ஆபரேஷன் சிலந்தி!

மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நானோ. எதையும் மிகச்சிறிய அளவில் பயன்படுத்தி மிகப்பெரிய பயனைப் பெறுவது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாகும். பல்வேறு துறைகளில் நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், மருத்துவ உலகில் அதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

சவாலான ஆபரேஷன்களில் பயன்படும் புதுமையான நானோ ரோபோ தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலந்தி வடிவில் இந்த ரோபோ உள்ளது. மனிதனின் தலைமுடி தடிமனைவிட ஒரு லட்சம் மடங்கு சிறியது இந்த ரோபோ சிலந்தி.

கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலந்தி ரோபோவை உருவாக்கி உள்ளனர். இவ்வளவு சிறியதாக இருப்பதால் இதனை எளிதாக உடலுக்குள் செலுத்தி மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலின் ஒவ்வொரு செல்லிலும் இரட்டைச் சுருள் ஏணி வடிவம் கொண்ட ஆர்.என்.ஏ. முலக்கூறுகள் இருக்கிறது. நோய் ஏற்படும்போது ஆர்.என்.ஏ.க்களில் பாதிப்பு ஏற்படும். இந்த நானோ ரோபோவானது, ஆர்.என்.ஏ.வின் ஏணிச்சுருளில் இணைக்கப்பட்டு அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு டி.என்.ஏ. ஸ்பைடர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

நோயால் பிளவுபடும் டி.என்.ஏ. ஏணிச்சுருளில் இணைப்பு ஏற்படுத்தும் வேலையை இந்த ரோபோ செய்யும். ஆனால் இந்த ரோபோவால் ஏணிச்சுருளை துண்டு செய்ய முடியாது. அதே நேரத்தில் நோய்த் தொற்று செல்களை அழிக்க இதைப் பயன்படுத்த முடியும்.

சிலந்தி ரோபோவின் வேகம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதன் வேகத்தை அதிகப்படுத்தவும், வேறுசில உத்தரவுகளை ஏற்று செயல்படும் வகையிலும் ரோபோவை தயாரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த ரோபோவை நுண்ணிய கணினி பாகங்களை பொருத்துவதற்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல்!

%d bloggers like this: