Daily Archives: மே 24th, 2010

இந்தியாவில் வெளியானது ஆபீஸ் 2010

சென்ற வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆபீஸ் 2010, ஷேர்பாய்ண்ட் 2010, விசியோ 2010 மற்றும் ப்ராஜக்ட் 2010 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. எந்த நேரத்திலும், எந்த வகையிலும், வணிக ஆவணங்கள் தயாரிப்பு, அலுவலகப் பயன்பாடு ஆகியவற்றிற்கு, மக்கள் பழக்கப்பட்ட வகையில், கூடுதல் பயன் அளிக்கும் விதமாக அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைத் தரத் திட்டமிட்டு இவற்றை வடிவமைத்து வெளியிட்டதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆபீஸ் 2010 சார்ந்த தயாரிப்புகள் அனைத்தும், வர்த்தக நிறுவனங்களுக்கு சிக்கனத்தை ஏற்படுத்துவதாகவும், புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து, நிறுவனங்களை மென்மேலும் வளர்ப்பதற்குத் தேவையான கூறுகளை உள்ளடக்கியதாக இருப்பதாகவும் இந்த தொகுப்புகள் உள்ளன என்று மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் ரவி வெங்கடேசன் தெரிவித்தார்.
இவற்றுடன் ஆபீஸ் மொபைல் 2010 தொகுப்பினையும் மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விண்டோஸ் 6.5 இயக்கத் தொகுப்பு இயங்கும் மொபைல் போன்கள், நோக்கியா ஸ்மார்ட் வகை மொபைல்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு அதிகம் பயன்படுத்தப்படும் இ–சிரீஸ் வகை மொபைல்களில் இந்த தொகுப்பு அறிமுகப் படுத்தப்பட்டு பயன்படுத்தப் படும். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தொகுப்புகள், சில்லரை விற்பனையாக, மக்களுக்கு வரும் ஜூன் இரண்டாம் வாரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்சத்து வைட்டமின் ‘D’

உடல், மன ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது உயிர்சத்துக்கள்தான். இவை நமது உடலில் பிற சத்துக்களுடன் சரி விகிதத்தில் சேர்வதனாலேயே நமக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்கிறது. உடலுக்கு உயிர்சத்துக்களை நீண்டகாலம் தேக்கி வைக்கும் தன்மை கிடையாது.

எனவே தினமும் உயிர்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் குறிப்பிட்ட சில அசைவ உணவுகளை சாப்பிடுவதாலும் மட்டுமே கிடைக்கின்றன.

இந்த உயிர்சத்துக்களான வைட்டமின்கள் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் உடலுக்கு மிகவும் முக்கியமான உயிர்சத்தான வைட்டமின் ‘ஈ’ பற்றி அறிந்து கொள்வோம்.

வைட்டமின் ‘D’

மனித உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும். நோய்களைத் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்குண்டு.

வைட்டமின் ‘D’- யை நமது உடல் சூரிய ஒளியின் உதவி கொண்டு உற்பத்தி செய்து கொள்கிறது. அதிகாலை சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடலின் சருமப் பகுதியில் படுகிறது. சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து வைட்டமின் ‘D’ உற்பத்தி செய்யப்படுகிறது.

வைட்டமின் ‘D’ பொதுவாக இருவகைப்படும்.

வைட்டமின் ‘D2’, வைட்டமின் ‘ஈ3’

வைட்டமின் ‘D2’ தாவரங்களின் மூலம் அதாவது காய், கனிகள், கீரைகள் மூலம் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D3’ சூரிய ஒளியின் மூலம் தான் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D3’ ஆனது உடலின் இரத்த ஓட்டத்தை சீர்செய்து உடலுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை உட்கிரகிக்க உதவுகிறது.

வைட்டமின் ‘D’-ன் பயன்கள்

· எலும்புகளை பலப்படுத்தும்

· உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

· எலும்பு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

· குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

· வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்குகிறது.

· தசைகளின் இளக்கத்தைத் தடுக்கிறது.

· மூட்டுகளில் உண்டாகும் வலியை தடுக்கும் குணம் இதற்குண்டு.

· நரம்பு, எலும்பு சந்திப்புகளை பலப் படுத்துகிறது.

· சருமத்தை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

· ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க வைட்டமின் டி மிகவும் பயன்படுகிறது.

· சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்குகிறது. திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

வைட்டமின் ‘D’சத்து நிறைந்துள்ள உணவுகள்

பால், மீன், முட்டை, மீன் எண்ணெய், மாமிசம், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றில் அதிகம் கிடைக்கிறது.

ஆனால் இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியின் மூலமே அதிக வைட்டமின் ‘ஈ’ உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D’ உடலுக்கு கிடைக்க தினமும் காலை அல்லது மாலை வெயிலின் ஒளியானது உடம்பில் படுமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால்

வைட்டமின் ‘D’ குறைந்துவிட்டால், நரம்புகளில் பாதிப்புகள், முதுகெலும்பு கோளாறு, பற்கள் கோளாறு முதலியவை உண்டாகும். இது தவிர பித்த நீரில் கோளாறு உருவாகும்.

பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.

இந்த வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால் ரிக்கட்ஸ் என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

பொதுவாக வைட்டமின் ‘D3’ தான் குடலிலிருந்து கால்சியத்தை உறிஞ்ச பயன்படுகிறது. இதனால் பாராதைராய்டு சுரப்பிகள், பாராத்தார்மோன் அதிகமாக சுரந்து, எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்து இரத்தத்தில் அதன் அளவை குறைக்கிறது. இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி குன்றி வலுவிழந்த விடுகின்றன. இதற்கு ரிக்கட்ஸ் என்று பெயர்.

ரிக்கட்ஸ் நோயின் அறிகுறிகள்

ஒன்றரை வயதில் மூடவேண்டிய உச்சந்தலைக் குழி மூடாமல் இருத்தல்.

தலை எலும்புகளின் வளர்ச்சி குன்றி, தலையில் முன் பக்கம் பெரிதாக இருத்தல், சத்து குறைவான நிலை முக்கியமாக இரும்பு மற்றும் புரதக் குறைவு உண்டாதல்.

கை, கால் முட்டி தடித்து இருத்தல், நெஞ்சு எலும்புக் கூடாக இருத்தல். கூன் விழுந்த முதுகு இவை அனைத்துமே ரிக்கட்ஸின் அறி குறிகளாகும்.

நீரிழிவு உயர் இரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் ‘D3’ உற்பத்தி குறைவாகவே இருக்கும்.

வைட்டமின் ‘D’ சத்துள்ள உணவுகளை உண்டு அதன் பலனை அடையலாம்.

நவீன வசதிகளுடன் செயற்கை `கை’

அதிகரிக்கும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். வேறுசில பயங்கர வியாதிகளாலும் உடல் உறுப்புகள் செயலிழக்கலாம். இதுபோல திடீர் சம்பவங்களால் கை, கால்களை இழந்தவர்கள் வாழ்வே திசைமாறிவிடும்.

செயற்கை கை, கால்கள் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனாலும் அவை இயற்கையான கை, கால்கள்போல செயல்படாது. பெயரளவில் ஒரு அங்கமாகவே இருக்கும்.

இந்தக் குறையை களைந்து விபத்தில் கைகளை இழந்தவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் நவீன வசதிகள் நிறைந்த செயற்கை கை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ள மற்ற செயற்கை கைகளைவிட இது கொஞ்சம் நவீனமானது. குறிப்பாக `புளூடூத்’ தொழில்நுட்பம் முலமாக செயல்படக்கூடியது. இதன் உதவியால் எந்த விதமான பொருட்களையும் இயற்கை கைகளைப் போலவே பற்றிப்பிடித்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 5 விரல்களையும் தனித்தனியாக இயல்பான விரல்கள்போல இயக்க முடியும். இதன் உதவியுடன் 90 கிலோ எடையைக் கையாள முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டச் பயோனிக்ஸ் நிறுவனம் இந்த செயற்கை கையை வடிவமைத்துள்ளது. இதற்கு `ஐ லிம்ப் ஹேண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டே வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக் கை தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. விபத்தில் கையை இழந்த தீயணைப்பு வீரர் ஐயன் ரெய்டு என்பவருக்கு இந்த செயற்கைக் கை முதல் முறையாக பொருத்தப்பட்டது. `கை துண்டிக்கப்பட்டதால் இழந்த உணர்வுகளை மீண்டும் பெற்றிருப்பதாகவும், அனைத்து வேலைகளையும் தடையின்றி செய்ய முடிவதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.

அங்ககீனம் அடைந்தவர்களுக்கு அளவற்ற பயன்தரக் கூடியது இந்தக் கை!

எப்போதும் காய்க்கும் ருத்திராட்ச மரங்கள்

இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில், ருத்திராட்சம் என்பது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட ருத்திராட்ச காய்களை அணிவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை கிடைப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகிறது. முனிவர்களும், ரிஷிகளும், பண்டிதர்களும் ருத்திராட்சம் அணிந்து, இறைவனை நோக்கி தவம் செய்தனர். ஒரு முகம், ஐந்து முகம் என பல வடிவங்களில் ருத்திராட்சங்கள் கிடைக்கின்றன. ருத்திராட்ச காய்கள், ருத்திராட்ச மரங்களில் விளையும் பழங்களில் இருந்து பெறப்படுகின்றன.
பொதுவாக, மலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மரங்கள் வளரும். தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையின், பல பகுதிகளில் ருத் திராட்ச மரங்கள் காணப்படுகின்றன. ருத்திராட்ச பழங்களை காய வைக்கின்றனர்.
அதில் இருந்து ருத்திராட்ச காய்களை பிரித்தெடுக்கின்றனர். வனப்பகுதிகளில் மரக் குச்சிகளை பொறுக்குவதற்காக ஆதிவாசி இன மக்களுக்கு அனுமதி தரப்படுகிறது. அவர்கள், ருத்திராட்ச பழங்களை பொறுக்கி வந்து, மாலைகளாக தயார் செய்து விற்கின்றனர். ஆண்டு முழுவதும் ருத்திராட்ச மரத்தில் காய்கள் காய்க்கும் என்பது தான் தனிச்சிறப்பு.

தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனத்தின் பெயரில் அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக, வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வங்கி கணக்கு ரகசிய எண், வேலை, எந்த நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பூர்த்தி செய்து உடனடியாக பதில் அனுப்ப வேண்டும். கடிதம் கிடைத்து ஏழு நாட்களுக்குள் மறுபதிவு  செய்யாவிட்டால் ஜி-மெயில் கணக்கு நிரந்தரமாக காலாவதி ஆகிவிடும். இவ்வாறு குறிப்பிட்டிருந்த கடிதத்தைப் பார்த்த வாடிக்கையாளர்கள், குழம்பினர். சில நாட்களுக்குப் பின்னரே, இக்கடிதம் போலியானது என தெரிந்தது.

இதுகுறித்து, கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: கூகுள் நிறுவனம் சார்பில், அது போன்ற கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. சில விஷமிகள் மோசடி செய்யும் எண்ணத்தில், கூகுள் நிறுவன பெயரில் தவறான கடிதத்தை அனுப்பியுள்ளனர். வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, பண மோசடிகளில் ஈடுபடும் எண்ணத்துடன் அவர்கள், ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்று தனிப்பட்ட விவரங்கள் கேட்டு, நாங்கள் ஒருபோதும் கடிதம் அனுப்புவது கிடையாது. தனிப்பட்ட விவரங்கள் கேட்டு வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, வாடிக்கையாளர்களை அவ்வப்போது நாங்கள் எச்சரித்து வருகிறோம். இதுபோன்ற கடிதங்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம்.

கடிதங்கள் குறித்து சந்தேகம் எழுந்தால்,  http://mail.google.com/support/bin/answer என்ற முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களை கொண்டு, போலியான கடிதங்களை தெரிந்து கொள்ளலாம். இன்டர்நெட் பயன்படுத்துவோர், இதுபோன்று வரும் மோசடி கடிதங்களை விசாரணை மையங்கள் உதவியுடன் அறிந்துகொண்டு öŒயல்படுவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

சின்னப்புள்ளி… 100 கோடி பக்கங்கள்…

கம்ப்யூட்டர்களில் தகவல்களை சேமித்து வைக்க `ஹார்டு டிஸ்க்’ எனப்படும் நினைவுத்தகடு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல செல்போன்கள், டிஜிட்டல் கேமிராக்கள் போன்றவற்றில் தகவல்களை பதிவு செய்ய `மெமரி கார்டு’ வசதி உள்ளது. கொள்திறனுக்கு ஏற்ப இந்த நினைவுத்தகடுகள் கிடைக்கின்றன.

ஆரம்ப காலகட்டங்களில் இந்த நினைவுத்தகடுகள் அளவில் பெரிதாக இருந்தன. தொழில்நுட்பம் வளரவளர சிறிய ஸ்டாம்ப் அளவில் உள்ள மெமரி கார்டில் பலநூறு பக்கங்கள் உள்ள தகவல்களை சேமிக்கும் வசதி உருவானது. இப்போது நானோ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதைவிட பலமடங்கு சேமிப்பு வசதி, ஆனால் மிகச்சிறிய மெமரி கார்டு என்ற அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில் வந்துள்ள புதிய தொழில்நுட்பம் தான் `நானோ டாட்ஸ்’. அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பகுதியைச்சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த நானோ டாட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மெமரி கார்டு என்பது ஒரு சதுர அங்குலம் அளவில் இருக்கும். இந்தச் சிறிய `சிப்’-ல் லட்சக்கணக்கான `நானோ டாட்’ கள் இடம்பெற்று இருக்கும். இவை காந்த தொழில்நுட்பத்தில் இயங்கும். அடுத்த கட்டமாக லேசர் தொழில்நுட்பத்தில் இதை இயக்கும் வகையில் ஆய்வுகள் நடக்கிறது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் இதைவிட அதிக அளவில் தகவல்களை சேமிக்கும் வகையில் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் மெமரி கார்டுகள் தயாரிக்கப்படும்.

லஞ்ச வழக்கில் கைதான கேதன் தேசாயின் உதவியாளர் ஜித்தேந்தர் பால் சிங்கின் வீட்டில் விலை உயர்ந்த 1,000 சட்டைகள், 200 கோட், 100 ஜோடி ஷூக்கள்

லஞ்ச வழக்கில் கைதான கேதன் தேசாயின் உதவியாளர் ஜித்தேந்தர் பால் சிங்கின் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகளே ஆச்சர்யப்படும் வகையில், விலை உயர்ந்த 1,000 சட்டைகள், 200 கோட், 100 ஜோடி ஷூக்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய், மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கேதன் தேசாயின் உதவியாளராகச் செயல்பட்ட ஜித்தேந்தர் பால் சிங் என்பவரும் கைது செய்யபட்டார். தன்னை ரியல் எஸ்டேட் அதிபர் என கூறிக் கொள்ளும் ஜித்தேந்தர், உண்மையில் கேதன் தேசாயின் நம்பத்தகுந்த உதவியாளராகச் செயல்பட்டு வந்தார். லஞ்சம் வாங்கும் விவகாரங்களில், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கும், தேசாய்க்கும் இடையே இடைத்தரகராகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள ஜித்தேந்தர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த பொருட்களை பார்த்து சி.பி.ஐ., அதிகாரிகளே மலைத்துப் போயினர். ஜித்தேந்தர் சிங், ராஜபோக வாழ்க்கை நடத்தி வந்தது தெரிய வந்தது. அவரது வீட்டு அறையில் மிகவும் விலை உயர்ந்த 1,000க்கும் மேற்பட்ட சட்டைகள் இருந்தன. கோடீஸ்வரர்களும், அதிகாரிகளும் அணியும் விலை உயர்ந்த 200 டிசைனர் கோட்டுகளும் இருந்தன.

விலை மதிப்புள்ள 15 மொபைல் போன்கள் (ஒவ்வொரு போனின் விலையும் தலா 10 லட்சம் ரூபாய்), 100 ஜோடி ஷூக்கள் (ஒவ்வொன்றும் தலா 70 ஆயிரத்தில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் விலை உடையவை), விலை உயர்ந்த ஒயின் பாட்டில்கள் (ஒவ்வொரு பாட்டிலும் தலா 25 ஆயிரம் ரூபாய்) ஆகியவையும் இருந்தன. இவை அனைத்தையும் சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறுகையில், “ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் ஒரு நபர், அந்த தொழிலில் கிடைக்கும் வருவாய் மூலம், பழங்கால மன்னர்கள் போல் ராஜபோக வாழ்க்கை நடத்துவது என்பது சாத்தியமற்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக நடந்த முறைகேடுகளில், இடைத்தரகராக செயல்பட்டதன் மூலமே, ஜித்தேந்தர் இந்த அளவுக்கு ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளோம்’ என்றனர்.

“சம்மரை’ சமாளிப்பது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும், வெயில் 41 டிகிரி செல்ஷியஸ் அடிக்கும்போது, நம்மால் தாங்க முடிவதில்லை. இந்தாண்டு இன்னும் வெயில் காலம் முடியவில்லை. அதற்குள், “லைலா’ புயல் வந்து ஓரளவு வெயிலை குறைத்தாலும், இந்த புயல் கரையை கடந்தவுடன் மீண்டும், வெயில் நம்மை பதம் பார்க்கவுள்ளது.
வெயில் தாக்கத்தை தாங்கி கொள்ள, மின்விசிறி, ஏர்கண்டிஷனர், ஏர்கூலர் ஆகியவற்றின் உதவியை நாடுகிறோம். ஆனால், இவற்றை இயக்க மின்சாரம் தேவை. அது இல்லாமல் போகும்போது, எந்த கருவியும் நமக்கு பயன் தராது.
நம் உடல் இயங்க, 37 டிகிரி செல்ஷியஸ் அல்லது 98.6 டிகிரி பாரன்ஹீட் சூடு தேவை. நம் சருமத்திலுள்ள 40 லட்சம் வியர்வைத் துளைகளுடன், சீரான ரத்த ஓட்டத்துடன் நம் உடல் இயங்குகிறது. சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரித்தால், நம் உடல் சூடாகிறது. இதனால், உடலில் ரத்தத்தின் திரவத்தன்மை அதிகரித்து, வெளிசூட்டுடன் உடல் வெப்பம் சமன் செய்யப்படுகிறது. வெளிச்சூடு அதிகமானால், உடலின் இந்த மாற்று ஏற்பாடு, வேலை செய்யாமல் போகும்.
பருத்தி ஆடை தவிர்த்து மற்றவை அணியும்போது, உடல் சூடு வெளியேற வாய்ப்பில்லாமல் போகிறது. இதனால் அதிகம் வியர்க்கிறது. வியர்வை ஆவியாகும்போது, உடல் சூடு தணிகிறது. இயற்கையாவே நம் உடலில் அமைந்துள்ள ஏர் கண்டிஷனர் இது. அதிக வெப்ப நாட்களில், இந்த மாற்று ஏற்பாடு சரியாக வேலை செய்யவில்லையெனில், பிரச்னை ஏற்படும். காற்றிலுள்ள ஈரப்பதம், உடலின், “ஏர் கண்டிஷனர்’ வேலை செய்யாமல் தடுக்கும். அடிக்கடி நீர் குடித்தால், வியர்வை வெளியேறுவதில் சிக்கல் ஏற்படாது.
காற்றூட்டப்பட்ட பானங்கள், ஆல்கஹால், டீ, காபி பருகினால், உடல் சூடு குறையும் என்று கணக்கிடக் கூடாது. இளநீர், சிறிதளவு உப்பு சேர்த்த நீர் மோர், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை குடித்தால், வியர்வை வெளியேறுவது சீராக இருக்கும்.
நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களுக்கும் வியர்வை அதிகம் வெளியேறாது. இந்த இருபிரிவினரும், அதிக வெப்பத்தால் எளிதில் பாதிப்படைவர். தசை அதிகமுள்ள கால்பகுதி முதலில் பாதிக்கப்படும். கவனிக்காமல் விட்டால், அதிக உடல் சோர்வு, மயக்கம், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் ஏற்படும். உடல் சூடு 40 டிகிரி செல்ஷியசுக்கு அதிகரித்தால், கடும் விளைவுகள் ஏற்படும். தோலில் சூடு ஏறி, வறண்டு விடும். இதனால் மூளை பாதிப்பு, குழப்பம், கோமா ஆகியவை ஏற்பட்டு, சிலருக்கு மரணம் சம்பவிக்கலாம்.
உடல் சூடு அதிகமாகி விட்டால்
* இருட்டான, “ஜில்’ அறையில் அவர்களை அமர வைக்க வேண்டும்.
* அவர்களின் கடின ஆடைகளை களைந்து, மெல்லிய பருத்தி ஆடை அணிவிக்க வேண்டும்.
* மின் விசிறி, “ஏசி’ யையும், அவர்கள் மீது நன்கு காற்றுபடும்படி இயக்கலாம்.
* அடர்த்தியான துணியை தண்ணீரில் நனைத்து, அவர்களை துடைத்து விட வேண்டும்.
* ஒரு லிட்டர் நீரில், 5 கிராம் உப்பு கலந்து அவர்கள் குடிக்க கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களை கவனமாக கையாண்டால், அவர்கள் உயிரை காப்பாற்றலாம். வெயிலில் உடலில் அரிப்பும், அதை சொறியும்போது சிவப்புக் கோடுகளும் ஏற்பட்டு, உடல் முழுதும் பாவற்காயாகி விடும். வியர்வை நாளங்களில், அழுக்கு அடையும்போது, அரிப்பு ஏற்படுகிறது. “டிவி’க்களில், அரிப்பை தவிர்க்க, “கூல்’ டால்கம் பவுடர் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்த பவுடரை பூசிக் கொண்டால், நீங்கள் இமயமலையிலிருப்பது போல் உணர்வீர்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இவை விற்பனையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் யுக்தியே தவிர, உண்மையில், உங்கள் உடலுக்கு இந்த பவுடர்கள் கேடு விளைவிப்பவை.
சிங்க் ஸ்டிரேட் மற்றும் சிலிகேட் பவுடர்களை கொண்டு, தயாரிக்கப்படும் இந்த வகை டால்கம் பவுடர்கள், உங்கள் உடல் அரிப்பை இன்னும் அதிகரித்து விடும். இந்த பவுடர்கள் உடல் வியர்வையுடன் சேரும்போது, வெள்ளை நிறத்தில் நீர் வழிந்து,
உங்கள் வியர்வை நாளங்கள் மேலும் அடைத்து போகும்.
தொடை மற்றும் பிறப்பு உறுப்புகளில் இந்த பவுடர்களை போட்டால், அவை கருப்பை பாதை, கருப்பை, பெலோப்பியன் குழாய் வழியே, சினைப்பையை அடைந்து விடும். அங்கு புற்றுநோயை உருவாக்கும்.
மிக நுண்ணிய பவுடராக தயாரிக்கப்படும் இவை, காற்றில் பறந்து நம் மூக்கில் நுழைந்து, நுரையீரலின் மிக நுண்ணிய பகுதியை அடைகின்றன. இதனால் நிமோனியா, நுரையீரல் வீக்கம், காற்று பாதை வீக்கம் ஆகியவை ஏற்படக் காரணமாக அமைகிறது. மிகச் சிறிய குழந்தைகளுக்கு, இதுவே நச்சாக அமைந்து, குழந்தையின் உயிரையே பறிக்கும்.
உடல் சூடு, அரிப்பை தவிர்க்க மிகச் சிறந்த வழி, தினமும் இரண்டு முறை குளிப்பது தான். சோப்பை உடலில் நேரடியாக தேய்க்காமல், உடல் தேய்ப்பானில் தோய்த்துத் தேய்த்து கொள்வது நலம்.
தெருவோரங்களில் விற்கப்படும், துண்டாக்கப்பட்ட தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி, மோர் மற்ற ஜூஸ் வகைகள், சுகாதாரமற்றவையாக உள்ளன. இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் நீர், ஐஸ் கட்டிகள் சுத்தமானவையாக இருப்பதில்லை; பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக உள்ளதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க…
* டைபாய்டு நோய் தடுப்பு ஊசி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை போட்டு கொள்ள வேண்டும்.
* “ஹெப்பாடைட்டிஸ் ஏ’ நோயை தடுக்க, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு ஊசிகள் என இரண்டு முறை போட்டு கொள்ள வேண்டும்.
* காலராவை தவிர்க்க, வாய்வழி மருந்துகள் வந்துவிட்டன.
வெளியில் எங்கு சென்றாலும், வீட்டிலிருந்து குடிநீர் எடுத்து செல்வதே நல்லது. காற்றூட்டப்பட்ட பானங்கள், பார்க்க கவர்ச்சியாகவும், பாதுகாப்பானதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டாலும், அவை அனைத்திலும் காபின் பொருளோ, ரசாயனமோ அதிகம் கலக்கப்பட்டிருக்கும். தாகத்தை தணிப்பதற்காக நீங்கள் இதை குடித்தாலும், உண்மையில் இவை, உங்கள் தாகத்தை அதிகரிக்க செய்யும்.
வெயில் நேரங்களில், வெளியில் செல்வதை தவிர்க்கலாம். வெளியில் செல்ல தீர்மானித்தால், “சன்ஸ்கிரீன் லோஷன்’ போட்டு கொள்ளலாம். குடை எடுத்து செல்வதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்

சிம்ப்ளி ரிலையன்ஸ் புதிய கட்டணத் திட்டங்கள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தன்னுடைய சி.டி.எம்.ஏ. வாடிக்கையாளர்களுக்கு, புதிய இரு திட்டங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை Simply Unlimited என அழைக்கிறது. இதில் முதல் திட்டத்தின்படி மாதம் ரூ.299 செலுத்தி ரீசார்ஜ் செய்தால், எந்த லோக்கல் ரிலையன்ஸ் போனுக்கும், மற்றும் வேறு லோக்கல் நெட்வொர்க் போன்களுக்கும், இலவசமாகப் பேசலாம். லோக்கல் அல்லாமல், மற்ற அழைப்புகளுக்கு, அவை மற்ற நெட்வொர்க்குகளில் இயங்கினாலும், ஒரு நிமிடத்திற்கு 50 பைசா வசூலிக்கப்படும். இதனை சி.டி.எம்.ஏ. லோக்கல் பேக் என ரிலையன்ஸ் பெயரிட்டுள்ளது.
சி.டி.எம்.ஏ. நேஷனல் பேக் என்ற இன்னொரு திட்டத்தில், மாதம் ரூ.599 செலுத்தி ரீசார்ஜ் செய்தால், இந்தியா முழுவதும் உள்ள, எந்த ரிலையன்ஸ் போனுக்கும், ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., மற்றும் லேண்ட்லைன் ஆகிய எதற்கும் கட்டணம் இன்றி பேசலாம். இந்தியாவில் இயங்கும் மற்ற நெட்வொர்க் போன்களுக்கும் இலவசமாகவே பேசலாம்.
இந்த திட்டம், மிக அதிகமான அளவில் போன் அழைப்புகளைப் பயன்படுத்தும் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வர்த்தக ரீதியாக, போன்களைப் பயன்படுத்துவோருக்கு இல்லை. இந்த இரண்டு திட்டத்திலும், இலவச அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மாதம் 900 நிமிடங்கள் பயன்படுத்தலாம். அதற்கும் மேலாகப் பயன்படுத்தினால், நிமிடத்திற்கு 50 பைசா கட்டணமாகும்.

நலம் தருவாய் நரஸிம்மா! -ஸ்ரீ நரஸிம்ம ஜெயந்தி – மே -26மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நரஸிம்ம அவதாரங்களில் நரஸிம்ம அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரே ஒரு பக்தனுக்காக, அந்த நிமிடமே, அதே இடத்தில் மஹாலட்சுமியுடன் அவதரித்தார். அந்த தினம் தான் நரஸிம்ம ஜெயந்தியாகக் கொண்டாடுகிறோம். எத்தனையோ நரஸிம்ம ÷க்ஷத்திரங்கள் இருந்தாலும், ஆந்திராவில் உள்ள அஹோபிலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மகா சர்ப்பமாக ஆதிசேஷன் சுருண்டு, கிழக்கு மலைத் தொடராகப் படுத்திருக்கிறான் என்பது ஐதிகம். படமெடுத்த தலைப்பகுதி திருப்பதி, நீண்டு சுருங்கும் வால்பகுதி ஸ்ரீசைலம். மத்திய உடல் பகுதி அஹோபிலம். மூன்றையும் சேர்ந்தாற்போல் ஒரே முறை தரிசித்தால் மிகவும் புண்ணியம்.
உண்மையான பக்தியும், உடலுறுதியும் இருந்தால்தான் அஹோபிலம் நவ நரஸிம்மர்களை தரிசிக்க முடியுமாம். அப்படி ஒரு பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.
கருட பகவானின் கடுமையான தலத்துக்குப் பலனாக ஸ்ரீ நாராயணன், நவநரஸிம்மராக இந்த மலையில் காட்சி கொடுத்தாராம். அடர்ந்த காடுகளும், வனவிலங்குகளும் மிகுந்த இடம் அஹோபிலம். இது, மேல் அஹோபிலம், கீழ் அஹோபிலம் என்று இரண்டாக அமைந்திருக்கிறது.
கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதரின் ஆலயம். மேலே மலைச் சாரல்களின் மடிப்பிலே, மறைவான குகைப் பகுதியில் மகத்துவம் மிக்க நவநரஸிம்மர்கள் உள்ளனர். குறிப்பிட்ட இடம் வரை தான் வாகனத்தில் போக முடியும். ஜ்வால நரஸிம்மர், பவன நரஸிம்மர் – இந்த இரண்டு இடங்களுக்கும் செல்லும் வழி முட்புதர்களும் கற்களும் கொண்ட கரடு முரடான பாதை என்பதால் சற்று சிரமம்தான்!
பாதங்களை அழுத்தப் பொருத்தி மலைச் சர்வில் எட்டு கி.மீ ஏறியதும் (அவர்கள் ஒரு குச்சி தருகிறார்கள். அதை ஊன்றி நடந்தால் சிரமமில்லை). எதிரே தெரிகிறது பிரம்மாண்டமான உக்ரஸ்தம்பம் – மலைப் பாதை இரண்டாகப் பிளந்து வெவ்வேற பகுதிகளாக உள்ளது. உற்றுப் பார்த்தால், பாறைப் பிளவின் அமைப்பில் நரஸிம்மரின் திருமுகத் தோற்றம் தெரிகின்றது. கிருதயுகத்தில், இப்பகுதியில் ஹிரண்யனின் அரண்மனை அமைந்திருந்ததாம். பிரகலாதனின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து, ஒரு தூணை உலகத்துப் பிளந்து நரஸிம்மர் வெளிப்பட்ட தூண்தான். இந்த மலைக்குன்றாம்! பார்த்தாலே உடலும் மனமும் புல்லரிக்கின்றது. மலைப்பகுதியை கவனமாகப் பார்த்தால், ஹிரண்யனின் அரண்மனை போன்ற தோற்றம் தெரிகிறது.
ஜ்வாலா நரஸிம்மார்
தூணைப் பிளந்து வெளிப்பட்ட நரஸிம்மர், ஹிரண்யனை வதம் செய்த இடம்தான் ஜ்வாலா நரஸிம்மர் சன்னிதி. ஒன்பது நரஸிம்மர்களில் முதலாவது இது. இங்கு நரஸிம்மர் உக்கிரமாக அமர்ந்திருக்கிறார். குகைக்கு சற்றுத்தள்ளி பாறைகளின் இடுக்கில் ரத்த குண்டம் உள்ளது. நீரின் பிரதிபலிப்பு சிவப்பாக உள்ளது. ஹிரண்யவதம் முடித்தவுடன் இங்குதான் நரஸிம்மர், தமது கரங்களைக் கழுவிக் கொண்டாராம்.
அஹோபில நரஸிம்மர்
கடல் மட்டத்திலிருந்து 2800 அடி உயரத்தில் உள்ளது. சிரமமே இல்லாமல் செல்லலாம். மூலவர் சுயம்புவாக லட்சுமி சமேதரராகக் காட்சி அளிக்கிறார். பக்கத்திலேயே செஞ்சு லட்சுமி தாயார் சன்னதி உள்ளது.
மாலோல நரஸிம்மார்
நரஸிம்மரின் கோபம் தணிந்து மகாலக்ஷ்மி “வருடன் எழுந்தருளிய இடம். இவர் உருவத்தையே உற்சவ மூர்த்தியாக அமைத்துள்ளார்கள். தினசரி பூஜை இவருக்கு தான்.
க்ரோட நரஸிம்மார்
பலநரசினி ஆற்றின் கரையில் வித்தியாசமான திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். இரண்டு அவதாரத் திருக்கோலங்கள். காட்டுப்பன்றியாக வராக அவதாரம் எடுத்த தோற்றம். இன்னொரு நிலையில் லட்சுமி நரஸிம்மராக அழகுரத் தோன்றுகிறார். பிரகலாத மேடு என்ற இடம் வருகிறது. குழந்தைப் பருவத்தில் பிரகலாதன், குருகுல வாசியாகப் படித்து விளையாடிய இடமாம் இது.
கரஞ்ச நரஸிம்மர்
வில் ஆயுதம் தரித்து, ஆஞ்சநேயருக்காக எடுத்த திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். ஆஞ்சநேயர் கரஞ்சமரத்தின் (கருங்காலி மரம்) கீழ் தவம் இருந்து நரஸிம்மரை சேவித்தால் இந்தப் பெயர் வந்ததாம்.
பார்கவ நரஸிம்மர்
சிறு குன்றின்மேல் ஆலயம் அமைந்துள்ளது. பரசுராமர், தீர்த்த யாத்திரை மேற்கொண்டபொழுது, பார்கவதீர்த்தம் என்னும் தடாகத்தில் நீராடி நரஸிம்மரை வணங்கியதால் இந்தப் பெயர் வந்ததாம்.
யோகானந்த நரஸிம்மார்
நரஸிம்மர், யோக முத்திரையுடன் காட்சி அளிக்கிறார்.
சத்ரவாட நரஸிம்மர்
அஹோபில நரஸிம்மர்களில் மிகவும் சுந்தரமான ரூபத்துடன் காட்சி அளிப்பவர் சத்ரவாட நரஸிம்மர். குடை போன்ற ஆலமரத்தடியில் வீற்றிருப்பதால், இந்தத் திருநாமம் (சத்ர -குடை)
பாவன நரஸிம்மர்
காட்டுப்பகுதியில் பவன நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த ஆலயம் செல்வது தான் மிகவும் சிரமம். மிகவும் வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்கள் மேலே செல்ல அனுமதி இல்லை. காட்டு பகுதியில் ஆறேழு கி.மீட்டர்கள் நடக்க வேண்டும். டிராக்டர்தான் சிறந்தது. காட்டு விலங்குகள் பயம் இருப்பதால், கூட்டமாகத்தான் போக வேண்டும்.
மிகவும் சிரமப்பட்டு மேலே ஏறினால், அற்புதமான பாவன நரஸிம்மர், ஆதிசேஷன் குடை பிடிக்க லட்சுமியுடன் சாந்தமாக தரிசனம் தருகிறார்
வாழ்க்கையில் வெற்றிகளையும், வேண்டுவனவற்றையும் எல்லா நன்மைகளையும் ஒரு சேரத் தந்தருளும் நவநரஸிம்மர்களை ஒரே இடத்தில் தரிசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.