விலங்குகளிலும் இடதுகைப் பழக்கம் உண்டு!

மனிதர்களில் சிலர் இடது கைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதுபோல விலங்குகளிலும் இடது, வலது பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதுவும் சில விலங்குகள் குறிப்பிட்ட சூழலில் வெவ்வெறு விதமாக செயல்படுவது விஞ்ஞானிகளையே வியப்புக்குள்ளாக்கியது. வடக்கு அயர்லாந்து நாட்டின் பெல்பாஸ்ட் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் தெரியவந்த சில உயிரினங்களின் வினோத கைப்பழக்கம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வருமாறு…

* பொதுவாக பெண் விலங்குகள் வலது கைப் பழக்கம் (விலங்குகளில் கை என்பது முன்னங்கால்களை குறிக்கும்) உடையவையாக இருக்கின்றன.

* நாய்களில் பெண்நாய் வலது கால் பழக்கமும், ஆண்நாய் இடக்கால் பழக்கம் உடையதுமாக இருக்கிறது.

* நாய்கள் வலதுபக்கமாக வாலாட்டினால் `ரிலாக்ஸாக’ இருப்பதாகவும், இடது பக்கமாக வாலாட்டினால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அர்த்தமாம்.

* ஹார்மோன் சுரப்பிகளே இந்த கைப் பழக்க மாற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன.

* மீன் இனங்களில் காணப்பட்ட வினோதம் என்னவென்றால் எதிரி களின் தாக்குதல் அபாயத்தி லிருந்து தப்பிப்பதற்கேற்ப வலது அல்லது இடது பழக்கத்தை சீராக மாற்றிக் கொள்கிறது. ஒரு வகை திமிங்கலத்தில் உணவு உண்ணும்போது மட்டும் தாடையை வலதுபுறம் சாய்க்கும் பழக்கம் காணப்படுகிறது.

* பெண்பூனை ஏமாற்றும் விதத்தில் செயல்படும்போது வலதுபக்க இயக்கத்தையும், ஆண் பூனை சாதாரணமாக உட்கார்ந்திருக்கும்போது இடதுகைப் பழக்கம் உடையதாகவும் இருக்கிறது.

* தங்கமீன் கொஞ்சம் வினோதமாக ஒருபுற கண் அல்லது தலையை அசைத்து எதிரிகளை மிரட்டுகிறது. ஹம்பக் திமிங்கலம் முடிவெடுத்து செயல்படும்போது தனது செதில்திமிலை வலதுபுறமாக திருப்புகிறது. ஈல் வகை மீன் கடலின் குளிர்ச்சிக்கு ஏற்ப உடலசைவை வெளிப்படுத்து கிறது.

* டென்னிஸ், குத்துச்சண்டை உள்ளிட்ட சில விளையாட்டுகளில் இடதுகை பழக்கம் உடையவர்களின் கை ஓங்கி இருக்கும் என்று ஆய்வாளர் தெரிவித்தார்.

%d bloggers like this: