Daily Archives: ஜூன் 4th, 2010

100 பற்களுடன் டைனோசர்

டைனோசர்கள் பிரமிக்க வைப்பவை. அவற்றுக்கு 100 பற்கள் இருந்தது என்று நம்மை மேலும் வியக்க வைக்கிறார்கள் விஞ்ஞானிகள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அருகே தலாஸ் என்ற இடத்தில் சமீபத்தில் புதிய டைனோசரின் படிமம் கண்டெடுக்கப்பட்டது.

அது பறக்கும் வகை டைனோசருடையது. இதற்கு `ஏய்ட்டோடாடிலஸ்’ என்று பெயரிட்டுள்ளனர். இது 14 அங்குல நீள அலகும், 9 அடி நீள சிறகுகளையும் கொண்டுள்ளது. இதன் அலகில் 100 பற்கள் காணப்பட்டன. 91/2 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த வினோத டைனோசரின் படிமம், தலாசில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இளமையை பாதுகாக்கலாம்..!

இயற்கைக்கு எதிராக மனிதனால் அணை போட முடியாது. `வயது’ விஷயத்திலும் அப்படித்தான். வயதை மறைப்பதற்காக `பிளாஸ்டிக் சர்ஜரி’, `போட்டாக்ஸ்’ போன்ற தொடர் தொல்லை தரும் சிகிச்சைகளை மேற்கொள்வது புத்திசாலித்தனம் கிடையாது.

`அப்படியானால், வயதாவதை ஏற்றுக்கொள்ள மனதைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டுமா? இல்லை’ வயதாவதை `இயற்கை வழியிலேயே’ தள்ளி போடலாம்.

இளமைக்கான ஆலோசனை நிபுணர் தீபக் சதுர்வேதியும், உடல் தகுதி ஆலோசகர் திலீப்பும், வயதாவதை தள்ளி போட சில யோசனைகளைக் கூறுகிறார்கள்…

ஆரோக்கியமான உணவு

வயதாவதை எதிர்த்து போராட, நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அதற்கு முதலில், எது ஆரோக்கியமான உணவு என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். `முழுத் தானிய’ உணவுகள் எப்போதும் உங்களுக்கு நன்மை பயக்கும். ஆரோக்கியமற்ற நடைமுறைகள் உங்களின் உடல்நலத்தை வெகுவாக பாதித்து, விரைவாக வயதான தோற்றத்தைத் தரும். எந்த ஒரு முதலீட்டையும் போல, ஆரோக்கியத்தில் செலுத்தப்படும் கவனமும் உரிய பலன் தரும்.

உணவுக் கட்டுபாடு

உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பதற்கு உணவுக் கட்டுபாடு அவசியம். ஆனால் உடம்புக்குத் தேவையான கலோரி அளவை மட்டும் கணக்கிட்டு உண்ணுவது பெரும் தவறாகி விடும். சுற்றுபுறச் சூழலையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் கோடை காலத்தில் சாப்பிடும் உணவும், மற்ற பருவங்களில் சாப்பிடும் உணவும் வித்தியாசமாக இருக்க வேண்டும். உங்களின் வாழ்க்கை முறையும், செய்யும் வேலையும் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சி முக்கியம்

வாரம் முன்று முறையாவது திறந்த வெளியிடங்களில் உடற்பயிற்சி செய்யுங்கள். `ஜிம்’முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது என்றால், வாரத்துக்கு நான்கு நாளாவது பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் உடம்பின் வெவ்வேறு பகுதிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். வயதான தோற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணம் மனஅழுத்தம். உடற்பயிற்சியானது உங்கள் உடம்பைக் கச்சிதமாக வைப்பதோடு மட்டுமின்றி, மனஅழுத்தத்தையும் தகர்க்கும்.

ஊட்டச்சத்துகள்

இயற்கை உணவுகளில் காணப்படும் அளவற்ற ஊட்டச்சத்துகள், இளமையை நீட்டிக்க உதவும். ஆனால் உணவுபொருட்களிலேயே அதிகமான வேதிபொருட்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தபடும் காலம் இது. எனவே நமக்குத் தேவையான வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் சி, ஈ ஆகியவற்றை நாம் வேறு உணவு முலம் ஈடுசெய்ய வேண்டும். அதற்கு மீனும், எலுமிச்சை வகை பழங்களும் ஏற்றவை. முழுத் தானியங்களையும் மறந்துவிடாதீர்கள்.

நள்ளிரவு `பார்ட்டி’ கூடாது

பார்ட்டி கலாசாரம் தற்போது பரவி வருகிறது. பெரும்பாலும் பார்ட்டிகள் நள்ளிரவு தாண்டியும் நீள்கின்றன. நாம் இரவு நேர பிராணிகள் இல்லை, இரவில் பார்க்கும் ஆற்றலையும் இயற்கை நமக்குக் கொடுக்கவில்லை. இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு எதிராக போக வேண்டாம். சூரிய வெளிச்சத்துடன் இயைந்து போகும் வகையில்தான் நமது `உடல் கடிகாரம்’ அமைந்துள்ளது. இரவு நேரம் கடந்த பார்ட்டி பழக்கம் அல்லது இரவில் நெடுநேரம் விழித்திருப்பது நமது உடம்புக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வதாகும். நமது உடல் சுரப்பிகள், சூரியோதயத்துக்கு பின் ஓய்வெடுப்பதே இயற்கை. இரவில் கண் விழித்திருபதன் முலம், சுரப்பிகளை `ஓவர் டைம்’ பணிபுரிய நாம் நிர்பந்திக்கிறோம். அது, வயதாவதைத் துரிதபடுகிறது. எனவே இரவில் நல்லபிள்ளையாய் சீக்கிரமாகத் தூங்கி விடுங்கள்!

இதயத்தின் எச்சரிக்கை மணி

உன்னையே நினைத்து நினைத்து புலம்புகிற என் இதயத்தின் குரல் உனக்கு கேட்கவில்லையா? காதலர்கள் மத்தியில் வெகு சரணமாகப் புழங்குகிற வசனம் இது. காதலுக்காகக் குரல் கொடுக்கிறதோ இல்லையோ தனது பிரச்சனையை உணர்த்துவதற்காக இதயம் எச்சரிக்கை மணி அடிக்கும். அந்த எச்சரிக்கை மணிதான் நமக்கு இதய வலியாக (நெஞ்சு வலி) பிரதிபலிக்கிறது.
நெஞ்சுவலி என்பது நமது மார்பின் நடுப்பகுதியில் (Central Chesy pain) உணரப்படுவது. இதை ஆங்கிலத்தில் Angina Pecˆoriv என்று சொல்கிறார்கள். இந்த வலியானது நெஞ்சு எலும்பின் நடுப்பகுதியில் ஏற்படும் என்றாலும் சில சமயங்களில் இடது மேல் கை, கழுத்து, தாடை போன்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். பலவகையான இன்னலுக்கு ஆளாகும் இதயமானது தனது அவல நிலையை உணர்த்தும் அபயக் குரல்தான் (Cry for help) நெஞ்சு வலியாக உருவெடுக்கிறது.
தீவிரமாக நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தல், நீண்ட நேரம் நடப்பது, செங்குத்தான மலைப் பகுதியில ஏறுதல், கடுமையான வெப்பம், கடுமையான குளிர், கடுமையான உடல் சோர்வு, கடுமையான இன இறுக்கம், அளவுக்கு அதிகமாகக் கோபம் கொள்ளுதல், வயிறு புடைக்க உணவு சாப்பிடுதல் போன்ற சூழல்களில் நெஞ்சு வலி ஏற்படக்கூடும்.

இந்த வலி ஏன் ஏற்படுகிறது?
இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தை மகா தமனியின் (AORTA) முதல் நிலைக் கிளைகளான இதயத் தமனிகளிடம் இருந்து பெறுகிறது. இவை, சிறுசிறு கிளைகளாகப் பிரிந்து இதயம் முழுவதும் வலைபோல் படர்ந்துள்ளன. நாம் அன்றாடம் நியாயமான, அளவான வேலைகளைச் செய்யும் போது இதயத் தமனிகள் இதயத் தசைகளுக்குத் தேவையான உயிர்வெளி, ஹார்மோன்கள், ஊட்டச்சத்துகள், உயிர்ச்சத்துகள் ஆகியவற்றை அளிக்கின்றன.
ஆனால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இதயத்துக்கு வேலை தரும்போது அந்தச் சுமையைச் சமாளிக்க முடியாமல் இதயத் தமனிகள் திணறுகின்றன. இதன் காரணமாக இதயத் தசைகள்போதுமான உயிர்வளிச் சத்துக்களைப் பெற முடியாமல் இதயத்தில் வலி ஏற்படுகிறது.
நாம் பிறக்கும்போது தூய்மையாகவும், நன்கு நெகிழும் தன்மையுடையதாகவும் இதயத் தமனிகள் (Coronary Arteries) இருக்கின்றன. காலப்போக்கில் இதயத் தமனிகளின் உள் பகுதியில் பலவகையான கொழுப்புப் பொருள்கள் படிந்து தமனிகளின் உள்விட்டமானது கொஞ்சம், கொஞ்சமாக அடைபட்டு குறுகிவிடுகின்றன. அதோடு, தமனிகள் தங்களின்நெகிழும் தன்மையையும் இழந்து தடித்துவிடுகின்றன. இதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபடுவதால் இதய தசைகளில் வலி ஏற்படுகிறது.
இதயத்துக்குப் போதுமான ஓய்வு கொடுக்காமல் அளவுக்கு அதிகமாக அதை வருத்துவதால் ஏற்படும் வலி என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப நிலையில் இதய வலியைக் கண்டறிந்துவிட்டால் எளிதாக அதைச் சமாளித்துவிட முடியும்.ஆனால் இதய வலியைச் சமாளிக்க வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் தேவைப்படும். போதுமான ஓய்வு இல்லாமல் தங்கள் உடலை வருத்திக்கொள்பவர்களும் அடிக்கடி களைப்படைபவர்களும்தான், இதய வலிக்கு அதிகமாக ஆளாகிறார்கள்.எனவே, வலியில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற வேண்டும் என்றால் முதல் கட்டமாக முழுமையான ஓய்வு, உடல் அளவிலும், மனதளவிலும் தேவை. அன்றாட வேலைச் சுமைகளை ஓரளவு குறைத்துக் கொள்வதோடு அல்லாமல் காரணம் இல்லாமல் அடிக்கடி கோபப்படுதல் போன்ற இதய வலியை ஏற்படுத்தக்கூடிய வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வது மிகவும் சிறந்த தற்காப்பு முறையாகும்.
இதய வலிக்கான சிகிச்சையில் மருந்துகளுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இதய வலிக்குத் தற்போது பலவகையான மருந்துகள் உள்ளன. பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை, நோயின் தன்மை, இதய வலியின் தன்மை, உடலின் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு இதய மருத்துவர் தகுந்த மருந்தைப் பரிந்துரைப்பார். இதய மருந்துகள், குறுகிய இதயத் தமனகளை விரிவடையச் செய்கின்றன. இதன் மூலமாக ரத்தமானது தங்கு தடையில்லாமல் இதயத்துக்கு சென்று இதயத்துக்குத் தேவையான உயிர்வளியையும், சத்துகளையும் அளிக்கத் துணை புரிகின்றன. இதனால் இதய வலியானது தற்காலிகமாக நீங்குகிறது.இதய வலியை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளில் நைட்ரேட் வகை மருந்துகள் (Nitrete), பீட்டா பிளாக்கர்ஸ் (Beta Blockers), கால்சியம் எதிர்ப்பு மருந்துகள் (Calcium Antagonasts) போன்றவை முக்கியமானவை.
இவற்றில் நைட்ரேட் வகை மருந்துகளை குறுகிய நேரத்தில் செயல்படும் மருந்துகள், நீண்ட நேரம் செயல்படும் மருந்துகள் என இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். இவற்றில் ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு வகையான செயல்திறன் கொண்ட மருந்தாக அமைந்திருக்கிறது.
இதய வலியைப் போக்கும் பலவகையான மருந்துகளை ஒரு நோயாளி போதுமான அளவு தொடர்ந்து பயன்படுத்தியும் தக்க பலன் கிடைக்கவில்லையென்றால் வேறு சில மருத்துவ முறைகளைக் கையாள வேண்டும். இதயத் தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளின் தன்மையை அறிந்து கொள்ள முதலில் ஆஞ்சியோகிராபி (Angioplavˆy) செய்யப்பட வேண்டும்.
இதயத் தமனிகளில் உள்ள அடைப்பின் தன்மை சிறிய அளவில் இருந்தால் ஆஞ்சடியோபிளாஸ்டி (Angioplvaˆy) முறையின் மூலமாக அடைப்புகள் மிகவும் அதிகமாக இருந்தால் பைபாஸ் சர்ஜரி செய்வதுதான் அவற்றை நீக்குவதற்கான நிரந்தர சிகிச்சையாக இருக்க முடியும். இத்தகைய அறுவைச் சிகிச்சையின் மூலம் இதயத்துக்கு நேரிடையாக ரத்த ஓட்டம் கிடைக்கும்.
இதய வலியால் பாதிக்கப்படுபவர்கள் கீழ்கண்ட தற்காப்பு முறைகளைக் கையாண்டு அது தீவிரமான நிலையை அடையாமல் தடுக்க முடியும்.
அடிக்கடி இதய வலிக்கு ஆளாகுபவர்கள் அந்த வலியை அலட்சியம் செய்யாமல் இதயம் விடும் அபயக்குரலாகக் கருதி, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஏற்கனவே ரத்தமிகு அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மருத்துவர்களின் துணையுடன் தக்க மருந்துகளின் மூலமாக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை சரியான அளவில் வைத்திருக்கும் வகையில் அன்றாட உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.உடல் பருமன் உள்ளவராக இருந்தால் உடலின் எடையைக்குறைக்க வேண்டும்.
ஏற்கனவே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் புகைப் பிடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.வாரத்தில் குறைந்தது 5 நாள்களாவது உடற்பயிற்சி செய்து உடலை வலுவாக வைத்துக் கொள்வதும் முக்கியம்.

மனித ரத்தம் -தகவல்கள்

ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு

சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்

ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு

அணுக்களைச் செலுத்துவார்கள்.
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு

இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும்

சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப்

போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம்

வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா

காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத

அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள்,

தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும்

நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில்

மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.

ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு

நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு

250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது,

அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து

நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப்

பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை

ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.