இயற்கையாகவே இருக்கிறது. அறுவை சிகிச்சையின் மூலம் கருப்பை அகற்றிய பெண்களுக்கும் எலும்பு தேய்ந்து மூட்டுவலி வர வாய்புள்ளது. ஒரு சில ஹார்மோன்களும் இந்த பாதிப்பிற்கு காரணமாகின்றன. தரையில் சம்மணம் போட்டு உட்கார்வதும், முழந்தாள் போடுவதும் முழங்கால், இடுப்பு வலிகளை அதிகமாக்கும். தலைக்கு மேல் கைகளை வைத்துக் கொண்டு உறங்கக்கூடாது. அது தோள்களுக்கு வலியைக் கொடுக்கும்.

என்ன செய்யலாம்? தைலம் தேய்ப்பது, ஒத்தடம் போடுவது நிரந்தர தீர்வைத் தருவதில்லை. ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளும் தற்காலிகத் தீர்வையே தரும். உடல் எடையைக் குறைக்க வேண்டும். சர்க்கரை, உப்பை குறைக்க வேண்டும். வாயுத்தொல்லை, மலச்சிக்கல் இருக்கக்கூடாது. வெயிலில் அலைவதும், தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும், மலத்தை அடக்குவதும், உணவுடன் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும் இருப்பதால் தான் மலச்சிக்கல் உருவாகிறது. காபி, டீ குடிப்பதை நிறுத்த வேண்டும். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். சிறுசிறு உடற்பயிற்சிகளை முடிந்தளவிற்கு செய்து வாருங்கள். லேசான எடை தூக்குதல், சைக்கிள் பெடலிங் போன்ற பயிற்சிகளை செய்யலாம். மீன் வகைகள், நார்படங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூட்டுவலி அதிகமாக இருக்கும் போது ஓய்வு அவசியம். மனஇறுக்கம் உள்ளவர்கள் தான் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். இசை கேட்பது, தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதியாக்குங்கள். பெண்கள் எடைக்குறைபோடு, நடனம் கற்பது நல்ல சிகிச்சை முறையாகும். கழுத்துபட்டை அணிதல், கையைத் தாங்கும் கட்டு ஆகியவை வலி அல்லது காயத்தில் நல்ல பாதுகாப்பை அளிக்கும். ஐஸ்பேக் அல்லது ஹீட்பேக் வைபதில் குணம் தெரியும். ஆனால், பத்து நிமிடத்திற்கு மேல் அதை வைக்கக் கூடாது. மெக்கானிக் சம்பந்தமான வேலைகளைச் செய்யும்போது உறை அணிவதால் கை முட்டுகளுக்கு அதிக வேலை கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. பாதங்களுக்கேற்ற வகையில் பொருத்தமான காலணிகளை தேர்வு செய்து அணியுங்கள்.