Daily Archives: மே 21st, 2010

விண்டோஸ் 7 டிப்ஸ்

டாஸ்க்பார் ஹாட் கீ
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம்.
டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாகக் காட்டப்படும்.
டாஸ்க்பாரில் உள்ள ஐட்டம் ஒன்றில், கண்ட்ரோல் + ஷிப்ட்+கிளிக் செய்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் திறப்பது போலத் திறக்கப்படும். இதே போல டாஸ்க் பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட் + கிளிக் செய்தால், அதற்கான புரோகிராம் இயக்கத்தை இன்னொரு விண்டோவில் திறக்கும்.
டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட + ரைட் கிளிக் செய்தால், அந்த புரோகிராமிற்கான விண்டோ மெனு காட்டப்படும்.
கால்குலேட்டர்
பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் கால்குலேட்டர் ஒன்று அக்செசரீஸ் பட்டியலில் தரப்படும். இது சாதாரணமான கணக்குகளைப் போட்டுப் பார்க்க பயன்படும். கூட்டல், பெருக்கல், கழித்தல் மற்றும் வகுத்தல் கணக்குகளை இதில் மேற்கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தொகுப்புடன் கிடைக்கும் கால்குலேட்டரில் பல புதிய சிறப்புகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனு மேலாக உள்ள சர்ச் பாரில் CALC என டைப் செய்து என்டர் அழுத்தவும். உடன் கால்குலேட்டர் கிடைக்கும். இதன் மேலாக உள்ள View என்பதில் கிளிக் செய்திடவும். இதன் நேர் கீழாக கால்குலேட்டர் கட்டமைப்பை மாற்றிக் காணும் வகையில் ஆப்ஷன்ஸ் தரப்படும். இவை standard, scientific, programmer மற்றும் statistics என நான்கு வகைகளில் கிடைக்கும். மேலும் View> Worksheets என்ற பிரிவில் சென்றால் நம் கடன் தொகைக்கான மாதம் கட்ட வேண்டிய தொகையினைக் கணக்கிடும் வசதி உள்ளதனைப் பார்க்கலாம். இவை எதுவும் வேண்டாம் என பின் நாளில் எண்ணுகையில் ஙடிஞுதீ>ஆச்ண்டிஞி என்பதனை அழுத்தினால் போதும். சாதாரண கால்குலேட்டர் கிடைக்கும்.
விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள் இந்த கால்குலேட்டரை இயக்கிப் பாருங்கள். பின் சாதாரண கணக்குகளுக்கான கால்குலேட்டரை மூட்டை கட்டி வைத்திடுவீர்கள்.
கிளாசிக் டாஸ்க் பார்
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு பழைய வடிவிலான டாஸ்க் பார் தான் பிடிக்கிறது. இவர்கள் புதிய வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்த எனக்கு, டாஸ்க் பார் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்த போது பழைய வகைக்கு மாறிக் கொள்ளலாம் என்று தெரிய வந்தது. நீங்களும் விரும்பினால் கீழ்க்கண்டபடி அதனை செட் செய்திடலாம்.
டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Taskbar buttons என்ற கீழ் விரி மெனுவினைக் காணவும். இதில் Combine when taskbar is full என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த புரோகிராம் பெயருடன் நீளமான சதுரத்தில், முன்பு காட்டப்பட்டது போல காட்சி அளிப்பதனைக் காணலாம்.

ஜெயிக்கப்போவது குரோம் பிரவுசரா?

இன்டர்நெட் தேடலுக்கு அடிப்படையான பிரவுசர்கள் அனைத்தும் இலவசமாக இன்று கிடைக்கின்றன. இவற்றில் முதல் இடத்தில் இயங்குவது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசராகும். அடுத்து மொஸில்லாவின் பயர்பாக்ஸ் இடம் பெறுகிறது. ஆனால் இவற்றுக்குப் பின்னால் இருக்கும் குரோம் பிரவுசர், வெகு சீக்கிரம் முதல் இடத்தைப் பிடித்துவிடும் என்று பலரும் கணக்கிடுகின்றனர். இதற்கென அவர்கள் கூறும் காரணங்களைப் பார்க்கலாம்.
காரணங்களைப் பார்க்கும் முன் இன்றைய பிரவுசர் சந்தை நிலை குறித்த சில தகவல்களைக் காணலாம். சென்ற ஏப்ரல் மாதத்துடன் முடிந்த ஆய்வுக் கணக்கின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், பிரவுசர் வாடிக்கையாளர்களில் 80% பேரைக் கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஏப்ரல் இறுதியில் 59.95% க்கு இறங்கியுள்ளது. குரோம் பிரவுசர் 6.7% கொண்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டுமான உயர்வு 0.6% ஆகும். இது மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கை இல்லை என்றாலும், இதுவரை குரோம் பெற்ற கூடுதல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகமாகும். இதனுடன் ஒப்பிடுகையில், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் கொண்ட கூடுதல் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். பயர்பாக்ஸ் தற்போது 25% வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஆப்பரா மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். இதனைத் தவிர்த்தவர்கள் பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசருக்கு மாறி உள்ளனர். இதற்கான காரணங்கள் கீழ்க்கண்டவை எனப் பலரும் கருதுகின்றனர்.
1. வேகம்: கூகுள் தரும் குரோம் பிரவுசர், இன்டர்நெட் தளங்களைக் கொண்டு வருவதில் பேய் வேகத்தைக் கொண்டுள்ளது என்று கூறலாம். ஆப்பிள் சபாரி, ஆப்பரா, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் ஆகிய அனைத்துடன், குரோம் பிரவுசரின் வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்துப் பலரும் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.
2. எளிமை: அடுத்ததாக, குரோம் பிரவுசர் தரும் எளிமையான கட்டமைப்பு. கூகுள் தரும் மற்ற அப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளைப் போல, இந்த பிரவுசர் மிக எளிமையான முறையில் மெனுக்களைக் கொண்டு இயங்குகிறது.மற்ற பிரவுசர்களில் காணப்படும் பலவகையான, குழப்பத்தில் ஆழ்த்தும் மெனுக்கள், குரோம் பிரவுசரில் இல்லை. ஆனால் இதுவே சிலரை குரோம் பிரவுசரிலிருந்து, மீண்டும் மற்ற பழைய பிரவுசர்களுக்குத் தாவ வைத்துள்ளது. இருப்பினும் குறைவான, ஆனால் அடிப்படைத் தேவைகளைத் தரும் வகையில், மெனுக்களை விரும்புபவர்களும் பலர் உள்ளனர். இந்த வகையில் குரோம் பிரவுசர் பலரின் விருப்ப பிரவுசராக மாறி உள்ளது.
3. சிறந்த பாதுகாப்பு: இன்டர்நெட் பிரவுசர் பலரின் ஏளனத்திற்கு ஆளாவதற்குக் காரணம், முழுமையான பாதுகாப்பினை வழங்க முடியாததுதான். குரோம் பிரவுசர் வரும் முன்னர், இந்த காரணத்தி னாலேயே, பலர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரிலிருந்து, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவினார்கள். ஆனால் குரோம் வந்தவுடன், அது தரும் பாதுகாப்பு அனைவராலும் உறுதிப்படுத்தப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. ஹேக்கர்கள் எந்தவிதத்திலும் உள்ளே நுழைய முடியாத வகையில், குரோம் பிரவுசர் கட்டமைப்பு உள்ளது. ஆனாலும், இன்டர்நெட் சந்தையில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால், மால்வேர் புரோகிராம்களை அனுப்புபவர்கள், இதன் மீது தங்கள் கவனத்தைத் திருப்பவில்லை என்றும் ஒரு சாரார சொல்லுகின்றனர். அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இதனைப் பயன்படுத்த முயற்சிக்கையில், வைரஸ் மற்றும் மால்வேர் களைப் பரப்புபவர்கள், நிச்சயம் குரோம் கட்டமைப்பினையும் உடைப்பார்கள் என்று பலரும் கருதுகின்றனர். இருப்பினும் இன்றைய நிலையில் கூடுதல் பாதுகாப்புள்ளது குரோம் பிரவுசர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
4. பழைய சிஸ்டத்திலும் இயங்கும்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பழைய தொகுப்புகளிலும், குரோம் பிரவுசர் சிறப்பாக இயங்குகிறது. குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்பியில் இது நன்றாக இயங்குகிறது. எனவே இதற்கு மாறும் பழைய கம்ப்யூட்டர் பயனாளர்கள், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்வதில்லை.
பிரவுசர் சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் வேகம் மற்றும் எளிமை என்ற இரு காரணங்களினால், குரோம் தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி வருகிறது. சில ஆண்டுகளில், குரோம் முதல் இடத்திற்கு உயர்ந்துவிடும் என்றே பலரும் கணிக்கின்றனர். காத்திருந்து பார்க்கலாம்.

உங்களுக்கென்று ஒரு தனி விமானம்

வாகன போக்குவரத்து வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பஸ், ரெயில், கார் என பலவித வாகனங்களிலும் எளிதில் பயணம் செய்து விடுகிறோம். ஆனால் விமானப்பயணம் மட்டும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.

விமானப் பயணமே அலாதி இன்பம் தரக்கூடியது. பணக்காரர்களுக்கு மட்டுமே விமானப் பயணம் எளிதில் கிடைத்து வந்தது.

விமானம் பறப்பதை அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படும் பலருக்கும் விமானப்பயணத்தை சாத்தியமாக்க வந்துள்ளது ஒரு புதுமையான விமானம்.தனி மனிதருக்கான இந்த விமானத்தில் நீங்கள் ஜாலியாக அலுவலகத்திற்கோ அல்லது வேறு எந்த இடங்களுக்கோ சென்று வரலாம்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான `நாசா’வின் விண்வெளி என்ஜினீயரான மார்க் ரே இந்த விமானத்தை வடிவமைத்துள்ளார்.

`புபின்’ எனப்படும் ஒருவகை கடற்பறவையை மாதிரியாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் 50 மைல் தூரம் வரை பயணம் செய்யலாம். மணிக்கு 150 மைல் வேகத்தில் பறக்கக் கூடியது.

உள் மற்றும் வெளிப்புறங்கள் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது செங்குத்தாக மேலே எழும்பி பறக்கும் வகையிலும், தரையிறங்கும்போது முதலில் வால்பகுதி நிலத்தில் படும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது. மின் ஆற்றல் முலம் இயங்கக்கூடிய இந்த விமானம், 12 அடி நீளமுடையது. இறக்கையின் நீளம் சுமார் 14.5 அடி. இந்த விமானத்தை தன்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக ரே உருவாக்கியுள்ளார். இந்த விமானத்தின் எடை 136 கிலோ. தன்னுடைய எடைக்கு சரிசமமாக எடையைத் தாங்கும் திறன் உடையது.

இதில் உள்ள பேட்டரியின் எடை மட்டும் 45 கிலோ. எஞ்சியுள்ள எடைக்குள் விமானி மற்றும் பாதுகாப்புக் கவச உடைகள் ஆகியவை இடம்பெறும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மோட்டார் 60 எச்.பி. திறன் கொண்டது.

முகம் பொலிவு பெற..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, உடலின் உள்ளே என்ன பாதிப்பு இருந்தாலும் அது முகத்தில் பிரதிபலிக்கும்.

சிலர் இராசாயன பூச்சுக்கள் மூலம் முகத்தை பொலிவாக்கலாம் என்று எண்ணி இவற்றை அதிக விலைக்கு வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் முகம் நன்கு பொலிவாக காணப்படும். ஆனால் சில நாட்கள் செல்லச்செல்ல இந்த ரசாயனமுகப்பூச்சுகள் முகத்தை பாழடித்துவிடும்.

முகப் பொலிவு இழக்க மலச்சிக்கலும் ஒரு காரணமாகும். மலச்சிக்கலைப் போக்கினாலே முகத்தில் உண்டாகும் முகப்பரு, கரும்படலம், கருந்திட்டுக்கள் போன்றவை ஏற்படாது.

ஆனால் முகத்தில் இதன் பாதிப்பு தெரியவந்தால் மலச்சிக்கலைப் போக்குவதுடன் இரசாயனம் கலவாத மூலிகைப் பூச்சுக்களை பயன்படுத்தி முகத்தை பொலிவுபெறச் செய்ய முடியும்.

மலச்சிக்கலைப் போக்க எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிகம் நீர் அருந்த வேண்டும்.

முகத்தில் முகப்பரு, அலர்ஜி, முகச் சுருக்கம், கருமை, எண்ணெய் வடிதல் இருந்தால்

ஆவாரம் பூவை நிழலில் உலர்தி காயவைத்து பொடி செய்து எடுத்து அதனுடன் கடலை மாவு கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை இளம் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகப்பரு, முகச்சுருக்கம் போன்றவை மாறி முகம் பொலிவுபெறும்.

முகச் சுருக்கம் நீங்க

சிலருக்கு முகச் சுருக்கங்கள் ஏற்பட்டு 25 வயதிலேயே முதுமையடைந்தவர் போன்ற தோற்றத்தை உண்டாக்கும். இவர்கள்

நல்லெண்ணெய் – 10 மி.லி.

தண்ணீர் – 10 மி.லி.

எடுத்து ஒன்றாக கலக்கிக் கொண்டேயிருந்தால் அது வெண்மையாகி வெண்ணெய் போல் மாறும். இதை முகத்தில் நன்கு பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகச் சுருக்கம் நீங்கும்.

பார்லி மாவு – 5 கிராம்

தேன் – 5 மி.லி

முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து ஒன்றாக்கி நன்கு கலக்கி முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறையும்.

முகப்பரு நீங்க

கஸ்தூரி மஞ்சளை நன்கு அரைத்து அதனுடன் வெண்ணெய் கலந்து நன்கு கலக்கி முகத்தில் பருவுள்ள இடங்களில் பூசி சீயக்காய் பொடியைக் கொண்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந் செய்துவந்தால் முகப்பரு நீங்கும்.

முகப்பரு உள்ளவர்கள் குங்குமத்திலேபம் என்ற ஆயுர்வேத மருந்தை வாங்கி தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும்.

பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து பூசி வந்தால் முகம் நல்ல நிறமாகவும் பிரகாசமாகவும், அழகாகவும் தோன்றும்.

கரும்புள்ளி நீங்க

கருஞ்சீரகத்தைபொடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி எடுத்து தேவையான அளவு பால் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 1 மணி நேரம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.

கருந்தேமல் மறைய

கருந்தேமல் உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்லும் முன் கொத்தமல்லி கீரையை சாறு பிழிந்து தேமல் உள்ள இடங்களில் பூசி வந்தால் கருந்தேமல் மாறும்.

நாயுருவிச் செடியின் இலைகளை கசக்கி சாறு எடுத்து தேமலின் மேல் பூசி வந்தால் தேமல் குணமாகும்.

உள்ளங்கை சொசொரப்பு நீங்க

எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளங்கைகளில் தேய்த்து வந்தாலே உள்ளங்கை சொரசொரப்பு நீங்கி உள்ளங்கை மிருதுவாகும்.

பழைய மெயில் தொடர்புகளை ஜிமெயிலுக்குக் கொண்டு வர

யாஹூ, ஹாட்மெயில் போன்ற இலவச இமெயில் புரோகிராம்களைப் பயன்படுத்திப் பின் ஜிமெயிலுக்கு மாறியுள்ளவரா நீங்கள்! அப்படியானால், அதில் உள்ள மெயில்களையும், காண்டாக்ட் முகவரிகளையும் ஜிமெயிலுக்கு மாற்ற எண்ணுவீர்கள். மெயில்களை மாற்றாவிட்டாலும், முகவரிகளையாவது நிச்சயம் மாற்ற ஆசைப்படுவீர்கள். இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று இங்கு காணலாம்.
ஜிமெயில் தரும் எண்ணற்ற இலவச இமெயில் வசதிகளைப் பற்றி, இந்த மலரில் நிறைய தகவல்களை உங்களுக்குத் தந்துள்ளோம். சிலர் தங்களின் நிறுவன சர்வர்கள் மற்றும் இமெயில் கிளையண்ட் வசதி இருந்தாலும் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கிப் பயன்படுத்தவே விரும்புகின்றனர். ஏனென்றால், இமெயில் வசதிகள் மட்டுமின்றி, கூகுள் தரும் மற்ற எந்த வசதியைப் பயன்படுத்தவும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்று தேவைப்படுகிறது.
ஜிமெயில் தரும் கட்டற்ற ஸ்டோரிங் வசதி, ஸ்பாம் மெயில் தடுப்பு, வைரஸ் தடுப்பு ஆகியவை மற்ற இமெயில் புரோகிராம்களைக் காட்டிலும் சிறப்பானவையாகக் கருதப்படுவதே இதற்குக் காரணம். இனி, மற்ற மெயில் அக்கவுண்ட்களிலிருந்து டேட்டாவினை எப்படி ஜிமெயிலுக்கு மாற்றுவது எனக் காணலாம்.
மற்ற மெயில் அக்கவுண்ட்டிலிருந்து மட்டுமின்றி, நீங்கள் வைத்திருக்கும் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டிலிருந்து, இன்னொரு ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கும் மெயில்களையும், முகவரிகளையும் மாற்றலாம்.
பி.ஓ.பி.3 மெயில் வசதியினை வழங்கும், எந்த மெயில் சர்வீஸ் தரும் அமைப்பிலிருந்தும் உங்கள் மெயில்களை ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு மாற்றலாம்.
முதலில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின் ஜிமெயில் விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இது Sign Out இடத்திற்கு அருகே இருக்கும். பின்னர் கிடைக்கும் செட்டிங்ஸ் விண்டோவில் Accounts and Import என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இங்கு Import mail and contacts என்ற பிரிவில் Import mail and contacts என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பின்னர் எந்த இமெயில் அக்கவுண்ட்டிலிருந்து மெயில்களையும் முகவரிகளையும் மாற்ற வேண்டுமோ, அந்த இமெயில் முகவரியை டைப் செய்திடவும். அடுத்து Continue என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு பழைய அக்கவுண்ட்டிலிருந்து எந்த வகை டேட்டாவினை மாற்ற வேண்டும் என பல பிரிவுகள் இருக்கும். இவை அனைத்தும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும். இவற்றில் எவை எல்லாம் தேவையோ அவற்றை மட்டும் செக் செய்திடும்படி அமைக்கவும். பழைய இமெயில் முகவரிக்கு வரும் மெயில்களை, இன்னும் 30 நாட்களுக்கு ஜிமெயிலுக்கு அனுப்பப்பட வேண்டாம் என எண்ணினால், Import new mail for next 30 days என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். உங்கள் விருப்பத் தேர்வுகள் அனைத்தையும் முடித்தவுடன் Start import என்பதில் கிளிக் செய்திடவும். பின் OK கிளிக் செய்து முடிக்கவும். பின்னணியில் உடனே இதற்கான வேலை தொடங்கப்படும். நீங்கள் மாறுதலுக்குத்தேவை எனக் கொடுத்த அனைத்தும் ஜிமெயிலுக்குக் கொண்டு வரப்படும். நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஏன் வெளியே கூட வரலாம். ஆனால் நீங்கள் செட் செய்தபடி வேலை முடிக்கப்படும்.
ஆனால் உடனே உங்கள் மெயில் அனைத்தும் வந்துவிட்டதா என்று சோதனை செய்து, இல்லை என்றால் அவ்வளவுதானா? என்று ஆதங்கப்பட வேண்டாம். இந்த செயல்பாடு உடனேயும் முடியலாம், இரண்டு நாட்களிலும் முடியலாம். ஆனால் எவ்வளவு தூரம் இந்த இம்போர்ட் வேலை நடந்து முடிந்திருக்கிறது என்று அறிய, Settings சென்று Accounts and Import என்ற டேப்பில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
ஒரு வேளை இந்த மெயில்கள் மற்றும் பிற தகவல்கள் ஜிமெயிலுக்கு வர வேண்டாம் என எண்ணினால், மேலே சொன்னபடி சென்று Import mail and contacts என்ற இடத்தை அடைந்து, அங்கே உள்ள stop பட்டனில் கிளிக் செய்திடவும்.

வெப்பமாக்கும் யூகலிப்டஸ்….

இயற்கையை மாற்றி புவிப் பகுதியை வெப்பமடையச் செய்யும்  விஷ மருந்துதான் யூகலிப்டஸ்.

குறிப்பாக தமிழகம் அடிக்கடி வறட்சி, புயல் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் இயற்கையை நாம் மாசுபடுத்தியதுதான்.

மேற்கு தொடர்ச்சி மலை தமிழக மக்களின் வரப் பிரசாதம் ஆகும். இப்பகுதியில் மழைப் பொழிவு அதிகம் இருந்து வந்தது. மேலும் நீல மலை என அழைக்கப்படும் எழில் கொஞ்சும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் அதிக மழைப் பொழிவு காணப்பட்டது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோது, அவர்களின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு வாழும் இடங்களாக மலைகளை தேர்ந்தெடுத்தனர். அங்கு சென்று ஓய்வும் எடுத்தனர். இந்தப் பகுதியில் அதிக மழைப் பொழிவை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தனர். அப்போதுதான் அதிக மழைப் பொழிவை தடுக்கும் யூகலிப்டஸ் மரங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்தது. இந்த மரங்களின் இலைகள் மழை மேகங்களை ஈர்க்கும் தன்மையற்றவை. மேலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டவை.

அதிக உயரம் வளரக் கூடிய இத்தகைய மரங்களை மலைப் பகுதிகளில் அதிகம் நட்டு வளர்த்தால் மழைப் பொழிவை குறைக்கும் என்று எண்ணி வளர்த்தனர்.

இப்பகுதிகளில் வழக்கமாக பெய்யும் மழை அளவு குறைந்து போனது. மேலும் இப்பகுதியில் உள்ள காற்றின் ஈரப்பதத்தை இவை உறிஞ்சி விடுவதால் இப்பகுதி வெப்பம் நிறைந்த பகுதியாக மாறியது. மேலும் மண்ணில் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் மலைகளில் ஊறும் நீர் ஓடை, சிற்றோடை என அனைத்து அருவிகளும் வறண்டு போயின.

இத்தகைய யூகலிப்டஸ் மரங்களுக்கு தண்ணீர் தேவையில்லை. ஒருமுறை செடி நட்டால் மூன்று முறை வெட்டி எடுக்கலாம். இதனை ஆடு, மாடுகள் ஏதும் சாப்பிடாது. இதன் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு என்ற காரணத்தால வனத்துறையும், தனியாரும் தமிழகத்தில் வெறும் புஞ்சை காடாக இருந்த பகுதியில் நட்டு வளர்த்தனர். ஏற்கனவே காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி இப்பகுதியை மேலும் வெப்பப் பகுதியாக்குகிறது. இதனுடைய வேரானது மண்ணின் உள்ளே ஆழமாக சென்று நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டது. மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் இவை உறிஞ்சிவிட்டதால் இந்த மரங்கள் வளர்க்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் எதற்கும் பயன்பாடு இல்லா பகுதியாக போய்விட்டது.

முன்பு புஞ்சை பகுதியில் (அதாவது ஆறு, ஏரி குளம், பாசனங்கள் இல்லாமல் வானம் பார்த்த புமியாக இருப்பது) பணப்பயிர்களான உளுந்து, துவரை, கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சை பயறு, பாசிப்பயறு, சோளம், எள் போன்றவற்றை வளர்த்தனர். இவற்றிற்கு ஓரளவு மழை இருந்தால் போதுமானது. இவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் தற்போது இவற்றை விட்டு சில வெளிநாட்டு கம்பெனிகள் உங்கள் பகுதியில் யூகலிப்டஸ் காடுகளை வளர்த்தால் அந்த மரங்களை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என ஆசை வார்த்தைகள் கூறி மக்களையும் அரசையும் ஏமாற்றினர். இதை ஒரு பெரிய வருவாய் என பொது மக்களும், அரசும் கருதின. ஆனால் பிற்காலத்தில் வரப்போகும் இதன் பாதிப்புகளை அப்போது அவர்கள் உணர மறந்துவிட்டனர்.

யூகலிப்டஸ்- மரங்களால் ஆதாயம் அடைந்தது அன்னிய நாட்டு நிறுவனங்கள்தான். ஆனால் பாழ்பட்டது நம்முடைய மண்ணும், காற்றும், நீரும்தான். பிற்கால சமுதாயத்திற்கு வாழ்விடங்கள் இல்லாத பகுதியாக மாற்றிய கொடுமை நம்மையே சாறும்.

யூகலிப்டஸ் மரத்தின் இலைகள் நீண்டு தடித்து காணப்படும். இதனால் அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி பிராண வாயுவை வெளியிடுவதில்லை.

எத்தகைய வறண்ட பகுதியிலும் செழித்து வளரக் கூடியவை. இவற்றால் மண்ணின் வளம் அனைத்தும் சீரழிந்து விட்டன.

இன்று உணவு தானியங் களுக்காக வெளிநாட்டில் கையேந்தும் நிலை வந்துள்ளது. மேலும் தற்போது இருக்கும் தானியங்களையும், நவீன ஆராய்ச்சி என்ற பெயரில் மலடாக்கி கொண்டு வருகின்றன.

இயற்கையை நாம் சீரழித்தால், அது ஒருநாள் புயல், மழை, அதிக வெப்பம், பூகம்பம், சுனாமி என பொங்கியெழுந்து நம்மை சீரழிக்கும்.

தமிழகத்தில் இத்தகைய வறட்சி ஏற்படுத்தும் மரங்களை வளர்த்தால், அடுத்த நூற்றாண்டு பாலைவனப் பகுதியாகவே மாறலாம். மண், காற்று நீரை மாசுபடுத்தினால் பாதிப்பு நம் சமுதாயத்திற்கே.

ஏற்கனவே வறட்சி தாங்கி என்றும் மக்கள் விறகுக்காகவும் வளர்த்த வேலிக்கருவி ஒருபக்கம் வறட்சி உண்டுபண்ணியதுபோல் யூகலிப்டஸ் மரங்களும் வறட்சியை வெகு சுலபமாக ஏற்படுத்தும்.

யூகலிப்டஸ் மரங்களை ஒழித்து அந்த இடங்களை விவசாய நிலங்களாக மாற்றினால்தான் மக்களின் உணவுப் பஞ்சம் தீருவதுடன் இயற்கையும் பாதுகாக்கப்படும். அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து எதிர்கால சந்ததியினரைக் காக்க ஆவன செய்ய வேண்டும்.

அம்மை நோய்

சித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள் நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக வருவது அம்மை நோயே.

இதனை முன்னோர்கள் கொள்ளை நோய் என்றனர். ஆனால் தற்காலத்தில் இது வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதனைப் பற்றி சில அறியாத தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

சித்த மருத்துவத்தில் இந்நோயை வைசூரி என்று குறிப்பிடுகின்றனர். முன்பு பெரியம்மையை வைசூரி என்றே அழைத்தனர். அது உயிர்க் கொல்லி நோயாக இருந்தது. தற்போது இது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மற்ற பிற அம்மை நோய்கள் தற்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அவற்றில் சில

1. சின்னம்மை (Chikenpox)

2. தட்டம்மை (Measles)

3. புட்டாலம்மை (mumps)

4. உமியம்மை (Rubella)

சின்னம்மை

சின்னம்மை மிகவும் எளிதில் தொற்றும் பண்புடைய நோயாகும். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும் Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். இது எளிதில் தொற்றும் தன்மை உள்ளது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம்.

நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும்.

ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும்.

வழக்கமாக புண்ணின் பக்கு சில நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஒரு கொப்புளம் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொப்புளங்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும்.

எல்லா கொப்புளங்களும் பக்காக மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.

உடலில் எப்படி பரவுகிறது?

ஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். மல்பீசியின்படையின் செல்களின் Varicella zoster-virus நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

தடுப்பு மருந்து

1974ம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995ம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்காவில் கிடைக்கப்பெற்றது. இந்த மருந்து இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது என்பதால், ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதுடன் நில்லாமல், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தடுப்பு மருந்து அளித்தல் அவசியம்.

தட்டம்மை

குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று.

ப்ளு போன்ற அறிகுறிகள் – காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.

உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும். கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.

பரவும் முறை

விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் பரவுகிறது.

இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரப்பப்படுகிறது.

புட்டாளம்மை

குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும்.

காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் 1010ஊ வரை சுரம் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு பொன்னுக்கு வீங்கி என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.

வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும்.

உமியம்மை

குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் (1010ஊ- 1020ஊ). வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.

பொதுவாக அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை

அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். அவற்றை தக்க முறையில் மருந்து கொடுத்து சரிபடுத்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே அருந்த வேண்டும். திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

தடுப்பு ஊசி

MMR என்ற நோய் தடுப்பு மருந்து (ஙச்ஞிஞிடிணஞு) குழந்தை பிறந்த 9வது மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு உள்ளாக போடப்பட வேண்டும். இது மூன்று வகையான அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சித்த மருத்துவத்தின் பங்கு

நோய் வரும்முன் காப்பது சிறந்தது. கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வலுப்பெற்று இந்நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை உண்டு வரவேண்டும்.

மருந்து

சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி ஆறவைத்து கொப்புளங்கள் மேல் தடவி வரவும். அல்லது, கொதிக்க வைக்காமலும் அரைத்து பூசலாம். இதனால் அம்மையின் வேகம் குறைந்து கொப்புளங்கள் விரைவில் ஆறி, அம்மை வடுக்கள் மறையும்.

சிவப்புச் சந்தனத்தை அரைத்து ஆறிய புண்கள் மீது தடவி வந்தால் அம்மைத் தழும்புகள் விரைவில் மறையும்.

மஞ்சள், வேப்பிலையை அரைத்து குழம்பாக்கி லேசாக சூடேற்றி கொப்புளங்கள் மேல் தடவி வந்தால் அம்மை நோயின் வேகம் குறைந்து, விரைவில் குணமாகும். அம்மை நோய் கண்டவர்கள் மருத்துவரிடம் காண்பித்து நோயின் தன்மையை அறிந்து உள்ளுக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

மூலிகை கட்டுரை -முடி உதிர்தலுக்கு முடிவில்லையா?

ஒருவருடைய தனித்தன்மைக்கு அடையாளமாக தெரிவது தலையிலுள்ள முடியே. ஒருவரின் அழகை கூட்டுவதும், முகத்தை எடுப்பாக காட்டுவதும் தலைமுடியே. முடி உதிர்தலும், நரையும் வழுக்கையும் வயோதிகத்தின் அடையாளமாக கருதப்படுவதால் கட்டுமஸ்தான உடலும், உறுதியான மனமும் உடையவர்கள்கூட தலைமுடியில் தொல்லை என்றவுடன் தவிக்க ஆரம்பிக்கின்றனர்.
பெண்களைவிட ஆண்களுக்கே தலைமுடியின் மேல் அதிக அக்கறை உண்டு. ஆண்களே தலைமுடியை கறுப்பாக்கும் சாயங்களை அதிகம் பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வீரம் மற்றும் ஆண்மையின் அடையாளமாக தலைமுடி கருதப்படுவதால் காதுவரை முடியை வளர்த்து, முறுக்கு மீசையுடன் திரிவதுண்டு. இளமையாக இருக்கும் ஒருவர்கூட, முடி உதிரத் தொடங்கியபின் அல்லது வழுக்கை விழுந்தபின் அல்லது முடி நரைத்தபின் சற்று வயதானவராக தோற்றமளிப்பது நாம் கண்கூடாக காணும் உண்மை. நவீன உலகில் வழுக்கையை மறைக்கும் செயற்கை ரோம கவசங்கள் வந்தாலும் இயற்கையாக ரோமம் முளைக்கும் வாய்ப்பு உண்டு என்றால் அதை விரும்பாதவர் யார்தான் உண்டு.
ரோமக்கால்களில் பூஞ்சை கிருமிகளின் தாக்குதல், தலையின் மேற்புறமுள்ள தோல்பகுதியில் ரத்த ஓட்டம் குறைவது, வியர்வை துவாரங்கள் மற்றும் ரோம துவாரங்கள் அடைபடுவது, வைட்டமின் பற்றாக்குறை, உப்பு மற்றும் புளிப்பு சுவையை அதிகம் உட்கொள்வது, வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட சாயங்களையும் செயற்கை நுரைக்கும் திரவங்களை தலையில் பூசுவது, அடிக்கடி ரோமத்தின் நிறங்களை செயற்கையாக மாற்றுவது, அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் கடும் சீதோஷ்ண மாற்றம் கொண்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி பிரயாணம் செய்வது, கணினியில் நீண்ட நேரம் கண் மற்றும் தலையின் ரத்தக் குழாய்கள் சூடாகும் வரை பணிபுரிவது, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருப்பது, பிளாஸ்டிக் போன்ற ஒவ்வாத பொருட்களால் செய்யப்பட்ட தலைக்கவசம் மற்றும் இறுக்கமான தொப்பிகளை அணிவது, ரத்தசோகை, தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற ஹார்மோன் தொல்லை மற்றும் பலவித மரபணு காரணங்களாலும் தலையில் முடி சீக்கிரம் உதிரத் தொடங்கி வழுக்கை உண்டாகிறது.
தலைமுடி உதிரத் தொடங்கும் பொழுதே அதன்மேல் கவனம் செலுத்தி, முடி உதிர்தலை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தசோகை மற்றும் வைட்டமின் குறைபாட்டை சீர்செய்ய வேண்டும். முடியை நுண்ணோக்கி மற்றும் வேதி ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் வளர்ச்சித்தன்மை மற்றும் கிருமித் தாக்கலை சோதனை செய்து, அதன் அடிப்படையில் உள் மற்றும் வெளி மருந்துகளை பயன்படுத்தினால் முடி உதிர்தலை தவிர்க்கலாம். ஒரே வெப்பநிலையுடைய தண்ணீரில் குளிக்க வேண்டும்.
திடீர் திடீரென குளிர்ந்த நீர், வெந்நீர் என மாற்றுவதால் முடி சீக்கிரம் உதிரத் தொடங்கும். முடி உதிர்தலை குறைத்து, ரோம வளர்ச்சியை தீவிரப்படுத்தும் கரிசாலை, பொன்னாங்கண்ணி, அரைக் கீரை, முருங்கை, பசலை ஆகியவற்றை உணவில் அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
நுண்கிருமிகளால் பாதிக்கப்பட்ட ரோமக் கால்களை சுத்தம் செய்து, உதிர்ந்த இடங்களிலும்கூட முடியை நன்கு வளரச்செய்யும் அற்புத மூலிகை காட்டுச்சீரகம். சென்ட்ராத்தெரம் ஆன்தல்மென்டிகம் என்ற தாவரவியல் பெயர்கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தச் செடிகள் மலைப்பகுதிகளில் அதிகம் விளைகின்றன.
காட்டுச்சீரகத்தில் உள்ள வெர்னாஸ்டீரால், சென்ட்ராத்தெரம், சென்ட்ராத்தெரின், டெல்டா-7-ஏவனேஸ்ட்ரால் போன்ற வேதிச்சத்துகள் தோலின் ரத்தக்குழாய்களை விரிவடையச்செய்து, அவற்றில் தங்கியுள்ள நுண்கிருமிகளை வெளியேற்றி, வியர்வை துவாரங்கள், கொழுப்பு கோள துவாரங்கள் மற்றும் ரோமக்கால் துவாரங்களின் அடைப்பை நீக்கி, ரோம வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. அது மட்டுமின்றி பல தோல் நோய்களையும் நீக்குகின்றன.
காட்டுச்சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைய அரைத்து, முடி உதிர்ந்த இடங்களிலும், பூச்சி வெட்டுள்ள இடங்களிலும் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்து குளித்துவர, முடி முளைக்கும். காட்டுச்சீரகத்தை மைய இடித்து, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலையில் தடவி வந்தாலோ அல்லது சாதாரண தேங்காய் எண்ணெயில் காட்டுச்சீரகத்தை ஊறவைத்து தலையில் தடவிவந்தாலோ முடி உதிர்தல் நீங்கி, முடி உதிர்ந்த இடங்களிலும் நல்ல வளர்ச்சி உண்டாகும். அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய கைமுறை மருந்தாகும்.

கடவுளுக்கு நன்றி சொல்லித விட்டீர்களா? (ஆன்மிகம்)

இந்தப் பெரிய உலகத்தில், கோடானு கோடி ஜீவராசிகளை படைத்தான் பகவான். அவன், அப்போது படைத்த ஜீவன்கள் தான் இப்போதும் உள்ளன; அதன் பிறகு, புதிதாக ஜீவன்களைப் படைக்கவில்லையாம். முன்பு பூமியில் உண்டான, ஜீவன்கள்தான் மேலே போகிறது; கீழே வருகிறது. இப்படி சக்கரத்தில் மேலும், கீழுமாக சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது.
இவைகளில் ஏதோ ஒன்றிரண்டு மட்டும் தப்பித்து, முக்தி என்ற பிறவா நிலையை அடைந்து, பகவானோடு சேர்ந்து, சுகமாக இருக்கிறது. அதாவது, பேரின்பம் பெறுகிறது என்பர். மற்ற ஜீவன்களெல்லாம் ஏதோ ஒரு சரீரத்துடன் உலகெங்கும் பரவி உள்ளது.
இவ்வளவு ஜீவன்களும், தங்கள் சரீரத்தை, ஒரு நாள் விட வேண்டி வருகிறது; அதைத் தான் மரணம் என்றனர். இந்த மரணத்துக்குக் காரணம் எமன் என்றனர். அவன் தான் எமலோகத்துக்கு அதிபதி; யார், யாரை எப்போது கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடுவதும் அவன்தான். இவனிடம் வந்து சேர்ந்தவர்களை விசாரணை செய்து, அவரவர்களின் பாவ, புண்ணியத்துக்கு தகுந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதும் அவன்தான்.
யாராய் இருந்தாலும், முதலில் அவனிடம் ஆஜராகி, விசிட்டிங் கார்டை காண்பித்தால், அவனைப் பற்றிய விபரங்களை தன் கணக்குப்பிள்ளையான சித்ரகுப்தனிடம் கேட்டு அறிந்து, தண்டனை வழங்குகிறானாம். இந்த உலகில் எங்கெல்லாமோ உள்ள ஜீவன்களை ஒரே சமயத்தில் கணக்கு பிசகாமல், நேரம் தவறாமல் அவன் எப்படி கொண்டு போகிறான் என்று ஒரு கேள்வி!
எமனிடம் உள்ள எம தூதர்கள் அண்மாதி சித்திகள் என்று சொல்லப்பட்ட சக்தி கொண்டவர்கள். அவர்கள் ஒரே நேரத்தில் அளவற்ற உருவம் எடுக்க வல்லவர்களாம். இதுபோன்ற தூதர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனராம். அதனால், இவர்கள் பல பகுதிகளாக பிரிந்து, பல தேசங்களுக்குச் சென்று, யார், யாரை எப்போது பிடித்து வர வேண்டுமோ, அப்படி பிடித்து வந்து விடுகின்றனர்.
ஆயுள் முடிந்தவரிடம் போய், ‘ஐயா! இந்த நிமிடத்துடன் உன் ஆயுள் முடிந்தது; வா… போகலாம்!’ என்று சொல்லிக் கொண்டிருப்பதில்லை. இந்த எம தூதர்கள் வேறு ஏதாவது ஒரு சாதனத்தைப் பற்றிக் கொண்டு, ஆயுள் முடிந்த ஜீவன்களை மரணமடையச் செய்து, அந்த ஜீவன்களை, கட்டி இழுத்து செல்வராம்! அப்படி என்ன சாதனம் இவர்களுக்குக் கிடைக்கும் என்று கேட்டால், ஆகாய விமானம், ரயில், லாரி, பஸ், மோட்டார் வாகனங்கள், மழை, வெள்ளம், போன்றவைகள்தான் இவர்களுடைய சாதனம்!
இப்படியாக சொர்க்கமோ, நரகமோ அவரவர் போக வேண்டிய இடங்களுக்கு சென்றதும், அங்கங்கே செய்யப்படும் மரியாதையை ஏற்று, சுகமோ, துக்கமோ அனுபவிப்பராம். பிறகு, பாவ, புண்ணியம் தீர்ந்ததும் மறுபடியும் இங்கேதான் பூலோகத்துக்கு – வருவராம். பிறகு, இருக்கவே இருக்கிறது பூலோக, சுக, துக்கம்.
இதில் ஒரு சவுகரியம்… புதிதாக பிறந்தவர்கள், முன் ஜென்மத்தில் யாராக இருந்தார் என்பது தெரியாமல் உள்ளது; அதுவரையில் நல்லதாகப் போயிற்று. இது தெரிந்து விட்டால், ‘டாய்… நீயாடா? வாடா இப்படி – வுட்டேனா பார்!’ என்றெல்லாம் ஆரம்பித்து விடுவர். இப்போது, ‘நீ யாரோ, நான் யாரோ!’ அதுவரையில் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.