கள்ள நோட்டு நடமாட்டத்தை கண்காணிக்க தனி இலாகா

கள்ள ருபாய் நோட்டுகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பக்கத்து நாடான பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக இந்திய ருபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த நாச வேலையை செய்கிறது. இது தவிர சில தீவிரவாதிகளும், மோசடிப்பேர்வழிகளும் கள்ள ருபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுகின்றனர்.

நமது நாட்டில் ஒவ்வொரு 10 லட்சம் ருபாய் நோட்டுகளுக்கு 8 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கள்ள நோட்டுகள் புழக்கம் மிகமிக குறைவாக, அதாவது 0.001 சதவீதமே உள்ளது. இருப்பினும் இந்த கள்ள நோட்டுகள் புழக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

2006 ம் ஆண்டு ரு . 8.39 கோடி, 2007ம் ஆண்டு  ரு. 10.54 கோடி, 2008ம் ஆண்டு ரு . 25.79 கோடி, 2009 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை  ரு . 14.08 கோடி என்ற அளவில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளநோட்டுகளை தடுக்க நிதித்துறை, ரிசர்வ் வங்கி, உளவுத்துறை மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். இருப்பினும் இதை முடுக்கி விடவும், தீவிரப்படுத்தவும் தனி துறை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வகையில் டைரக்ட்ரேட் ஆப் கரன்சி (பணத்தாள் இலாகா) ஒன்றை அமைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: