Daily Archives: மே 22nd, 2010

டயனோசரஸ் அழிவுக்கு புதுக்காரணம்

உருவத்தில் பெரிய, ராட்சத விலங் கினம் டயனோசரஸ். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வசித்த இந்த விலங்கு இனம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. இதற்கு காரணம் `விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த விண்கற்கள்’ என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், டயனோசரஸ் அழிவுக்கு காரணம் விண்கற்கள் அல்ல என்று தெரியவந்துள்ளது. பூமியில் ஏற்பட்ட தட்ப வெப்ப மாறுதல்கள் காரணமாகவே டயனோசரஸ்கள் அழிந்தன என்கிறார்கள்.

நார்வே நாட்டில் உள்ள ஸ்வெல்பார்டு என்ற இடத்தில் சமீபத்தில் டயனோசரஸ் புதைபடிமங்கள் கிடைத்தன. இந்த படிமங்களை டாக்டர் கிரிகோரி பிரைஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அப்போது தான் டயனோசரஸ் அழிவுக்கு தட்ப வெப்ப மாற்றம் தான் காரணம் என்பது தெரியவந்தது.

சுமார் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டது. இந்த மாற்றம் படிப்படியாக உருவானது. பூமி சூடாவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது என்று நாம் இப்போது கூறுவது போன்ற நிலை அப்போது காணப்பட்டது. இதன்காரணமாக வடதுருவத்தில் பனிமலைகள் உருகி அதன் குளிர்ந்த தண்ணீர் கடலில் கலப்பது அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து கடலில் வெப்பம் வெகுவாக குறைந்தது. 4 டிகிரி செல்சியஸ் முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்ததால் கடலில் மட்டுமின்றி பூமியிலும் வெப்ப மாறுதல்கள் உருவானது. இதனால் கடல் மற்றும் பூமியில் வாழ்ந்த உயிரினங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இப்படித்தான் டயனோசரஸ் இனமே அழிந்தது. இந்த அழிவும் ஒரேநாளில் நடக்கவில்லை. படிப்படியாக அழிவு தொடர்ந்து முற்றிலும் அந்த இனமே இல்லாமல் போய்விட்டது.

இதுஎல்லாவற்றையும்விட டாக்டர் கிரிகோரி இன்னொன்றையும் சொல்லி மிரட்டுகிறார். அது-

`டயனோசரஸ் அழிவு தொடங்கும் போது எந்த மாதிரியான தட்ப வெப்ப சூழ்நிலை இருந்ததோ, அதுபோன்ற ஒரு நிலை இப்போது தொடங்கி உள்ளது. இந்த நிலை நீடிக்கும் போது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது போன்ற ஒரு அழிவை மனித இனம் சந்திக்க வேண்டியிருக்கும்’

அழகு… ஆரோக்கியம்… ஆரஞ்சு…

பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும்.

சிலர் பழங்களை சாப்பிடாமல் ஜூஸ் செய்து சாப்பிடுகின்றனர். இதில் பழங்களின் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய் விடுகின்றன. முடிந்தவரை பழங்களை நேரடியாக உண்பதே நல்லது. பழங்கள் ஒவ்வொன்றும் பல மருத்துவப் பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த இதழில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான ஆரஞ்சு பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. மஞ்சளும் சிவப்பும் கலந்து பந்து போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழமாகும். அதன் மேல் தோல் நன்கு கனமாக காணப்படும். ஆனால் எளிதில் இதன் தோலை உரித்துவிடலாம்.

ஆரஞ்சு பழத்தின் நறுமணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.

ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

100 கிராம் எடை கொண்ட பழத்தில்

நீர்ச்சத்து – 88.0 கிராம்

புரதம் – 0.6 கிராம்

கொழுப்பு – 0.2 கிராம்

தாதுப் பொருள் – 0.3 கிராம்

பாஸ்பரஸ் – 18.0 மி.கிராம்

சுண்ணாம்புச் சத்து – 24.0 மி.கிராம்

கரோட்டின் – 1100 மி.கிராம்

சக்தி – 53.0 கலோரி

இரும்புச் சத்து – 0.2 மி.கிராம்

வைட்டமின் ஏ – 99.0 மி.கிராம்

வைட்டமின் பி – 40.0 மி.கிராம்

வைட்டமின் பி2 – 18.0 மி.கிராம்

வைட்டமின் சி – 80 மி.கிராம்

ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. இது மனித உடலில் இணிடூடூச்ஞ்ஞுண என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த இணிடூடூச்ஞ்ஞுண வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும்  ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள்  இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தை வளர்ச்சிக்கு

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

தூக்கத்தை வரவழைக்கும் மாமருந்து

சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.

மெலிந்த உடல் பலமடைய

பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.

இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.

இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.

மேனிக்கு அழகூட்ட

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்

பல் உறுதிபட

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும்.

பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும். தாயின் அரவணைப் பிற்குப் பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் அழுவதை நாம் பார்க்கலாம்.

ஆனால் இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது. தாய்- குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அதற்கான விடை கிடைத்துவிட்டது. நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

`ஆக்சிடாக்சின்’ என்னும் ஒருவித ஹார்மோன்கள் பெண்களின் உடலில் காணப்படுகின்றன. இவைதான் தாய்- குழந்தையின் பிணைப்பை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹார்மோன்கள் பணியாற்றுகிறது. தாய்க்கு, பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பை தூண்டுவது, குழந்தைகளை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாக்சின் பங்கேற்கிறது.

பாச அரவணைப்பான `கட்டிப்புடி’ வைத்தியத்தில் தூண்டப்படுவது இந்த ஹார்மோன்கள்தான்!

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா!

மகாராஜா என்றாலே, இப்படி… அப்படித்தான் இருப்பர் என்று வரலாற்று புத்தகங்களில் படித்திருப்பீர்கள். இப்படி ஒரு மகாராஜா பற்றிய, வித்தியாசமான தகவல்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.
மத வேறுபாடின்றி, இவர் தாலி கட்டி வாழ்ந்த மனைவியர் 20 பேர்; இவர்களைத் தவிர, அந்தப்புரத்தில் இவர் கூப்பிட்ட குரலுக்கு 23 பேர். இவர்களுடன், இவர் ஆசை தணியவில்லை. தினமும், ‘சரக்கும்’ வேண்டும்; அதுவும், முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்தால் தான் திருப்தியே வரும்.
இவர் யார் தெரியுமா? பிரிட்டீஷ் ஆதிக்கத்துக்கு முன், ஒன்று பட்ட இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தை அமைத்த மகாராஜா ரஞ்சித் சிங். ‘தி லாஸ்ட் சன்செட்’ என்ற பெயரில், சமீபத்தில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பவரும் வியக்கத்தக்க மனிதர் தான். ஆம்… பாட்டியலா அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங்.
இவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய தகவல்கள்:
கடந்த 1780ல் இருந்து 1839 வரை சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் ஆரம்பித்து, லாகூர் வரை, (அப்போது ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்தது) இவர் ஆதிக்கம் தான். இவர் சமாதி, லாகூரில் உள்ளது. ‘ஷெர் இ பஞ்சாப்’ (பஞ்சாப் சிங்கம்) என்று அழைக்கப்பட்டவர்.
அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் உட்பட, பழமையான சீக்கிய கோவில்கள் கட்டியதில் இவர் பங்கு அதிகம். ஆப்கானிஸ்தானியரை பஞ்சாபில் இருந்து விரட்டியடித்தவர். 1839ல் ரஞ்சித் சிங் இறந்தார். அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. மகாராணி மகதாப் தேவி உட்பட சில ராணிகள், அவருடன் சிதையில் படுத்து உடன்கட்டை ஏறினர்.
ரஞ்சித் சிங்குக்கு பின், அவரின் மகன்களில் கரக்சிங்கிடம் ஆட்சி போனது. ஆனால், 1845ல் கிழக்கிந்திய கம்பெனி மூலம், பிரிட்டீஷ் படை நுழைந்து, அவரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது.
ரஞ்சித் சிங்குக்கு மொத்தம் 20 மனைவியர்; இவர்களில் ஐவர் சீக்கியர்; மூவர் இந்துக்கள்; இருவர் முஸ்லிம். இவர்களில் கரக்சிங்கின் தாய் மகதாப் தேவி மற்றும் ராஜ் கவுர் இருவரும் வயதில் சீனியர் மனைவிகள். பஞ்சாபில் இருந்த காங்க்ரா ராஜ்ஜியத்தில் ஊடுருவிய கூர்க்கா படையினரை விரட்டி, அந்த குறுநில மன்னன் ராஜா சன்சார் சந்துக்கு உதவினார் ரஞ்சித் சிங்.
இத்தனைக்கும் இருவரும் பரம எதிரிகள்; இந்த போரில் நாட்டை காப்பாற்றி தந்ததால், ரஞ்சித் சிங்குக்கு தன் மகளான மகதாப் தேவியை மணமுடித்து தந்தார் காங்க்ரா மன்னன்.
மனைவிகளைத் தவிர, அந்தப்புரத்தில் 23 அழகிகளை தங்க வைத்திருந்தார் ரஞ்சித் சிங். அவருக்கு எப்போதும் ஆட்டம், பாட்டம் இருக்க வேண்டும்; அதற்காக, 12 முதல் 18 வயது வரை உள்ள, மலை கிராமங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்கள் நடனம் ஆடுவர். சில காலம் ஆடிய பின், அவர்களுக்கு கிராமங்களை தானமாக தந்து அனுப்பி விடுவார்.
மதுவில் முத்துக்களை அரைத்து குடிப்பதுடன், தனக்கு தனியாகவே ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சிங் சிங். இந்த மதுவை, ‘திரவ தீ!’ என்று அழைப்பர்.
‘அவர் குடிக்கும் மதுவை, பிரிட்டீஷ் அரசில் உள்ள எவரும் தொடக்கூட முடியாது; அந்த அளவுக்கு தீ போல உடல் பற்றியெரியும். ஆனால், ரஞ்சித் சிங், அனாயாசமாக குடிப்பார்!’ என்று சர்ட்டிபிகேட் தந்திருப்பவர் யார் தெரியுமா? பிரிட்டீஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் ஆக்லாந்து சகோதரி எமிலி ஈடன்.
இவர் திருமணம் செய்த இரு முஸ்லிம் பெண்களில் ஒருவர் மோரன்; இவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் ரஞ்சித். அமிர்தசரஸ் நகரில் பொற்கோவிலுக்கு ரஞ்சித் ஒரு முறை வந்தார். அங்கு பிரார்த்தனை செய்வதை கூட தவிர்த்து, மோரன் வருவதாக தகவல் வந்ததும், அவரை வரவேற்க சென்று விட்டார். இதனால், அதிருப்தி அடைந்த அகாலி தக்த் அமைப்பு, இவருக்கு கண்டனம் தெரிவித்தது.
பார்த்த பெண்களை எல்லாம் திருமணம் செய்வதும், அன்பு காட்டுவதுமாக இருந்த ரஞ்சித் சிங்குக்கு, அத்துடன் ஆசை நிற்கவில்லை. முட்டை வடிவிலான கோகினூர் வைரத்தின் மீது கண் இருந்தது. அந்த வைரத்தின் மதிப்பு 1838லேயே நாலரை கோடி ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதை எப்படியாவது, ஆப்கனில் இருந்து பெற்று விட வேண்டும் என்று திட்டமிட்டார் ரஞ்சித் சிங். ஆப்கான் அமீர் (ராணுவ தளபதி) ஷா சுஜா உல் முல்க், ஒரு முறை குடும்பத்தினர், உறவினருடன், சுற்றுலாவுக்காக வந்திருந்தார்.
அவர்களுக்கு எல்லா ஏற்பாடு களையும் செய்த ரஞ்சித் சிங், கிளம்பும் போது, அவர்களை வீட்டுக் காவலில் வைத்து விட்டார்; வைரத்தை தந்தபின் தான், அவர்களை விடுவித்தார்.
இவரின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பெஷாவர் கவர்னராக இருந்தவர் யர் முகமது. அவரிடம் மிக அழகான பாரசீக குதிரை இருந்தது; அதன் பெயர் லியாலி. அதை பெற வேண்டும் என்று கண் வைத்தார் ரஞ்சித் சிங். அதற்காக, பெஷாவர் கவர்னர் மீது படையெடுத்து, அவரை கொன்றும் விட்டார்; ஆனால், குதிரையை மட்டும் காணவில்லை.
முகமதுக்கு பின், அவரின் இளைய சகோதரன் சுல்தான் முகமது கான், கவர்னராக அமர்ந்தார். ‘முதலில் குதிரையை ஒப்படைத்து விடு; இல்லாவிட்டால்…’ என்று எச்சரித்தார் ரஞ்சித் சிங். இதனால் வேறு வழியின்றி, பாரசீக குதிரையை ஒப்படைத்தார். இந்த குதிரையை பறிப்பதற்காக, பெஷாவர் கவர்னருடன் நடந்த சண்டையில், 1,500 வீரர்கள் அமர்த்தப்பட்டனர்; செலவு 60 லட்சம் ரூபாய்.

பங்ஷன் கீகள் – செயல்பாடு தொகுப்பு

கம்ப்யூட்டர் மலரில் பங்ஷன் கீகளின் செயல்பாடுகளுக்கான தொகுப்பு ஒன்றை முன்பு தந்திருந்தோம். இந்த கீகளின் பயன்பாட்டினைப் புதிய கோணத்தில் கீழே தருகிறோம். இங்கு அவை மற்ற கீகளுடன் இணைந்து என்ன மாதிரியான செயல்பாட்டினைத் தருகின்றன என்று விளக்கப்படுகிறது. கீழே தந்துள்ளவை அனைத்து புரோகிராம்களிலும், விளக்கப்பட்டுள்ளபடி செயல்படும் என எதிர்பார்க்க வேண்டாம். பெரும்பான்மையான கீ இணைப்புகள் ஒரே மாதிரியான செயல்பாட்டினை அனைத்து புரோகிராம்களிலும் தந்தாலும், சில புரோகிராம்கள், வேறு வகையான செயல்பாடுகளைத் தரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கலாம். ஒரு சில செயல்பாடுகள் தற்போது தேவைப்படாமல் இருக்கலாம். எனவே கீகளை அழுத்தி, அவற்றினால் எந்த செயல்பாடும் இல்லாமல் போனால், தொடர்ந்து அவற்றை இயக்காமல் அடுத்த கீ தொகுப்புகளுக்குச் செல்லவும்.
F1

Shift + F1= எம்.எஸ். வேர்ட் டாகுமெண்ட்டில் இவற்றை அழுத்துகையில், டாகுமெண்ட்டின் பார்மட் விஷயங்கள் அனைத்தையும் ஒரு சிறிய விண்டோவில் காட்டும்.
ALT + F1 = அடுத்த பீல்டுக்குச் செல்ல
ALT + Shift + F1 = முந்தைய பீல்டுக்குச் செல்ல
CTRL + ALT + F1 = மைக்ரோசாப்ட் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டும். இது விஸ்டாவில் செயல்படவில்லை.
CTRL + Shift + F1 = எழுத்துவகையினை மாற்று. இதுவும் விஸ்டாவில் செயல்படவில்லை.
F2
Shift + F2 = டெக்ஸ்ட்டை காப்பி செய்தல்
CTRL + F2 = பிரிண்ட் பிரிவியூ கட்டளை (MS Word)

ALT + Shift + F2 = சேவ் கட்டளை (MS Word)

CTRL + ALT + F2 = ஓப்பன் கட்டளை (MS Word)

F3

Shift + F3 = வேர்ட் தொகுப்பில் எழுத்துக்களின் கேஸ் எனப்படும் (பெரிய சிறிய எழுத்து) வகை மாற்றம்.
CTRL + F3 = இது இயக்கப்படும் புரோகிராமினைப் பொறுத்தது. எனவே இதனைப் பரிசோதிக்கும் முன் உங்கள் டாகுமெண்ட்டை சேவ் செய்து கொள்ளுங்கள்.
F4
Shift + F4 = தேடல் அல்லது ஒரு செயலுக்குச் செல்ல (Repeat a find or Go To action) (வேர்ட் தொகுப்பில்)
CTRL + F4 = ஆக்டிவாக இருக்கும் விண்டோவினை மூடும்.
Alt + F4 = ஆக்டிவாக இருக்கும் புரோகிராமினை மூடும். எந்த புரோகிராமும் இயக்கப்படவில்லை என்றால், கம்ப்யூட்டர் சிஸ்டம் டவுண் செய்யப்படும்.
F5
Shift + F5 = முன்பு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குச் செல்ல (MS Word)

CTRL + F5 = எந்தக் கட்டுப்பாடும் இன்றி, இயங்கும் புரோகிராமினை புதிதாய்த் திறக்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனில் இன்டர்நெட்டிலிருந்து மேம்படுத்தும். ALT + F5 = வேர்ட் புரோகிராம் விண்டோவினைச் சுருக்கும்.
CTRL + F5 = வேர்ட் புரோகிராம் விண்டோவினைச் சுருக்கும்.
F6
Shift + F6 = அந்த அந்த புரோகிராமில் வடிவமைத்தபடி. எனவே இதனைச் சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்திடவும்.
CTRL + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறக்கப்பட்ட விண்டோக்களின் ஊடே முன்னோக்கிச் செல்லும்.
CTRL + Shift + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறக்கப்பட்ட விண்டோக்களின் ஊடே பின்னோக்கிச் செல்லும்.
F7

Shift + F7 = வேர்ட் புரோகிராமில் தெசாரஸ் கட்டளையைச் செயல்படுத்தும்.

CTRL + F7 = அந்த அந்த புரோகிராமில் வடிவமைத்தபடி. எனவே இதனைச் சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்திடவும்.

CTRL + Shift + F7 = வேர்ட் டாகுமெண்ட்டில் லிங்க் மூலம் தொடர்புடைய தகவல்கள் அப்டேட் செய்யப்படும்.
ALT + F7 = அடுத்த எழுத்து அல்லது இலக்கணப் பிழையைக் காட்டும்.
F8

Shift + F8 = தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டைச் சுருக்கும்.
CTRL + F8 = புரோகிராம் வடிவமைப்பிற்கேற்ப செயல்படும். பொதுவாக ஒரு ப்ராஜக்ட் விண்டோவினை வேறு அளவில் அமைக்கும்.
Alt + F8 = வேர்டில் மேக்ரோ விண்டோவினைத் திறக்கும்.
F9 : குறிப்பு: இவை வேர்ட் தொகுப்பிற்கு மட்டும்)
Shift + F9 = பீல்ட் கோட் மற்றும் அதன் முடிவு– இவற்றிற்கிடையே மாறும்.
CTRL + F9 = ஒரு காலியான பீல்டை இடைச் செருகும்.
CTRL + Shift + F9 = பீல்டின் தொடர்பைத் துண்டிக்கும்.
ALT + F9 = அனைத்து பீல்டு கோட் மற்றும் அவற்றின் விளைவுகளுக்கிடையே மாறி மாறிச் செல்லும்.
F10 (குறிப்பு: இவை வேர்ட் தொகுப்பிற்கு மட்டும்)
Shift + F10 = = ஷார்ட் கட் மெனு காட்டும்.
CTRL + F10 = டாகுமெண்ட் விண்டோவின மேக்ஸிமைஸ் செய்திடும்.
CTRL + Shift + F10 = ரூலரை இயக்கும்.
ALT + F10 = புரோகிராம் விண்டோவினைப் பெரிதாக்கும்.
F11
Shift + F11 = முந்தைய பீல்டுக்குச் செல்லும். (வேர்ட்)
CTRL + F11 = பீல்டை லாக் செய்திடும்.
CTRL+ Shift+ F11 = லாக் செய்த பீல்டை திறக்கும்.
ALT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் காட்டும்.
ALT + SHIFT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ கோட் காட்டும்.
F12

Shift + F12 = சேவ் கட்டளை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL + F12 = ஓப்பன் கட்டளை விண்டோவினைக் காட்டும்.
CTRL+ Shift+ F12 = பிரிண்ட் கட்டளையைத் தேர்ந்தெடுக்கும்.
இங்கே தரப்பட்டிருப்பதற்கும் மேலாக, பங்ஷன் கீகள் வேறு கீகளுடன் இணைந்து சில செயல்பாடுகளைத் தரலாம்.போட்டோ ஷாப், பேஜ் மேக்கர் போன்ற அடோப் புரோகிராம்கள் அவற்றிற்கான சில கீ இணைப்புகளைக் கொண்டிருக்கலாம்.