கடலுக்குள் ஆய்வு நிலையம்!

நிலவில் கால்பதித்த சாதனை `மனிதனின் சிறிய அடி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த பெரிய (அடியாக) திட்டமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.

நிலவைவிட செவ்வாய் அதிக தூரத்தில் உள்ள கோளாகும். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை பூமி, நிலவு இரண்டையும்விட பலவிதங்களில் மாறுபட்டது. உதாரணமாக பூமியைவிட 6-ல் ஒரு பங்கு ஈர்ப்பு ஆற்றல்தான் நிலவில் காணப்படுகிறது. ஆனால் செவ்வாய் கிரகத்திலோ ஈர்ப்பு விசை 8-ல் முன்று பங்காக இருக்கிறது. இதுதவிர சூரிய ஔ பற்றாக்குறை, தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு போன்றவையும் காணப்படுகிறது.

எனவே செவ்வாய் பயணம், நிலவுப் பயணத்தைவிட சவாலானது. இதை எதிர்கொள்ளும் விதமாக செவ்வாய்க்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பல்வேறுவித ஆய்வு, ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றில் ஒரு சில சோதனைகள் முடிந்துவிட்டன.

அடுத்தகட்ட சோதனையாக விண்வெளி வீரர்களை கடலுக்கு அடியில் அழைத்துச் சென்று ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக கடலில் 65 அடி ஆழத்தில் புளோரிடா மாகாணத்தில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நாசாவின் இந்த திட்டம் நீமோ (NEEMO – நாசா எக்ஸ்டிரிம் என்விரான்மென்ட் மிஷன் ஆபரேஷன்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.

சவால் நிறைந்த, சிக்கலான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சிகள் இதன் முலம் அளிக்கப்படுகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அஸ்ட்ராநட்ஸ் (Astronauts) என்று அழைப்பதுபோல கடலுக்குள் தங்கி இருந்து ஆய்வு நடத்தும் வீரர்களை அக்வாநட்ஸ் (Aquanauts) என்று அழைக்கிறார்கள்.

இந்த சோதனையில் அனுபவம்மிக்க 2 விண்வெளி வீரர்கள் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொள்கிறார்கள். 2 வார ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற செயற்கை சூழ்நிலையில் ஸ்பேஸ்வாக் செய்வது, எந்திரங்களை இயக்குவது போன்ற பணிகளை வீரர்கள் செய்கிறார்கள். இந்த முன்கட்ட ஆய்வு, விண்வெளி வீரர்களின் உடல்தகுதியை அதிகப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

%d bloggers like this: