Daily Archives: மே 27th, 2010

அப்பாட ., மின்வெட்டு குறைப்பு !

தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டு நேரத்தை குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பல மாதங்களாக மின்சாரம் தடை போடப்பட்டு மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் புழுக்கத்தில் புலம்பி தீர்த்து வந்தனர். இந்நிலையில் முதல்வர் கருணாநிதி அலுவலக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக காற்றாலை மூலம் தற்போது மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு இருந்து வந்த மின் வெட்டு 30 சதத்தில் இருந்து 20 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சென்னையில் 24 மணி நேரமும் மின் விநியோகம் இருக்கும், ஏனைய நகரங்களில் இருந்து வந்த 3 மணி நேர மின்தடை 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடலுக்குள் ஆய்வு நிலையம்!

நிலவில் கால்பதித்த சாதனை `மனிதனின் சிறிய அடி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த பெரிய (அடியாக) திட்டமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.

நிலவைவிட செவ்வாய் அதிக தூரத்தில் உள்ள கோளாகும். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை பூமி, நிலவு இரண்டையும்விட பலவிதங்களில் மாறுபட்டது. உதாரணமாக பூமியைவிட 6-ல் ஒரு பங்கு ஈர்ப்பு ஆற்றல்தான் நிலவில் காணப்படுகிறது. ஆனால் செவ்வாய் கிரகத்திலோ ஈர்ப்பு விசை 8-ல் முன்று பங்காக இருக்கிறது. இதுதவிர சூரிய ஔ பற்றாக்குறை, தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு போன்றவையும் காணப்படுகிறது.

எனவே செவ்வாய் பயணம், நிலவுப் பயணத்தைவிட சவாலானது. இதை எதிர்கொள்ளும் விதமாக செவ்வாய்க்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பல்வேறுவித ஆய்வு, ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றில் ஒரு சில சோதனைகள் முடிந்துவிட்டன.

அடுத்தகட்ட சோதனையாக விண்வெளி வீரர்களை கடலுக்கு அடியில் அழைத்துச் சென்று ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக கடலில் 65 அடி ஆழத்தில் புளோரிடா மாகாணத்தில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நாசாவின் இந்த திட்டம் நீமோ (NEEMO – நாசா எக்ஸ்டிரிம் என்விரான்மென்ட் மிஷன் ஆபரேஷன்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.

சவால் நிறைந்த, சிக்கலான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சிகள் இதன் முலம் அளிக்கப்படுகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அஸ்ட்ராநட்ஸ் (Astronauts) என்று அழைப்பதுபோல கடலுக்குள் தங்கி இருந்து ஆய்வு நடத்தும் வீரர்களை அக்வாநட்ஸ் (Aquanauts) என்று அழைக்கிறார்கள்.

இந்த சோதனையில் அனுபவம்மிக்க 2 விண்வெளி வீரர்கள் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொள்கிறார்கள். 2 வார ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற செயற்கை சூழ்நிலையில் ஸ்பேஸ்வாக் செய்வது, எந்திரங்களை இயக்குவது போன்ற பணிகளை வீரர்கள் செய்கிறார்கள். இந்த முன்கட்ட ஆய்வு, விண்வெளி வீரர்களின் உடல்தகுதியை அதிகப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

விலங்குகளிலும் இடதுகைப் பழக்கம் உண்டு!

மனிதர்களில் சிலர் இடது கைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதுபோல விலங்குகளிலும் இடது, வலது பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதுவும் சில விலங்குகள் குறிப்பிட்ட சூழலில் வெவ்வெறு விதமாக செயல்படுவது விஞ்ஞானிகளையே வியப்புக்குள்ளாக்கியது. வடக்கு அயர்லாந்து நாட்டின் பெல்பாஸ்ட் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் தெரியவந்த சில உயிரினங்களின் வினோத கைப்பழக்கம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வருமாறு…

* பொதுவாக பெண் விலங்குகள் வலது கைப் பழக்கம் (விலங்குகளில் கை என்பது முன்னங்கால்களை குறிக்கும்) உடையவையாக இருக்கின்றன.

* நாய்களில் பெண்நாய் வலது கால் பழக்கமும், ஆண்நாய் இடக்கால் பழக்கம் உடையதுமாக இருக்கிறது.

* நாய்கள் வலதுபக்கமாக வாலாட்டினால் `ரிலாக்ஸாக’ இருப்பதாகவும், இடது பக்கமாக வாலாட்டினால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அர்த்தமாம்.

* ஹார்மோன் சுரப்பிகளே இந்த கைப் பழக்க மாற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன.

* மீன் இனங்களில் காணப்பட்ட வினோதம் என்னவென்றால் எதிரி களின் தாக்குதல் அபாயத்தி லிருந்து தப்பிப்பதற்கேற்ப வலது அல்லது இடது பழக்கத்தை சீராக மாற்றிக் கொள்கிறது. ஒரு வகை திமிங்கலத்தில் உணவு உண்ணும்போது மட்டும் தாடையை வலதுபுறம் சாய்க்கும் பழக்கம் காணப்படுகிறது.

* பெண்பூனை ஏமாற்றும் விதத்தில் செயல்படும்போது வலதுபக்க இயக்கத்தையும், ஆண் பூனை சாதாரணமாக உட்கார்ந்திருக்கும்போது இடதுகைப் பழக்கம் உடையதாகவும் இருக்கிறது.

* தங்கமீன் கொஞ்சம் வினோதமாக ஒருபுற கண் அல்லது தலையை அசைத்து எதிரிகளை மிரட்டுகிறது. ஹம்பக் திமிங்கலம் முடிவெடுத்து செயல்படும்போது தனது செதில்திமிலை வலதுபுறமாக திருப்புகிறது. ஈல் வகை மீன் கடலின் குளிர்ச்சிக்கு ஏற்ப உடலசைவை வெளிப்படுத்து கிறது.

* டென்னிஸ், குத்துச்சண்டை உள்ளிட்ட சில விளையாட்டுகளில் இடதுகை பழக்கம் உடையவர்களின் கை ஓங்கி இருக்கும் என்று ஆய்வாளர் தெரிவித்தார்.

புத்துயிர் பெறும் உயிரினங்கள்!

பிரமாண்ட உயிரினமான டைனோசர்கள் இப்போது பூமியில் உயிருடன் இல்லை. ஆனால் ஆய்வகத்தில் டைனோசர்களை உருவாக்க முடியும் என்று ஜுராசிக் பார்க் திரைப்
படத்தில் காட்டி இருப்பார்கள்.

அது வெறும் கற்பனையல்ல. நிஜத்திலும் அதுபோன்று இறந்துபோன உயிரினங்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

யானைகளின் முன்னோடி இனம் `ஊல்லி மா த்’. தற்போதுள்ள யானைகளைவிட மிகப்பிரமாண்டமானவை மா த் யானைகள். பனிக் காலத்தில் வாழ்ந்த இவற்றுக்கு உடல்முழுவதும் 3 அடி நீள ரோமங்களும், மிகப்பெரிய தந்தங்களும் உண்டு. இந்த யானைகளும் டைனோசர்கள்போல கால மாற்றத்தில் அழிந்து போய்விட்டன.

பழங்கால பொருட்கள், உயிரினங்கள் பற்றி நாம் பூமியில் புதைந்திருக்கும் படிமங்கள் முலம் அறிந்து கொள்கிறோம். பனிப்பிரதேசத்தில் இறந்த உயிரினங்களின் படிமங்கள் நீண்ட காலத்துக்கு சிதைவுறாமலும், கெட்டுப்போகாமலும் கிடைக்கிறது.

இப்படி கிடைத்த சில படிமங்களின் முலம் ஒரு சில உயிரினங்களின் டி.என்.ஏ.வை வரையறை செய்ய முடிந்துள்ளது. அந்த டி.என்.ஏ. மாதிரியை செயற்கையாக உருவாக்கி தற்போதுள்ள உயிரினங்களில் செலுத்தி புதிய மாற்றத்துடன் பழைய உயிரினங்களை திரும்பவும் உயிருட்டி கொண்டு வரமுடியும் என்பது விஞ்ஞான கண்டுபிடிப்பு.

இந்த முறையில் மா த் வகை யானைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று கனடாவில் உள்ள மானிடோபா பல்கலைக்கழக ஆய்வாளர் கெவின் கேம்பல் கூறுகிறார்.

25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மா த் யானையின் தாடைப்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் படிமம் பனிக்கட்டிக்கு இடையில் கெடாத நிலையில் கிடைத்துள்ளது. அதேபோல் 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கீரிப்பிள்ளையின் எலும்புப் படிமமும் ஏற்கனவே கிடைத்திருந்தது. இவற்றை ஆராய்ந்ததில் டி.என்.ஏ.வை வரையறை செய்ய முடிந்தது. இதன் முலம் அதன் ரத்தத்தை மறுஉற்பத்தி செய்ய முடியும் என்று தெளிவாகி உள்ளது. இந்த தொழில்ட்பத்துக்கு `ஜெனிடிக் அடாப்டேசன் டெக்னிக்’ என்று பெயர்.

இது தொடர்பான ஆய்வுகள் தொடர உள்ளது. இதில் வெற்றி கிடைத்தால் நமது காலத்திலும் டைனோசர்கள், மா த் யானைகள் போன்ற பழங்கால உயிரினங்கள் நடமாடும்!

கள்ள நோட்டு நடமாட்டத்தை கண்காணிக்க தனி இலாகா

கள்ள ருபாய் நோட்டுகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பக்கத்து நாடான பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக இந்திய ருபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த நாச வேலையை செய்கிறது. இது தவிர சில தீவிரவாதிகளும், மோசடிப்பேர்வழிகளும் கள்ள ருபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுகின்றனர்.

நமது நாட்டில் ஒவ்வொரு 10 லட்சம் ருபாய் நோட்டுகளுக்கு 8 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கள்ள நோட்டுகள் புழக்கம் மிகமிக குறைவாக, அதாவது 0.001 சதவீதமே உள்ளது. இருப்பினும் இந்த கள்ள நோட்டுகள் புழக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

2006 ம் ஆண்டு ரு . 8.39 கோடி, 2007ம் ஆண்டு  ரு. 10.54 கோடி, 2008ம் ஆண்டு ரு . 25.79 கோடி, 2009 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை  ரு . 14.08 கோடி என்ற அளவில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளநோட்டுகளை தடுக்க நிதித்துறை, ரிசர்வ் வங்கி, உளவுத்துறை மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். இருப்பினும் இதை முடுக்கி விடவும், தீவிரப்படுத்தவும் தனி துறை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வகையில் டைரக்ட்ரேட் ஆப் கரன்சி (பணத்தாள் இலாகா) ஒன்றை அமைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்


+2 முடிவு வந்துவிட்டது. மாணவர்கள் தாங்கள் சேரப் போகும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் கலை அறிவியல் பட்ட வகுப்புகள் குறித்து பலவகைகளிலும் தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். தாங்கள் சேரப் போகும் பாடப்பிரிவுகளில் என்னவெல்லாம் பாடங்கள் இருக்கும், இவற்றிற்கான நூல்களை எங்கு வாங்கலாம் என்றும் சிந்திக்கத் தொடங்குவார்கள். குறிப்பாக பொறியியல் மாணவர்கள், பெரிய நகரங்களில் இயங்கும் புக் பேங்க் எனப்படும் புத்தக வங்கிகளில் பணம் செலுத்தி நூல்களைப் பெறும் வழிகளை அறிந்து அவற்றை நாடுவார்கள். அல்லது சீனியர் மாணவர்கள் படித்த நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்குவார்கள். கூடுதலாக நூலகத்தில் உள்ள நூல்களையும் எடுத்துப் படிக்கத் தொடங்குவார்கள்.
இவர்களுக்கு இணையமும் உதவி செய்கிறது. பல தளங்கள் நூல்களை இ–நூல்களாக, பி.டி.எப். பார்மட்டில் தருகின்றன. இவை பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து, சிடிக்களில் அல்லது பிளாஷ் ட்ரைவ்களில் பதிந்து, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம். முக்கிய பக்கங்களையோ அல்லது நூல் முழுவதையுமோ, அச்சிட்டு எடுத்து வைத்துப் படிக்கலாம்.
இவ்வகையில் கீழ்க்காணும் தளங்கள் சிறப்பாக இயங்குவதனை அறிய முடிந்தது. அவை:

1. www.getfreeebooks.com இலவசமாக நூல்களைத் தரும் தளம் இது. எத்தனை நூல்களை வேண்டு மானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப் பார்த்து அனைத்து இ–புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும் இ–புக் இந்த தளத்தில் இல்லையா? இந்த தளத்தின் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைத் தேடி, எடுத்து பதிந்துவிடுவார்.

2. அடுத்ததாகக் குறிப்பிட வேண்டிய தளம் www.freeebooks.net. இதில் உள்ள நூல்களில் எத்தனை நூல்களை வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டிய உதவியினைத் தந்து தேவையான பொருளில் உள்ள நூல்களைக் காட்டுகிறது. வகைப்படுத்தி தரப்படுவதால், மாணவர்கள் தேடும் நேரம் மிச்சமாகிறது.

3. www.ebooklobby.com என்ற முகவரியில் உள்ள இந்த தளம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த தளத்தில் நூல்கள் அருமையாக வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை, கம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த வகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை எடுக்கலாம், படிக்கலாம். பதிந்து வைத்துக் கொள்ளலாம்.
மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இந்த தளங்களை நாடித் தாங்கள் வகுப்புகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தர இந்த நூல்களை நாடுகின்றனர். பன்னாட்டளவில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் நூல்களை இந்த தளங்கள் வழங்குவதால், ஒரு பொருளில் மிகச் சிறந்த கருத்துக்கள் மாணவர்களுக்கு இந்த நூல்கள் வழியாகக் கிடைக்கின்றன. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் இவை.

கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில்

பழங்காலத்தில், விஜயநகர பேரரசு ஆட்சியில் அரசர் அச்சுதராயரின் கஜானா பொறுப்பாளராக இருந்த விருபணா, லேபாக்ஷியில் ஒரு மாபெரும் சிவன் கோவிலைக் கட்டினார். கோவில் கட்டும் ஆர்வத்தில் அவர் அச்சுதராயரின் அனுமதி யின்றி கஜானா முழுவதையும் காலி செய்துவிட்டார். விஷயத்தை அறிந்து கடுங்கோபம் கொண்ட அச்சுதராயரர், விருபணாவின் கண்களைக் குருடாக்கும்படி உத்தர விட்டார். அதனால் வேதனை அடைந்த விருபணா, தானே தனது கண்களைத் தோண்டி பாறை மீது வீசியெறிந்துவிட்டார். அதன் அடையாளமாக அக்கோவிலில் இரண்டு கரும்புள்ளிகள் இடம்பெற்றன. இன்றும் அந்தச் சிவன் கோவிலானது இந் தியக் கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் பெருமையாக விளங்கும் ஆனந்தபூரில் உள்ள லேபாக்ஷி கோவிலில் சிவனின் ஆக்ரோஷ வடிவமான `வீரபத்திரர்’ குடி கொண்டுள்ளார்.

தென்னிந்தியாவின் சிறந்த சிற்ப மற்றும் ஓவியக் கலையை இக்கோவில் எடுத்துக் காட்டுகிறது. அத்துடன், நாட்டிலேயே பெரிய, ஒரே கல்லாலான நந்தி சிலையைம் (8.25 மீட்டர் நீளம்- 4.60 மீ. உயரம்), ஒரு பெரிய `ஏழு தலை’ நாகத்தின் சிலையையும் கொண்டுள்ளது.

`குர்மாசைலா’ (`ஆமைக் குன்று’) என்ற குன்றின் மீது விஜயநகரக் கட்டிடக் கலை பாணியில் இக்கோவில் கட்டபட்டுள்ளது. இந்த மாபெரும் கோவிலில் நெடிதுயர்ந்த கோபுரங்கள், விமானங்கள் அமைந்துள்ளன.

இதன் முன்று பிரதான பகுதிகளாக `நிருத்ய மண்டபம்’, `கரப்பக்கிரகம்’, `கல்யாண மண்டபம்’ ஆகியவை அமைந்துள்ளன. இவை முழுவதும், நுணுக்கமும், அழகும் கொஞ்சும் ஆளுயரச் சிற்பங்கள், ஓவியங்களால் அலங்கரிக்கபட்டுள்ளன. இவற்றில், கடவுள்கள், பெண் தெய்வங்கள், ஓவிய, சிற்பக் கலைஞர்கள், இக்கோவிலைக் கட்டிய வர்களின் உருவங்கள், புராணங்கள், ராமாயண, மகாபாரதக் காட்சிகள், சிவபெரு மானின் பல்வேறு வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலின் உட் கருவறை யின் மேற்கூரையில் `வீரபத்திரரின்’ பெரிய ஓவியம் ஒன்று காணப்படுகிறது. இது ஆசியாவிலேயே பெரியது என்றும் கருதபடுகிறது.

இங்குள்ள கல்யாண மண்டபத்தில் சிவன்- பார்வதியின் திருமணம் நடைபெற்றது என்று செவிவழிக் கதைகளில் கூறப்படுகிறது. நிறைவு பெறாமல் உள்ள இந்த மண்டபத்தில், ஒரே கல்லால் ஆன 38 மாபெரும் தூண்கள் அமைந்துள்ளன. முன்பு இக்கோவிலில் ஒரு தொங்கும் தூணும் இருந்தது. அதன் அடிபுறத்தில் ஒரு துணியை நுழைத்து எடுக்க முடிந்தது.