Daily Archives: மே 23rd, 2010

உலகின் மிகப்பெரிய பிளாஷ் ட்ரைவ்

எளிதாகக் கையில் எடுத்துச் சென்று பயன்படுத்த நமக்கு உதவுவது பிளாஷ் ட்ரைவ். ஆனால் இதன் கொள்ளளவு நாம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது ஒரு சிலரின் ஆதங்கமாகும். இதுவரை நமக்கு அதிக பட்ச அளவாக 64 ஜிபி கொள்ளளவுடன் பிளாஷ் ட்ரைவ்கள் கிடைத்து வருகின்றன. அண்மையில் இத்துறையில் புகழ் பெற்ற கிங்ஸ்டன் நிறுவனம் தன்னுடைய டேட்டா ட்ராவலர் வரிசையில், 256 ஜிபி கொள்ளளவுடன் பிளாஷ் ட்ரைவ் ஒன்றைத் தயார் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. டேட்டா ட்ராவலர் 310 என்ற பெயரில் வந்துள்ள இந்த ட்ரைவ், ஒளி ஊடுறுவிச் செல்லும் வகையில் அமைப்பினைக் கொண்டுள்ளது. இதன் நீளம் 73.7 மிமீ. தடிமன் 16.1 மிமீ. அகலம் 22.2 மிமீ. எடையும் மிகவும் குறைவு. சற்று தடிமன் அதிகமாக இருப்பதால், அடுத்தடுத்து இரண்டு யு.எஸ்.பி. ட்ரைவ் இருந்தால், இதனைச் செருகிய பின்னர் இன்னொரு பிளாஷ் ட்ரைவினைச் செருகுவது கடினம்.
இந்த ட்ரைவ் செயல்படுகையில், இதனுள்ளே இருக்கும் எல்.இ.டி. விளக்கு எரிந்து காட்டுகிறது. இதன் ட்ரைவ் என்.டி.எப்.எஸ். வகையில் பார்மட் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஜிபி அளவுக்கு மேல் உள்ள பைல்களையும் காப்பி செய்திடலாம். இதிலேயே பாஸ்வேர்ட் ட்ராவலர் என்னும் சாப்ட்வேர் பதிந்து கிடைக்கிறது. முதல் முதலாக இதனைப் பயன்படுத்துகையில் பிரைவேட் ஸோன் என்று ஒரு பகுதியை உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறது. மீதமுள்ள பகுதி பப்ளிக் ஸோன் ஆக பார்மட் செய்யப்படுகிறது. முதல் பகுதியில் காப்பி செய்யப்படும் பைல்களை, நீங்கள் மட்டுமே கையாள முடியும். அதற்கான பாஸ்வேர்ட் பாதுகாப்பினை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதன் விலை எந்த வகையிலும் பொருத்தமானதாக இல்லை. குறிக்கப்பட்டுள்ள விலை ரூ. 48,830. இதனால் விற்பனையாவது சற்று கடினமே.

புதிய ஸ்பைஸ் போன்கள்

மியூசிக் போன்கள் வரிசையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் இரண்டு போன்களை வெளியிடுகிறது. இந்த மாதம் வெளிவர இருக்கும் இவை எம் 6464 மற்றும் எம்6262 என அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு போன்களிலும் யமஹா ஆம்ப்ளிபையர் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பது இவற்றின் சிறப்பு. இதில் உள்ள எம்பி3 பிளேயருக்கு ஒரே கீயில் இயக்கம் தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ புளுடூத் வசதி உள்ளது. இதனுடைய மெமரியினை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
டூயல் சிம் எம் 6464 போனில் 2 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இருப்பதுடன், எப்.எம். ட்ரான்ஸ்மீட்டரும் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அலைவரிசையில் இதிலிருந்து பாடல்களை ஒலிபரப்பலாம். போனை அசைத்தால் பாடல்கள், வால் பேப்பர்கள், கேம்ஸ் ஆகியவை மாறுகின்றன. போனிலேயே ibibo, Reuters, Opera Mini, Mobile Tracker, mgurujee ஆகியவை பதிந்து தரப்படுகின்றன. ஹிந்தி ஆங்கிலம் கலந்து இதில் டெக்ஸ்ட் டைப் செய்திட முடிகிறது.
எம் 6262 போனில் வீடியோ கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் ibibo, Opera Mini, SMS Scheduler, Privacy Lock ஆகியவை தரப்படுகின்றன. தேவையற்ற எண்களிலிருந்து வரும் அழைப்புகளையும் இதில் தடுக்கும் வசதி உள்ளது.
எம்6464 தற்சமயம் ரூ. 5,349 விலையிடப்பட்டு கிடைக்கிறது. எம்6262 விரைவில் சந்தைக்கு வர உள்ளது.

செய்தி துணுக்குகள் (23.5.10)

மீண்டும் ஆதிவாசிகள்!
நியாண்டர்தால் மனிதர்கள் பற்றி படித்திருப்பீர்கள். கற்காலத்தில் பூமியில் வசித்தவர்கள் இவர்கள். எட்டு அடி உயரத்துடன் ஆஜானுபாகுவான உடல் அமைப்புடன் இருந்ததாக வரலாறு கூறுகிறது.
டி.என்.ஏ., (மரபணு) தொழில் நுட்பம் மூலம், இவர்களை மீண்டும் உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆதிகாலவாசிகள் சிலரின் புதைந்த உடல்கள், சமீபத்தில் சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உடல்களில் இருந்து, மரபணுவை எடுத்து, சோதனை கூடத்தில் உயிரணுவை உருவாக்க முடியும் என கருதுகின்றனர். கற்கால மனிதர்கள் மட்டுமல்லாமல், கொடூர பற்களுடன் கூடிய புலிகள், உடல் முழுவதும் ரோமத்துடன் உள்ள காண்டாமிருகங்கள் போன்றவற்றையும் இதே தொழில் நுட்பத்தில் உருவாக்க, விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
***
உலக தேள் மன்னன்!
தேளைக் கண்டால் பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால், சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்த ஆசாமிக்கு, தேள்கள் தான் நண்பர்கள். ரியாத் நகரில் வசிக்கும் இவர் பெயர் மஜத் எல்மார்க். உயிருடன் இருக்கும் தேள்களை பிடித்து, தன் முகத்தில், உதடுகளில் ஓட விட்டு, வேடிக்கை பார்ப்பதுதான் இவரது பொழுதுபோக்கு. “தேள்களுடன் வசிப்பதில் சாதனை படைத்துள்ளார்!’ என உலக சாதனை புத்தகத்திலும், இவர் இடம் பிடித்துள்ளார்.
***
சிங்கப்பூரில் சூயிங்கம்மிற்கு தடை!
உலகிலேயே மிகவும் சுத்தமான நாடு, சிங்கப்பூர். கெடுபிடி சட்டங்கள், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவையே இதற்கு காரணம். சமீபத்தில், இன்னொரு புது சட்டத்தை சிங்கப்பூர் அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி யாருமே சிங்கப்பூரில் சூயிங்கம் பயன்படுத்தக் கூடாது; வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும், சூயிங்கம்மை கொண்டு வரக் கூடாது. அவ்வாறு கொண்டு வந்தால், விமான நிலையத்திலோ, துறைமுகத்திலோ அவை பறிமுதல் செய்யப்பட்டு விடும்.
சூயிங்கம்மிற்கு ஏன் இந்த தடை? இளைஞர்கள் முதல் பெருசுகள் வரை எல்லாருமே சூயிங்கம்மை விரும்பி குதப்பிக் கொண்டே இருப்பர். பின், அது சக்கையானதும் யாருக்கும் தெரியாமல், சீட்டுக்கு அடியில் ஒட்டி வைத்து விடுவர். சிங்கப்பூர் வாசிகளும் இப்படித்தான் செய்தனர். ரயில், பஸ், விமான சீட்கள், பொது அரங்க சீட்கள், பள்ளி, கல்லூரிகளில் மேஜை, சேர் என, எங்கு பார்த்தாலும் சீட்டுக்கு அடியில், கைப்பிடியில் உபயோகித்த சூயிங்கம் காணப்பட்டது. அதை அகற்ற மட்டும் சிங்கப்பூர் அரசுக்கு, பல கோடி ரூபாய் செலவானது.
விளைவு, சூயிங்கம்மிற்கு அரசு போட்டது தடை. இப்போது, சிங்கப்பூரில் போதை வஸ்துகளை பயன்படுத்தினால், எந்த அளவு கடும் தண்டனை கிடைக்குமோ, அதே அளவு தண்டனை சூயிங்கம் உபயோகிப்பவர்களுக்கும் உண்டு. சூயிங்கம் இல்லாததால் இப்போது ஊர், மேலும் சுத்தமாகி விட்டது.
நம்ம ஊரில் இதெல்லாம் நடக்குமா?

சினைப்பை நீர்கட்டி…

சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.

சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. அதிலும் குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது.

இதில் பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் உள்ளது.

பெரும்பாலும் 1முதல் 5 விழுக்காடு வரையிலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தற்காலத்தில் அதிகமாக ஏற்பட மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி சரிவர இருக்காது. 2,3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி நிகழும். சிலருக்கு மாதவிலக்கு குறைவாக வெளிப்படும்.

இவ்வாறு மாதவிலக்கு தள்ளிப்போவது பல பிரச்சனைகளுக்கு வழிகோலுகிறது. உடல் எடை அதிகரிக்கிறது. ஆண்மைத் தன்மை பெண்களுக்கு மிகுதியாகிறது. ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் ரோமம் வளர ஆரம்பிக்கிறது. தேகத்திலும் ரோமங்கள் வளரும். சினைப்பைகள் அளவில் பெரிதாகும். சினைப்பை நீர்க் கட்டிகளில் நீர் சேர்வதே இதற்கு காரணமாகும்.

சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்

நோயுண்டாக்கும் காரணத்தை அறுதியிட்டு கூற முடியுமா எனில் இயலாது என்றுதான் கூறவேண்டும். இந்நோய் பெரம்பாலும் பருவமடைந்த மங்கைகளில் காணப்படும் . எனினும் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.

மரபணு மூலமாகவும், பரம்பரையாகவும் இந்நோய் வரலாம்.

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. ஊகுஏ எனும் ஹார்மோன் குறைந்து காணும். ஃஏ எனும் ஹார்மோன் அதிகரித்துக் காணும். சில சமயங்களில் அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன்கள் அதிகரித்துக் காணும்.

டெஸ்டோஸ்டிரான் அதிகரித்துக் காணும்.

புரோலாக்டின் அதிகரித்துக் காணும்.

மாதவிடாய் கோளாறுகள்

ஒரு பெண் பூப்பெய்திய பின் முறையாக மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு உண்டாகும். இது இயல்பானது. ஆனால் இந்நோய் கண்ட சிலருக்கு மாதந்தோறும் மாதவிலக்கு நிகழாது. சில பெண்களில் மாதவிலக்கு ஏற்பட்டாலும் சினைமுட்டை வளர்ச்சியின்றி மாதவிடாய் நிகழும். இயல்பாக பெண்களில் மாதந்தோறும் சினைப்பையில் இருந்து ஒரு சினைமுட்டை வளர்ந்து வெளிப்படுகிறது.

0.5-1 மி.மீ. அளவிலான கட்டிகள் சினைப்பையில் ஓரத்தில் காணப்படும். பத்துக்கு மேற்பட்ட கட்டிகள் காணப்படும். 20 மி.மீ. அளவுக்கு மேல் கட்டிகள் பெரும்பாலும் பெரிதாவதில்லை. சினைப்பையின் மேற்பரப்பில் நெக்லஸ் அமைப்பில் ஸ்கேன் சோதனையில் கட்டிகள் காணும். சினைப்பை அளவில் பெரிதாக காணப்படும்.

இந்நோயுற்ற பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். ஆMஐ > 30டுஞ்/ஞிட்2 ஆக இருக்கும். இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்திற்கு அதிகமாக இருக்கும். உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடன் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளல் அவசியம்.

மலட்டுத் தன்மை

சினை பை நீர்கட்டிகள் பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மைக்கு 30% வரை காரணமாக இருக்கிறது. சாதாரணமாக கருத்தரிக்க இயலாமல் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான பெண்களுக்கு இந்நோய் இருக்கிறது. இதற்கு சிகிச்சையளித்தாலே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

முடி வளர்ச்சி

பெரும்பாலும் பெண்களுக்கு முகத்திலும், உடலிலும் அதிகளவில் முடிகள் இருப்பதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக முடிவளர்ச்சி உடலில் உண்டாகும்.

குறிப்பாக மேலுதடு, கீழ்தாடை, மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, முன்கைகளில் முடி வளர்ச்சி காணப்படும்.

தோலில் காணப்படும் மாற்றங்கள்

உடலில் சில இடங்களில் கருமை நிறம் அதிகரித்து காணும்.

பெரும்பாலும் கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதிகளில் இம்மாற்றம் காணப்படுகிறது.

ஆய்வுகூடத் தேர்வுகள்

ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.

ஹார்மோன்களின் அளவுகளை பரிசோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

மருத்துவம் மற்றும் ஆலோசனைகள்

சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன என்பதை சூதகதடை, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுணங்களைக் கொண்டு யூகிக்கும்போது அல்லது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கும்போது பெண்கள் செய்யவேண்டிய முதற் காரியம் அவர்களது உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதேயாகும்.

உடல் எடையை குறைத்தல்

தினமும் காலை அல்லது மாலை வேளையில் 2 முதல் 3 கி.மீ தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடைபயிற்சி மேற் கொள்வதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கின்றன. நடைபயிற்சி மூலம் ஒரு மாத காலத்திலேயே நல்ல பலனை அடையலாம்.

நடை பயிற்சியுடன் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இயற்கை உணவுகளான காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் சீராக

சினைமுட்டை முதிர்ச்சியடைந்து வெளிப் படுதலைத் தூண்ட ஆங்கில மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

எனவே சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு ஏற்ற மருத்துவம் சித்த மருத்துவமே என்று கூறலாம். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் பக்க விளைவுகளின்றி அறுவை சிகிச்சையின்றி சினைப்பை நீர்க்கட்டிகளை அகற்றிவிடலாம்.

சினைப்பை நீர்க்கட்டிகள் கரைய தொடங்குகின்ற போதே சினைமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் சூழல் உருவாகிறது.

புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும். புகைப் பிடிப்பதால் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது.

முடிகளை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கிறது. சவரம் செய்தல், பிளீச்சிங் செய்தல், வாக்சிங் செய்தல் போன்ற முறைகளை கையாளுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை நாடவேண்டியது அவசியம். எலக்ரோலைசிஸ் மற்றும் லேசர் முறையில் தற்போது முடிகளை சிறப்பாக நீக்குகின்றனர். ஆனால் செலவு அதிகம்.

தகுந்த சிகிச்சை மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு கண்டிப்பாக உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையை நாடுவது இன்றியமையாத தாகும்.

செயற்கை செல் உருவாக்கி விஞ்ஞானிகள் புரட்சி: உயிர் உருவாக்க வழி கண்டனர்

உயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக, செயற்கை செல்லை உருவாக்கி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

செல் என்பது, ஒரு உயிர் அணு. இது உட்கரு, மரபணுவை நிர்ணயிக்கும் டி.என்.ஏ., சைட்டோபிளாசம், செல் சுவர் உட்பட பல பாகங்கள் உள்ளன. “குளோனிங்’ முறையில், ஒரு உயிரினத்தின் செல்லிலிருந்து, மரபணுவை எடுத்து, மற்றொரு செல்லில் புதைத்து பலபடியாக்கி, அதே உயிரினத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். இப்போது, அதையும் மீறி, ஒரு புதிய செல்லையே உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இதை “சிந்தடிக் செல்’ என்றழைக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதற்கான முயற்சியை, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் துவக்கினர்.

ஒரு செல்லின் மொத்த மரபணுவையும், வேறு ஒரு புதிய செல்லுக்கு மாற்றி, அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் மேரிலாண்டை சேர்ந்த கிரெய்க் என்ற விஞ்ஞானி. அவர் தன் குழுவுடன் நடத்திய ஆய்வு வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து, ஒரு செல் உயிரினமான பாக்டீரியாவின் செல்லில், செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ., மூலக்கூறுகளை செலுத்தி, அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். அதில் ஒரு மரபணு ஜோடி பொருத்தத்தில் தவறு நேர்ந்ததை, கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டறிந்தனர். பின், அதை சரி செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, அதை மீண்டும், வேறு ஒரு செல்லில் பயன்படுத்தினர். அதன் வளர்ச்சியை கண்டு ஆச்சரியமடைந்த அவர்கள், அந்த செல்லின் முற்றிலும் மாறுபட்டிருந்த மரபணுவை, மீண்டும், வேறு ஒரு உயிரினத்தின் செல்லில் செலுத்தினர். அப்போது தான் ஆச்சரியம் நிகழ்ந்தது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ., புதிய மரபணுவுடன், தாய் செல் போலவே, வளர்ச்சி அடைய துவங்கியது. வேறு விதமாக சொன்னால், ஆட்டின் உயிரணு மாட்டின் உயிரணுவாக மாறியது. அப்படியானால் மரபணுவிலுள்ள குரோமசோம்களையே மாற்றி வேறுவிதமாக செய்யும் சாதனை இது. “செயற்கையாக உருவாக்கப்பட்ட புதிய செல், மருத்துவ உலகில் பல புதிய பரிணாமங்களை தோற்றுவிக்கும்’ என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை அவர்கள் “சிந்தடிக் செல்’ என்று அழைக்கின்றனர்.

பாரம்பரிய நோய்கள் உட்பட பலவற்றுக்கும், இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும். உதாரணத்திற்கு அழுக்கு தண்ணீரை மிகவும் சுத்தமான தண்ணீராக்குவது, குறுகிய காலத்தில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பது போன்றவைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் “உயிரி ஆயுதமாக இது பயன்படுத்தப்படலாம்’ என்ற அச்சமும் பேசப்படுகிறது. ஆகவே மரபுப்படி பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்த கமிஷன் தலைவர் அமி குட்மானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியுள்ளார். இந்த வெற்றியை பாராட்டிய அவர், ” மருத்துவ, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய துறைகளில் இது எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உலகில் சிறியவை

நாம் மிகப்பிரமாண்டமான இந்த உலகைப் பார்த்து பிரமித்தாலும், நம்மை மேலும் வியக்க வைப்பது மிகச் சிறியவைதான். ஆம்… மிகச்சிறிதான அணு அணுவாகச் சேர்ந்ததுதானே இந்த உலகமே. சீறும் சிறுத்தையைப் பார்த்தால் மிரண்டுவிடும் நமக்கு, சிறுத்தைக் குட்டியை பார்த்தால் அருகில் சென்று கொஞ்சி விளையாட ஆசை வந்துவிடும். எனவே மிகச் சிறியதில் நமக்கு ஈர்ப்பு அதிகம்தான். அப்படி உலகில் மிகச்சிறிய சில தகவல்கள் உங்களை அதிசயிக்க வைக்கக் காத்திருக்கிறது.

அதிசய குழந்தை

ஆரோக்கியமான குழந்தை என்றால் பிறக்கும்போது சுமார் 3 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் ஒரு குழந்தை வெறும் 280 கிராம் எடையுடன் பிறந்தது. உலகில் மிகக்குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய குழந்தை இதுதான். அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள மருத்துவமனையில் 2006ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி இந்தக் குழந்தை பிறந்தது. இதன் பெயர் அமைலியா டெய்லர்.

கருவான 157-வது நாளிலேயே (6 மாதங்களில்) பிறந்துவிட்டதால் இந்தக் குழந்தையின் எடை குறைவாக இருந்தது. இந்தக் குழந்தை பிறந்தபோது 24 சென்டிமீட்டர் உயரம்தான் இருந்தது. 400 கிராமிற்கு குறைவாக பிறக்கும் எந்தக் குழந்தையும் வாழ்வது கடினம் என்பது மருத்துவ உலகின் முடிவு. ஆனாலும் அமைலியா டெய்லர் வாழ்ந்து வருவது இன்னொரு ஆச்சரியம். படத்தில் நீங்கள் பார்ப்பது அந்த குழந்தையின் பிஞ்சு பாதங்களைத்தான்.

குரங்கின் விலை ரு.68 ஆயிரம்

விரல் இடுக்கில் ஒருவித நடுக்கத்துடன் பற்றிக் கொண்டிருப்பது எலிக்குட்டிகளல்ல, குரங்கு குட்டிகள். `பிக்மி மார்மோசெட்’ எனப் படும் இந்த இன குரங்குகளும் சாதாரண குரங்குகள்போல நம்மை மகிழ்வூட்டும், பலவித சேட்டைகளில் ஈடுபடும். ஆனால் அடர்ந்த வனப் பகுதியில் வசிக்கும் இவை நம்மை நெருங்கி வருவதில்லை. இந்த வகை குரங்குகள் பிரேசில், ஈகுவேடார் நாட்டின் வனங்களில் காணப்படுகின்றன.

இந்தக் குட்டிகளின் உயரம் வால் பகுதியுடன் சேர்த்தே 6 அங்குலம்தான். இரண்டு முதல் 6 வரை கூட்டமாக சேர்ந்து வாழும் இந்த வகை குரங்குகளை நீங்கள் விரும்பினால் வீட்டிலும் வளர்க்கலாம். ஒரு குரங்கிற்கு 68 ஆயிரம் ருபாய் செலவழித்தால் உங்கள் கைகளிலும் விளையாடத் தயாராக இருக்கிறது இந்த குட்டிக் குரங்குகள்!

மிகச்சிறிய கேமரா

படத்தில் நீங்கள் பார்ப்பதுதான் உலகின் மிகச்சிறிய டிஜிட்டல் கேமரா. இது நமது 2 விரல் அகல அளவில்தான் இருக்கிறது. படம் பிடிப்பதற்காக ஒரே ஒரு பொத்தான் மட்டுமே உண்டு. மற்றபடி வி பைன்டர், திரை போன்றவையெல்லாம் கிடையாது. இந்த கேமராவை வடிவமைத்தவர் பெயர் சங்க்வூ பார்க் என்பதாகும். படம் பிடித்தபின் கேமராவை நேரடியாக கணினியுடன் இணைத்து படங்களை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

இது டி.வி. தாங்க…

இவர் அணிந்திருப்பது முக்குக் கண்ணாடிஅல்ல, உலகின் மிகச்சிறிய டி.வி. ஜப்பான் விஞ்ஞானிகள் இந்த டி.வி.யை உருவாக்கி உள்ளனர். தனி ஒருவர் எங்கு வேண்டுமானாலும் அணிந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. `டி3-எப்’ என்ற பெயருடைய இந்த சிறிய டி.வி.யின் விலை கொஞ்சம் பெரிய்ய்..யது. சுமார் 45 ஆயிரம் ருபாய். அம்மாடியோவ்!

`பைட்’ முதல் `ஷீட்டா பைட்’ வரை…

ஒரு பொருளின் எடையை மில்லி கிராம், கிராம், கிலோ கிராம், டன்… என்று குறிப்பிடுவது போல மின்னணு சாதனங்களான கம்ப்யூட்டர் மற்றும் மெமரி கார்டுகளில் உள்ள நினைவுத்திறன் பைட், கிலோ பைட், மெகா பைட்…. என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு `பைட்’ (Byte) என்பது ஒரு எழுத்து ஆகும். உதாரணமாக `அ’ என்ற எழுத்தை கம்ப்யூட்டர் நினைவில் பதிவு செய்தால் அது `பைட்’ என்று கணக்கிடப்படும். எழுத்து மட்டுமல்ல, ஒரு காலி இடம் (Space) விட்டால் கூட அது ஒரு பைட் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இதற்கு அடுத்தபடியாக வருவது `கிலோ பைட்’ (Kilo Byte). ஒரு கிலோ பைட் என்பது ஆயிரம் `பைட்’ கள் சேர்ந்தது ஆகும். உதாரணமாக சொல்வது என்றால் ஒரு ஏ4 அளவுள்ள தாளில் இடம் பெறும் தகவல்கள் சராசரியாக ஒரு கிலோ `பைட்’ அளவில் இருக்கும். ஆங்கிலத்தில் கிலோ பைட் என்பதை சுருக்கமாக கே.பி. என்பார்கள்.

அடுத்து வருவது மெகா பைட் (MegaByte). 10 லட்சம் `பைட்’ டுகள் சேர்ந்தது ஒரு மெகா பைட் ஆகும். சுமார் 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் உள்ள தகவல்களை ஒரு மெகா பைட் என்று உதாரணத்துக்கு குறிப்பிடலாம். ஆங்கிலத்தில் இதை எம்.பி. என்று சுருக்கமாக கூறுவதுண்டு.

தொடர்ந்து வருவது ஜிகா பைட் (Giga byte). 100 கோடி `பைட்’ டுகள் சேர்ந்தது ஒரு ஜிகா பைட் ஆகும். சுருக்கமாக ஆங்கிலத்தில் இதை ஜி.பி. என்று அழைப்பார்கள். ஒரு முழு நீள தமிழ் சினிமா படத்தை ஒரு ஜி.பி. அளவில் அடக்கி விடலாம்.

லட்சம் கோடி பைட்டுகள் சேர்ந்தது டெரா பைட் (Tera Byte) என்று அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஜி.பி. சேர்ந்தது ஒரு டெரா பைட் ஆகும். சுருக்கமாக இதை டி.பி. என்பார்கள். ஒரு டெரா பைட் என்பதற்கு உதாரணம்:- என்சைக்ளோபீடியா எனப்படும் பல பாகங்கள் கொண்ட ஆங்கில கலைக்களஞ்சியத்தின் ஆயிரம் பிரதிகளை ஒரு டெரா பைட் அளவில் அடக்கிவிடலாம்.

அடுத்து வருவது பீட்டா பைட் (Peta Byte) . ஒரு பீட்டா பைட் என்பது ஒன்றுக்கு பிறகு 15 பூஜ்ஜியங்கள் கொண்டதாகும். அதாவது ஆயிரம் டெரா பைட் கொண்டது ஒரு பீட்டா பைட். சுமார் 50 ஆயிரம் கோடி பக்கங்கள் கொண்ட தகவல்களை ஒரு பீட்டா பைட் அளவில் பதிவு செய்து வைக்கலாம். இணைய தள சேவை நிறுவனமான கூகுள் ஒரு நாளில் 24 பீட்டா பைட் அளவுள்ள தகவல்களை கையாளுகிறது.

மிகப்பெரிய அளவாக இப்போது உருவாகி இருப்பது தான் ஷீட்டா பைட் (Zetta Byte). ஒன்றுக்கு பிறகு 21 பூஜ்ஜியங்கள் கொண்டது ஒரு ஷீட்டா பைட் ஆகும். மின்னணு அளவீடுகளில் இப்போதைக்கு மிகப்பெரிய அளவு இது தான். இதற்கு அடுத்தபடியாக யோட்டா பைட் (Yotta Byte) உள்ளது. ஒரு யோட்டா பைட் என்பது ஒன்றுக்கு பிறகு 24 பூஜ்ஜியங்கள் கொண்டதாகும். ஆனால் இந்த அளவு அங்கீகாரம் பெறவில்லை.

மூவி எடிட்டிங் டூல்ஸ்

நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடுகிறீர்களா? ஆன்லைனில் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவுகிறது http://pixorial.com/ என்னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அடோப் போட்டோ ஷாப் அல்லது அண்மைக் காலத்திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவுகிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து டூல்களையும் தருகிறது. நம் வீடியோ பைல்களுக்கு இந்த தளம் 10 ஜிபி இடம் தருகிறது. 800 எம்பி வரையிலான அளவில் எந்த பார்மட்டிலும் வீடீயோ பைல்களை அனுப்பி மெருகூட்டலாம். AVI, FLV, MP4, MPEG, DV, மற்றும் WMV என அனைத்து வகை பார்மட் பைல்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்கிறது.
உங்கள் வீடியோ பைலை இந்த தளத்தில் அப்லோட் செய்தவுடன், இந்த தளம் தரும் எளிய ஆன்லைன் எடிட்டரைப் பயன்படுத்தலாம். கிளிப் காட்சிகளை எப்படி இணைப்பது என்ற வரிசையைக் காட்டலாம். இதனை ஒரு ஸ்டோரிபோர்டாக அமைக்கலாம். பின்னர் ஒவ்வொன்றுக்கும் நேரம் அமைப்பது, தோன்றி மறைவது போன்ற எபக்டுகளைத் தரலாம். தலைப்புகளை அமைக்கலாம். மொத்தமாக அனைத்து முடிந்த பின்னர், மூவியினை அதிகமான அல்லது குறைந்த ரெசல்யூசனில் வடிவமைத்து டவுண்லோட் செய்திடலாம். நீங்கள் விரும்பினால் பின்னர் இதனை எந்த சோஷியல் நெட்வொர்க் தளங்களிலுல் பதியலாம். அல்லது டிவிடியில் காப்பி செய்திடலாம்.
முதலில் இந்த தளத்தில் நுழைந்தவுடன், உங்களுக்கென உள்ள இமெயில் அக்கவுண்ட் மற்றும் அதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து அக்கவுண்ட் ஒன்று தொடங்க வேண்டும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் ஹோம் வீடியோ பைலை அப்லோட் செய்வது, உங்களுடைய ÷ஷாவினை நீங்களே உருவாக்குவது மற்றும் உங்கள் படைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.
உங்களுக்கென இந்த தளத்தில் தரப்படும் 10 ஜிபி இடத்தில் உங்கள் வீடியோக்களைப் பதிந்து வைக்கலாம். அல்லது உங்களுக்குப் பிரியமான சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பதிந்து வைக்கலாம்.
இந்த தளத்தின் முகவரி : http://www.pixorial.com/