Monthly Archives: மே, 2010

வியர்க்குருவை விரட்ட வெள்ளரி

ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், தற்போது கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால், பெரும்பாலானவர்கள் வியர்க்குரு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். முதுகு, கழுத்து அல்லது தலை போன்ற பகுதிகளில் தோன்றும் வியர்க்குருக்கள் அரிப்பை உண்டாக்கும்.

* கோடை காலத்தில் வியர்க்குரு தோன்றாமல் இருக்க அடிக்கடி குளிக்க வேண்டும். குளிக்கும் போது மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.

* வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.

* சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில் குணமாகும்.

* வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின் சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும் ஆயின்மென்ட் போன்றவையும் கடைகளில் கிடைக்கின்றன.

* அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அதிக நறுமணம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதை தவிர்ப்பதே நல்லது.

* மூலிகைகளின் சாறுகளால் தயாரிக்கப்பட்ட தன்வந்த்ரம் தைலத்தை உடலில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து வந்தால் வியர்க்குரு மறைந்து விடும்.

குழந்தைகள் சுய முன்னேற்றம்

தரமான வேலையை மேற்கொள்வதில் உள்ள கடைசி படி இதுதான்.

குழந்தைகள் தாங்கள் செய்கிற வேலை எந்த அளவிற்கு தரமானது என்பதை மதிப்பிட்டதற்குப்  பிறகு, அடுத்த முறை அதைவிட சிறப்பாக செய்வதற்கான வழிகளை கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.

இதற்கு அவர்கள் சிறிது அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர். வீட்டு வேலைகள் குழந்தைகள் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு மிக அதிகமாக உதவுகின்றன. இதற்குப் பிறகு தரமாகவும் சுத்தமாகவும் இந்த வேலையை செய்ய வேண்டியதில்லை என்கிற அளவிற்குக் குழந்தைகள் வளர நீங்கள் உதவ வேண்டும்.

உங்களது குழந்தையை சிறப்பாக வளர்த்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் வளர வேண்டியது மிகமிக அவசியம். உங்கள் குழந்தைக்கு தரம் என்றால் என்ன? நல்ல நடவடிக்கை என்றால் என்ன? என கற்றுக்கொடுப்பதற்கு முன்பு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் பின்வரும் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்வது நீங்கள் கற்றுக்கொள்ள உதவும்.
எனது பலமும் பலவீனமும் எனக்குத் தெரிகிறதா?
எனது வளர்ச்சிக்கு எது உதவும் என்பதை கண்டறிந்து அதை சரியாக கடைப்பிடிக்கிறேனா?

என்னைப்பற்றி எனது குறைபாடுகளை பற்றி ஆக்கப்பூர்வமாக யாரேனும் விமர்சனம் செய்தால்அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்கிறேனா?

எனது வேலைகளில் எனக்கு முழு திருப்தி இருக்கிறதா? எந்த வேலை செய்தாலும் இதை நான்செய்தேன் என பெருமையுடன் சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறதா?

எனது குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் இதை செய்வேன் என நான் உறுதி கூறும்காரியங்களை சரியாக செய்து முடிக்கிறேனா? அவர்களுக்கு என்மீது நம்பிக்கை ஏற்படும்படிநடந்து கொள்கிறேனா?

இந்த கேள்விகளுக்குப் பதில் சொன்னால் போதும். நமது தகுதிகள் நமக்கு தெரியவரும். நமதுதகுதிக்கேற்றபடிதான் நமது குழந்தையை நாம் வளர்க்க முடியும். எனவே, நமது தகுதியை நாம்வளர்த்துக்கொள்வது அவசியம்.

விண்டோஸ் இயக்கத்தில் ஹாட் கீகள்


விண்டோஸ் இயக்கமும் சரி, அதில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களும் சரி, நமக்கு பல வகையான ஷார்ட் கட் கீகளைத் தருகின்றன. இவை அதிலேயே புரோகிராம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த புரோகிராம்களை இயக்க, நாம் விரும்பும் போல்டர்களைத் திறக்க, பாடல் பைலை இயக்கி ரசிக்க என நம் விருப்பப்படி கம்ப்யூட்டரில் செயல்பட ஹாட் ஷார்ட் கட் கீகள் இருந்தால், எப்படி இருக்கும். நினைக்கவே சுகமாகவும் சுவராஸ்யமாகவும் இருக்கிறதா! அப்படி ஹாட் கீகளை அமைக்கும் வழிகளை ஒரு இலவச புரோகிராம் தருகிறது என்றால் வியப்பின் எல்லைக்கே நீங்கள் சென்று விடுவீர்கள், இல்லையா! அதன் பெயர் Clavier. இதனை http://utilfr42.free.fr/util/Clavier.php என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம் விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் கீ போர்டில் உள்ள எந்த கீயையும், விண்டோஸ் கீ உட்பட, பயன்படுத்தி ஹாட் ஷார்ட் கட் கீகளை உருவாக்க உதவுகிறது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தி, புரோகிராம்களை இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் + டபிள்யூ கீயினை அழுத்தினால் வேர்ட் புரோகிராம் இயக்கும்படி அமைக்கலாம். இதே போல எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் அமைக்கலாம். அல்லது ஏதேனும் டெக்ஸ்ட் ஒன்றை ஒரு ஷார்ட் கட் கீயில் வைத்து, அதனை டெக்ஸ்ட் எடிட்டரில் கொண்டு வரலாம். உங்கள் இமெயில் அட்ரஸ் மிகப் பெரிதா? சிறியதாகவே இருந்தாலும் @ அடையாளம் எல்லாம் போட்டு என்டர் செய்வது சிரமமாக இருக்கிறதா! அப்படியானல் அதனையும் ஒரு ஹாட் ஷார்ட் கட் கீயில் வைத்துவிடலாம். இவ்வாறு அமைக்கும் ஷார்ட் கட் கீகள் அனைத்து புரோகிராம்களிலும், வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் என அனைத்திலும் இயங்கும்.
போல்டர், இமேஜ், பைல், வீடியோ, ஆடியோ பைல் என எதனை இயக்க வேண்டும் என்றாலும், ஹாட் கீ அமைத்துவிடலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கி, இசையை ரசிப்பவரா நீங்கள்! விண்டோஸ் கீ + எம் கீ அல்லது வெறும் எம் கீ மட்டும் அழுத்திக் கூட விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்குமாறு அமைக்கலாம்.
உங்களுக்கான ஷார்ட் கட் ஹாட் கீயினை அமைக்க, கிளேவியர் புரோகிராமை இயக்கி, அதில் ஊதா வண்ணத்தில் உள்ள “+” ஐகானைக் கிளிக் செய்திடவும். பின்னர் நீங்கள் தொடர்புபடுத்த விரும்பும் போல்டருக்கான பாத் (டைரக்டரி வழி) ஐ இதனுடன் இணைக்க வேண்டும்.
நீங்கள் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் கேரக்டரை அடிக்கடி பயன்படுத்துபவரா! அந்த ஸ்பெஷல் கேரக்டரை ஒரு ஹாட் கீயில் கொண்டு வரலாம்.
கிளேவியர் புரோகிராமில் யு.ஆர்.எல். லான்ச்சர் என்ற ஒரு பிரிவு உள்ளது. இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணைய தள முகவரிகளை, ஹாட் கீயில் அமைத்து வைத்துப் பயன்படுத்தலாம். இணைய தளத்தில் நீங்கள் நிரப்ப வேண்டிய தகவல்களுக்கு ஹாட் கீ அமைத்து வைத்தால், படிவங்களில் விரைவாக தகவல்களை நிரப்பி விடலாம்.
கேப்ஸ் லாக், நம் லாக் மற்றும் ஸ்குரோல் லாக் போன்றவை, விண்டோஸ் இயக்கத்தில் எந்நிலையில் இருக்க வேண்டும் என்பதனயும் கிளேவியர் புரோகிராமில் செட் செய்திடலாம்.
நீங்கள் இவ்வாறு பல ஹாட் கீகளை அமைத்து விட்டால், எந்த கீ தொகுப்பு எதற்கு என்பது மறந்துவிடும் அல்லவா! கிளேவியர் புரோகிராமிலேயே ஒரு பேனல் ஒன்று உருவாக்கி, அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஹாட் கீகளையும் போட்டு வைக்கலாம். நாம் ஒன்றிரண்டு கீகளை மறக்கும் நிலையில் இந்த பேனல்களில் அவற்றைக் காணலாம். அவசியம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய புரோகிராம் இது.

`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்!

ஸ்டெம் செல் பயன்பாட்டை அறிந்த பிறகு மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டது எனலாம். ஸ்டெம் செல் எனப்படுவது உறுப்புகளின் அடிப்படை தோற்றுவாய் செல்லாகும். குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம்செல் உடலின் எந்த ஒரு உறுப்பையும் மறுஉற்பத்தி செய்யத் தகுதி உடைய முழுமையான அடிப்படை செல்லாகும்.

இதேபோல் உடலின் மற்ற பாகங்களிலும் `ஸ்டெம்செல்’கள் உள்ளன. ஆனால் அவை குறிப்பிட்ட பணியில் மட்டுமே ஈடுபடும். இந்த இரண்டாம் தர `ஸ்டெம்செல்’களும் பலவித நோய்களை தீர்க்க வல்லது.

தற்போது இந்த ஸ்டெம் செல்களை எளிதாக தானம் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது. ரத்தத் தட்டுகளைச் சுற்றி இருக்கும் ஒரு வகை ஸ்டெம் செல்கள் பி.பி.எஸ்.சி. எனப்படுகிறது. இவற்றை ரத்தத்தில் இருந்து தனியாகப் பிரிக்கும் முறையை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஸ்டெம் செல் மூலம் ரத்தப்புற்று நோயான லுக்கேமியா மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட சில கொடிய வியாதிகளை குணப்படுத்தலாம் என்று தெரிகிறது.

இந்த வகை ரத்த ஸ்டெம்செல்களை சாதாரணமாக ரத்ததானம் போலவே தானம் செய்ய முடியும். இதற்கான ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் ஸ்டெம்செல் தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாட்டின் அழகிய தலைநகரம் வாஷிங்டன்

உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்க நாட்டின் அழகிய தலைநகரம் வாஷிங்டன். இது பொதுவாக `வாஷிங்டன் டி.சி.’ என்று அழைக்கப்படுகிறது. `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா’ என்பதன் சுருக்கமே `டி.சி’.

1790-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதியன்று இந்நகர் நிறுவபட்டது.

தொடக்கத்தில் கொலம்பியா பகுதியில் தனி நகரசபையாக இருந்த வாஷிங்டன், 1871-ம் ஆண்டு ஒரு சட்டத்தின் முலம் `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா’ என்று ஒரே பகுதியாக மாற்றப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 68.5 சதுர மைல்கள் ஆகும். நகரத்தின் மக்கள்தொகை 6 லட்சம்தான். தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியிலிருந்து இங்கு வந்து பணிபுரிகின்றனர்.

`போடோமாக்’ நதிக் கரையில் வாஷிங்டன் நகரம் அமைந்துள்ளது. தென்மேற்கில் `விர்ஜினியா’ மாநிலமும், மற்ற பகுதிகளில் `மேரி லாண்ட்’ மாநிலமும் வாஷிங்டனின் எல்லைகளாக அமைந்துள்ளன.

விண்ணை விசாரிக்கும் உயர்ந்த கட்டிடங்களோடு பரபரப்பும் நெரிசலுமாக இருக்கும் பிற அமெரிக்க நகரங்களோடு ஒப்பிடுகையில் வாஷிங்டன் ஓர் அமைதியான நகரமாகும். இது அமெரிக்காவின் 9-வது பெரிய நகரமாகத்தான்
விளங்குகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டு அரசுத் தலைமையகம் அமைந்துள்ள இடமான வாஷிங்டனில், பல புகழ்பெற்ற தேசிய நினைவுச் சின்னங்களும், அருங்காட்சியகங்களும் அமைந்துள்ளன.

மேலும், 174 வெளிநாட்டுத் தூதரகங்களுடன், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற உலகளவில் முக்கியமான அமைப்புகளும் இங்கு அமைந்துள்ளன.

13 உறுப்பினர்கள் கொண்ட நகர அவைக்குத் தலைமை தாங்கும் மேயரால் வாஷிங்டன் நகரம் நிர்வகிக்கபடுகிறது. ஆனால் இங்கு எந்தச் சட்டத்தையும் மாற்றும் அதிகாரம் அமெரிக்க `காங்கிரஸுக்கு’ உண்டு.

பதினேழாம் நுற்றாண்டில் ஐரோப்பியர்கள் இங்கு வந்து குடியேறியபோது `நகோட்சாங்’ என்ற பூர்வகுடி மக்கள் இங்கு வசித்து வந்தனர். 18-ம் நுற்றாண்டில் அவர்கள் பெருமளவில் ஐரோப்பியர்களால் இடம்பெயரச் செய்யபட்டனர். அமெரிக்க முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனை கவுரவபடுத்தும் விதமாக இந்நகருக்கு `வாஷிங்டன்’ என்று பெயர் சூட்டபட்டது.

வாஷிங்டனின் முக்கிய அடையாளம், அமெரிக்க ஜனாபதியின் அதிகாரபூர்வ இருப்பிடமான `வெள்ளை மாளிகை’ ஆகும். 1814-ம் ஆண்டு படையெடுத்து வந்த பிரிட்டீஷ் படைகளால் எரித்துச் சேதபடுத்தபட்ட இம்மாளிகை, மீண்டும் புதுபொலிவு பெறச் செய்யபட்டது. இன்றும் அமெரிக்கா வரும் வெளிநாட்டு பயணிகளால் ஆர்வத்துடன் கண்டு களிக்கபடுகிறது `வெள்ளை மாளிகை’.

பிரவுசர்களுக்கான ஆட் ஆன் தொகுப்புகள்

நாள்தோறும் உருவாக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இந்த பழக்கத்தினை, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் தொடங்கி வைக்க, இப்போது அனைத்து பிரவுசர்களுக்கும் கூடுதல் வசதி தரும் இந்த தொகுப்புகள் வெளியாகி வருகின்றன. அவற்றோடு இணைந்து ஆபத்துக்களும் வரத் தொடங்கி உள்ளன. ஆட் ஆன் தொகுப்பு என்ற பெயரில், நம் கம்ப்யூட்டரில் மறைந்திருந்து,பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் பதிக்கப்பட்டு, நம் தகவல்கள் திருடப்படுகின்றன. அல்லது நேரடியாக வைரஸ் புரோகிராம்கள் இந்த போர்வையில், கம்ப்யூட்டரில் இறங்கி, நம் செயல்பாட்டினை முடக்குகின்றன.
இந்த சூழ்நிலையில் மொஸில்லா, கடந்த மே 11 அன்று, இந்த ஆட் ஆன் தொகுப்புகள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் நோக்கம் கொண்டவையா என்று அறிய ஓர் டூலினை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த டூலினை, மொஸில்லாவின் போட்டி பிரவுசர்களான இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம், சபாரி, ஆப்பரா போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
“Plugin Check” என அழைக்கப்படும் இந்த டூலினை ஆப்பிள் நிறுவனத்தின் பிரவுசரான சபாரி தொகுப்பு 4, கூகுள் குரோம் தொகுப்பு 4, ஆப்பரா 10.5, ஆகிய தொகுப்புகளில் பயன்படுத்தி குயிக் டைம், அடோப் பிளாஷ், அடோப் ரீடர் ஆகியவற்றிற்கான அப்டேட் ப்ளக் இன் புரோகிராம்கள் என்று வருவதனைச் சோதனை செய்து, அவற்றின் உண்மைத் தன்மையினைக் கண்டறியலாம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பொறுத்தவரை, பதிப்பு 7 மற்றும் பதிப்பு 8 ஆகியவற்றில் மட்டும் இதனைப் பயன்படுத்தலாம். மற்ற பிரவுசர்களுக்கான ஆட் ஆன் ப்ளக் இன் புரோகிராம்கள் பலவற்றைச் சோதனை செய்திடும் இந்த டூல், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பொறுத்தவரை, குறைந்த எண்ணிக்கையிலான ஆட் ஆன் புரோகிராம்களையே சோதனை செய்கிறது. ஏனென்றால், இதற்கான ஆட் ஆன் ப்ளக் இன்கள் ஒவ்வொன்றுக்கும் தனி குறியீடு எழுதப்பட வேண்டும் என்பதால், அனைத்திற்குமான சோதனை டூல் தர இயலவில்லை என்று மொஸில்லா நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஜொனாதன் நைட்டிங்கேல் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு http://blog.mozilla.com/security/2010/05 /11/plugincheckforeveryone/ என்ற முகவரியில் உள்ள மொஸில்லாவின் தளத்தினைக் காணவும்.

அப்பாட ., மின்வெட்டு குறைப்பு !

தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டு நேரத்தை குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பல மாதங்களாக மின்சாரம் தடை போடப்பட்டு மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் புழுக்கத்தில் புலம்பி தீர்த்து வந்தனர். இந்நிலையில் முதல்வர் கருணாநிதி அலுவலக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக காற்றாலை மூலம் தற்போது மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு இருந்து வந்த மின் வெட்டு 30 சதத்தில் இருந்து 20 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சென்னையில் 24 மணி நேரமும் மின் விநியோகம் இருக்கும், ஏனைய நகரங்களில் இருந்து வந்த 3 மணி நேர மின்தடை 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடலுக்குள் ஆய்வு நிலையம்!

நிலவில் கால்பதித்த சாதனை `மனிதனின் சிறிய அடி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த பெரிய (அடியாக) திட்டமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.

நிலவைவிட செவ்வாய் அதிக தூரத்தில் உள்ள கோளாகும். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை பூமி, நிலவு இரண்டையும்விட பலவிதங்களில் மாறுபட்டது. உதாரணமாக பூமியைவிட 6-ல் ஒரு பங்கு ஈர்ப்பு ஆற்றல்தான் நிலவில் காணப்படுகிறது. ஆனால் செவ்வாய் கிரகத்திலோ ஈர்ப்பு விசை 8-ல் முன்று பங்காக இருக்கிறது. இதுதவிர சூரிய ஔ பற்றாக்குறை, தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு போன்றவையும் காணப்படுகிறது.

எனவே செவ்வாய் பயணம், நிலவுப் பயணத்தைவிட சவாலானது. இதை எதிர்கொள்ளும் விதமாக செவ்வாய்க்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பல்வேறுவித ஆய்வு, ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றில் ஒரு சில சோதனைகள் முடிந்துவிட்டன.

அடுத்தகட்ட சோதனையாக விண்வெளி வீரர்களை கடலுக்கு அடியில் அழைத்துச் சென்று ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக கடலில் 65 அடி ஆழத்தில் புளோரிடா மாகாணத்தில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நாசாவின் இந்த திட்டம் நீமோ (NEEMO – நாசா எக்ஸ்டிரிம் என்விரான்மென்ட் மிஷன் ஆபரேஷன்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.

சவால் நிறைந்த, சிக்கலான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சிகள் இதன் முலம் அளிக்கப்படுகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அஸ்ட்ராநட்ஸ் (Astronauts) என்று அழைப்பதுபோல கடலுக்குள் தங்கி இருந்து ஆய்வு நடத்தும் வீரர்களை அக்வாநட்ஸ் (Aquanauts) என்று அழைக்கிறார்கள்.

இந்த சோதனையில் அனுபவம்மிக்க 2 விண்வெளி வீரர்கள் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொள்கிறார்கள். 2 வார ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற செயற்கை சூழ்நிலையில் ஸ்பேஸ்வாக் செய்வது, எந்திரங்களை இயக்குவது போன்ற பணிகளை வீரர்கள் செய்கிறார்கள். இந்த முன்கட்ட ஆய்வு, விண்வெளி வீரர்களின் உடல்தகுதியை அதிகப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

விலங்குகளிலும் இடதுகைப் பழக்கம் உண்டு!

மனிதர்களில் சிலர் இடது கைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதுபோல விலங்குகளிலும் இடது, வலது பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதுவும் சில விலங்குகள் குறிப்பிட்ட சூழலில் வெவ்வெறு விதமாக செயல்படுவது விஞ்ஞானிகளையே வியப்புக்குள்ளாக்கியது. வடக்கு அயர்லாந்து நாட்டின் பெல்பாஸ்ட் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் தெரியவந்த சில உயிரினங்களின் வினோத கைப்பழக்கம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வருமாறு…

* பொதுவாக பெண் விலங்குகள் வலது கைப் பழக்கம் (விலங்குகளில் கை என்பது முன்னங்கால்களை குறிக்கும்) உடையவையாக இருக்கின்றன.

* நாய்களில் பெண்நாய் வலது கால் பழக்கமும், ஆண்நாய் இடக்கால் பழக்கம் உடையதுமாக இருக்கிறது.

* நாய்கள் வலதுபக்கமாக வாலாட்டினால் `ரிலாக்ஸாக’ இருப்பதாகவும், இடது பக்கமாக வாலாட்டினால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அர்த்தமாம்.

* ஹார்மோன் சுரப்பிகளே இந்த கைப் பழக்க மாற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன.

* மீன் இனங்களில் காணப்பட்ட வினோதம் என்னவென்றால் எதிரி களின் தாக்குதல் அபாயத்தி லிருந்து தப்பிப்பதற்கேற்ப வலது அல்லது இடது பழக்கத்தை சீராக மாற்றிக் கொள்கிறது. ஒரு வகை திமிங்கலத்தில் உணவு உண்ணும்போது மட்டும் தாடையை வலதுபுறம் சாய்க்கும் பழக்கம் காணப்படுகிறது.

* பெண்பூனை ஏமாற்றும் விதத்தில் செயல்படும்போது வலதுபக்க இயக்கத்தையும், ஆண் பூனை சாதாரணமாக உட்கார்ந்திருக்கும்போது இடதுகைப் பழக்கம் உடையதாகவும் இருக்கிறது.

* தங்கமீன் கொஞ்சம் வினோதமாக ஒருபுற கண் அல்லது தலையை அசைத்து எதிரிகளை மிரட்டுகிறது. ஹம்பக் திமிங்கலம் முடிவெடுத்து செயல்படும்போது தனது செதில்திமிலை வலதுபுறமாக திருப்புகிறது. ஈல் வகை மீன் கடலின் குளிர்ச்சிக்கு ஏற்ப உடலசைவை வெளிப்படுத்து கிறது.

* டென்னிஸ், குத்துச்சண்டை உள்ளிட்ட சில விளையாட்டுகளில் இடதுகை பழக்கம் உடையவர்களின் கை ஓங்கி இருக்கும் என்று ஆய்வாளர் தெரிவித்தார்.

புத்துயிர் பெறும் உயிரினங்கள்!

பிரமாண்ட உயிரினமான டைனோசர்கள் இப்போது பூமியில் உயிருடன் இல்லை. ஆனால் ஆய்வகத்தில் டைனோசர்களை உருவாக்க முடியும் என்று ஜுராசிக் பார்க் திரைப்
படத்தில் காட்டி இருப்பார்கள்.

அது வெறும் கற்பனையல்ல. நிஜத்திலும் அதுபோன்று இறந்துபோன உயிரினங்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

யானைகளின் முன்னோடி இனம் `ஊல்லி மா த்’. தற்போதுள்ள யானைகளைவிட மிகப்பிரமாண்டமானவை மா த் யானைகள். பனிக் காலத்தில் வாழ்ந்த இவற்றுக்கு உடல்முழுவதும் 3 அடி நீள ரோமங்களும், மிகப்பெரிய தந்தங்களும் உண்டு. இந்த யானைகளும் டைனோசர்கள்போல கால மாற்றத்தில் அழிந்து போய்விட்டன.

பழங்கால பொருட்கள், உயிரினங்கள் பற்றி நாம் பூமியில் புதைந்திருக்கும் படிமங்கள் முலம் அறிந்து கொள்கிறோம். பனிப்பிரதேசத்தில் இறந்த உயிரினங்களின் படிமங்கள் நீண்ட காலத்துக்கு சிதைவுறாமலும், கெட்டுப்போகாமலும் கிடைக்கிறது.

இப்படி கிடைத்த சில படிமங்களின் முலம் ஒரு சில உயிரினங்களின் டி.என்.ஏ.வை வரையறை செய்ய முடிந்துள்ளது. அந்த டி.என்.ஏ. மாதிரியை செயற்கையாக உருவாக்கி தற்போதுள்ள உயிரினங்களில் செலுத்தி புதிய மாற்றத்துடன் பழைய உயிரினங்களை திரும்பவும் உயிருட்டி கொண்டு வரமுடியும் என்பது விஞ்ஞான கண்டுபிடிப்பு.

இந்த முறையில் மா த் வகை யானைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று கனடாவில் உள்ள மானிடோபா பல்கலைக்கழக ஆய்வாளர் கெவின் கேம்பல் கூறுகிறார்.

25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மா த் யானையின் தாடைப்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் படிமம் பனிக்கட்டிக்கு இடையில் கெடாத நிலையில் கிடைத்துள்ளது. அதேபோல் 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கீரிப்பிள்ளையின் எலும்புப் படிமமும் ஏற்கனவே கிடைத்திருந்தது. இவற்றை ஆராய்ந்ததில் டி.என்.ஏ.வை வரையறை செய்ய முடிந்தது. இதன் முலம் அதன் ரத்தத்தை மறுஉற்பத்தி செய்ய முடியும் என்று தெளிவாகி உள்ளது. இந்த தொழில்ட்பத்துக்கு `ஜெனிடிக் அடாப்டேசன் டெக்னிக்’ என்று பெயர்.

இது தொடர்பான ஆய்வுகள் தொடர உள்ளது. இதில் வெற்றி கிடைத்தால் நமது காலத்திலும் டைனோசர்கள், மா த் யானைகள் போன்ற பழங்கால உயிரினங்கள் நடமாடும்!