Daily Archives: மே 20th, 2010

மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வா…?

அரபு நாட்டைச் சேர்ந்த பெண், முதல் முறையாக மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவர் மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் என பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், மிஸ் யு.எஸ்.ஏ.,விற்கு சிக்கலோ சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் பிறந்தவர் ரீமா பாக்கி(24). இவர், தற்போது மிஸ் யு.எஸ்.ஏ., (அமெரிக்கா)வாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே அங்குள்ள பத்திரிகைகள் அவரை தேர்வு செய்தது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.அவர் ஏற்கனவே மதுபான பாரில் ஒவ்வொரு ஆடையாக களைந்து முடிவில் நிர்வாணமாக ஆடும் போல் டான்சராக இருந்தவர் என்பது தான் பத்திரிகைகளின் கோபத்திற்கு காரணம்.இதுகுறித்து அங்குள்ள டெய்லி மெயில் உட்பட பல நாளிதழ்களும் படத்துடன் செய்தி வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளன. இவர், 2007ம் ஆண்டு டெட்டராய்ட் நகரில் நடந்த ஸ்டிரீப் டான்சில் பங்கேற்ற படங்கள் தான் வெளியாகி உள்ளன.

இதையடுத்து பத்திரிகைகளின் கண்டனம் குறித்து தேர்வு கமிட்டி ஆய்வு செய்து வருகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உலக அழகிப் போட்டியில் அமெரிக்கா சார்பில் ரீமா பங்கேற்பது சிரமமானதாகி விடும். இவ்வாண்டு லாஸ்வேகாஸ் நகரில் நடக்க இருக்கும் அழகிப் போட்டியிலும் அமெரிக்கா சார்பாக ரீமாவை அனுப்புவது இயலாததாகி விடும்.மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு வைரம் பதித்த கிரீடமும், நியூயார்க் நகரில் ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் சகல வசதிகளுடன் கூடிய வீடும், உதவித் தொகையும், சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.லெபனான் நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய அவரது பெற்றோர், டயர்போன் நகரில் வசித்து வருகின்றனர்.

புரொகிராம் அப்டேட்; கவனம் தேவை

நாம் பயன்படுத்தும் பல புரோகிராம் தொகுப்புகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகின்றன. ஏற்கனவே உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன; அல்லது புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு கிடைக்கின்றன. ஒரு சில புரோகிராம்களுக்கு மட்டுமே, இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அறிவிப்புகள் தரப்படுகின்றன. எனவே முழுவதுமாக அப்டேட்டட் ஆக இருக்க விரும்பினால், நாம் தான் அந்த புரோகிராமின் இணைய தளம் சென்று அறிந்து அப்டேட் செய்திட வேண்டியுள்ளது.
இந்த அப்டேட் விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. சில மால்வேர் புரோகிராம்கள், குயிக் டைம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், தண்டர்பேர்ட் போன்ற புரோகிராம்களின் பெயரைப் பயன்படுத்தி, அவற்றுக்கான அப்டேட்கள் உள்ளதாகவும், ஏன் நீங்கள் அவற்றை மேற்கொள்ளக் கூடாது எனவும் ஆன பாப் அப் விண்டோ செய்திகளைத் தருகின்றன. குறிப்பிட்ட புரோகிராம் தந்த நிறுவனத்தின் பெயர் மற்றும் இலச்சினைகளைப் பயன்படுத்தி, இந்த விண்டோ தரப்படுவதால், நாம் அவற்றை உண்மை என நம்பி, அங்கு தரப்பட்டுள்ள லிங்க்கில் கிளிக் செய்துவிடுவோம். சில நொடிகளில் கம்ப்யூட்டர் இயக்கம் முடக்கப்பட்டு கிராஷ் ஆகும். காரணம், லிங்க்கில் கிளிக் செய்தவுடன் வைரஸ் அல்லது வேறு மால்வேர் புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டரில் இறங்கி அதன் நாச வேலைகளைத் தொடங்குவதே ஆகும்.
இது போன்ற சூழ்நிலைகள் நமக்கு அவ்வப்போது அறிவிக்கப்படுவதால், ‘நாம் அப்டேட் செய்திடவே வேண்டாம், உள்ளதே போதும்’ என்று இருந்து விடுகிறோம். எனினும் அண்மைக் காலத்தில் அப்டேட் செய்யப்பட்ட சில பிரபலமான புரோகிராம்கள் குறித்து அறிய முடிந்தது. அவற்றை இங்கு காணலாம்.
1. யாஹூ! மெசஞ்சர் தன் புதிய பதிப்பான 10.0.0,1264 பதிப்பை சென்ற மே 8 அன்று வெளியிட்டுள்ளது. யாஹு தளத்திலும் http://dowload.yimg.com என்ற தளத்திலும் இதனைப் பெறலாம். பைல் அளவு 16.5 எம்.பி. அனைத்து விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளிலும் பயன்படுத்தலாம். இதில் உள்ள புதிய மற்றும் பழைய வசதிகள் குறித்து அறிய http://messenger. yahoo.com/features/ என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்தினைக் காணவும்.
2. Anti Trojan Elite 4.9.7: மால்வேர் புரோகிராம்களை நீக்க உதவும் இந்த புரோகிராம் சென்ற மே 8 அன்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. http://www.removetrojan.com/ என்ற இணைய முகவரியில் உள்ள தளத்தில் இதனைக் கண்டு டவுண்லோட் அல்லது அப்டேட் செய்திடவும். இந்த புரோகிராம் நல்லதொரு பயர்வாலைத் தருவதுடன், மால்வேர் அல்லது கீ லாக்கர் போன்ற புரோகிராம்களைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து நீக்குகிறது. இந்த அப்டேட் மூலம், இந்த புரோகிராம் நீக்கக் கூடிய ட்ரோஜன் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
3. Avast Free Antivirus 5.0.545 : இந்த புரோகிராமினைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. http://download69.avast.com என்ற தளத்தில் இதனைப் பெறலாம். வைரஸ்களுக்கு எதிரான இலவச புரோகிராம் வரிசையில் முதலிடம் பெற்றுள்ள இந்த புரோகிராம் குறித்து இந்த பகுதியில் பலமுறை தகவல்கள் தரப்பட்டுள்ளன.

டிஜிட்டல் தடங்களை அழித்துவிடுங்கள்

இணையத்தில் நாம் எப்போது உலா வந்தாலும், எங்காவது நம்முடைய தனிப்பட்ட தகவல் குறிப்புகளைப் பதிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு பதித்த குறிப்புகளை இன்டர்நெட் என்றும் மறப்பதில்லை. அப்படியானால், அவற்றை மற்றவர்கள் பார்த்து அறிந்திடும் வாய்ப்புகள் உண்டா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. ஆம், நிச்சயமாய் அவற்றை எங்காவது பலர் அறியும் நிகழ்வுகள் ஏற்படலாம். அவற்றை நாம் நீக்க முடியாதா? திரும்பப் பெற முடியாதா? இந்த கேள்விகளுக்குப் பதில் முடியும் என்பதே. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
இன்டர்நெட் எப்போதும் தன்னிடம் வந்த தகவல்களை மறப்பதே இல்லை. மறைப்பதும் இல்லை.நாம் அளிக்கும் தகவல்களின் டிஜிட்டல் எதிரொலி எங்காவது கேட்டுக் கொண்டு தான் இருக்கும். சர்ச் இஞ்சின்கள், இணைய தளங்களூடே ஊர்ந்து சென்று இந்த தகவல்களைத் தேடி அறிந்து தருகின்றன. கிடைக்கும் கடைசி பிட் தகவல் வரை சேர்த்து, அவற்றை வரிசைப்படுத்தி தருகின்றன.
நாம் பல தளங்களில் நம்மைப் பற்றிய தகவல்களை அளிக்கிறோம். பல வேளைகளில் நாம் விரும்பாத தளங்களிலும், மீண்டும் காண மாட்டோம் என்று எண்ணும் தளங்களில் கூட இவற்றைத் தருகிறோம்.
நம் தகவல்கள் குறித்த பயனாளர் ஒப்பந்தம் (User Agreement and Privacy Statements) அதிர்ஷ்டவசமாக, நமக்கு ஒரு மெல்லிய பாதுகாப்பு அளிக்கிறது. நம்முடைய பெர்சனல் தகவல்களைக் கொண்டு, ஒரு இணைய நிறுவனம் என்னவெல்லாம் செய்திடும் அல்லது செய்யாது என்று தெளிவாகத் தருகிறது.
பேஸ்புக் (Facebook) தளத்தில் 50 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஏன், நீங்கள் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் அளித்திடும் ஒப்பந்தக் குறிப்பினை எப்போதாவது முழுவதும் படித்திருக்கிறீர்களா? நிச்சயமாக இருக்காது. எனவே நீங்கள் அங்கு அளித்திட்ட உங்கள் பெர்சனல் தகவல்களை, பேஸ்புக், தான் நம்பிக்கை வைத்திடும் அல்லது வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இன்னொருவரிடம் தரலாம் இல்லையா?
நீங்கள் எப்போதாவது உங்கள் பெயரினை கூகுள் சர்ச் இஞ்சினில் தந்து தேடியிருக்கிறீர்களா? இல்லை இதற்கென உள்ள தளங்கள் மூலம் தேடி, உங்களைப் பற்றிய தகவல்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்று அறிந்திருக்கிறீர்களா? தேடிப் பார்க்கவும். அப்போது தான் உங்களைப் பற்றிய தகவல்கள் எங்கெல்லாம் உள்ளன என்று அறியவரும்.
முதலில் இதில் அடிப்படைக் கேள்வி ஒன்று எழுகிறது. நீங்கள் தரும் பெர்சனல் தகவல்களுக்கு உரிமை உள்ளவர் யார்? நீங்களா? அல்லது நீங்கள் பதிந்திடும் இணைய தள உரிமையாளரா? நாம் எந்த தளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிந்தாலும், அவை நம் விருப்பத்தின் பேரில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தரப்படுகின்றன. அவற்றை அந்த தளம் மற்றவர்களுக்குத் தரக்கூடாது. மேலும் நீங்கள் கொடுத்த தகவல்களை நீங்கள் எப்போது விரும்பினாலும், அந்த தளத்திலிருந்து நீக்கும் உரிமை உங்களுக்கு வேண்டும்.
எடுத்துக்காட்டாக, பேஸ்புக் உங்கள் தகவல்கள் குறித்து செயல்படும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அதில் உள்ள அக்கவுண்ட்டை நீக்கலாம். ஆனால் உங்கள் பெர்சனல் தகவல்கள் அதன் தளத்தில் இருப்பதாகத்தான் பேஸ்புக் கூறுகிறது.
சில தளங்கள் நம்மைப் பற்றிய தகவல்களை அழிக்கும் வழிகளைக் காட்டுகின்றன. கூகுள் டேஷ் போர்டு (http://www.google.com/support/ accounts/bin/ answer.py?hl=en&answer=162744) போன்ற டூல்கள் நம் பெர்சனல் தகவல்களை நீக்கும் வழிகளைக் காட்டுகின்றன.
ட்விட்டரில் (Twitter) நீங்கள் பதித்த தகவல் அல்லது செய்திக் கோப்புகளை விரும்பினால் நீக்குவதற்கு வழி தரப்பட்டுள்ளது. உங்களின் முழு தொடர்புகளையும் நீக்கலாம். இதற்கு http://twitwipe.aalaap.com/login.php என்ற தளத்தில் டூல் தரப்பட்டுள்ளது.
நம்மைப் பற்றிய தகவல்களை யாரும் கண்டு அறிந்து கொள்ளக் கூடாது என விரும்பினால், நாம் முதலில் செய்திட வேண்டியது கூகுள் மூலம் நம்மைப் பற்றிய தகவல்கள் உள்ள தளங்களைக் கண்டறிவது. அடுத்து அந்த தளங்களின் தன்மை குறித்து அறிந்து, அந்த தளத்தின் உதவியுடன், அவை தரும் டூல்கள் வழியாகவே, தகவல்களை நீக்கலாம்.
இப்போது பிரவுசர்களில் நம்மைப் பற்றிய பதிவுகள் சேமிக்கப்படாமல் இருக்க, பிரவுசர்களிலேயே இதற்கான டூல்கள் தரப்பட்டுள்ளன. In Private, Private Browsing மற்றும் In Cognito ஆகியவை அந்த வழிகளைத் தரும் டூல்களே. அல்லது Proxy services, Anonymizer, மற்றும் Hide my ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

மனசு ஒரு மந்திரச்சாவி

வாழ்வில் எல்லா சூழல்களையும் நம்மால் உருவாக்கி விட முடியாது. ஆனால், அவற்றிற்கு தகுந்த மனோபாவத்தை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். தீய மனோபாவங்கள் நல்லவற்றை அழித்து விடுகின்றன. நல்ல மனோபாவம் கீழ்த்தரமான எண்ணங்களாலும், அற்ப புத்தியாலும் பாழாகி விடுகின்றன. இதனால் பலன் எதுவும் இல்லை. நல்ல மனோபாவங்கள் என்பது எதிர்மறையான எண்ணங்களை மனதிலிருந்து நீக்குவது தான்.

உதாரணமாக, பலருக்கு ஓய்வெடுக்க அதிக நேரம் இருக்கிறது. ஆனால் அந்த ஓய்வில் சந்தோஷம் தான் குறைவு. பல வகையான உணவுகள் இருக்கின்றன. ஆனால் அதை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் தான் குறைவானவை. உயர்ந்த மனிதன். ஆனால் தாழ்ந்த குணம். அதிக லாபம். ஆனால், குறைந்த உறவுகள்.

நிலாவிற்கே நாம் சென்று திரும்பி விட்டோம். ஆனால், பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. வெளியில் உள்ள விண்வெளியை வென்று விட்டோம். ஆனால், உள்ளே உள்ள மனதை வெல்ல முடியவில்லை. நமது வாழ்வில் உள்ள முரண்பாடே இதுதான். மற்றவர்கள் உணர்ச்சியின்றி இருப்பதைக் கண்டு திகைத்து நிற்கிறோம். ஆனால், நாம் அப்படி இருப்பதை மாற்ற ஒரு முயற்சியும் எடுப்பதில்லை.

இன்னும் ஒரு சிலர், நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து அதை மாற்ற சிறிதும் அக்கறை காட்டுவதில்லை. நாம் முயன்றால் எல்லாவற்றைம் சரி செய்துவிடலாம். மழை பெய்தால் சில குட்டைகளில் நீர்த்தாமரைகள் மலர்கின்றன. அவை வேகமாக வளர்ந்து நீர் மட்டத்தையே முடி விடுகின்றன. சில வேலையாட்கள் குட்டையில் இறங்கி இலைகளை வெட்டி தண்ணீரைச் சுத்தம் செய்கின்றனர். சில நாட்களில், இலைகள் வளர்ந்து விடுகின்றன. மறுபடி வேலையாட்கள் வந்து இலைகளை வெட்டுகிறார்கள்.

இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இலைகளை அதாவது பிரச்சினைகளை அவர்கள் பார்க்கும் போது அதற்கான தற்காலிக தீர்வையே காண்கிறார்கள். இதே பிரச்சினை அவர்களுக்கு நீண்ட கால பிரச்சினையாக தெரிந்திருந்தால், அவர்கள் வேரோடு பிடுங்கி இருப்பார்கள். இந்த இரண்டையுமே அவர்கள் செய்யவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் வெளியில் தெரியக்கூடிய பிரச்சினைகள் மட்டும் தீர்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இலைகளை மட்டும் வெட்டினார்கள். அந்த வேலையாட்களை போல் தான் நாமும் நமது வெளிப்படையான பிரச்சினைக்கு மட்டும் தீர்வு காகிறோம்.

நடத்தைகள் என்பது பலவிதமான மனோபாவங்களின் தொகுப்பு. நடத்தைக்கு பின்னால் இருந்து செயல்படும் காரணங்களை புரிந்து கொள்ள வேண்டும். நமது மனோபாவங்களாலும், நம்பிக்கைகளாலும் தான் நடத்தை உருவாகிறது. மனோபாவங்கள் மிக முக்கியமானவை. ஆனால், அதற்கான காரணங்களைக் கூறுவது அவ்வளவு எளிதானது அல்ல.

ஒரு குறிக்கோளைத் தீர்மானித்து விட்டால், நாம் அதற்காக செயல்படவேண்டும். நல்ல உறவு தான்நோக்கம் என்றால் நல்ல நடத்தை வருவது நிச்சயம். ஆனால், இதற்கு சரியான நம்பிக்கைகளும், மனோபாவங்களும் அவசியம். எப்போதும் நாம், `அடுத்தவர் மிகச்சரியாக இருக்க வேண்டும்’ என்று எதிர்பார்போம். ஆனால், நமது குறைகளை சரிபடுத்திக் கொள்ள மாட்டோம். `நான் மாறவே மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிப்பவர்களுக்கு ஒரே பதில் `நாம் மாறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்பதே.

சாண எரிவாயுவில் ஓடும் ரெயில்

வேகமாக தீர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மாற்று எரிபொருள் தேவையை அதிகரித்திருக்கிறது. இதன் எதிரொலியாக காட்டாமணக்கில் இருந்து பயோடீசல் உள்பட பலவிதமான மாற்று எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு முன்னோடி நிகழ்வாக மாட்டுச் சாண எரிவாயுவைக் கொண்டு முதல்முதலாக ரெயில் இயக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா – போர்ட் வொர்த் நகரங்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. ஒரு ஆண்டு காலத்துக்கு பயணிகள் ரெயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ள அந்த ரெயில் சமீபத்தில் சோதனை ஓட்டமாக விடப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில் 20 சதவீத எரிவாயுவும் 80 சதவீத டீசலும் சேர்த்து இயக்கிப் பார்க்கப்பட்டது. அதன்பிறகு அதிகப்படியான எரிவாயு சேர்த்து தற்போது ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ரெயிலுக்கு `ஹார்ட்லேண்ட் பிளையர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

`பொதுவாக உயிரி எரிபொருளை பயன்படுத்தும்போது என்ஜினுக்குள் அழுத்தம் அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும். எனவே சில மாற்றங்களுடன் இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் முதல்முதலாக சாண எரிவாயுவில் இயங்கும் வகையில் ரெயில் விடப்பட்டுள்ளது’ என்று அங்குள்ள ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. உங்களுக்கென்று ஒரு தனி விமானம் வாகன போக்குவரத்து வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பஸ், ரெயில், கார் என பலவித வாகனங்களிலும் எளிதில் பயணம் செய்து விடுகிறோம். ஆனால் விமானப்பயணம் மட்டும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.