இதயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்

இதயத்தின் அமைப்பு பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் படித்திருப்பீர்கள். பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமான இதயத்துடன் தான் பிறக்கிறார்கள். அவர்களுடைய இதயத்தின் அமைப்பிலோ அல்லது அதன் செயல்பாட்டிலோ எந்தவிதக் குறைபாடும் இருப்பதில்லை.

ஆனால் சில குழந்தைகள் மட்டும் சிதைவுபட்ட அல்லது உருக்குலைந்த இதயத்துடன் பிறக்கின்றன.பிறவிலேயே குழந்தைகளுக்கு இத்தகைய
இதயக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் சில அடிப்படைக்
காரணங்களை மருத்துவ உலகம் பட்டியலிடுகிறது.
மரபு ரீதியாக நமது பண்புகளை நிர்ணயிக்கும் குரோமோசோம்களின் அமைப்பில் இயற்கையாகவே குறைபாடுகள் இருந்தால் பிறக்கும் போதே
குழந்தைகளுக்கு உருக்குலைந்த இதயம் உருவாகக்கூடும். தாய்மைப்பேறு அடைந்த சில பெண்கள் கருவுற்ற தொடக்க நிலையில் வைரஸ்
தாக்குதலுக்கு ஆளாகி பலவகையான நோய்களுக்கு இலக்காக நேரிடும். இந்த வைரஸானது கருவில் வளரும் இதயத்தையும் பாதித்து அதன்
அமைப்பையோ அல்லது செயல்பாட்டையோ சிதைத்துவி&டும். எனவே பெண்கள் கருவுற்ற தொடக்க நிலையில், வைரஸ்களால் ஏற்படும்
பலவகையான தொற்றுநோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியம்.கருவின் ஆரம்பத்தில் கர்ப்பிணிப் பெண்கள், ரூபெல்லா (RUBELLA) என்ற ஜெர்மன் தட்டம்மை நோய்க்கு ஆளானால் கருவானது
பலவகைகளில் பாதிக்கப்படும். அதோடு இந்த நோய் இதயத்தையும் உருக்குலைத்துவிடுகிறது. இந்நோயை தாய்மைப் பருவ தட்டம்மை என்றும்
சொல்வதுண்டு.
பரம்பரை காரணமாகவும் பிறவிலேயே இதயக்குறைபாட்டு நோய்களோடு குழந்தைகள் பிறக்கலாம். ஒரு குடும்பத்தில் பெற்றோரோ அல்லது
அவர்களின் முன்னோர்களோ இமயக்குறைக்கட்டால பாதிக்கப்பட்டு இருந்தால் அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆராக்கியமான
குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளையிட இதயக் குறைபாட்டு நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
கர்ப்பக் காலத்தில் தாய்மார்கள் அறியாமல் செய்யும் சில தவறுகள்கூட இதற்குக் காணமாக அமைந்துவிடுகின்றன. கருவுற்ற தொடக்கக்
காலங்களில் தாய்மார்கள் சாதாரண உடல் பிரச்சனைகளுக்காக மருத்துவர்களின் தக்க அறிவுரையும், பரிந்துரையும் இல்லாமல் தாங்களாகவே
பலவகையான மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். இந்த மாத்திரைகளைக் கட்டுப்பாடின்றி பயன்படுத்தும்போது அது கருவில் உள்ள
குழந்தையின் இதயத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது.
கர்ப்பக் காலத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமாக எக்ஸ்&ரே (X-Ray) கதிர்வீச்சுக்கு ஆளானாலும் கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில்
உருக்குலைவு ஏற்படுகிறது.நம் நாட்டில் 100: 1 என்ற விகிதத்தின் அடிப்படையில் இதயத்தில் பிறவிக் குறைபாடுகளோடு குழந்தைகள்
பிறக்கின்றன. இவ்வாறு இதயக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் முதலாண்டு நிறைவைக்
காண்பதற்கு முன்னரே இறந்துவிடுகிறார்கள்.

பிறவிக் குறைபாடுகளின் வகைகள்
பொதுவாக பிறவிலேயே குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் குறைபாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. இதயத் தடுப்புச் சுவர்களில் ஏற்படும் ஓட்டைகள்.
2. இதய வால்வுகளில் ஏற்படும் குறைபாடுகள்.
3. இதயத்தின் ரத்தக் குழாய்கள் உருவாகும்போது ஏற்படும் குறைபாடுகள்.
ஓட்டை விழுந்த இதயத்தோடு பிறந்த குழந்தைகள் பற்றி பரவலாக செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். இதயத்தில் எப்படி ஓட்டை விழும்?
வலப்பக்கத்தில் அசுத்த ரத்தமும், இடப்பக்கத்தில் தூய்மையான ரத்தமும் இருக்குமாறு இதயத்தை இருதனிப் பகுதிகளாக தடித்த தசைகளால்
ஆன தடுப்புச் சுவர்கள் பிரிக்கின்றன. ஆனால் சில பிறவிக் குறைபாடுகளால் இந்தச் சுவர்களின் ஓட்டைகள் விழக்கூடும்.
இதயத்தின் வலது, இடது மேல் அறைகளைப் பிரிக்கும் தடுப்புச் சுவர் உருவாகும்போது, அதில் ஓட்டை விழ வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு
இதய மேல் அறைகளைப் பிரிக்கும் தடுப்புச் சுவரில் விழும் ஓட்டையைக் குங்கும வண்ண ஓட்டை (PINK HOLE) என்று சொல்வார்கள்.
இதையே இதய மேல் அறை தடுப்புச்சுவர்குறைபாடு (Atrial Septal Defect – ASD)என்றும் குறிப்பிடுவதுண்டு.
இதயத்தின் கீழ் அறைகளைப் பிரிக்கும் தடுப்புச் சுவர் உருவாகும்போது, தடுப்புச் சுவரா£னது முழுமையாக அடைபடாமல் அங்கு விழும்
ஓட்டையை கீழ் அறை தடுப்புச்சுவரில் விழும் குறைபாடு (Ventricular Septal Defect VSD) என்று சொல்வார்கள்.
குழந்தைகளுககு நீலநிறக் குழந்தை நோய் (Blue Baby Heart Disease) என்ற குறைபாடும் பரவலாகக் காணப்படுகிறது. கர்ப்பப்பையில் குழந்தை
வளரும்போது தாயின் தொப்புள் கொடியின் மூலமாக குழந்தையானது தனக்குத் தேவையான உயிர்வளி, ரத்தம், ஹோர்மோன்கள்,
உயிர்ச்சத்துக்கள் ஆகியவற்றைப் பெறுகிறது. இதனால் வளரும் குழந்தையின் நுரையீரல் செயலிழந்து இருக்கும். தொப்புள் கொடியின் வழியாக
குழந்தைக்குச் செல்லும் ரத்தமானது குழந்தையின் நுரையீரலுக்குச் செல்லாமல் தடுக்கக் குழல் போன்ற அமைப்பு உள்ளது.
இந்தக் குழல் போன்ற அமைப்பானது பொதுவாக நூற்றுக்கு 99 குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் இயற்கையாக மூடிவிடும். ஆனால் ஒரு சதவீத
குழந்தைகளுக்கு பிறக்கும் சமயத்தில் இந்தக் குழல் இயற்கையாக மூடப்படாமல் அப்படியே இருந்துவிடும்.
இயற்கையோடு முரண்பட்ட இந்த நிலையை குழல் மூடா நிலை (PATENT DUCTUS ARTEROSIS) என்று சொல்வார்கள். இந்த நிலையும்
இதயத்தின் நலத்தைப் பாதிக்கிறது.
இயற்கைக்கு முரணாக அமைந்த இந்தக் குழலின் வழியாக அசுத்த ரத்தமும், தூய்மையான ரத்தமும் கலப்பதால், குழந்தையின் நாக்கு, உதடுகள்,
விரல்கள், நகங்கள் ஆகியவை நீலநிறமாக மாறிவிடும். இந்த முரண்பாட்டால் குழந்தைக்குத் தேவையான, தூய்மையான ரத்தம் கிடைப்பதில்லை.
இதனால் இந்த நோயை நீல நிறக்குழந்தை நோய் என்று சொல்வார்கள்.
பிறந்த குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் முக்கியக் குறைபாடுகளில் ஒன்று ஃபேலட்டின் நால்வகைக் குறைபாடுகள் (Fallots Tetralogy)
என்ற பிறவி நோயாகும். பிறவியிலேயே குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் இத்தகைய குறைபாடுகளை முதலில் கண்டறிந்தவர் ஃபேலட்
என்ற பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள்தான். அவரது நினைவாகத்தான் இந்தக் குறைபாடுகளுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தக் குறைபாடுகள், கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நுரையீரல் ரத்தக் குழாய் குறுக்கம் (Pulmonary Stenosis)இதயக்கீழ் அறையில் ஓட்டை விழுதல் ((VSD)மகா தமனி வலப்பக்கம்
நிலைகொள்ளல் (Dextra Position of the Aorta)இடது கீழ் அறையானது பெருக்கம் அடைதல் (Ventricular Hypertrophy)
மேற்கூறிய நான்கு வகையான குறைபாடுகளை ஒன்று சேர்த்துத்தான் ஃபேலட்டின் நால்வகைக் குறைபாடுகள் என்கிறார்கள். இதயத்தின்
வலப்பக்கத்தில் உள்ள அசுத்த ரத்தமானது கீழ் அறையில் உள்ள ஓட்டையின் வழியாக இடப்பக்கம் உள்ள தூய்மையான ரத்தத்துடன் கலந்து
மகா தமனியின் வழியாக குழந்தையன் உடலில உள்ள பல பாகங்களுக்குச் செல்வதால், குழந்தையின் உடல் முழுவதும் நீலம் பாய்ந்து
குழந்தையானது நீலநிறக்குழந்தையாக (Blue Baby) காட்சி அளிக்கும்.
இதயத்தில் உள்ள முக்கிய வால்வுகள், இயற்கையாக அமைந்துள்ள நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையை இழந்து சில சமயங்களில் குறுக்கம்
(Stenosis) அடைவதுண்டு. இந்த நிலையை வால்வுகளின் குறுக்கம் என்று பொதுவாகச் சொல்வார்கள். பொதுவாக மகா தமனியில் உள்ள
வால்வும், நுரையீரல் தமனியில் உள்ள வால்வும் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இதயமும் பாதிக்கப்படுகிறது.

%d bloggers like this: